- Joined
- Mar 22, 2025
- Messages
- 826
- Reaction score
- 448
- Points
- 63
பாகம்- 28
மணிமாறன் அமிர்தாவை இழுத்து சோஃபாவில் தள்ளினான். அவள் கண்கள் கலங்கி அப்படியே அமர்ந்து இருக்கிறாள். அவளை பிடித்த இழுத்து நிற்க வைத்து.
" உனக்கு என்ன தான் பிரச்சனை? எதைக் கேட்டாலும் தனியா விடு.. தனியா விடுன்னு சொன்னா என்ன அர்த்தம். அப்டி உனக்கு என்ன தான் பிரச்சனை? சொல்லு அமிர்தா? மித்ரன் நம்ப பிரண்ட் தானே! அவனுக்கு பாரதிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை சொல்லு அமிர்தா" என்று மணிமாறன் கோபமாக கேட்க அமிர்தாவும் கோபத்தில்
"என்னாலா எதுவும் சொல்ல முடியாது சொல்லவும் மாட்டேன்." என்று சுத்தமாக கத்தினாள். மணிமாறன் கோபத்தில் மிர்தாவை அறைந்துவிட்டான். அமிர்தா கன்னத்தைப் பிடித்தபடி சோஃபாவில் விழுந்தாள். சத்தம் கேட்டு விளையாடி கொண்டிருந்த லித்தி ஓடி வந்து சோஃபா மீது ஏறி நின்று, மணிமாறனையும் அமிர்தாவையும் மாறி மாறி பார்த்து விட்டு மணிமாறன் சட்டையை பிடித்து இழுத்து.
"அப்பா.. அம்மா ஏன் அழுகுறாங்க..?" என்று கேட்டாள். அமிர்தா கண்களை துடைத்துக் கொண்டு,
"லித்திமா அம்மா அழுகலடா தங்கம். அப்பா காமெடி சொன்னாங்க அதான் சிரிச்சு சிரிச்சு கண் கலங்கிடுச்சு. நீ போய் விளையாடு செல்லம்" என்று கூறி அமிர்தா குழந்தையை சமாளித்துவிட, லித்தி மணிமாறன் சட்டையை பிடித்து இழுத்தாள். அவனும் குழந்தை உயரத்திற்குக் குனிந்து நிற்க.
"அறிவு இருக்காப்பா உனக்கு! இப்டி அம்மா அழுதுற மாதியா காமெடி சொல்லுவ? சாரி சொல்லு அம்மா கிட்ட" என்று குழந்தை சொல்ல அவனும்
"சாரி அமிர்தா" என்று அவன் சொல்ல, குழந்தை அந்த பிஞ்சு கரங்களால் அமிர்தாவின் கண்களை துடைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். அந்த குட்டி தேவதை லித்தி. அவளுக்கு இன்னும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
"இப்ப ஓகேவா அப்பா இனி காமெடில சொல்ல மாட்டாரு சரியா அழதீங்க அமிர்தாம்மா" என்று லித்தி குட்டி சொல்ல "ம்ம்ம்" தலையை ஆட்டி அமிர்தா உணர்ச்சி பெருக்கில் குழந்தையை அணைத்துத் தூக்கி கொண்டு, அவள் அறையில் சென்று அமர லித்தி அமிர்தா மடியில் படுத்து கொண்டாள். அமிர்தா குழந்தை தலையை வருடி கண்கள் கலங்கி, அவள் மனசாட்சியுடன் போராடிக் கொண்டு இருக்கிறாள்.
‘நீ ஒரு சுயநலவாதி அமிர்தா… உன் சுயநலத்துக்காக பாரதி மனச கொன்னுடியே அமிர்தா! அவ வாயில்லா பொண்ணு அவ மனச சுக்குநூறா உடைச்சிட்டியே அமிர்தா!" என்ற அவளின் மனசாட்சியின் குரல் அவள் காதில் கேட்க அவள் மனதினுள் புழுங்கினாள்.
"ஆமா.. நான் சுயநலவாதி தான்… நான் சுயநலவாதி தான்... அம்மா அம்மா ன்னு என்னைய வாய் நிறைய கூப்புடுறாலே இந்த பிஞ்சு குழந்தை, இவ உயிர காப்பாத்த தான் என் தங்கச்சி வாழ்க்கையவே பலி கொடுக்க முடிவு பண்ணிட்டேன். எனக்கு வேற வழி தெரியல.. தெரியல" என்று அவள் மனசாட்சியுடன் வாதிட்டாள். அவள் முகத்தை மூடிக் கொண்டு சத்தமில்லாமல் அழுதாள். அவளும் குழந்தையுடன் உறங்கியும் விட்டாள்.
