episode 4 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

episode 4

New updates

LATEST

aadhira

New member
Joined
Jun 27, 2026
Messages
6
Reaction score
8
Points
3
episode 4


நான் எழுதுற கதை முழுக்க முழுக்க என் கற்பனை தான் . இதை கதையா மட்டும் படிங்க. இதுல லாஜிக் எல்லாம் பாக்காதீங்க.

பழி தீர்க்க வந்தான்…

உனக்கு படிக்கணும்னு ஆசை இருக்கா இல்லையா என்று அந்த போலீஸ் காரர் கேட்க

ஆசையா தான் இருக்கு. ஆனா என்ன மாதிரி பசங்கள யாரு ஸ்கூல்ல சேர்த்துப்பாங்க என்று அவன் குழந்தை தனமாக கேட்க

அதை பத்தி நீ கவலை படாத அதை நா பாத்துக்குறேன் நீ படிச்சா மட்டும் போதும் இப்போ உன் வயசு என்ன என்று அந்த போலீஸ் காரர் கேட்க

12 வயசு என்றான் அந்த சிறு வயது ஆதித்யா.

சரி நீ என்ன படிச்சிருக்க என்று அவர் கேட்க

5 வரைக்கும் படிச்சிருக்கேன் என்று அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தார் அவர்.

என்ன டா சொல்லுற நிஜமா நீ இந்த தொழிலுக்கு வந்து ஒரு வருஷம் தான் ஆகுதா என்று அவர் கேட்க

எனக்கு மெமரி பவர் அதிகம் சார். நா எத பார்த்தாலும் உடனே புடிச்சிக்குவேன் என்று ஆதி சொல்ல

அப்பறம் ஏன்டா படிப்பை பாதில நிறுத்தின என்று கேட்டார் அவர்.

நா நிறுத்தலை சார். என் சித்தி வாங்குன கடனுக்கு என்ன வித்துட்டாங்க என்று வரவிற்கும் கண்ணீரை வெளியிடாமல் இருக்க தன் பற்களை இறுக்கமாக கடித்து கொண்டான் அந்த சிறு மொட்டு.

என்னப்பா சொல்லுற வாங்குன கடனுக்கு விக்க நீ என்ன பொண்ணா பொருளா என்று ஆதங்கத்தில் அந்த போலீஸ்காரர் கேட்க

இப்பொது கண்களில் கண்ணீர் வழிய போலீஸ்க்காரரை பார்த்தான் ஆதி.

அந்த போலீஸ்காரர் ஆதியை பார்த்து நீ ஒரு complaint குடு உன் சித்திய அர்ரெஸ்ட் பண்ணுறேன் என்று அவர் சொல்ல

வேணாம் சார் நீ அவங்க யாரோ நா யாரோ. இனிமேலே எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என்று அவன் சொல்ல

அவனுடைய வலியை புரிந்து கொண்ட போலீஸ்காரர் அவனை கட்டி அணைக்க அந்த அணைப்பு ஆதித்யாவிற்கு தேவைப்பட்டது போல் அவனும் அவரைக் கட்டி இருக்கி அணைத்துக் கொண்டான்

அவனை தன்னிடமிருந்து பிரித்த அந்த போலீஸ்காரர் உனக்கு என்ன ஆகணும்னு ஆசை சொல்லு நான் உன் ஆசையை நிறைவேத்துறேன் என்று அவர் வாக்கு கொடுத்த

அவரைப் பார்த்த ஆதித்யா நீங்க நல்ல போலீஸ்காரரா இருக்கீங்க நான் பார்த்ததிலேயே நீங்கதான் என்கிட்ட இவ்வளவு அமைதியா பாசமா பேசுறிங்க உங்கள மாதிரி போலீஸ் தான் இந்த ஊருக்கு இந்த நாட்டுக்கும் தேவை வருங்காலத்தில் நானும் உங்களை மாதிரி போலீசா ஆகணும் என்று அவன் சொல்ல

உன் ஆசையை நான் நிறைவேத்துறேன் ஆனா நான் சொல்ற மாதிரி நீ கேட்கனும் கேட்பியா என்று அவர் கேட்க

நீங்க எனக்கு அப்பா மாதிரி நீங்க சொல்றத நான் கேட்கிறேன் என்று அவன் சொல்ல

அவன் சொல்வதைக் கேட்டு எமோஷனலான அந்த போலீஸ்காரர் அவனை மறுபடியும் கட்டி அணைத்துக் கொண்டு நீ இனி யாரோ கிடையாது .என்னோட நீ என் மகன். இனிமேல் அதுதான் உன்னோட அடையாளம்.. வா நம்ம வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் என்று அவர் சொல்ல

