விலகளில் உயிரானவன் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விலகளில் உயிரானவன்

New updates

LATEST

santhi nagaraj

Active member
Joined
Jun 17, 2024
Messages
287
Reaction score
201
Points
43
#ஜோதிதமிழ்_நாவல்ஸ்_குறுநாவல்_போட்டி

#விலகளில்_உயிரானான்

#விமர்சனம்

இதயமித்ரன் இசையாழினி இருவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்க்கையில் இணைகிறார்கள்.

இந்நிலையில் வீட்டுக்குள் நுழைகிறார் மித்ரன் அத்தை நீலாம்பரி.
எப்படிப்பட்ட அன்பான உறவாக இருந்தாலும் தப்பு செய்யும் போது அதை அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை திருத்தி முயற்சி பண்ணனும் அதில் ஒரு அண்ணனாக தவறுகிறார் வரதராஜன்.
தங்கையின் குணம் தெரிந்தும் தங்கை பாசத்தில் அவரது நடிப்பில் மனைவி,மகன் எனத் தன் உறவுகளை விலக்கி வருத்தி தனித்து நிற்கிறார்.

கணவனின் செயல்களில் கலங்கி இருந்தாலும் அவரின் குணத்தையும் புரிந்து வைத்து அவரின் வழியிலேயே சென்று அவரை மீட்கும் ராதா சூப்பர் 👌👌

இசையாழினிக்கு ஒருதலை காதல் இருந்தாலும் இதயமித்திரன் இசையாழினி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வேலையில் இருவருக்குள்ளும் ஒரு பிரிவு வருகிறது ஒரு பிரிவுதான் உண்மையான உறவை புரிந்து கொள்ள வைக்கும் என்பதற்கு ஏற்ப அந்த பிரிவே அவர்களுக்கான புரிதலை தருகிறது😍😍

அடுத்து தங்கள் காதலில் உறுதியாக இருந்து பிடிவாதமாய் போராடி இணையும் ஊர்மிளா இமையன் ஜோடி.ஊர்மிளாவின் நிமிர்வும் அதிரடி பதில்களும் அருமை 👌👌

தன்னோட காதலுக்காக ஊரு விட்டு ஊரு வந்து தன் ஜோடி சேரும் முகுந்தன் காதலின் ஆழம் சூப்பர் 👌👌

தன் அதிரடி சரவெடி பேச்சினால் கதையில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் வைத்திருந்த சதா கேரக்டர் செம்ம 👏👏

சண்டைக் காட்சிகளும் கோயில் திருவிழா காட்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது அப்படியே கண்ணு முன்னாடி நிக்கிறது சூப்பர் 👌👌

விலகிப் போனால் விரும்பி வரும் என்பது போல ஒரு விலகல் இருவரையும் உயிராக மாற்றி இருக்கிறது 😍😍

ரொம்ப அருமையான குடும்பக்கதை சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
Top Bottom