- Joined
- Mar 22, 2025
- Messages
- 844
- Reaction score
- 456
- Points
- 63
அத்தியாயம்-11
லீமாவின் பின்னால் ஓடிய அகஸ்டின் அவள் பெயரைச் சொல்லி கத்தினான்.
“லீமா…! லீமா…! நில்லுங்க” என்க, அவளோ ஓடி சென்று லிஃப்ட் பட்டனை அழுதிட, “டிங்” என்ற சத்தத்தோடு கதவு திறக்கவும் சட்டனே லீமா லிஃப்ட் உள்ளே நுழைந்தாள். லிஃப்ட் கதவு மூடுவதற்க்குள் அகஸ்டின் வேகமாக ஓடி லிஃப்டில் நுழைந்தான். லிஃப்ட் கதவும் பட்டென அடைத்துக் கொண்டது.
“மேம்! ஏன் நீங்க இப்படி அவரைத் தொந்தரவு பண்ணி… உங்களையும் கஷ்ட்டப்படுத்திக்கிறீங்க. அவர் தான் இத பிடிவாதமா பண்றாரு. நீங்க உங்க அண்ணன் கிட்ட பேசி இந்த எங்கேஜ்மெண்ட நிறுத்துங்க ப்ளீஸ்.” என்று அகஸ்டின் அவள் மீது அக்கறையும் ஆதங்கத்தோடும் சொல்ல,
“அதெல்லாம் முடியாது. இந்த வாய்ப்பை நான் தவறவிட்டா.. ரௌத்திரன முழுசா இழந்துடுவேன்.” என்றால் லீமா.
“அவர இழக்குறது உங்களுக்கு தான் நல்லது. சொன்னா கேளுங்க நீங்க நினைக்கிற மாதிரி ரௌத்திரன் சார் உங்களுக்காக மனசு மாற மாட்டாரு. நீங்களே பார்த்தீங்க தானே.. அவரு உங்கள எந்த அளவுக்கு வெறுக்குறாருன்னு!” என்றான் அகஸ்டின்.
“அதுக்காக நான் அப்டியே விட்டுடுவேணா! ரௌத்திரன நான் விட்டு கொடுக்க மாட்டேன்.” என்றாள் லீமா. லிஃப்ட் தரை தளத்தில் வந்ததும் கதவு திறக்க, வேகமாக அவளது கார் அருகில் சென்றாள். அகஸ்டின் அவள் பின்னால் போக,
“உனக்கு என்ன வேணும்… எதுக்கு இப்டி என் பின்னாடி வர!” என லீமா கேட்க, அவன் வார்த்தை தடுமாறியது.
“அது..! உங்கள பத்திரமா வீட்டுல விட்டுட்டு வரேன் நான்.” என்றான்.
“உன் அக்கறையெல்லாம் உன் பாஸ் கிட்ட காட்டு… என் கிட்ட காட்டாத, நாளைக்கு நான் யாருன்னு அவனுக்கு காட்டுறேன்” என்றவள் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனாள்.
அகஸ்டின் லீமாவின் பிடிவாதத்தை நினைத்து வருந்தினான். அகஸ்டின் திரும்பி ரௌத்திரன் பார்க்க வந்தான். அவன் அங்கு மயங்கிக் கிடந்தான். ரௌத்திரன் நிலையைப் பார்த்து அகஸ்டின் அதிர்ந்தான். அவன் நெஞ்சோடு அணைத்திருந்த ஓவியத்தை கவனமாக எடுத்து வைத்துவிட்டு, அகஸ்டின் ஒருவனாகவே ரௌத்திரனை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான். உடனே டாக்டருக்கு ஃபோன் செய்து வரச் சொன்னான்.
சில நிமிடங்களில் டாக்டர் பெஞ்சமின் அங்கு வந்தார். “என்னாச்சு அகஸ்டின்” எனக் கேட்க,
“நல்லா தான் பேசிட்டு இருந்நாரு திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு.” என்றான் அகஸ்டின்.
“லீமா கூட சண்டையா?”
“அது வழக்கமா நடக்குறது தான் சார்”
“வேற என்ன…! அன்னைக்கு சொன்ன கனவா?”