அருகில் இருந்த கான்ஸ்டபிள் சார் இவன் பேச்சை எல்லாம் கேட்டு இவன் மேல இரக்கம் காட்டாதீங்க இந்த மாதிரி ஆளுங்க செண்டிமெண்டாக பேசி கழுத்து அறுப்பாங்க நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க சார் என்று அவர் சொல்ல

என்ன சார் பேசுறீங்க நீங்க இவனை பார்க்கும்போது ரௌடி மாதிரி தெரியலாம் ஆனால் இந்த பிஞ்சு குழந்தை இந்த மாதிரி ரவுடி ஆனதுக்கு காரணம் என்ன. நம்மள மாதிரி பெரியவங்க தான். அவங்க அம்மா அவ கூட இருந்திருந்தா கண்டிப்பா என்ன இந்த மாதிரி விட்டு இருக்க மாட்டாங்க இந்த மாதிரி பசங்களுக்கு நம்ம கண்டிப்பா ஆறுதலாவும் சப்போட்டோவும் இருக்கணும் சார் அப்புறம் இனி என் பையன பத்தி என்கிட்டே தப்பா சொல்லாதீங்க என்று கடைசியாக அந்த வாக்கியத்தை அழுத்தமாக சொல்லிவிட்டு ஆதியை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்

ஜீப்பில் ஆதித்யாவும் அந்த போலீஸ்காரும் சென்று கொண்டிருக்க போலீஸ்காரரின் அருகில் அமர்ந்திருந்த ஆதித்யா அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க

என்னடா அப்படி பாக்குற என்று அவர் கேட்க

எந்த நம்பிக்கைல என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க சார் என்று ஆதி கேட்க

அவனை பார்த்து சிறு புன்னகை செய்த போலீஸ்காரர் உன் சித்தின்னு சொன்னியே யார் அவங்க உன் அம்மாவோட தங்கச்சியா என்று அவர் கேட்க

இல்ல என் அப்பாவோட செகண்ட் wife என்று அவன் சொல்ல

அப்போ உன் அம்மா என்று அவர் கேட்க

இருக்காங்க என்று மட்டும் பதில் சொன்னான்

உனக்கு உன் அம்மா வை பாக்கணுமா என்று கேட்க

ஆம் என்று மட்டும் தலை அசைத்தான்

அவங்க டீடெயில்ஸ் இருந்த கொடு அவங்க கிட்ட உன்ன விட்டுடுறேன் என்று அவர் சொல்ல

எனக்கு அவங்கள பத்தி ஒண்ணுமே தெரியாது . நான் குழந்தையா இருக்கும் பொது என்ன விட்டுட்டு போய்ட்டாங்களாம் அதான் அப்பா வேற கல்யாணம் பண்ணிருக்காருன்னு எல்லாரும் சொன்னாங்க என்று அவன் சொல்ல

ஹ்ம் என்று அவன் சொல்லுவதை கேட்டு தலையை அசைத்த அந்த போலீஸ்காரரை பார்த்து உங்க பேரு என்ன சார் என்று அவன் கேட்க

அவனை பார்த்து புன்னைகைத்து கொண்டே சோம சுந்தரம் என்றார் . பிறகு அவனை பார்த்து உனக்கு படிக்குறதுல ஏதும் பிரச்சனை இல்லையே. இருந்த சொல்லிடு . என்று அவர் சொல்ல

எனக்கு படிக்க பிடிக்கும் சார். ஆனா என்னோட சூழ்நிலை என்னை இப்டி ஆக்கிட்டு. இப்போ என்னை நீங்க படிக்க வைக்கிர்றேன்னு சொன்னதும் என்னால நம்ப முடியல. ஆரம்பத்துல நீங்க பொய் சொல்றீங்கன்னு நெனச்சேன் ஆனா அது தான் உண்மைன்னு நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா …… என்று அவன் இழுக்க

என்னப்பா ஏன் அமைதி ஆகிட்ட என்று கேட்டார் சுந்தரம்.

அவங்க உங்களை சும்மா விட மாட்டாங்க சார் அதன் பயமா இருக்கு என்றான் அவன்.

நீ யாரை சொல்லுற என்று அவர் கேட்க

அவரை யாரும் பார்த்தது இல்லைல்ல. அவர் பெரு கூட யாருக்கும் தெரியாது அவரை பெரியண்ணன்னு சொல்லுவாங்க என்று அவன் சொல்ல.

