9. செஞ்சுடரின் பனித்துளியா... | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9. செஞ்சுடரின் பனித்துளியா...

New updates

LATEST

senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
102
Reaction score
122
Points
43
9. செஞ்சுடரின் பனித்துளியா...

கம்பெனியில் தன்னுடைய அறையில் தனக்கு முன்பாக அமர்ந்து‌ கொண்டு, தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சீவின் பார்வை தனக்குள், பலவிதமான உணர்ச்சிகளை கிளப்ப உணர்ச்சி போராட்டத்தில் அங்கு இருக்க பிடிக்காமல், அவனை வெளியே போ என்று சொல்ல முடியாமல் அவள் எழுந்து வெளியே செல்லலாம் என்று நினைக்கும் சமயம்.. மகேந்திரன் சார் போன் செய்து மிதுனை பற்றி விசாரிக்க மிதுனை எங்கே அவர் தவறாக புரிந்து கொள்வாரோ என்று பயந்து அவள் கம்பெனி விஷயமாக தான் மிதுன் வெளியே போயிருக்கான் சார் என்று படபடவென தன் உடன்பிறப்பு மிதுனுக்காக பரிந்து பேச மகேந்திரனோ..

மிதுனாவின் பேச்சில் எதையோ உணர்ந்தவர் ஏன் என்னாச்சு மிதுனா...?
மிதுன் இடம் நான் எப்ப வேணாலும் நான் பேசிக் கொள்கிறேன். அதை பற்றி கவலை இல்லை எனக்கு. ஆனால் நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய் நான் மிதுன் ஏன் லீவு எடுத்தான்??.. எங்கே சென்றான் என்று உன்னிடம் எதுவும் கோபமாக கேட்கவில்லையே !! அவன் குரலில் இருந்த மாற்றம் அவனுக்கு ஏதேனும் பிரச்சினையா என்று தான் கேட்டேன் தவிர, நான் அவனை தப்பாக நினைக்கவே இல்லையே நீ ஏன் இப்படி பயப்படுகிறாய்...

நான் எப்பவாவது உங்களை குறை கூறி இருக்கிறேனா இல்லை நீங்கள் கம்பெனி விஷயத்தில் ஏதேனும் முடிவுகள் எடுத்தால் அதில் நான் தலையிட்டு அதிகாரம் காண்பித்திருக்கிறேனா என்ன ஆச்சு, அதே சமயம் நீ இப்படி பயப்படும் பெண்ணும் இல்லையே என்று கேட்க..

அச்சச்சோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார் நான் தான் சிறு மன குழப்பத்தில் சற்று பதட்டப்பட்டு விட்டேன் அவ்வளவு தான். வேற ஒன்றும் இல்லை என்று சொன்னாள் மிதுனா.

அது தாண்டா கேட்கிறேன் என்ன ஆச்சு உனக்கு? ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்.. ஆமாம் இந்த சஞ்சீவ் பையன் வந்த வேலையை முடிந்து வெளியே சென்று விட்டானா என்று சரியாக கேட்டார் மகேந்திரன்.

அவளோ ஒரு நொடி தனக்கு எதிரில் தன்னை குறுகுறுன்னு பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் சஞ்சீவை பார்த்து விட்டு..

இல்லை சார் அவர் இன்னும் என் அறையில் தான் இருக்கிறார். அவருடைய நண்பர் ஏதோ வேலையாக வெளியில் சென்று இருப்பதால், அவர் வரும் வரை காத்திருக்கிறார் என்று பதில் சொன்னாள் மிதுனா.

மிதுனாவின் தடுமாற்றம் அவளுடைய பேச்சு சாமர்த்தியம் என்று ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் சஞ்சீவ்.

மகேந்திரன் சாரிடம் பேசிய பிறகு மிதுனாவிற்கு சற்று முன்பு இருந்த பதட்டம் குறைய அறையை விட்டு வெளியில் செல்லாமல் மீண்டும் தன் இருக்கையிலேயே வந்து அமர்ந்தாள்.

