- Joined
- Jan 14, 2026
- Messages
- 18
- Reaction score
- 19
- Points
- 3
வாழ்வை மாற்றிய திருநாள்
நிஷா ராஜன்
அந்த ஆசிரமமே கோலாகலமாக ஒரு திருவிழாவிற்கு தயாராவது போல் உருமாறி இருந்தது.
சில மணி நேரங்களுக்கு முன்பு,
தமிழர்களுக்கான திருநாள் என்று ஊர் எங்கும் திருவிழா கோலம் போல் தயாராகி இருந்ததை பார்த்த குழந்தைகள் "அம்மா! எதற்காக இப்படி வீடெங்கும் அலங்காரம் செய்கிறார்கள்?" என்று ஒன்றும் தெரியாத சிறு குழந்தைகள் அந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பில் இருந்த யசோதை அம்மாளை பார்த்து கேட்டார்கள்.
அதற்கு அவரும் "இன்று தமிழர்களுக்கான திருநாள் 'தைப் பொங்கல்' ".
"அதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் தை மாதத்தில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பெருமை செய்யும் விதமாக கொண்டாடுவார்கள்".
"ஓ அப்படியா! விவசாயம் என்றால் என்ன அம்மா? , எதற்கு அவர்களுக்கு பெருமை செய்ய வேண்டும்?".
"தினமும் நீங்கள் சாப்பிடுகிறீர்களா?".
"ஆம் அம்மா!".
"நீங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா?".
"ஓ அதுவா! தெரியுமே, நமக்காக சில நல்ல மனசு பெரியவர்கள் அவங்க பிறந்த நாள், திருமண நாள், இல்லை ஏதாவது அவங்க வீட்டில் விசேஷம் என்றால் அப்போது சாப்பிட கொண்டு வருவார்கள்".
"சில பெரிய மனிதர்கள் நம் ஆசிரமத்திற்கு செய்யும் உதவிகளில் இருந்து நமக்கு தேவையான உணவை நீங்கள் மற்றும் அம்மா எல்லாம் சேர்ந்து செய்து தருவீர்கள்" என்று தனக்கு தெரிந்ததை ஒரு குழந்தை அழகாக சிரித்துக் கொண்டு சொன்னதை கேட்டு கணத்த மனத்துடன் சிரித்த யசோதை அம்மாள்.
"என் தங்கம்" என்று அந்த குழந்தையை தூக்கி மடி மீது வைத்துக் கொண்டு சொன்னார்.
"நாம் ஒவ்வொரு வேலை சாப்பிட சில நேரங்களில் எவ்வளவு கஷ்டப் படுகிறோம். அதை விளைவிக்க விவசாயிகள் அதை விட மிகவும் கஷ்ட படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?".
"விவசாயம் செய்வதால் தான் நமக்கு கொடுக்கக்கூடிய அந்த பெரிய மனிதர்களும் அவர்களிடம் இருந்து பெற்று தான் தருகிறார்கள்" என்று சுருக்கமாக சொல்லி முடித்தார் யசோதை.
"ஓ அப்படியா அப்போ அவங்க எல்லோரையும் விடவும் பெரிய மனது உடையவர்கள் தானே" என்று அந்த குழந்தை சொன்னதும்.
"அடியே அழகு பெண்ணே!" என்று கண்ணத்தில் முத்தமிட்டு "உன் தட்டிற்கு வரும் ஒவ்வொரு அரிசி மணியும் அவர்கள் கஷ்டப்பட்டு விளைவித்தால் தான் நாம் வயிறார சாப்பிட முடியும்" என்று மேலும் சொல்ல ஆரம்பித்தார்.
"பசித்தால் தான் உணவு உண்ண வேண்டும். உங்களுக்கான உணவை மட்டும் தான் தேவையான அளவு நீங்கள் வாங்குவீர்கள் ஆமாம் தானே!".
"ஆம் அம்மா!".
"அப்படி சேகரித்து வந்த அரிசி மணிகளையும் காய்கறி உணவுகளையும் நீ வீண் செய்தால், அந்த உணவு ஆசையாக உன் தட்டை தேடி வந்தது எவ்வளவு கஷ்ட படும் தெரியுமா?, 'என்னை சாப்பிடாமல் விட்டு விட்டாள் இந்த அழகு குழந்தை. அப்போது என்னை இந்த அழகிக்கு பிடிக்கவில்லை' என்று குப்பை தொட்டிக்கு அழுது கொண்டே சென்று விடுமாம்".
"அப்படி அழுது கொண்டு சென்றாள் அதை உருவாக்கிய விவசாயிகளும் எவ்வளவு கஷ்ட படுவார்கள் தெரியுமா?".
"புரிகிறது அம்மா!, இனி என் தட்டில் ஒரு பருக்கை கூட வீணாகாது" என்று கதையை கேட்டு கொண்டிருந்த ஒவ்வொரு குழந்தையும் சொன்னது.
"அப்படி பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாடும் திருநாள் தான் இந்த தை மாத திருநாள்" என்று அந்த குழந்தைகளுக்கு புரியும் விதமாக சொன்னார்.
"அப்போது நம் ஆசிரமத்தில் இன்று பொங்கல் வைக்க போகிறோமா?" என்று ஆசையாக கேட்டார்கள் அந்த குழந்தைகள்.
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பாள். "அவர்கள் நினைப்பது போல பொங்கல் வைக்கும் அளவிற்கு இன்று அந்த ஆசிரமத்தில் வசதி இல்லை" என்று.
யாசோதை அம்மாள் அவளின் மனதை திடப்படுத்தி கொண்டு நம்மால் முடிந்தவரை கொண்டாடலாம் என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.
அதுவரை உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்த அவர்களின் அம்மாவின் குரல் உடைந்து வருவதை பார்த்த குழந்தைகள் "அம்மா எங்களுக்கு நீங்கள் செய்து தரும் ஒவ்வொரு நாள் உணவும் திருநாள் போல் தான் ருசித்து உண்கிறோம். அந்த பொங்கல் அதை விட என்ன ருசியாக இருந்து விடுமா? அம்மா" என்று அவரின் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு பழைய படி குழந்தைகள் விளையாட சென்று விட்டார்கள்.
ஆனால் அதை பார்த்த யசோதை அம்மாவுக்கு தான் "கடவுளே உன் கருணையால் யாராவது ஒருவர் உதவி இன்று கிடைத்து விடாதா?" என்று அவரின் மனம் ஏங்கியது.
அதே சமயம்,
அந்த அனாதை ஆசிரமத்தின் வாசலில் அவர்கள் கணவனும் மனைவியும் உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்ற ஒரு வித பரிதவிப்பு.
மனதில் பல ஏக்கங்களுடன் வந்து நின்றிருந்தார்கள்.
"ஏங்க நம்ப நிபந்தனையை ஏற்றுக் கொள்வார்களா?" என்று அவள் கேட்டு கொண்டு இருந்தாள்.
"உங்களை மேடம் உள்ளே வர சொன்னாங்க" என்ற பின்னால் இருந்து வந்தது அந்த வாட்ச்மேன் மாரியின் குரல் அதை கேட்டு சற்று திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
"என்ன மா! என்ன ஆச்சு எல்லாம் முதல்லயே பேசி வச்சது தான். இப்போ ஏன் இப்படி தயங்கிட்டு இருக்க".
"நம்மோட நிபந்தனையை கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்ற அந்த கணவனின் குரலில் அவள் சற்று ஆமோதித்த அவள்.
"ஏங்க நான் சரியான அம்மா வா இருப்பேனா?". "பத்திரமா குழந்தையை பார்த்துபேன்னு நினைக்கிறீங்களா?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.
"பயப்படாதே கண்ணம்மா! நீ ஒரு நல்ல அம்மா வா இருப்ப என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று அவளின் பதற்றம் அறிந்து ஆசிரமத்தின் உள் அழைத்து சென்றான் அவன்.
"ஏங்க இன்னைக்கு விழா நாள் நம்மிடம் இன்று குழந்தையை உடனே தருவார்களா?".
"அவளிடம் பல கேள்விகள். கண்டிப்பாக தருவார்கள் டா".
"நீ கவலை படாதே நம்முடைய குழந்தையுடன் தான் நாளை நமது பொங்கல் சரியா"என்று அவனின் வார்த்தைகள் அவளுக்கு நிம்மதி அளித்தது.
அந்த வார்த்தையில் அவள் மனம் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்ததை நினைத்து பார்த்தது.
"பெயருக்கு பொங்கல் வைக்கிறாள் என்ற பெயரில் இவளுக்கு எதற்கு இந்த வேலை".
" இத்தனை வருடங்கள் குழந்தை இல்லாமல் நம் குழந்தையை அழைத்து இவள் பொங்கல் வைக்கலை என்று யார் அழுதா?" என்ற அவளிடம் அவளின் ஓரகத்தியின் வார்த்தைகளில் நிலைகுலைந்து போனாள்.
பதினைந்து வருட கனவு எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று கோவில் குளம் என்று அனைத்து கைங்கரியங்களும் செய்தும் ஒரு பலனும் இல்லை.
தினம் அவர்களின் ஏக்கம் பல மடங்காகி கொண்டே போனது.
"என்ன கை நிறைய சம்பாதித்தும் அதை ஆள்வதற்கு ஒரு பிள்ளை இல்லை" என்ற ஏக்கம்.
என்ன சொந்த பந்தங்களின் குழந்தை நம்முடைய பிள்ளைகள் என்று நினைத்தாலும் அது எவ்வளவு பெரிய தவறு என்று அன்று அவர்களுக்கு புரிந்திருந்தது.
அதை கஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்ட அவர்கள் நமக்கென்று ஒரு பிள்ளை.
"நாம் பெற்றால் தான் பிள்ளையா?" என்று அடுத்து அவர்கள் வந்த இடம் அந்த அழகான குழந்தைகள் வசிக்கும் இடம்.
ஒவ்வொரு குழந்தைகளை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஆனால் ஒரு சிறு கவலை உள் வர "ஏங்க எப்படி இவ்வளவு அழகு குழந்தைகளை இப்படி அனாதையாக விட்டு செல்ல எப்படி மனம் வருகிறது" என்று சொல்லிய அவளின் நா எழ மறுத்தது.
அவனோ "குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அவர்களின் அருமை. தங்களின் ஆசை பசிக்காக சாப்பிட்டு முடித்த எச்சில் இலையாக இங்கு குழந்தைகளை வீசி விட்டு தான் செல்கிறது ஒரு சில ஜென்மங்கள்"
"பிள்ளை இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்" என்று அவன் மனதில் இருந்த மனக்குமுறலை அவளிடம் சொல்லிக் கொண்டே வந்தான்.
அப்போது,
பின்னால் இருந்து ஒரு குரல்
மழலையாக "ஆன்டி உங்க மொபைல விட்டுட்டு போறீங்க" என்று குரல் வந்த திசையை திரும்பி பார்த்த அவள் .
குட்டி தேவதையாக நின்றிருந்தாள் அவள்.
அந்த மழலையின் அருகில் அமர்ந்து "குட்டி உங்களுடைய பேர் என்ன?" என்று அந்த குழந்தையை பார்த்துக் கேட்டாள் அவள்.
"யாழிஈனிஇ" என்று கூறிய மழலை மொழியை புரிந்தவளாக "யாழினி யா?" என்றால்.
" நீங்க எங்க கூட வீட்டுக்கு போகலாம் வரீங்களா" என்று அந்த குட்டி தேவதையை பார்த்து ஆசையாக கேட்டாள் அவள்.
அவளின் கண்களில் ஆழமான எதிர் பார்ப்பு அந்த சிறு பிள்ளை என்ன சொல்ல போகிறாள் என்று.
அந்த சிறு பிள்ளையோ அவளின் எதிர்பார்ப்பை நிராகரிப்பது போல் "நான் மாட்டேன்" என்று அங்கிருந்து ஓடி விட்டாள்.
"யாழினி?" என்று அவள் அழைத்தும் அந்த சிறு பிள்ளை அவளிடம் மீண்டும் வரவில்லை.
அவளின் கண்களில் ஏக்கம் குடி கொள்ள.
வேண்டும் என்ற மனம் இப்போது உடையத் துவங்கியது போல் மனதில் ஒரு பாரம்.
பின்பு அவர்கள் ஆசிரமத்தின் தலைமை யசோதை அம்மாள் அவர்களைப் பார்த்தார்கள்.
"வாங்க உங்களுக்கு தான் குழந்தை வேண்டுமா?" என்று கேட்க "ஆமாம்" என்று அவன் வார்த்தைகள் திணறலுடன் வெளிப்பட்டது.
"இங்கே இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு நிலையில் தனியாக விட்டு செல்லப்பட்டார்கள்".
" நீங்கள் கொண்டு செல்லும் குழந்தை எந்த ஒரு நிலையிலும் கஷ்டபடுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்".
" குழந்தையின் வளர்ச்சி நிலைகளை எங்களுக்கு வருடத்தில் ஒரு முறையாவது எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்" என்ற அந்த கண்டிப்பு மிகுந்த தோனி அவர் எவ்வாறு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள் அந்த தம்பதிகள் இருவரும்.
"கட்டாயம் தெரிவிப்போம் அம்மா!.
திருமணமாகி 15 வருடங்களாக பிள்ளை பேறு இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு
நாங்கள் ஒரு குடும்பம் என்று உணர எங்களுடன் ஒரு மழலை.
அவள் வளர்வதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதனாலே இங்கு வந்துள்ளோம் எக்காரணம் கொண்டும் அவள் இங்கிருந்து தான் கொண்டு வரப்பட்டாள் என்ற உண்மையை கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்கிறோம்" என்ற அவனின் பேச்சின் உறுதி யசோதை அம்மாளை மெய் சிலிர்க்க வைத்தது.
"அவள் அவள்" என்று அந்த பெண் ஒரு குழந்தையை சுட்டிக் காட்டினாள்.
அவள் எனும் போதே குழந்தையை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் போல என்று யசோதை அம்மாள் சிரித்துக் கொண்டே யாரை சொல்கிறாள் என்று திரும்பி பார்த்தார்.
அப்படி பார்த்தவர் முகத்தில் ஒரு சலனம்.
"ஆமாம் அம்மா! அவள் பெயர் யாழினி".
யசோதை அம்மா அந்த சலனத்தை காட்டாமல் "வாயாடி அதற்குள் உங்களிடத்தில் அறிமுகமாகி விட்டாளா?".
"அவளிடம் நீங்கள் பேசினீர்களா?" என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"பேசினோம் ஆனால் அந்த குழந்தை" என்று சற்று நிதானித்தவள்.
"அவள் நீங்கள் என்ன கேட்டாலும் இங்கிருந்து வர மாட்டாள்" என்ற பதில் யசோதை அம்மாவிடம் இருந்து வந்தது.
"ப்ளிஸ் அம்மா நான் ஒரு முறை கேட்டு பார்க்கிறேன்" என்று அந்த பெண் ஆவலாக சொன்னாள்.
"சரி பேசி பாருங்கள்" என்று மாரியிடம் யாழினி அழைத்து வரும் படி யசோதை அம்மாள் சொல்ல அவனும் சென்றான்.
யாழினி அழைத்து வரப்பட்டாள்.
"ஏன் டி தங்கம் நீங்க அவங்களோட வீட்டுக்கு போரீங்களா?" என்று கேட்ட யசோதை அம்மாள் அவளை பார்த்து கேட்டார்.
அதற்கு யாழினியின் பதில் "நான் மாட்டேன்" என்றது மழலை மொழியில்.
"உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன் வரீங்களா?" என்று அந்த பெண் வாஞ்சையாக கேட்டாள்.
அதற்கும் யாழினி "நான் மாட்டேன்" என்று யசோதை அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு அவர்களின் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள்.
அந்த பெண்ணின் முகத்தில் ஒரு ஏமாற்றம்.
அதனை பார்த்த அந்த மழலையோ "ஆன்டி என்னை விட குட்டி பிள்ளைங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. நீங்க அவங்கள வந்து பாருங்க" என்று அந்த மழலை அவளின் கைகளை பிடித்துக் கொண்டு "வாங்க இங்கே குட்டி பாப்பா நிறைய பேர் இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டே அவளின் கைகளை அந்த பிஞ்சு விரல்கள் பற்றி அழைத்து கொண்டு செல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
அந்த அறையில் ஐந்தாறு குழந்தைகள் இருக்க ஒரு சில குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தது.
சில பசி அமர பாட்டில் பால் கொடுத்து கொண்டிருக்க அவளுக்கு ஏதோ ஒரு உணர்வு ஒவ்வொரு தொட்டிலாக அவளை அழைத்து சென்றாள் யாழினி .
"இது விக்னேஷ். இது ரோஸி. இது சாந்தினி. இது பொற்கயல். இது மனோஜ்" என்று ஒவ்வொரு குழந்தை பெயரை சொல்லவும்
அந்த சிறு குழந்தைகள் பால் மாறாமல் அந்த தொட்டிலில் இருப்பதை பார்த்து அவளின் மனம் ஏதேதோ ஏங்க ஆரம்பித்திருந்தது.
ஒரு தொட்டில் அருகில் செல்ல அந்த உறக்கத்தில் இருந்த குழந்தை அவள் அருகில் செல்ல வீரிட்டு அழ ஆரம்பித்தது.
அவளுக்கு ஏதோ ஒன்று அவளின் எண்ணங்கள் சொல்லவும் அந்த குழந்தையை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள்.
அந்த அணைப்பில் அவளையும் மறந்து கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்தது.
" ஹய் ஆன்டி மனோஜ்க்கு உங்களை பிடிச்சு போச்சு போல" என்று யாழினி அவளை பார்த்து சிரித்தாள்.
அந்த குழந்தை பொக்கை வாய் காட்டி அவளை பார்த்து சிரிக்க ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அவளுக்குள்.
"என் தங்கம்" என்று கொஞ்சிய அந்த பெண் அதே குழந்தையின் தாய் தந்தை என்று கையெழுத்து இட்டனர்.
அவன் தன் கையில் இருந்த பணத்தை யசோதை அம்மாவிடம் கொடுத்தான். அதை பார்த்த அவர் "எதற்காக இவ்வளவு பணம்" என்று அவனை பார்த்து பதட்டத்துடன் கேட்டார்.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் யசோதையை பார்க்க "நாங்கள் இங்கு குழந்தைகளை விற்கவில்லை. அவர்களுக்கான குடும்பத்தை தான் தருகிறோம்" என்று அவரை பார்த்து சிரித்தார்.
அந்த வரிகளை கேட்ட அவன் "அய்யோ அம்மா! நான் அப்படி நினைத்து தரவில்லை".
"இங்கே இருக்கும் குழந்தைகளுக்கு என் சார்பாக இந்த பொங்கல் தினத்திற்கான அன்பளிப்பு" என்று அவன் கூறினான்.
அதை கேட்ட யசோதை அம்மாவிற்கு "கடவுளே என் பிராத்தனை வீண் போகவில்லை!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவரை அனைத்து குழந்தைகளையும் வர சொல்லி பேசினார்.
"இன்று நம்முடைய ஆசிரமத்திற்காக மனோஜ் அவரின் தாய் தந்தையர் இருவரும் நாம் பொங்கல் கொண்டாடுவதற்கான பண உதவி செய்துள்ளார்கள்" என்று அவர் சொல்ல அங்கிருந்த குழந்தைகளின் முகத்தில் சந்தோசத்தின் சாயல் அனைவரும் சந்தோசத்தில் கடவுளிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.
"நீண்ட ஆயுள், நிறை செல்வம், வளமான வாழ்வுடன் இன்று எங்களுக்காக உதவி செய்த மனோஜின் தாய் தந்தை இருவரும் எந்த ஒரு துன்பமும் இன்றி நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று அவர்களின் நன்றியை தெரிவித்தனர்.
அதுவரை தங்களுக்காக குழந்தை இல்லை என்று தவித்த அந்த தம்பதிக்கு இன்று மனோஜின் தாய் தந்தை என்ற வார்த்தை அவர்களின் அத்தனை ஆண்டுகள் இழந்த இன்பத்தையும் ஒரே நாளில் பெற்று விட்டதாக நினைத்தனர்.
இனி ஒவ்வொரு விசேசமாக இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பமாக சந்தோஷத்துடன் யாரின் பேச்சிற்கும் தலை சாய்க்காமல் சந்தோஷமாக இருப்போம் என்று முழுமையான மன நிம்மதியுடன் அங்கிருந்து சென்றனர்.
அப்போது "அம்மா!" என்று யசோதை அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டு முத்தமிட்டாள் யாழினி.
குழந்தை பெறாமல் தாய் ஆனார் யசோதை அம்மாள்.
ஒரு முழுமையான குடும்பமாக அந்த ஆசிரமத்தில் தை திருநாளை அந்த குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக அனைத்தும் தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.
★சுபம்★

Last edited by a moderator: