- Joined
- May 4, 2024
- Messages
- 5,323
- Reaction score
- 3,196
- Points
- 113
#புதன்_சவால்
7. எனக்குப் பிடித்த எழுத்தாளர்
(திரு. இந்திரா சௌந்திரராஜன் சார்)
சிறு வயதில் இருந்து சாரின் படைப்புகளில் எண்ணற்ற கதைகள் வாசித்து இருக்கிறேன். ஆன்மீகம், குடும்பம், திரில்லர், துப்பறியும் கதைகள்… என்று எல்லா வகையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
சாரின் எழுத்துக்களில் என்னை வெகுவாக கவர்ந்து பல முறை திரும்ப திரும்ப வாசித்த அனுபவமும் உள்ளது.
“பொக்கிஷத்தின் சாவி”
இந்தக் கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தனை முறை வாசித்தேன் சொல்லவே முடியாது. தீன தயாளன் நாயகனாக வருவான்.
நண்பனின் தங்கையின் திருமணத்திற்கு வந்து அந்த ஊரில் நடக்கும் மர்மங்களை, பிறர் அறியாமல் ரகசியமாக கண்டுபிடிக்க முயற்சி செய்வான்.
யாருமே புளக்கத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு அரண்மனையை சுற்றியே களம் நகரும். இந்தக் கதையில் வரக்கூடிய பிளாஸ்பேக் மனதைக் கவரும்.
செவ்வந்தி கதை வாசிப்பு நின்றாலும் மனதை விட்டு அகல மாட்டாள்.
“மர்ம மாளிகை”
பேராசை பெரும் நட்டத்தை உருவாக்கும். கண் திருஷ்டி அவ்வளவு சீக்கிரம் யாரையும் வாழ விடாது என்பதை இந்தக் கதையில் அவ்வளவு அருமையாக சொல்லி இருப்பார்கள்.
பரந்தாம நாயக்கர் அமைத்திருக்கும் மாளிகையில் இழப்புகள் பல நேர்ந்திருக்க, அந்த மாளிகையை விலை பேசி விற்பனை செய்ய முயற்சிப்பாள் அவரது கடைக்குட்டி வாரிசு. ஆனால், யாரும் வாங்காமல் போக அங்கு அப்படி என்ன நடந்தது? எதனால் இடம் விற்பனைக்கு போக மறுக்கிறது … என்று அட்டகாசமாக சொல்லி இருப்பார்கள்.
ஜம்புலிங்கம் எனும் பொறாமை பிடித்த மனிதனையும், அல்லிக்கரை செண்பகத்தையும் காணும் போது அத்தனை கோபமாக வரும். நீங்கள் எல்லாம் மனித ஜென்மம் தானா? இப்படியா ஒரு குடும்பத்தை இல்லாமல் செய்வது?
பாவம் நாயக்கர். அப்படிப்பட்ட தங்கமான மனுசனுக்கு இப்படி ஒரு நிலைமையை தந்திருக்க வேண்டாம்.
“நந்தி ரகசியம்”
ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தனை முறை படிச்சேன் தெரியல.
சிவன், நந்தியை பிரதானமாக வைத்து இந்தக் கதையை சார் எழுதி இருப்பார்கள்.
“பிராயச்சித்தம்”
விபத்தில் ஒருவர் உயிரிழந்து போக, அவரது பணம் திருடப்பட்டு விடுகிறது. அதனால் அவரின் மகள்கள் இருவரும் கஷ்டப்பட, அவர்கள் எப்படி, யாரால் மீண்டு வருகிறார்கள் என்பதை மிகவும் அருமையாக சொல்லி இருப்பார்கள்.
பார்த்திபன் பாத்திரம் பிரமாதம். போலீஸாக வருபவர் ரொம்பவும் அருமையாக நடந்து கொள்வார். பார்த்திபனின் தங்கை பாவம்…
சாரின் வாசிப்புகளில் ‘சித்து விளையாட்டு, பிராயச்சித்தம், சாமி யார்? கல்யாண வேட்டை, மர்ம மாளிகை, பொக்கிஷத்தின் சாவி, ஐந்தாம் சக்தி…’ இன்னும் சில கதைகள் என்னிடம் புத்தகமாகவும் உள்ளது.
சாரிடம் மெஸேஞ்சரில் பேசி இருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே நேர்காணலில் பங்கேற்று இருக்கும் வீடியோ பதிவுகள், லிங் அனுப்பி தந்து இருக்கிறார்கள்.
ரொம்ப ரொம்ப நல்ல மனிதர், எப்போது அழைத்தாலும் மரியாதையாக பேசும் குணமுடையவர்.
தனக்கென தனி முத்திரையுடன் எல்லா விதமான களங்களையும் அட்டகாசமாக எழுதி வந்தவர். அப்படிப்பட்ட சார் , இப்போது நம்முடன் இல்லை என்பது மிகவும் வருத்தமான விசயம். ஆனாலும், சார்தான் இங்கு இல்லயே தவிர, அவர்களின் ஆன்மா நம்மோடு தான் இருக்கும்.
அவரது எழுத்துக்கள் காலத்தால் அழியாத பொக்கிஷமாக மாறி முத்திரை பதிக்கும்.
சாருடைய எண்ணற்ற கதைகள் வாசித்தும் பெயர்கள் மறந்து போயிற்று. நீங்களும் சாருடைய வாசிப்பில் ரசித்து மகிழ்ந்தவற்றை பற்றி சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
எனக்குப் பிடித்த, என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் சாரும் ஒருவர்.
நன்றி,