சஞ்சீவ் கிட்ட இங்கிலீஷில் பேச வாய் எடுத்தவள் கடவுளே இவன் கிட்ட எதுக்காகவும் நோஸ்கட் வாங்க கூடாது என்று அவனைப் பார்த்து.. சார் உங்கள் நண்பர் வர தாமதமாகும் மா என முயன்று பணிவாக கேட்டாள்.

அவள் அமைதியாகவும் பண்பாகவும் கேட்டாலும் அவளுக்கு தன் மீது இருக்கும் கொலைவெறிக்கு, தான் மட்டும் மகேந்திரன் மாமா மருமகனாக இல்லாமல் இருந்தால், இந்நேரம் இவள் கையில் நான் என்ன பாடு பட்டிருப்பேனோ என்று நொடியில் அவளை நினைத்து தனக்குள் புலம்பியவன், அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவது போல் தன் சட்டையின் பாக்கெட்டை சிறிது லேசாகத் திறந்து பார்த்து விட்டு, தன் நண்பன் பாக்கெட்டுக்குள் இல்லையே என்ன செய்யலாம் என்பது போல் ஒரு பார்வை சட்டைப்பையில் பார்த்து விட்டு அவளை தன் ஒற்றை புருவத்தை தூக்கி கேள்வி கேட்க...

அதற்கு மேல் பொறுமை இழந்த மிதுனா.. அடிங்கொப்ப மவனே.. என்னடா உனக்கு என்னை பார்த்தால் எப்படி இருக்கு நக்கல் பண்றியாளோ.. மகேந்திரன் சாருக்காக தான் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன் இந்த சீன் பண்றதெல்லாம் என்கிட்ட வச்சுக்காத ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு ஓடிப் போயிடு.. உன் பிரண்டுக்கு தானே ஏஜென்சி உனக்கு இல்லையே!?? நீ போயிட்டு அவன வர சொல்லு, அவன் கிட்ட நான் பேசிக்கிறேன் இப்ப நீ எழுந்து போடா வெளியே என்று அவன் முகத்தை பார்த்து கத்த...

அவனோ ஏதோ தேசிய அவார்ட் வாங்கினவன் போல் அவளையே சிரித்து பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் சஞ்சீவ்.

டேய் வெட்கம் கெட்டவனே உனக்கு சூடு சொரணை எதுவும் இல்லையா இந்த திட்டு திட்டுறேன்.. எனக்கு என்ன வந்துச்சுன்னு ஏதோ அவார்ட் ஃபங்ஷன்ல அவார்ட் கொடுக்கிற மாதிரியும்.. அதை நீ ஏதோ பெருமையோட வாங்குற மாதிரி சிரிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்க.. அட கடவுளே இப்ப நீ சிரிக்கிறது நிப்பாட்டல அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுடா டபாரமண்டையா என்று கத்தினாள்.

அப்போது சித்ரா கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் இரண்டு குளிர்பானங்களோடு..

ஒன்றை சஞ்சீவீடம் கொடுத்து விட்டு மற்றொன்றை மிதுனாவிடம் கொடுத்தாள்..

சித்ரா உள்ளே வந்த நொடி தான் இவ்வளவு நேரம் தான் அவனை திட்டிக் கொண்டிருந்தது முழுவதும் தன்னுடைய கற்பனை தானே தவிர, அவனை நாம் நேரடியாக திட்டவில்லை என்பதை உணர்ந்தவள், டேய் மிதுன் இன்னைக்கு என்று பார்த்தா நீ அவுட் ஆஃப் டியூட்டி போய் தொலையனும்.. எனக்கு இதெல்லாம் தேவையாடா என்று தன் உடன் பிறந்தவனை மனதில் எண்ணெய் சட்டி இல்லாமல் அடுப்பு இல்லாமல் வறுத்து எடுத்தவள்... சத்தியமாக முதன் முதலில் தனக்கு எதிரில் இருப்பவனை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியாமல் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள் மிதுனா.

