5. எழுத்தாளர் சுபகீதாவின் தனியே ... தன்னந்தனியே! | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

5. எழுத்தாளர் சுபகீதாவின் தனியே ... தன்னந்தனியே!

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
தனியே தன்னந்தனியே..2

சில நேரங்களில் சில மனிதர்களை படித்திருப்போம். அவர்களுடன் இருப்பதை மூச்சுக்காற்றாய் உணர வைப்பவர்கள் வெகு சிலரே.’ இவர்களிடமிருந்து எப்போது விடுதலை?’என்ற ஏக்கம் நமக்கு வரும்வரை நம்மை விடமாட்டார்கள். நான் பார்த்த வெகுசிலரில் இவ்வாறான மனிதர்களும் உண்டு. தோற்ற மயக்கம்-காட்சிப்பிழை-இவற்றுடன் கூடிய இவ்வாறான தருணங்களை நாம் கடந்து வருவது அத்தனை எளிதானதாக இருக்காது.

பல வருஷங்கள் நம்முன்,நம்மிடம் நல்ல விதமாக நடந்து கொள்பவர்கள் சிலதிடீரென நிறம் மாறி தெரியும் அபாயமும் உண்டு.வெறும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருக்கும் மனம் இவ்வாறான நேரங்களில் காரணத்தை ஆராயாது. நம்முள் எதிர்வினை ஆற்றியே தீரவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கும்.

ஏதோ ஒரு காலத்தில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சரியில்லாமல் இருந்திருக்கும்.அப்போது நடந்த -கடந்த பல விஷயங்களை பல வருஷங்கள் கழிந்த பிறகும் மனதில் இருத்திக்கொண்டு 'அன்று நீ அப்படி நடந்து கொண்டாயே ,நான் எப்போதும் மறக்கமாட்டேன்'என மனதின் மையத்தில் வன்மத்தை வளர்த்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக பகையை தொடர்கதையாக்குவதும், நமது சந்ததிக்குள் வன்மத்தை விதைத்து உறவுகளிடமிருந்து தூர நிறுத்தி வளர்ப்பதுவும் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும்?

சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாடு பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வந்த காலம் அது. இந்தோ-சீனா போரும் ,பாக்கிஸ்த்தானின் தொடர்ந்த தாக்குதல்களும் நம்மை வளர்ச்சிப் பாதையில் தாமதமாகியது. ஒரு வேளை கஞ்சி குடிப்பதே பெரிது. அப்போது இருந்த நிலையில் மனிதன் தான் ,தன் வயிறு என்று நடந்து கொண்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.அப்போது பெரும்பாலும் வறுமையின் சாயல். இப்போது இலகுவாக கிடைக்கும் நிறைய விஷயங்களுக்கு அன்று பெரும் போராட்டம். முக்கியமாக வயிறை நிரப்புவது பெரும்பாடாக இருந்தது.

அப்போது முடிந்துவிட்ட விஷயங்களை இப்போதும் மனதில் வைத்துக்கொண்டு முரணாக நடந்து கொள்ளுவதால் யாருக்கு என்ன பயன்? நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்கிறோம். மனதில் இருப்பவற்றை யாரை நம்பியும் வெளியே சொல்ல முடியாது. உறவினர்கள் கிடையாது நண்பர்கள் கிடையாது.யாரையும் நம்பி பழக்கம் இல்லை.இவ்வாறான மனிதர்களும் இந்த சமூகத்தில் உண்டுதானே!

அவர்களுடனும் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது நடத்தை நமக்கு வியப்பை கொடுக்கலாம். இவர்களால் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது என்றும் தோன்றலாம்.அனால்,நெருங்கி அவர்களை உற்று நோக்கும் பொழுது அவர்களுக்குள் பெரிய அளவில் மன பாதிப்பு இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை எனும் பொழுது அதன் தாக்கம் நேரடியாக மனதிற்கு தான்.

இன்னும் சிலர் உண்டு. யாரவது இரண்டுபேர் கண்முன் பேசிக்கொண்டிருந்தால் தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று தோன்றும் .சிரித்தால் தன்னை கேலி செய்துதான் சிரிக்கிறார்கள் என்று சண்டைக்கே சென்று விடுவார்கள். இவர்கள் கண்முன் யாரவது சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது. இவ்வாறானவர்கள் எல்லோருடனும் சகஜமாக பழக முற்படுவதாக இருந்தாலும், சுற்றி இருப்பவர்களால் ஒதுக்கி வைக்கப் படுவதையும் பார்க்கிறோம்.

மக்கள் தொகை அதிகம் இருந்த காலத்தில் உறவுகளுக்குள் இவ்வளவு விரிசல்களை, சண்டைகளும் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை.தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லை.ஆனாலும் மக்கள் சொந்தத்தங்களை விட்டுக்கொடுக்கவில்லை. சந்தித்து மகிழவென்றே ,அதிகம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் இருந்தது. பெண் பூப்பெய்த்துவதை கொண்டாடினோம். தாய் மாமனை அழைத்தோம். திருமணம் மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு நடந்தது.வீடே உறவினர்களால் நிரம்பி வழியும்.

சமையல் செய்வதை வீட்டில் வந்திருக்கும் பெண்கள் சேர்ந்து செய்வார்கள். பிழக்கடையில் பெண்களின் பேச்சும் சிரிப்பும் வீட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

இன்றோ எல்லாமே மாறிவிட்டது.திருமணம் சொந்த நிகழ்வு ஆகிவிட்டது. நெருங்கிய சொந்தங்கள்கூட திருமண மண்டபத்தில் தங்குவதில்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்துகொண்டுதான் கிளம்பவேண்டும்.

வந்தாலும் யாரும் எதிலும் ஈடுபாடுடனெல்லாம் கலந்து கொள்ள மாட்டார்கள். சம்பிரதாயத்துக்கு வந்தவர்கள், அருகில் அமர்ந்திருப்பவர்களிடம் கூட பேசத் தோன்றாமல் கையில் இன்னொரு கையாய் இடம்பெற்றிருக்கும் அலைபேசியில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு விடுவார்கள். இவையெல்லாம் எனது கற்பனை அல்ல. நான் வெகுவாக கூர்ந்து கவனித்த விஷயங்களை. இவற்றை நீங்களும் அனுபவித்து இருக்கலாம் .

இதற்கான முதன்மை காரணம் எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம் என்பது எனது ஊகம். நீங்கள் இப்போது 'என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்' என்று யாராலும் கேட்டுவிட முடியாது.அதற்கான பாதுகாப்பு வளையம் தான் அலைபேசியில் தங்களை தொலைப்பது. சரிதானே?

நெருங்கிய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த நபர் இருப்பதோ பெரிய அடுக்குமாடி குடியிருப்பில்.(gated community ) நானூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டது. அவர் லிப்ட்டில் பயணம் செய்திருக்கிறார். அங்கே நான்கு வயதிருக்கும் குழந்தையும் அவனது தாத்தாவும் ,இவருடன் கூட பயணித்திருக்கிறார்கள் . இந்த மனிதர் குழந்தையின் தலையை கோதி விட்டிருக்கிறார். குழந்தை இவரிடம் என் தலை அலங்காரத்தை (?)எதற்கு கலைத்து விடுகிறாய்?என்று வெகு கோவமாக கேட்டதாம்.குழந்தையின் தாத்தாவுக்கோ சங்கடமாகி போயிற்றாம். குழந்தையிடம் இந்த மனிதரும், இவரிடம் குழந்தையின் தாத்தாவும் மன்னிப்பை யாசித்திருக்கிறார்கள் .

இந்த விஷயத்தில் யாரிடம் தவறு என்பதை பற்றி நான் பேச விழையவில்லை. ஆனால், மூன்றாம் நபராக நான் நினைத்தது இங்கே பெரியவர்களிடம் காட்டவேண்டிய மரியாதையும், குழந்தையிடம் இருக்க வேண்டிய விளையாட்டுத் தனமும், தொலைந்திருக்கிறது. குழந்தையின் இந்த செய்கைக்கும் குணத்திற்கும் எது காரணமாக இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

வீட்டின் பெரியவர்கள் கூட முன்பெல்லாம் பேரன்-பேத்திகளை அருகே வைத்துக்கொண்டு நிறைய பேசுவார்கள். கதைகள் சொல்லுவார்கள். குழந்தைகளின் கற்பனைகளுக்கும் குணங்களுக்கும் வழி செய்து கொடுப்பார்கள். இப்போது நான் அதிகம் பார்ப்பது எழுவது வயதில் இருக்கும் தாத்தா பாட்டி கூட என்றோ ஒருநாள் பார்க்கும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க விரும்புவதில்லை. அவர்கள் கையில் அலைபேசி. அவர்களது மக்கள் கைகளிலும் அலைபேசி. சிறு குழந்தைகள் அங்கே இருப்பின் அது கைகளிலும் அலைபேசி.

அலைபாயும் மனம் அதற்கு முக்கிய காரணம் அலைபேசி. நான் சொல்வது சரியா என்று உங்கள் கமெண்டுகளில் சொல்லுங்கள்.இன்னும் நிறைய கதைப்போம் வாருங்கள்!
 
Last edited:

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
தனியே தன்னந்தனியே..2

சில நேரங்களில் சில மனிதர்களை படித்திருப்போம். அவர்களுடன் இருப்பதை மூச்சுக்காற்றாய் உணர வைப்பவர்கள் வெகு சிலரே.’ இவர்களிடமிருந்து எப்போது விடுதலை?’என்ற ஏக்கம் நமக்கு வரும்வரை நம்மை விடமாட்டார்கள். நான் பார்த்த வெகுசிலரில் இவ்வாறான மனிதர்களும் உண்டு. தோற்ற மயக்கம்-காட்சிப்பிழை-இவற்றுடன் கூடிய இவ்வாறான தருணங்களை நாம் கடந்து வருவது அத்தனை எளிதானதாக இருக்காது.

பல வருஷங்கள் நம்முன்,நம்மிடம் நல்ல விதமாக நடந்து கொள்பவர்கள் சிலதிடீரென நிறம் மாறி தெரியும் அபாயமும் உண்டு.வெறும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருக்கும் மனம் இவ்வாறான நேரங்களில் காரணத்தை ஆராயாது. நம்முள் எதிர்வினை ஆற்றியே தீரவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கும்.

ஏதோ ஒரு காலத்தில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சரியில்லாமல் இருந்திருக்கும்.அப்போது நடந்த -கடந்த பல விஷயங்களை பல வருஷங்கள் கழிந்த பிறகும் மனதில் இருத்திக்கொண்டு 'அன்று நீ அப்படி நடந்து கொண்டாயே ,நான் எப்போதும் மறக்கமாட்டேன்'என மனதின் மையத்தில் வன்மத்தை வளர்த்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக பகையை தொடர்கதையாக்குவதும், நமது சந்ததிக்குள் வன்மத்தை விதைத்து உறவுகளிடமிருந்து தூர நிறுத்தி வளர்ப்பதுவும் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும்?

சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாடு பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வந்த காலம் அது. இந்தோ-சீனா போரும் ,பாக்கிஸ்த்தானின் தொடர்ந்த தாக்குதல்களும் நம்மை வளர்ச்சிப் பாதையில் தாமதமாகியது. ஒரு வேளை கஞ்சி குடிப்பதே பெரிது. அப்போது இருந்த நிலையில் மனிதன் தான் ,தன் வயிறு என்று நடந்து கொண்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.அப்போது பெரும்பாலும் வறுமையின் சாயல். இப்போது இலகுவாக கிடைக்கும் நிறைய விஷயங்களுக்கு அன்று பெரும் போராட்டம். முக்கியமாக வயிறை நிரப்புவது பெரும்பாடாக இருந்தது.

அப்போது முடிந்துவிட்ட விஷயங்களை இப்போதும் மனதில் வைத்துக்கொண்டு முரணாக நடந்து கொள்ளுவதால் யாருக்கு என்ன பயன்? நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்கிறோம். மனதில் இருப்பவற்றை யாரை நம்பியும் வெளியே சொல்ல முடியாது. உறவினர்கள் கிடையாது நண்பர்கள் கிடையாது.யாரையும் நம்பி பழக்கம் இல்லை.இவ்வாறான மனிதர்களும் இந்த சமூகத்தில் உண்டுதானே!

அவர்களுடனும் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது நடத்தை நமக்கு வியப்பை கொடுக்கலாம். இவர்களால் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது என்றும் தோன்றலாம்.அனால்,நெருங்கி அவர்களை உற்று நோக்கும் பொழுது அவர்களுக்குள் பெரிய அளவில் மன பாதிப்பு இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை எனும் பொழுது அதன் தாக்கம் நேரடியாக மனதிற்க்கு தான்.

இன்னும் சிலர் உண்டு. யாரவது இரண்டுபேர் கண்முன் பேசிக்கொண்டிருந்தால் தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று தோன்றும் .சிரித்தால் தன்னை கேலி செய்துதான் சிரிக்கிறார்கள் என்று சண்டைக்கே சென்று விடுவார்கள்.இவர்கள் கண்முன் யாரவது சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது. இவ்வாறானவர்கள் எல்லோருடனும் சகஜமாக பழக முற்படுவதாக இருந்தாலும்,சுற்றி இருப்பவர்களால் ஒதுக்கி வைக்கப் படுவதையும் பார்க்கிறோம்.

மக்கள் தொகை அதிகம் இருந்த காலத்தில் உறவுகளுக்குள் இவ்வளவு விரிசல்களை, சண்டைகளும் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை.தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லை.ஆனாலும் மக்கள் சொந்தத்தங்களை விட்டுக்கொடுக்கவில்லை. சந்தித்து மகிழவென்றே ,அதிகம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் இருந்தது. பெண் பூப்பெய்த்துவதை கொண்டாடினோம்.தாய் மாமனை அழைத்தோம்.திருமணம் மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு நடந்தது.வீடே உறவினர்களால் நிரம்பி வழியும்.

சமையல் செய்வதை வீட்டில் வந்திருக்கும் பெண்கள் சேர்ந்து செய்வார்கள். பிழக்கடையில் பெண்களின் பேச்சும் சிரிப்பும் வீட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

இன்றோ எல்லாமே மாறிவிட்டது.திருமணம் சொந்த நிகழ்வு ஆகிவிட்டது. நெருங்கிய சொந்தங்கள்கூட திருமண மண்டபத்தில் தங்குவதில்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்துகொண்டுதான் கிளம்பவேண்டும்.

வந்தாலும் யாரும் எதிலும் ஈடுபாடுடனெல்லாம் கலந்து கொள்ள மாட்டார்கள். சம்பிரதாயத்துக்கு வந்தவர்கள், அருகில் அமர்ந்திருப்பவர்களிடம் கூட பேசத் தோன்றாமல் கையில் இன்னொரு கையாய் இடம்பெற்றிருக்கும் அலைபேசியில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு விடுவார்கள். இவையெல்லாம் எனது கற்பனை அல்ல. நான் வெகுவாக கூர்ந்து கவனித்த விஷயங்களை. இவற்றை நீங்களும் அனுபவித்து இருக்கலாம் .

இதற்கான முதன்மை காரணம் எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம் என்பது எனது ஊகம். நீங்கள் இப்போது 'என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்' என்று யாராலும் கேட்டுவிட முடியாது.அதற்கான பாதுகாப்பு வளையம் தான் அலைபேசியில் தங்களை தொலைப்பது. சரிதானே?

நெருங்கிய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த நபர் இருப்பதோ பெரிய அடுக்குமாடி குடியிருப்பில்.(gated community ) நானூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டது. அவர் லிப்ட்டில் பயணம் செய்திருக்கிறார். அங்கே நான்கு வயதிருக்கும் குழந்தையும் அவனது தாத்தாவும் ,இவருடன் கூட பயணித்திருக்கிறார்கள் . இந்த மனிதர் குழந்தையின் தலையை கோதி விட்டிருக்கிறார். குழந்தை இவரிடம் என் தலை அலங்காரத்தை (?)எதற்கு கலைத்து விடுகிறாய்?என்று வெகு கோவமாக கேட்டதாம்.குழந்தையின் தாத்தாவுக்கோ சங்கடமாகி போயிற்றாம். குழந்தையிடம் இந்த மனிதரும், இவரிடம் குழந்தையின் தாத்தாவும் மன்னிப்பை யாசித்திருக்கிறார்கள் .

இந்த விஷயத்தில் யாரிடம் தவறு என்பதை பற்றி நான் பேச விழையவில்லை.ஆனால், மூன்றாம் நபராக நான் நினைத்தது இங்கே பெரியவர்களிடம் காட்டவேண்டிய மரியாதையும், குழந்தையிடம் இருக்க வேண்டிய விளையாட்டுத் தனமும், தொலைந்திருக்கிறது. குழந்தையின் இந்த செய்கைக்கும் குணத்திற்கும் எது காரணமாக இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

வீட்டின் பெரியவர்கள் கூட முன்பெல்லாம் பேரன்-பேத்திகளை அருகே வைத்துக்கொண்டு நிறைய பேசுவார்கள்.கதைகள் சொல்லுவார்கள். குழந்தைகளின் கற்பனைகளுக்கும் குணங்களுக்கும் வழி செய்து கொடுப்பார்கள். இப்போது நான் அதிகம் பார்ப்பது எழுவது வயதில் இருக்கும் தாத்தா பாட்டி கூட என்றோ ஒருநாள் பார்க்கும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க விரும்புவதில்லை. அவர்கள் கையில் அலைபேசி. அவர்களது மக்கள் கைகளிலும் அலைபேசி. சிறு குழந்தைகள் அங்கே இருப்பின் அது கைகளிலும் அலைபேசி.

அலைபாயும் மனம் அதற்க்கு முக்கிய காரணம் அலைபேசி. நான் சொல்வது சரியா என்று உங்கள் கமெண்டுகளில் சொல்லுங்கள்.இன்னும் நிறைய கதைப்போம் வாருங்கள்!
அலைபேசி வந்த பிறகு முன்பு உள்ள சுதந்திரம் இல்லை என்பதை நானும் உணரவே செய்கிறேன்.

நான் கதை எழுத ஆரம்பித்த பிறகும், வாசிக்கும் போதும் மகன் வந்து ஏதாவது கேட்டால் உடனே எழுந்து சென்று செய்ய தோன்றவில்லை. பிறகு என்ன என்று கேட்க எழுந்தால், அவன் கைப்பேசியில் மூழ்கி விடுகிறான்.

கணவர் அதற்கு முன்பு.

ஊருக்கு வந்தால் முன்பு அம்மாவிடம் நேரம் பார்க்காமல் பேசி மகிழ்வது உண்டு. எழுத ஆரம்பித்த பிறகு அதிகமாக பேசவும் முடிவதில்லை.

நிதர்சனத்தின் வெளிப்பாட்டை கூறி உள்ளீர்கள்.

வெயிட்டிங் ....
 
subageetha

New member
Joined
May 26, 2024
Messages
5
Reaction score
1
Points
3

🙏
 
Top Bottom