21. மருமகன் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

21. மருமகன்

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
#ஜோதிரிவ்யூ
#ஜோதிதமிழ்நாவல்ஸ்சிறுகதைப்போட்டி_2024

சிறுகதையின் பெயர் : 21. மருமகன்
எழுத்தாளர் : பாலா ராஜி

பெற்றெடுத்து ஆளாக்கிய மகன் தான் மாமியார், மாமனாரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. மகளை மணந்து கொள்பவனும் மகனாக அவர்களை தாங்கி, அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்கு பெற்று, சந்தோஷமாக நடமாட வைக்கலாம் என்பதை, மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க.

ஒற்றை மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவளது மூன்று மகள்களின் புப்பூனித நீராட்டு விழா முதல் அனைத்தையும் முறையாக செய்து, வயதான காலத்தில் தள்ளாமையில் கஷ்டப்பட்டு, மனைவி கோதையின் சிகிச்சை செலவிற்கு கூட பணம் இன்றி துயரப்படுகிறார் நடேசன்.

மகளது மாமியாரின் கடுமையும், மருமகனின் நடவடிக்கையும் அவரை மகளிடம் சென்று சொல்லவும், உதவி கேட்கவும் முடியாமல் செய்ய, அவரது மகளின் ஏக்கமும், கேள்வியும் கணவன் அபிநந்தனிடம் சென்று சுழன்றடிக்கிறது.

தாயின் குணத்தை அறிந்து அத்தனை நாட்களாக அடங்கி இருந்தவன், மனைவியின் கவலைகளை எப்படி துடைக்கிறான்? மாமியார், மாமனாரின் நிலை என்ன? என்பதை எதார்த்தமான நடையில் தெளிவாக சொல்லி இருக்காங்க.

ஸ்ரீயின் மாமியார் பாத்திரம் சரியான பஜாரி. கிராம புறங்களில் இது போன்ற குணமுடைய நிறைய பேரை காணலாம். அவரது அடியே சீமை சிறுக்கி என்று உச்சரித்த இடமும், பேத்திகளின் பேச்சும் சிரிப்பை வர வைத்து விட்டது. இதை விடவும் தரமற்ற வார்த்தைகளை மாமியார்கள் உச்சரித்து நான் பார்த்து இருப்பதால், இந்த கதையில் வந்ததை தவறாக நினைக்க முடியவில்லை.

மனைவியின் கண்ணீருக்கு கணவனின் பதிலடி வெகுவாக மனதைக் கவருகிறது. மகளை மணந்து கொண்டு வீட்டிற்கு வருகிற ஒவ்வொரு மருமகனும் தனது பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டால், அவர்களும் மகன்களாக மாறிப் போய் விடுகின்றனர்.

சிறுகதை ரொம்ப நன்றாக இருக்கிறது. இதுவரை வாசிக்காதவர்கள் இருந்தால், வாசித்து மகிழுங்கள். ஏற்கனவே வாசித்தவர்கள் தங்களது கருத்துக்களை கூறி எழுத்தாளரை ஊக்குவியுங்கள்.

மேலும் நிறைய எழுத வாழ்த்துகள்💐💐💐
 
Top Bottom