பெரியண்ணா என்று ஓருமுறை சொல்லி பார்த்தார் சுந்தரம்.
சரியாக அந்த நேரம் சுந்தரம் வீடு வரவே ஜீப் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெண் வீட்டுக்குள்ளே இருந்து வந்தாள் . சுந்தரம் சிரித்து கொண்டே ஆதியை அழைத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு செல்ல

ஏன் இவ்ளோ லேட் என்று கேட்டவள் தன் கணவனின் அருகில் நிற்கும் சிறுவனை பார்த்து யார் இந்த பையன் என்று கேட்க

நா சொல்லுறேன் வா என்று இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார் சுந்தரம்

உள்ளே மூவரும் வந்த பிறகு சோஃபாவில் அமர்ந்த சுந்தரம் இருவரையும் அமர சொல்லி ஆதியை அறிமுகப்படுத்திவிட்டு அவனை பற்றிய விஷயங்களை தன் மனைவியிடம் சொன்னார்.

இது அனைத்தையும் கேட்ட அவர் மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக இருக்க


இப்போது ஆதியை பார்த்த சுந்தரம் அவனுக்கு தன் மனைவியை அறிமுகம் செய்தார்

ஆதி இது உன் அம்மா .என்று சுந்தரம் சொன்ன அந்த நொடி அவன் கண்களில் ஒரு குழந்தைக்கான ஏக்கம் சூடிக்கொண்டது . அந்த ஏக்கமும் அவன் கண்ணீரில் நிறைந்த கண்களையும் பார்த்த லதா மனது இளக தொடங்கியது .


இனி எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் நீ தான் எங்களுக்கு முதல் குழந்தை என்று அவர் சொன்ன அந்த நொடி அவரை பாய்ந்து கட்டிக்கொண்டவன் அவரிடம் இருந்து பிரிந்து லதாவை பார்த்து அம்மா என்று மென்மையாக அழைக்க

அவனுடைய அம்மா என்ற அழைப்பு லதாவின் மனதை கரைக்க தொடங்கியது . அவன் கையை இறுக்கப் பற்றி அவர் எந்த நம்பிக்கைல உன்ன இங்க கூட்டி வந்தாருன்னு எனக்கு தெரியல. இப்போ நானும் சொல்லுறேன் நீதான் எங்க பையன் என்று அந்த சில நிமிடங்களில் தாயான அந்த பெண் சொல்ல

அம்மா என்று அவளையும் கட்டி அணைத்து கொண்டான்.அவனுக்கு இருவரும் நல்ல தாய் தகப்பனாக இருந்தார்கள். அவனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சுந்தரம் வாங்கி கொடுத்தார் . அவனை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார்.

திடீரென ஒரு நாள் இரவு சாப்பிட்டு முடித்து தன் அறையில் படுத்திருந்த சுந்தரம் வேலை முடித்து அறைக்கு வந்த தன் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

வா லதா வேலை எல்லாம் முடிஞ்சதா என்று அவர் கேட்க
ஹ்ம் முடிஞ்சதுங்க என்று லதா சொல்லி தன் கணவர் அருகில் சென்று படுத்து கொள்ள தன் மனைவியை கட்டி அனைத்து கொண்டு சாரி என்றார்.

என்னங்க நீங்க என்ன தப்பு பண்ணுனீங்கன்னு இப்போ என் கிட்ட சாரி சொல்லுறீங்க என்று லதா கேட்க

இல்ல லதா உன்கிட்ட கேட்க்காம சொல்லாம ஒரு பையனை நம்ம பையன்னு சொல்லி அவனுக்கு தேவையான எல்லாம் செய்யுறோம். எல்லாம் நம்ம முழு மனசோட தான் செய்கிறோம் . அனா உனக்கு இதுல விருப்பமான்னு ந ஒரு தடவ கூட கேக்கல அதான் சாரி சொன்னேன் என்று அவர் சொல்ல,

அவரை பார்த்து சிரித்த லதா அவன் நம்ம பிள்ளைங்க. நீங்க தெரிஞ்சும் தெரியாமலும் செய்த ஒரு நல்ல விஷயம் ஆதியை இங்க நம்ம பையனா அழைச்சிட்டு வந்தது தான் . அப்பறம் நீங்க என்ன செய்தாலும் நம்ம நல்லதுக்கு தான் செய்வீங்கன்னு எனக்கு தெரியும் . ஆதி ரொம்ப நல்ல பையன்ங்க எனக்கு ரொம்ப உதவியா அம்மா அம்மான்னு என் பின்னாடியே சுத்துறான். நமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தை தீர்க்க வந்த தேவதை அவன் என்று ஆதியை பற்றி நல்ல முறையாக பேசிக்கொண்டிருந்தனர் . இது அனைத்தையும் வெளியே நின்று கேட்டு கண்கள் கலங்க நின்றிருந்தான் ஆதி

write by aadhi………
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,381
Reaction score
3,229
Points
113
அருமையான பதிவு

நல்ல அப்பா அம்மா அவனுக்கு ஆண்டவன் அருளால் கிடைத்து விட்டார்

மகிழ்ச்சி
 
Top Bottom