தேவிகாவின் கையில் கத்தியை பார்த்ததும் மற்ற அனைத்தையும் மறந்தவராக சேதுபதி பதற்றத்தோடு அவர் அருகில் சென்றார்..
"தேவி என்னம்மா பண்ணுற? நீ எதுக்காக கத்தியை கையில வச்சிருக்க..?"
"ஏன் உங்க பொண்ணுக்கு மட்டும் தான் மிரட்ட தெரியுமா எனக்குத் தெரியாதா? உங்க ஷேர்ஸை என் பொண்ணை தவிர யாருக்கும் கொடுக்கக்கூடாது மீறுனா இப்பவே ஏதாவது பண்ணிப்பேன்" என சொல்ல சேதுபதி அயர்ந்து போனார்.
ஒரு மனிதனை எவ்வளவுதான் பாடு படுத்துவார்கள்.. எல்லோர் மீதும் அன்பு வைத்தது தான் தவறோ என அவருக்கு வெறுத்துப் போய்விட்டது..
"தேவி ப்ளீஸ் கத்தியை கீழ போடு.. அவ தான் சின்ன பொண்ணு புரியாம பண்ணுறான்னா நீயும் ஏன் அப்படி பண்ணுற..?"
"அவளா சின்ன பொண்ணு.. எவ்வளவு விவரமா திட்டம் போட்டு எல்லாம் செய்றா அவளை இன்னும் நம்பிட்டு இருக்கீங்க.. என்ன ஆனாலும் சரி உங்க பங்கு என் பொண்ணைத் தவிர யாருக்கும் போகக்கூடாது.."
"அதை சொல்ல நீ யாருடி.. நீயும் உன் பொண்ணும் இவ்வளவு கௌரவம் பாக்குறீங்களே அப்புறம் ஏண்டி என் குடும்ப சொத்துக்கு இப்படி நாயா அடிச்சுக்குறீங்க.. விடுடா அவ கையை கிழிச்சுக்கட்டும் இல்ல கழுத்தையே கிழிச்சுக்கட்டும் அப்படியாவது போய் சேர்ந்தா நாம நிம்மதியா இருக்கலாம், கையில கத்தி வச்சுட்டு சும்மா நாடகம் ஆடிட்டு இருக்கா" என காமாட்சி வேண்டுமென்றே அலட்சியமாக பேசி தேவிகாவை வெறுப்பேற்றினார்.
"அம்மா..!!!" என சேதுபதி கர்ஜித்ததில் காமாட்சிக்கு உடல் தூக்கிவாரிப் போட பயத்தில் வெலவெலத்துப் போனார்.
"இவ்வளவு நாள் நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டு இருந்தேன் அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க" என்றவர் தேவிகா புறம் திரும்பி, "ப்ளீஸ் தேவி நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் தயவு செஞ்சு கத்தியை கீழே போடு" என கெஞ்சினார்.
"தேவிம்மா எனக்கு அப்பாவோட ஷேர்ஸ் கிடைக்கக் கூடாதுன்னு இவ்வளவு தூரம் இறங்கிட்டீங்களா? அந்த அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா ஆயிட்டேன்ல, சரி இனி என்னைப்பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் நான் போறேன்" என ஜீவிதா மீண்டும் தன் நாடகத்தை ஆரம்பிக்க இந்த முறை சேதுபதி அவள் பக்கம் திரும்பவே இல்லை, அவர் கெஞ்சலோடு தேவிகாவை தான் பார்த்திருந்தார்.
ஜீவிதாவுக்கு ஆத்திரம் தலைக்கேற எப்படியும் தேவிகாவை சேதுபதி நெருங்கி விடக்கூடாது என்ற முடிவோடு கத்தியை அழுத்தி பிடிக்க கையில் கீறி விட்டது. அதில் அவள் அலறியதில் சேதுபதி அவள் பக்கம் திரும்ப அவள் கையில் ரத்தத்தை பார்க்கவும் பதற்றத்துடன் அங்கே ஓடினார்..
அதற்குள் சங்கரி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்..
"சின்ன வயசுல என் புருஷனையும் பறிகொடுத்துட்டேன் எனக்குன்னு இருக்குறது என் பொண்ணு தான் அவளும் இல்லைன்னா இனி நானும் உயிரோட இருக்க மாட்டேன்" என கதறி அழ சேதுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"அண்ணி அழாதீங்க.. ஜீவி முதல்ல கத்தியை கொடு" என அவள் கையில் இருந்து கத்தியை வாங்கியவர் அவள் கையைப் பிடித்து ரத்தம் வரும் இடத்தில் தன் கர்ச்சிப்பை அழுத்தமாக கட்டிவிட்டு, "அம்மா ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வாங்க" எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இனியா, "அம்மா..!" என்று கத்தியதில் பதறித் திரும்பினார்.
இவ்வளவு நேரம் இங்கு நடந்தவற்றை எல்லாம் இனியா ஒருவித அலட்சியத்தோடு சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா இப்படி செய்வார் என அவள் எதிர்பார்க்கவே இல்லை..
தேவிகா மணிக்கட்டை அறுத்துக் கொண்டிருக்க ரத்தம் கொட்டியது அவரிடத்தில், "தேவி..!!" என்ற அலறலோடு சேதுபதி நெருங்கப் போக அவரை கைகாட்டி தடுத்தவர், "உங்க கூட இருபத்தியஞ்சு வருஷம் சேர்ந்து வாழ்ந்துருக்கேன் அந்த வாழ்க்கைக்கு நீங்க மதிப்பு கொடுக்குறது உண்மைன்னா இந்த ஷேர்ஸை என் பொண்ணுக்கு தான் கொடுக்கணும்.." என தன் கையை தூக்கிக் காட்டியவர், "நான் சும்மா வெறும் பேச்சு பேசறவ இல்ல உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்" என சொல்ல சேதுபதி அவரை நொந்து போய் பார்த்தார்.
"கொடுக்க முடியாதுன்னா என்னடி செய்வ.. இத மட்டும் இல்ல அவன் பேர்ல இருக்க எல்லாத்தையும் என் பேத்தி ஜீவிதா பேர்ல தான் எழுதி வைப்பான் என்ன செய்வ..?" காமாட்சி அப்போது கூட அடங்குவேனா என எகிற.,
"உங்க பையனை டைவர்ஸ் பண்ணுவேன்.. எப்படியும் அவர் எல்லாத்துலயும் பாதியை எனக்கு கொடுத்துதானே ஆகணும் அதை என் பொண்ணுக்கு கொடுப்பேன்" என தேவிகா அழுத்தமாய் சொல்ல சேதுபதி அவரை உச்சகட்ட அதிர்ச்சியோடு பார்த்தார்.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தேவிகா தள்ளாட்டத்தோடு சோபாவில் விழ, "தேவி..!" என்று கத்திக்கொண்டே அருகில் ஓடியவர் அவரை கைகளில் ஏந்தி கொண்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.
மருத்துவமனில் ஆபத்தில்லை என்று சொல்லிவிட்டாலும் தேவிகா குடும்பத்தினர் சேதுபதியைத்தான் குற்றவாளி போல் பார்த்தார்கள். அடித்துப் பிடித்து ஓடி வந்த குடும்பத்தினர் மருத்துவர்களை விசாரித்துவிட்டு இனியாவின் அருகில் வந்து அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். சேதுபதியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை அதையும் தாண்டி அவர்கள் பார்வையில் கொலைவெறி தாண்டவமாடியது..
எங்கோ இருக்கும் தேவிகா குடும்பத்தினரே விஷயம் கேள்விப்பட்டு உடனே வந்து சேர்ந்திருக்க ஜீவிதா, காமாட்சி, சங்கரி மூவரும் நான்கு மணி நேரம் கழித்து தான் ஆடி அமர வந்து சேர்ந்தார்கள். வந்ததும் சேதுபதியிடம் ஜீவிதா ஏதோ சொல்ல போக அவர் அவளை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சட்டென்று முகம் கன்றிவிட உள்ளுக்குள் கடுப்போடு அமைதியாகிவிட்டாள்..
சேதுபதிக்கு தேவிகாவை நினைத்து உள்ளுக்குள் வலித்தாலும் ஒரு பக்கம் கோபமாகவும் வந்தது.. சாதாரண பங்குகளுக்காக கையை கிழித்து கொள்ளும் அளவுக்கா போவது.. எப்போதிலிருந்து அவள் இப்படியானாள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்..
என்னதான் ஜீவிதா பேசியது கோபத்தை வர வைத்தாலும் அதிலும் நியாயம் இருக்கிறதே.. இப்போது வந்து ஒரு போட்டியில் ஜெயித்து விட்டதால் மட்டும் இனியாவிடம் பங்குகளை தூக்கி எப்படி கொடுக்க முடியும்.. ஜீவிதா கம்பெனிக்காக நிறைய உழைத்திருக்கிறாள் அதையும் இல்லை என்று சொல்ல முடியாது.. அதே நேரம் அவள் கேட்டதும் உடனே பங்குகளை கொடுக்கவும் முடியாது பிறகு கம்பெனியின் பெயர் கெட்டுவிடும் அதனால் தான் இன்னும் கொஞ்ச நாட்கள் இருவரையும் ஊன்றி கவனித்து விட்டு அதன் பிறகு யாருக்கு பொறுப்பைக் கொடுக்கலாம் என முடிவெடுக்க நினைத்தார் அதற்குள் இவ்வளவு கலவரம் நடந்து விட்டது..
முதலில் பங்குதாரர்களோ டீலர்களோ கூட இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் இப்போதைக்கு அவர்கள் பார்வைக்கு இனியாவின் மீது நன்மதிப்பு இருக்கிறது அதனால் முதலில் அவளுக்கு பயிற்சி கொடுத்து முக்கிய பதவி கொடுக்க சொல்கிறார்கள் ஆனால் பங்குகள் விஷயத்தில் அவர்கள் கறார் தான்.. ஏன் ஜீவிதா எப்படி அழுது கேட்டிருந்தாலும் கூட அவள் கேட்டதை செய்திருக்க மாட்டார்.. அவள் தற்கொலை நாடகத்தை கையில் எடுத்தது தான் அவர் சமாதானப்படுத்த ஒரே காரணம், கொஞ்சம் அதில் தடுமாறி விட்டார் என்று கூட சொல்லலாம்..
இப்போது முடிவெடுத்தேயாக வேண்டும் என்ற சூழ்நிலையில் கத்தி மேல் நடப்பது போல தான் அவருக்கு, யாரை தேர்ந்தெடுத்தாலும் இன்னொருவர் கட்டாயம் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதிலும் ஜீவிதாவை சொல்லவே வேண்டாம் வேண்டுமென்றே கூட அவளும் கையை கிழித்து விட்டு வந்து படுத்துக் கொள்வாள். இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இனி இந்த விஷயத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று கண்டித்து வைப்பது தான்..
தேவிகா கண்விழித்ததும் எல்லோரும் அவரை கடிந்து கொண்டார்கள் அதிலும் சரவணன் நடந்ததை தெரிந்து கொண்ட பிறகு, "இதெல்லாம் ஒரு விஷயமாம்மா இதுக்காக யாரும் இப்படி பண்ணுவாங்களா? உனக்கு கம்பெனி ஷேர்ஸ் வேணும்னா என்கிட்ட கேட்க வேண்டியது தானே? அந்த மாதிரி பத்து கம்பெனி நம்மகிட்ட இருக்கு அதுல உனக்கும் உரிமை இருக்கு.. நீ கேட்டிருந்தா ஒரு கம்பெனியையே கூட உன் பேர்ல எழுதி கொடுப்பேன் அதை விட்டுட்டு கேவலம் இந்த சின்ன விஷயத்துக்காக நீ இந்த அளவுக்கு போறது நல்லாவா இருக்கு.. உன்னை நம்பி உனக்குன்னு ஒரு பொண்ணு இருக்கா அந்த ஞாபகம் இருக்கா..?" என திட்டி தீர்த்தார்.
"இது ஷேர்ஸுக்காக மட்டும் இல்லண்ணா இத்தனை வருஷம் அவர் கூட வாழ்ந்திருக்கேன் இப்பவாவது அவருக்கு நாங்க எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சுக்க தான்.."
"அத யோசிச்சுருந்தா இவ்வளவு தூரம் இதுக்காக ஆர்க்யூ பண்ண விட்டுருப்பாரா..?" என வனிதா கடுப்போடு கேட்டார்.
கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த சேதுபதியின் முகம் இறுகி இருந்தது..
தேவிகாவை பார்த்து, "இப்போ எப்படி இருக்க..?" எனக் கேட்க.,
"இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா" என வனிதா நொடித்துக் கொண்டார்.
சரவணன் வனிதாவை கண்டித்து அழைத்துச் சென்றுவிட பெரியவர்களும் தேவிகாவைப் பத்திரமாக இருக்கும் படி சொல்லிவிட்டு வெளியில் காத்திருப்பதாக சொல்லி சென்றார்கள்..
அவர்கள் போனதும், "ஏன் இப்படி பண்ணுன? இதுதான் இத்தனை வருஷத்துல நீ என்னை புரிஞ்சுகிட்டதா? இந்த சின்ன விஷயத்துக்கு யாராவது இப்படி பண்ணுவாங்களா..?" என ஆதங்கமாக கேட்டார்.
"காரணம் உங்களுக்கே தெரியும்.. நான் அங்க சண்டை போட்டது எனக்காக மட்டும் இல்லை எனக்கும் என் பொண்ணுக்கும் உள்ள உரிமைக்காக.." என்றதும் சேதுபதி அப்படி ஒரு கோணத்தில் யோசிக்காதவர் இப்போது திடுக்கிட்டுப் போனார் அதன் பிறகு வீட்டிற்கு போகும் வரை அவர் ஏதோ யோசனையிலேயே இருந்தார்.
ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்த தேவிகா முகத்தில் துளியும் இளக்கமில்லை இன்னும் இறுகிப்போய் தான் இருந்தார். தேவிகாவை பார்த்துக் கொள்ளவென்று இனியா அவர்கள் அறையில் வந்து இருந்து கொண்டாள் அதனால் தேவிகா சேதுபதிக்கு இடையில் பெரிதாக பேச்சு வார்த்தையும் இல்லை..
இரண்டு நாட்கள் கடந்த நிலையில் தேவிகா அறைக்குள்ளேயே இருப்பது நல்லதல்ல என அவரை இனியா ஹாலிற்கு அழைத்து வர, அந்த நேரம் சேதுபதியின் அருகே வந்தமர்ந்த ஜீவிதா அவர்களை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்..
"அப்பா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? வீட்ல நிறைய பிரச்சனை நடந்து போச்சு திரும்பவும் எந்த பிரச்சனையும் வேண்டாம்னா இங்கேயே இப்பவே முடிவெடுக்குறது தான் நல்லது" என சாதாரணமாக சொன்னாலும் அதில் நானும் தேவிகாவைப் போல கையைக் கிழித்துக்கொள்வேன் என்ற மறைபொருள் இருந்தது.
சேதுபதிக்கு கோபம் தாளவில்லை அதனால், "இனி நீங்க யார் என்ன செஞ்சுக்கிட்டாலும் என் ஷேர்ஸை இப்போதைக்கு நான் யார் பேருக்கும் மாத்தி கொடுக்குற மாதிரி இல்ல" என உறுதியாக சொல்லிவிட்டார்.
தேவிகா அதை காதில் வாங்கிக் கொண்டே வந்தவர், "இது அவளுக்கான பதிலா இல்லை எனக்கான பதிலா..?" என கண்கள் சிவக்கக் கேட்டார்.
அவரை அங்கு எதிர்பார்க்காத சேதுபதி முதலில் அதிர்ந்து பின், "யாருக்கா இருந்தாலும் என்னோட பதில் இதுதான்" என சொன்னார்.
ஏனெனில் தேவிகா செய்ததில் அவருக்கு கோபம் இருந்தது தன்னைப் பற்றி யோசிக்கவில்லையே என எண்ணி எண்ணி குமைந்து கொண்டிருந்தார்..
"அப்படின்னா நானும் அன்னைக்கு சொன்ன என் முடிவை கையில் எடுப்பேன்" என்றதும் சேதுபதி புரியாமல் பார்த்தார்.
அவர் பார்வையைக் கண்டு, "என் பொண்ணுக்கு கிடைக்க வேண்டியது அவளோட உரிமை அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்" என்றவர், "உங்களை டைவர்ஸ் பண்ண வந்தாலும் கவலைப்பட மாட்டேன்" என சொன்னதும் சேதுபதி அவரை அதிர்ச்சியோடு பார்த்தார்.
ஆனால் அடுத்த நிமிடமே அவர் முகம் கோபத்தில் சிவந்துவிட, "அதுதான் உன் விருப்பம்னா நீ என்ன செய்ய நினைக்கிறியோ செஞ்சுக்கோ" என சொல்லிவிட தேவிகாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது.
அவரை வெறித்து பார்த்துவிட்டு விருட்டென்று திரும்பி உள்ளே போக தன் தந்தையை பார்த்த இனியாவுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இருவருமே கோபத்தில் இருக்கிறார்கள் இருவரில் யார் எந்த முடிவு எடுத்தாலும் பாதிக்கப்படுவது இருவரது மனநிலையும் தான்..
ஜீவிதாவுக்கு சேதுபதி இதைத்தான் சொல்வார் எனத் தெரிந்தாலும் வேண்டுமென்றே பிரச்சனையை பெரிதுபடுத்த தான் இப்போது வந்து அப்படி கேட்டாள். அதற்கு தகுந்தார் போல் தேவிகா கோபத்துடன் உள்ளே செல்ல நிச்சயம் ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்ற மனதிருப்தியுடன் அவள் எழுந்து சென்று விட்டாள்..
"அம்மா கோபமா போறாங்க அவங்ககிட்ட போய் பேசுங்க.. ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்து கொஞ்சம் ஸ்ட்ரஸ்ஸா தான் இருக்காங்க அதனால தான் அப்படி நடந்துக்குறாங்க.. நீங்க பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பாங்க" என இனியா சொல்ல சேதுபதி இறுக்கத்துடன் இருந்தார்.
"நான் போய் பேசினா இன்னும் பிரச்சனைப் பெருசா தான் ஆகும் இதை வச்சி அவ கார்னர் பண்ணுவா இதே பழக்கமாகும்.. கொஞ்சம் நாள் அமைதியா இருந்தா அவளே புரிஞ்சுப்பா" என சொன்னதும் இனியாவுக்கே கடுப்பானது.
"இவ்வளவு நாள் அம்மா உங்க கூட இருந்துருக்காங்க அவங்க அப்படி பண்ணுறவங்களான்னு உங்களுக்கு தெரியாதா.. இந்த முடிவை நீங்க ஜீவிதா முதல் தடவை தற்கொலை நாடகத்தை நடத்தும் போது பண்ணிருந்தா இங்க யாரும் இவ்வளவு பாதிக்கப்பட்டுருக்க மாட்டாங்க ஆனா அப்போ அவ உங்களுக்கு பெருசா தெரிஞ்சா அதனால அவ சொல்றதெல்லாம் செஞ்சீங்க.. இப்போ அம்மா இதை செய்யும்போது உங்களுக்கு நாடகமா தெரியுது அம்மா சொல்றது போல உண்மையிலேயே உங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் யாருன்னே புரியல" என இனியா வெறுப்போடு பேசிவிட்டு செல்ல சேதுபதி கண்களை மூடி அமர்ந்து விட்டார் அவருக்கு சுத்தமாக எதையும் எதிர்கொள்ள முடியவில்லை.
இனியாவிடம் அவருக்கு எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.. ஜீவிதா இப்படி மிரட்டும் போதெல்லாம் அவர் சுலபமாக முடிவெடுக்கும்படி சூழ்நிலைகள் இருந்தது அதனால் அவளுக்கு சாதகமாக முடிவெடுத்தார் ஆனால் இப்போது அப்படி இல்லையே.. இருவரில் யாரோ ஒருவர் எனும் போது யாருக்கும் சாதகமாக அவரால் முடிவெடுக்க முடியாது அது மற்றவரை கண்டிப்பாக பாதிக்கும்..
ஜீவிதாவின் வயதிற்கு அவளது பிடிவாதத்தைக் குறைக்கவே அப்படி செய்தார் ஆனால் தேவிகாவும் இப்படி செய்யும்போது தான் அவருக்குக் கோபம் வந்தது. இதையெல்லாம் விட தன் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லையே என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது. இந்த பங்குகளை நம்பியா அவள் இருக்கிறாள் இல்லை இனியாவுக்கு உரிய உரிமையைக் கொடுக்காமல் போய்விடுவேன் என்றா நினைக்கிறாள். அவள் மீது உயிரையே வைத்திருக்கிறேன் என்பது தேவிகாவுக்கு தெரியாதா அவளுக்காக ஏதேனும் செய்திருப்பேன் என்ற நம்பிக்கை கூட அவளிடம் இல்லையா..
யாருமே தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் கிளம்பி வெளியே சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது தேவிகா அவரது அறையில் இல்லை இனியா அறையில் இருப்பதாக வேலைக்காரி சொன்னாள். கோபமாக இருப்பாள் நாளை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று அசதியில் படுத்து விட்டார்..
தான் அலுவலகம் கிளம்பும் நேரம் கூட வெளியில் வராதவரை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்ட சேதுபதி தான் மட்டும் சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பி சென்று விட்டார்..
அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை சேதுபதிக்கு.. என்னவோ நேற்று தேவிகாவை அப்படி பேசியதே அவருக்கு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து வந்திருக்கிறாள் தேவையில்லாமல் நாமும் பேசி அவள் கோபத்தை கிளறிவிட்டோமோ என்று கவலையாய் இருந்தது..
இன்று அவளிடம் உட்கார்ந்து பொறுமையாய் பேச வேண்டும் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும், சொன்னால் அவள் நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று நினைத்ததும் தான் அவரால் நிம்மதியாய் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது..
சேதுபதி வீட்டிற்கு வந்தபோது என்னவோ ஒன்று வீட்டில் விசித்திரமாக இருப்பது போல தோன்றியது..
உள்ளுக்குள் நெருட, "தேவி..! தேவி..!" என பதற்றத்தோடு தான் அழைத்தார்.
தயக்கத்தோடு வந்த வேலைக்காரி தேவிகா வீட்டில் இல்லை என்று சொல்லவும் அவர் புருவம் நெறித்தார்..
"எங்க போனா ஏதாவது சொன்னாளா..?" எனக் கேட்டதும் அவள் கையை பிசைந்தபடி நிற்க என்னன்னு சொல்லி தொலை என கத்தினார்.
"அம்மா வீட்ல இல்லைங்க ஐயா அவங்க பெட்டி படிக்கையோடு எதுவும் சொல்லாம கிளம்பிட்டாங்க" என்றதும் சேதுபதிக்கு திக்கென்று இருந்தது. கோபத்தில் ஏதேனும் தவறாக முடிவெடுத்து விட்டாளோ என்று ஐயமாக இருந்தது.
என்ன செய்வதென்று புரியாமல் சில நிமிடங்கள் இருந்தவர் பிறகு உடனே தேவிகாவுக்கும் இனியாவுக்கும் மாறி மாறி அழைத்தார் இருவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்து தன் அசிஸ்டன்ட்டுக்கு அழைக்க இருந்த சமயம் சசிதரனிடம் இருந்து போன் வந்தது. தேவிகாவும் இனியாவும் அவர்கள் வீட்டில் இருப்பதாகச் சொல்ல சேதுபதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டவர் உடனே அவர்களைப் பார்க்கக் கிளம்பிப் போனார்..