27. செஞ்சுடரின் பனித்துளியா... | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

27. செஞ்சுடரின் பனித்துளியா...

New updates

LATEST

senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
112
Reaction score
141
Points
43
27. செஞ்சுடரின் பனித்துளியா...

தன் அறையில் அமிர்தா தன் அறையை சுற்றி பார்ப்பதை பார்த்து விட்டு அவளிடம் சாரி அம்மு என்றான் மிதுன்.

தான் இந்த அறைக்குள் வந்ததிலிருந்து அவன் படும் பாட்டை ஓரக்கண்ணால் ரசித்த அவள் எதற்கு அத்தான் என்னிடம் சாரி கேட்கிறீர்கள் என்று அவள் இயல்பாக பேச... அவனுக்கோ..

அவளின் அந்த புருவச் சுழிப்பும்.. முகத்தில் இருந்த கேள்வி குறியும், அவளின் உதட்டு அசைவும் ஆணவனுக்குள் ஏதேதோ செய்ய, மீண்டும் கலங்கி போய் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

மாடிக்கு வரும் பொழுது சரஸ்வதி அத்தாச்சி தன்னிடம் கேட்ட கேள்வியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், மிதுனை மிகவும் சோதனைக்கு உள்ளாக்காமல் அவனிடம் சென்று வாங்க அத்தான் போய் சாப்பிடலாம். சாப்பிட தான் கூப்பிட வந்தேன் என்றாள்.

அம்மு ப்ளீஸ் கொஞ்சம்.. கொஞ்சம் இங்கே வாயேன் என்று கூப்பிட்டான்.

அவளும் இயல்பாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

எங்கே அமிர்தா எதிரில் இருக்கும் சேரில் அமர்ந்து விடுவாளோ என்று பயந்தவன் தனக்கு அருகில் வந்து அமர்ந்ததும், நொடி கூட தாமதிக்காமல் அவள் இடது கையை எடுத்து தன் கைகளுக்குள் சிறைபிடித்தவன்.. அம்மு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத நான் பேசுவதை கொஞ்சம் பொறுமையா கேளு.. அதே சமயம் நான் பேசி முடிக்கும் வரை இடையில் பேசாதே என்று சொல்லி விட்டு, சில நிமிடங்கள் அவளின் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டவன் சில வினாடிகள் கழித்து அவள் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தான்.

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் எப்ப பிடிக்கும், எப்ப இருந்து பிடிக்கும், எதனால் பிடிக்கும், எதுவுமே எனக்கு தெரியாது. ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் அக்கா கிட்ட தான் நான் அதிகமா பேசி இருக்கேன். பழகி இருக்கேன் ஆனா உன் கிட்ட அதிகம் உள்ள பழகணும் ஆசை அதிகம். ஆனா நீ எப்பவும் உன் அண்ணன் கூடயே சுத்திட்டு இருப்பேன் அவனுக்கு என்னை பிடிக்காது அது போல் உனக்கும் என்னை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாது அப்படி இருந்தும் நீ என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆனா என்னைய உங்க வீட்ல இருக்க வேற யாருக்குமே பிடிக்காது. உன் அக்காவை தவிர, அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் அது மாதிரி தான் உனக்கும் என்னை பிடிக்காதுன்னு நினைச்சேன்.. அப்போது அமிர்தா ஏதோ பேச வர அவளை விழிகளாலேயே எதுவும் பேசாதே என்று சொன்னவன்.. அவளும் அவளின் பார்வை வீச்சில் அமைதியாகி அவன் பேசுவதை கேட்க அமைதியாக இருந்தாள்.

தன் விழிகளில் தெரிந்த மொழியை படித்து அமைதியான அவளை பார்த்து அவனுக்கு ஏனோ அவளை கட்டி பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தாலும், அதை தனக்குள்ளே புதைத்தவன் தான் தொடர்ந்த சொல்ல வந்த விஷயத்தை தொடர்ந்து பேசினான்.

