- Joined
- Mar 22, 2025
- Messages
- 842
- Reaction score
- 456
- Points
- 63
அத்தியாயம்-9
வெண்பா ரயில் நிலையம் வாசலில் நின்று இருந்தாள். ஃபோனில் குறுஞ்செய்தி அழைப்பு சத்தம் வந்தது.
‘என்ன வெண்பா! சொல்லாம போயிட்ட… கோவமா என் மேல? பாத்திரமா போனியா? நான் உன் கூட வந்து இருப்பேன் இப்படி சொல்லாம போயிட்ட! சேஃபா போயிட்டியா?’ என மலர் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்துவிட்டு, வெண்பா,
‘பரவாயில்லை அக்கா, நான் பத்திரமா வந்துட்டேன். நீ அப்பாவ பார்த்துக்கோ நான் இன்டர்வியூ அட்டன் பண்ணிட்டு ஃபோன் பண்றேன்' என வெண்பா பதில் அனுப்பிவிட்டு நின்றாள்.
அங்கிருந்த ஆட்டோகாரர் ஒருவர், அவளிடம் ‘எங்கே போக வேண்டும் ஆட்டோவில் வாங்க’ என்று அவன் சாவ்வாரிக்கு அழைத்துப் பார்த்தான். வெண்பா ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் நின்று இருந்தாள். ‘வாயே திறக்க மாட்டுது ஊமையா' என அந்த ஆட்டோகாரர் நினைத்துக் கொண்டே போய்விட. லாவண்யா ஸ்கூட்டியில் வந்து அவள் முன் நின்றாள்.
“இவ்வளவு காலையிலையாடி வருவ! என் தூக்கம் போச்சி. எட்டு மணிக்கு எழுந்துக்குற என்னைய… ஏழு மணிக்கு எழுப்பி விட்டுட்ட. இன்னும் குளிக்கல பல்லு கூட துலக்கலடி. சீக்கிரம் வண்டியில உட்காரு வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என லாவண்யா அவசரப்படுத்தினாள்.
“அடிப்பாவி இப்டியேவா வந்த” என வெண்பா கேட்க,
“வந்தா என்ன? யாரு கேக்க போறா! உட்காருடி” என லாவண்யா சொல்ல, வெண்பா சிரித்துக் கொண்டே ஸ்கூட்டியில் அமர்ந்தாள். அப்போது அவள் இன்டர்வியூ லெட்டர் கீழே விழுந்தது. அதை அந்த ஆட்டோ ட்ரைவர் கவனித்து எடுத்து அவளிடம் கொடுக்க நினைத்து அழைத்தான். அதற்குள் இருவரும் பறந்தேவிட்டனர்.
“பொண்ணுங்களா இதுங்க! வாய் பேச்சு தான் கொஞ்சம் கூட கவனம், பொறுப்பு இல்ல! என்ன லெட்டர் இது” என திருப்பி திருப்பி பார்த்தான். அதில் அசூர் கார்ப்பரேட் நிறுவனத்தின் லோகோவும், விலாசமும் இருந்தது. அந்த பெண்களை யார் என்று தேடுவது சிரமம் என்று நினைத்து. அந்த கடிதத்தில் உள்ள விலாசத்திற்குச் சென்றுவிட்டான்.
லாவண்யா, வெண்பாவை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்தாள். வாடகை வீடு இருவர் மட்டுமே தங்கி இருப்பதாலும், இருவரும் வேலை வேலை என்று ஓடுவதாலும் வீட்டை கவனிப்பது என்பது அரிது. வெண்பா லாவண்யா இருவரும் உள்ளே நுழைய பிரகாஷ் டீ போட்டு தயாராக வைத்திருந்தான். அரை டவுசரும், பனியன் கையில் டீ கப் கொண்டு வந்து வெண்பாவிடம் கொடுத்து.
“வெல்கம் ஹோம்” என்றான் பிரகாஷ்.
“தேங்க்யூ… சோ மச் பிரகாஷ் எப்படி இருக்கீங்க” என வெண்பா டீ கப் கையில் வாங்கிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தாள்.
“எனக்கு என்ன சூப்பரா இருக்கேன்” என்றான் பிரகாஷ்.
“பிரகாஷ் எனக்கு எங்க டீ?” என லாவண்யா கேட்க,
“கிச்சனில் இருக்கு போய் எடுத்துக்க” என்று பிரகாஷ் கூற,
“நான் பல்லு துலக்கிட்டு வரேன் எடுத்து வை டா!” என்று மரியாதையா கூறினாள் லாவண்யா.
“என்னைய வேலை வாங்கலனா உனக்கு தூக்கம் வராதே!” என பிரகாஷ் சலித்துக் கொண்டான்.
“ரொம்ப பேசாத சொன்னத செய்டா” என்று லாவண்யா அன்பாக கூறினாள்.
“பார்த்தியா வெண்பா! இதுக்கு தான் தெரிஞ்சவள கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்றது. கொஞ்சமாவது புருஷன் கிட்ட பேசுற மாதிரி பேசுறாளா.” என்று கூறியபடி லாவண்யாவிறக்கு டீ கொண்டு வந்தான். லாவண்யா முகத்தை துடைத்துக் கொண்டு டீ குடித்தபடி,
“ஆமா.. இல்லனா மட்டும் இவருக்கு பொண்ணு லைன்ல நிற்க்குறாங்க பாரு. உனக்கு நான் கிடைச்சதே பெருசு.. போனா போதுன்னு உனக்கு நான் வாழ்க்கை கொடுத்து இருக்கேன்டா” என்றாள் லாவண்யா, இருவரின் இந்த செல்ல சண்டையில் வெண்பா கவலை மறந்து சிரித்தாள்.
“ஏய்! போதும்.. போதும்.. உங்க சண்டைய ஆரம்பிக்காதீங்க. நீங்க மாறவே இல்ல, இன்னுமும் காலேஜ் ஃப்ரணஸ் மாதிரியே பேசிக்கிறீங்க” என வெண்பா சொல்ல, லாவண்யா வெண்பாவை பார்த்து,
“எங்கள விடு, நீயும் சாயும் சேர்ந்து அடிக்காத லூட்டியா! அதுவும் நீங்க ஸ்கூல் டைம்ல இருந்து நீங்க ஃப்ரண்ஸ். நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?” என்ற கேட்டாள். அந்த கேள்வி அவளுக்குள் ஏதோ ஒரு வருத்ததை தூண்டியது.
“என்ன பேசுற நீ! அவன போய் நா எப்படி? அவன் வேற பொண்ண தான் காதலிச்சு இருக்கான். அது கூட வித்தியாசமா பிரேக்கப் பண்ணி வச்சிருக்கான். எனக்கும் அவன் மேல அந்த எண்ணம் வந்தது இல்ல” என்றாள் வெண்பா.
“இனி வரட்டுமே! அவன மாதிரி ஒருத்தன் உனக்கு கிடைச்சா உனக்கு லைஃப் ஈசி தானே?.” என லாவண்யா சொல்ல, அவளுக்கும் சாய் மீது அந்த எண்ணம் வரவில்லை என்றாலும் அவன் அவளின் தோழனாக வாழ்க்கை முழுவதும் இருந்தாள் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
“இருக்கலாம் லாவா! ஆனா இப்போ குடும்ப சூழ்நிலை மட்டும் தான் முக்கியம் முதல்ல கடன கட்டி முடிச்சிட்டு, அப்பாவ நடக்க வைக்கணும். அக்கா கல்யாணம் நடக்கணும். அப்றோ தான் என் லைஃப் பத்தி யோசிப்பேன். அது வரைக்கும் நோ லவ்… நோ மேரேஜ்… ஒன்லி ஒர்க் ஃபோகஸ் தான்” என்றாள் வெண்பா.
“சரி, வெண்பா நீ போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வா நான் டிஃபன் ரெடி பண்றேன்” என்றான் பிரகாஷ்.
“டீ சூப்பர் பிரகாஷ்” என ஒரு சின்ன பாராட்டை வெண்பா சொல்ல, பிரகாஷ் லாவண்யாவிடம்,
“பார்த்து கத்துக்கடி சோம்பேறி. ஒரு நாளாச்சும் இப்டி சொல்லி இருக்கியாடி நீ” என்று கேட்டான்.
“ஒருநாள் காம்ளீமென்ட் கொடுத்ததுக்கே ரொம்ப சீன் போடாதடா! நான் திட்டினதால தான் டீ கூட ஒழுங்க போட கத்துக்கிட்ட தெரிஞ்சுக்க.” என்றாள் லாவண்யா.
“என்ன பாராட்ட உனக்கு மனசு வராதே! எல்லா கிரிட்டும் நீயே எடுத்துக்குற, உன் கிட்ட மனுஷன் பேசுவானா” என பிரகாஷ் புலம்ப,
“டேய்..!” என லாவண்யா ஆரம்பிக்க,
“போதும் ப்பா.. ஏன் இன்னும் இப்டி எலியும் பூனையுமா இருக்கீங்க! டைம் ஆகுது நம்ம கிளம்பலாமே! லாவா நீ வா நம்ம ரெடி ஆகலாம்” என வெண்பா லாவண்யாவை அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
சில நிமிடங்களில் லாவண்யா, வெண்பா இருவரும் இன்டர்வியூக்கு புறப்பட தயாராகினாள். வெண்பா தயாராகி, தன் ஃபைலை எடுத்துச் சோதித்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
“லாவா! என் இன்டர்வியூ லெட்டர் கவரை ஆளக் காணோம்டி!” எனப் பதறினாள்.
“என்னடி சொல்ற? நல்லா தேடிப் பாரு... உள்ளதான் இருக்கும்!” லாவண்யா ஓடிவந்தாள்.
“இல்லைடி... காணோம்! ஒருவேளை ரயிவே ஸ்டேஷன்ல மிஸ் பண்ணிட்டனா! இப்போ என்ன பண்றது!” வெண்பாவின் கண்கள் கலங்கின.
“பதறாத வெண்பா... நாம நேரடியா அந்த ஆஃபீஸுக்கே போவோம். அங்க போய் நிலைமையைச் சொல்லி அட்டென்ட் பண்ணலாம்!” எனக் கூறி லாவண்யா அவளை அழைத்துச் சென்றாள்.
“எப்படி லாவா! அவங்க லெட்டர் இல்லாம அக்சப்ட் பண்ணுவாங்க. எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் ஆனா நான் இவ்ளோ கேர்லெசா இருந்து இருக்கேன். நான் முட்டாள்” என வெண்பா தலையில் அடித்துக் கொள்ள, லாவண்யா அவளைத் தடுத்து,
“ஏய் வெண்பா ரிலாக்ஸ்! உன்னோட ரெஸ்யூம் அவங்க கிட்ட இருக்கும். ஆதனால நீ கவலைப்பட வேண்டாம், வா போலாம்” என்க வெண்பா சமாதானம் ஆனால். பிரகாஷ் அவசரத்திற்கு பிரட் ஜாம், ஜூஸ் தயார் செய்து வைத்திருந்தான். வெண்பா சாப்பிட கூட தோன்றாமல் இருந்தாள்.
“வெண்பா சாப்பிடு என்ன யோசிக்கிற? இப்போதைக்கு என்னால முடிஞ்சது” என்றான் பிரகாஷ்.
“இல்ல பிரகாஷ் எனக்கு பசிக்கல. நீ ஒர்க் பண்றல்ல நீ ஆஃபிஸ் கிளம்பல”
“எனக்கு ஷிஃப்ட் தான்… மதியம் போவேன். நீ இன்டர்வியூ அட்டன் பண்ணிட்டு வா ஆல் தி பெஸ்ட்” என்றான்.
“தேங்க்யூ பிரகாஷ்”
“ஏய்! பை டா.. டெக் கேர்… ட்ரஸ் மட்டும் நான் வந்து வாஷ் பண்றேன். வீட்ட க்ளீன் பண்ணி வச்சிடுடா” என லாவண்யா வேக வேகமாக கூறிவிட்டு அவனை அணைத்துவிட்டு சென்றாள்.
‘சின்ன வேலைய அவ பார்த்துப்பாலாம், வீடு முழுவதும் நான் க்ளீன் பண்ணனுமாமா!’ என பிரகாஷ் புலம்பியபடி வேலையை செய்துக் கொண்டிருந்தான்.
லாவண்யாவும் வெண்பாவும் ஸ்கூட்டியில் சென்று கொண்டே,
“லாவா நீ என்ன தான் பிரகாஷ் கிட்ட சண்டை போட்டாலும்… ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் கப்புல்ஸ்.” என்றாள் வெண்பா.
“ஆமா.. அதென்னமோ உண்மை தான். அவன தவிர வேற யாரும் என்னை சகிச்சிக்க முடியாது” என லாவண்யா கூறினாள்.
“ம்ம்.. ஆமா… நமக்கு பிடிச்சவங்க நம்மளோட இம்சைய சகிச்சிக்கிற பார்ட்னர் கிடைக்கிறது வரம் தான்!” என்றாள் வெண்பா.
“சாய் கூட உனக்கு ஏத்தவன் தான். மிஸ் பண்ணிடாதடி. உன் மேல ரொம்ப பொஸசிவ்வா இருப்பான். அவன் உன் கிட்ட யாரையும் அவ்வளவு ஈசியா பழகவிட்டது இல்ல, நீயும் அப்டி தான். உன்னோட லைஃப் கோல் சீக்கிரம் கம்ளீட் பண்ணிட்டு சாய் கிட்ட பேசு” என்றாள் லாவண்யா.
“பார்க்கலாம்” என்றாள் வெண்பா.
“சரி.. சீக்கிரம் உன்னோட கோல் அச்சிவ் பண்ணிட்டு லைஃப்ல செட்டி ஆகுறத நானும் பார்க்கணும்.” என லாவண்யா சொல்ல. வெண்பா சிரித்துக் கொண்டே
“எப்படி? இன்னைக்கு நான் பார்த்தனே அந்த மாதிரியா!?.” என வெண்பா, லாவண்யா பிரகாஷ் சண்டையைப் பற்றி கூற,
“வாழ்க்கையில்.. சின்ன.. சின்ன சண்டைகள் இருக்குறது சகஜம் தானே!.”
“ம்ம் ஓகே… நீங்க மேரேஜ் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுது! ஏன் இன்னும் குழந்தைக்கு ப்ளான் பண்ணாம இருக்க?” என வெண்பா கேட்க,
“உனக்கு ஒரு கோல் இருக்குற மாதிரி, எங்களுக்கும் இருக்கு. சொந்த வீடு வாங்கணும். அப்றம் தான் குழந்தைலாம். எந்த ஒரு கஷ்டமும் இல்லாம? என் குழந்தை வளரணும் அது தான் எங்க கோல்” என்றாள் லாவண்யா.
“அச்சோ பாவம் பிரகாஷ்” என்று வெண்பா விளையாட்டாக சொல்ல,
“அவன் பாவமா என்னடி சொல்ற” என லாவண்யா புரியாமல் கேட்க,
“ஆமா… கோல் அது இதுன்னு சொல்லி பிரகாஷ பட்டினி போட்டு வச்சிருக்க. பிரகாஷ் பாவம் தானே!” என வெண்பா சொல்ல,
“பார்ராஆஆ.. இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துக்கிட்டு என்னலாம் பேசுற” என்று கூறி லாவண்யா வியந்தாள்.
“ஹலோ! ஐயம் ஆல்சோ அடல்ட்… எனக்கும் எல்லாம் தெரியும்.” என்றாள் வெண்பா.
“ஆமா அதுவும் சரிதான்” லாவண்யா சொல்ல,
“சரி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்ல!” என வெண்பா கேட்க,
“அதெல்லாம் சேஃபா.. புல் மீல்ஸ் சாப்ட்டுட்டு தான் இருக்கான்.”
“என்னமோ நீங்க சந்தோஷமா இருந்தா சரி”
“எங்கடி சந்தோஷமா இருக்குறது வாங்குற சம்பளம் மாமியார் வீட்டுக்கு கொடுக்கவும் வீட்டு வாடகை வீட்டு செலவுக்கு சரியா இருக்கு இதுல குழந்தை பெத்துக்கிட்டுலாம் அவஸ்தைப்பட என்னால முடியாது.” என்றாள் லாவண்யா.
“கல்யாணம் ரொம்ப கஷ்டம் தான் போல”
“எல்லாருக்கும் இல்ல ஒரு சிலருக்கு தான்”
“வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியம்ல. இந்த வேலையும் எனக்கு அதே அவ்வளவு முக்கியம்.”
“ஆமா சரி ஆஃபிஸ் வந்துடுச்சி இறங்கு” என்றாள் லாவண்யா. வெண்பா இறங்கிய போது அந்த ஆஃபிஸ் வாசல் முன் வாட்ச்மேன், ஆட்டோகாரர் உள்ளே போக அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்.
“கொஞ்சம் உள்ள விடுயா இந்த லெட்டர ஒரு பொண்ணு கிட்ட கொடுக்கணும்.” என அந்த ஆட்டோகாரர் கேட்க,
“மேனேஜர் கிட்ட கேட்டுட்டு தான் உள்ள விட முடியும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றான் அந்த வாட்ச்மேன்.
“சரியா போச்சு.. என் பொழப்பும் வீணா போச்சி!” என்று புலம்பிக் கொண்டு திரும்பிட, வெண்பா அந்த ஆட்டோகாரர் அருகில் சென்று.
“அது என்னோட லெட்டர் தான்! நான் தான் ரயிவே ஸ்டேஷன்ல மிஸ் பண்ணிட்டேன்.” என்றாள். ஆட்டோகாரர் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“ஓ.. உனக்கு பேச கூட தெரியுமா. ஊருக்கு புதுசா?” என்றார்.
“இல்ல… அது நான் புது ஆட்கள் கிட்ட தேவையில்லாம பேச மாட்டேன். என் ஃப்ரண்டுகாக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் என்ன மன்னிச்சிடுங்க” என்றாள் வெண்பா,
“பரவாயில்லை இந்த கம்பெனில தான் வேலைக்கு போறியா?”
“ஆமா.. லெட்டர இவ்வளவு தூரம் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா”
“வாழ்த்துக்கள் மா.. போற இடத்துல இப்படி பேசாம இருக்காத. தேவை இருக்கோ இல்லையோ பதில் சொல்றது ரொம்ப முக்கியம் சரியா!” என் அந்த ஆட்டோகாரர் சொல்லிக் கொண்டிருக்க, லாவண்யா கூட்டியைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வந்தாள்.
“என்னடி போலாமா” என லாவண்யா கேட்க,
“லெட்டர் கிடைச்சிடுச்சிடி லாவா” என வெண்பா ஆனாந்தமாக கூற,
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, என் ஃப்ரண்டுகாக இவ்வளவு தூரம் வந்ததுக்கு. ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு லாவண்யா 500 ரூபாய் பணத்தை அந்த ஆட்டோகாரரிடம் கொடுத்தாள். ஆட்டோகாரருக்கு அந்த பணத்தை வாங்க மனம் இல்லை என்றாலும்,
“ம்ம்.. என் சவ்வாரிய வேஸ்ட் பண்ணதுகாக இத வாங்கிக்கிறேன். நான் போயிட்டு வரேன்.” என அந்த ஆட்டோகாரர் கூறிவிட்டு சென்றார்.
இங்கு மெல்பர்ன் நகரத்தில்:
வைபவ் தனது கணினியில் வெண்பாவின் விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்ரஸ்ட்டிங்.. இவளா நான் மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கல. இவள் எப்படியாவது இங்க வர வைக்கணுமே” என்று அவனாகவே சொல்லிக் கொண்டு, சென்னையில் இருக்கும் ஆசூர் நிறுவனத்தின் மேனேஜருக்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ வினய்”
“சொல்லுங்க சார்.. உங்க கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு. திடீர்னு ஃபோன் பண்ணி இருக்கீங்க.. என்ன விஷயம் சொல்லுங்க. உங்களுக்காக நான் என்ன செய்யணும் சொல்லுங்க” என வினய் கேட்க,
“இன்னைக்கு அங்க இன்டர்வியூ தானே! அங்க வெண்பான்னு ஒரு பொண்ணு வருவா., அவள இங்க இருக்க அசூர் கம்பெனிக்கு அனுப்பி வைங்க. அதோட அவள பத்தின முழு தகவலும் எனக்கு வேணும்” என்றான் வைபவ்.
“ஓகே சார்.. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்.” என்றான் வினய்.
வெண்பா இன்டர்வியூ அறைக்குச் சென்றாள்.