வரமாய் வந்த வான்முகிழ் நீயடி! | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வரமாய் வந்த வான்முகிழ் நீயடி!

New updates

LATEST

saras swe

New member
Joined
Oct 8, 2025
Messages
13
Reaction score
6
Points
3
“என்னம்மா தேனு, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானா?” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.

அனைவர் முன்பு பதில் கூறச் சிறிது பயந்த பெண்ணவள், தன் தாயின் கையினை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அந்தத் தாயின் உள்ளத்திற்குத் தெரியாதா தன் மகளைப் பற்றி? அதனால் அவளின் முகத்தினை அவர் பார்க்க, அவருக்கு மட்டும் தெரியுமாறு தலையை ஆட்டி திருமணத்திற்குச் சம்மதம் கூறினாள் தேனு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தேன்மதி.

பெண்ணவளுக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் என்று அவளின் தாய் அனைவரிடமும் கூறியவுடன், இதுவரை அங்கு இருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலை தாழ்த்தி அமர்ந்திருந்த நமது நாயகன், முதல்முறை நிமிர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கூறிய பெண்ணவளைப் பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.

அவன் பார்க்க வந்திருக்கும் பெண்ணவளை இப்போதுதான் முதல்முறை நேரில் பார்க்கிறான். அவன் அதற்காகக்கூட அதிரவில்லை, பெண் இருக்கும் நிறத்தைப் பார்த்துதான் அதிர்ந்தான்.

ஒருவேளை பெண் கருப்பாக இருந்து அழகாக இல்லை என்று நினைத்து அதிருகிறான் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஏனென்றால் பெண் அவ்வளவு அழகாகத் தங்கச் சிலைபோல் இருந்தாள். அதனைப் பார்த்துதான் அதிர்ந்தான் நம் நாயகன்.

இரண்டு வருடமாக அவனின் மாமன் சமரசம், செழியனுக்குப் பெண் தேடுகிறார். தேடும் இடங்களில் அனைத்திலும் அவனின் வசதியைப் பார்த்து சம்மதம் கூற நினைத்தாலும், மாப்பிள்ளையின் நிறத்தைப் பார்த்துதான் தட்டிக் கழித்தார்கள். ஏனென்றால் நமது நாயகன் கிராமத்துக் கருப்பழகன். அதற்காக ரொம்பக் கருப்பாகவும் எல்லாம் இல்லை, மாநிறத்திற்குச் சற்று குறைவான நிறம்.

கருப்பாக இருந்தாலும் கலையான கம்பீரத்துடன் இருக்கும் முகம். ஒவ்வொரு இடத்திலும் பெண் பார்க்க அவனை அழைத்துச் செல்லும்போது எல்லாம், அவன் நிறத்தை வைத்து நாளை பதில் கூறுகிறேன் என்று அனுப்பி வைத்துவிட்டு, அடுத்த நாள் “இந்தச் சம்மதம் சரி வராது” என்று நிறுத்திவிடுவார்கள்.

அதுபோல் தான் இன்றும் நடக்கப்போகிறது என்று நினைத்து வந்திருந்தான் நம் நாயகன். ஆனால் இந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்று பார்த்த உடனே கூறியது மட்டுமல்லாமல், அவள் இருக்கும் நிறத்திற்குத் தன்னை எவ்வாறு திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள் என்றுதான் அதிர்ந்தான் நம் நாயகன்.



அவனின் அதிர்ந்த முகத்தினை அவனின் மாமன் சமரசம் பார்த்தாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் பெண்ணின் தந்தையிடம், “அதான் பொண்ணே சம்மதம் சொல்லிருச்சு இல்ல, அப்புறம் என்ன தட்டு மாத்திக்கலாம் இல்ல?” என்று கேட்டார்.

“கருணாகரன் ஐயாவோட பையனுக்கு என் பொண்ணைக் கொடுக்கிறதுல எனக்கு சம்மதம் தாங்க ஐயா, ஆனா…” என்று ஏதோ சொல்லச் சிறிது தயங்கினார்.