“தெரியல டாக்டர்.. ஏன் அவருக்கு இப்படி ஆச்சின்னு”
“சரி கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வாங்க. ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன் மயக்கம் தெளிய.. ரெஸ்ட் எடுக்கட்டும்” என டாக்டர் சொல்ல, அகஸ்டின் சுடு தண்ணீர் கொண்டுவரச் சென்றான்.
பெஞ்சமின் ரௌத்திரனை பரிசோதனை செய்துவிட்டு, அவனுக்காக சில மாத்திரைகளை எழுதிக் கொண்டிருந்தார். சில நொடிகளில் அகஸ்டின் சுடு தண்ணீர் கெண்டு வந்து கொடுத்தான். பெஞ்சமின் ரௌத்திரனுக்கு ஊசியைப் போட்டுவிட்டு கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு,
“ரௌத்திரன் ரொம்ப டிப்ரஷன்ல இருக்காரு. அவருக்கு நிறைய ரெஸ்ட் தேவை கவனமா பார்த்துக்கோ அகஸ்டின்.” என்றார்.
“ஆனா சார் அசூர் கம்பெனியோட அனுவல் ஃபங்ஷன் இருக்கு. அதோட எங்கேஜ்மென்டும் நடக்க இருக்குது. எங்கேஜ்மென்ட் விட சார் கம்பெனி அனுவல் ஃபங்ஷன் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பாரு. அவருக்கு நிறைய பிஸ்னஸ் டீலிங் இருக்கு. நிச்சயம் அவர் ரெஸ்ட் எடுக்க மாட்டாரு.” என அகஸ்டின் சொல்ல,
“இப்படி சொன்னா எப்படி அகஸ்டின் உன்னோட பாஸ் ஹெல்த் முக்கியம் இல்லையா?” என்க, அகஸ்டின் நெஞ்சில் அது சுருக்கென குத்தியது.
“டாக்டர்..!” என அகஸ்டின் சோகமாகிட,
“சரி, வேலை முக்கியம் தான். அதுக்காக உன் பாஸ் ஹெல்த்த கவனிக்காம விட்டுடாத” என டாக்டர் சொல்ல, அகஸ்டின் நிம்மதியடைந்தான்.
“ஓகே டாக்டர்.. நான் பார்த்துக்குறேன்!.” என அகஸ்டின் சொல்ல, டாக்டர் பெஞ்சமின் வெளியே சென்று ராஜசேகரனிடம் ரௌத்திரன் உடல்நிலை பற்றி ஃபோனில் கூறினார்.
“சார், இன்னைக்கும் ரௌத்திரன் மயங்கி விழுந்து இருக்காரு. இப்படியே போனா உங்க பையன் மறந்த உண்மைகள அவரே தெரிஞ்சிக்குவாரு. நான் என்ன தான் மைன்ட் ஸ்லீப் மாத்திரை கொடுத்தாலும், அவருக்கு நினைவு திரும்புறத என்னால தடுக்க முடியாது. இன்னும் மன அழுத்தம் கூடி போகும். அப்றம் டிப்ரஷன் அதிகம் ஆச்சுன்னா திரும்ப அவர் கோமா ஸ்டேஜ் போக அதிக வாய்ப்பு இருக்கு.” என பெஞ்சமின் எச்சரிக்கை செய்தார். ராஜசேகரன் அதைப் பொருட்படுத்தாது.
“டாக்டர் இத்தனை நாள் மறைச்சாச்சு.. இன்னும் கொஞ்ச நாள்ல தானே! கல்யாணம் முடியும் வரை அவன் நினைவு திரும்ப வேண்டாம். அவனுக்கு உண்மையும் தெரிய வேண்டாம்.” என்றார் ராஜசேகரன்.
“சார்.. ரௌத்திரன் உடல்நிலையும், மனநிலையும், தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க.”
“நான் ரகுநாதனுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன். அதோட இந்த கல்யாணம் நடந்தா ரெண்டு குடும்பத்தோட சொத்து மதிப்பு கூடும். என்னோட பிஸ்னஸ் இன்னும் பெருசாகும். நான் உலக பணக்காரர்கள் வரிசையில் வருவேன்” என ராஜசேகரன் பணத்தாசையில் பேச, பெஞ்சமின் அதற்கு ஏதும் சொல்ல விரும்பாமல்,
“சரி, இதுக்கு மேல உங்க இஷ்டம், மறுபடியும் ரௌத்திரன பெட்ல படுக்க படுக்க வச்சிடாதீங்க. நான் ஃபோன் வைக்கிறேன்.” என பெஞ்சமின் சொல்ல, ராஜசேகரன் யோசனையோடு ஃபோன் அழைப்பைத் துண்டித்தார்.
