விழியோரம் ஒரு வெஞ்சினம்
அத்தியாயம் - 7
'தி ட்ரீம் சிட்டி' ப்ராஜெக்ட் சைட் கொடுத்த நெருக்கமும், ஆர்யன் திட்டமிட்டு நடத்திய காதல் அசைவுகளும் தாராவை முற்றிலும் ஒரு புதிய உலகத்திற்குள் கொண்டு சென்றிருந்தன. கார்ப்பரேட் மீட்டிங்குகளில் சிங்கப்பெண்ணாக கர்ஜிக்கும் அசுரக்குமாரி தாரா, இப்போது ஆர்யன் என்கிற ஒற்றை மனிதனின் கனிவான பார்வையில் மொத்தமாக உருகிப் போயிருந்தாள்.
அடுத்த சில நாட்களிலேயே, இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு, அதாவது தன் பழிவாங்கும் திட்டத்தின் இறுதிப் புள்ளிக்குக் கொண்டு செல்ல ஆர்யன் ஒரு மாஸ்டர் பிளான் போட்டான். கல்யாண மேடையில் சந்திரசேகரைச் சிதைக்க வேண்டும் என்றால், முதலில் அவரது சம்மதத்தைப் பெற வேண்டும்.
அன்று மாலை,
'எஸ்.சி ஆர்க்கிடெக்ட்ஸ்' தலைமை அலுவலகத்தின் சந்திரசேகருடைய பிரம்மாண்டமான கேபின்.
தன் நாற்காலியில் அமர்ந்து சில முக்கியமான லேண்ட் அக்ரிமெண்ட் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர். அவருக்கு அருகே எப்போதும் போல அமைதியின் பிம்பமாக, சாந்தமான முகத்துடன் அமர்ந்திருந்தார் ராகவ்.
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ஆர்யன். அவனது கைகளில் எந்த ஃபைலோ, ஐபேடோ இல்லை. அவனது முகம் வழக்கத்திற்கு மாறான ஒரு பதற்றத்தையும், அதே சமயம் ஒரு தீர்க்கமான முடிவையும் பிரதிபலிப்பது போல அவன் நடித்தான்.
"சார்... உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசலாமா?" ஆர்யனின் குரல் சற்றுத் தாழ்ந்து, மரியாதையுடன் ஒலித்தது.
சந்திரசேகர் தன் கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு ஆர்யனை ஏறிட்டார். 'தி ராயல் கார்டன்ஸ்' ப்ராஜெக்ட்டை மீட்டெடுத்து, 'ட்ரீம் சிட்டி'யை இவ்வளவு சீக்கிரம் டிராக்கிற்கு கொண்டு வந்த ஆர்யன் மீது அவருக்கு ஒரு தனிப்பட்ட மதிப்பும், நம்பிக்கையும் ஏற்கனவே உருவாகியிருந்தது.
"வாப்பா ஆர்யன், உட்காரு. என்ன விஷயம்? சைட்-ல ஏதாவது ப்ராப்ளமா? இல்ல மெட்டீரியல்ஸ் ஏதும் வரலையா? 'தி ட்ரீம் சிட்டி' பட்ஜெட்ல ஏதும் சேஞ்சஸ் பண்ணணுமா?" என்று கனிவாகக் கேட்டார் சந்திரசேகர்.
ஆர்யன் அமரவில்லை. கைகளைக் கட்டியபடி, "இல்ல சார்... பிசினஸ்ல எந்த ப்ராப்ளமும் இல்ல. எல்லாமே பெர்ஃபெக்ட்டா போயிட்டு இருக்கு. நான் பேச வந்தது... நம்ம தாரா மேடத்தைப் பத்தி," என்றான்.
'தாரா' என்ற பெயரைத் தன் மகளின் வாயிலிருந்து கேட்பதை விட ஆர்யனின் வாயிலிருந்து கேட்டதும் சந்திரசேகரின் புருவங்கள் லேசாக உயர்ந்தன.
"தாரா பத்தியா? அவ ஏதாவது சைட்-ல உன்னைக் கோபப்படுத்தினாளா? அவ கொஞ்சம் திமிராத்தான் பேசுவா, லண்டன்ல படிச்ச ஆட்டிட்யூட் அவகிட்ட கொஞ்சம் அதிகம். நீ அதை மனசுல வச்சுக்காத..." என்று சந்திரசேகர் முடிப்பதற்குள் ஆர்யன் குறுக்கிட்டான்.
"இல்ல சார்... அவங்களோட அந்தத் திமிருக்கு பின்னாடி ஒரு அழகான, அன்பான இதயம் இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். சார்... நான் தாராவை விரும்புறேன். அவங்களை என் உயிருக்கு மேல பாத்துப்பேன். உங்களோட சம்மதம் இருந்தா... நான் தாராவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்," என்று ஆர்யன் ஒற்றை வரியில் குண்டைத் தூக்கிப் போட்டான்.
கேபினுக்குள் ஒரு நிமிடம் மயான அமைதி நிலவியது. சந்திரசேகரின் முகம் சட்டென்று மாறியது. கார்ப்பரேட் ஜாம்பவானான அவருக்கு, தன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ப்ராஜெக்ட் மேனேஜர், தன் ஒரே மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்பதை ஜீரணிக்க முடியவில்லை. அவராக இருந்தால் இந்நேரம் ஆர்யனைப் பிடித்து வெளியே போ என்று கத்தியிருப்பார். அவனது தகுதி என்ன, தன் அந்தஸ்து என்ன என்று கணக்கு போட்டிருக்கும் அவது பிசினஸ் மூளை.
ஆனால், அங்கேதான் ஆட்டத்தின் அடுத்த திருப்பம் அரங்கேறியது.
பக்கத்தில் அமர்ந்திருந்த ராகவ், ஆர்யன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடையாமல், மாறாக அவனது முகத்தில் ஒரு திருப்தியான, கனிவான புன்னகை அரும்பியது. அவர் மெதுவாக எழுந்து சந்திரசேகரின் தோளில் கை வைத்தார்.
"சந்தர்... ஆர்யன் பேசுறதுல என்ன தப்பு இருக்கு? நான் சில நாட்களா சைட்-ல கவனிச்சுட்டுதான் இருக்கேன். நம்ம தாரா இப்போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவ முகத்துல ஒரு புதுக் களை தெரியுது. அந்த மாதவ் பிரச்சனை பண்ணப்பவும் ஆர்யன் தான் முன்னாடி நின்னு அவளைக் காப்பாத்துனான். தாராவுக்கு ஏத்த ஜோடி இந்த ஆர்யன்தான் சந்தர்," என்றார் ராகவ் மிகவும் நிதானமாக.
சந்திரசேகர் ராகவைப் பார்த்து, "என்ன ராகவ் பேசுற நீ? நம்ம அந்தஸ்து என்ன, இவன் பின்னணி என்னன்னு கூட நமக்குத் தெரியாது. தாரா லண்டன்ல படிச்சவ. இவன் ஒரு சாதாரண எம்ப்ளாயி..." என்று இழுத்தார்.
"அந்தஸ்தைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சவங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா சந்தர்? பணத்தை நாம எப்போ வேணா சம்பாதிக்கலாம். ஆனா, நம்ம தாராவை கண் கலங்காம பாத்துக்குற ஒரு நல்ல குணம் இந்த ஆர்யன் கிட்ட இருக்கு. இவன் லண்டன்ல படிச்சப்போ இவனோட டிசைன்ஸை பார்த்துட்டு நான்தான் இவனை நம்ம கம்பெனிக்கு ரெகமண்ட் பண்ணினேன். இவனோட உழைப்பும், நேர்மையும் எனக்கு நல்லா தெரியும். ஆர்யன் ரொம்ப நல்ல பையன், தாராவை கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்குவான். எனக்கு இவன் மேல முழு நம்பிக்கையிருக்கு சந்தர். நீ யோசிக்காம சம்மதம் சொல்லு," என்று ராகவ் மிக அழுத்தமாக, சந்திரசேகரின் மனதை மாற்றும் விதமாகப் பேசினார்.
ஆர்யன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 'தேங்க்ஸ் ராகவ் அங்கிள்... என் பழிவாங்கும் ஆட்டத்துக்கு நீங்களே முன்னாடி நின்னு ரோடு போட்டுத் தர்றீங்க!' என்று தன் வஞ்சக எண்ணத்தில் பூரித்துப் போனான். ராகவ் தன்னை எவ்வளவு தூரம் நம்புகிறார் என்பதைப் பார்த்து அவனது திட்டம் இன்னும் எளிதானதாக அவனுக்குத் தோன்றியது.
ராகவ் சொன்ன வார்த்தைகளுக்கு சந்திரசேகரால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், தன் வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகளில் ராகவின் ஆலோசனையைத்தான் அவர் வேதவாக்காக நம்புவார். மேலும், தன் மகள் தாராவின் சந்தோஷமும் இதில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
சந்திரசேகர் மெதுவாக ஆர்யனைப் பார்த்தார். "ஆர்யன்... ராகவ் உன்னை இவ்வளவு தூரம் சப்போர்ட் பண்ணிப் பேசுறான்னா, அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். எனக்கு தாராவோட சந்தோஷம்தான் முக்கியம். அவ சம்மதிச்சா... எனக்கு இந்த கல்யாணத்துல எந்த ஆட்சேபனையும் இல்ல," என்றார் ஒரு தந்தையாக இறங்கி வந்து.
"ரொம்ப தேங்க்ஸ் சார்! உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்," என்று ஆர்யன் சந்திரசேகரின் கைகளைப் பற்றிக் கூறினான். அவனது கண்கள் சந்திரசேகரைப் பார்க்கும்போது நன்றியால் கலங்குவது போல நடித்தாலும், அவனது உள்மனம், 'உன் நம்பிக்கையை உடைச்சு, உன் மகளை நடுரோட்டுல நிப்பாட்டும்போது தான் என் அப்பாவோட ஆத்மா சாந்தியடையும் சந்திரசேகர்!' என்று வெறியோடு கத்தியது.
மறுநாள் காலை...
இந்த விஷயம் தாராவின் காதுகளுக்குச் சென்றது. ஆர்யன் தன் தந்தையிடம் நேராகச் சென்று பெண் கேட்ட விபரம் தெரிந்து அவளது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. தன் கேபினுக்குள் ஆர்யன் நுழைந்ததும், அவள் ஓடிவந்து அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
"ஆர்யன்! எனக்கு இன்னும் நம்பிக்கையே வரல. டாடி கிட்ட நீங்களே டைரக்டா பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல. ஐ அம் சோ ஹாப்பி ஆர்யன்!" தாராவின் கண்களில் உண்மையான காதல் நீர் பனித்தது. அவளது அத்தனை திமிரும் உடைந்து, ஒரு குழந்தையைப் போல அவனது நெஞ்சில் அடைக்கலமாகியிருந்தாள்.
ஆர்யன் அவளது முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்து, "உனக்காக நான் எதையும் செய்வேன் தாரா. உன்னை என் வாழ்க்கையில அடையறதுதான் இப்போ என் ஒரே எய்ம்," என்றான். அவளது முதுகில் இருந்த அவனது விரல்கள் லேசாக இறுகின. 'ஆமா தாரா... உன்னை என் வாழ்க்கையில வச்சு வச்சு செய்யுறதுதான் என் லட்சியம்!' என்று மனதுக்குள் வஞ்சகப் புன்னகை பூத்தான்.
அதற்கடுத்த நாட்களிலிருந்து 'எஸ்.சி ஆர்க்கிடெக்ட்ஸ்' குடும்பத்தில் திருமணப் பணிகள் அசுர வேகத்தில் தொடங்கின. கோயம்புத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் திருமணம் என்பதால் ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகமுமே அதைத்தான் பேசிக் கொண்டிருந்தது.
டிசைனர் ஆடைகள் தேர்வு, பிரம்மாண்டமான திருமண மண்டபம் முன்பதிவு, முக்கிய விஐபிக்களுக்கான அழைப்பிதழ் தயாரிப்பு என சந்திரசேகரின் பங்களாவே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
திருமணம் இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், திருமணப் பத்திரிக்கை பல்க் ஆர்டர் வாங்குவதற்காக ஆர்யனும் மணியும் ஒரு பெரிய டிசைனர் வெடிங் கார்ட் ஷாப்பிற்கு வந்திருந்தனர். அங்கே விதவிதமான தங்க முலாம் பூசப்பட்ட பத்திரிக்கைகளையும் பிரம்மாண்டமான வேலைப்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.
மணி அவனருகில் வந்து, ஒரு பிரம்மாண்டமான பத்திரிக்கையை எடுத்துப் பார்த்துவிட்டு, "என்னண்ணே... நிஜமாவே கல்யாணம் வரைக்கும் வந்துட்ட? எனக்கு இன்னும் கனவு மாதிரியே இருக்குண்ணே. அந்த தாரா மேடம் உன்னை உருகி உருகி லவ் பண்றாங்க. நேத்து கூட சைட்-ல உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும், பதறிப்போய் அவங்க கார்லயே உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனாங்க. அவங்களோட அந்த உண்மையான காதலைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பாவமா இருக்குண்ணே. நீ நிஜமாவே அவங்கள லவ் பண்றியா இல்ல ஏமாத்தப் போறியா? உங்க அப்பாவுக்கு நடந்த துரோகத்துக்கு, இந்த அப்பாவிப் பொண்ணை ஏன் பழிவாங்கணும்? கல்யாண மேடையில அவங்க மானத்தை வாங்கப்போறேன்னு என்கிட்ட ஒரு தடவை சொல்லிருந்தியே... அது தப்பு இல்லையாண்ணே? அவங்ககிட்ட எந்தத் தப்பும் இல்லையே!" என்று மணி முதன்முறையாக மிகவும் வருத்தத்தோடு கேட்டான்.
ஆர்யனின் முகம் சட்டென்று குளிர்ந்த பாறையைப் போலக் கடுமையானது. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, மணியின் சட்டையைப் பிடித்து இறுகப் பற்றினான். அவனது கண்கள் சிவந்திருந்தன.
"மணி! இன்னொரு தடவை அவளுக்காக சப்போர்ட் பேசி என் முன்னாடி நிக்காத. அவ அப்பாவியா? அவ சந்திரசேகரோட ரத்தம். என் அப்பா அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, நடுரோட்டுல விஷம் குடிச்சு செத்தப்போ இந்த சந்திரசேகரோட பங்களால லைட் எறிஞ்சுட்டுதான் இருந்தது, அவங்க செலிப்ரேஷன்ல தான் இருந்தாங்க. என் குடும்பமே சிதைஞ்சு போகக் காரணமானவங்களோட வாரிசு அவ. அவளோட இந்த உண்மையான காதல் தான் எனக்குக் கிடைச்ச சூப்பர் வெப்பன். அவ எந்த அளவுக்கு என்னை நம்புறாளோ, அந்த அளவுக்கு அவளோட வீழ்ச்சி கொடூரமா இருக்கும். நல்லா யோசிச்சு பார்த்து ஒரு முடிவு பண்ணி இருக்கேன். இந்த கல்யாணம் நடக்கும்... ஆனா, அது அவங்க சாம்ராஜ்யத்தோட அழிவுக்கான ஆரம்பமா தான் அது இருக்கும். இதோட உன் பேச்சை நிறுத்திக்கோ!" என்று ஆர்யன் தன் பற்களைக் கடித்தபடி எச்சரித்தான்.
மணி பயந்துபோய் தலையாட்டினான். அவனுக்கு தாராவை நினைத்து நெஞ்சம் பதறியது. ஆர்யன் விரித்திருக்கும் இந்த வஞ்சக வலையில் இருந்து அந்த அப்பாவிக் பெண்ணைக் காப்பாற்ற யாராலும் முடியாது என்பதை அவன் உணர்ந்தான்.
நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. கோயம்புத்தூரின் விஐபிக்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
அன்று இரவு, தாரா தன் அறையில் அமர்ந்து தன் திருமணப் பட்டுப்புடவையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது போனில் ஆர்யனின் புகைப்படம் ஒளிர்கிறது. அதைப்பார்த்து அவள் தனக்குள்ளேயே வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள். "ஆர்யன்... நீங்க என் லைஃப்ல வந்தத நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன் . உங்க தனிமையை மாத்தி, உங்களுக்கு உலகத்தோட எல்லா சந்தோஷத்தையும் நான் தருவேன். நாம சேர்ந்து ஒரு புதிய உலகத்தை உருவாக்குவோம்," என்று காதலோடு முணுமுணுத்தாள் தாரா. அவளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அதே நேரம், தன் வீட்டில் தனியாக அமர்ந்து மதுக் கோப்பையைச் சுழற்றியபடி, தாராவின் புகைப்படத்தை ஒரு மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி எரித்துக் கொண்டிருந்தான் ஆர்யன். எரியும் நெருப்பின் வெளிச்சத்தில் அவனது முகம் ஒரு கொடூர அசுரனைப் போலக் காட்சியளித்தது.

"இன்னும் ரெண்டு நாள் தாரா... இன்னும் ரெண்டே நாள்! கல்யாண மேடையில நீ என் கழுத்துல தாலி கட்டக் காத்துட்டு இருக்கும்போது, உங்க அப்பாவோட அத்தனை பிசினஸ் சாம்ராஜ்யத்தையும் தரைமட்டமாக்கி, உன்னை அதே மேடையில வச்சு நடுரோட்டுல நிப்பாட்டல... என் பேரு ஆர்யன் இல்ல!" என்று வெறியோடு கத்தினான்.
சதுரங்கப் பலகையின் இறுதி ஆட்டம் நெருங்கிவிட்டது. ஆர்யன் நினைத்தபடியே தாரா அவனது பழிவாங்கும் வலையில் முழுமையாக, அப்பாவியாகச் சிக்கிவிட்டாள். கல்யாண மேடையில் அவளுக்குக் காத்திருக்கும் அந்த மாபெரும் ஆபத்து என்ன? ஆர்யனின் வஞ்சகம் வெல்லுமா, அல்லது தாராவின் உண்மையான காதல் அவனுக்குத் தெரிய வரும்போது என்ன நடக்கும்?

Last edited: