
5. செஞ்சொடரின் பனித்துளியா...
தன்னுடன் வந்த இருவரும் அமைதியாக வருவதை பார்த்து விட்டு இவர்கள் எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக பேச்சு கொடுத்தான் குமார் சாப்பிடும் போது ...
எங்களுக்கு உங்க கூட வண்டி ஓட்டும் போது பேசலாமா கூடாதா என்று தெரியவில்லை.. அது தான் ண்ணே .. நான் பேசலை என்று சாப்பிட்டு கொண்டே பேசினான் பிரதீப்.
அட நம்ம என்ன கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறோமா இல்ல, தனியார் கம்பெனில வேலை பாக்குறோமா..? வண்டி ஓட்டிட்டு போகையில ஜாலியா பேசிட்டு வந்தா தானே அலுப்பு தெரியாது. சரி சரி இது நாள் வரைக்கும் உள்ளையே இருந்த வேலை பார்த்தவர்கள் தானே அதான் உங்களுக்கு புரியல சரி விடுங்க...
அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் முதலில் சாப்பிடுங்கள் என்று சொன்னவன்...
அவர்களுக்கு பின்னே வந்து நின்றவனை பார்த்து அதிர்ச்சி ஆனான்..
அங்கே ராஜேஷ் போதை தெளிந்து அதே சமயம், குமாரை நக்கலாக பார்த்துக் கொண்டு நின்றான்.
என்ன குமாரு ஒரே நாளில் பேரம் பேச எல்லாம் கத்துக்கிட்ட.. அதுவும் ரெண்டு பேரு அசிஸ்டென்டா உனக்கு.. ம்ம் ..ஒரே நாளில் வாழ்க்கை உனக்கு ஓகோன்னு ஆயிடுச்சு போல என்று, தன்னுடைய கைலியை உதறி கட்டியவன் அவர்கள் அருகில் இருந்த சேரில் ஒரு காலை மடக்கி குத்துக்காலிட்டு அமர்ந்தவன், சரி என் பங்கு கொடுத்துட்டு போ என்று கேட்டான் ராஜேஷ்.
இங்க பாரு ண்ணே.. நேத்து வரைக்கும் நீ டிரைவரா இருந்து எல்லா வேலையும் பார்த்தா செஞ்ச நீ சம்பாதிச்ச உன்னைய தான் இப்ப கம்பெனி விட்டு நிப்பாட்டிட்டாங்க இல்ல இனிமே உனக்கு நான் ஏன் கொடுக்கணும் இன்னைக்கு நான் தானே சரக்கு எடுத்துட்டு வந்தேன். அதோட ஒவ்வொரு இடத்துலயும் பேசி அத்தனையும் நான் தான் ஏற்றி இறக்கி இருக்கேன். நீ இருந்தவரை வண்டி ஓட்டுவ.. நான் சாமான் ஏத்தி இறக்குவேன்.. நீ கொடுக்கிற காச வாங்கிட்டு போனேன் அது வேற.. ஆனால் இன்னைக்கு முழுவதும் சரக்கு ஏத்தி, வண்டி ஓட்டி, அதோட பேரம் பேசி எல்லாம் பண்ணினது நான் உன்கிட்ட எதுக்கு காசு கொடுக்கணும் என்று கேட்டான் குமார்.
டேய் இவ்வளவு நாள் இவங்க எல்லாரையும் உனக்கு நான் தான் டா அறிமுகப்படுத்தினேன். நான் இப்படி ஒரு வழி இருக்கு அப்படின்னு சொல்லி இவர்களை எல்லாம் உனக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் உனக்கு எப்படிடா தெரிஞ்சுருக்கும் இவர்களை எல்லாம்.. என்னால தானே இப்படி சைடுல ஒரு இன்கம் பார்க்கலாம்னு வழி இருக்குன்னு சொல்லிக் கொடுத்தது நான் தாண்டா உனக்கு. நான் இல்லாம இந்த கான்டெக்ட் எல்லாம் உனக்கு கிடைச்சிருச்சா? இவ்வளவு நாள் இருந்த பழக்கத்தையும் மறந்துட்டு ஒரே நாள்ல அப்படியே மாறிட்டியே டா பச்சோந்தி பயலே என்று ராஜேஷ் சற்று கோபமாக பேசினான்.
இவர்களின் உரையாடலையும் பிரதீப் அழகாக வீடியோ பதிவு செய்து கொண்டான்.
சிறிது நேரம் யோசித்த குமார்,.. சரி பிரச்சனை வேண்டாம் இன்னைக்கு சுரேஷ் பிரதீப் ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்காங்க. அதுக்காக தான் நான் அதிகமா பேரம் பேசி கேட்டு வாங்கினேன். இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல இன்னைக்கு கலெக்ஷன் எவ்வளவு அமவுண்ட்டோ அதை நான்கு பங்காக போட்டு எடுத்துக்கலாம் என்று சொன்னான் குமார்.
ராஜேஷும் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி இன்றைய பிரச்சனையை இப்ப முடிப்போம். நாளைக்கு கம்பெனிக்கு எப்படி போய் மேனேஜரை நேர்ல பார்த்து பேசி எப்படியாவது வேலையில சேர்ந்துடனும் என்று முடிவெடுத்தவனாக, பணத்தை சரியாக பிரித்து நான்கு பேருக்குமாக பிடிக்க சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.
பணத்தை வாங்கிய கையோடு ராஜேஷ் நான் கிளம்புகிறேன் என்று கிளம்பி விட்டான்.
ராஜேஷ் கிளம்பியதும் சுரேஷ் பிரதீப் இருவரையும் பார்த்து இங்க பாருங்க உங்களுக்கு இப்ப இங்க என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்கும்.. புரியலன்னு சொல்ற அளவுக்கு நீங்க ஒன்னும் சின்ன பிள்ளைங்க இல்ல அதனால தான் சொல்றேன் இந்த விஷயத்தை கம்பெனில யார்ட்டையும் சொல்ல கூடாது சரியா. சரி இன்னைக்கு உங்களுக்கு கொடுத்து இருக்கிற அந்த பங்கு பணத்துல என்னோட கமிஷனை ரெண்டு பேருமே பாதிப்பாதியா குடுங்க. நான் இல்லனா உங்களுக்கு எப்படி இந்த காசு கிடைச்சிருக்கும். அதுவுமில்லாமல் அந்த ஜாமான் எல்லாம் உங்களை ஏத்தி இறக்க சொல்லவே இல்ல நான் தான் எல்லாம் ஏத்தி இறக்குனேன். முழு காசு வாங்கி இருப்பேன் சரி முதல் நாள் வந்து இருக்கீங்க, அதுக்காக தான் கொடுக்கிறேன் என்று பெரிய பறந்த மனசுக்காரன் போல் குமார் பேசி அவர்களிடம் கொடுத்த பணத்தில் இருவரிடமும் பாதி பாதி பணத்தை வாங்கிக் கொண்டான்.
சுரேஷ், பிரதீப் இருவரும் எதுவும் சொல்லவில்லை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்கள். கேட்ட பணத்தை கொடுத்து விட்டார்கள். மீதி பணத்தோடு அமைதியாக இருந்தார்கள்.
இவ்வளவு தெளிவாக பேரம் பேசி வாங்கியவன் ஒரு நொடி அவர்கள் இருவரையும் சற்று உன்னிப்பாக கவனித்து இருந்தால், அடுத்து நடக்க போகும் விபரீதத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி கொண்டு இருப்பானோ என்னவோ.. ஆனால் அவன் செய்த தவறு அவனை மன்னிக்க தயாராக இல்லாததால் நன்றாக மாற்றிக் கொள்ளப் போகிறான்... கர்மா இஸ் பூமராங்.
மிதுன் தன்னுடைய வண்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு பெட்ரோல் பங்க் ஓரத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டு, கடையின் உள்ளே இவர்கள் பேசிய அனைத்தையும் சுரேஷ் போன் மூலம் கேட்டுக் கொண்டு நின்றான்.
ராஜேஷ் தன்னுடைய பங்கு பணத்தை வாங்கிக் கொண்டு சென்றதும் சுரேஷ் வாட்ஸ் அப்புக்கு நான் கிளம்புகிறேன்.. நீங்கள் இன்று முழுவதும் அவனுடன் இருந்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள். மற்றபடி நாளைக்கு இது பற்றிய அனைத்து விஷயங்களை கம்பெனியில் வைத்து பேசிக்கொள்வோம் என்று மெசேஜ் அனுப்பி விட்டு, மிதுன் அங்கிருந்து கிளம்பினான்.
நேராக வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய முதலாளி மகேந்திரன் சாருக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை சொல்லி அடுத்த விஷயங்கள் எப்படி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வண்டியில் கவனமாக வந்து கொண்டு இருந்தான்.
ஆனால் இன்றைய பயணம் முழுவதும் தன்னவளோடு பிரச்சனையில் ஆரம்பிக்க வேண்டும் என்று தான் விதி போல...
அவன் மனதில் அடுத்த திட்டங்கள் பற்றி நான் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்ததாலும் சிறு வண்டியில் வந்திருந்தாலும் மிக நிதானமாகவும் அமைதியாகவும் தான் ஓட்டிக்கொண்டு வந்தான். ஆயினும் அவன் வண்டிக்கு முன்பு சிறு குழந்தை ஒன்று திடீரென்று குறுக்கே வர.. அதில் தடுமாறியவன், குழந்தை மீது மோதி விடக்கூடாது என்பதற்காக சட்டென்று தன்னுடைய வலது புறமும் வண்டியை திருப்ப, அவனுக்கு பின்னாடி வந்து கொண்டு இருந்த நம் நாயகியின் வண்டி மீது மோதி விட்டான். அதில் அமிர்தாவும் சட்டென்று நிகழ்ந்து விட்ட நிலையில், அவளாலும் சுதாரிக்க முடியாமல் தன் வண்டியோடு கீழே விழுந்தாள்.
அதற்குள் அந்த குழந்தையின் தாயும் வந்து அந்த குழந்தையை அடித்து இழுத்துக் கொண்டு செல்ல இங்கே நின்றால் பிரச்சனை தன் பக்கமும் தன் குழந்தை பக்கமும் திரும்பி விடுமோ என்று எதுவும் சொல்லாமல் அந்த தாய்க்குலத்தை தூக்கி கொண்டு சென்று விட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்த மற்றவர்கள் என்னப்பா பார்த்து வரக்கூடாதா என்று சொல்லிக் கொண்டே அமிர்தாவை தூக்கிவிட, வண்டியையும் ஒரு சிலர் தூக்கி நிப்பாட்டினர்.
அமிர்தா தன் கை கால்களில் இருந்த மண்ணை தட்டி விட்டுக்கொண்டே ஐயோ அவர் மீது எந்த தவறும் இல்லை..
அந்த குழந்தை வரவும் தான் அவரும் தடுமாறி என் மீது விழுந்துவிட்டான் என்று சொல்லிக் கொண்டு, ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என்று தன்னை பரிசோதித்து கொண்டவள்.. பெரிதாக ஒன்றும் இல்லை என்று பார்த்துக் கொண்டு, அங்கு இருந்த அனைவருக்கும் நன்றி சொன்னாள்.
அனைவரும் சென்ற பிறகு தான் தனக்கும் முன்னாள் வந்து தன்னை தட்டி விட்டது யார் என்று பார்க்க.. அது தன் மாமன் மகன் தன்னுடைய அத்தான் என்பது தெரிந்த பிறகு... என்ன ஆயிற்று இன்று காலையில் இருந்து இவரிடமே மொக்கை வாங்குகிறோம் என்று நினைத்துக் கொண்டவள் அவனிடம் எதுவும் பேசாமல் தன் வண்டியில் ஏறினாள்.
கூட்டம் கலைந்த பின் கீழே விழுந்த பெண்ணிடம், சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி சொல்வதற்காக நின்றவன், அது காலையில் கூட்டத்தில் பார்த்த பெண் என்று அறிந்த நொடி அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால் அவளோ அவனை கண்டுகொள்ளாது வண்டியில் ஏறி செல்ல பார்க்க...
அவளை எப்படி அழைப்பது என தெரியாமல் .. ஹேய் ஒரு நிமிடம் என்று கூப்பிட..
அவளும் தன் வண்டியை ஓரம் கட்டிக் கொண்டே என்ன என்று கேட்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவனும் அவளின் செய்கையில் புரிந்து கொண்டு தன்னுடைய வண்டியை சாலையின் ஓரத்திற்கு தள்ளி வந்தவன்.. நிறுத்த சொல்லிவிட்டான் அவளை ஆனால் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி தயங்கி விட்டு தேங்க்ஸ் என்று சொன்னான்.
அமிர்தா மனதில் பல ஆசைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஓஹோ என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லியவள்.. ஓகே.. சரி, டேக் கேர் என்று சொல்லி விட்டு தன் வண்டியில் அங்கிருந்து சிட்டாகப் பறந்து விட்டாள்.
சென்ற அவளை அவள் மறைந்த பின்னும் அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டே நின்றவன்.. சாலையில் சென்ற பேருந்தின் ஹாரன் சத்தத்தில் தான் தெளிவடைந்தான்.
யார் இவள்?.. இவளை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது.. ஆனால் யார் என்று தெரியவில்லையே?.. ஏனோ மனதுக்கு இவள் மிக நெருக்கமாக இருக்கிறாள்... ஆனால் இவளை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா என்றால் சரியாக தெரியவில்லையே என்று தன் நினைவடுக்குகளில் இவளை எங்கேயும் பார்த்திருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தான்.
எவ்வளவு யோசித்தும் அவளின் நினைவுகள் எங்கேயும் இல்லாமல் இருக்க, ஓகே இவளை பற்றி ஆராய்ச்சியை பிறகு பார்த்துக் கொள்வோம். இப்பொழுது கம்பெனி பிரச்சனையை சரி செய்வோம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் நேராக தன் வீட்டை நோக்கி சென்றான்... மிதுன்.
தன் மனதில் சஞ்சலத்தை விதைத்தவள் தன் அத்தை மகள் என்று அறியும் பொழுது அவன் மனநிலை எப்படி இருக்கும்... அப்போது அவன் மனதில் அமிர்தாவின் நிலை..?..
காத்திருந்து பார்ப்போம்...
வருவான்...