இங்கு சென்னையில் வெண்பா வேலை கிடைத்து, வெளிநாடு செல்ல போவதைக் கொண்டாடும் விதமாக, ஒரு பெரிய ஹோட்டலில் அமர்ந்து பிடித்த உணவுகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“வெண்பா நீ ரொம்ப அதிஷ்ட்டகாரி! ஆஸ்திரேலியாவுல உனக்கு வேலைன்னு கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என பிரகாஷ் கூறினான்.
“ரொமாப நன்றி பிரகாஷ். எனக்கு வேலை கிடைச்சது சந்தோஷம் தான்… ஆனா வெளிநாடு போறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.” என்றாள் வெண்பா.
“ஏய் கம்மான் டி ஹாப்பியா இரு. நாங்க இருக்கோம் உன் அக்கா அப்பாவ பார்த்துகுறோம். பக்கத்துல சாய் இருக்கான் இதைவிட உனக்கு என்ன வேணும் சொல்லு.” என்றாள் லாவண்யா. அப்போது தான் வெண்பா சாய்குமார் நினைவு வந்தது.
“ஐயோ.. அவனுக்கு சொல்லவே இல்லடி! இரு அவனுக்கு ஒரு கால் பண்ணிட்டு வரேன்” என்றவள் சாய்க்கு ஃபோன் செய்தாள். அவனோ மாடியில் படுத்து நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் வெண்பா அழைப்பு வந்தது வேகமாக ஃபோனை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ சாய்.” என வெண்பாவின் குரல் கேட்டவன் கண்கள் கலங்கின.
“வெண்பா..! ஏன் என் கிட்ட சொல்லாம போயிட்ட. நான் அவ்ளோ வேண்டாதவனா ஆகிட்டேனா உனக்கு” என்று குரல் தடுமாற கேட்டான். அவன் குரல் உடைந்து வந்த வார்த்தையில் வெண்பாவும் உடைத்துப் போனாள்.
“சாய் அப்டிலாம் இல்லடா. நான் சீக்கிரமே வந்துடேன் அதான். இங்க எல்லாமே சீக்கிரம் முடிஞ்சிடுச்சி நான் நாளைக்கு ஆஸ்திரேலியா போறேன். மெல்பர்ன்ல வேலை” என்றாள். வெண்பா கூறியதைக் கேட்டவனுக்கு சந்தோஷப்படவும் தோன்றவில்லை.
“ஓ…! சூப்பர்டி. ஆனா நான் உன் மேல கோவமா இருக்கேன். நீ என் கிட்ட சொல்லாம போயிட்டல” என சகஜமாக பேசினான்.
“சாரி… சாரி.. ஆயிரம் முறை போதுமா”
“சரி நீ பத்திரமா இரு சரியா”
“சரிடா.. குட் நைட்” என வெண்பா ஃபோன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவள் நண்பர்களோடு சாப்பிட அமர்ந்தாள்.
“ஆனா வெண்பா… மெல்பர்ன் உனக்கு புதுசு இல்லையே? நம்ம தான் ஒரு முறை போய் இருக்கோமே! உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று லாவண்யா கேட்டதும், அவள் நினைவுகள் அன்று வைர மோதிரத்தை போட்டு பார்த்ததும், அந்த வைர மோதிரத்தின் சொந்தகாரன் அவள் விரலைப் பிடித்து மோதிரத்தைக் கழட்டியதும் பற்றி நினைத்துக் கொண்டாள். வெண்பா அதை மறைத்து,
“ஆமா..! அன்னைக்கு என்னால அக்காவுக்கு கிஃப்ட் வாங்க முடியாம நான் அழுத்துட்டே வந்தேன் ரொம்ப குழந்தைத்தனமா பண்ணிட்டேன்.” என்றாள் வெண்பா.
