- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
வியப்பு, மகிழ்ச்சி, அச்சம், வெறுப்பு, இரக்கம் போன்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தவும் விளித்துப் பேசவும் உணர்ச்சிக்குறி பயன்படுகிறது.
உணர்ச்சிக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
1,வியப்பு, மகிழ்ச்சி, அதிர்ச்சி, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
எவ்வளவு பெரிய மலை! (வியப்பு)
நாம் எதிர்பார்த்தபடியே திருமணமும் நன்றாக நடந்து முடிந்தது! (மகிழ்ச்சி)
சித்தன் விமான விபத்தில் இறந்துவிட்டான்! (அதிர்ச்சி)
பல்லாயிரக் கணக்கான மக்களை ஆழிப்பேரலை விழுங்கிவிட்டது! (இரக்கம்)
பொருளாதாரத் தேக்கம் காரணமாக முருகனின் வேலை போய்விடுமோ!' (அச்சம்)
ஊழல் பேர்வழிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வேறா! (வெறுப்பு)
2, உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
ஓகோ! இன்றைய திருமணத்திற்கு நேற்றே வந்துவிட்டீர்களா?
ஆ!
அட!
சே!
சீ!
ஐயோ!
அப்படியா!
ஆகா!
என்னே!
அந்தோ!
ஐயகோ!
3) உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
ஐயோ ஐயோ!
4) கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
தீ! தீ!
பாம்பு! பாம்பு!
5) விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
பெரியோர்களே! தாய்மார்களே!
அன்பர்களே!
என் இனிய எந்திரா!
6) வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
மணமக்கள் வாழ்க!
புரட்சி ஓங்குக!
எங்கேயாவது போய்த்தொலை!
7) வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
வருக வருக!
8) முழக்கமிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது தொடர்கள் அடுத்தடுத்து வரும்போது ஒவ்வொன்றின் இறுதியிலும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
கோழைகள்! துரோகிகள்!
உண்மை! முற்றிலும் உண்மை!

Last edited: