ArchanaNithyanantham
Member
- Joined
- Aug 23, 2026
- Messages
- 78
- Reaction score
- 47
- Points
- 18
வந்து சேர வேண்டிய இடம் வந்ததும் வண்டியை நிறுத்தியவன், தன்னைத்தவிர அனைவரும் உறங்கியிருப்பதைக் கண்டான்.
“அம்மா எழுந்திறீங்க, பல்லவி…” என்று குரல் கொடுத்தான்.
கண் விழித்துப் பார்த்த மங்கையர்க்கரசி,
“எங்கடா வந்திருக்கோம்?” என்றாள்.
“இதுதான்மா பல்லவி வீடு. அவங்க வீட்ல பேச வேண்டாமா?” என்றவன், திரும்பி பல்லவியை நோக்க, அவள் கன்னங்கள் சிகப்பேற தலைகவிழ்ந்துகொண்டாள்.
அனைவரும் உள்ளே செல்ல, பல்லவி குடும்பத்தார் அனைவரையும் வரவேற்றனர்.
“விமல் குட்டி” என்று அவனை வாரியணைத்து முத்தமிட்ட பல்லவியின் தாயார், “இவன்தான் விஷ்ணுவா?” என்றபடி, முதன்முறை அவனைக் கண்டாள்.
“ரெண்டு பிள்ளைகளும் ராஜாவாட்டம் இருக்கு. சுத்திப்போடணும்” என்றவள், இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டாள்.
“நான் உங்ககிட்ட சொன்னமாதிரி, பல்லவியை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படறேன். பல்லவிகிட்ட பேசிட்டேன். இப்போ அவ சம்மதமும் சொல்லிட்டா” என்றான் ஹரி, அவளது அண்ணனிடம்.
பல்லவியின் தாய், அவளை உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பல்லவி. அவர் பேசினதை அண்ணன் என்கிட்ட சொன்னான். நீயா ஒரு முடிவெடுக்கற வரை யாரும் எதுவும் பேசவேண்டாம்னு அமைதியா இருந்துட்டோம். இதுக்காகத் தான் நான் எல்லா தெய்வத்தையும் வேண்டினேன்” என்றவள்,
“ரொம்ப சந்தோஷம் அண்ணி” என்றாள், மங்கையர்க்கரசியிடம்.
“உங்க எல்லாரோட ஆசீர்வாதத்தோட, பல்லவியை இப்பவே கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கறேன்” என்றான், ஹரி.
“இப்பவேவா?” என்றாள், மங்கையர்க்கரசி.
“ஆமாம்மா. நாம சென்னை வீட்டுக்கு மாறிப்போகும்போது பல்லவி நம்ம வீட்டு மருமகளா வந்து விளக்கேத்தணும்னு சொன்னீங்கல்ல?”
“ஆமா சொன்னேன்…” என்றவள், பல்லவியின் தாயைக் காண.
“சந்தோஷமா நடக்கட்டும் அண்ணி” என்றாள், அவள்.
தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பரிசுப்பொருளை எடுத்து பல்லவியிடம் நீட்டினான், ஹரி. அவள் திருப்பிக்கொடுத்த பரிசு என்று உணர்ந்தவள், அதனை பெற்றுக்கொண்டு, பிரித்துப்பார்த்தாள். உள்ளே மஞ்சள் நிற பட்டுநூலில் கோர்க்கப்பட்ட திருமாங்கல்யம் இருந்தது. அவள் ஆச்சரியமும், உவகையுமாய் அவனைக் காண, அவன் எப்பொழுதும் போல் முகம் மலர்ந்து சிரித்தான்.
சுவாமி படங்களின் முன்னே திருமாங்கல்யத்தை வைத்து, மனதார வேண்டிக்கொண்டாள், பல்லவி.
“பல்லவி, ஒரு நிமிஷம் வா” என்றாள், அவளது அண்ணி. அனைவரும் என்னவென்று அவளை கேள்வியாக நோக்க,
“புதுப்பொண்ணை அலங்கரிச்சு கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
“பல்லவி, நீ வந்தா கொடுக்கலாம்னு இந்த புடவையை உனக்காக வாங்கிவச்சேன்” என்றொரு புடவையை நீட்டினாள், அவளது அண்ணி. பல்லவி அவளை ஆச்சரியமாக நோக்க,
“மனசுல எதுவும் வச்சுக்காத…” என்றாள்.
