saras swe
New member
- Joined
- Oct 8, 2025
- Messages
- 13
- Reaction score
- 6
- Points
- 3
தேன்மதியின் அழகிற்கு இந்த மாப்பிள்ளை சரியான ஜோடி இல்லை என்று அவனின் குணத்தை பார்க்காமல் நிறத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு திருமணத்தை நிறுத்த கூறி ஒன்றும் தெரியாத வெள்ளை மனம் படைத்த தேன்மதியின் மனதினை நன்றாக குழப்பி விட்டிருந்தனர் அவளின் தோழிகள்.
அவளின் தோழிகள் மூச்சு வாங்க அறிவுரை கூறியது வீணாகாமல் அவளின் வீட்டில் நன்றாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆம்! தோழிகள் கூறியதையே மனதில் வைத்திருந்த தேன், நேராக தன் தந்தையிடம் அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா என்றாள் சிறிது தயங்கி கொண்டே.
தேன்மதி கூறியதற்கு அவளின் தந்தை பதில் கூறுவதற்கு முன்பு அவளின் தாயின் கரங்கள் அவள் என் கன்னத்தில் அச்சாக பதிந்தது.
“என்னடி, வாய் ரொம்ப நீளுது! ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு!” என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார் சாரதா.
“சாரதா, என்ன பழக்கம் இது? பொம்பளப் புள்ள மேல கை வைக்கிறது? நம்ம பொண்ணப் பத்தி உனக்குத் தெரியாதா? யாரோ ஏதோ சொல்லியிருக்காங்க, அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியாமத்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றா,” என்று தன் மனைவியை அமைதிப்படுத்தினார்.
பிறகு, அழுதுகொண்டிருந்த தன் மகளை அழைத்து, தன் அருகில் அமர்த்தியவர், “பொறுமையா சொல்லுமா, என்னாச்சு? எதுக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?"என்று கேட்டார்.
தேனும் தன் தோழிகள் கூறிய அனைத்தையும் அழுதுகொண்டே கூற, கேட்ட சாரதாவிற்கு தான் குற்ற உணர்வாக இருந்தது. தன் மகளைப் பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும், அவசரப்பட்டுச் சட்டெனக் கை நீட்டியதை நினைத்து வருந்தினார்.
"அம்மாடி தேனு, உனக்கு அப்பா மேல நம்பிக்கை இருக்கு இல்ல?" என்று கேட்டார் சேகர்.
வாங்கிய அடியில் பதில் கூறக் கூடத் தைரியம் இல்லாமல் தன் தந்தையைப் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்து, "இங்க பாரு தேனு, அம்மா அடிச்சுட்டாங்கன்னு அதுக்காகப் பேச வேண்டிய இடத்தில் பேசாம இப்படித் தயங்கிக்கிட்டே இருந்தேன்னா, நாளைப் பின்னா கல்யாணம் பண்ணிப் போற இடத்துல எப்படிமா வாழப் போற? சரி அதை விடு. அப்பா உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? உனக்குக் கூட அவரைத் தெரியும்," என்று கூற, புரியாமல் தன் தந்தையைப் பார்த்தாள் தேன்மதி.
"நீ கழுத்துல போட்டு இருக்கியே ஒரு செயின், அதோட சொந்தக்காரனைத்தான் இப்ப நீ கல்யாணம் பண்ணிக்கப்போற" என்று கூற, தன் முட்டைக் கண்களை விரித்துத் தன் தந்தையைப் பார்த்தாள் தேன்மதி.
அவளின் முழியைப் பார்த்தே அவளின் மனதைப் படித்துவிட்டனர் அவளின் தாய் தந்தை.
அவர்களுக்குத் தான் தெரியுமே, அந்தச் செயினை யாராவது தொட்டால் கூட அவளுக்குப் பிடிக்காது என்று! ஏனென்றால், சிறுவயதில் இருந்தே தன்னை அறியாமலேயே அந்தச் செயின் மீது பிரியத்தை வளர்த்துக் கொண்டாள். சிறு வயதில் தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைச் செய்து, அதற்குப் பாராட்டாகக் கிடைத்த பரிசு அந்த ஜெயின். அது அந்தப் பிஞ்சு மனதில் நன்றாகப் பதிந்துவிட, அந்த வயதிலிருந்தே அந்தச் செயினை யாராவது தொட்டால் கூட தேனுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அப்படி இருக்க அந்த செயினை கொடுத்தவன் தான் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டாள்.
“என்னமா அப்படிப் பார்க்குற? நான் உண்மையத்தான் சொல்றேன். இந்தச் செயினோட சொந்தக்காரனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போற” என்றார் சேகர்.
அவளின் தந்தை கூறியதைக் கேட்ட தேன்மதி, அவளை அறியாமல் கழுத்தில் இருந்த செயினை இறுகப் பற்றிக்கொண்டாள். என்ன நினைத்தாளோ, திருமணத்தை நிறுத்துவதை பற்றி அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் அவளுடைய அறைக்குச் சென்றவளின் எண்ணம் முழுவதும் சிறு வயதில் சேற்றில் விழுந்தவளைக் கை கொடுத்துத் தூக்கி விட்டவனின் நினைவுதான் ஆட்கொண்டது.
அதற்குப் பிறகு தோழிகள் கூறியது எதுவும் அவளின் மூளைக்குள் பதியவில்லை. சிறு வயதில் தன் முன்பு புன்னகை முகமாக “அழகா இருக்க மதி” என்று நின்றவனின் முகம்தான் பதிந்திருந்தது.
அதே நேரம், தேனின் மனதைக் குழப்பிவிட்டவர்களின் நிலைமைதான் மோசமாக இருந்தது. அந்த அளவிற்குச் சாரதாம்மா வார்த்தைகளால் தெறிக்கவிட்டு விட்டார், தேன்மதியின் தோழிகளை! இதற்கு பிறகு தேனுவிடம் பேசுவதற்கு கூட சிறிது தயங்குவார்கள் அவளின் தோழிகள்.
அதோ இதோ என்று ஒரு வாரம் கடந்த நிலையில், செழியன் ராசுவை வயலில் வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். எல்லாம் தேனுவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பயபுள்ளை ராசுவைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தான்.
“டேய் செழியா, ஆறு மணிக்கு இன்னும் நேரம் இருக்குடா!“ என்று ராசு கூற, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன், “டேய், மணி இப்பவே ஐஞ்சு ஆகிடுச்சுடா. இப்ப நாம வீட்டுக்கு போனாதான் ரெடி ஆகிக் கோவிலுக்குப் போகச் சரியா இருக்கும்" என்று கூறிக்கொண்டே அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
“ஏன் செழியா, உனக்கு அந்தப் பொண்ண அவ்வளவு பிடிச்சிருக்காடா? அந்தப் பொண்ணப் பாக்க இவ்வளவு ஆர்வமா இருக்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராசு.
அவனைப் பார்த்துச் சிரித்தவன், “நான் அந்தப் பொண்ணப் பாக்க எதுக்கு இவ்வளவு அவசரப்படுறேன் தெரியுமா ராசு?” என்று கேட்டான். சிறிது தயக்கத்திற்குப் பிறகு, “எனக்குள்ள இருக்க பயம், தாழ்வுணர்ச்சியைப் போக்கிக்கத்தான்டா...“ என்று அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் எங்கோ வெறித்தவாறு கூறினான் செழியன்.
“டேய் செழியா...“ என்று அவனை அழைக்க, சிறு புன்னகையுடன், “உனக்கு என்னோட நிலைமை புரியும்னு நினைக்கிறேன் ராசு. சுமாரா இருக்க பொண்ணுங்களே நான் கருப்பா இருக்கேன்னு வேண்டாம்னு சொல்லிடுவாங்க. ஆனா, இந்தப் பொண்ணு சிவப்பா, பாக்க நம்ம ஊரு அம்மன் சிலையாட்டம் அம்புட்டு அழகா இருக்கு. அப்படி இருக்கும்போது என்னோட பயம் சரிதானே? இப்ப கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டு, கடைசி நேரத்துல வேண்டாம்னு சொல்லும்போது அது ரொம்ப அவமானமா இருக்கும். அதுக்கு அந்தப் பொண்ணுகிட்ட நேரா பேசிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான் செழியன்.
“டேய்! ஏன்டா இப்படி கண்டதையும் யோசிக்கிற? நீ வேணா பாரு, இந்தப்பொண்ணுதான் உனக்கு பொண்டாட்டியாவும் எனக்குத் தங்கச்சியாவும் வரப்போகுது. சரி வா, நேரம் ஆகுது. உங்க அம்மாச்சி கோவிலுக்குப் போறதுக்குள்ள நாம போய் அந்தப் பொண்ணைப் பாத்துட்டு வந்துடலாம்,” என்று கூறிய ராசு, அரை மணி நேரத்தில் தேன்மதி வரும் கோவிலுக்கு செழியனை அழைத்து வந்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மாமனும் அம்மாச்சியும், தேன்மதி கோவிலுக்கு வருகிறாள், அவளைப் பார்க்க அழைத்துச் செல்கிறேன் என்று போனில் பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாகக் கேட்ட செழியன், எப்படியாவது அவளை நேரில் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று மனதில் முடிவெடுத்தான். அதற்காகவே இன்று தன் நண்பனுடன் கோவிலில் தேன்மதிக்காகக் காத்திருக்கிறான்.
வெகு நேரம் இருவரும் காத்திருக்க, அப்போது காலில் அணிந்திருந்த கொலுசு ஜதி பாட... நீல நிறப் பாவாடை, மெரூன் நிறத் தாவணியில் அழகுப் பதுமையெனத் தன் தாயுடன் நடந்து வந்தாள் தேன்மதி.
முதலில் அவளைப் பார்த்த ராசுதான் செழியனை அழைத்து, “அங்க பாருடா! அந்த பொண்ணு, பூமிக்கு வலிக்கக் கூடாதுனு எவ்வளவு மெல்ல நடந்து வருது! இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் நம்ம ஊர் பக்கம் பார்க்கவே முடியாது. இப்படி அடக்கமாகவும் பார்க்க அழகாகவும் இருக்க இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் கொடுத்து வச்சவன்டா!” என்று கூறினான்.
ராசு கூறிய அனைத்தும் செழியன் காதில் விழுந்தாலும், தேனுவைப் பார்த்த அவனது கண்கள் அவளை விட்டு வேறு பக்கம் திரும்பவே இல்லை. முதலில் அதை கவனிக்காத ராசு, வெகு நேரமாகச் செழியன் அந்தப் பெண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “டேய் செழியா! என் தங்கச்சிக்குத் துரோகம் பண்ணாதடா!” என்று அவனது தோளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.
அவன் கூறிய வார்த்தைகளில், செழியன் ராசுவை முறைத்துப் பார்த்தான்.
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? உனக்குத்தான் நிச்சயம் ஆகிடுச்சு, அப்புறம் இப்படி இன்னொரு பொண்ணைப் பார்க்கிறது எல்லாம் ரொம்பத் தப்புடா!” என்றான் ராசு.
“லூசு! இந்தப் பொண்ணுதான் எனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு!” என்று செழியன் பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாக, மெல்லிய குரலில் கூறினான்.
“என்னது?!” என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு செழியனைப் பார்த்தவன், “டேய் செழியா... உண்மையாவே உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இந்தப் பொண்ணுதானாடா?” என்று தயங்கிக்கொண்டே கேட்டான்.
ஏனென்றால், செழியனுக்குப் பார்த்திருக்கும் பெண் இவ்வளவு அழகாக இருப்பாள் என்று ராசு கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ராசு நல்ல நண்பன்தான் என்றாலும் அவனும் சாதாரண மனிதன்தானே! அவனுக்குள் ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த... 'இவனுக்கு இப்படி ஒரு அழகான பொண்ணா!' என்று.
அவனது அதிர்ச்சியை சிறிதும் கண்டு கொள்ளாதவன், ராசுவை இழுத்துக் கொண்டு தேனுவின் பின்னால் சென்றான் செழியன்.
கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் முடிந்ததும் தேனுவை அழைத்தார் அவளது தாய் சாரதா.
“அம்மாடி தேனு! உனக்கு நல்லபடியா கல்யாணம் கூடி வந்தா அடிப்பிரதட்சணம் பண்றதா வேண்டிக்கிட்டேன். நீ இங்கேயே சன்னதியில உட்கார்ந்திரு, நான் வேண்டுதலை முடிச்சிட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டுச் சாரதா சென்றுவிட, தேனுவும் கையில் இருந்த பூஜைக் கூடையுடன் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும், அவளின் முன்னே செழியன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. முதலில் அவனைக் கவனிக்காதவள், வெகு நேரமாக யாரோ தன்னையே பார்ப்பது போல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். அங்கே, அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.
அவனைப் பார்த்த அடுத்த நொடி, அவளையும் அறியாமல் ஒரு படபடப்பு தொற்றிக்கொள்ள... சட்டென்று எழுந்து, அவனிடமிருந்து சற்றுத் தள்ளித் தலையைக் கவிழ்ந்தபடி நின்றுகொண்டாள்.
வெகு நேரம் இருவருமே அமைதியாக நிற்க, அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் ராசு.
பிறகு, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மதி...” என்று செழியன் கூற, விழுக்கென நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள் தேன்மதி.
தொடரும்…