16. அரசி (சசிகலா எத்திராஜ்) | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

16. அரசி (சசிகலா எத்திராஜ்)

New updates

LATEST
Joined
Jun 8, 2024
Messages
19
Reaction score
14
Points
3
அரசி

(சசிகலா எத்திராஜ் கெஸ்ட் ரைட்டர்)

''அரசி சமைச்ச சாப்பாட்டை எல்லாம் சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்திரு. இனிப்புக்கு பலாபழத்தை நெய்யில் வதக்கி பாலில் வேகவைத்து பாயசம் செய்ய சொன்னேன் செய்தாயா.. அதில் கொஞ்சம் தேங்காய் சிறு பல்லாக வெட்டி முந்திரியும் நெய்யில் வறுத்து பாயசத்திலே போட்டுவிடு மறந்திடாதே... காவ்யாவுக்கு இந்தப் பாயசம் ரொம்ப பிடிக்கும்'' என்று சொன்ன வரலக்ஷமி ...''காவ்யாவும் மாப்பிள்ளையும் வந்து விடுவாங்க.. சீக்கிரம் எல்லாம் எடுத்து மேசையில் வை. சூடாக இருக்கணும் சாப்பாடு காவ்யாவுக்கு. ஹாட்பாக்சில் போட்டு வை''... என வரிசையாக வேலைகளை அடுக்கினார் மருமகளான அரசிக்கு.

மாமியார் சொன்ன படி எல்லாம் எடுத்து வைத்தவளின் முகமோ சமையலறையில் காலையிலிருந்து நின்று விருந்துக்காக சமைத்து முடித்த களைப்பும் வேர்வையும் அதிகமாக இருந்தது அரசிக்கு.

என்னமோ புதியதாக கல்யாணம் ஆகி வருகிற மாதிரி மாப்பிள்ளை பொண்ணு வராங்கனு இத்தனை வேலைகளை செய்ய வைக்கும் மாமியாரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது.

அப்படி எதாவது முணுமுணுத்தாலோ அடுத்த நிமிடமே ருத்ர தாண்டவம் ஆடி விடுவார் என்ற பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் அரசி.

தானும் தன் வீட்டிற்குப் போனால் அம்மாவும் அப்பாவும் இப்படி தானே தாங்குவார்கள் என நினைத்தவளுக்கு அதற்குரிய குடுப்பினை தனக்கு இல்லையே. அங்கே தன் அண்ணாவின் மனைவியின் பேச்சு மட்டுமே எடுப்பட அங்கே தாய்யும் தந்தையுமே சுமையாக இருப்பதான கண்ணோட்டம் அதிகமாக இருப்பதால் அங்கேயும் செல்ல முடியாது அரசிக்கு.

முரளியோடு திருமண முடிந்து இந்த வீட்டிற்கு அடியெடுத்து வைத்தவளின் கைகளில் கரண்டியை கொடுத்தவர்கள் அங்கே இருந்து மீள முடியாமல் அதனுள்ளே இருக்கும் வேலைகளை முடிக்கவே இரவு பத்தாகிவிடும். இதில் எங்கே கணவனோடு உறவாடுவது , சந்தோஷமாக பேசவோ, காதலும் மோதலும் ஊடலுமான இருக்கவோ எதுவுமில்லை. வறண்ட கிணற்றில் ஊற்றுப் போட்டு இறைத்தால் கூட தண்ணீர் வந்துவிடும். ஆனால் தன் கணவனோ இறுகிய இரும்பான முகத்தோடும் பாறங்கல்லான இதயத்தோடு நடமாடிக் கொண்டிருக்கும் இயந்திர மனிதன்.

அவனிடம் அன்போ பாசமோ காதலோ எதுவும் எதிர்ப்பார்க்க முடியாது என வந்த நாளிலே கண்டு கொண்டவளோ அவ்வாழ்க்கையை விட்டு வெளியேறவும் வழியில்லை.

இருளில் நடக்கும் தாம்பத்தியமோ கல்யாணம் பண்ணியாச்சு. அதற்காகவே கடமையை ஆற்றிவிடணும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் இருக்குமோ என்றே தோன்றியது அரசிக்கு. இங்கே இருந்து வெளியேறிச் செல்ல ஒரு இடம் கூட இல்லையே என மனம் வலித்தது.

தன் அண்ணனுக்கே பெற்றோரை பாரமாக தங்கி இருக்குமிடத்தில் தன்னையும் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வானா எனப் பெருமூச்சுடன் நினைத்தவளுக்கு வாழ்க்கையில் எப்போதோ எங்கயோ எந்தவிதமாகவோ யாருக்கோ செய்த கர்மமாவின் பலனை அனுபவிக்கிறனா என்ற எண்ணம் இருபத்திநான்கே வயதான அரசியின் உள்ளத்தில் அலைமோதியது.

முரளியோ தன் அம்மா செய்யும் அதிகாரங்களோ அதட்டல்களோ நிமிர முடியாமல் வேலை வாங்குவதைக் கண்டும் எதுவும் கண்டுக் கொள்ளாமல் செல்கிற கணவனைப் பார்த்தால் எரிச்சலும் கோபமும் அதிகமாக வந்தாலும் தன் இயலாமையால் அடங்கிப் போய் பழகிவிட்டாள் அரசி.

பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை படித்தவளுக்கு அதற்கு மேலே படிக்க முடியாமல் தாய் வீட்டிலும் நிற்க நேரமில்லாமல் மாடாக உழைத்தவளை மனுசியாக கூட யாரும் மதிக்கவில்லை.

அங்கே தான் அப்படி என்றால் இங்கே கணவன் வீட்டிலும் இதே நிலமை. கல்யாணம் ஆகி ஆறே மாதத்தில் வாழ்க்கையே வெறுத்துவிட்டது அரசிக்கு.

ஆனால் அரசி என்ற அவள் பெயரில் இருக்கும் கம்பீரம் அவள் உள்ளத்திலோ செயல்களிலோ இல்லாமல் நிமர்வுகளின்றி கோழையாக முதுகெலம்பு இல்லாதவளாக நடமாடிக் கொண்டிருக்கிறாள் அரசி.

வரலக்ஷமியோ காவ்யா வீட்டிற்கு வந்தாலே இருவரும் சேர்ந்து கொண்டு பேசும் ரகசியமான பேச்சும் அவளுக்குத் தெரிந்து விடக் கூடாது எனத் தன் மகனையும் கூட வைத்துக் கொண்டு பேசுவதுமாக இருப்பார்கள். அதைக் கவனித்தானாலும் அவர்களுக்கிடையே அவளை ஒரு மனுசியாக கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்

அதனாலே என்னவோ தன்னைச் சுற்றி எதுவோ ஒன்று மர்மம்மாக இருப்பதாக ஆழ் மனம் உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருந்தாள் அரசி.

இன்றும் நாத்தனார் வருவதற்காக கறிவிருந்தாக பிரியாணி வறுவல் பல வகைகளை செய்தவளுக்கு அங்கே மிச்சம் மீதியுள்ள உணவு அரைவயிற்றுக்கே பத்தாது. அந்தளவுக்கு அவளை வரலக்ஷமி ஆட்டிப் படைப்பார்.

சம்பள இல்லாத வேலைகாரி வேணும் என்பதற்காக தன்னைக் கல்யாணம் செய்து அழைத்து வந்து இருப்பார்களோ என்று கூடத் தோன்றும் அரசிக்கு.

பலவித கடந்த காலத்தின் சுவடுகளும், நிகழ் காலத்தின் நிகழ்வுகளை நினைத்தபடி அமர்ந்திருந்தவளை செவியில் வரலக்ஷமியின் குரல் இடியாக முழங்க என்னவோ ஏதோ எனப் பதறி எழுந்து வெளியே வந்தவளை முறைத்தவர் ''ஏன்டி வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என அழைக்காமல் அங்கே என்ன வெட்டி முறைக்கிற'' எனக் கத்தியவருக்குப் பதிலை அளிக்காமல் ''வாங்க அண்ணி, வாங்க அண்ணா'' எனக் காவ்யாவையும் அவளின் கணவன் ராகவ் அழைத்தவள் ''உட்காருங்கள் ! தண்ணீர் கொண்டு வருகிறேன்'' எனச் சொல்லிச் செல்பவளைக் கண்டவர்களோ இயல்பான தலைசைப்பைக் கூடக் கொடுக்காமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்.

தன் மகளின் அருகே அமர்ந்த வரலக்ஷமிடம் ''என்னமா இந்த மாதம் எதாவது நல்ல சேதி சொல்லுவாளா உன் மருமக'' எனச் சிறு குரலில் கேட்டவளுக்கு ''ம்க்கூம் நானும் அதைத் தான் எதிர்ப்பார்க்கிறேன். எங்கே நடக்கது'' எனப் புலம்பலாக சொல்லியவர் ''அங்கே உன் வீட்டில் எதுவும் பிரச்சினை இல்லை தானே கண்ணு'' என மெல்லிய குரலில் கேட்டவருக்கு ''அப்படி பிரச்சினை ஆக நான் தான் விட்டு விடுவேனா அத்தை. அதெல்லாம் உங்க பொண்ணு ராணி மாதிரி தான் பார்த்துக்கிறேன்'' என மிதப்பாக சொல்லிய ராகவ்யைப் பார்த்துச் சிரித்த வரலக்ஷமி ''ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை . என் பொண்ணு ரொம்ப கைராசியும் அதிர்ஷ்மும் நிறைந்தவள். தொட்டது துலங்கும் அதனால் தானே நீங்க இப்ப தொழிலில் கொடிகட்டிப் பறக்கீறிங்க. இங்கே இருந்தவரை அவளின் பெயராலும் தான் முரளி தொழில் தொடங்கி இன்று ஓஹோ என்று இருக்கான். உங்கள் வீட்டுக்குக் கட்டிக் கொடுத்த இந்த ஐந்து வருடமாக நீங்களும் நல்லதானே தொழில் செய்யரீங்க. என் பொண்ணு வந்த ராசி மாப்பிள்ளை'' எனத் தன் மகளைத் தாங்கிப் பேசுபவரை உள்ளிலிருந்து வந்த அரசி கவனித்தாலும் இப்படி பாராட்டித் தாங்கிப் பேசயெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும் எனப் பெருமூச்சு விட்டாள் அரசி.

இங்கே தன் அம்மாவும் தம்பியும், அங்கே கணவன் வீட்டிலும் அவளைத் தாங்க இரண்டு வீட்டிலும் தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தினாள் காவ்யா.

அவர்கள் பேசி முடித்துவிட்டதைக் கவனித்தவள் அவர்களுக்கு மதியத்திற்கான விருந்தை இலையில் பறிமாறிய அரசிக்கு செய்யும் போது வராத குமட்டல் பறிமாறும் போது வர வேமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து குளியலறைக்குள் போய் அடிவயிறு எகிற வாந்தி எடுத்தாள் அரசி.

தன்னந்தனியாக நிற்க முடியாமல் தடுமாறியபடி வாயை கொப்பளித்து விட்டு வெளியே வந்தவள் அறையின் சுவற்றில் சாய்ந்து அரை மயக்கத்துடன் நின்றவளை நெருங்கிய காவ்யா ''என்ன ஆச்சு?'' எனக் கேட்க இவ்வளவு நாள் இல்லாத திருநாளாக தன்னிடம் பேசும் நாத்தனாரைப் பார்த்து ஒன்றுமில்லை எனத் தலைசயசைத்தாள் அரசி.

அரசியின் முகத்தை ஆராய்ந்தபடி நின்ற காவ்யா ''நாள் தள்ளிப் போய்ருக்கா'' எனக் கேட்டவளை அதிர்ந்து பார்த்த அரசிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. பத்து நாளுக்கு முன்பே வரவேண்டியது வராமல் போனது நினைத்தவளுக்குத் தன் அடிவயிறை மெதுவாக தடவியவள் காவ்யாவின் கேள்விக்கு ஆம் எனத் தலைசைத்தாள் அரசி.

அதைக்கேட்ட காவ்யாவின் முகம் மலர்ந்து போக ''அம்மா இங்கே வா'' எனக் கத்தியவள், ''நீ ஏன் நிற்கிற அரசி ,வந்து உட்காரு'' என அவளின் கைகளைப் பிடித்தபடி வந்தவள் ஹாலிலிருக்கும் இருக்கையில் அமரவைத்தாள் காவ்யா.

மகளின் சத்தத்தில் சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே வந்த வரலக்ஷமி '''என்ன காவ்யா?'' வந்தவரோ மகளின் முகம் சுவிட்ச் போட்ட லைட்டாக ஜொலிப்பதைக் கண்டு ''அரசி உண்டாகி இருக்காளா'' எனக் கேட்டபடி மருமகளை நெருங்க காவ்யாவும் ''ஆமாம் மா'' எனச் சொல்லிய அரசி உனக்கு குடிக்க என்ன வேணும் அரசி?.. எனக் கேட்டவள் மாதுளை ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன் உனக்கு. பாரு முகமே வாடிக் களைப்பாக இருக்க'' எனச் சமையலறைக்குள் நுழையும் நாத்தனாரையும் ,மாமியாரோ உப்பு மிளகாய் எடுத்து வந்து திருஷ்டி எடுப்பதையும் கண்டவளுக்கு இது என்ன கனவா என்கிற எண்ணம் அலைமோதியது அரசிக்கு.

அதன்பின் நடந்த ஒவ்வொன்றையும் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வீட்டில் கணவன் நாத்தனார் மாமியார் ராகவ் என மாற்றி மாற்றி அவளைக் கவனித்தனர்.

''ராகவ் பாப்பா பிறக்கிற வரைக்கும் நான் அரசி கூடவே இங்கே இருக்கேன்.. அம்மாவுக்கு வயசாச்சு. நேர நேரத்திற்குச் சாப்பாடு ஜூஸ் செய்து கொடுக்க சிரமம் படுவாங்க. முரளிக்கு வேலை அதிகம். அவனும் வெளியே போய்ருவான். ஹாஸ்பிட்டலுக்கு நான் தான் கூட்டிப் போகணும், சத்தான உணவு கொடுத்தால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும். நான் அம்மா வீட்டிலே இருக்கேன் ராகவ்'' எனச் சொல்லிய காவ்யாவைப் பார்த்துச் சிரித்த ராகவ் ''இதையெல்லாம் சொல்லணுமா காவ்யா. நீ தான் கூட இருந்து கவனிச்சுக்கணும். அரசி வீட்டிலும் பெரிசா ஒண்ணும் பார்த்துப் பார்த்துச் செய்ய போவதில்லை. அதனால நாம் தான் அரசியை பார்த்துக் கொள்ளணும்'' என்று சொல்ல அதைக் கேட்டபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அரசிக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

தனக்குள் உருவான கருவால் நல்ல நேரம் ஆரம்பிருச்சோ தனக்கு என நினைத்தவள் எப்படியோ இனியாவது சந்தோஷமாக தன்னை இக்குடும்பம் பார்த்துக் கொள்ளும் என மனதிற்குள் நினைத்தவளின் முன்பு மாமியார் சாதத்தை பிசைந்து அவள் வாய் அருகே கைகளை நீட்டி ஊட்ட விழிகளில் கண்ணீர் பெருக வாங்கிக் கொண்டவளுக்குத் தெரியவில்லை. எதற்கு இந்த சந்தோஷம் கவனிப்பு எல்லாம் அறியாமல் போனாள் அரசி.

இரவில் முரளியோ அவளிடம் உனக்கு என்ன வேணும் சொல்லும்மா. உனக்குப் பிடித்த எல்லாமே வாங்கித் தரேன்'' எனச் சொல்லியபடி மென்மையாக அணைத்து காதல் ராகங்களை இனிமையாக வாசித்தான்.

நாட்களோ மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்
ஏழு மாதம் கடந்த நிலையில் வயிறோ பெரிதாகி இருக்க வீட்டின் ஹாலிலே மெதுவாக நடைப் பயின்றாள் அரசி.

அப்போது அவள் அங்கே இருப்பது கவனிக்காமல் திறந்திருந்த அறைக்குள் மாமியாரும் காவ்யாவும் பேசிய வார்த்தைகளைக் கேட்டவளோ திக்பிரமை பிடித்தவள் போல நின்றாள் அரசி.

''அம்மா, பாப்பா பிறந்ததும் என்கிட்ட கொடுத்து விடணும் தம்பிகிட்ட சொல்லிருங்க. அப்ப தான் என் பெயரில் இருக்கும் நம் வீட்டு சொத்தை அவனுக்கு எழுதிக் கொடுப்பேன்'' என அதிகாரமாகச் சொன்னவளோ ''எனக்குக் குழந்தை பிறக்காது தெரிந்தும் ராகவ் குடும்பத்தில் எதுவும் சொன்னதில்லை. அவர் உன் தம்பிக்குப் பிறக்கும் குழந்தையை நமக்குத் தத்துக்குக் கொடுத்து விடணும் பத்திரத்தில் எழுதி வாங்கிவிட்டு உன் பெயரில் உள்ளதை உன் தம்பிக்குக் கொடுத்து விடு எனச் சொல்லிட்டார். வெளியே அனாதை ஆசிரமம்த்தில் தத்துயெடுக்க எங்களுக்கு விருப்பமில்லை எங்களுக்கு. சொந்த தம்பிக் குழந்தையால இருந்தால் என் ஜாடையோ தம்பி ஜாடையோ இருக்கும். ராகவ் வீட்டுப் பக்கம் நான் தான் கர்ப்பமாக இருக்கேன் எனச் சொல்லி வச்சிருக்காங்க. குழந்தை பிறந்ததும் என் கையிலே கொடுத்து விடுங்க'' எனச் சொல்லிய காவ்யா ''என்னம்மா ஒண்ணும் பதில் சொல்மாட்டேங்கீறே'' எனக் கேட்டாள் வாரலக்ஷமிடம்.

''அதெல்லாம் ஒண்ணு இல்ல கண்ணு. கல்யாணம் பண்ணும் போதே முரளிடம் சொல்லித் தானே செய்தோம். அவனுக்கும் இதில் முழுசம்மதம் தான்'' என்றவர் ''பெரிய பணக்கார குடும்பத்தில் பொண்ணு எடுத்து இருந்தால் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டாள் எனத் தெரிந்து தான் வசதி இல்லாத , போக போக்கிடம் இல்லாத வீட்டில் பொண்ணு எடுத்தோம். பிறக்கிற குழந்தை உன் குழந்தை தான். ஆனால் இதை அரசியிடம் எப்படி சொல்வது தான் தெரியல'' எனச் சொன்னார் வரலக்ஷமி.

குழந்தை பிறந்ததும் இறந்திருச்சு சொல்லிருலாம் மா. இல்லைனா அவள் கொடுக்கமாட்டேன் பிடிவாதம் பிடித்தால் ஒண்ணு செய்ய முடியாது. அப்படியே கொடுத்தாலும் நாளை உரிமை கொண்டாடி வந்துருவாள். பிறந்த உடன் நான் குழந்தையோடு என் வீட்டிற்குப் போய் விடுகிறேன். கொஞ்ச நாள் கழித்து நான் வரும் போது சொல்லிக் கொள்கிறேன் அனாதை குழந்தையை தத்தயெத்தோம்'' எனக் கிரிமனலாக யோசித்துப் பேசும் மகளைப் பார்த்து சிறிது அதிர்ந்தாலும் பெற்றவள் தர மாட்டேன் சொல்லிப் பிரச்சினை பண்ணினால் சமாளிக்க முடியாது. ஆனால் இந்த யோசனை நல்ல தான் இருக்கு என நினைத்தவர் ''சரி கண்ணு நீ சொல்கிற மாதிரி செய்துக்கலாம். முரளிடமும் சொல்லிவிடுகிறேன்'' என்றவர், ''அரசிக்கு குடிக்க ஜூஸ் போட்டுக் கொடுக்கணும் வா போகலாம்'' என அறையிலிருந்து வெளியே வந்தவர்கள் அரசி ஆக்ரோஷமாக நிற்பதைக் கண்டு அதிர்ந்தார்கள்.

அப்போது முரளியும் உள்ளே நுழைய மூவரையும் முறைத்தவள் ''உன் அக்காவுக்குப் பிள்ளை பெத்துக் கொடுக்க எவ்வளவு பணம் வாங்கின'' என ஒருமையில் சுருக்கென்று கேட்டவள்.. ''இன்று சொத்துக்காக பிள்ளையை விற்கிறவன் நாளைக்கு உன் வேலையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்னையை விற்க மாட்டேனு என்ன நிச்சயம் ''எனச் சொல்லியவளைக் கைகளை ஓங்கிய படி வந்த முரளியை ஒரே தள்ளாக தள்ளியவள், ''கடமைக்குக் கல்யாணம் பண்ணி கடனுக்குப் பிள்ளையை பெத்துக் கொடுக்க இல்லாத வீட்டில் பெண்ணும் எடுப்பீங்க நீ'' என்றவள் காவ்யாவின் அருகே போனவள் ''உனக்குக் குழந்தையே பிறக்காது சொல்லி உன் குழந்தையை எனக்குக் கொடுப்பாயா எனக் கேட்டிருந்தால் கூட ஒரு கணம் நான் யோசித்திருப்பேன். ஆனால் நீ சொன்ன பாரு, குழந்தை பிறந்ததும் இறந்திருச்சு சொல்லிருங்க. இல்லனா உரிமை கொண்டாட வந்திருவானு.. ச்சீசீ'' என்றவள் மாமியாரைப் பார்த்து ''உன் பொண்ணுக்காக என்னைப் பிள்ளை பெத்துக்கிற மிஷினா இங்கே வச்சிருந்தீலே ''எனக் கோபத்துடன் கேட்டவள் ஓவெனக் கதறி அழுதாள் அரசி.

''குழந்தை உண்டான பிறகு இப்படி கவனிக்கிறாங்களே. குழந்தைக்காக என் மேலே பாசம் வந்திருச்சு போல என நினைத்தேனே. அத்தனையும் பொய் தானா ''எனக் கதறி அழுதபவளை எவரும் நெருங்க முடியவில்லை.

சிறிது நேரம் தன் துக்கம் தீர அழுது முடித்தவள் நிமிர்ந்து எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ''இக்குழந்தைக்காக தானே எல்லாம் செய்தீங்க. அது உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது'' எனச் சொல்லியவள் வீட்டை விட்டு வெளியேற முயல அவளைத் தடுத்த முரளிடம் ''உன் அக்காவுக்குக் குழந்தை வேணுமானால் இன்னொரு கல்யாணம் பண்ணிப் பெத்துக் கொடு. நான் எதுக்கு கொடுக்கணும். நீ கடமைக்காக என்னோட இருந்தற்காக உனக்கு வேணுமானால் பாசம் இல்லாமல் போகலாம். ஆனால் என் உயிரோட கலந்து ரத்தமும் சதையுமாக உதிர்த்த கருவை நான் ஏன் கொடுக்கணும்'' என்றவள் எனக்குப் போக போக்கிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உழைக்கிற அளவுக்கு மனதிலும் உடம்பிலும் தெம்பு இருக்கு. என் குழந்தையை நான் பெத்தெடுத்து வளர்த்துக் கொள்வேன்'' எனச் சொல்லியவள் வீட்டை விட்டு வெளியேற அந்தி சாய்ந்த வேளையில் மழைக் காற்றும் மெல்லிய சாரலில் நனைந்தவள் இத்தனை நாட்கள் மனதிற்குள் இருந்த சஞ்சலங்கள் விலக தலை நிமிர்ந்து கம்பீரமாக நடந்தாள் அரசி.
 
Last edited by a moderator:

Meenakshi

Active member
Joined
Jun 10, 2024
Messages
43
Reaction score
36
Points
43
உடல் சிலிர்க்க வைத்த ‌கதை
தன் மகளுக்காக மருமகளை இயந்திரம் போல் நினைத்த மாமியார் குழந்தைக்காக அவளைத் தாங்கும் போது உண்மையான பாசம் என நினைக்க வைத்தது.
பின்னர் தான் குழந்தை மகளுக்கு வேண்டும் என்று தான் இத்தனை நடிப்பு என புரிந்தது.
இறுதியில் அரசி எடுத்த முடிவு அருமை. மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் மா
 
மிக்க நன்றிங்க மா.. சில இடங்களில் சில மனிதர்களின் வேஷங்கள் இவ்விதம் ..
 
Mrithula Ashwin

Moderator
Staff member
Joined
May 14, 2024
Messages
225
Reaction score
155

குழந்தை இல்லை என்பது இந்த காலத்தில இருக்கும் பிரச்சனை தான். அதுக்கு தான் பல மருத்துவ வழிகள் இருக்கே. அதையெல்லாம் விட்டுட்டு அம்மாவும் பொண்ணும் எவ்வளவு குயுக்தி புத்தியோட பிளான் போட்டிருக்காங்க. அவளோட புருஷன் ராகவ் கொடுத்த யோசனைக்கு அவனை நல்லா மொத்தனும். முரளி இவனை என்ன சொல்ல?

அரசி பாவம் தான். கடைசியில் எடுத்த முடிவு கூட எப்பவோ அவ எடுத்து இருந்தா, இந்த குடும்பம் என்ன பண்ணியிருக்கும்.

அழுத்தமான கதை.
 
ம் ஆமாம் மா ஆனால் பணம் ஒன்று இடையில் நுழைந்தால் மனிதனின் புத்தி பலவழிகளில் போகும். மிக்க நன்றிங்க மா
 
Joined
Jun 8, 2024
Messages
19
Reaction score
14
Points
3
இந்த மாதிரி மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் பணம் என்ற வஸ்துக்கு மிக்க நன்றிங்க மா
 
Zeenath Sabeeha

New member
Joined
Jun 8, 2024
Messages
21
Reaction score
18

சூப்பர்... நெத்தியடி கேள்விகளை கேட்டாள் அரசி இப்படி ஒரு கணவனோடு வாழ்வதற்கு அவள் பிரிந்து வாழ்வதே சிறப்பு...
வாழ்த்துக்கள்
 
Balatharsha

New member
Joined
Jun 15, 2024
Messages
3
Reaction score
2
Points
3
என்ன மாதிரியான மனுஷங்க இவங்க... இவங்கள போல தானே அதுவும் ஒரு பொண்ணு. இந்த காரியம் பண்றதுக்கு ஒரு பொண்ணு வாழ்க்கை தான் கிடைச்சுதா... இதுக்கு வாடகை தாய் பார்த்திருக்கலாமே! பாவம் எதும் இல்லாத பொண்ணுங்கன்னா.. கேட்க யாருமில்ல என்கிற நினைப்பு..
 
மிக்க நன்றி டா இப்பவும் பலர் இப்படி இருக்காங்க மா
 
Joined
Jun 7, 2024
Messages
92
Reaction score
59
Points
18
அடப்பாவிகளா...இதுகளாம் பொம்பளைக தானா..ராமா..நல்லவேளை கடைசிலயாவது அரசிக்கு தைரியம் வந்ததே..முரளி மாதிரி ஆளுகளுக்கு ஏன் கல்யாணம்.

வாழ்த்துக்கள் சசிக்கா.படிக்க படிக்கவே பதறிட்டேன்.
 
Joined
Jun 7, 2024
Messages
92
Reaction score
59
Points
18
ரொம்ப நன்றிமா.. இது மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் தானே
குழந்தை மாத்தற அளவிற்கு இருக்காங்களானு தெரியல ஆனா மாமியும் நாத்தியும் வீட்டு விடு இதே குணத்தோட உண்டு.. முரளியும் கூட தான்
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,381
Reaction score
3,229
Points
113

#ஜோதிரிவ்யூ
#ஜோதிதமிழ்நாவல்ஸ்சிறுகதைப்போட்டி_2024

சிறுகதையின் பெயர் : 16. அரசி
எழுத்தாளர் : சசிகலா எத்திராஜ்

அரசி திருமணமாகி கணவன் வீட்டிற்கு வாழ வந்திருக்கும் இல்லத்தரசி. அவளிடம் புகுந்தகம் வந்த முதல் மாமியாரும், நாத்தனாரும் நடந்து கொண்ட முறைக்கும், அவள் கர்ப்பமான பிறகு நடந்து கொள்கின்ற முறைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது.

இத்தனை நாட்களாக தான் பட்ட கஷ்டத்திலிருந்து வயிற்றில் உதித்த மகவின் மூலம் விமோஷனம் கிடைத்து இருப்பதாக அவள் நினைக்க, அவர்களது நடவடிக்கைக்கான காரணம் வெளிப்பட்டு அதிர்ச்சியடைய செய்கிறது.

ஒரு சில மாமியார்கள் அரசிக்கு கிடைத்திருக்கும் மாமியாரை போலதான் எது தப்பு, சரியென தெரியாமல் நடந்து, மகள்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதே வீட்டுக்கு வாழ வந்திருக்கும் மருமகளிடம் கடுமையை பரிசளிக்கிறார்கள். இதில் அவளது கணவனாவது நல்லவனாக இருந்தால் பரவாயில்லை. அவனும் இவர்களுடன் இணைந்து கொண்டு, அப்பெண்ணின் வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறான்.

இச்சிறுகதையில் வருகிற நாயகி பாவம். அவள் கர்ப்பமான சேதியை அறிந்த மாமியார், நாத்தனாரிடம் தெரிந்த மாற்றம் நன்றாக இருந்தது. மாமியார் பாசமாக பார்க்க, நாத்தனார் குழந்தை பிறக்கும் வரை அவளுடன் இருந்து கவனிப்பதாக சொல்லி ஆச்சர்யபட வைக்கிறார். அவளது கணவனின் சம்மதமும், மகிழ்ச்சியும் அதற்கு மேல் வியக்க வைக்கிறது.

என்னடா மாறி விட்டார்களா? என்று நினைத்தால், அடப்பாவிகளா மனசாட்சியே உங்களுக்கு இல்லையா என எண்ண வைக்கிறது.

இந்த காலத்தில் குழந்தை பெறுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க, இப்படியொரு முடிவிற்கு வரும் அவசியமில்லை. அதிலும், திட்டமிட்டு ஏமாற்ற முயன்ற இடம் அவர்கள் அத்தனை பேர் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. சுமூகமாக பேசி சரி செய்ய வேண்டிய விசயத்தை, அடக்குமுறைக்கு உட்பட்டு செய்து, அவளது கோபத்துடன் நம்மையும் கோபப்பட வைக்கிறார்கள்.

சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. இதுவரை வாசிக்காதவர்கள் இருந்தால் வாசித்து பாருங்கள். ஏற்கனவே வாசித்தவர்கள் அதற்கான கருத்துக்களை கூறி எழுத்தாளரை ஊக்குவியுங்கள்.

மேலும் நிறைய எழுத வாழ்த்துகள்💐💐💐
 
Top Bottom