“அதெல்லாம் இல்லை அண்ணி. புடவை ரொம்ப அழகா இருக்கு” என்றவள், உடனே அதை கட்டிக்கொண்டாள்.
அலங்கரித்து முடித்து வெளியே வந்த பல்லவியைக் கண்ட ஹரிக்கு, இமைக்கவும் மறந்தது. இத்தனை காலமாக அவளை சுடிதாரில் மட்டுமே கண்டவனுக்கு, தழையதழைய புடவையில் நிற்பவளைக் கண்டதும், அவனது மனம் அவள் முன்னே மண்டியிட்டு, அவளிடம் சரணாகதி அடைந்தது. அனைவரும் சூழ்ந்திருக்க, பிள்ளைகள் இரண்டும் சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரம் செய்ய, பல்லவியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான், ஹரி. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்களின் விழிகள், ஈரம் கொண்டன.
கல்யாண விருந்துக்குப்பின், அனைவரும் கிளம்பி, புதுப்பிக்கப்பட்ட ஹரியின் இல்லத்திற்கு சென்றனர். ஹரியும் பல்லவியும் தம்பதியராய் வீட்டினுள் நுழைவதைக் கண்டு, மங்கையர்க்கரசியின் உள்ளம் நிறைந்தது. பொருட்கள் அனைத்தும் வந்திறங்கியிருக்க, சுவாமி படங்களை மட்டும் எடுத்து வைத்த பல்லவி, மனதார கும்பிட்டுவிட்டு விளக்கேற்றினாள். காதலானவள் மனைவியாகிப்போன மாயாஜால நிமிடங்களை நம்ப முடியாமல், ஹரியின் உள்ளம் களிப்புற்றது. முன்பொரு நாள், தன் கனவில் கண்டது போல், அவள் அருகே நெருங்கி நின்று, தோள் மீது கை போட்டு, சுயபடங்கள் எடுத்துக்கொண்டான்.
ஓராண்டிற்கு பிறகு…
அமைதியான அந்த இரவு வேளையில், மருத்துவமனையின் முன் ஆட்டோவொன்று கிரீச்சிட்டு நின்றது. நிறைமாத கர்ப்பிணியாக மயக்கம், தெளிந்தும், தெளியாமலும் பல்லவி வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். மருத்துவமனைக்குள் ஓடிச்சென்ற ஆட்டோக்காரன், இரண்டு பணியாளர்களை அழைத்து வந்தான். ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு வந்தவர்கள், காலம் தாழ்த்தாமல் அவளை படுக்கவைத்து, உள்ளே விரைந்தனர். மற்றொரு மருத்துவ பணியாளர், “உங்க பேரு என்ன மேடம்? இங்க இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?” என்றார். தனது பையில் துரித்துக்கொண்டிருந்த கோப்பினை அவள் சுட்டிக்காட்ட, அதனை எடுத்துக்கொண்டு, அவளது பெயரினை குறித்துக்கொண்டான். ஸ்ட்ரெச்சரை தள்ளும் பணியாளரிடம்,
“தண்ணி… தாகமா இருக்கு… தண்ணி” என்று அவள் திக்கித்திணறி கூற,
“இதோ எடுத்துட்டு வரேன்” என்று அவன் விலக,
“இதுல இருக்கு சார்” என்ற ஹரி, அவளது கைப்பையிலிருந்து குடிநீர் பாட்டிலை எடுத்து, அவளை தன் நெஞ்சோடு அணைத்து பிடித்து, அவள் பருகிட, சிறிது சிறிதாக நீர் வழங்கினான். குடித்து முடித்தவள், அவனைக் கண்டு புன்னகைக்க, அவனும் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“உன் கனவு நிஜமாயிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல என் கனவு நினைவாயிடும்…”
“என்னது?” என்று நெற்றிசுருங்க அவள் வினவ,
“பொண்ணு பெத்து கொடுத்துடுடி” என்றான் கெஞ்சலாக.
பிரசவ வார்டுக்கு அவள் அழைத்துச் செல்லப்பட, வெளியே காத்திருந்த ஹரியின் முன் சுரேகா வந்து நின்றாள்.
“எப்படி இருக்கீங்க?”
“ரொம்ப டென்ஷனா இருக்கேன் சிஸ்டர். கொடுத்த டெலிவரி தேதிக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே?!”
“கவலைப்படாதீங்க. அவ நார்மலா இருக்கா. ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு கையெழுத்து மட்டும் போட்டுடுங்க…”
“சிஸ்டர்?!” - பதறினான், ஹரி.
“வெறும் ஃபார்மாலிட்டி தான். கவலைப்படாதீங்க” என்று அவள் கூற, இவன் கையெழுத்திட்டான்.
“எங்க யாரையும் காணோம்? தனியாவா வந்திருக்கீங்க?”
“அவ வீட்லயும், என் வீட்லயும் எல்லாரும் ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு கிளம்பினாங்க சிஸ்டர். நான் தான் கோயம்பேடுல பஸ் ஏத்திவிட்டு வந்தேன். அதுக்குள்ள இவ வலி வந்துடுச்சு ஹாஸ்பிடல் போறேன்னு ஃபோன் பண்ணவும் நான் இங்க ஓடி வந்துட்டேன். எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். திரும்பி வந்துட்டு இருக்காங்க…”
“சரி… நீங்க இங்கயே இருங்க” என்றவள், உள்ளே சென்றாள்.
அரை மணி நேர காத்திருப்புக்கு பின், சுரேகா மீண்டும் வெளிப்பட்டாள். இம்முறை அழகு குழந்தை ஒன்றை துவாலையில் சுற்றியபடி, அவன் எதிரே வந்து நின்றாள். குழந்தையைக் கண்டதும், அவன் பெரிதாய், மிக அழகாய் சிரித்தான்.
“வாங்கிக்கோங்க” என்று சுரேகா கூற, மெல்ல அந்த அழகு பொதியை கையிலேந்தியவன், அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“என்ன குழந்தை சிஸ்டர்?” என்று அவன் வினவ,
“நீங்களே பார்த்துக்கோங்க” என்றாள், சுரேகா.
அவன் துணியை மெல்ல விளக்கி, உச்சி முதல் உள்ளங்கால் வரை, தனது குழந்தையை வருடினான். நெற்றியில் முத்தமிட்டான்.
“சந்தோஷமா ஹரி?” என்றாள், சுரேகா.
“நான் கேட்ட மாதிரியே பொண்ணு பெத்து கொடுத்துட்டா. ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சிஸ்டர். நான் பல்லவியை பார்க்கலாமா?”
“அவளை ரூமுக்கு மாத்திடறேன். அப்புறம் வந்து பாருங்க” என்றவள், குழந்தையை பெற்றுக்கொண்டு சென்றாள்.
மயக்கம் தெளிந்து, பல்லவி கண்விழித்துப் பார்க்க, அவளை சுற்றி அனைவரும் இருந்தனர். இரு பிள்ளைகள், ஹரி, மங்கையர்க்கரசி, அண்ணன், அண்ணி, அண்ணனின் பிள்ளைகள், அம்மா, சக்கர நாற்காலியில் அப்பா கூட வந்திருந்தார். அனைவரும் அவளிடம் நலம் விசாரிக்க, அவள் மனமகிழ்வோடு பதில் கூறினாள். தங்களது மகளை அள்ளி, அவளது கையில் ஹரி கொடுக்க, இமைக்காது பார்த்திருந்தாள்.
அறைக் கதவைத் திறந்துகொண்டு, சுரேகாவும், சுகன்யாவும் வந்தனர்.
“உன் ஃப்ரெண்ட பார்த்தல்ல பல்லவி, காலங்கார்த்தாலேயே ஓடி வந்துட்டா” என்ற சுரேகா,
“பிள்ளைய எதுக்குடி விட்டுட்டு அவசரவசரமா வந்த?” என்றாள், சுகன்யாவிடம்.
“அப்புறம் மாமியார் எதுக்கு தான் இருக்காங்க?” என்றவள், தோழியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
“பாப்பா ரொம்ப அழகா இருக்கா, பல்லவி. இங்க பாருடி, உன் பொண்ணை என் புள்ளைக்கு தான் கட்டிக்கொடுக்கணும். இப்பவே சொல்லிட்டேன்”
“சரிடி” என்று பல்லவி கூற, அவளது பதிலைக் கூட கவனிக்காமல், குழந்தையை கொஞ்சுவதில் மும்மரமாகிப் போனாள்.
அனைவரும் குழந்தையை சூழ்ந்துகொண்டு, கொஞ்சி மகிழ, பல்லவி ஏங்கியது போல, அவளுடைய குழந்தையை வரவேற்க, உலகமே வருகை தந்திருந்தது… அவளுடைய உலகம்!!
வாழ்க வளமுடன்!
- அர்ச்சனா நித்தியானந்தம்