- Joined
- Mar 22, 2025
- Messages
- 1,132
- Reaction score
- 456
- Points
- 83
பாகம்- 46
சென்னையில்
பெண் பார்க்க போவது தெரிந்ததும்,
மித்ரன் வைதேகி பாட்டிய பார்த்து மூக்கு விடைக்க முறைத்தான். பாட்டி நைசா நழுவ பார்த்தார்.
"விசாலம் இந்த வெத்தல பெட்டி எங்க வச்சேன்னு தெரியல நீங்க போங்க."
என்று பாட்டி சொல்ல, மித்ரன் பாடிய முறைத்துக் கொண்டு, அவன் கையில் இருக்கும் வெற்றிலை பெட்டியைக் காட்டி,
"அப்பா.. அம்மா.. நீங்க போங்க பாட்டிய நா கூட்டிட்டு வரேன்.." என்று மித்ரன் பல்லைக் கடித்தான்.
"சரி நேத்ரா சீக்கிரம் வா..." என்று சொல்லி பார்த்திபன் வெளியே நின்ற காரின் அருகில் சென்று நின்றார். விசாலம் காரில் அமர்ந்து கொண்டார்.
"நான் தான் வச்சிருக்கேன் நீ வா தாய்கிழவி.." என்றான் மித்ரன். பாட்டி அசட்டையாக சிரித்து,
"நீ தான் வச்சிட்டு இருக்கியா டா நா பார்க்கவே இல்ல.." என்று பாட்டி, வழைஞ்சு குழைஞ்சு சொல்லவும் மித்ரன் பாடிய முறைத்து.. கழுத்தில் கை போட்டு இறுக்கிக் கொண்டு,
"என்ன தாய்கிழவி நைஸா எஸ்கேப் ஆகலாம்னு பார்க்குறீயா! நீ பண்ண குழப்பத்தால இப்ப என் நிலைமைய பாரு.." என்றான். அப்படி அவன் சொல்லும் போது பாட்டிக்கு மீனாட்சியிடம் இருந்து குழந்தையை பிரித்துவிட்ட குற்ற உணர்ச்சி வரும்.
"அடேய் பேராண்டி நான் என்ன பண்ணுவேன். அவன் காதல் பண்ணிட்டு உயிர வாங்குறான். உன் பெரியப்பா சொன்னா கேக்குற ஆளா.. நீ என்ன பண்ணு பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடு சரி தானே!" என்று பாட்டி சொல்ல,
"அப்படியே போட்டேன்னு வை.. காரணம்ல சொல்லி எஸ்கேப் ஆகாத வா, இல்ல அம்மாச்சி கிழவின்னு பார்க்க மாட்டேன் வா என் கூட.." என்று பாட்டியை கையோடு இழுத்துக் கொண்டு போனான்.
*****
இங்கு நேத்ரன் பிரவீன் இருக்கும் ரகசிய இடத்திற்கு வருகிறான். போலீஸ் விசாரணை செய்யவும், மிக பெரிய குற்றங்களில் ஈடுபடுவோர்களை இங்கு வைத்திருப்பார்கள். அங்கு பலத்த பாதுகாப்புகளும் நிறைய காவல் கெடுபிடி இருக்கும். அவன் உள்ளே நுழைய ஒரு அறையில், மித்ரன் அடித்ததில் பிரவீன் முகம் ரத்த காயங்களுடன் இருந்தது. அவனை ஒரு சேரில் அமர்த்திக் கட்டி வைத்திருந்தனர். பிரவீன் அரை மயக்கத்தில் இருந்தான். உள்ளே வந்த நேத்ரன் அவன் கன்னங்களை பிடித்து நிமர்த்தினான்.
"பிரவீன் நா பேசுறது கேக்குதா?" என்று நேத்ரன் கேட்டான். அவன் லேசாக கண்கள் திறந்து பார்த்துவிட்டு இமைகள் அசைத்து பதிலளித்தான்.
"ம்ம்ம்.." என்றான் பிரவீன்..
"அந்த லேடி இப்போ எங்க இருக்க சொல்லு!" நேத்ரன் கேட்டதற்கு பிரவீன் லேசாக சிரித்துவிட்டு.
"தெரியாது.." என்ற பதில் அலட்சியமாக சொன்னான் பிரவீன்.
"பிரவீன் உண்மைய சொல்லு எதுக்காக அமிர்தாவ மிரட்டின. பாரதிய எதுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட சொல்லு பிரவீன்.." என்று கேட்க,
"காரணம் இல்ல.. அது எனக்கு கொடுப்பட்ட வேலை அவ்வளவு தான்.." என்றான் சாதரணமாக,
"என்ன பிரவீன் சாமர்த்தியமான பேச்சு பேசுறதா நினைப்பா. இங்க பாரு பிரவீன் நீ பண்றது பெரிய கிரிமினல் அஃபேன்ஸ். பெண்களை ஏமாத்துறது பெரிய குற்றம். இது நீ ஆயுசு முழுக்க ஜெயில்ல தான் இருக்கனும். உன் அம்மாவ பத்தி நினைச்சு பாரு அவங்களும் ஒரு பொண்ணு தான்.." என நேத்ரன் பொறுமையாகவே கேட்டான்.
"என்ன.. நேத்ரன் சார்.. அம்மா சென்டிமென்ட் சொல்லி என்ன பேச வைக்க பார்க்குறீங்களா.." என்றான்.
"அப்போ உனக்கு உன் அம்மாவ பத்தி கவலை இல்ல அப்டி தானே.."
"ரொம்ப சீப்பா இருக்கு பேட்டர் ட்ரை டூ நெக்ஸ்ட் டைம்.." என்றவன் பதிலில் நேத்ரன வெறுப்பு கோபமும் வந்தது. பிரவீன் பேச்சுக்கு இதே இடத்தில் மித்ரன் இருந்தால் பிரவீன் கன்னங்களை வீங்க வைத்திருப்பான். நேத்ரன் அங்கிருந்து வெளியே வந்தான். அவன் பேசிய அனைத்தும் நேத்ரன் ஃபோனில் ரெக்கார்ட் செய்து எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் வந்தான். அங்கு எம்எல்ஏ வந்திருந்தார் அவரை பார்த்த நேத்ரன் முகம் மாறியது.. கான்ஸ்டபிள் நேத்ரனுக்கு சல்யூட் செய்துவிட்டு.
"தம்பி சார் அந்த பிரவீன் பயல வெளியவிடச் சொல்லி எம்எல்ஏ பரமசிவம் வந்திருக்காரு.." என்க,
"சரி நா பார்த்துக்குறேன் நீங்க போங்க.."
"சரிங்க தம்பி சார்.." என்று கூறிவிட்டு கான்ஸ்டபிள் போய்விட..
"வா இன்ஸ்பெக்டரே.. அந்த டாக்டர் தம்பிய வெளிய விடுறது.." என எம்எல்ஏ கேட்க,
"அதெல்லாம் முடியாது.. வேற எதாச்சும் விஷயம் இருந்தா சொல்லுங்க.." என நேத்ரன் கராராக சொல்ல,
"யோவ் இன்ஸ்பெக்டரே நீ யாரோட மோதுறன்னு தெரியுமா?" என எம்எல்ஏ கொத்தித்தார்.
"தெரியாது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.."
"வேணா இன்ஸ்பெக்டரே அவன விட்டுட்டா உனக்கு நல்லது.. இல்ல நீ பெருசா அனுபவிப்ப..." என எம்எல்ஏ மிரட்ட,
"உங்க வாழ்த்துக்கு நன்றி.. நீங்க கிளம்பலாம்.." என்று நேத்ரன் சொல்ல, எம்எல்ஏ பரமசிவம் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி நேரா ராஜேஸ்வரியிடம் போய் நின்றார்.
"ஏன்மா ராஜேஷ்வரி அம்மா அந்த பையன் கொஞ்சம் கூட அசர மாட்டேங்குறான்.. நா ஒரு எம்எல்ஏ என்னையே அவன் வெளிய போன்னு சொல்றான்.."
"சரி கோவப்படாதீங்க.. நீங்க ஐஜிக்கு ஃபோன் போட்டு பிரவீன் எங்க இருக்கான்னு விசாரிங்க.." என்று அவரிடம் சொல்லிவிட்டு ராஜேஷ்வரி மினாளிக்கு ஃபோன் செய்தாள்..
"ஹலோ மினாளி இப்ப நீங்க இங்க வர முடியுமா.." என்று கேட்டாள் ராஜேஷ்வரி..
"ம்ம்.. எங்க வரணும்.."
"அன்னைக்கு மீட் பண்ண அதே ஹோட்டல் தான்.. என்னோட ஆஃபிஸ்ல பேசலாம் வாங்க.." என்றவள் ஃபோன் கட் செய்துவிட்டு பரமசிவத்திடம் பேசினாள்..
"என்ன பேசிட்டிங்களா.."
"பேசிட்டேன் ஆனா ஐஜிக்கு பிரவீன் இருக்குற இடம் தெரியதுன்னு சொல்றான். என்ன நினைச்சிட்டு இருக்கானுங்க. என்னை பார்த்தா அவனுங்களுக்கு சாதாரணம இருக்கா. காட்ரேன் நா யாருன்னு முதல்ல அந்த நேத்ரனுக்கு செக் வைதனக்கிறேன்.." என்று எம்எல்ஏ பேசிக் கொண்டிருக்கும் போது மினாளி அங்கு வந்தாள்.
"எக்ஸ் கியூஸ் மீ மே ஐ " என்க,
"வாங்க மினாளி மேடம்.." என்றாள் ராஜேஷ்வரி. அவளும் உள்ளே சென்று அமர்ந்தாள்.
"என்ன ராஜேஷ்வரி மேடம்.. பிரவீன் பத்தின தகவல் கிடைச்சுதா.."
"இல்ல மினாளி மேடம்.. அந்த நேத்ரன் அவன எங்க வச்சிருக்கான்னு தெரியல.. ஐஜிய கேட்டாலும் சொல்ல மாட்றாரு.. இவரு எம்எல்ஏ பரமசிவம்.."
"வணக்கம் சார்.." என்றாள் மினாளி அப்போது தான் பரமசிவம் அவளை உற்று கவனித்தார்.
"ஏம்மா நீ உன்னை எங்கயோ பார்த்து இருக்கேனே." என்றார் பரமசிவம்
"இல்ல நான் ஜெர்மன்ல இருக்கேன்.. என்னைய பார்த்து இருக்க வாய்ப்பு இல்ல.." என்று கூறி சமாளித்தாள் மினாளி.
"மினாளி மேடம் எனக்கு ஒரு உதவி வேணும்.." என ராஜேஸ்வரி கேட்க,
"சொல்லுங்க என்ன உதவி வேணும் பணம் சம்திங்.."
"அதெல்லாம் இல்ல உங்கள பத்தி நான் கேள்விப்பட்டேன்.."
"ஒரு நிமிஷம் மிஸ்டர் பரமசிவம் நீங்க வெளிய இருக்கீங்களா.." என்று மினாளி அவரைப் பார்த்து மயக்கும் புன்னகையோடு சொல்ல, அந்த மனிதர் மறுவார்த்தை பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.
"ம்ம்.. இப்ப சொல்லுங்க.." என்றாள் மினாளி ராஜெஷவரியை பார்த்து.
"நேத்ரன் என் பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். சென்னையில ஒரு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல அந்த டாக்கியூமென்ட் இருக்கு. அது எனக்கு வேணும்.. நீங்க சென்னையில எல்லாரையும் உங்க காலுக்கு கிழ வச்சி இருக்குறதா கேள்வி. அந்த லாயர் யாருன்னு பார்த்து அந்த டாக்கியூமென்ட் எனக்கு எடுத்து கொடுத்தீங்கன்னா என் பொண்ணு கல்யாணம் செல்லாதுன்னு சொல்லிடுவேன். அதோட நேத்ரன் தொல்லை இருக்காது.." என்று ராஜேஷ்வரி சொன்னதை கேட்டு, மினாளி சிரித்தாள்.
"என்ன மேடம் நான் எவ்ளோ சீரியசா கேட்டுட்டு இருக்கேன். சிரிக்கிறீங்க.." என ராஜேஸ்வரி கேட்க.
"இல்ல.. ஒண்ணும் இல்ல.. இந்த ஊட்டியில இவ்ளோ பெரிய ஆள் நீங்க அந்த கல்யாண டாக்கியூமென்ட் கேன்சல் பண்ண உங்களால முடியல.. சரி விடுங்க நாளைக்கு டாக்கியூமென்ட் உங்க கைல இருக்கும்.. அதுக்கு முன்னாடி பிரவீன் கிடைக்கனும் புரியுதா.." என்று மினாளி சிரிப்புடன் கோவம் கலந்த தோனியில் சொல்லிச் சென்றாள்.
******
அமிர்தவ காலையில் லித்திக்காவை பள்ளிக்கு செல்ல தயார்படுத்திக் கொண்டிருந்தாள். யாசோத லித்திக்காவிற்கு பால் கொண்டு வந்து கொடுக்க.
"பால் வேண்டாம் பாட்டி” என்றாள் லித்தி
"என் செல்ல பேத்தி.. நீங்க பால் குடிச்சா தானே நல்லா ஆரோக்கியமா இருக்கலாம்" என்று யசோதா சொல்ல,
"ஐய்ய பாட்டி.. பால் குடிச்சா குண்டா தான் ஆவாங்க." என்று குழந்தை சொல்லி சிரிக்க,
"ம்மா.. அவளுக்கு கஞ்சி ரெடி பண்ணி ஆற வச்சி இருந்தேன் அதை குடுங்க. செல்லத்துக்கு அதான் பிடிக்கும் இல்லடா செல்லம்.." என்று குழந்தையை தூக்கிக் கொண்டாள்.
"ஆமா அமிர்தாம்மா” என்றாள்.
"அமிர்த டைம் ஆச்சி.. என்னோட பைக் சாவி எங்கே? லித்திய ஸ்கூல்ல விட்டுட்டு ஆஃபிஸ் போகணும் கொஞ்சம் எடுத்து கொடேன்” என மணி கூப்பிட,
"இதோ ரெண்டு நிமிஷம் மாறா.."
"ஏண்டி இன்னுமா அவன பேர் சொல்லி கூப்பிடுற..?!" யசோதா கேட்க,
" பழகிடுச்சி விடும்மா.." என்றவள், சாவியை எடுத்துக் கொண்டு போய் மணிமாறனிடம் கொடுக்க, அவன் அவளை சாவியோடு கையைப் பிடித்து இழுத்து, அழுத்தமாய் இதழ் பதித்தான்.
“மாறா என்ன பண்ற விடு”
“ப்ளீஸ்டி கொஞ்ச நாளைக்கு லித்திய அத்தையோட தூங்கட்டுமே”
“எதுக்கு..?” என்று கேட்டவளை இழுத்து பெட்டில் தள்ளி, அவள் அருகே சரிந்தான்.
“ம்ம்… லித்திக்கு தம்பி பாப்பா வேணுமாம் நான் வேற பிராமிஸ் பண்ணிட்டேன்”
“அதுக்கு.. அமிர்தா சரின்னு சொன்னா இல்ல சொல்லலைனாலும் ப்ராசஸ் ஆரம்பிக்கப்படும்.”
“என்ன மாறா நீ இப்படிலாம் பேசுற.. எனக்கு வெட்கமா இருக்கு”
“பார்ரா.. என் பொண்டாடிக்கு வெட்கம் வருது… ம்ம்..!” என அவளை அணைத்து கன்னத்தில் மீசை குத்தும் முத்தம் கொடுத்து விடுவித்தான்.
"அமிர்தா டைம் ஆச்சுமா..!”
“இதோ வரேன் ம்மா.” என்றவள் உடையை சரி செய்து கொண்டு அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள். மணிமாறன் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அமிர்தா மணிமாறன் கொடுத்த முத்தங்களை எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தாள். பாரதி அப்போது தான் வீட்டினுள் வந்தாள். தன் அக்கா பைத்தியம் போல சிரிப்பதைப் பார்த்து,
“அக்கா என்னாச்சு” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“என்னடி..!”
“எதுக்கு சிரிக்கிறே?.”
“அது வந்து.. ச்சீ போடி..” என்றவள் வெட்கப்பட்டு மீண்டும் அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
மௌனம் தொடர்ந்து பேசும்