- Joined
- May 4, 2024
- Messages
- 5,323
- Reaction score
- 3,196
- Points
- 113
மிருதுளா அஸ்வின் அவர்களின் கவிச்சாரல்கள் :
தாய்மை
பூவாகி பெண்ணாகி, தாரமாகி
என்னை கருவில் சுமந்தவள்
சுவாசம் அளித்து, குருதி பெருக்கி
உயிர் கொடுத்து என்னை காத்து
தொப்புள் கொடி உறவை கொண்டு இருநூற்றி தொண்ணுறு நாட்கள் என் முகம் அறியாது என்னோடு
கதைத்து, பகிர்ந்து சந்தோஷித்தவள்
நான் சதை பிண்டமாக, கருவாக, இருட்டில் உருவானாலும் பயம் கொள்ளாமல் சுவாசித்தது அவளால் தான்...
என் சுமையையும் சுகமாக தாங்கி
எனக்கு முதன்முதலில் தோழமை
கற்று தந்த தேவதை அவள்...
நான் வயிற்றில் உதைத்தாலும்
விசனம் கொள்ளாமல், என் உயிரினை
உணர்ந்து பேரின்பம் அடைபவள்...
என்னை ஈன்றெடுக்க இருபது எலும்பு நொறுங்கும் அளவு வலியெடுத்தாலும்
பொறுத்து இந்த பூவுலகில்
நான் கால் தடம் பதிக்க போராடுபவள்...
பிரசவித்த நொடி என் தளிர் முகம்
கண்டு தன் கவலைகள் மறந்து
புன்னகையோடு என்னை அனைத்து
கொஞ்சி ஆனந்தம் பெறுபவள்...
அன்று மட்டுமே என் அழுகையை
சங்கீத நாதமாக நினைத்து ரசிப்பவள்..
எத்தனை காலமானாலும் அவள் அன்பு
மாறாமல் என்றும் நேசிப்பவள்...
எங்கு தேடினாலும் கிடைக்காத,
ஒருமுறை மட்டுமே அமர கூடிய
அரியாசனம் தாயின் கருவறை...
ஆண்கள் பெறாத வரம், அம்மகனை
பெற்றடுப்பதும் பெண் குலமே..
மனிதகுலத்தின் மாண் தாய்மை!!!
தாய்மை
பூவாகி பெண்ணாகி, தாரமாகி
என்னை கருவில் சுமந்தவள்
சுவாசம் அளித்து, குருதி பெருக்கி
உயிர் கொடுத்து என்னை காத்து
தொப்புள் கொடி உறவை கொண்டு இருநூற்றி தொண்ணுறு நாட்கள் என் முகம் அறியாது என்னோடு
கதைத்து, பகிர்ந்து சந்தோஷித்தவள்
நான் சதை பிண்டமாக, கருவாக, இருட்டில் உருவானாலும் பயம் கொள்ளாமல் சுவாசித்தது அவளால் தான்...
என் சுமையையும் சுகமாக தாங்கி
எனக்கு முதன்முதலில் தோழமை
கற்று தந்த தேவதை அவள்...
நான் வயிற்றில் உதைத்தாலும்
விசனம் கொள்ளாமல், என் உயிரினை
உணர்ந்து பேரின்பம் அடைபவள்...
என்னை ஈன்றெடுக்க இருபது எலும்பு நொறுங்கும் அளவு வலியெடுத்தாலும்
பொறுத்து இந்த பூவுலகில்
நான் கால் தடம் பதிக்க போராடுபவள்...
பிரசவித்த நொடி என் தளிர் முகம்
கண்டு தன் கவலைகள் மறந்து
புன்னகையோடு என்னை அனைத்து
கொஞ்சி ஆனந்தம் பெறுபவள்...
அன்று மட்டுமே என் அழுகையை
சங்கீத நாதமாக நினைத்து ரசிப்பவள்..
எத்தனை காலமானாலும் அவள் அன்பு
மாறாமல் என்றும் நேசிப்பவள்...
எங்கு தேடினாலும் கிடைக்காத,
ஒருமுறை மட்டுமே அமர கூடிய
அரியாசனம் தாயின் கருவறை...
ஆண்கள் பெறாத வரம், அம்மகனை
பெற்றடுப்பதும் பெண் குலமே..
மனிதகுலத்தின் மாண் தாய்மை!!!