“ஆமா அன்னைக்கு கூட ஒரு டைமன்ட் ரிங் உன் கையில் போட்டுக்கிட்ட, நீ பண்ண வேலைய நினைச்சா இப்பவும் எனக்கு சிரிப்பு வருது.” என்றாள் லாவண்யா. வெண்பா அவளை அடிப்பது போல் கை ஓங்கி,
“அடிச்சன்னா பாரு… ஒழுங்கா சாப்பிடு சீக்கிரம் வீட்டுக்கு போலாம்.” என்றாள்.
“சரி இந்த முறை உன் அக்காவுக்குகாக கிஃப்ட் வாங்கிடு” என லாவண்யா சொல்ல,
“கண்டிப்பா வாங்குவேன்” என்று வெண்பா நண்பர்களோடு சாப்பிட்டு முடித்துவிட்டு# சென்றாள் விடிந்ததும் விமானநிலையம் புறப்பட்டாள்.
அதே சமயம் மெல்பர்னில் லீமா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இந்த செய்தி மெல்பர்ன் நகரம் முழுவதும் தீயாகப் பரவியது விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது. ரௌத்திரன் கண்விழித்த போது அந்த செய்தியைக் கண்டதும் வேகமாக மருத்துவமனைக்குச் செனாறான்.
லீமா அனுமதிக்கப்பட்ட அறையின் வாசலில் ராஜசேகரன் கடும் கோபத்தோடு நின்று இருந்தார். வைபவ் தங்கையின் மீதுள்ள பாசத்தாள் அந்த மருத்துவமனை அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான்.
“என் தங்கச்சிய இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டான். அவன நான் சும்மா விட மாட்டேன். இங்க பாருங்க ராஜசேகரன் என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஆச்சின்னா ரௌத்திரன் மட்டும் இல்ல அசூர் சாம்ராஜ்யம் அழிஞ்சுடும் பார்த்துக்கோங்க.” என்று கோபத்தில் கத்தினான்.
“வைபவ் பொறுமையா இரு என்ன நடந்ததுன்னு தெரியாம பேச வேண்டாம்” என ராஜசேகரன் சொல்ல,
“பொறுமையா இருக்கணுமா..! என் தங்கச்சி உயிர் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா! உங்க பையன் ஆரம்பத்துல இருந்தே லீமாவ கஷ்ட்டப்படுத்திட்டு இருக்கான் நான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்ததுக்கு காரணம் என் தங்கச்சி ஆசைக்காக தான். ஆனா உங்க பையன் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டான்” என வைபவ் கத்திக் கொண்டிருந்தான் அப்பொழுது தான் ரௌத்திரன் வேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தான். வைபவ் அவனைப் பார்த்ததும் கை முஷ்டியை இறுக்கியபடி நின்றான். ரௌத்திரன் அருகில் வந்ததும் ஓங்கி அடிக்க போனான். அதற்குள் ராஜசேகரன், ரௌத்திரனை அறைந்துவிட அங்கு ஒரு நிசப்தமான சூழல் உருவாகியது.
ரௌத்திரன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். “என்ன பண்ணி வச்சிருக்க ரௌத்திரன். லீமா கூட உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்க, ரௌத்திரன் கோபமாக,
“அது என் பர்சனல்…உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்றான் ரௌத்திரன்.
“ரௌத்திரன் நான் உன் அப்பா” என்று சொல்ல,
“அதனால தான்… திருப்பி அடிக்காம இருக்கேன்” என்று அழுத்தமாகச் சொன்னான்.
“இந்த திமிரும் ஆவணத்தையும்.. விட்டுட்டு ஒழுங்கா லீமா கிட்ட மன்னிப்பு கேளு.” என்றார் ராஜசேகரன். ஆனால் அவன் சட்டை காலர் கூட அசையாது நின்றான் அவன்.
“இங்க யாரு ரௌத்திரன்” என ஒரு நர்ஸ் வந்து கேட்க,
“என்னாச்சு என் தங்கச்சி எப்படி இருக்கா” என்று வைபவ் பதறினான்.
“அவங்களுக்கு கான்ஷியஸ் வந்துடுச்சி. ஆனா ரௌத்திரன் பேர சொல்லி அவர பார்க்கணும்னு சொல்றாங்க” என நர்ஸ் சொன்னதும். ரௌத்திரன் நேராக லீமா அறையில் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு அவள் அருகில் சென்றான்.
