ArchanaNithyanantham
Member
- Joined
- Aug 23, 2026
- Messages
- 78
- Reaction score
- 41
- Points
- 18
இரவு அவனை தயக்கத்துடன் அழைத்தவள், உடனே அழைப்பை துண்டித்தாள். அவன் மீண்டும் அழைத்தான்.
“ஹாய் பல்லவி! எதுக்கு ஃபோனை கட் பண்ண?” என்ற கேள்வியோடு உரையாடலை தொடங்கினான்.
“அது, பயமா இருந்தது…”
“என்ன பயம்?”
“அதில்ல, நீ வீட்ல இருக்க. உன்கூட யாரு இருப்பாங்கன்னு தெரியாது. முதல் தடவை வேற ஃபோன் பண்ணேனா, அதான் பயந்துட்டேன்..”
“அட ஆமா!! மேடம் முதல் தடவை ஃபோன் பண்ணியிருக்கீங்க!! உலக அதிசயம் தான்…”
“உலக அதிசயமெல்லாம் இல்லை… எப்பவும் நான் பண்ணனும்னு நினைக்கும்போது நீ பண்ணிடுவ…”
“இன்னைக்கு நான் பண்ண விட்டுட்டேன்… ஒண்ணுமில்ல, என் ஃப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. இப்பத்தான் கிளம்பினாங்க...”
“அப்படியா?! சரி நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசறேன்…”
“கிளம்பிட்டாங்க, நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு தான் ரூமுக்கு வந்தேன்”
“ம்ம்… ரொம்ப தேங்க்ஸ், அவினாஷ்”
“தினமும் தான் ஃபோன் பண்றேன், இன்னைக்கு எதுக்கு தேங்க்ஸ்?”
“அதுக்கில்ல… செயினுக்கு… ரொம்ப அழகா இருக்கு…”
“உனக்கு பிடிச்சிருக்கா?”
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு? எதுக்கு இவ்வளவு காஸ்லியா?”
“ப்ச்… பரிசு கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்கணும்… விலையெல்லாம் யோசிக்க கூடாது…”
“அது சரி… அப்புறம் உன்னோட எக்ஸ்-ரே ரிசல்ட் எப்போ வரும்?”
“இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும்னு சொல்லியிருக்காங்க…”
“சரி, நான் வச்சுடறேன்…”
“அதுக்குள்ளவா?”
“நான் வீட்டுக்கு வந்துட்டேன். நாளைக்கு பேசறேன்…”
தினமும் சில நிமிடங்கள் மட்டுமே உரையாடல். அவ்வப்போது அவன் மருத்துவமனைக்கு விஜயம் செய்யும் நேரத்தில், சில நிமிட சந்திப்புகள். அதை தாண்டி பேசிக்கொள்ளவோ, பார்த்துக்கொள்ளவோ முடியாததாலோ என்னவோ, அவர்களுக்கு ஒரு வித ஈர்ப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு உண்டானது.
ஓர் நாள் காலை, அவள் பரபரப்பாக மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கும் வேளையில், அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
‘என்ன ஏழு மணிக்கு ஃபோன் பண்றான்?! இவன் வாழ்க்கையில ஒன்பது மணிக்கு முன்னாடி இந்த உலகத்தை பார்த்ததில்லையே…’ என்று எண்ணிக்கொண்டவள், அவனது அழைப்பினை ஏற்றாள்.
“குட் மார்னிங் அவினாஷ் சார்! நியூஸ்ல புயல் எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. பத்திரமா இருங்க சார்”
“ஹே என்ன சொல்ற பல்லவி?”
“பின்ன காலங்கார்த்தால நீ எழுந்தா இந்த உலகம் தாங்குமா? நம்ம டைம் பத்து தான?”
“கிண்டல் பண்ணாத பல்லவி, ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் ஃபோன் பண்ணேன். நீ ஹாஸ்பிடல் போயிட்டா உன்னை அவ்வளவு ஈஸியா கைல புடிக்கமுடியாது. அதான்!!”
“என்னது?”
“இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு தயாரா இரு. ஹாஸ்பிடல் வெளியே இருக்கற பஸ் ஸ்டாப்பில வெயிட் பானு. நான் வரேன்…”
“ஐயோ விளையாடறியா? என்னால பெர்மிஷன் போட்டு வர்றதெல்லாம் முடியாது…”
“இல்லை வந்துதான் ஆகணும். ரொம்ப நாள் கழிச்சு கார் எடுக்கப்போறேன். முதல்ல உன்னை தான் வந்து பார்க்க போறேன். நாம ரெண்டு பேரும் குட்டியா ஒரு ட்ரைவ் போயிட்டு வரலாம். ப்ளீஸ் பல்லவி, முடியாதுன்னு சொல்லிடாத…”
“காரா? அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்…”
“வாய்ப்பே இல்லை. இவ்வளவு நாள் நான் வீட்ல இருந்ததே ரொம்ப பெரிய விஷயம். இன்னைக்கு நான் வரேன். நாம ரெண்டு பேரும் போறோம். உன்கிட்ட வேற ஒரு விஷயம் சொல்லணும்…” - சற்றே தயங்கியவன் - “சொல்லணும்… நீ வர…” என்றான், குழைந்தபடி.
அவளால் மறுக்க முடியவில்லை. ‘எதற்கு?’ என்று கேட்டிட துணிவில்லை. ஏதோ தன்னைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறப்பதாக பிரம்மை கொண்டாள். என்னவாக இருக்கக்கூடும் என்பதனை ஒருவாரு யூகித்தாள். இருப்பினும், மேற்கொண்டு கேள்விகள் கேட்காமல், தான் வருவதாக ஒப்புக்கொண்டாள்.
மருத்துவமனைக்கு சென்றதும், மூத்த செவிலியரிடம் மாலை முன்னமே செல்ல அனுமதி பெற்றுக்கொண்டாள். மாலை நெருங்கிட, முகத்தினை கழுவி, தலை சீவி, பின்னலிட்டு, தனது உடையை சரி செய்து, 4.55க்கே பேருந்து நிறுத்துமிடத்திற்கு சென்றாள். அவன் கூறியது போல, ஐந்து மணிக்கு அவன் வந்து சேர்ந்தான். கப்பல் போன்று மிதந்து வந்த காரினை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி வந்து, அவள் எதிரே நின்றான்.
“ஹாய் பல்லவி, போலாமா?” என்றான்.
“இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்…”
“ப்ச்… எதுவும் சொல்லாத, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… நாம போலாம்” என்றவன், காரின் முன் இருக்கை கதவினை திறந்துவிட, இத்தனை பெரிய சொகுசு காரில் ஏறிட அவள் தயங்கி நின்றாள்.
“வா பல்லவி” என்று அவன் மீண்டும் அழைக்க, அவள் காரினுள் ஏறி அமர்ந்தாள். வண்டி புறப்பட்டது.
காற்றினில் மிதப்பது போல், வண்டி சாலையில் தவழ்ந்து சென்றது. அவள் சிறுபிள்ளையென காரின் உள்ளே வேடிக்கை பார்த்தாள். மெல்ல தொட்டுப் பார்த்தாள். அவன் பாடல்களை ஒலிக்கவிட, சிரித்துக்கொண்டாள். வெளியே சாலையை வேடிக்கை பார்த்தாள். ஓரக்கண்ணால் அவ்வப்போது அவனையும் பார்த்துக்கொண்டாள். அவன் ஏதேனும் பேசுவானா என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வண்டியை செலுத்துவதில் ஐக்கியமாகிப் போயிருந்தான். இறுதியாய் ஒரு ஐஸ்க்ரீம் கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
“பல்லவி, உனக்கு பிடிச்ச ஐஸ்க்ரீமை ஆர்டர் பண்ணு” என்று மெனு கார்டினை நீட்டினான். அதனை வாங்கிப் பார்த்தவளுக்கு அதிலிருந்த பெயர்கள் அனைத்தும் விசித்திரமாக இருந்தது. இதற்கு முன் கேள்விப்பட்டதாக ஒன்று கூட தோன்றவில்லை. அந்த கடையின் அமைப்பும், அலங்காரமும், வந்திருக்கும் ஆட்களும், அவர்களின் ஆடை அலங்காரமும் கண்டு ஒருவித கூச்சத்தோடு கூனிக்குறுகி அமர்ந்திருந்தவளுக்கு, பட்டியலைக் கண்டதும் மேலும் முகம் வாடியது.
“என்னாச்சு பல்லவி, கார்ல ஜாலியா வந்த, இங்க வந்ததும் முகமே மாறிடுச்சு?”
“ஒண்ணுமில்ல அவினாஷ். நீயே ஆர்டர் பண்ணேன்…” என்றபடி அந்த அட்டையை அவனிடம் நீட்டினாள்.
“ஏன் பல்லவி?”
“அவினாஷ். நான் மிடில் க்ளாஸ். இந்த மாதிரி கடைக்கெல்லாம் வந்ததில்லை. இங்க வர்றவங்க போடுற துணியெல்லாம் நான் டிவி’ல தான் பார்த்திருக்கேன். உன் கார் ஷெட் சைஸ் தான் என் வீடு. இந்த ஆடம்பரமெல்லாம் ரொம்ப பயமா இருக்கு”
அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க,
“சரி வா போகலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான். அருகிலிருந்த ஒரு சிறிய ஐஸ்க்ரீம் கடைக்குள் அழைத்துச் சென்று அவள் விரும்பி கேட்ட மேங்கோ டிலைட் ஐஸ்க்ரீமை வாங்கித் தந்தான். அவனது பணிவு அவளை கவர தவறவில்லை.
“உனக்கு இது ரொம்ப பிடிக்குமா பல்லவி?”
“ஆமா அவினாஷ். எப்பவுமே இதான் சாப்பிடுவேன்…”
“ம்ம்… அப்புறம் இந்த செயின் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு!!”
“கவனிச்சியா? பார்க்கலையோன்னு நினைச்சேன்…”
“பஸ் ஸ்டாப்பிலயே கவனிச்சேன்…”
“ஓ! இப்பத்தான் சொல்ற? கார்ல ரொம்ப அமைதியா வந்த?”
“ரொம்ப நாள் கழிச்சு கார் ஒட்டினேன்ல. அதான் மெய்மறந்து என்ஜாய் பண்ணி ஓட்டினேன். எனக்கு பிடிச்ச கார்”
“கார் ரொம்ப அழகா இருக்கு… ஆமா, நீ எங்க வேலை பார்க்குற?”
“வேலையா? அப்பா அஞ்சாறு பிசினெஸ் வச்சிருக்காங்க. நான் கூட சேர்ந்து பார்த்துக்கறேன்…”
“சூப்பர்…”
“சரி வா போகலாம்”
“எங்க அவினாஷ்? ரொம்ப நேரமாச்சு நான் வீட்டுக்கு போகணும். தேடுவாங்க” என்றாள், தயங்கியபடி.
“நீ நேரத்துக்கு வீட்டுக்கு போய்டுவ. அதுக்கு நான் பொறுப்பு. இப்போ போலாம்” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
கடற்கரை சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்தான்.
“அவினாஷ் இங்க யாருமே இல்லையே” என்று கவலையோடு அவனை வினவியபடி, உடன் நடந்தாள்.
“ஆமா, இங்க கூட்டம் ரொம்ப குறைவு. அதனாலயே எனக்கு இங்க ரொம்ப பிடிக்கும்” என்றவன் மணலில் அமர, அவள் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
சிறிது மௌனத்திற்கு பிறகு, அவனே பேசத் தொடங்கினான். அவன் கூற எண்ணியதை இப்பொழுது கூறப்போகிறானோ என்று அவளுக்கு தோன்றியது. உள்ளுக்குள் பதட்டமானாள்.
“பல்லவி, ஐ திங்க் ஐ லைக் யு சோ மச்…” என்றான். அவள் அவனை அதிர்ந்து நோக்க, அவனோ கடலை ஏறிட்டபடி அமர்ந்திருந்தான்.
அவள் தன்னை காண்பதை உணர்ந்துகொண்டவன், அவள் முகம் கண்டான். அவள் நாணி தலை குனிந்தாள்.
“ஏன் பல்லவி?” என்றான்.
“புரியல அவினாஷ்”
“உன்கூட பேசாம இருக்க முடியல. உன்னை பார்த்துட்டு வந்தா திரும்ப எப்ப பார்ப்பேனோன்னு தோணிட்டே இருக்கு. ராத்திரி சரியா தூங்க முடியல. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன் பல்லவி. ஏன்?”
சிரித்துக்கொண்டாள். அவளது மனம் துள்ளிக்குதித்தது. மனதினை அடக்கிட வழி தெரியாமல் தவித்தாள். அவளது மனதின் ஆனந்த ஆரவாரத்தை அவளது முகம் போட்டுடைத்தது.
“ஹே பல்லவி, உனக்கு என்னை பிடிக்கும் தான?”
“பிடிக்கும்… ஆனா…”
“பிடிக்கும்னா பிடிக்கும் தான? அதுல என்ன ஆனா ஆவன்னா. பிடிக்கும். அவ்வளவு தான்…”
புன்னகைத்தவள், “பிடிக்கும்” என்றாள்.
நிலா மெல்ல மேலெழும்ப,
“இந்த நிலாவை பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதான் உனக்கும் காட்டலாம்னு கூட்டிட்டு வந்தேன். ஆனா, இப்போ நான் நிலாவை ரசிக்கற மூட்ல இல்லை…”
“??”
“பக்கத்துல நீ இருக்கும்போது, நிலா கண்ணுக்கு தெரியுமா? தெரிஞ்சாலும் அதை பார்க்கத்தான் தோணுமா?!”
“போதும் அவினாஷ்” என்று குரல் குழைய கூறியவள், எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
“இரு பல்லவி” என்றவன், வேகமாய் எட்டு வைத்து, ஆவலுடன் நடக்கத் தொடங்கினான்.
ஏதேதோ கதைகள் பேசியபடி அவன் காரினை செலுத்த, அவள் அதனை காதில் வாங்கியும் வாங்காமலும், ஒருவித மயக்கத்தில் இருந்தாள். வீடு சென்று சேர்ந்ததும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். காலை எழுந்ததும் குறுஞ்செய்தி அனுப்பினாள். பணிக்கு மத்தியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு கதை பேசினாள். குறுஞ்செய்திகள் அனுப்பினாள். அவ்வப்போது சந்தித்தும் கொண்டனர். அவளது காதலும், காதலால் நிரம்பிய நாட்களும், நாட்களின் ஒவ்வொரு நிமிடமும் கனவு போல் இருந்தது. வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு அவன் ஆறுதலாகிப் போனான். அவனிடம் பேசினால் போதும் என்று எண்ணிக்கொள்வாள். அவனது குரலை கேட்டால் போதுமென்று அடிக்கடி ஏங்கிடுவாள். காதலின் வீரியம் அவளை படாத பாடு படுத்தியது. இதற்கு திருமணம் ஒன்றே அருமருந்தாகும் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, தன்னை திருமண கோலத்தில் எண்ணிப் பார்த்தபடி சிரித்துக்கொண்டாள்.
“அவினாஷ் எனக்கு பயமா இருக்கு”
அன்று மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, ஓர் நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, காலையிலேயே அவினாஷோடு வெளியே சென்றாள்.
“என்ன பயம் பல்லவி?”
“யாராவது வீட்ல சொல்லிடுவாங்களோன்னு…”
“இதுக்கெல்லாம் பயப்படலாமா?”
“அது சரி, எங்க வீட்ல தோலை உரிச்சிடுவாங்க. அதுவும் என் அண்ணியை பார்த்தா எனக்கு ரொம்ப பயம்…”
“ப்ச்… என் பர்த்டே கொண்டாட வந்திருக்கோம். சந்தோஷமா இல்லாம நீ இப்படி புலம்பினா என்ன அர்த்தம்?”
“சாரி அவினாஷ், கொஞ்ச டென்ஷனா இருக்கு அதான்…”
“டென்ஷனை விடு… இன்னைக்கு என்கூட இருக்கப்போற எல்லா நேரமும் நீ ஹாப்பியா இருக்கணும். ஓகே?”
“ஓகே”
வண்டி ஒரு ரிசார்ட்டில் சென்று நின்றது.
“ரிசார்ட் எதுக்கு அவினாஷ்?”
“எந்த தொந்தரவும் இருக்காது. பஃப்பே சாப்பாடு, கேம்ஸ் அரீனா, டான்ஸ் ஃப்ளோர், கரோக்கே… நேரம் போறதே தெரியாது. நீ வந்து பாரு உனக்கே பிடிச்சு போயிடும்…”
உள்ளுக்குள் அவளுக்கு ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. மனதிற்கு நெருக்கமானவனின் பிறந்த நாள் என்பதால், அவள் மறுத்து பேசாமல் இருந்தாள்.
அவன் கூறியது போல ஆட்டம் பாட்டம் என்று பகல் பொழுது சென்றது. முன் மாலைப் பொழுதில் கடற்கரையில், அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்த சிலர் விளையாட, அவனும் பல்லவியை அழைத்து சென்று தண்ணீரில் விளையாட தொடங்கினான். அவள் தயங்க, வலுக்கட்டாயமாக அவளை தண்ணீருக்குள் இழுத்துச்சென்றான். தாவி வரும் அலைகளில் துள்ளிக்குதித்து விளையாடினான். விளையாண்டு முடித்து வெளிய இருவரும் வர, உச்சி முதல் உள்ளங்கால் வரை இருவரும் நனைந்திருந்தனர்.