மேகம்
Active member
- Joined
- Jul 2, 2026
- Messages
- 113
- Reaction score
- 84
- Points
- 28
அத்தியாயம் 32
நேரம் மதியம் மூன்று மணியைத் தாண்டி இருக்க, வருண் லேசாய் கண் அசந்த நேரம் அவனறியாமல் மெதுவாய் எழுந்து குடுகுடுவென்று ஓடிவிட்டாள் சோனியா குளியலறைக்கு.
அவள் நகர்ந்ததும் வருண் இதழ்கள் விரிந்தது மட்டும் அவளறியாதது.
காலையே சமையல் முடித்து லக்ஷ்மி சென்றிருக்க, குளித்து வந்தவள் அறையை விட்டும் பூனையாய் தான் வெளியேறினாள்.
அவ்வளவு பசி. வருண் எழாதது கூட சோனியாவிற்கு அப்பொழுது கவலையில்லை. முதலில் பசியை போக்கிவிட்டு அவனை எழுப்பலாம் என்று நினைத்தாள்.
அவனருகில் சென்றால் எங்கே பிடித்துக் கொள்வானோ மீண்டும் என்று ஒரு எண்ணமும் வெட்கமும்.
"இவங்களுக்கு பேச தெரியுமானு நினைச்சேன்! அவ்வா! ஆத்தி!" என தலையை ஆட்டிக் கொண்டாள்.
"தனியா ரெண்டு பேர் மட்டும்ன்றது எவ்வளவு வசதியா போச்சு பாரு இவங்களுக்கு!" என தனக்கு தானே பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.
காலையில் எழுந்து என்ன தான் செய்தோம் என்று நினைத்தால் எதுவும் நினைவில் இல்லை. எங்கே ஆரம்பித்து எப்படி அறைக்கு சென்று என ஒன்றும் விளங்கவில்லை.
"இப்படி ஒரு மண்ணாந்தையா சோனி நீ? இதெல்லாம் நான் என்னனு வெளில சொல்ல முடியும்?" என அதற்கும் ஒரு புலம்பல் அவளிடம்.
அலைபேசி என்ற ஒன்றே நியாபகத்தில் இல்லை. இப்பொழுது கண்ணை மறைத்த பசியை போக்கிய பின் தான் உணவு மேஜையில் இருந்த அலைபேசி கண்ணுக்கு தெரிந்தது சோனியாவிற்கு.
"வீட்டுல தேடுவாங்க தானே?" சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்துப் பார்க்க, செல்வம், பொன்னரசு, தேனம்மாள் என அத்தனை பேரும் அழைத்திருந்தனர் காலையில் இருந்து.
"போச்சு போ! அத்தானுக்கு எத்தனை கால் வந்துச்சோ!" என சொல்லி தந்தைக்கு முதல் அழைப்பை கொடுத்தாள்.
"சோனிம்மா!" என்று தான் எடுத்தார்
பொன்னரசு.
"ப்பா! எப்படி இருக்கீங்க ப்பா? கால் பண்ணீங்களா? எங்க இருக்கீங்க?" என கேட்க,
"நல்லாருக்கோம் டா!" என்றவர்,
"இப்ப தான் வயலுக்கு போக வெளில வந்தேன். உன் அம்மா தான் பேசணும்ணு இதுல இருந்து போட்டா. இரு நான் குடுக்கேன்!" என மீண்டும் உள்ளே வந்து அருள்மணியிடம் கொடுத்தார் அவர்.
"எத்தனை போன் பண்ணினேன் சோனி? எங்க போய்ட்ட? வருண் வெளில கூட்டிட்டு போச்சா? வீட்டுக்கு வந்துட்டிங்களா?" என தொடர் கேள்விகள் அருள்மணியிடம்.
"எங்கேயும் போகலம்மா!" என திருதிருத்தவள்,
"நேத்து தானே வந்தோம். அந்த டையார்ட்ல தூங்கிட்டேன். போனை கவனிக்கவே இல்ல!" என சொல்ல,
"நல்ல பொண்ணு போ! இன்னும் ஹாஸ்டல்ல இருந்த மாதிரியே ஏனோதானோனு இருக்காத சோனி! வருண் மாமா பையன் தானனும் நினைக்காத. கோவப்பட்டுட போகுது!" என்று அறிவுரையை அவர் வழங்க, உதடு மடக்கி சிரிப்பை அடக்கினாள் சோனியா.
"கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பாரு. எப்படியும் ரெண்டு நாள்ல வருணு வேலைக்கு போக ஆரம்பிச்சிரும். நீ தான் பார்த்துக்கனும். ஆமா இன்னைக்கு மதியத்துக்கு என்ன சமைச்ச? சமைச்சியா இல்ல வெளில வாங்கிட்டு வர சொல்லிட்டியா? வெட்டி செலவெல்லாம் பண்ணாத சோனி. அந்த ஊருல கட்டுப்படியாகனும் இல்ல?" என்று நிறுத்தாமல் அவர் பேச, மலைப்பாய் விழித்தவள்,
"அப்படிலாம் எதுவும் பண்ணல ம்மா! அத்தான் சமைக்க ஆள் போட்டுட்டாங்க. அவங்க வந்து சமைச்சு வச்சுட்டு போய்ட்டாங்க!" என்று சொல்ல, அதற்கும் ஒருபாடு பேசினார் அருள்மணி.
"நீயே சமைச்சிடு சோனி. என் கண்ணுல்ல! வேற ஆளுங்களை என்னனு நம்பி வீட்டுக்குள்ள விட? எனக்கு பயமா இருக்கு டி. என் அம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். உன்னைய தான் வையும். உன்னை சரியா வளக்கலன்னு என்னையும் வையும்!" என்று ஆரம்பிக்க,
"ம்மா ம்மா! மூச்சு விட்டுக்கோ! நான் போன் பண்ணி அஞ்சு நிமிஷம் ஆகல. எவ்ளோ அட்வைஸ்? இதெல்லாம் எனக்கு செட்டாகாது. கல்யாணம் பண்ணி வச்சுட்ட. நானும் காலேஜ் முடிச்சு அத்தான்கிட்ட வந்து சேர்ந்துட்டேன். இனி என் பொழைப்பை எங்க பொழைப்பை நாங்க பாத்துக்குவோம். அங்க இருந்துட்டு சும்மா தொணதொணன்னு சொல்லிட்டு இருக்காத. புரியுதா? உன் அம்மாக்கும் அதே தான். சொல்லிடு. இல்ல நான் சொல்லிடுவேன்!" என்றவள் பேச்சில்,
"என்ன டி இப்படி பேசுற?" என்றார் திகைத்தவர்.
"பின்ன எப்படி பேச? இவ்வளவு நாளும் ஆளாளுக்கு பேசி அதை நானும் அத்தானும் கேட்டு இருந்தது பத்தாதா? இன்னும் அப்படி இரு இப்படி இருன்னு சொல்லிட்டு இருந்தா எப்படி? அப்போ எப்போ நான் வாழ?" என்றவள் சொல்லில் அமைதியாகிவிட்டார் அன்னை.
"கஷ்டப்படுத்த எல்லாம் சொல்லல. ஆனா எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றேன். இந்த ஏழேட்டு மாசத்துல ரொம்ப பட்டுட்டேன். அதுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லல. ஆனா நீங்களும் காரணம் தான். அத்தானுக்கு என்னை பிடிக்கும். எனக்கும் அத்தானை பிடிக்கும். ஊருக்கு அப்பப்ப வருவோம். நீங்களும் இங்க வாங்க. ஆனா எங்க முடிவை நாங்க தான் இனி எடுப்போம். பார்த்துக்கோ. இனி யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்!" என்றாள் தெளிவாய்.
"உன் நல்லதுக்கு தான் டி சொன்னேன். அம்மா மனசுல எதுவும் வச்சுட்டு சொல்லல!" என்ற அருள்மணி குரலே வாடிவிட்டது.
"எனக்கு தெரியும் ம்மா. நீ, அம்மா, ஆச்சி, மாமா எல்லாரும் நாங்க நல்லாருக்கணும்னு மட்டும் தான் நினைப்பிங்க. நாங்களும் நீங்க சொன்னா தட்ட மாட்டோம் தான். ஆனா எல்லா விஷயத்துலயும் நீங்க சொல்றதை மட்டும் கேட்டுட்டு இருந்தா சரியா வராதுல்ல? எனக்கு வேணும் ன்றதை நான் தெரிஞ்சிக்க நினைக்குறதை நிச்சயமா உங்ககிட்ட தான் கேட்பேன். எனக்கும் வேற யார் இருக்கா?" என்றவள் பேச்சும் ஒரு வகையில் நியாயமாய் தான் தோன்றியது அவருக்கு.
"தப்பா சொல்லல ம்மா. ஆனா நான் சொல்றது தான் நிதர்சனம். உனக்கு இத்தனை வருஷ குடும்ப வாழ்க்கை அனுபவம் இருக்கு. ஆனா நான்? தத்தி தத்தி தெரிஞ்சிக்குறேன். முடியலையா நானே வாரேன். சொல்லி குடு. சரியா?" என்று கேட்க, இப்பொழுது சிறு புன்னகை அருள்மணியிடம்.
"வருண் பக்கத்துல இருந்ததும் அவனை மாதிரி யே அறிவாளியாகிட்டு வர்ற சோனி. நல்லாருந்தா போதும் எனக்கு!" என்றவர் சொல்லில்,
"கத்தி தொண்டை வழி வந்தது எனக்கு. பாராட்டு மட்டும் அத்தாணுக்கா? இது நல்லாருக்கே!" என்றவளும் சிரித்திருந்தாள்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவள் கணவனைக் காண எழுந்து அறைக்கு திரும்ப, வாசலில் தான் நின்றிருந்தான் வருண்.
"ஹாய்!" என்றவள் புன்னகையில்,
"இப்ப ஏன் அத்தையை பயமுறுத்தி வச்ச?" என்றான் கண்டிப்பாய் பார்த்து வைத்து.
"இதுக்கு தான் அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும் சொல்றது. நைட்டு நடந்திருந்தா காலைல அவங்களைப் பார்க்க வெக்கம் வந்திருக்கும். இப்ப 'இது என்னடா!'ன்னுல்ல இருக்கு" என்றவள் முணுமுணுப்பு கேட்கவும் இல்லை என்னவாய் இருக்கும் என்று புரியவும் இல்லை வருணுக்கு.
"என்ன தனியா பேசிட்டு இருக்க?" என்றான் மீண்டும் அதே குரலில்.
"ப்ச்! மிரட்டாதீங்க த்தான்!" என்றவள் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, முறைத்தவன் பின் சிரித்தபடி வந்து அருகில் அமர்ந்து அவள் மடியில் நிறைந்தான்.
"ச்சோ! த்தான்!" என்றவளுக்கு அத்தனை கூச்சம் நொடியில். அவளின் முகமெல்லாம் சிவந்துவிட, அதில் பேசியதே மறந்து போனது வருணுக்கும்.
"ஹால்ல என்ன இது?" என்றவள் அவன் கண் பார்ப்பதை தவிர்க்க,
"பேச மட்டும் தான் தெரியும் நினைச்சேன் சோனி. வெட்கமெல்லாம் வருதே உனக்கு!" என்றான் அவளை ரசித்து பார்த்து.
"பண்றதெல்லாம் பண்ணிட்டு பேச்சு வேற! எழுந்து சாப்பிட வாங்க. நான் சாப்பிட்டேன்!" என்று அவள் கூற, அவளை சீண்டி தீண்டி விளையாடினான் விரும்பி.
அவனை இழுத்துக் கொண்டு தான் உணவு மேஜைக்கு வந்தாள் சோனியா.
"ப்ச் மறந்துட்டேன் பாருங்க. உங்க அப்பத்தா வேற போன் பண்ணிருந்துச்சு. அவங்களுக்கு கூப்பிடறதுக்குள்ள மறக்க வச்சுட்டீங்க!" என்றவள் அவனுக்கு பரிமாறி அவனருகே அமர்ந்தே தேனம்மாளுக்கு அழைக்க,
"நேத்து கிளம்பினவா கூப்பிடுத நேரமா இது?" என்றார் தேனம்மாள் எடுத்ததும்.
"சண்டைக்கு நிக்கலைனா தூக்கம் வராதா கிழவி உனக்கு? என் பிளான்ல ஒரு லோடு மண்ணள்ளி போட்டு படுத்துகிட்டு என்னை பயங்காட்டினவ தான நீயி! உனக்கு இப்ப கூப்பிட்டதே பெருசு" என பதிலுக்கு சோனியும் பேச, அவளிடம் இருந்து அலைபேசியை பறித்துவிட்டான் வருண்.
தானே பேசி அவர் கேட்டதற்கு பதில் கூறி என வைத்தவன், "எப்ப பாரு எல்லார்கிட்டவும் சண்டைக்கு நிக்குறது. ஆமா அத்தைகிட்ட ஏன் அப்படி பேசின? அதை கேட்டதுக்குள்ள என்னை மாத்தி விட்டுட்ட?" என்றவனை முறைத்தவள்,
"எது நான் மாத்தி விட்டுட்டேன்? நானா உங்க மடில விழுந்தேன்!" என்றவள் பேச்சில் சிரித்துவிட்டான் வருண்.
"நிஜத்தை தான் சொன்னேன். ஏற்கனவே வேண்டாத விருந்தாளி மாதிரி தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க!" என்றவள் சொல்லில் நிமிர்ந்தவன் முறைப்பில்,
"இப்ப எல்லாம் நமக்குள்ள ஓகே தான்னாலும் அப்படி தானே நடந்துச்சு நம்ம கல்யாணம்? அதான் இனி தலையிடாதீங்கனு சொன்னேன்!" என்றாள் தெளிவாய்.
"சோனி! உன்னோட!" என்றவன் ஆயாசமாய் விழித்தான்.
"சரி சரி! சாரி த்தான். சாப்பிடும் போது டென்ஷன் பண்ணிட்டேனா? அதான் அம்மா என்னை அவ்வளவு திட்டுறாங்க. அறிவே இல்லை எனக்கு!" என உடனே இறங்கி வந்தாள் சோனியா.
"இனி பேச மாட்டேன் ப்ரோமிஸ் ப்ரோமிஸ்!" என்று வேறு அவள் சொல்ல,
"அதெல்லாம் உன்னால முடியாது. குத்தி காட்டிட்டே தான் இருக்க போற!" என்றான் சின்னதாய் சிரித்து.
தன் வாயை அவளுக்கும் தெரியுமே! பாவமாய் விழித்து நின்றாள் அவளும்.
"விடு! பழகிப்போம். அத்தைகிட்ட நீ சொன்ன மாதிரி நாமளே கத்துப்போம்!" என்றான் வருண் சமாதானமாய்.
"ஸ்வீட் த்தான் நீங்க!" சோனியா சொல்ல,
"அப்படியா? இரு சாப்பிட்டு வர்றேன். செக் பண்ணிடுவோம்!" என்றவன் கள்ளப்புன்னகையில்,
"ஹப்பா! நிமிஷத்துல எத்தனை எக்ஸ்பிரஸன்? எங்க வச்சிருந்திங்க இத்தனை நாளும்?" என்றாள் சிவந்தவளும்.
புதிதாய் கற்றுக் கொள்ள இருவருக்குமே நிறையவே இருந்தது இந்த பந்தத்தில். கொஞ்சம் கொஞ்சமாய் அதில் கலந்து தெரிந்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக்க இருவருமே முன்வந்திருக்க, காலமும் அவர்களுக்கு கைகொடுக்க காத்திருந்தது தென்றலாய் இதம் கொடுத்து.
திருமண பந்தத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் அவர்களையும் அழகாய் நிறைவாய் வாரிக் கொண்டது தன் போக்கில் இயற்கையோடு இணைந்து.