மேகம்
Active member
- Joined
- Jul 2, 2026
- Messages
- 113
- Reaction score
- 84
- Points
- 28
அத்தியாயம் 16
தன் மேல் சோனியா எத்தனை கோபமாய் இருக்கிறாள் என்பதை எளிதாய் உணர முடிந்தது வருணுக்கு.
அதை சமாளிக்கவும் சமாதானம் செய்யவும் தான் சுத்தமாய் முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அதற்கு சோனியா நேரம் கொடுக்கவில்லை என்பது தான் சரியாய் இருக்கும்.
சர்வ சாதாரணமாய் அவனை ஒதுக்கிக் கொண்டிருந்தாள் மற்றவர்கள் அறியாமல். அதில் திணறி தான் போனான் வருண்.
கணவன் மனைவி என்ற உரிமை உணர்வு இதையெல்லாம் தாண்டி அவனின் குற்ற உணர்வு தான் இந்த நிமிடம் மேல் நின்று அவனை வதைத்தது.
உளமனம் உணர்ந்து உளமார தான் வருந்தி நின்றான். அவள் எத்தனை தன்னால் காயப்பட்டிருப்பாள் என மனம் அதிலேயே உழன்றது.
இங்கே வரும்வரை கூட அவளின் சமாதானக் காரணங்கள் என்னவாய் இருந்தாலும் தன் மனம் ஏற்காது என்று வந்தவனுக்கு இப்பொழுது அவளை என்ன காரணம் சொல்லி சமாதானம் செய்வது என்றே புரியவில்லை.
எவ்வளவு பெரிய தவறு. தன்னை மட்டும் நம்பி சென்னை வரை வந்தவளையும் கவனிக்க தவறி, அவளைத் தேடி சென்றும் இப்படி அவமானப்படுத்தும்படி நடந்துகொண்டோமே என நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.
அவள் கோபம் கொண்டு நேருக்கு நேர் கேட்டிருந்தால் திட்டி இருந்தால் நிச்சயம் அதை ஏற்றிருப்பான். இப்படி தன்னை தவிர்ப்பவளை என்ன செய்வத்தென்றே தெரியவில்லை.
"ஏன் டி வருணு கூட வர சொன்னேன் தான? எதுக்கு தனியா வந்த?" என்று தான் முதலில் கேட்டார் தேனம்மாள் சோனியாவிடம். அதுவும் வருண் இருக்கும் பொழுதே.
"அதுவா! திருச்சில மதுரைக்கு நா வாரேன்னு நிறைய பஸ் விட்டிருந்தாங்க. அதான்!" என ஈடு கொடுத்தாள் சோனியா.
"உனக்காக அவன் என்னலாம் பண்ணுதான். இம்புட்டு ஆகாது உனக்கு!" என்று தேனம்மாள் சொல்ல, சட்டென்று சோனியாவின் ஒற்றைப் பார்வை தீயாய் உரசி சென்றது வருணை.
அந்த நிலைமையையும் தன் நேரத்தையும் வார்த்தையால் கூறிவிட முடியாது வருணுக்கு.
"வந்த பொண்ணை எதாவது சொல்லிக்கிட்டு. நீ போ பாப்பா!" என்று செல்வம் தான் அவளை அமைதியாக்கி இருந்தார்.
இரவும் அறைக்கு வராமல் அவள் தேனம்மாள் அறைக்குள் உறங்கி இருக்க, அவ்வளவு தூரம் காரில் பயணம் செய்து வந்த களைப்பில் அவனுமே நீண்ட நேர சிந்தனையோடு தன் அறையில் உறங்கி இருந்தான்.
காலை வருண் எழும் நேரம் அனைவரும் எழும்பி விழாவிற்கு செல்ல கிளம்பி இருந்தனர்.
"எம்புட்டு நேரம் வருணு? அப்பத்துல இருந்து சோனியை உன்னை எழுப்ப சொன்னேன். இந்தா அந்தான்னு வீட்டை சுத்தி வாரா!" என்ற தேனம்மாள் சொல்லைக் கேட்டபடி வந்து ஹாலில் அமர்ந்தான் வருண்.
"இருய்யா காபி கொண்டு வாரேன்!" என அவர் எழ, சோனியாவைத் தேடினான் அமர்ந்தவாக்கில்.
"இன்னும் கிளம்பலையா தம்பி?" என்று வந்தார் செல்வம்.
"இப்பவே ஏன் ப்பா?" என்று வருண் கேட்க,
"உனக்கு தங்கச்சியாவுது வருணு. இன்னும் ஒரு மணி நேரத்துல மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துருவாங்க. அண்ணியா சோனி முன்னாடி நிக்கணும்ய்யா!" என்றார் செல்வமும்.
"ஹ்ம்!" என்றவன்,
"சோனி எங்க?" என்று கேட்க,
"அருளு பக்கத்து தெருவுல அவ சட்டையை தைக்க குடுத்துருந்தா. அவ என்னமோ சரியா தைக்கலையாம். சண்டையாக்கிட்டு வர போயிருக்கா. இதுல மட்டும் திருத்த முடியல இவளை!" என சொல்லி காபியைக் கொண்டு வந்து கொடுத்தார் தேனம்மாள்.
"சீக்கிரம் போய் குளிச்சுட்டு கிளம்பி வாய்யா. அவ தனியா வரட்டும். அப்போ தான் அவளுக்கு தெரியும்" தேனம்மாள் சொல்ல,
"என்ன சொல்லி கூப்பிட்டிங்க. இப்ப என்ன சொல்றிங்க அப்பத்தா? இதைக் கேட்டா சோனிக்கு கோவம் வராதா? அண்ணே அண்ணியா நாங்க நிக்கணும் சொல்லிட்டு இப்ப என்னை மட்டும் வான்னா?" என்று வருண் சொல்ல,
"அம்மா அப்படி தான் ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும் நீ போய் கிளம்பு தம்பி!" என்றார் செல்வம்.
"இதுல தப்பா என்ன சொல்லிட்டேன் நான்? இன்னைக்கு ஒரு நாளுக்கு போட்டுட்டு பொறவு போய் சரிபண்ண குடுன்னு சொன்னேன். சரி போட்டுப் பார்த்தவளாவது நேத்தே போட்டு பார்த்திருக்க வேண்டாமா? இப்போ கடைசி நேரத்துல?" என்று தேனம்மாளும் கேட்க,
"அப்படி ஒன்னும் நீங்க எனக்கான வெயிட் பண்ணி தேய வேண்டாம். கிளம்புங்க. இடத்தை காலி பண்ணுங்க!" என்று சொல்லி ஒற்றை விரலை நீட்டியபடி சோனியா வர,
"இவ எங்கிருந்து டா குதிச்சா?" என மகனைப் பார்த்தார் தேனம்மாள்.
"போங்க போங்க! போய் விழால என் பேத்தி இப்படி பண்ணினா அதான் விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லுங்க. கிளம்புங்க! காத்து வரட்டும்!" என்றவள் ஹாலில் சோஃபாவில் சம்மணமிட்டு அமர, வருண் அப்பத்தாவை முறைத்தான்.
"இவன் வேற முறைக்கானே!" என்றவரும் சோனியாவிடம் பணிந்து போகவா என பார்க்க,
"நான் எவ்வளவு பிஸில கிளம்பி வந்தேன் தெரியுமா? ஒரு ப்ளௌஸ் என் ஆசைப்படி போட்டுக்க எனக்கு உரிமையில்லை இந்த வீட்டுல. இதுக்கு என் மாமியாரே இருந்திருக்கலாம். யார்கிட்டலாம் பேச்சு வாங்கவேண்டியதா இருக்கு நான்" என்றவள் அலைபேசியை எடுத்து ரீல்ஸ் பார்க்க ஆரம்பிக்க,
வருணுக்கு தேவையில்லாத இந்த சண்டையில் ஒரு பக்கம் ஆயாசமாய் இருந்தாலும் இப்படி எப்படி சாதாரணமாய் இவளால் இருக்க முடிகிறது என்றும் நினைக்காமல் இல்லை.
"எம்மா! ஏன் ம்மா! அவ சின்னபுள்ள அவளுக்கு என்ன தெரியும்?" என்ற செல்வம்,
"ஏத்தா! நீ போய் ரெடியாகி வாத்தா! நீ தான மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கணும் முதல்ல? அம்மைக்கு இப்படி தான் அடிக்கடி கோளாறு பிடிக்கும்!" என்றார்.
'இப்போ பேசேன்' என தேனம்மாளை ஒரு பார்வை பார்த்தாள் சோனியா.
"இவளுக்கு இருக்குற ஏத்தத்துக்கு!" தேனம்மாள் முணங்க,
"ஓஹ் நான் வர வேண்டாமா?" என்று சத்தமாய் கூறினாள் சோனியா.
"ப்ச்! "போய் கிளம்பு சோனி!" என வருணும் சொல்ல,
"உங்களுக்காக தான் வர்றேன்!" என செல்வத்தைப் பார்த்து கூறிவிட்டே வருண் அறைக்குள் சென்றாள் சோனியா.
"அவ சின்ன புள்ள ம்மா. உன் வயசுக்கு அவகிட்ட போட்டிக்கு நிக்காத!" என்று அன்னையிடம் கூறிவிட்டு செல்வம் செல்ல, முறைத்தபடி அந்த நேரம் விட்டுக் கொடுத்து நகர்ந்தார் தேனம்மாள்.
வருண் சில நொடி தயக்கத்திற்கு பின் தன் அறைக்குள் வர, சோனியா குளிக்க சென்றிருந்தாள்.
நேராமாகிக் கொண்டிருக்க தானும் பக்கத்து அறையில் குளித்துவிட்டு வரும் போது வருண் கட்டிலில் சோனியாவிற்கென தேனம்மாள் வாங்கி வைத்த பூவோடு, அவள் உடைக்கு பொருத்தமாய் எடுத்து வைத்த வளையல்கள், நகைகள், அவளின் கைப்பை என அத்தனையையும் நிறைத்திருந்தாள்.
"சோனி!" என அவன் கதவை தட்டவும், "வாங்க த்தான்!" என குரல் வர, அவன் உள்ளே நுழையவும் புடவையைக் கட்டி முடித்து தலை வாரி தயாராகிக் கொண்டிருந்தவள் அவனையும் கட்டிலையும் என மாறி மாறி பார்த்து,
"சாரி த்தான். கிளம்புற அவசரத்துல!" என மொத்தமாய் வாரி எடுக்க முயன்றாள்.
"ப்ச்! இரு இரு! நீ கிளம்பு. அதெல்லாம் இருக்கட்டும்!" அவன் சொல்ல,
"இல்ல இல்ல! நான் தான் என் வீட்டுல பண்ற மாதிரி அறிவில்லாம பண்ணிட்டேன்!" என்றவள் அவன் கூறியதையும் மீறி வாரி எடுக்க, சுருக்கென்று தைத்தது அந்த வார்த்தைகள் அவனை.
"சோனி விடேன்!" என அவன் கூறவும் இவள் கண்ணாடி வளையல்களை தவற விடவும் என மொத்தமாய் ஒரு நூலில் கட்டப்பட்டிருந்த வளையல்கள் மொத்தமாய் விழுந்து பாதிக்கும் மேல் நொறுங்கிவிட்டிருந்தது.
"ஓஹ் சோனி!" என ஆயாசமாய் அழைத்து அவள் முகம் பார்க்க, விழுந்து உடைந்த வளையல்களை பார்த்து வருந்தி நின்றவள் கண்களில் கண்ணீர் மிதக்க, அவன் பார்த்திடக் கூடாது என உள்ளிழுக்க முயன்றாள்.
"நான் தான் சொல்றேன்ல? என்ன நீ?" என வேஷ்டி சட்டையில் நின்றவன் காலை மடக்கி வளையல்களை கையில் எடுக்க முயல,
"வேண்டாம் த்தான். நான் கிளீன் பண்ணிடுறேன்!" என்றாள்.
அந்த குரலில் சட்டென்று நிமிர்ந்தவன் அவள் முகம் பார்க்க, கண்ணீர் கரைகள் இமை ஓரத்தில்.
வளையல்களை உடையவே விடமாட்டார் அருள்மணி. அது வீட்டிற்கு ஆகாது என்றும் கூறி அத்தனை
பாதுகாப்பாய் வைத்திருப்பார். அதை அப்படியே தொடர்ந்து தானும் பாதுகாப்பாய் தான் வைத்திருப்பாள் சோனியாவும்.
இப்பொழுது ஒன்றிரண்டு வளையல்கள் தவிர அனைத்தும் மொத்தமாய் உடைந்திருக்க, என்னவோ போலானது அவளுக்கு. அதுவும் வருணால் என்பதில் தான் மனது இன்னும் சஞ்சலமானது.
"அழறியா?" என்றவனுக்கு ஆச்சர்யம் தான். அத்தனை திடமானவள் வளையல்களுக்கு அழுகிறாளா என்று.
"கண்ணாடி வளையல் உடையாம என்ன பண்ணும்? இதுக்கு போய் கண் கலங்கிட்டு நிக்குற?" என்றவன் உள்ளே வந்ததே அவளிடம் பேச தான்.
அதற்குள் வளையல் உடைந்து, இவள் கலங்கி என வருண் நொந்து கொண்டிருக்க, அவள் கண்ணீர் வேறு இன்னும் மனதை பிசைந்தது.
"எதையும் எடுக்க வேண்டாம். நீ ரெடியாகு. ஃப்ன்க்ஷன் முடிச்சுட்டு பொறுமையா எடுத்து வச்சுக்கலாம்" என்றவனுக்கு,
'இதுவும் உன் வீடு தான்!' என்று சொல்ல ஆசை தான். மன்னிப்பும் கேளாமல் சமாதானமும் செய்யாமல் இந்த வார்த்தையை கூறி அவளை சீண்ட முடியாதே என அமைதியாகிவிட்டான்.
மேலும் அவனே உடைந்த வளையல்களை எடுக்க, "இருக்கட்டும் த்தான். நான்..நான் இப்ப எடுத்துடுவேன்!" என்றவளை,
"சோனி! சொன்னா கேளு. நான் ரெடியாகிட்டேன். நீ போய் கிளம்பு. அப்பத்தா வந்தா எதாவது சொல்லுவாங்க!" என்றவம் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு கவரில் வைத்து மொத்தமாய் சேர்த்தான்.
உடையாத வளையல்களை தனியே பத்திரப்படுத்தி கைகளில் எடுத்துக் கொண்டவன், உடைந்ததை மற்றொரு கையில் கவரில் வைத்து வெளியேக் கொண்டு வர,
"இன்னுமா டா கிளம்புதா இவ?" என எதிரில் வந்தார் தேனம்மாள்.
"அஞ்சு நிமிஷம் அப்பத்தா!" என்றவன் கையை கவனித்து,
"என்னய்யா இது?" என்று அவர் கேட்க,
"சோனி வளையல் உடைஞ்சிடுச்சு. கண்ணாடி வேற. சேஃபா தூக்கிப் போடணும்!" என்றவன் அவரை கவனிக்காமல் வெளியில் செல்ல, தேனம்மாள் வாயெல்லாம் பல்லாக சென்றவனைப் பார்த்து நின்றார்.
சில நிமிடங்களில் நிதானத்துக்கு வந்திருந்த சோனியாவும் கிளம்பி வெளியில் வர,
"வா'த்தா!" என்ற தேனம்மாள் முகம் சிறு வெட்கத்தோடு புன்னகையும் என சோனியாவைப் பார்க்க,
"கிழவி! என்ன நாணி கோணிட்டு இருக்க? இடுப்புல பிடிச்சிக்க போகுது!" என்றவள் கணவனை தேட,
அவள் கிண்டலை எல்லாம் ஒதுக்கி "நெத்தில குங்குமம் வச்சுட்டு வா சோனி! கிளம்புவோம்!" என்றார் தேனம்மாள். அவரின் கற்பனை குதிரை தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.