5. சமையல் பகுதிகள் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

5. சமையல் பகுதிகள்

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,382
Reaction score
3,229
Points
113
இன்றைய சமையல் பகுதியில் எழுத்தாளர் தமிழ் கெளசி, என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். வாருங்கள்...

*வெண்ணிலா பட்டர் கேக்*

பட்டர் - 250g

சீனி 200g - 250g சுவைக்கேற்ப

முட்டை - 05

வெண்ணிலா எசன்ஸ் - இரண்டு மேசை கரண்டி

பேக்கிங் பவுடர் - ஒரு மேசை கரண்டி

மைதா மாவு - 250 கிராம்

உப்பு ஒரு சிட்டிகை அளவு one pinch (optional)

மைதா மாவோட பேக்கிங் பவுடர் சேர்த்து சலிச்சு வைக்கணும்.

ரூம் டெம்பரேச்சர் பட்டரை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லா பீட் பண்ணனும். பட்டருடைய கலர் குறையும் வரைக்கும் நல்லா பீட் பண்ணனும். அடுத்து சீனியை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சீனி நன்றாக கரையும் வரை பீட் பண்ணனும்.

கேக்குக்கு முட்டை சேர்க்கறதுக்கு முன்னாடி நம்ம முட்டையை ஒரு கிண்ணத்துல ஒவ்வொரு முட்டையா உடைச்சு ஊத்தணும். ஊத்தி முட்டைல ரப்பர் மாதிரி ஒரு துண்டு இருக்கும் அதை நம்ம ரிமூவ் பண்ணிட்டு முட்டையை கேக் பட்டர்ல ஊத்தலாம். நம்ம ஒவ்வொரு முட்டையா கிண்ணத்துல உடைச்சு ஊத்தி கேக் பாத்திரத்துல ஊத்தும்போது முட்டை ஓடு விழுந்தாலும் நம்ம ஈஸியா எடுத்துடலாம்.

சீனி நன்றாக கரைந்த பிறகு ஒவ்வொரு முட்டையாக கேக் பட்டரில் சேர்த்து பீட் செய்யணும்.

அதோட வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீட் செய்து, பேக்கிங் பவுடர் கலந்து வைத்த மைதா மாவை ஒரு கரண்டி எடுத்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கைவிடாம கரண்டியால் கிளறி எடுக்கணும். மைதா மாவு போட்டு பீட் பண்ணக்கூடாது. கட்டிகள் இல்லாம கிளறி எடுக்கணும்.

இப்பொழுது வெண்ணிலா கேக் பட்டர் ரெடி. ஒரு கேக் தட்டு முழுவதும் லேசாக பட்டர் தடவி லேசாக மைதா மாவு தூவி நாம் செய்து வைத்திருக்கும் கேக் கலவையை அத்தட்டில் ஊற்றி, லேசாக தட்டிக்கொள்ள வேண்டும்.

ஓவனை பத்து நிமிடம் ஃப்ரீ ஹிட் செய்துவிட்டு, ஓவனில் 175°c, 45 நிமிடம் வைத்து எடுக்கவும்.

ஓவன் இல்லாதவர்கள், பிரஷர் குக்கரில் ஒரு பட்டர் பேப்பரை வைத்து கேக் கலவையை ஊற்றி தோசை கல்லை 10 நிமிடம் சூடேற்றி விசில் போடாமல் பிரஷர் குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து 45 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான வெண்ணிலா பட்டர் கேக் ரெடி….


அடடா!! பிரமாதம். ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

மிக்க நன்றி சகோதரி
 
Last edited:

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
பிறகு செய்து பார்த்து விட்டு
புகைப்படம் எடுத்து
பகிர்ந்து கொள்கிறேன்.....
🎂 வாழ்த்துக்கள் மா 💐💐💐💐👍🏻
 
Top Bottom