- Joined
- Mar 22, 2025
- Messages
- 844
- Reaction score
- 456
- Points
- 63
பாகம்- 20
மித்ரன், பாரதி எழுதி கொடுத்த துண்டு சீட்டை, அவன் அறையில் டேபிளின் மீது வைத்துவிட்டு தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டே இருந்தான். அப்போ அழகுமீனாட்சி அவனை கூப்பிட்டார், அவன் வெளிய வந்தான். அமிர்தா லித்தியுடன் அங்கு அவன் வீட்டிற்கு வந்திருந்தாள்.
அவளை பார்த்து மித்ரன், " என்ன அமிர்தா திடீர்னு வந்து இருக்கே?!"
" ஏன் மித்ரன் நான் வர கூடாதா.?"
"ச்சே.. ச்சே.. நா அப்டி சொல்லல அமிர்தா.. சரி உட்காரு. என்ன விஷயம் தனியாவா வந்த, மாறன் எங்க" என மித்ரன் கேட்க, அமிர்தா சோஃபாவில் அமர்ந்தாள். அழகுமீனாட்சி கிச்சனில் காஃபி போட்டுட்டு இருந்தார். லித்தி அவங்க கூட போய் கிச்சன் மேடை மேல சம்மணமிட்டு உக்காந்து கன்னத்துல கை வச்சிட்டு பால் கொதிக்கிறத பாதுட்டு இருக்கா.
மீனாட்சி அவள பார்த்து " என்ன லத்தி அப்டி பார்க்குற." என்று கேட்க்க லித்தி சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடி அமிர்தாவிடம் பக்கத்தில் அமர்ந்து மித்ரனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
" ஏண்டி லித்தி இப்டி சிரிக்கிற..?" என்று அமிர்தா கேட்டாள். லித்தி சைகையில் பாரதி பெயரை சைகையில் சொன்னாள்.
" பாரதி என்ன பண்ணா?" என்று அமிர்தா கேட்டாள் அதற்கும் சிரித்தாள்.
" சிரிக்காம சொல்லு லித்தி." திரும்ப அமிர்தா கேட்டாள். லித்தி அதற்கு அன்று பாரதி மித்ரனக்கு காஃபியில் உப்பும் மிளகாய் பொடியும் போட்டு கொடுத்து அவன் அவளை திட்டியது என அன்று நடந்ததை சொல்ல, வாசலில் இடுப்புல கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் எழில்பாரதி. அமிர்தா பாரதியை மனதில் திட்டிக் கொண்டு இருந்தாள். லித்தி பாரதியை பாத்தாள் எங்கே அடித்துவிடுவாலோ என்று மித்ரன் முதுகில் ஏறி கொண்டு,
" வெவ்வவெ.." என்றாள், மித்ரன் சிரித்தான். அமிர்தா பாரதியை முறைத்தாள் வாய்க்குளேயே திட்டினாள். அந்த நேரம் அழகுமீனாட்சி காஃபி தட்டோடு வந்தார். பாரதியை பார்த்ததும்,
" அடடே பாரதி எப்போ வந்த. இந்தா காபி எடுத்துக்கோ." என்று நீட்ட, அவள் யோசித்தாள் மித்ரன் பாரதியை பார்த்து,
" எடுத்துக்கோங்க டீச்சர் மேடம், எங்க வீட்டு காஃபில மிளகாய்பொடி, உப்புலாம் போட மாட்டோம்." என்று சொல்ல பாரதியின் தாழ்த்தி இருந்த இமைகள் நிமிர்ந்து அவனை முறைக்க, கையில் காஃபியை எடுத்துக் கொண்டு அமிர்தா பக்கத்தில் அமர்ந்தாள் பாரதி. லித்தி மித்ரனின் அறைக்கு ஓடி கம்யூட்டரை பார்த்ததும் மித்ரனை கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் கேம் விளையாட வேண்டும் என்று கேட்க. அவளை மடியில் அமர்த்தி கேம் விளையாட சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அமிர்தா லித்தியை அழைத்தாள்.
" லித்தி ஹாஸ்பிடல் போக நேரம் ஆச்சு வா போலாம்." என்றாள் அவள் இன்னும் கொஞ்சம் நேரம் விளையட வேண்டும் என்று சொல்ல.
" போதும் லித்தி வா போலாம் " என்று சொல்லி அமிர்தா அவளை தூக்கிச் செல்ல. மௌஸ் பேட் பக்கத்தில் பாரதி மித்ரனிடம் கொடுத்த பேப்பர் இருந்தது அது லித்தி கையில் ஒட்டி இருந்தது. அதை திருப்பி திருப்பி பார்த்தவாறு, கையில் வைத்துக் கொண்டு வெளியே வர. பிரவீன் காரில் இருந்தான் பாரதியை வரும் போது அவன் தான் அழைத்து வந்திருந்தான் என்பது தெரிந்தது, மித்ரன் முகம் கடுப்பாகியது. பாரதி, மித்ரனை பார்த்தாள், அவள் மனதில் பல கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகலோடு அவள் காரில் ஏறிச் சென்றாள். மித்ரனுக்கு அவளின் பார்வை புரியவில்லை அழகுமீனாட்சி பிள்ளையைப் பார்த்து,
"ஏன்டா மித்ரன்! நீ ஏன் பாரதிய கல்யாணம் பண்ணிக்க கூடாது?" என சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கேட்டுவிட அவன் நாவு பதில் சொல்ல தடுமாறியது.
"என்ன மா நீ, இப்டி சொல்ற அவ என் ஃப்ரண்ட் தங்கச்சி மா."
" ஓ அப்போ உனக்கும் தங்கச்சியா."
"ப்ச் அப்டி இல்ல மா"
" அப்போ வேற என்ன.."
" அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நேரா கல்யாணம் பத்தி எப்டி பேசுறது.."
" அவ மனசுல நீ இல்லாம தான், அவ அக்கா அம்மா கிட்ட பேச சொல்லி பேப்பர்ல எழுதி குடுத்தா?"
" இப்ப நீ என்ன சொல்ல வர.. இரு இரு அவ எழுதி குடுத்தது எப்டி உனக்கு தெரியும்.."
" இப்டி தான்.." என்று அந்த பேப்பரை காட்ட அவன் குடுக்கச் சொல்லி கேட்க மீனாட்சி கொடுக்காமல் விளையாட்டு காட்ட,
" எப்டி மா இத பார்த்திங்க?"
"அத நீ நேத்து கொண்டு வந்து வச்சிட்டு ஃப்ரஷ் ஆகுறேன்னு போனப்பவே தான் உன் ரூம்ல இந்த பேப்பர பாத்தேன்.. நீ பாரதி பின்னாடி சுத்துறதையும், பாரதி வேலை செய்யிற ஸ்கூல் வாட்ச்மேன் என்ன மார்கெட்ல பார்த்து சொன்னாரு. அப்போ நம்பல லித்தி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல மாலைய கொண்டு வந்து உன்னையும் பாரதியையும் காட்டி ஏதோ சொன்னப்ப தான் நினைச்சேன் உங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு. இந்த பேப்பர் கூட லித்தி கைல வச்சி பார்த்துட்டு இருந்த. பாரதி அத பிடுங்கி கீழே போட்டா அத நான் இப்ப எடுத்துட்டு வந்தேன். ஆனா நீ சாரியான அமுக்குனி தான் என் கிட்ட கூட சொல்லல பாத்தியா!"
"அப்டில இல்லமா, நா இன்னும் அவ கிட்ட கூட சொல்லல மா"
" அப்போ எப்போ தான் சொல்லுவ.."
" போலீஸ் வேலைக்கு எக்ஸம் எழுதி இருக்கேன். வேலை கிடைச்சதும் சொல்லிடுறேன். மா என்னோட பர்ஸ்ட் என் லட்சியம் நிறைவேறட்டும்மா." என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். அவன் அம்மா தான் யோசனையோடு அமர்ந்து இருக்கிறார்.
இங்கு ஹாஸ்பிடலில் பிரவீன் குழந்தையை பரிசோதனைச் செய்துவிட்டு அமிர்தாவிடம் பேசினான்.
" குழந்தை ஹெல்தியா இருக்கா. ஆப்ரேஷன் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.."
" இன்னும் வீட்டுல பேசல பேசிட்டு சொல்றேன் ஓகே நா கிளம்புறேன்.." அவள் சொல்லிவிட்டு கிளம்ப எழுந்தாள்.
" ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்." என்றான் பிரவீன். வெளியே கண்ணாடி வழியே பார்த்தான், பாரதி லித்தியுடன் சண்டை போடுவது போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அமிர்தா அவன் கண்கள் பாரதியை பார்ப்பதை கவனித்தாள்.
" பிரவீன் ஏதோ பேசனும்ன்னு சொன்னிங்க." அவள் கொஞ்சம் சத்தமாகவே கேட்டாள்.
அவன் எந்த பதட்டமும் இல்லாமல்," யா.. யா.. சிட்.. எனக்கு உங்க சிஸ்டர ரொம்ப பிடிச்சு இருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்று பட்டென்று கேட்டுவிட்டான்.
அமிர்தா யோசித்தாள் "என்ன மேடம் யோசிக்கிறீங்க?"
"ஆமா பிரவீன், யோசிக்க வேண்டிய விஷயத்தை தானே கேட்டு இருக்கீங்க. என் கூட பிறந்த தங்கச்சியோட வாழ்கை, வீட்டுல பேசனும் இது எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்ய முடியாது பிரவீன். முதல்ல குழந்தை ட்ரீட்மென்ட் முடியட்டும் அப்றம் இத பத்தி பேசலாம்..ன" என்று அமிர்தா சொல்லிவிட்டு கிளம்பினாள். பிரவீன் குறுரமாக சிரித்தான்.
பிரவீன் பாரதியை காதலிக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள் அமிர்தா. வீட்டிற்கு வந்ததும் பிரவீன் சொன்னதை பற்றி மணிமாறனிடம் சொல்ல மணிமாறன்,
" பிரவீனுக்கு என்ன கொற! டாக்டர் வெல் செடில்டு ஓகே சொல்லி இருக்கலாம்ல அமிர்தா"
" சொல்லலாம் தான் ஆனா பாரதி மனசுல என்ன இருக்குன்னு தெரியல. அவ சொல்லட்டும்." என்று அமிர்தா சொல்ல பாரதியை அழைத்தாள். பாரதி அவள் அறையில் அவள் வரைந்து கிழித்து எறிந்த மித்ரனின் ஓவியத்தின் பேப்பர் துண்டுகளை இணைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" பாரதி... பாரதி.." என்று அமிர்தா அழைக்க பேப்பர் துண்டுகளை பெட்சீட்டின் அடியில் மறைத்துவிட்டு. கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அமிர்தா அவளிடம் பிரவீன் கேட்டதைப் பற்றி கேட்க. ஆனால் பாரதி என்னும் மௌனமொழியாள் மௌனமாக இருந்தாள். அமிர்தா அவள் அருகில் சென்று மோவாய் பிடித்து நிமிர்த்தி.
"இங்க பாரு பாரதி உன் விருப்பம் இல்லாம நானோ மத்தவங்களோ முடிவு எடுக்க மட்டோம்." என்றாள் அவள் யோசிக்கிறாள் என்பது அமிர்தாவிற்க்கு புரிந்தது.
" சரி பாரதி நீ யோசிச்சு சொல்லு ஒன்னும் அவசரம் இல்ல சரியா" என்று அமிர்தா சொல்ல, அவள் சிறு புன்னகையுடன் 'சரி' என்று தலையை ஆட்டினாள்.
ஒரு நிலையான முடிவை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறாள். பாரதிக்கு மித்ரன் தன் மனதிற்க்கு நெருக்கமாகிவிட்டான். காதல் என்பதை தான் வாய்மொழியவில்லை அவள் மனதில் அவனும், அவன் மனதில் அவளும் இருப்பது மட்டும் உண்மை.
இந்திரா வீட்டில் மாப்பிள்ளை போட்டோ காண்பித்து, அவளிடம் யாரை பிடித்திருக்கிறது என்று அவள் அப்பா அம்மா கேட்டுக் கொண்டிருந்தனர். அவள் நினைவு முழுக்க முழுக்க கௌதம் மீது மட்டுமே இருந்தது..
இங்கு கௌதம் சாப்பிட சாப்டு பறிமாறினார் தேவகியம்மா. அவன் சாப்பிடாமல் எங்கேயோ வெறித்தபடி இருக்க தேவகியம்மா அவனை.
" கௌதம் தம்பி... கௌதம் தம்பி..." என்று அழைக்க அவன்.
" என்ன என்னாச்சு..?"
" ஒன்னும் ஆகல சாப்பிடாமா என்ன வேடிக்கை பாக்குறீங்க?"
" எனக்கு சாப்பாடு வேண்டாம் தேவகியம்மா நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க.."
" ஏன் தம்பி என்னாச்சு.. பால் கொண்டு வரவா.."
" இல்ல தேவகியம்மா எனக்கு எதுவும் வேண்டாம்." என்று சொல்லி அவன் ரூமிற்க்கு சென்றான். இந்திரா தினம் தேவகியம்மாவிற்க்கு போன் செய்து கௌதம் பற்றி விசாரிப்பது வழக்கம். இன்றும் அதே போல் போன் செய்தாள். தேவகி அவன் சாப்பிடவில்லை என்று சொல்ல காரணமும் தெரியவில்லை என்றார் தேவகி. பின் கட் செய்துவிட்டு தேவகி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சில நேரத்தில் கௌதம் வீட்டில் யாரோ காலிங் பெல் அடிக்க. கதவை திறந்த அடுத்த நொடி முகமூடி அணிந்தவன் யாரோ ஒருவன் கத்தியால் குத்திவிட கௌதம் தடுமாறினான். கௌதம் அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தான். அவன் கௌதமை தள்ளிவிட்டு ஓடினான். கௌதம் மயங்கி விழுந்தான். அந்த நேரம் தான் இந்திரா அவனை பார்க்க கையில் சாப்பாடு வாங்கி கொண்டு வர, யாரோ அங்கிருந்து கத்தியோட ஓட, இந்திரா அவனை துறத்தினாள். ஆனால் அவன் தப்பித்து விட, உள்ளே வந்தவள் கௌதம் நிலையை பார்த்து கதறித் துடித்தாள். அழுதுகொண்டே அவன் கன்னங்களை தட்டினாள். அவன் அறை மயக்கத்தில் இருக்க அவள் சற்றும் தாமதிக்காமல் அவனை தூக்கி, கை தாங்கலாக கூட்டி வந்து அவள் ஸ்கூட்டியில் அவனை அமர்த்தி அவள் ஷால்லால் அவளுடன் சேர்த்து அவனை இறுக்க கட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவனை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு மித்ரன் மணிமாறனுக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னாள்.
மௌனம் பேசும் தொடர்ந்து...