18) ஏதேன் தோட்டத்து முல்லை | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

18) ஏதேன் தோட்டத்து முல்லை

New updates

LATEST

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
838
Reaction score
454
Points
63
அத்தியாயம்-18



ரௌத்திரன் விமான நிலையத்தின் வாசலில், காரில் அமர்ந்து ஒருவரின் வருகைக்காக காத்திருந்தான். அவன் முகத்தில் ஏகப்பட்ட கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘அவனை காதலிக்காதவ எதுக்கு அவனோட ஷாப்பிங் போறா? அவ்வளவு நெருக்கமா இருந்தா! ஒரு வேலை என் கிட்ட பொய் சொல்றாளா? காதலிக்கலன்னு சொன்னவ எதுக்கு அழுதுட்டு போனா? வினோதமா இருக்கா!’ ரௌத்திரன் மூளை அவனை கேட்டுக் கொண்டிருந்தது.

சில நிமிடம் கடந்தது ஏர்போர்ட்டில், நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க, திருமனமாகத ஆண். நீல நிற கோட், அதே நிறத்தில் பேண்ட், பிளாக் ஷூ, கண்ணில் கண்ணாடி, ஒன்றும் இரண்டுமாக ஆங்காங்கே நரைமுடி‌, கட்டுக்கோப்பான தேகம் என சினிமா ஹீரோ போல நடந்து வந்தார்.

ரௌத்திரன் அவரைப் பார்த்ததும் ஓடிச் சென்று காலைத் தொட்டு வணங்கினான். எதற்கும் பணியாத, யாருக்கும் தலை வணங்காத, ரௌத்திரன் என்ற கம்பீரமான மனிதன், ஒருவர் காலில் விழுவதை அந்த ஏர்போர்ட்டில் சிலர் வியந்துப் பார்த்தனர். அகஸ்டின் கண்கள் கூட இமைக்க மறந்து போனது.

“நல்லா இருடா ரௌத்திரன்… ஆனா இப்படி பப்ளிக்ல கால்ல விழாதடா.. அப்றோ நான் பேச்சுலர்ங்குறதே மறந்துடும்.” என்று கிண்டலாகச் சொல்லிச் சிரிக்க,

“சரி.. சரி.. வாங்க மாமா” ரௌத்திரன் சொல்ல, ராகவேந்திரன் அவன் முகத்தை உற்றுநோக்கி,

“என்ன உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு” என்றார்

“அப்படிலாம் இல்லையே… ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறீங்க.. அதான் அப்படி தெரியுதோ என்னமோ?” ரௌத்திரன் சமாளித்தான்.

“உன் வாய் தான் இல்லன்னு சொல்லுது.. ஆனா உன் முகம் அப்படி!” என்று அவர் ரௌத்திரன் மனநிலையை பற்றிய கவலையில் கேட்க,

“மாமா..! ப்ளீஸ் இப்போ தான் வந்து இருக்கீங்க… முதல்ல கம்பெனிக்கு போலாம் மத்ததை வீட்டில் போய் பேசலாம்.” என்று கூறிவிட்டு, தன் மாமாவுக்காக கார் கதவைத் திறந்தான். காரில் அமர்ந்த ராகவேந்திரன் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் அகஸ்டினை பார்த்து,

“என்ன அகஸ்டின்… உன் பாஸ் ஏதும் கோவமா இருக்காரா..!” என்க, அகஸ்டின் ஆச்சர்யமாகப் பார்த்தபடி,

“சர்.. என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும்.” என்றான்.

“எனக்கு இங்க நடக்குற எல்லாமே தெரியும். ஆனா கொஞ்ச நாளா ரௌத்திரன் என் கிட்ட ஏதோ மறைக்கிற மாதிரி தோணுச்சி அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவர் ரௌத்திரனை பார்க்க அவனோ வேறு சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தான்.

“ஓ.. ஓகே சர் வெல்கம் டூ மெல்பர்ன்”
என மூவரும் அசூர் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தனர். ரௌத்திரன் புதிய சேர்மேன் அதிமுகத்திற்கான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தான். ராகவேந்திரன் Chairman of the Board of Director என்று எழுதப்பட்ட வாக்கியங்களோடு மேடை அலங்காரத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் பூ கொடுத்து ராகவேந்திரனை வரவேற்றனர். ரௌத்திரன் தன் மாமா ராகவேந்திரனை அறிமுகம் செய்தான்.

“இவரு என்னோட தாய்மாம.. என் அம்மாவோட கூட பிறந்த தம்பி இந்த அசூர் நிறுவனம் உருவாகுறதுக்கு முதல் விதை போட்டவரு. கொஞ்ச நாள் இத்தாலியில் இருந்தார். இன்னைக்கு இந்த நிறுவனத்தையே கட்டி ஆள வந்திருக்காரு. நம்ம அசூர் நிறுவனத்தோட சேர்மேன் திரு. ராகவேந்திரன்.” என்று ரௌத்திரன் கூறினான். மேடையின் அருகில் சிவகாமியின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ராகவேந்திரன் அதைப் பார்த்ததும் அந்த மலர்களை அகற்றிவிட்டு சிவகாமியின் படத்தை அவரது ஆஃபிஸ் அறையில் மாட்டி வைத்து, “என் அக்கா இன்னும் இறக்கல..! அவங்க எங்கயோ உயிரோட கண்டிப்பா இருப்பாங்க. கண்டிப்பா நான் அவங்கள கண்டுபிடிப்பேன்.” என்றார். ரௌத்திரன் புரியாமல் விழித்தான்.

“மாமா..! ஏன் இப்படி சொல்றீங்க? என் சித்தப்பா அம்மா இறந்துட்டதா தானே சொன்னாங்க.” ரௌத்திரன் கேட்க,

“இல்லடா கண்ணா.. அவங்க இறந்ததா சொன்னாங்க. அவங்க உடல நான் கண்ணால பார்க்கல. அவங்க இறந்ததா என்னால நம்ப முடியல. உண்மை என்னனு தெரியிற வரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல” என்றவர் கண்கள் கலங்கியது. ரௌத்திரன் அவரை அணைத்து ஆறுதல் அளித்து,

“சரி.. மாமா வாங்க இன்னொரு முக்கியமான இடத்துக்கு போலாம்” என்று கூறி ரௌத்திரன் ராகவேந்திரனை அழைத்துச் சென்றான்.

இங்கு வெண்பா ஆஃபிஸில் அமர்ந்து ரௌத்திரன் கூறிய வார்த்தைகளை நினைத்து வேதனையில் இருந்தாள். ‘நான் வந்ததன் நோக்கம் இது இல்லையே! என்னை சுத்தி ஏதோ நடக்குற மாதிரி இருக்கே! வைபவ் ஏன் என்னை காதலிக்கிறதா சொல்லணும். அத நம்பி அந்த இடியட் மான்ஸ்டர் தேவையில்லாம பேசி கடுப்பேத்துறான்.’

“என்ன வெண்பா.. நான் சொன்னது தானே நடந்துச்சி!? அந்த ரௌத்திரன் எங்க போனாலும் நம்மள ஃபாலலோ பண்ணிட்டு தான் வருவான். அவன் சாதாரணமான ஆள் இல்ல” என்றான் வைபவ்.

“நீங்க ஏன் சார் அவன் கிட்ட என்னை லவ் பண்றதா சொன்னீங்க? அவன் அதையே சொல்லி இரிட்டேட் பண்றான். மூட் அப்செட் நான் கிளம்புறேன் சாரி சர்..” என்றவள் ஹேண்ட் பேக் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“இரு வெண்பா நானே கூட்டிட்டு போறேன்.” வைபவ் கேட்க, ஒரு நொடி யோசித்தாள், ‘இவன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததுக்கே லவ் பண்றதா சந்தேகப்பட்டு பேசுறான் அந்த மான்ஸ்டர்! இதுல இவன் கூட காரில் போய் இறங்கினா இன்னும் பேசுவான்' என வெண்பா யோசித்துவிட்டு.

“இல்ல வேண்டாம்… நான் தனியாவே போறேன்” என்றவள் வேகமாக வெளியே வந்தாள். லீமா எதிரில் வந்தாள், வெண்பா ஒரு நொடி அவளை கவனித்தவள் அவளைக் கடந்து சென்றாள். லீமா அவள் போவதைப் பார்த்து அப்படியே நின்றாள்.

