- Joined
- May 4, 2024
- Messages
- 5,390
- Reaction score
- 3,232
- Points
- 113

அறிமுக எழுத்தாளரும், புரூப்ரீடர் & டிஸ்டிரிபியூசன் நடத்துபவரும் ஆகிய பிரேமா காமேஸ்வரன் அவர்களுடன் ஒரு நேர்காணல் :
உங்களைப் பற்றி சொல்ல முடியுமா :
நான் பிரேமா காமேஸ்வரன். இல்லத்தரசி. எனது ஊர் மதுரை. பிறந்து வளர்ந்து இப்போ திருமணம் முடித்து வாழ்வதும் மதுரை தான். படிப்பு : MCA.
வாசிப்பு ரொம்ப பிடிக்கும். என்னுடைய எல்லா நேரங்களிலும் என்னுடன் இருப்பது வாசிப்பு மட்டுமே.
அந்த வாசிப்பு எனக்கு கொடுத்த ஆக சிறந்த விசயம் எழுத்து. கவிதைகள் நிறைய எழுதி இருக்கிறேன். "அக்னி சிறகே" எனது முதல் கவிதை. பரிசு வாங்கி கொடுத்து, ஊக்கம் அளித்தது.
அடுத்து "காதல் சாதி" 2023 ல் எழுதியது.
எனது முதல் நாவல் அக்கினியின் சாரல். சாரல் தளத்தில் எழுதியது. கற்பனை சாரல்கள் போட்டியில் பங்கு கொண்டு அரும்புகள் என்ற தலைப்பில் புதுமுக எழுத்தாளர் பரிசு பெற்று தந்தது.
இரண்டு கதைகள் புத்தகமா வந்து இருக்கிறது. அதில் ஒரு கதை சிறந்த புதுமுக எழுத்தாளர் பட்டத்தைக் கொடுத்தது. இப்போது இரண்டு கதைகள் எழுதிக் கொண்டு இருக்கேன். பத்து சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். இரண்டு சிறுகதைக்கு பரிசுகள் கிடைத்து இருக்கிறது.
இப்பொழுது அந்த வாசிப்பு எனக்கென அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அளித்துள்ளது. “ஸ்ருதிஷிவா எடிட்ஸ்” என்ற பெயரில் கதைகளுக்கு, ‘Proof reading, Editing, DTP’ ஆகியவை செய்து கொடுக்கிறேன்.
மேலும் ‘SS distribution’ என்ற பெயரில் புத்தக விற்பனையையும் துவங்கி உள்ளேன். புத்தகம் வாங்க என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 918248661309
Proof reading பற்றிய உங்களது கருத்து:
தமிழில் proof reading என்பது சற்று சவாலான விசயம். பிழைகள் பல வகைகள் உண்டு. பொதுவாக எழுத்துப்பிழை, சொற்றொடர் பிழை, சொற்பொருள் பிழை, குறிகள் இடுவதில் ஏற்படும் பிழைகள் இருக்கின்றன. அதிலும் வழக்கு, வட்டார மொழிகள் பயன்படுத்தும் பொழுது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழில் இதற்கென்று 100 சதவீதம் சரி பார்த்துக் கொடுக்குமான மென்பொருளும் இல்லை.
Proof reading பார்க்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றனவா :
அடிப்படை தமிழ் இலக்கண அறிவு இருந்தால் போதும் என்பது எனது கருத்து.
எழுத வந்த பிறகு proof reading பார்ப்பது சிரமமாக உள்ளதா :
கரும்பு தின்ன கூலியா? என்பது போல தான் எனக்கு proof reading என்பது. வாசிப்பது தான் எனது நெடுங்கால தோழமை. எத்தனை எழுதினாலும் வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், வாசிப்பதிலும் அதில் உள்ள பிழைகளை சரி செய்வதும் சிரமமாகத் தெரிவது இல்லை.
ஒருவர் நிறைய கதை வாசித்த அனுபவத்தில் எழுத போவதாகவும், proof reading பண்ண போவதாகவும், கூறுவது பற்றிய தங்கள் கருத்து:
அனுபவத்தை விட சிறந்த குரு யாரும் இருக்க முடியாது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தானே.
கதைகள் எழுத சொல்வளம், கருத்து வளம் மற்றும் கற்பனை வளத்தோடு தேவையான அடிப்படைகள் சிலவற்றை கற்றுக் கொண்டால் போதும். எழுதி விடலாம் என்பது என் கருத்து.
