#சிறுகதைப்போட்டி
#அகல்யா_ஒரு_ஆச்சரியக்குறி
#ஆனந்தஜோதி
#விமர்சனம்
நல்ல ஒரு குடும்ப கதை.
அகல்யா தனது திருமண வாழ்க்கையில் ரொம்ப பொறுமையோடு இருப்பவள் கணவனின் அன்பை மட்டும் எதிர்பார்த்து வாழ்பவர் . ஆனால் இவளின் மாமியாரும் நாத்தனார் அவள் கணவனிடம் அவளைப் பற்றி குறையாக சொல்லி அவனின் பார்வையில் அகல்யாவை குற்றவாளியாக்குகின்றனர்.
நிறைய குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு இதுதான் மாமியார்,நாத்தனார் இல்லாததையும் பேசி கணவன் மனைவிக்கு இடையில் சண்டை மூட்டி விடுகின்றனர் உண்மை நிலை என்னவென்று ஆராயாமல் கணவன்மார்கள் மனைவியை திட்டி அடித்து வருந்த வைக்கின்றனர்.
அகல்யா மாதிரி கணவனின் அன்புக்காக பொறுத்துப் போகும் பெண்கள் வாழ்க்கையில் நிலைத்து வாழ்கின்றனர்.பொறுமையற்ற பெண்கள் கோர்ட் வாசலில் நிற்கின்றனர்.
எனக்குத் தெரிந்து இது போன்ற சூழ்நிலைகளில் ஆண்கள் தாய், உடன் பிறந்தவர்கள்,மனைவி என்று இவர்களின் கருத்துக்களை ஒரே பக்கம் நின்று அவர்கள் கருத்தை ஏற்காமல் உண்மை எதுவென்று ஆராய்ந்து முடிவெடுத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
அகல்யாவின் பொறுமையும், கோவர்த்தனின் மனமாற்றமும் அவன் மனைவியை புரிந்து கொண்டதும் ரொம்ப நல்லா இருந்தது.
கதை ரொம்ப நல்லா இருந்தது
வாழ்த்துக்கள்

