16.மின்னல் தூரிகை மௌன மொழியாள் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

16.மின்னல் தூரிகை மௌன மொழியாள்

New updates

LATEST

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
838
Reaction score
454
Points
63
பாகம்- 16


பார்ரில் இருந்து கௌதமை கூட்டிட்டு வந்த மித்ரன் பாத்ரூம்மில் அவனை அமர்த்தி, எலுமிச்சை பழத்தை அவன் தலையில் தேய்த்து, அவனை குளிக்க வைத்து, அவன் பெட்ரூம்மில் படுக்க வைத்துவிட்டு. கிச்சன் பக்கம் சென்றான் அங்கு எல்லாம் அலங்கோலமாக இருந்தது..

அவன் வீட்டிற்கு ஒரு நடுத்தர வயதுடைய அம்மா (அலமேலு)வந்து அவனுக்கு சமையல் செய்து, துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து கொடுப்பது வழக்கம். கௌதம் அந்தம்மாவை இரண்டு நாட்களுக்கு வர வேண்டாம் என இவன் சொல்லி இருந்தான்

இரண்டு நாட்களுக்கு முன் அந்தம்மா "ஏன் தம்பி வர வேண்டாம்னு சொல்றீங்க" என்று கேட்க,

"அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது.." என்று கௌதம் மிரட்டலாக சொன்ன பதிலோடு அந்தம்மா அமைதியாகிவிட்டு சென்றார்.

கவனிக்க ஆள் இல்லாத வீடு. கௌதமிற்கு அம்மா இல்லை. அவனின் தந்தை ரமேஷ் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டு மனைவிக்கு அடிமையாகி, கௌதமை விடுத்து வேறு ஊரில் தங்கிவிட்டார். வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ வந்து மனைவிக்கு தெரியாமல் பிள்ளையை பார்ப்பதும், கிஷோரையும் அழைத்துக் கொண்டு வருவது வழக்கம். அன்று அதே போல் பார்க்க வந்த போது அவன்‌ பாரில் இருந்தான். ரமேஷ் கிஷோரை அனுப்பி கூட்டிட்டு வர சொன்னதுக்கு, அவன் அவனை அடித்து அனுப்பிவிட, கிஷோர் மித்ரனிடம் சொன்னான். கிஷோரை மித்ரனுக்கு மட்டும் தான் தெரியும் அதனால் தான் போன் செய்து வர சொல்லி அவன் அப்பாவுடன் காரில் சென்றுவிட்டான்.

கிஷோர் கௌதம் அப்பாவின் இரண்டாம் மனைவியின் மகன். இருந்தாலும் கிஷோர் கௌதமை உடன் பிறப்பு போல் பாசம் வைத்திருக்கிறான். ஆனால் கௌதம் கிஷோரை சில சமயங்களில் அடித்துவிடுவான்.‌

கௌதம், அம்மா தேவி இவன் பள்ளி நாட்களின் போதே உடல்நலம் சரியில்லாதால் படுத்த படுக்கையானார். அதனால் மேனகா என்ற பெண் கௌதம் அம்மாவை கவனித்துக் கொள்ள ரமேஷ் பணியமர்த்தினார். மனைவி படுக்கையில் வீழ்ந்து விட்டாள், ஆண் ஆன அவர் முன்பு ஒரு பெண் இருப்பது கண்களுக்கு காம மயக்கம் உண்டாக்கி அந்த பெண்ணுடன் காதல் மயக்க கொண்டு சல்லாபித்தார். வீட்டில் கௌதம் கண் முன் அவளுடன் கொஞ்சி குளாவுவது சிறு பிள்ளையான கௌதமை வெறுப்புக்குளாக்கியது. பெற்ற மகன் இருக்க, கட்டிய மனைவி இருக்க இன்னோரு பெண்ணிடம் சுகம் தேடியவர் மகனின் நிலையை மறந்தார். சிறுபிள்ளை மனம் எவ்வளவு பாதித்திருக்கும்!.

அவளிடம் அடிமையாகியதன் காரணமா அவள் கற்பவதி ஆனால் இந்நிலையில் அவர் மனைவியும் இறந்துவிட. அவளிற்கு சாதகமாகி போக அவள் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திக் மேனகா காரியம் சாதித்துக் கொணாடாள். ரமேஷ் மேனகாவை திருமணம் செய்துக் கொண்டார். அவளுக்கு குழந்தையும் பிறந்தது. அவள் குழந்தை (கிஷோர்) வளர வளர அவளுக்கு கௌதம் மீது ஒரு வெறுப்பு வர, அவனை ஜாடை பேசி திட்டுவது, மேனகா வேலையாக ஆனது. கௌதம் இதையும் எதிர் கொண்டு சில காலம் வாழ்ந்துவிட. அவன் அப்பாவிடம் சண்டை சச்சரவு என்று அவன் அப்பாவிடம் பேசுவதும் நின்று போனது. கௌதம் கல்லுரியில் சேர்ந்ததும் அவனைப் பிரித்துச் சொன்னாள் மேனகா. ரமேஷ் கௌதமிடம் சொல்லும் முன் அவனே வீட்டைவிட்டு சென்றுவிட இவனை தனிமை மிகவும் வாட்டியது. கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலையில் சேர்ந்தான்‌‌. தந்தை என்ற கடமையை மேனகாவுக்கு தெரியாமல் செய்கிறார். ஆனாலும் யார்முலமாவது தெரிந்துவிட்டால் பேய்யாட்டம் ஆடுவாள்.

பின் அவன் காலேஜில் அவன் நட்புகள் அன்பும் அரவணைப்பு அவனை இந்த குடும்ப வலியில் இருந்து வெளியே கொண்டு வந்தது. இந்திரா அவனை அதிக உரிமையுடன் கவனித்துக் கொண்டாள். அதனாலேயே அவனின்பால் அவள் காதல்வயப்பட்டாள் ஆனால் அவன் அவள் காதலை புரிந்துக் கொள்ளவில்லை‌‌. அவளை தாய்க்கு நிகரான இடத்தில் மனதில் வைத்தவன். காதல் இல்லை என்றாலும் அவளின் இந்த நிலை அவனை நிலைகுலைய செய்தது. பற்றகுறைக்கு இன்று லேக்காவின் ஏமாற்று வேலையால் அவன் மேலும் உடைந்துவிட்டான். அதன் காரனமாக தான் அவன் குடித்தான்..

ஒரு வழியா மித்ரன் அவனுக்கு டிஃபன் ஆர்டர் கொடுத்துவிட்டு. டீ போட்டு அவனை எழுப்பி கொடுத்தான்..

" கௌதம் என்னடா பிரச்சனை உனக்கு ஏன் இப்டி பண்ணிட்டு இருக்க?" அவன் கேட்க கௌதம் டீயை ஒரு சிப் பண்ணவன் டீயை வைத்துவிட்டு அவன் வயிறு புரட்டி எடுத்து வாந்தி வர சிங்க்கை நோக்கி ஓடி வாந்தி எடுத்தான். பின்னிருந்து அவன் தலையை இந்திரா பிடித்திருந்தாள். மித்ரன் தண்ணி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவன் முகம் அளம்பிவிட்டு திரும்ப இவள் அவனிடம் டவலை நீட்ட. அவன் முகம் அவளை எதிர் கொள்ள முடியாமல் கவிந்துக் கொண்டு அவன் அறையை நோக்கி போனான். இவளும் பின்னாடி போனாள்‌. மித்ரனை பார்த்தாள்.

" ஓகே டா நான் கிளம்புறேன்.." என இந்திரா சொன்னாள்

" இரு டி‌ சேர்ந்தே போலாம்.." மித்ரன் சொல்ல,

" எனக்கு இங்க என்ன வேலை இருக்கு மித்ரா. நீ வர சொன்ன வந்தேன் கிச்சன் கிளீன் பண்ணிட்டேன். நா அலமேலு அம்மா கிட்ட பேசிட்டேன் இப்ப வந்துடுவாங்க. நீ ‌கூட இருந்து பாத்துக்க" என இந்திரா படபடவென சொல்லிவிட்டு கௌதம் முகத்தைப் பாபார்த்தாள். இந்திராவின் இந்த பேச்சு கௌதம் மனதை இன்னும் நோகடித்தது.

" ஓகே அப்போ நீ போ" மித்ரன் சொல்ல அவள் கிளம்ப எத்தனித்தாள், அவளின் கையை பிடித்தான் கௌதம். அவள் அப்படியே திரும்பிய நிலையில் நின்றாள்.

" ஏன் இந்திரா நீ கூட என்ன வெறுக்குற?" கௌதம் அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை திரும்பியும் பாராது கையை உதறி சென்றுவிட்டாள். அவன் கண்கள் கலங்கி அமர்ந்து இருந்தவன் அருகில் மித்ரன் அமர்ந்து‌ தோளணைத்து.

"கவல படாத மச்சி விடு, லேக்கா காக்கா அவலாம் ஒரு பொண்ணுன்னு அவளுக்காக நீ ஃபீல் பண்ணி உன் உடம்ப கெடுத்துக்குற" மித்ரன் சொல்ல, கௌதம் லேக்காவை இன்னொருவனுடன் சென்றதை நினைவில் கொண்டான்.

அன்று லேக்கா யாரோ ஒருவனுடன் பைக்கில் போனதைப் பார்த்து பின்னால் போன கௌதம், அந்த ஹோட்டலில் உள்ளே நுழைய அங்கு லேக்கா வேறு ஒருவனுடன் கை கோர்த்து அமர்ந்து இருந்தாள். அங்கு இசை கச்சேரி நடந்துக் கொண்டு இருந்தது அதை ரசித்து கொண்டு பேசி சிரித்துக் கொண்டு இருந்தாள். கௌதமிற்கு அவளின் இந்த நடத்தை வெறுப்புக்குளாக்கியது பொறுமை இழந்தவன். அவள் அமர்ந்து இருந்த டேபிள் முன் போய் நின்றான். அவள் இவனை பார்த்து சட்றும் ஆச்சரியப்படவில்லை. கௌதம் அவளை இழுத்து கையில் அவன் விரல் பதிய அழுத்தி பிடித்தான்.

" லேக்கா யார் இது?!"

" ஃபிரண்ட்.."

" இத நான் நம்பனுமா.."

" அது உங்க விருப்பம்.."

" ஓகே உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு இவன் கூட வந்து இருக்க. என் கிட்ட பொய் சொல்லிட்டு இவன் கூட வர அளவுக்கு உனக்கு என்ன என்ன அப்டி.." என கௌதம் பற்கள் நெரிபட கேட்க லேக்கா உடன் வந்தவன் கௌதம் சட்டையைப் பிடித்து,

" ஹலோ மிஸ்டர் மைன்ட் யுவர் வோர்ட்ஸ். சும்மா வாய்க்கு வந்தபடி பேசுற. ஆமா அவ என்ன லவ் பண்றா என்ன பிரச்சனை உனக்கு " என அவன் சொன்னா அடுத்த நொடி அவன் கன்னங்களில் கௌதம் விரல் பதிந்தது. லேக்கா கௌதமை அடிக்க கை ஓங்கினாள் அவள் கையை தடுத்து பிடித்துக்கொண்டு.

" ச்சீய் நீயும் ஒரு பொண்ணா!"

" ரொம்ப பேசாத கௌதம், நீ மட்டும் என்ன யேக்கியமா? என்ன லவ் பண்றன்னு சொல்லிட்டு அவ கூட தானே சுத்துன!"

" அவள பத்தி பேச உனக்கு எந்த அறுகதையும் இல்ல‌‌. உனக்கு என்னடி தெரியும் அவள பத்தி ச்சீய் போடி" என கௌதம் சொல்லிவிட்டு அவன் இரண்டடி நடக்க லேக்கா.

" போடா போ அவளையே லவ் பண்ண வேண்டியது தானே! ஏன் என் பின்னாடி சுத்துன" என்றாள் அவள் வார்த்தைகளை கேட்டவன் திரும்பி வந்து அவள் கையை பிடித்து இழுத்து..

" ஆமாஆஆஆஆ.. அவள தான் லவ் பண்ண போறேன் கல்யாணமும் பண்ணிப்பேன். நீ யாரு டி சொல்றது என் இந்திராவ அனு அனுவா காதலிப்பேன். அத பார்த்து நீ அனு அனுவா துடிச்சி சாவு போ. அவ கால் தூசிக்கு கூட சமம் இல்ல நீ. சேத்துல செந்தாமரை இருக்கும் ஆனா உன்ன போல பன்றியும் இருக்கும்னு இப்ப தான் பாக்குறேன்.. குட் பாய்" என்று சொல்லி அவளை தள்ளிவிட்டு அவன் நடந்தான். அவள் அவன் முதுகை வெறித்து கண்கள் கோபத்தில் சிவந்தது லேக்கவிற்க்கு. அன்று பாரில் உட்கார்ந்து குடித்தவன் மறுநாள் தான் மித்ரன் கூட்டிட்டு வரும்படி ஆனது.

" சாரி மித்ரன், நா உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்ட்ட படுத்திடேன்" என்றான் கௌதம்.

" ஆமா.. ஆமா.. அதுலயும் இந்திரா தான் ரொம்ப ரொம்ப பாவம். உன்னால உடல் அளவுல மனசளவுல ரொம்ப காயப்பட்டவ அவ தான். அவளையே லவ் பண்ணி இருக்கலாம் நீ சரி இனி பேசி என்ன ஆக போகுது. விடு அதான் இந்திராவுக்கு அவங்க அப்பா மாப்ள பாக்குறதா கேள்விபட்டேன். அவளும் லைஃப்ல செட்டில் ஆகிடுவா. நீயும் நடந்ததை மறந்துட்டு எப்பவும் போல இரு. நாங்க உனக்கு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் " அவன் பேசிக் கொண்டு இருந்த நேரம் காலிங் பெல் அடித்தது. கௌதம் யேசனையில் இருந்தான். அலமேலு தான் அவர் உள்ளே வந்ததும்.

மித்ரன் "சரி மச்சி டேக் கேர் நா கிளம்புறேன் அலமேலு அம்மா. இந்திரா கிச்சன்‌ கிளீன் பண்ணிட்டா, நீங்க அவன் ட்ரஸ் வாஷ் பண்ணிட்டு வீடு கிளீன் பண்ணிடு ஜீரணம் ஆகுற மாதிரி சாப்பாடு சமைச்சு குடுங்க." என்று சொல்லிவிட்டு, அந்தம்மாவிடம் ஐநூறு ரூபாய் எடுத்து கொடுத்தான்.

" எதுக்கு தம்பி காசுலாம்.."

" வச்சிக்கோங்க மா.. நா வரேன்..‍"

" தம்பி இந்திரா மா எப்டி இருக்காங்க பார்த்தே ரொம்ப நாள் ஆகுது.."

" நல்லா இருக்காங்க சீக்கிரமே கல்யாணம் ஆக போது மா." என மித்ரன் சொல்ல, இந்தியாவின் கல்யாண பேச்சு கௌதம்க்கு எரிச்சல் ஆக. கையில் இருந்த டவலை வீசி விட்டு எழுந்து பால்கனி பக்கம் நின்று தூரத்தில் தெரியும் டீ இலை தோட்டத்தை வெறித்தான். மித்ரன் கௌதமைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பைக் ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

போலீஸ்காரர்கள் அமிர்தா வீட்டு அட்ரஸ் வாங்கிக் கொண்டு, அவள் வீட்டை அடைந்தனர். வாசலில் வந்து நின்ற போலீகாரர்களைப் பார்த்த அமிர்தாவின் தாத்தா வரதராஜன் கண்ணாடியை போட்டு கொண்டு.

" யாரு வேணும்..?"

" இங்க அமிர்தான்னு.."

" என் பேத்தி தான்.."

" வர சொல்லுங்க..." அந்த போலீஸ்காரர் சொல்ல, அவர் உள்ளே சென்று அமிர்தாவை அழைத்தார்.



மௌனம் பேசும் தொடர்ந்து...✍️
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
இந்திரா எதற்கு இந்த வெறுப்பு

தப்பு உன்மேல் தானே

மித்ரன் சூப்பர்

போலீஸ் வந்தாச்சு இனி
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
838
Reaction score
454
Points
63
மிக்க நன்றி அக்கா 😍🙏
 
Top Bottom