“என்னப்பா சேகரா, இவ்வளவு தூரம் பேசியாச்சு இன்னும் உன்னோட பொண்ணைக் கொடுக்கிறதுல அப்படி என்ன உனக்குத் தயக்கம்? எதுவாக இருந்தாலும் நேரடியா சொல்லுப்பா” என்றார் சமரசத்தின் தந்தை நாச்சியப்பன்.

“ஐயா, எல்லா குடும்பத்திலும் சண்டை சச்சரவு இருக்கிறதுதான். எந்தக் குடும்பத்துல இப்ப சண்டை இல்லாம இருக்கு? என்னோட பொண்ணு போற வீட்ல தனியா இல்லாமல் கூட்டுக் குடும்பமா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா மாப்பிள்ளை தம்பி வீட்ல இருக்க யார்கிட்டயும் பேசாம தனியா இருக்கிறதுதான் கொஞ்சம் சங்கடமா இருக்கு” என்றார் பெண்ணின் தந்தை சேகர்.

“சேகரா, உனக்கு நான் முன்பே என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டேன். திரும்பவும் சொல்றேன், என்னோட பேரன் குணத்துல தங்கம். அதுதான் அவன் தனியா இருக்கறதுக்கு முக்கியமான காரணம். அவன் அம்மாவோட குணமும் தம்பியோட உதாரித்தனமும் கொஞ்சமும் பிடிக்காம தனியா வீடு கட்டி அதுல தங்கியிருக்கான். அதுகூட அவனுக்காக மட்டும் இல்ல, அவன் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணுக்காகவும் தான் இப்பவே அவன் தனியா இருக்கான். ‘எங்கே தன்னை நம்பி வர பொண்ணு இவங்களால கஷ்டப்படுமோ’ அப்படின்னு நினைச்சுதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவன் தனியா போயிட்டான். அதுவும் ரொம்ப தூரம் தள்ளி எல்லாம் இல்ல, கூப்பிடும் தூரத்தில் தான் அவன் அம்மா, தம்பி தங்கியிருக்க வீடும் அவனோட அண்ணனோட வீடும் இருக்கு. அதனால நீ வேற எதைப் பற்றியும் யோசிக்காம தயக்கம் இல்லாம என்மேல நம்பிக்கை வச்சு உன்னோட பொண்ணு தேனை என் பேரன் செழியனுக்குக் கொடுக்கலாம் சேகரா” என்றார் நாச்சியப்பன்.

“சரிங்கய்யா! உங்க மேல இருக்க நம்பிக்கைக்காக மட்டும் இல்ல, கருணாகரன் ஐயாவோட வளர்ப்பு மேல இருக்க நம்பிக்கையிலயும் எங்க பொண்ணை கொடுக்கிறதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூடக் கலந்தாலோசிக்காமல் தன் சம்மதத்தைத் தெரிவித்தார் தேனின் தந்தை.

அவர் சம்மதம் கூறிய அடுத்த ஐந்து நிமிடத்தில் தேன் எனும் தேன்மதிக்கும், செழியன் எனும் அன்புச்செழியனுக்கும் பெரியோர்களால் தாம்பூலத் தட்டு மாற்றித் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவருக்கும் நிச்சய தாம்பூலம் மாற்றியிருந்தாலும், “ஏனோ செழியனுக்கு அந்தப் பெண்ணிடம் உண்மையிலேயே தன்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா” என்று கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

இருப்பினும், “திருமணத்திற்கு இன்னும் 20 நாட்கள் இருப்பதால், எப்படியாவது அந்தப் பெண்ணைத் தனிமையில் சந்தித்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா” என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தன் மாமனுடன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்புச் செழியன் மாநிறத்திற்குக் சற்று குறைவான நிறம் கொண்டவன். ஆறடி உயரம், அலை அலையான கேசம், அமைதியின் மறு உருவம். “அவன் பேசும் வார்த்தைகளை விட விழி மொழிக்குத்தான் வீரியம் அதிகம்” சிரிக்க மறந்த உதடுகள் கொண்டவன். மொத்தத்தில் வசியம் செய்யாமல் வசீகரிக்கும் மதுரை மண்ணின் வீரத்தமிழன்.

தந்தை கருணாகரன் ஊரில் பெரிய மனிதர், செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். மனைவி விசாலாட்சி.

இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்தவன் சரவணன் சுயநலவாதி. அவரின் மனைவி அனிதா கணவனுக்கு ஏற்ற குணமுடையவள். இவர்களுக்கு ஒரு மகள் சந்தியா மற்றும் மகன் சூர்யா.

இரண்டாவது மகன், நம் நாயகன் அன்புச் செழியன், கருணாகரன் ஐயாவின் குணத்தை முழுவதுமாகப் பெற்றவன். ஆனால் அமைதி மட்டுமே அவனின் குணம். கோபம் வராது, ஒருவேளை வந்துவிட்டால், கருப்புசாமி கையில் அரிவாள் இல்லாதது ஒரு குறைதான். அவனை யாராலும் தடுக்க இயலாது.

மூன்றாம் மகன் குமரேசன் படித்துவிட்டு வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டு, பெண்கள் சவகாசத்துடன் ஒன்றுக்கும் உதவாதவனாகத் திரியும் ஒருவன்.

சமரசம் விசாலாட்சியின் உடன்பிறந்த தம்பி. விசாலாட்சியின் குணத்திற்கு நேர்மாறான குணம் கொண்டவர். சிறுவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால், 40 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல், தன் மருமகன் அன்புச் செழியனுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கருணாகரன் தங்கமான குணமுடையவர். அனைத்தும் இருந்தும் அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. திருமணமாகி ஆறு வருடங்களில் மனைவியின் உண்மையான குணம் அவருக்குத் தெரியவில்லை. ஆனால், அவரின் மூன்றாவது மகன் பிறந்து இரண்டு வருடங்களில், தன் பெற்ற மகன் என்று கூடப் பாராமல், அன்புவின் நிறத்தை வைத்து காயப்படுத்துவதைப் பார்த்தபோது அதிர்ந்தார். அதன் பிறகு தன் மனைவியின் ஒவ்வொரு குணமும் அவருக்குத் தெரியவர, வாழ்க்கையே வெறுத்துப் போனார்.

அந்த வெறுப்பிலேயே அனைத்துச் சொத்துக்களையும் தன் மகன்கள் பெயரில் பிரித்து வைத்துவிட்டு, செழியனின் 15-வது வயதில் இறைவனடி சேர்ந்தார் கருணாகரன்.

அதில் செழியன் வெகுவாக உடைந்துவிட்டான். ஆனால், அந்த வீட்டில் அவ்வளவாக யாரையும் கருணாகரின் இறப்பு பாதிக்கவில்லை.

அதற்குக் முக்கியக் காரணம் அவரின் நேர்மையான பேச்சும் கண்டிப்பும்தான். இதனால் அவரின் மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் தந்தையிடம் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை.

கணவன் இருக்கும்போதே அந்த வீட்டில் விசாலாட்சியின் குரல் சிறிது உயர்ந்துதான் இருக்கும். இப்போது அந்த வீட்டில் அவர் சொல்வதே சட்டம்.

அவருடைய முதல் சட்டமே, அன்புச் செழியனைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து, அவர்களின் விவசாய நிலங்களைப் பார்த்துக்கொள்ள வைத்ததுதான்.

விவசாயம் செழியனுக்குப் பிடித்துப்போகவே, அவனும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. சமரசம் எவ்வளவு கூறியும், செழியன் அதற்குப் பிறகு மேற்கொண்டு படிக்கவில்லை.

தந்தை இறந்த பிறகு அந்த வீடு அவனுக்கு அன்னியமாக இருந்தது. அவனுக்கு அனைத்தும் விவசாயமும் அவனின் மாமனுமே உலகமாய் ஆக்கிகொண்டான்.

சில வருடங்களுக்குப் பிறகு விசாலாட்சி தன் மூத்த மகனுக்கு பெரிய இடத்தில் வரன் பார்த்துத் திருமணம் செய்து வைக்க, அதற்குப் பிறகு அவரவர் பங்கு நிலங்களைப் பிரித்துக்கொண்டனர்.

மனைவி வந்த பிறகு மந்திரம் போட்டது போல, திருமணமான ஆறு மாதத்திலேயே தனிக்குடித்தனம் சென்றுவிட்டான் சரவணன்.

விசாலாட்சியும் செழியன் வெயிலில் உழைத்து மாடாய்த் தேய்க்க, அதில் வரும் பணங்களை வட்டிக்கு விட்டு ஊர் மக்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்தார். இதில் வட்டி தராதவர்களின் நிலங்களை அடி ஆட்கள் மூலமாக அபகரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இது செழியனுக்குப் பிடிக்காமல் போக, தன் தாயிடம் “இது எல்லாம் வேண்டாம்” என்று கூற, அதுவே தாய் மகன் இருவருக்கும் பிரச்சனையில் முடிந்தது.

அதில் விசாலாட்சியின் மூன்றாவது மகனும் தன் தாய்க்கு ஆதரவாகப் பேச, எப்போதும் அமைதியாகவே இருப்பவனுக்கு ஏனோ அதற்குப் பிறகு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் தனக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில், அவனுக்கெனச் சிறிதாக, இந்த காலத்திற்குத் தகுந்த மாதிரி, கீழே சிமென்ட் காரையாலும் மேலே கூரையாலும் அழகாக வீடு கட்டிக்கொண்டு அதிலேயே தங்கிக்கொண்டான். அதுவும் அவ்வளவு பெரிய வீட்டிற்கு அருகாமையில்தான்.

அந்த வீட்டில், மருமகனுக்குத் துணையாக நாச்சியப்பன் எவ்வளவு தடுத்தும் சமரசம் வந்து தங்கிக்கொண்டார்.

செழியனுக்குத் திருமண வயது எட்டியதும், சமரசமே அவனுக்குத் தகுந்த பெண்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அவர் பெண் கேட்கும் இடங்களில் செழியன் கருப்பாக இருக்கிறான் என்று கூறி, அவனது திருமணம் தடைப்பட்டுக் கொண்டே போனது. இதில் செழியனின் 29 ஆவது வயதில் இப்போதுதான் தேன்மதிக்கும் அவனுக்கும் திருமணம் முடிவாகி இருக்கிறது.

செழியனும் சமரசமும் தேன்மதியின் ஊரான புளியங்குளத்திலிருந்து, அவர்களின் ஊர் பனையூருக்குக் காரில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தனர். அந்த அமைதியைக் கலைத்தார் சமரசம்.

“என்ன மருமகனே, அமைதியாகவே இருக்கீங்க?” என்று கேட்டார் சமரசம்.

செழியன் திரும்பித் தன் மாமனை ஒரு பார்வை பார்த்தானே தவிர, எதுவும் பேசவில்லை. அவர்தானே பெண்ணிடம் தான் தனியாகப் பேச வேண்டும் என்று கேட்க நினைக்கும்போதே, அதைத் தடுக்கும் விதமாக நிச்சயதார்த்தத்தை முடித்துவைத்தது. அந்த போபத்தில் தான் மாமனிடம் பேசாமல் முகத்தை சிறிது கோபமாக வைத்திருந்தான்.


தொடரும்…

 
Last edited:

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
அருமையான ஆரம்பம்.

கருப்பு நிற நாயகன், தங்கச்சிலை நாயகி

அம்மா வில்லியா வந்து இருக்காளே ... அப்பா பாவம் அவளை சமாளிக்க முடியாமலே போயிட்டார்.
 

saras swe

New member
Joined
Oct 8, 2025
Messages
13
Reaction score
6
Points
3
அருமையான ஆரம்பம்.

கருப்பு நிற நாயகன், தங்கச்சிலை நாயகி

அம்மா வில்லியா வந்து இருக்காளே ... அப்பா பாவம் அவளை சமாளிக்க முடியாமலே போயிட்டார்.
நன்றி அக்கா 🙏❤️
 

eswari

Active member
Joined
Oct 24, 2024
Messages
235
Reaction score
136
Points
43
அருமையான ஆரம்பம் 👍 👍 👍
 
Top Bottom