5 - குருதி சூழ் பிறை | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

5 - குருதி சூழ் பிறை

New updates

LATEST

Barkkavi Murali

Well-known member
Joined
May 25, 2025
Messages
356
Reaction score
187
Points
63
பிறை 5​

நளிர்புறக் காட்டின் அந்தப் பாழடைந்த பங்களாவுக்குள் இப்போது மரண அமைதி நிலவியது. ரகசிய ஆய்வகத்தின் இடிபாடுகளுக்கு நடுவே, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுத் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த அந்த மிருகத்தின் அருகில் சர்வஜனன் தீவிரமான முகத்துடன் நின்றிருந்தார்.

விஷ்வாமித்ரனும் சிவராமும் சுற்றிலும் சோதித்துக்கொண்டிருக்க, தேவமித்ரா தன் கால்சராய் பைக்குள் இருந்த ஆர்யவர்தன் கொடுத்த கோப்பை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடி அமைதியாக நின்றிருந்தாள்.

அதுவரை சுற்றிலும் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்த விஷ்வாமித்ரன் சர்வஜனன் அந்த மிருகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவரருகில் வந்து, “என்னாச்சு மாமா? இது… இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினான்.

“ம்ம்ம், இவன் பேரு லிங்கா!” என்று சர்வஜனன் கூற, அதைக் கேட்ட விஷ்வாமித்ரன், “லிங்கா… வேர்உல்ஃபா?” என்று முணுமுணுத்தான். அமைதியாக இருந்த இடத்தில் அவனது முணுமுணுப்பு அனைவருக்குமே கேட்டது.

பின் அவனே, “வேர்உல்ஃபா இருந்தா வாசனை வச்சே நான் கண்டுபிடிச்சுருப்பேனே!” என்று கூற, அத்தனை நேரம் அமைதியாக இருந்த தேவமித்ராவோ ஏதோ தோன்ற, “வேர்உல்ஃப்பா மட்டும் இருக்க வாய்ப்பில்ல விஷு.” என்றாள்.

மகளின் கணிப்பு சரியென்பதை போல சர்வஜனன் ஆமோதிப்பை அமைதியில் வெளிப்படுத்த, “என்ன சொல்ல வரன்னு தெளிவா சொல்லு தேவா.” என்று புரியாமல் கேட்டான் விஷ்வாமித்ரன்.

“ஜெனிடிக்கலி மாடிஃபைட் வேர்உல்ஃப்பா (மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஓநாய் மனிதன்) இருக்கலாம்.” என்றபடி அங்கு வந்த மித்ரநந்தனுக்கு கீழே இருந்த மிருகத்தை (லிங்கா) பார்த்தவுடன் கட்டுக்கடங்காமல் கோபம் பெருகியது.

அதற்கான காரணத்தை உணராமல், தன்னுடலில் ஏற்படும் வினோத மாற்றங்களை குழப்பத்துடனே உள்வாங்கினான் அவன்.

“எதை வச்சு அப்படி சொல்றீங்க?” என்று அப்போதும் சந்தேகம் தீராமல் விஷ்வாமித்ரன் வினவ, “அந்த மிருகத்தோட வேகம், சாதாரண ஓநாய் மனுஷங்களை விட அதிகமா இருந்துச்சு விஷு. அப்புறம் நீ சொன்ன மாதிரி, அது கிட்டயிருந்து வெளிப்பட்ட வாசனை… அது சாதாரண வேர்உல்ஃபோட வாசனையா இல்லாம, ஒருவித ரத்த வாடையா இருந்துச்சு.” என்று தடயவியல் ஆய்வாளினியாக மாறி காரணங்களை அடுக்கினாள் தேவமித்ரா.

அப்போது மித்ரநந்தனின் எண்ணவோட்டத்தை உணர்ந்த சர்வஜனன், “லேட் நைட்டாகிடுச்சு. நீங்க மூணு பேரும் வீட்டுக்குப் போங்க.” என்று கூற, ஆய்வகம் இருந்த நிலையைக் கண்ட விஷ்வாமித்ரன், “இதை இப்படியே விட்டுட்டா…” என்று தயங்கியபடி வினவினான்.

சர்வஜனன் கோபத்தில் இருக்கும் போது, பிள்ளைகள் மூவருக்குமே அவரிடம் பேச தயக்கம் இருக்கும்.

அவரோ ஒரு பெருமூச்சுடன், “இந்த நேரத்துல எதையும் செய்ய முடியாது.நீங்க முன்னாடி போங்க. இந்த மிருக… க்கும், லிங்காவை பாதுகாப்பான இடத்துல அடைச்சுட்டு, டாக்டரையும் டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு வரேன்.” என்று பொறுமையாகவே கூறினார்.

மறுப்பு கூற முடியாத காரணத்தால் மூவருமே அங்கிருந்து கிளம்பினர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் கிளம்ப, அவர்களை நிறுத்திய சர்வஜனன், “வீட்டுல யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று கூற, “அம்மாக்கு கூடவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் தேவமித்ரா.

அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்தவரோ, “நான் வந்து சொல்லிக்குறேன்.” என்றார்.

கடினமான மனநிலையிலும், அவர் சஞ்சீவனியின் மீது கொண்ட அக்கறை லேசான இதழ் விரிப்பை மூவருக்கும் தந்தது.

அவர்களும் தலையசைத்தபடியே ஆய்வகத்தை விட்டு வெளியேறினர்.

மூவரும் அவர்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி அமைதியாகப் பயணப்பட, அப்போது பக்கவாட்டு திசையில் புதர் மண்டிக்கிடந்த இடத்திலிருந்து சத்தம் வந்ததை மூவருமே கவனித்தனர்.

உடனே, விஷ்வாமித்ரன் எதிர் தாக்குதலுக்குத் தயாராக, தேவமித்ராவும் சுற்றுப்புறத்தில் கவனம் வைத்தபடி தாக்குவதற்குத் தயாராக நின்றாள்.

மூவருள் இலகுவாக இருந்தது மித்ரநந்தன் ஒருவனே!

அனாயசமாக அந்தப் புதரை நெருங்கியவன், அங்கு மறைந்திருந்த உருவத்தின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்தான்.

அந்த உருவத்தின் சொந்தக்காரியான சுலோஷனா, மற்ற இருவரை நோக்கி சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

“சுலோ!” என்று தேவமித்ரா அதிர்ச்சியுடன் அழைக்க, அவளைக் கண்ட எரிச்சலுடன், “உனக்கு அறிவிருக்கா இல்லையாங்கிற பல வருஷ சந்தேகம் இப்போ தீர்ந்துடுச்சு.” என்று பற்களுக்கு இடையே வார்த்தைகளைக் கக்கிவிட்டு முன்னேறிச் சென்றான் விஷ்வாமித்ரன்.

அதில் இதழைச் சுழித்த சுலோஷனாவோ, “இந்த ஆராய்ச்சி எல்லாம் உன் அத்தைப்பையனுக்கு வேண்டாம்னு சொல்லிடு தேவா. என்னமோ, ஊரு உலகத்துல இவருதான் பெரிய அறிவுஜீவி மாதிரி பேசுறது!” என்று சலித்துக்கொண்டாள்.

தோழியை நெருங்கிய தேவமித்ராவோ, அவள் எதிர்பாராத சமயத்தில் முதுகில் ஓங்கி அடித்து, “லூசாடி நீ! பைத்தியக்காரி… இந்த நேரத்துல இங்க என்ன வேலை உனக்கு?” என்று கேட்க, அடித்ததில் மற்றவளை முறைத்த சுலோஷனாவோ, “பின்ன என்ன பண்றதாம்? என்னை ஒரு ஆளா மதிச்சு நடக்குறதை சொல்றீங்களா யாராச்சும்? இப்படி உங்களை வேவு பார்த்துதான் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு.” என்று அலுப்புடன் கூறினாள்.

“எரும, அதுக்காக இப்படியா? இங்க என்ன நடந்துட்டு இருக்கு… நீ பாட்டுக்கு ஜாலியா பிக்னிக் வந்த மாதிரி மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சு ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருக்க!” என்று அப்போதும் திட்டியபடி தேவமித்ரா நடக்க, அவளைச் சமாளித்தபடி சுலோஷனாவும் நடந்தாள். இருவரையும் அமைதியாகப் பின்தொடர்ந்தான் மித்ரநந்தன்.

“ஆமா, இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சது? நீ எப்படி சட்டுனு இங்க வந்து குதிச்ச?” என்று தேவமித்ரா வினவ, அதற்கு என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று எண்ணியபடியே விழிகளை நாற்திசையும் சுழற்றினாள் சுலோஷனா.

அப்போது பின்னிருந்து, செறுமல் சத்தம் கேட்க, தோழிகள் இருவரும் என்னவென்று மித்ரநந்தனைத் திரும்பிப் பார்க்க, அவனோ இருவரையும் விலகி நிற்குமாறு சைகை செய்து, கிடைத்த இடைவெளியில் முன்னேறிச் சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த சுலோஷனாவைக் கண்டு காரணத்தை உணர்ந்த தேவமித்ராவோ மீண்டும் தோழியின் பின்மண்டையில் தட்டி, “சைட்டடிக்க ஃபாலோ பண்ணி வந்துட்டு, நாங்க பார்த்ததும் மதிக்கலன்னு மிதிக்கலன்னு வெட்டி ஸீன் போட்டுட்டு இருக்கியா? இருடி இன்னைக்கு உனக்குத் தரப்போற மரியாதைல, இனி அந்த வார்த்தையே உன் வாயில இருந்து வரக்கூடாது.” என்று துரத்த, மற்றவள் ஓட என்று அங்கு ஒரு குட்டி மராத்தானே நிகழ்ந்தது.

இருவரும் ஓடியபடி ஆண்களைக் கடந்து சென்றுவிட, “இங்க என்ன நடந்துட்டு இருக்கு, இதுங்க ரெண்டும் என்ன செஞ்சுட்டு இருக்குங்க!” என்று சலித்தபடி விஷ்வாமித்ரன் கூற, அதற்கு மித்ரநந்தனிடமிருந்து பதில் எதுவுமில்லை.

அதற்கும் சலித்துக் கொண்ட விஷ்வாமித்ரனோ, “பேசவே காசு கேட்குற உன்கிட்ட போய் புலம்புறேன் பாரு, என்னை சொல்லணும்!” என்று தலையிலடித்துக்கொண்டான்.

*****​

நால்வரும் சர்வஜனின் இல்லம் திரும்பிச் சென்ற நேரம், இரவின் நிசப்தம் அவ்விடத்தை ஆட்கொண்டிருக்க, சஞ்சீவனி அறியாது அறைக்குள் முடங்கிவிடவே எண்ணினர் அவர்கள்.

அதற்கென்றே மிக மெதுவாகக் கதவைத் திறந்தவர்கள், சத்தமே எழுப்பாமல், கிட்டத்தட்ட பூனை நடையில் மாடிப்படிகளில் காலை வைக்க, சட்டென்று கூடத்தின் விளக்குகள் ஒளிர்ந்து, அவர்களின் திருட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியது.

நடுகூடத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார் சஞ்சீவனி.

“எங்க போயிட்டு வரீங்க நாலு பேரும்?” என்று அவர் வினவ, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி மௌனமாக நின்றனர்.

“சோ, யாரும் வாயைத் திறக்க மாட்டீங்க அப்படித்தான?” என்று சஞ்சீவனி வினவ, சுலோஷனா தேவமித்ராவை முன்னால் தள்ளிவிட்டாள்.

தோழியை முறைத்த தேவமித்ராவின் எதிரே வந்த அவளின் அன்னை கூர்ப்பார்வை பார்க்க, அந்தப் பார்வையிலிருந்து தப்பிக்க இயலாதவளாக, “நாங்க உங்ககிட்ட எதையும் சொல்லக் கூடாதுன்னு அப்பாதான் சொன்னாரு. எல்லாத்தையும் அவரே வந்து உங்ககிட்ட சொல்லுவாராம்.” என்று கடகடவென்று ஒப்பித்தவளாக, அவளது அறைக்கு ஓட்டம் பிடித்தாள்.

சஞ்சீவனியின் யோசனை முடிவதற்குள் மற்ற மூவரும் தேவமித்ராவைத் தொடர்ந்து ஓடிவிட்டனர்.

“ப்ச், ஒவ்வொரு டைமும் உன் அப்பா பேரை சொல்லியே தப்பிச்சுட்டு இருக்க. இன்னைக்கு வரட்டும் உன் அப்பா!” என்று சஞ்சீவனி கத்துவதும், “விடுங்க அண்ணி...” என்று ரோஷினி சமாதானப்படுத்துவதும் இளையவர்களுக்குக் கேட்டே இருந்தது.

“நடந்த களேபரத்துல உன் காஃபி டேட் பாழாப்போனதை மறந்துட்டாங்க பாரேன்.” என்று சுலோஷனா கூற, “நீயே ஞாபகப்படுத்தி விட்டுடாத பக்கி.” என்றவள் படுக்கையில் மல்லாந்து விழுந்துவிட, அவளருகே படுத்துக்கொண்டாள் சுலோஷனா.

தோழிகள் இருவரும் ஒரே அறையில் துயில் கொள்வது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

“இருந்தாலும் அந்த மனுஷனை அப்படி திட்டி இருக்கக்கூடாது தேவா.” என்று சுலோஷனா சட்டென்று கூற, “அந்த ‘மேல் சாவினிஸ்ட்’ மெண்டலை எதுக்கு இப்போ ஞாபகப்படுத்திவிடுற?” என்ற தேவமித்ராவுக்கு, யாரும் நினைவு படுத்தாமலேயே ஆர்யவர்தனின் எண்ணம் எழுந்தது.

தலையை உலுக்கி விழிகளை மூடிக்கொண்டாள். கண்களை மூடினாலும், கனவைக் களவாடிக் கொள்ளும் கள்வனாக கண்முன் வருபவனை ஒன்றும் செய்ய இயலாதவளாக, அவளது உயிரினும் மேலான உறக்கத்தை விடுத்து, ஆராய்ச்சியை கையிலெடுத்தாள் தேவமித்ரா.

கனவில் திளைத்த சுலோஷனாவை இடையூறு செய்யாத வண்ணம், மேஜை விளக்கை உயிர்ப்பித்தபடி, ஆர்யவர்தன் கொடுத்துச் சென்ற கோப்பை பிரித்தாள் தேவமித்ரா.

அதிலிருந்த மூலக்கூறுகளை இணையத்தின் உதவியுடன் அலசி ஆராய்ந்தவள், இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு அதைக் கண்டுபிடித்தாள்.

‘லூனார் சார்ஜ்’ என்று முணுமுணுத்தவள், தூக்கம் இமைகளை மூடச் செய்ய, மேஜையிலேயே கண்மூடி படுத்தவள், மறுநாள் சுலோஷனா சுப்ரபாதம் பாடவே கண்விழித்தாள்.

“என்னடி அதிசயமா எழுப்புனவுடனே எந்திரிச்சுட்ட?” என்று சுலோஷனா வினவ, தேவமித்ராவின் மனமோ, முந்தைய இரவின் ஆராய்ச்சியை நினைவில் நிறுத்தி, அடுத்தக்கட்ட பணியைக் குறித்து மனதிற்குள் ஆலோசித்துக்கொண்டிருந்தாள்.

“இப்போ எதுக்கு திடீர்னு எழுப்பிவிட்ட ஜாம்பி மாதிரி நின்னுட்டு இருக்க?” என்ற சுலோஷனா, “நேத்து தப்பிச்சுட்டன்னு சந்தோஷப்பட்டுக்காத. கீழ உனக்காவே ஒரு விசாரணை கமிஷன் வெயிட்டிங்!” என்றும் கூறினாள்.

“ப்ச், ஜன்னல் வழியா குதிச்சு வெளிய ஓடிடவா?” என்று குளியலறைக்குள் புகுந்தபடி தேவமித்ரா வினவ, “ஆமா கீழ உன்னைத் தாங்கிப் பிடிக்க உனக்கான ஹீரோ வெயிட் பண்றாரு பாரு. உன் உடம்புல இருக்க ஸ்பேர் பார்ட்ல உருப்படியா இருக்க ஒரே பார்ட் அந்தக் காலு மட்டும்தான். அதையும் உடைச்சுடாதடி.” என்று தோழியைக் கேலி செய்தாள் சுலோஷனா.

அதைக் கேட்ட தேவமித்ராவோ, வாயில் பல்துலக்கியை அதக்கிக் கொண்டே வெளியே தலையை நீட்டியவள், “யாருக்கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா? நான் ஒரு ஹன்டர்!” என்று கூற, “ஹ்ம்ம், அப்பப்போ ஞாபகப்படுத்துடி. இல்லன்னா, உனக்கே மறந்துடப் போகுது! போன வீக்கெண்ட் டிரெயினிங்க்கு ஏன்டி வரல? அந்த முருகைய்யா தாத்தா கேள்வியா கேட்டு என்னை நச்சரிச்சுட்டாரு.” என்று புகார் செய்தாள் சுலோஷனா.

“ப்ச், அந்தத் தாத்தாக்கு என்னையும் என் அப்பாவையும் பார்த்தாலே ஆக மாட்டிங்குது. எப்போ பார்த்தாலும் ‘உர்’ருன்னே இருக்காரு. இதே என் அம்மாவைப் பார்த்தா மட்டும் ‘ராணிம்மா’ன்னு உருக வேண்டியது!” என்று உள்ளிருந்தே உதட்டைச் சுழித்தாள் தேவமித்ரா.

அந்த மனிதர் சர்வஜனனிடம் சற்று ஒதுக்கத்துடனே இருப்பார். அவர் ஓநாய் மனிதன் என்பதே காரணம்!

ஓநாய் மனிதர்களின் வஞ்சகத்தை வேடுவ இனத்தின் உறுப்பினரான முருகைய்யனால் முழுதாக மறக்க முடியாததே, சர்வஜனனை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணம்.

எனினும், அவரின் ‘ராணிம்மா’வின் கட்டளையை மீற முடியாமல், தன் வெறுப்பை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டார்.

அவர் தேவமித்ராவை எப்போதும் ஒதுக்கியதில்லை. ஆனால், மனிதர் சற்று கடினமாக நடந்து கொள்வதற்கான காரணம், தேவமித்ராவின் வீம்பும் பிடிவாதமுமே!

வேடுவ இனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரபுவழி வந்த மிகவும் பழைமையான சக்திவாய்ந்த வாள் உரிமையாக்கப்படும்.

அதன்படி, சஞ்சீவனி வசமிருந்த அந்த வாளை தேவமித்ரா பழக்கப்படுத்த வேண்டும் என்று அதற்கான பயிற்சியில் ஈடுபடக் கூறினார் முருகைய்யன்.

ஆம், அந்த வாளுக்கான உரிமையாளர் கையாண்டால் மட்டுமே, அதன் முழு பலனை பெற இயலும். எனவே, இந்த பிரத்யேகப் பயிற்சி!

ஆனால், வீம்புக்கென்றே அதில் பயிற்சியை மேற்கொள்ளாமல், “இது எனக்கான ஆயுதம் இல்ல.” என்று விவாதித்தவள், வாள் பயிற்சியை விடுத்து வில் பயிற்சியை மேற்கொள்ள, அதன் காரணமாகவே இருவரும் எப்போதும் முட்டிக்கொண்டிருப்பர்.

என்னதான் ஆசிரியரிடம் வாதம் செய்தாலும், வில்வித்தையில் தேவமித்ரா தலைச்சிறந்தவளாகவே விளங்கினாள். அம்புகளை செலுத்தும் வேகமும், இலக்கைத் தாக்கும் நுட்பமும் அவளிடம் அபாரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்து முடித்து வெளியே வந்த தேவமித்ரா, “இந்த வீக்கெண்ட் டிரெயினிங் வரேன்டி.” என்றவள், ‘ஃபுல் ஃபிலெஜ்ட்டா டிரெயின் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு!’ என்று மனதிற்குள் மட்டும் கூறிக்கொண்டாள்.

இருவரும் அறையை விட்டு வெளியே வர, அவர்களுக்காகவே காத்திருந்ததைப் போல அனைவரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

அக்கூட்டத்தில், விஷ்வாமித்ரனும் மித்ரநந்தனும் அமர்ந்திருப்பதைக் காணும்போது, பிரச்சனை இரவு தாமதமாக வந்ததற்காக அல்ல என்பதையும் அறிந்து கொண்டாள் தேவமித்ரா.

இரவே, சர்வஜனன் அவரின் மனைவியை சமாதானப்படுத்தும் விதத்தில் சமாதானப்படுத்தி இருந்தாரே!

ஆக, பஞ்சாயத்து தேவமித்ராவின் பாழாய்ப்போன ‘காஃபி டேட்’டிற்காகவே என்பதை அறிந்தவளோ, மாடிப்படிகளில் இறங்கும்போதே, “எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. நான் அப்படியே கிளம்புறேன்.” என்று வெளியேறப்போக, “அஞ்சு நிமிஷம் பேசுறதால, உன் வேலை எங்கேயும் ஓடிப்போயிடாது.” என்று வார்த்தைகளால் கட்டிப்போட்டார் அவளின் அன்னை.

கண்களை மூடி பெருமூச்சை விட்ட தேவமித்ரா, தானே சரண்டரானாள். அவள் எத்தனை சமாதானம் கூறியும், அவளின் செய்கைகளை கண்டித்தபடி இருந்த அன்னையை ஒரு பார்வை பார்த்தவள், அவளின் இறுதி அஸ்திரத்தை உபயோகித்தாள்.

“உங்களுக்கு மட்டும் அப்பா மாதிரி ஒரு ஜென்டில்மேன் ஹஸ்பண்ட்டா கிடைச்சுருக்காரு. நான் மட்டும் அந்த ‘மேல் சாவினிஸ்ட்’ மங்க்கியை கல்யாணம் பண்ணிக்கணுமா? முதல்ல, அப்பா மாதிரியே ஒரு ஜென்டில்மேனை என் கண்ணு முன்னாடி நிறுத்துங்க, அப்புறம் நானும் உங்களை மாதிரியே அடக்க ஒடுக்கமா நடந்துக்குறேன்.” என்றவள், சஞ்சீவனி திகைத்து நிற்கும் சமயம், தந்தைக்கு கண்ணடித்து சைகை செய்துவிட்டு, சுலோஷனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அதில், குடும்பத்தினர் அனைவரும் சஞ்சீவனியை நோக்கி நமுட்டுச்சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவ்விடம் விட்டுச்செல்ல, சஞ்சீவனி ஓரக்கண்ணில் சர்வஜனனை நோக்கினார்.

அதில், ‘நீங்க ஜென்டில்மேனா?’ என்ற கேள்வி தொக்கி நிற்க, ‘இல்லயா பின்ன!’ என்று அவரும் விழிமொழியாலேயே பதிலைப் பகிர்ந்தார்.

சுலோஷனாவை ‘சஷா கஃபே’ வாயிலில் இறக்கிவிட்ட தேவமித்ரா, தலைசைப்புடன் தனது இருசக்கர வாகனத்தை முறுக்கியபடி கிளம்பினாள்.

செல்பவளைக் கண்ட சுலோஷனாவோ, ‘இவ எதுக்கு வந்த வழியே போறா?’ என்று யோசிக்க, அவளின் எண்ணத்தின் நாயகி சென்ற இடமோ நளிர்புற எல்லையிலிருந்த ‘நைட் விஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விடுதி.

முந்தைய இரவு அவள் தேடியதற்கான பதிலை அறிந்து கொள்ள வந்தவள், அங்கு கண்டது அதிநவீன சொகுசு மகிழுந்தில் வந்திறங்கிய நவீன யுவதியையும், அவள் பின்னே இறங்கிய ஆர்யவர்தனையுமே!

அந்தக் காட்சியைப் புருவம் சுருக்கி அவள் காணும் அதே சமயம், ஆர்யவர்தனின் இதழில் அத்தனை நேரமில்லாத புன்னகை மின்னி மறைந்தது!

தொடரும்...
 
Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
அருமையான பதிவு

ஆக அம்மையார் போகும் இடம் எங்கும் ஐயாவும் நீக்கமற நிறைந்து உள்ளார்

பெண் ஒருத்தி பின்னே அமர்ந்து வருவதால் அவள் பார்க்க, இவன் என்னென்ன நையாண்டி செய்றான் பார்ப்போம்.

சுலக்ஷனா கலகலப்பு

அப்பா அம்மா அழகு
 
Barkkavi Murali

Well-known member
Joined
May 25, 2025
Messages
356
Reaction score
187
Points
63
அருமையான பதிவு

ஆக அம்மையார் போகும் இடம் எங்கும் ஐயாவும் நீக்கமற நிறைந்து உள்ளார்

பெண் ஒருத்தி பின்னே அமர்ந்து வருவதால் அவள் பார்க்க, இவன் என்னென்ன நையாண்டி செய்றான் பார்ப்போம்.

சுலக்ஷனா கலகலப்பு

அப்பா அம்மா அழகு
நன்றி அக்கா 😍😍😍
ஆமா, அப்போதான தேவா சைட்டடிக்க முடியும். அதுக்குத்தான் ஆர்யா ஹெல்ப் பண்றான் போல 😝😝😝
❤️❤️❤️
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,563
Reaction score
713
Points
113
தேவா வந்த இடத்துக்கு ஆர்யாவும் மேக்னாவும் எதுக்கு வந்துருக்காங்க?
 
Barkkavi Murali

Well-known member
Joined
May 25, 2025
Messages
356
Reaction score
187
Points
63
தேவா வந்த இடத்துக்கு ஆர்யாவும் மேக்னாவும் எதுக்கு வந்துருக்காங்க?
அடுத்த எபி போட்டுட்டேன் சிஸ்... ஏன்னு அதுல படிச்து தெரிஞ்சுக்கோங்க 😁😁😁
 
⚜️Nisha Rajan🗡️

Active member
Staff member
Joined
Mar 8, 2026
Messages
240
Reaction score
169
Points
43

யப்பா சூப்பர் எபி எப்படியோ அம்மணி அம்மாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டா. நான் சொன்னது போலவே ஹீரோ வேம்பயர் அண்ணாத்தை யா தான் இருக்கோணும் 😍😍😍😍
 
Barkkavi Murali

Well-known member
Joined
May 25, 2025
Messages
356
Reaction score
187
Points
63
யப்பா சூப்பர் எபி எப்படியோ அம்மணி அம்மாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டா. நான் சொன்னது போலவே ஹீரோ வேம்பயர் அண்ணாத்தை யா தான் இருக்கோணும் 😍😍😍😍
நன்றி சிஸ் 😍😍😍
ஆமா சைடு கேப்ல எஸ்ஸாகிட்டா 🤣🤣🤣
இருக்குமோ 😉😉😉
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
1,132
Reaction score
456
Points
83
சுலோவுக்கு நந்து மேல கண்ணோ ரொம்ப அக்கறைப்படுறாளே
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,069
Reaction score
501
Points
113

தாயின் கண்டிப்பில்
தந்தையின் ஆதரவில்
தளர்ந்த மனமும் நிமிர
தோழியின் அசட்டு சிரிப்பில்
தெரியாத ஏதோ ரகசியம்...

தெரிந்தவனாய் வந்தும்
தெரியாத மர்மம் சுமந்து
தொடர்ந்து வரும் புன்னகை
திகைக்க வைக்கிறதே.....

திட்டம் போட்டு நடக்கும் சதி
தேடித் தேடி கிடைத்த விஷயம்
தெரியாத மர்மம்
தொடரும் ஒவ்வொரு தடமும்
திகிலையே கூட்டுகிறது...

திகில் தான் கொஞ்சம்
தெளிவாகும் வரை
துடிக்கும் மனம்....
 
shasri

Active member
Joined
Jul 16, 2025
Messages
174
Reaction score
95
Points
28
Megna kum aarya kum enna link. Ivan help panna vanthaana? Potu thalla vanthana?
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
1,132
Reaction score
456
Points
83
Megna kum aarya kum enna link. Ivan help panna vanthaana? Potu thalla vanthana?
அது தெரிஞ்சா நீங்க மயக்கம் போட்டு விழுந்துடுவீங்களே 🤣🤭
 
Top Bottom