அதே போல தமிழ் இலக்கணத்தின் அடிப்படை தெரிந்து, சிறந்த வாசிப்பு அனுபவமும் இருந்தால் தாராளமாக proof reading செய்யலாம் எல்லோரும்.
சிலர் ப்ரூப் ரீடிங் பண்ணுகிறேன் என்று சொல்லி ஒற்றுப் பிழைகளை சரி செய்யாமல் ஆச்சரிய குறிகளை கூட அதன் இடத்தில் போடாமல் எழுத்தாளருக்கு மீண்டும் வேலை வைக்கிறார் அவரிடம் உள்ள தவறாக நீங்கள் நினைப்பது:
கற்றுக் கொண்டு கொஞ்சம் கவனமாக, கொஞ்சம் நிதானமாக பார்த்து செய்யுங்கள் என்று தான் சொல்ல வேண்டும். வேறு என்ன
Proof reading பார்ப்பதால் ஏற்படும் நன்மை :
மற்றவர்களுக்கு பிழைத்திருத்தம் செய்து கொடுப்பதால், நான் பிழைகள் இல்லாமல் எழுத முடிகிறது.
புத்தக விற்பனை குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது :
எனது சொந்த அனுபவத்தில் ஆரம்பித்த விஷயம் இது. நான் எழுதிய புத்தகத்தை, புத்தகக் கண்காட்சியின் போது எனது அக்காவின் மகள் குறிப்பிட்ட விற்பனையாளரிடம் வாங்கி இருந்தார். அதில் புத்தகத்தின் விலையை விட சற்று அதிகமாக கொடுத்து வாங்கியதாக அவள் சொல்லவும், தோன்றிய எண்ணம் தான் புத்தக விற்பனை.
ஆன்லைன் வாசகத் தோழமைகளுக்காக துவங்கியது. அதை எங்கள் ஊரில் விரிவு படுத்த முதற்கட்ட முயற்சிகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.
சமீபத்திய புத்தக விற்பனை குறித்து ...
களத்தில் இறங்கி விசாரித்த வரையில், அமேசான் கிண்டில், பிரதிலிபி, மற்றும் youtube ஆடியோ நாவல்கள் வரவால், அச்சு பிரதிகளின் விற்பனை சற்று குறைந்து உள்ளது என்று தான் புத்தகக் கடைகளிலும் நூலகங்களிலும் செல்கிறார்கள். ஆனால் புத்தக கண்காட்சி நேரங்களில் விற்பனை நன்றாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
எழுத்தாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் புரூப்ரீடிங்கில் எதாவது இருக்கா?
அப்படி எல்லாம் எதுவும் பெரிதாக இல்லை. முடிந்த அளவு, உரைநடை பகுதியில் அதாவது உணர்வுகளை செயல்களை விவரிக்கும் போது தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தினா சிறப்பாக இருக்கும்.
உரையாடல் பகுதியில் வழக்கு மொழி, வட்டார மொழி வரலாம். ஆனால் உரைநடை பகுதியில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
எழுத்தில் உள்ள தவறாக நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது?
தவறுகள்.. நானும் கற்று கொண்டு தான் இருக்கிறேன். ன,ண வேறுபாடுகள் ல,ழ,ள வேறுபாடுகள் புரிந்து எழுத வேண்டும்.
ஒற்றுப்பிழை தவிர்ப்பது, ன,ண வித்தியாசம் தெரியாமல் எழுதுவது,
? ? ? !!! " ....." ....!! ??!! இப்படி பலர் எழுதுகிறார்கள் இதில் உள்ள பிழைகள் பற்றி சொல்ல முடியுமா :
அதற்கு தான் சொன்னேன்.. தமிழின் அடிப்படை இலக்கண அறிவு தேவை என்று. ???, !!! , ...!!, ...??!! முதலியவை பயன்படுத்த கூடாது. ?! மட்டுமே பயன்படுத்தலாம்.
சிலர் .... தேவையில்லாம பேச்சு வழக்கில் பயன்படுத்துவதால் வாசிக்க தொய்வா இருக்கு. அது எதற்காக போடணும்? போடக் கூடாத இடங்கள் பற்றி சொல்லுங்க :
விடுபட்ட சொல்/சொற்றொடர்
நிறுத்தம்
சிந்தனைத் தொடர்ச்சி
ஒலிப்புத் தொடர்ச்சி
உணர்ச்சி நீட்டம்
இந்த இடங்களில் ... முப்புள்ளி இடலாம். அது தவிர்த்து போட கூடாது.
மிக்க நன்றி
தங்களது அழகான பதில்களுக்கும், சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும்..
அன்புடன்
ஜோதி
Last edited: