யாழினி 3 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழினி 3

New updates

LATEST

Nisha Rajan

Member
Staff member
Joined
Oct 23, 2025
Messages
38
Reaction score
19
Points
8
வெகு நேரம் காத்திருந்த அந்த பெண் மனதார மீனாட்சி அம்மனை துதித்து தியானத்தில் அமர்ந்து விட்டாள்.

"என்ன சொல்வாள்?" என்று பயந்து கொண்டே உள்ளே வந்தார்கள் அவர்கள் மூவரும்.

ராஜேஷ் முதலில் "அம்மா!" எனவும் மெதுவாக கண்கள் திறந்தாள் அவள்.

சாந்தமான முகம் கொண்டவள், அனைவருடனும் எளிதில் பழகும் தோற்றம் அவளது தோற்றம்.

கண்டாலே தெரிந்து விடும் வேலை செய்யும் வர்க்கம் அல்ல வேலை வாங்கும் முக லட்சணம் உள்ளவள்.

அவ்வளவு தீர்க்கம் அவள் முகத்தில் எந்த சவாலை அவளிடம் கொடுத்தாலும் வெகு லாவகமாக சவாலை சமாளிப்பவள்.

அப்படி தான் தந்திருந்தார் ஒரு சவாலை தன் மனைவி சுந்தரவல்லியிடம் மிஸ்டர். சிவராகவ பிள்ளை. இன்டர்சியலிஸ்ட் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட்.
கை விட்டு எண்ணக் கூடிய சில தொழில் அட்டவணை உடைய முக்கிய புள்ளி.

என்ன தான், அவர் பெரும் புள்ளியாக இருந்தாலும் மகன் என்று வரும் போது இவை அனைத்தும் அவனுக்கு தான், என்ற அவரையும் மறந்து பணத்தையும் தொழிலையும் கட்டி வாழ்பவர்.

தன் மகன் காதலிக்கிறான் என்று நிதானித்தவர் பொறுமையாக அவனிடம் பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா ராஜேஷா! உன்னோட அம்மா சொல்றது உண்மையா? யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறயாமே!" என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு அன்றை நாளிதழை பார்த்து கொண்டே கேட்டார் அந்த பெரிய மனிதர்.

தட்டு தடுமாறி தாயை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே "சொல்லிட்டிங்களா?" என்று கேள்வியாக அவரை பார்த்துக்கொண்டு "ஆமா பா"
என்றவன்.

ஒரு எட்டு பின் வாங்கினான் பயத்தில் என்பதை விட மரியாதை என்று சொல்லலாம்.
எதுவாக இருந்தாலும் தாயும் மகனும் தான் பேசிக் கொள்வார்கள்
இப்படி அவளிடம் கூறியதை உடனே தந்தையிடம் கூறுவாள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை ராஜேஷ்.
சரி ராஜேஷ் நாளைக்கு அந்த பெண்ணை கோவிலுக்கு வர சொல்லு பேசலாம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

செல்லும் வழியை பார்த்துக் கொண்டிருந்தவன் கொஞ்சம் குழம்பி தான் போனான்.
அம்மாவிடம் "என்ன மா இப்படி சொல்லிட்டு போறாரு?" என்றவன்.

"அது தான் வர சொல்லிட்டாரு இல்ல, என்ன நடக்குதுனு நாளைக்கு பாக்கலாம்" என்று அவளும் ஒருவாறு கூறி விட்டு நகர்ந்தாள்

இடையே என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்திருந்தான்.

அன்று இரவு

சுந்திரவல்லி - சிவராகவ பிள்ளை அறையில் "என்ன வல்லி இவன்?,

'உங்கிட்ட நான் பல முறை சொல்லிருக்கேன். அவன் எங்கே போறான் வரானு - பாருனு'. இப்போ 4 வருசமா லவ் பண்றேனு வந்து நிக்கிறான் இடியட்"என்று கத்தி கொண்டிருந்தார்.

சுந்திர வல்லியும் "இவனோட நடவடிக்கை ள சந்தேகம் வந்து தான் ட்ரைவர் பழனிக்கிட்ட சொல்லிருந்தேன்.

"அவன் சொன்னத கேட்கவும். இந்த விசயத்தை நாம இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவுக்கு கொண்டு வரனும். யோசிச்சு தான் இப்போ உங்கிட்ட சொல்லியிருக்கேன்".

"தேவை இல்லாம யோசிச்சா, நம்ப மகன் நம்ம கைய விட்டு போய்டுவான்" என்று புதிராக பேசியவளை புரியாதவனாய் பார்த்தார் அவர்.

"என்ன சொல்ற வல்லி" என்றவரிடம்
"பொண்ணு அனாதை ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு, அவளோட தோழியோட இப்போ லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்காங்க".

"உங்க பையனுக்கு தெரியர மாறி ஏதாவது செஞ்ச பிரச்சினை ஆகி விடும். நாளைக்கு கோவில வெச்சு இதுக்கு ஒரு முடிவு எடுக்கனும்" என்றவள்.

தீர்க்கமாக கணவரை பார்த்தாள், என்ன தான் பெரிய தொழிலதிபர் ஆக இருந்தாலும் குடும்பம் மகன் என்றாள் மனைவி சொல்வதற்கு நோ என்பதற்கு இடமே இல்லை.

தன் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் முதல் மனைவியை அவள் பார்த்துக் கொண்ட விதமும் அவளின் இறுதி நாட்களில் உறுதுணையாக தன் மகனை தாய் போல் இன்றும் நினைப்பதனாலேயே அனைத்தும் அவள் பொறுப்பு என்று விட்டு விட்டார்.


ஆனால் என்னவோ வல்லிக்கு அவருக்கு நிகரான சொத்து உள்ள குடும்பத்தில் மகனுக்கு திருமணம் செய்யும் யோசனையில் இருக்க இப்படி நடக்குமென சிறிதும் நினைக்கவில்லை.

யோசித்து கொண்டிருந்தவளை "வல்லி!" என்றழைத்த பிள்ளை.

"நீ என்ன நினைக்கிற இதைப்பத்தி" என்று கேட்க "இது சரியா வராதுங்க, முதல்ல அந்த பொண்ணு கிட்ட பேசி பாக்கலாம். "இல்ல என்ன பண்ணுமோ அத பண்ணலாம்" என்று எதையோ மனதில் முடிவு செய்து கொண்டு பேசினாள்.

பெற்றொர்களது இறுதி முடிவு குழப்பத்துடன் இருந்ததால் காதல் பறவைகள் எதையும் சிந்திக்காது, பெற்றோர்கள் எப்படியும் சம்மதித்து விடுவார்கள் என்று வருங்காலத்தை எண்ணி நிகழ்காலம் மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சில நேரங்களில் தோழி கதைப்பது காதில் கேட்டாலும், அவள் எங்கோ ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருந்தாள்.

தன்னவன் கைத் தீண்டலும் இல்லை. காதல் பாடம் கேட்க ஆர்வமும் இல்லை. ஆனால் தன்னவன் தன்னை மறந்திருப்பானா? இல்லை நினைப்பானா? என்று சற்று ஏங்கி தான் தவித்தது, அந்த பேதை மனம்.

அப்போது அவள் தோழி கூறிய வார்த்தைகள் காற்றோடு சென்றிருக்க வேண்டும். அவள் காதுகளில் விழாமல் இருக்க "நாளைக்கு ராஜேஷ் அப்பா அம்மா வராங்க டி பார்க்க"

"நீ தான் முன்னே இருந்து எனக்காக பேசனும்" என்றதும்

"ம்ம் ம்ம்"...என்ற வார்த்தை மட்டுமே அவளிடம் வந்தது.

"சரி அவள் கேட்டு விட்டாள்" என்று நினைத்து சென்று விட்டாள் பூமா.

அதுவும் நல்லதுக்கு தான் ( ரைட்டர் மைன்ட் வாய்ஸ்)...

அடுத்த நாள்...

ராஜேஷ் பூமா வை அழைத்து கொண்டு சீக்கிரம் சென்று விட.

அவளோ அவள் கூறிய நினைவு மறந்து தலையணையை தன் தோழன் என கட்டி அணைத்து தன்னை மறந்து அந்த நினை வலைகளில் மூழ்கி போனால் அவள்.

தன்னை மறந்து கண்ணில் அருவி என வந்த கண்ணீரையும் மறந்து அந்த நினைவலைகளில் மிதந்து கொண்டிருந்த அவள்.

நங்கூரமிட்டாலும் நிற்கா மிதவையில் மிதந்து கொண்டிரு
ந்தாள்.

யாழ் தொடர்வாள்.


இப்படிக்கு

நிஷா ராஜன்
 
Joined
Oct 31, 2025
Messages
34
Reaction score
22
Points
8
இடையில் என்ன நினைப்பு தடுமாற்றம்
 

Nisha Rajan

Member
Staff member
Joined
Oct 23, 2025
Messages
38
Reaction score
19
Points
8
கதையை தொடர்ந்து படித்ததற்கு மிகவும் நன்றி 😃😃😃
 

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
அருமையான பதிவு

ராஜேஷ் வசதியான வீட்டை சார்ந்தவன். இவள் ஒரு அநாதை பெண்.

அதனால் இவர்களின் திருமணம் நடக்குமா இல்லையா என்பது கேள்விக்குறி.
 

Nisha Rajan

Member
Staff member
Joined
Oct 23, 2025
Messages
38
Reaction score
19
Points
8
தொடர்ந்து வாசித்ததற்கு
அருமையான பதிவு

ராஜேஷ் வசதியான வீட்டை சார்ந்தவன். இவள் ஒரு அநாதை பெண்.

அதனால் இவர்களின் திருமணம் நடக்குமா இல்லையா என்பது கேள்விக்குறி.
மிகவும் நன்றி சகோதரி ☺️ ☺️ ☺️ 😍 😍
 
Top Bottom