“ஏய்.. லீமா எப்போ வந்த..!?” என வைபவ் கேட்க, வேகமாக நடந்து சென்ற வெண்பாவைப் பார்த்தபடி லீமா பதில் கூறினாள்.

“இப்போதான்.. ஆமா அவ எங்க போறா..?!” என்றாள்.

“மூட் அப்செட்னு கிளம்பிட்டா‍.. சரி நீ ஓகே தானே”

“ஐயம் ஆல் ரைட்..! இன்வஸ்டர்ஸ் பிரச்சனை என்னாச்சு?”

“அத பத்தி தான் பேச போனேன் பட் போன இடத்துல ரௌத்திரனும் அங்க வந்து எதையும் நடக்க விடாம பண்ணிட்டான். வெண்பாவையும் டீஸ் பண்ணிட்டான் அதான் அவ கிளம்பிட்டா.”

“அவன் இன்னும் என்ன பண்ணலாம்னு இருக்கான்..!” என கோபமாக பேசினாள்.

“பொறுமையா இருப்போம் லீமா.. அவன் என்ன தான் பண்ணவான்னு பார்க்கலாம்” என்றான் வைபவ்.

“ஆனா கம்பெனி அவன் கைக்கு போயிட்டா.. உன்னோட நிலைமை என்ன ஆகுறது? உனக்குன்னு இருக்குறது இந்த கம்பெனி மட்டும் தான்‌.” லீமா தன் அண்ணனுக்காக வருத்தப்பட்டாள்.

“நான் அவ்வளவு ஈசியா விட்டுட மாட்டேன் லீமா கவலைப்படாத. சரி வா வேலைய பார்க்கலாம்” என்று வைபவ் தங்கையுடன் வேலையைத் தொடர்ந்தான்.

ரௌத்திரன் ராகவேந்திரனை அழைத்து வந்த இடம், ராஜசேகரனை அடைத்து வைத்திருக்கும் இடம். ரௌத்திரனை பார்த்த ராஜசேகரன் கோபத்தில் கத்தினார்.

“டேய்.. என்னை அடைச்சு வச்சு விளையாடுறியா.. இங்க பாரு நான் நினைச்சா உன்னை கொனானுடுவேன்.” என்று கர்ஜித்தார் ராஜசேகரன்.

“நான் இருக்குற வரைக்கும் ரௌத்தின தொட முடியாது.” என்றபடி ராஜசேகரன் எதிரில் வந்து நின்ற ராகவேந்திரனைப் பார்த்து அதிர்ந்து,

“ராகவேந்திரன்…!”

“என்ன ராஜசேகரன்.. அதிர்ச்சியா இருக்கா!?”

“நீ எப்படி இங்க..?”

“நான் தான் வர வச்சேன்.” ரௌத்திரன் சொல்ல,

“ரொம்ப பெரிய தப்பு பண்ற ரௌத்திரன்! இந்த அசூர் நிறுவனம் எனக்கு மட்டும் தான் சொந்தம். அத யாராவது கொண்டு போக நினைச்சா அழிச்சிடுவேன்” என ராஜசேகரன் கத்திட,

“எப்படி என் அக்காவ பண்ணது மாதிரி.” என்க, ராஜசேகரன் திகைத்துப் போனார்.

‍”ஏதோ அக்கா புருஷன் பிழைச்சு போகட்டும்னு.. உனக்கு தொழில் வச்சு கொடுத்தா.. அது என் அக்கா பேர்ல இருக்குன்னு நீயும் அந்த ரகுவும் சேர்ந்து போட்ட திட்டம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?” என ராகவேந்திரன் சொல்ல,

“ராகவன் நான் சிவகாமிய கொல்லல புரிஞ்சிக்க!” என ராஜசேகரன் கெஞ்சினார்.

“உண்மை சீக்கிரம் வெளிய வரும் ராஜசேகரன். அப்போ தெரியும் யாரு என்ன பண்ணாங்க.. யாரை எப்படி ஏமாத்தினாங்கன்னு சீக்கிரமே தெரிய வரும்” ராகவேந்திரன் சொல்ல, ராஜசேகரன் மறு வார்த்தை பேச முடியாது வாயடைத்துப் போய் இருந்தார்.

“அதுவரைக்கும் நீங்க இங்கேயே பத்திரமா இருங்க டாடி.. பை..பை.” என்று ரௌத்திரன் கையை ஆட்டி கூறிவிட்டு, ராகவேந்திரனை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தான்.

அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்ததும் காரை நிறுத்திவிட்டு லிஃப்டிற்க்கு வந்தான் அங்கு கண்கள் கலங்க வெண்பா நின்று இருந்தாள். ரௌத்திரன் ராகவேந்திரனுடன் வந்து வெண்பா அருகில் நிற்க லிஃப்ட் வந்தது மூவரும் லிஃப்டில் போக. வெண்பாவை அலட்சியமாகப் பார்த்தான் ரௌத்திரன். வெண்பா அவனைப் பார்த்தும் ஏதும் பேசாமல் கண்கள் கலங்கியபடியே இருக்க, ராகவேந்திரன் கண்கள் அவள் மீது நிலைத்திருந்தது.

லிஃப்ட் மேலே வந்து நின்றதும் வெண்பா வேகமாக நடந்து அவளது ஃப்ளாட்டில் நுழைந்துக் கொண்டாள்‌. ரௌத்திரன் கொஞ்சமும் அவளைப் பார்த்து மனமிறங்கவில்லை. “ரௌத்திரன் யார் அந்த பொண்ணு யாரு” ராகவேந்திரன் கேட்க, அவள் மீது இருந்த சந்தேகம் கேள்விகள் இனம் புரியாத கோபம்,

‍”தெரியாது மாமா” என்று பதிலளிக்க வைத்தது.

“பாவம் அழுதுட்டே போறா..!”

‘அழுகட்டும் அவளுக்கு இது தேவை தான்' என ரௌத்திரன் முணுமுணுத்தான்.

“என்ன ரௌத்திரன்”

“ஒண்ணுமில்ல மாமா வாங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க” என அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று சோஃபாவில் பொத்தென அமர்ந்து சாம்ந்தபடி கண்கள் மூடினான். ‘நான் யாரையும் காதலிக்கல! உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது!’ என்ற வெண்பாவின் வார்த்தைகள் அவன் மண்டைக்குள் ஓடியது.

ராகவேந்திரன் உடையை மாற்றிக் கொண்டு வந்தவர் அவன் நிலையைப் பார்த்தார். “ரௌத்திரன் என்னாச்சு?”

“நத்திங் மாமா! இருங்க உங்களுக்கு சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்றேன்” என்க,

“இல்ல ரௌத்திரன் நானே சமைக்கிறேன் நீ டயர்டா இருக்க போய் ரெஸ்ட் எடு” என்றார்.

“எதுக்கு நீங்க சமைச்சிட்டு.. கஷட்டப்பட்டுட்டு.. அகஸ்டின் கிட்ட சொன்னா வாங்கிட்டு வந்துட போறான் சமைக்க வேண்டாம்.”

“ஆனா ஹெல்த்தியா இருக்காது.. நானே செய்யிறேன்.”

“என்னமோ பண்ணுங்க” என்று எழுந்து அவன் படுக்கையறையில் நுழைய, படபடவென ஏதோ விழும் சத்தம் அவன் காதுகளைத் துளைத்தது. ரௌத்திரன் பதறி சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“மாமா பார்த்து சமையல் பண்ணுங்க” என்க,

“நான் இப்ப தானே உள்ள வந்தேன்.. எதையும் தொட கூட இல்ல ரௌத்திரன்”

“அப்போ என்ன சத்தம் அது!”

“பக்கத்துவீட்டு பொண்ணு அழுதுட்டு போச்சி… ஏதாச்சும் பண்ணிக்கிச்சோ பாவம் இரு பார்த்துட்டு வரேன்” என ராகவேந்திரன் சொல்ல,

“என்னமோ பண்ணுங்க நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் சமைச்சு முடிச்சிட்டு எழுப்புங்க.?” ரௌத்திரன் அலட்சியம் செய்தான்.

“டேய் என் கூட வாடா!”

“மாமா.. அவ குரங்குக்கே டஃப் கொடுப்பா. நீங்க உங்க வேலைய பாருங்க அவ அவ்ளோ சீக்கிரம் செத்துட மாட்டா” என ரௌத்திரன் யோசிக்காமல் பேசிவிட.

“ரௌத்திரன் என்ன பேச்சு இது? என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணு அதுக்கு முதல்ல மதிப்பு கொடு.” என்று ராகவேந்திரன் கடிந்துக் கொண்டார்.

“பொண்ணுங்கனாலே கடுப்பு தான் வருது” என மீண்டும் அவன் வெறுப்பைக் காட்ட, ராகவேந்திரன் முறைத்தார்.

“சரி.. சரி.. முறைக்காதீங்க வரேன் போங்க” என்றான்.

இருவரும் சேர்ந்து வெண்பா வீட்டின் காலிங் பெல் அழுத்த, அவள் வருவதாக இல்லை. ரௌத்திரன் கதவைத் திறந்து உள்ளே போக சமையல் அறையில் ஒரு போர்களமே நடத்தி இருந்தாள் வெண்பா. கையில் கரப்பான் பூச்சியை கையில் பிடித்தபடி நின்று இருந்தவளைப் பார்த்த இருவரும், என்னமோ ஏதோ என்று பயந்தபடி வந்த இருவரும் தலையில் அடித்துக் கொள்ள,

“ஹலோ எப்படி நீங்க உள்ள வந்தீங்க” என்று கேட்டாள்.

“அது இருக்கட்டும். இத பிடிக்க தான் இவ்வளவு நேரம் பாத்திரத்தை போட்டு உடைச்சியா” என ரௌத்திரன் கோபமாக கேட்டான்.

“ஆமா கரப்பான் பூச்சி சாப்பாடுல விழுந்தா.. ரொம்ப டேஞ்சர்ல அதான்” என்று வெண்பா சொல்ல, ரௌத்திரன் ராகவேந்திரனை பார்த்துவிட்டு,

“நான் ரெஸ்ட் எடுத்து இருப்பேன். இவ சத்தம் போட்டு என் பீஸ் ஆப் மைன்ட கெடுத்துட்டா.” என்றான்,

“இல்லனா மட்டும் இவரு ரொம்ப யோக்கியம் பாரு திமிருபிடிச்ச மான்ஸ்டர்”

“ஏய் யாருடி மான்ஸ்டர்…! சும்மா சும்மா மான்ஸ்டர்னு. நான் என்ன உன்ன கடிச்சு வச்சேனா. இல்ல அடைச்சு வச்சு துன்புறுத்துனேனா?” என்று ரௌத்திரன் எகிரிக் கொண்டு போக,

“நீ இதெல்லாம் செய்யக் கூடியவன் தானே! வெளிய போ முதல்ல.” வெண்பா கத்தினாள்.

“எனக்கு ஒண்ணும் இங்க இருக்க ஆசை இல்ல ச்சீ போடி” என்றவன் வெளியே செல்ல, ராகவேந்திரன் புரியாது விழித்தார். ‘ரௌத்திரன் இந்த பொண்ண தெரியாதுன்னு சொன்னான். இவங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனை! சின்ன விஷயத்துக்கு இப்படியா சண்டை பிடிச்சிக்கிறது? ஏதோ சரியில்லை!’ என அவராக நினைத்தவர் வெண்பாவைப் பார்த்தார். அவள் இன்னும் அந்த கரப்பான் பூச்சியை கையில் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்மா பாப்பா அந்த கரப்பான் பூச்சி செத்து ரொம்ப நேரம் ஆச்சு தூக்கி போட்டுட்டு வேலைய பாரு”

“ஆங்.. எனக்கு தெரியும் இனி இப்படி உள்ள வராதீங்க”

“சாரி மா தெரியாம வந்துட்டேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்த ராகவேந்திரன், ‘சரியான ராங்கி காரியா இருக்காளே! இதே ராங்கித்தனம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே' என்று நினைத்துக் கொண்டே சமையல் வேலையைத் தொடர்ந்தார்.

நாளும் பொழுதும் வேகமாக நகர்ந்தது. ரௌத்திரன் வைபவிற்கு கொடுத்த ஒரு மாத கெடு முடியும் நாள் வந்தது. வைபவ் தன்னால் முடிந்தவரை போராடினான். ஆனால் கம்பெனியை மீட்க முடியாத நிலை வந்து விட்டது‌. ரௌத்திரன் வெண்பாவுக்கு தினம் ரோஜாவைக் கொடுக்க மறக்கவில்லை. அவன் கொடுத்த ரோஜாக்கள் சில குப்பையில் தூக்கி வீசப்பட்டாலும். நாட்கள் போக போக ரௌத்திரன் கொடுக்கும் ரோஜாவை தன்னையே அறியாமல் சேமித்து வைத்திருந்தாள். பூக்கள் வாடி வதங்கி போனாலும் அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

கடைசிநாளான இன்று பல ரோஜாவல் ஆன பூச்செண்டு கொண்டு வந்திருந்தான். வெண்பா அவனை முறைப்பதா, ரசிப்பதா என்ற குழப்பத்தோடு நின்று இருந்தாள். வைபவ் தலையைக் குனிந்து கூனிக்குறுகி நின்றுக் கொண்டிருக்க, ரௌத்தின் வைபவ் கார்ப்பரேட் சிஇஓ அறையில் சுழல் நாற்காலி அமர்ந்து ரோஜா பூச்செண்டின் வாசத்தை முகரந்து,

“ம்ம் மயக்குதே..!” என்று கூறிவிட்டு வெண்பாவைப் பார்த்து, “பியூட்டி பாப்பா கம் ஹியர்!” என்றான் ரௌத்திரன். அவள் வைபவ் முகத்தைப் பார்த்தாள்.

“அவன எதுக்கு பார்க்குற?இங்க வாமா.. மின்னல்!” என ரௌத்திரன் அழைத்ததற்கு வெண்பா தயங்கியபடி, விரல்களைப் பிண்ணிக் கொண்டு நின்றாள். ரௌத்திரன் அவளை இழுக்க ஒரு சுற்று சுற்றிவிட, அவள் அவன் மடியில் அமர்ந்துவிட்டாள்.

ரௌத்திரன் கரம் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து அவனோடு அவளை இறுக்கிக் கொண்டான். வெண்பா கூச்சத்தில நெளிந்தாள், அவன் இரும்பு கரம் சிறையில் இருந்து தப்பிக்க முடியாது அவனோட ஐக்கியமாகி இருந்தாள் .

“அகஸ்டின்..!” என அழைக்க அகஸ்டின் ஒரு கோப்பு புத்தகத்தைக் கொண்டு வந்து அந்த மேசையின் மீது வைக்க, வைபவ் தொண்டை வரண்டு போய்விடும் அளவிற்கு பயத்தில் இருந்தான்.

“வைபவ் எனக்கு உன்னோட கம்பெனிய அழிக்கிறது எண்ணம் இல்ல. உன் தப்பை நீ உணரனும் உழைப்போட அர்த்தம் உனக்கு தெரியணும்னு நினைச்சேன். மற்றபடி இந்த கம்பெனி ஷெர்ஸ் எனக்கு தேவையில்லை எனக்கு இருக்குற செல்வாக்குக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்ல. அதனால உன் கம்பெனிய நீயே வச்சிக்கோ. எனக்கு வேற ஒண்ணு வேணும் அத நானே எடுத்துக்குறேன்” என ரௌத்திரன் வைபவ் கம்பெனி டாகுமெண்ட் கோப்புகளை அவன் முன் தள்ளிவிட்டு, வெண்பாவைப் பார்த்து,

“என்ன பாப்பா நான் சொன்னது சரி தானே” என்க அவள் தயக்கத்துடனே தலையை அசைத்தாள். அப்படி எதை அவன் எடுத்துக் கொள்ளப் போகிறான் என்று ஆர்வமாகப் பார்த்தான் வைபவ். யாரும் எதிர்பார்க்காத ஒன்றை ரௌத்திரன் செய்தான். வெண்பா இதயம் படபடத்து அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது தோற்றுப் போனாள்.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
ஒரு கரப்பான் பூச்சிக்கு இத்தனை அக்கப் போரா

அடியேய் இதெல்லாம் ஓவருடி

அவன் ஆளையே தூக்கிப் போட்டு அடிக்கிறவன்

நீயானால் 🤷🤷🙆🙆
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
838
Reaction score
454
Points
63
ஒரு கரப்பான் பூச்சிக்கு இத்தனை அக்கப் போரா

அடியேய் இதெல்லாம் ஓவருடி

அவன் ஆளையே தூக்கிப் போட்டு அடிக்கிறவன்

நீயானால் 🤷🤷🙆🙆
மிக்க நன்றி அக்கா 🥰
 
Top Bottom