எனக்கு நம்ம ஊர்ல ஒருத்தரை கூட பிடிக்காது, உனக்கே தெரியும் காசு பணம் இல்லாத பையன் எங்க அம்மாவையும் அப்பாவையும் உறவுக்காரவங்க மட்டும் ஒதுக்கி வெச்சிருந்தா கூட பரவால்ல, ஊர்காரவங்களே ஒதுக்கி வெச்சிருந்தாங்க. ஏதோ தீண்ட தகாதவர்கள் மாதிரி அப்போது எனக்கு எவ்வளவு வலி இருக்கும்.. கொஞ்சம் கூட யோசித்து பார்க்கவே முடியவில்லை. அந்த ரணம் என்னால இப்பவும் மறக்கவே முடியல. அதைவிட பெரிய விஷயம் இந்த வீணா போன பணம் நானும் மிதுனாவும் படிச்சு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து எங்க கிட்ட நிறைய வர ஆரம்பிச்சது. அடுத்த நிமிஷம் ஊர்ல போறவன் வரவன் எல்லாம் எனக்கு வணக்கம் சொல்லிட்டு போனான். அதுவரை ஒவ்வொரு திருவிழாவுக்கு போனா கூட என் தங்கச்சியை ஒரு மனுஷியாக கூட நினைக்காத அந்த ஊர் காரவங்க எல்லோருமே மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லி கொண்டாடுனாங்க. அவனுங்க அத்தனை பேரையும் அப்படியே தரையோடு தரையா வைத்து அடித்து அமிக்கி மண்ணுக்குள்ள புதைக்கணும்னு வெறி தான் வந்துச்சு. ஆனால் சிரிக்க கூட முடியாமல் அவர்களை கடந்து வருவேன். ஆனா மிதுனா பெண் பிள்ளை அல்லவா அவர்களை எல்லாம் ஈஸியா மன்னிச்சுட்டா. ஊரோட ஒட்டி வாழ ஆரம்பிக்கணும்னு ஆசைபடுறா.. அது அவளோட நேச்சரா இருக்கலாம். ஆனா என்னால நம்ம ஊரோட ஒத்து வாழ முடியாது. நீயும் மிதுனா மாதிரி ஒரு பொண்ணு தான் கண்டிப்பா உன்னாலயும், நம்ம ஊரையும் உன்னை பெத்தவங்களையும் விட்டுட்டு என் கூட இந்த வீட்ல இங்க வந்து இருன்னு சொன்னா உன்னாலயும் முடியாது. என்னாலும் உங்க வீட்டு ஆட்களோட இயல்பாக பேசி பழக முடியாது அதனால என்ன மன்னிச்சிடு. அதே சமயம் இதை ஏன் நான் இப்ப உன்கிட்ட சொல்றேன் அப்படின்னு உனக்கு தோன்றலாம், கண்டிப்பா உன்ன ரொம்பவே நேசிக்கிறேன், விரும்புகிறேன்.. என்னையும் தாண்டி நான் உன்கிட்ட உரிமையா பேசிட கூடாது., பழகக் கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி பண்றேன், அதுல நான் இதுவரைக்கும் கரெக்டா இருக்கேன் அப்படின்னு நான் பொய் சொல்லி என்னை நானே ஏமாத்திட்டு இருக்கேன். இப்ப கூட உன்னைய அப்படியே.. வேண்டாம் நான் எதுவும் சொல்லல. ஆனா இத நான் ஏன் உன்கிட்ட வெளிப்படையா சொல்றேன் அப்படின்னா, தயவு செய்து என்னை புரிந்துகொண்டு என்னை விட்டு நீ விலகியே இரு. அதுவும் கொஞ்ச நாள் இல்ல எப்பவுமே விலகியே இரு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு.வேலையை மட்டும் பார்க்க உன்னால கூட முடியும். என்னால் முடியாது. அதனால தான் வெளிப்படையா உண்மைய சொல்லிட்டேன் உன்கிட்ட, ப்ளீஸ் எனக்காக இந்த உதவியை செய். தயவு செய்து இனிமே வேலை நேரம் தாண்டி ஒரு நிமிடம் கூட என்னோடு நீ தனியா இருக்க கூடாது. என்ன புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன் என்று சொல்லி கொண்டே.. தன் கைகளுக்குள் பத்திரமாக வைத்திருந்த அவளின் கைகளை விடுவித்தான். இதுவரை தான் பேசிய அனைத்து வார்த்தைகளும் அவளின் கை தந்த கதகதப்பிலும் ஆறுதலிலும் தான் என்பதை நினைத்து மனம் வலியில் துடித்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் அவனின் கைகளுக்குள் இருந்த தன் கைகளை விளக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவள்..

அப்ப நான் உங்களை விரும்புவது உங்களுக்கு முன்பே தெரியும் அப்படித்தானே அத்தான் என்று கேட்டாள்.

வாய் திறந்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் ஆமாம் என்பது போல் ஆட்டினான்.

ஓகே.. நான் உங்களை விரும்புகிறேன் என்று உங்களுக்கு எப்போது தெரியும் என்று தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள்.

அது வேணாமே என்று அவளின் பார்வையை தவிர்த்து, சங்கடப்பட்டு கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டான்.

இவ்வளவு நேரம் நீங்க பேசுனத கேட்க சொன்னீங்க, என்கிட்ட ஒரு கோரிக்கையும் வச்சிருக்கீங்க அதை நான் நிறைவேத்தனும் அப்படின்னா, எனக்கும் சில கண்டிஷன்ஸ் இருக்கு. சோ நான் கேட்கிற கேள்விக்கு கரெக்டான பதில் சொல்லுங்க என்று வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி உத்தரவாக சொன்னாள்.

அது... அது... என்று மிதுன் திணற...

என்ன அத்தான் அடுத்து வந்தா அதாவது அது வந்து இப்படி திணறிக்கிட்டே இருக்க போறீங்களா? திணறிக்கிட்டே இருக்கறதெல்லாம் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க கூட நான் தனியா இருக்கறதை ரொம்பவே ரசிப்பேன். அது உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கிறப்ப எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க எனக்கு நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாத வரைக்கும் நான் சந்தோஷமா உங்க பக்கத்துல உக்காந்து ஜாலியா என்ஜாய் பண்ணுவேன் என்று, இவ்வளவு நேரம் தான் கைகளை அவன் பிடித்திருந்ததால் அமைதியாக இருந்தவள், இப்பொழுது அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவனின் கையை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

சில கணங்கள் அவளின் செய்கையில் மூச்சு விடவும் மறந்து போய் இருந்தவன் அவளின் மூச்சு காற்று தன் காதோரம் குறுகுறுப்பை ஏற்படுத்த அப்பொழுது தான், அவளை திரும்பி வேகமாக பார்த்தான். அப்பொழுது இருவரின் உதடுகளும் மிக அருகாமையில் இருக்க... பெண்ணவளுக்கு கூச்சம் வந்தாலும் இப்படி ஒரு சந்தர்ப்பம் இந்த ரோபோட் கிட்ட திரும்ப கிடைக்குமா என்று தெரியாததால் அதை ஒதுக்கி விட்டு அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

காதல் கொண்ட கள்வனோ அவளிடம் இருந்து நகர்கிறேன் என்று பேர் வழியில் அவளின் இதழ்களை தீண்டியும் தீண்டாமலும் லேசாக இதழ் உரசி தள்ளிக் கொள்ள... அந்த காதல் கள்வனின் குறும்புகளை ரசித்தவள்.. ம்ம்.. சொல்லுங்க அத்தான் என்று மிகவும் மெல்லிய குரலில் சினுங்கலாக கேட்டாள்.

நீ வயசுக்கு வந்த அப்பவே தெரியும் என்று திக்கி திணறி சொன்னான்...

ம்ம்... புரியலையே அப்ப நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வரவே மாட்டீங்களே... என்று யோசிக்கும் போது அவனின் பார்வை மாற்றத்தை கவனித்தவள், ஓகே உங்களை எங்க வீட்ல இருக்கவங்க யாரும் கூப்பிட்டு இருக்க மாட்டாங்க ஒத்துக்குறேன்.. அது இருக்கட்டும் நீங்க இப்ப நம்ம மேட்டருக்கு வாங்க என்றாள்.

அவனுக்குமே சொல்ல வேண்டும் போல் தோன்ற சொல்ல ஆரம்பித்தான்.

அது நீ ஸ்கூல்ல இருக்கும் போது தானே வயசுக்கு வந்த...

ம்ம்..

அப்போ உன்னை உங்க அம்மாவும் உங்க அத்தையும் வந்து அழைச்சிட்டு போகும் போது, அவர்கள் இருவரையும் தள்ளிக்கொண்டு வேகமாக ஓடிச் சென்று நம்ம பள்ளிக்கூடத்தை பிள்ளையார் கோவிலில் போட்டு இருந்த மாலையை எடுத்துக் கொண்டு ஓடினாய் தெரியுமா என்று கேட்டான்..

ம்ம்... என்று அவன் சொல்லவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும், அவனே அதை சொல்லட்டும் என்று வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அந்த மாலையை நீ உன் கழுத்தில் போட்டுக் கொண்டாய் அதை பார்த்த உன் அண்ணன், கோபமாக அதை பிச்சு அங்க இருந்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றான். அப்பொழுது நீ அதை பார்த்து அழுது கொண்டே சென்றாய் என்று சொன்னான்.

ம்ம்.. சரி அதுக்கும் நான் உங்களை லவ் பண்ணினேன் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டாள் எதுவும் தெரியாது போல்..

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு புரியல இதை நான் நம்பனுமா.. என்று அவளின் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்து கேட்டான்...

இருவருக்குமான இடைவெளி மட்டும் தான் அங்கு குறைந்தது ஆனால் காதல்...

வருவான்...
 
Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
என்ன தான்டா சொல்ல வர்றீங்க

இதைதான் தலைக்கு மேல கை கொண்டு போய் நேராக காதை பிடிக்காம பின்னாடி சென்று பிடிப்பது என்பது
 
kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,563
Reaction score
713
Points
113
அருமையான பதிவு
 
Joined
Aug 29, 2025
Messages
398
Reaction score
398
Points
63

பைத்தியக்கார பயலே என்னதான்டா சொல்ல வற
 
Top Bottom