மித்ரன் மணிமாறனுக்கு ஃபோன் செய்து வர சொல்லி இருந்தான். மணிமாறனும் ஆஃபீஸ் வந்ததும். அவன் அறையில் சென்று அமர்ந்து இண்டர்காமில் இந்திராவை அழைத்தான்.
' என்ன இன்னைக்கு டான் ரொம்ப டென்ஷனா இருக்காரு..' என்ற யோசனையோடு எழுந்தவளை கௌதம் என்ன என்பது போல் புருவங்களை உயர்த்தி கேட்க. அவள் மணிமாறன் அழைத்ததாக சொல்ல மணிமாறன் அறையை நோக்கி நடந்தவளை கையை பிடித்து இழுக்க அவளும் நின்று
" என்ன..?" என்று கேட்க அவன் எப்போதும் போல்.
" ஐ லவ் யூ.." என்று சொல்லி உதட்டை குவித்து உம்மா என்க. இந்திரா நங்கென்று கௌதம் தலையில் ஒரு கொட்டு வைத்தாள். அவன் 'ஆஆஆஆஆஆ' என கத்தி ஆஃபீஸ்ல இருக்கவங்க சுத்தி நின்னு என்னனு கேக்க 'ஒண்ணும்மில்லை' என்று அவன் சொல்ல எல்லாருமாக சேர்ந்து ‘தூஃபூ’ என்று துப்ப இந்திரா தலையில அடித்துக் கொண்டாள்.
" வேலைய பாருடா வென்று" என்று சொல்லிவிட்டு இந்திரா, மணிமாறன் அறையின் கதவை தட்ட.
"உள்ள வாடி, என்னமோ புதுசா வேலைக்கு ஜாயின் பண்ண மாதிரி கதவ தட்டிட்டு இருக்க" என்றான் மணிமாறன். அவளும் அசடுவழிய உள்ள போனாள்.
"என்ன டான் வர சொன்னிங்க..? முகம் வேற பிரைட்டா இருக்கு அமிர்தா உம்மா குடுத்துட்டாளோ!" என்று அவள் கேட்க, வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தான் அவனுக்கு இன்னும் வெறுப்பை உண்டாக்கியது.
"கொஞ்சம் வாய மூடுறியா! ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன் ஏதாவது சொல்லிட போறேன்.” என்று கோபமாக சொல்லிவிட்டு, மணிமாறன் சேரை விட்டு எழுந்தான்.
"சாரி டான் சார்," என்று இந்திரா மெதுவாக சொல்லிவிட்டு, அவளும் எழுந்தாள்.
" ஓகே… ஓகே.. நீ உட்காரு.." என்று மணிமாறன் சொல்ல, அவளும் அமர்ந்தாள்.
" மித்ரன் எங்க..?"
" ஏதோ ஒரு ஹாஸ்பிடல் டிடெயில் கலைக்ட் பண்ணனும்ன்னு சொல்லிட்டு போனான்."
'அப்றோ எதுக்கு என்னை வர சொன்னான்!' என்று மணிமாறன் யோசித்துவிட்டு.
" சரி நீ போ.."
" டான்... ஏதும்... பிரச்சனையா.." என்று மெல்லமாக கேட்டாள் இந்திரா.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நீ போய் வேலைய பாரு.." என்றான் மணிமாறன். அவளுக்கு குழப்பமாக இருந்தது மணிமாறன் கோபமாக இருப்பது. அவனிடம் அதை கேட்க நினைத்தாள்.
" டான்..." என்று மெதுவாக அழைத்தாள்.
" போனு சொன்னே இந்திரா." என்று மணிமாறன் காட்டமாக சொல்ல அவளும் என்னவோ ஏதோ என்று யோசித்துக் கொண்டு வெளியே வர. மித்ரன், நேத்ரன் இருவரும் ஒன்றாக கண்ணாடி அணிந்து ஒரே உடையில் வர, யார் மித்ரன் யார் நேத்ரன் என்று தெரியவில்லை. இருவரும் நடந்து வரும் தோரணையை ஆஃபீஸில் அனைவரும் வாயைப் பிளந்துக் கொண்டு பார்க்க. இருவரும் நேராக மணிமாறன் அறைக்கு சென்று இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
வெளியே இருந்த கௌதம், இந்திராவுக்கு ஏதும் புரியவில்லை. அவங்க அப்படி என்ன ரகசியம் பேசுகிறார்கள் என்பதை கேட்க வேண்டும் என்று ஆர்வமாக இந்திரா, குனிந்து கொண்டே சென்று மணிமாறன் அறையின் கதவின் பக்கத்தில் குனிந்தபடி நின்று கதவில் காதை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை கேட்க நினைத்தாள். ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் அவள் காதில் கேட்டது.. இந்திரா பின்னால் வந்த கௌதம் மிக மெதுவாக,
"ஏய்... என்னடி பணற?" என கௌதம் கேட்க, அவள் உதட்டின் மேல் ஆள்காட்டி விரலிலை வைத்து.
"ஷ்ஷூஉஉ.." என்றாள் அவனும் குனிந்தபடி அவள் பின்னால் நிற்க. இவர்கள் இருவரின் செயலைப் பார்த்து ஆஃபிஸ்ல இருக்குற மற்றவர்களும் ஒவ்வொருவரும் வந்து என்ன என்று கேக்க ஷ்ஷூஉஉஊ.. என்று சொல்ல அனைவரும் இந்திரா, கௌதம் பின்னாடி வரிசையாக குனிந்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்.
உள்ளே மூவரும் பேசி முடித்துவிட்டு நேத்ரன் வந்து சட்டென்று கதவைத் திறக்க, மொத்தபேரும் அவன் காலில் விழுந்தார்கள். மன்னிப்பு கேட்பது போல் விழுந்துக் கிடந்தாள் இந்திரா. என்ன சத்தம் என்று மணிமாறன், மித்ரன் வந்து பார்க்க, இந்திரா இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
"ஏய் அரைலூசே! என்ன பண்ற, எல்லாரையும் கூட்டி வச்சிட்டு" மித்ரன் கேட்க,
" எல்லாருமா.. யாரு..?"என்று யோசித்துவிட்டு, இந்திரா திரும்பினாள், ஆஃபிஸ் மொத்தமும் அவள் பின்னாடி தான் நின்று இருந்தது. இந்திரா அப்படியே திரும்பி மணிமாறன், மித்ரனை பார்த்து அசடுவழிஞ்சிட்டு..
" ஹிஹிஹி.. அது எல்லாரும் கம்யூட்டரையே பார்த்துட்டு ஒர்க் ஸ்ட்ரெஸ்ல இருப்பாங்க, அதான் சும்மா ரிலாக்ஸ் பண்ணலாம்னு… சிக்கு புக்கு ராயில் விளையாடிட்டு இருந்தோம்" என இந்திரா சொல்லி முடிக்கும் முன்.
"ஷாடாப் இடியட் கெட் அவுட்." என்று மணிமாறன் காட்டமாக கத்த, எல்லாரும் புயல் காத்தா பறந்து போய் அவங்கவங்க சீட்ல உட்கார்ந்தாங்க. மித்ரன், நேத்ரனைப் பற்றி ஆஃபீஸில் சிலர் வாய் கிசு கிசுத்தது. ‘வாவ் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க! ஒரு வேலை டூவின்ஸ்சா இருப்பாங்களோ?’ என்று பேசிக் கொண்டனர். மித்ரன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேத்ரன் யார் என்று அனைவருக்கும் சொல்ல நினைத்தான்.
"காய்ஸ்.. இது என்னோட பெரியம்மா பையன். என்னோட அண்ணன் நேத்ரன்.." என்று மித்ரன் பெருமையோடு சொல்ல, 'வாவ் சூப்பர் தல' என்று சிலர் ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தானர்..
இந்திரா மட்டும் மித்ரனிடம் ரகசியமாக
" உண்மைய சொல்லு இவரு உங்க பெரியம்மா பையனா..?"
" ஏண்டி உனக்கு இந்த சந்தேகம்."
"அச்சு அசலா இருக்கிங்களே.. ஜெராக்ஸ் மிஷின் ஏதும் வச்சி இருக்கிங்களா..!?" என்று கிண்டலடித்தாள்.
" உன்ன கொள்ள போறேன்டி, வாய வச்சிட்டு சும்மா இரு பேசாம.." என்று சொல்ல அவள் அமைதியானாள்.
இங்கு அமிர்தாவிற்க்கு பிரவீனிடம் இருந்து ஃபோன் வந்தது.. அவன் நம்பர் பார்த்து அவள் எடுக்காமல் இருந்தாள். அதனால் பிரவீன் அவள் அம்மாவின் ஃபோனில் அழைத்தான். யசோதா அட்டன் செய்துவிட்டு,
" ஹாலோ யாருங்க..?" என்றார்.
" நான் டாக்டர் பிரவீன் பேசுறேன்."
" என்ன விஷயம் சொல்லுங்க தம்பி."
" குழந்தை எப்டி இருக்கா?"
" நல்லா இருக்கா தம்பி.."
" நீங்க தப்பா எடுத்துக்கலனா ஃபோன அமிர்தா மேடம் கிட்ட குடுங்கலேன். குழந்தையப் பத்தி பேசணும் நான் அவங்க நம்பர்க்கு தான் கால் பண்ணேன் அவங்க எடுக்கல அதான் உங்களுக்கு பண்ணேன்.."
"சரி தம்பி இருங்க தரேன்." என்று சொல்லி அமிர்தாவின் அறை கதவை தட்டினார்
"அமிர்தா.. அமிர்தா.." என்று அழைக்க அவள் மடியில் தூங்கி கொண்டு இருந்த லித்தியை பெட்டில் கிடத்திவிட்டு. கண்களை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.
"இந்தாமா, டாக்டர் தம்பி ஏதோ பேசணுமாம் லைன்ல இருக்கு." என்று யசோதா, அமிர்தா கையில் ஃபோனை திணித்து விட்டு சென்றார். அவள் அம்மா வெளியே போகும் வரை பார்த்துவிட்டு, கதவை பூட்டிவிட்டு காதில் ஃபோனை வைத்தாள்.
" ஹா..ஹா..ஹாலோ.." என பதட்டத்தில் திக்கினாள்.
" என்ன அமிர்தா மேடம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. நான் சொன்னதுலாம் மறந்து போச்சா?" என பிரவீன் மிரட்டல் தோணியில் கேட்டான்.
"ஏன் இப்டி சித்ரவத பண்ற.. என் தங்கச்சி பாவம் அவள விட்ரு." என அமிர்தா கெஞ்சினாள்.
"அப்போ லித்தி பாவம் இல்லையா! அதானே அவ என்ன நீ பெத்த குழந்தையா அதைப் பத்தி நீ கவல படுறதுக்கு. பேருக்கு தத்தெடுத்துக்கிட்டா நீ அம்மா ஆகிடுவியா.?” என பிரவீன் அவள் உணர்வுகளை சீண்டினான்.
"ஸ்டாபிட் பிரவீன்… லித்தி எப்பவும் என்னோட குழந்தை தான். லித்திக்கு நான் தான் அம்மா" என அமிர்தா உறுதியாக கூறினாள்.
" வெறி குட்.. பரவாயில்லை உனக்குள்ளேயும் அம்மாங்குற உணர்வு இருக்கே! இங்க பாரு அமிர்தா உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான். ஒண்ணு குழந்தை இல்ல உன் தங்கை பாரதி. இதுல உனக்கு எது விருப்பமோ நீயே முடிவு பண்ணி சொல்லு. பாரதிய நான் மேரேஜ் பண்ணா அட்லீஸ்ட் குழைந்தையவாது காப்பாத்தலாம். இன்னைக்கு நான் சொன்னது எல்லாம் மனசுல வச்சிட்டு நாளைக்கு காலையில பத்து மணிக்குள ஃபோன் பண்ற. என்ன புரிஞ்சிதா? நானா இருக்க போய் பேசிட்டு இருக்கேன் இதே என் மாமாவ இருந்தா இப்போ பாரதி என் கூட இருந்து இருப்பா. எல்லாம் அந்த மித்ரனால கெட்டுச்சி. இருக்கடும் அவன தனியா கவனிச்சிக்கிறேன்." என்று சொல்லி முடிக்க, அமிர்தா செய்வதறியாது திகைத்தாள். அந்த அறை கதவை தட்டும் சத்தம். அமிர்தா உடனே ஃபோனை கட் செய்தாள். உள்ளுக்குள் ஒரு பயத்துடனே கதவை திறந்தாள்.
வெளியே பாரதி தான் நின்று இருந்தாள். அவள் அக்கா சாப்பிடாமல் இருப்பதால், ஒரு தட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் அமிர்தா அவளை அணைத்துக் கொண்டு சத்தமாக அழுதாள் பாரதிக்கு ஒரே குழப்பம். உள்ளே சென்று சாப்பாட்டு தட்டை ஒரே மேஜை மீது வைத்து விட்டு அறையின் கதவை பூட்டிவிட்டு பெட்டில் இருவரும் அமர்ந்தனர்.
" என்னச்சு.. என்னாச்சு.." என்று பாரதி சைகையில் கேட்டாள்.
"என்ன மன்னிச்சிடு பாரதி.. என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம். நான் ஒரு சுயநலவாதி பாரதி." என்று அமிர்தா அழுதாள். பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னனு சொல்லுக்கா..!" என்று பாரதி சைகையில் கேட்டாள்.
மௌனம் பேசும் தொடர்ந்து....