லீமா கையில் கட்டு போடப்பட்டு அவள் அரை மயக்கத்தில் இருந்தாள். கண்களை மெல்ல திறந்தவள் முன் ரௌத்திரன் கண்கள் சிவக்க நின்றுக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்டி பண்ண உனக்கு அறிவே இல்லையா? நீ சாகனும்னு உன்னை நான் பிரேக்கப் பண்ண அன்னைக்கே சாக வேண்டியது தானே! இப்போ எதுக்கு இந்த நாடகம்.” என ரௌத்திரன் சொல்ல,
“ரௌத்திரன் இப்போ கூட உன்னால என் காதல புரிஞ்சுக்க முடியலையா.” என லீமா பாவமாகக் கேட்டிள்.
“உன் காதல் கத்தரிக்காய் எல்லாம் எனக்கு தேவையில்லை.” என்றான் ரௌத்திரன். இதற்கு மேல் அவனிடம் கெஞ்சினால் அவன் மனமிறங்கப் போவது இல்லை என்று, லீமா ஒரு விரக்தியான புன்னகை செய்தாள்.
“அப்படியா..! அப்றோ எதுக்கு என்னை பார்க்க வந்த. சாட்டும்ன்னு இருக்க வேண்டியது தானே!” என்றாள்.
“என் பேரு இதுல சம்மந்தப்பட்டதால தான் வந்தேன். உன் மேல எனக்கு எந்த அக்கறையும் இல்ல” என ரௌத்திரன் சொல்ல,
“உனக்கு என் மேல அக்கறை இல்லன்னு தெரியும். ஆனா உன் அசூர் கார்ப்பரேட் மேல உனக்கு நிறைய அக்கறை இருக்குமே. ‘அசூர் கார்ப்பரேட் சிஇஓ மிஸ்டர் ரௌத்திரன் ஹுட்பி சூசைட் அட்டெம்ட்!’ அப்டின்னு டைட்டிலோட நியூஸ் உலகம் முழுக்க பரவும். உன் ரெஸ்பெக்ட் சர்ன்னு சரியும். ஒரு பொண்ண பாதுகாக்க தெரியாதவன் எப்படி அவ்ளோ அசூர் நிறுவனத்துக்கு சிஇஓ ஆனான்னு உலகமே பேசும்.. நான் பேச வைப்பேன்.” என லீமா மிரஞ்டிட, ரௌத்திரன் கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்து இறுக்கி,
“ஏய்.. என்னையே மிரட்டுறியா? இங்கேயே உன்ன கொன்னு போட்டுடுவேன்.” என்றான்.
“கொல்லு ரௌத்திரன். உனக்கு ஜெயிலுக்கு போக ஆசைனா என்னை கொல்லு” என லீமா மர்மமாக சிரித்தபடி கூற, ரௌத்திரன் அவள் கழுத்தைப் பிடித்த கரத்தை தளரத்தி,
“என்ன கோவப்படுத்தாத.. எதுக்கு இந்த நாடகமெல்லாம் நடத்திட்டு இருக்க” என ரௌத்திரன் கேட்க,
“நான் என்ன செய்தாலும் அது உனக்கு நாடகம் தானா, சரி விடு.. எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணு. நீ என் கிட்ட போட்ட அக்ரிமென்ட் கேன்சல் பண்ணிட்டு நாளைக்கே நம்ம கல்யாணம் நடக்கணும்.” என்றாள்.
“என்ன உளறுர கல்யாணமா. எங்கேஜ்மென்ட் மட்டும் தானே ப்ளான்ல இருக்கு எதுக்கு கல்யாணம்”
“இங்க பாரு ரௌத்திரன் இப்போ நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா.. மீடியவுக்கு நானே பேட்டி கொடுத்து அசூர் கார்ப்பரேட் பேர கெடுப்பேன்.” என்று லீமா கூறிய அடுத்த கணம் ரௌத்திரன் அவளை அறைந்தான். லீமா கன்னத்தை பிடித்தபடி அவனை வெறியோடு பார்த்தாள். ஆத்திரத்தில் மெத்தையை விட்டு இறங்கியவள், அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை இழுத்து அவன் இதழில் முத்தம் கொடுத்தாள்.