மிதுனாவை கொஞ்சம் ஓவராகவே கலாய்த்து விட்டோம் சரி அவளை அமைதிப்படுத்தலாம் என்று நினைத்த சஞ்சீவ் சித்ராவிடம் பேச தொடங்கினான்.

ஹாய் மிஸ் சித்து தேங்க்யூங்க.. இவ்வளவு நேரம் ஆச்சு நீங்களாவது ஏதாவது குடிக்க ஜூஸ் கொடுத்தீங்களே என்று மிதுனாவை பார்த்துக் கொண்டே சித்ராவிடம் பேசினான் சஞ்சீவ்.

சார் இது என்னோட கடமை என்று சித்ராவும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக சொல்லி விட்டு நின்றாள்.

சஞ்சீவ், சித்ராவை அழைத்த விதம் தனக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிய இதுவரை பொறுமையாக இருந்தவள் ... சித்ராவை பார்த்து மிஸ் சித்து... உங்களுடைய வேலை முடிந்து விட்டதா என்று நக்கலாக கேட்டு விட்டு அது தான் ஜூஸ் கொடுக்கும் வேலை முடிந்துவிட்டது தானே, இப்ப அடுத்து கம்பெனி வேலையை பார்க்க போகிறீர்களா என்று கேட்டால் மிதுனா.

இது நாள் வரை இப்படி தன்னை அவமதிப்பது போல் மிதுனா தன்னிடம் பேசியது இல்லையே, ஆனால் இன்று ஏன் இப்படி பேசுகிறாள் என்று குழப்பத்தோடு மிதுனாவை பார்த்து விட்டு சாரி மேடம்.. இது சார் சொல்லி தான் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தேன். மற்றபடி என் வேலையை நான் சரியாக தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று மிதுனாவை முதன் முறையாக எதிர்த்து பேசிவிட்டு அவளும் அங்கிருந்த சென்றாள்.

தான் பேசியதில் வருத்தம் கொண்டு சித்ரா பேசி விட்டு செல்வதை கவனித்து பிறகு தான், அயோ கடவுளே தான் ஏன் எப்படி இவ்வளவு கீர்த்தரமாக நடந்து கொண்டேன் என்று நினைத்து வருந்தியவள்.. அதற்கு முழு காரணம் இதோ என் எதிரே எதுவும் தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்கானே எல்லாம் இவனால் வந்தது என்று... தன் அனைத்து கோபத்தையும் திருப்பி இப்பொழுது சஞ்சீவை பார்த்து..

சார் என்னுடைய பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க இப்போ உங்களுக்கு என்ன சார் ப்ரோப்லம்.. இப்ப எதுக்கு இங்கேயே உக்காந்து இருக்கீங்க. ஒன்னு உங்க பிரண்டு வர வரைக்கும் வெளியில போங்க, இல்லையா உங்க பிரண்டு சீக்கிரமா வர சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டே போனவள், அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் உங்க பிரண்டு உங்க சட்டை பாக்கெட்ல இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும், சோ உங்க பேண்ட் பாக்கெட்ல இருக்குற போன் எடுத்து உங்க பிரண்டு எப்ப வருவாங்கன்னு கேளுங்க என்று தன் இயல்புக்கு மீறி சற்று வேகமாகவே கத்தினாள் மிதுனா.

மிதுனா இவ்வளவு நேரம் சத்தமாக பேச எதிரில் இருந்த சஞ்சீவ் இப்பவும் மிகவும் நிதானத்தோடு..

மிஸ் மிதுனா... நான் மாடியில் இருந்து கோபமாக வெளியில் சென்றவுடன் உங்களிடம் எப்படியும் இரண்டு மூன்று நிமிடங்கள் பேசிவிட்டு தான் என் நண்பன் அங்கிருந்து கிளம்பி இருப்பான். அதே சமயம் நான் அதற்கு முன்பே வெளியே போயிட்டேன் அப்படிங்கறப்ப, பாவம் என்னை தேடிக்கிட்டு இந்நேரம் எப்படியும் சில பல கிலோமீட்டர்கள் முன்னாடி போய் இருப்பான் அவன் அங்கிருந்து இங்கு வரதுக்கான டைம் ஸ்பெஸ் அவனுக்கு கொடுக்கணும் தானே. அவன் ஒன்னும் ஸ்பைடர் மேன் இல்லையே பறந்து வருவதற்கு, அதே சமயம் நீங்கள் தேவை இல்லாமல் டென்ஷனாகவும் தான்... கடந்த வெறும் ஐந்து நிமிடங்கள் கூட இப்பொழுது உங்களுக்கு ஐந்து யுகங்களாக தெரிகிறது. ஓகே நான் கிளம்புகிறேன். பிறகு என் நண்பனோடு வருகிறேன் என்று சொல்லி விட்டு எழுந்து கம்பீரமாக வெளியே சென்றான் சஞ்சீவ்.

என்ன வெறும் அஞ்சு நிமிஷம் தான் ஆச்சா ஐயோ மிதுனா... போச்சு எல்லாமே போச்சு.. மானம் போச்சு.. மரியாதை போச்சு.. எல்லாம் போச்சு இனிமே இவன் ஆட்டத்தை தாங்க முடியாதே... என்று வாய் விட்டு புலம்பிக்கொண்டு தலையை பிடித்துக் கொண்டு தன் டேபிள் மீது தலை சாய்ந்து அமர்ந்து புலம்பி கொண்டு இருந்தாள் மிதுனா.

அவள் கண்டிப்பாக இப்படித்தான் புலம்பி கொண்டு இருப்பாள் என்று அவளைப் புரிந்தவன், அவளை மீண்டும் வெறுப்பேற்றுவதற்காக வேகமாக உள்ளே நுழைந்து... ஹலோ மிஸ் மிதுனா என்று அந்த மிஸ் அதில் அழுத்தமாக சொல்லி, உனக்கு ஒன்று தெரியுமா ஐந்து நிமிடத்தில் முதல் இரண்டு நிமிடங்கள் தான் நீயும் நானும் தனியாக இருந்தோம். அடுத்த இரண்டு நிமிடம் சித்ரா உள்ளே வந்து ஜூஸ் கொடுத்துட்டு போனாள். அடுத்த ஒரு நிமிடம் நீ என்னை வெளியே போக சொன்ன... சோ வெறும் 3 மினிட்ஸ் தான். ஆனால் இந்த த்ரீ மினிட்ஸ்க்கே நீ இந்த புலம்பு புலம்புகிறாயே..! மகளே இனி இந்த கம்பெனியின் பொறுப்பை நான் தான் எடுத்துக்கொள்ள போகிறேன். அப்ப என்ன செய்றன்னு நானும் பாக்குறேன் டி என்று, அவளுக்கு முன்பு தன் இரண்டு விரல்களையும் சொடக்கு எடுத்துக்காட்டி விட்டு, கூலாக தன்னுடைய கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்றான் சஞ்சீவ்.

அப்போது...

வருவான்....
 
Joined
Aug 29, 2025
Messages
362
Reaction score
411
Points
63

காதோல் வந்த பயலுக்கு ஏதுக அம்மணி ஜூடு ஜொரணை 😜😜😜😍😍😍😍
 
senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
102
Reaction score
122
Points
43
அது என்னமோ உண்மைதானுங்க அம்மணி
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
செம காமெடி

கொஞ்சம் வாயை மூடிட்டு இருந்தால் இந்த பிரச்சனை உண்டுமா மிதுனா
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,425
Reaction score
918
Points
113
அருமையான பதிவு
 
Top Bottom