அத்தியாயம் : 20
கையில் இருந்த காகிதம் பறந்து சென்று கீழே விழுந்தது. அதை எதற்காக அவள் தன்னிடம் கொடுத்தாள் என்று அவன் அவளையே பார்க்க, அவளோ வாய் திறக்காமல் இருந்தாள்.
"சிற்பிகா, இதென்ன? எதுக்காக என்கிட்டே இதைத் தந்திருக்கே?"
"அதுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டுத் தாங்க. அப்புறம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்."
"இப்பப் பிரச்சனையோடு இருப்பதாக யார் சொன்னது? என்னால் இதுல கையெழுத்துப் போட்டுத் தர முடியாது," என்று சொன்னதும், "ஏன்?" என்றாள் சிற்பிகா.
அவன், "எனக்கு என் மனைவியும் குழந்தையும் வேணும். அவர்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது," என்று சொன்னான்.
அவள் சிரித்துக்கொண்டே மெதுவாக எழுந்தாள்.
"எனக்குப் பிடிக்கலன்னு சொன்னாலும் விட மறுத்து இதே வீட்டில் தான் தொடர்ந்து இருக்கச் சொல்வீர்களா?" என்று கேட்க, "பிடிக்கும் வரை இருக்கச் சொல்வேன்," என்றான் வேந்தன்.
"நான் சாகும் வரை உங்களைப் பிடிக்கலன்னு சொன்னால் என்ன செய்வீங்க?"
அவன் திகைத்தான். "ஏன் இப்படிப் பேசுறே? உனக்கு என்ன ஆச்சுது?" என்று பரபரத்தான்.
"அதைத்தான் முதலிலேயே சொல்லிட்டேனே! எனக்கு உங்களைப் பிடிக்கல. உங்களோடு சேர்ந்து வாழ ஆசைப்படல. என்னை விட்டுடுங்கன்னு..."
"சிற்பி! ஏன்டா, இப்படி எதையாவது நினைச்சு உன்னைப் போட்டுக் கஷ்டப்படுத்துறே? நான் தப்பு செய்வதா நினைச்சா என்னை மன்னிச்சு ஏத்துக்கக் கூடாதா?" என்றான்.
அவள் பலமாகச் சிரித்துக் கொண்டே, "பாவம்! நீங்களும் நான் வந்த முதல் இப்படியே தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனால், எந்தப் பயனும் தான் இருக்க மாட்டேங்குது. ம்ம்..." என்றாள்.
அவன் மனதிற்குள் ஏதோ தவறாகப்பட்டது. அவசரப்பட்டு எதையும் சொல்லி அவளைத் தானே போகச் செய்து விடக் கூடாது. இது அதிகபட்ச விரக்தியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என்று அமைதி காத்தான்.
"மிஸ்டர் வேந்தன்! எனக்கு இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கல. இங்கே உள்ள யாரையும் எப்பவும் என்னால் ஏத்துக்க முடியாது. நான் கடைசி வரை தனியாக இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒருவேளை உங்க குழந்தைக்காக என்னை விட மாட்டேன்னு சொல்வதாக இருந்தால், அது பிறந்ததும் நானே உங்களிடம் ஒப்படைக்கிறேன். இப்போ, அதுல கையெழுத்துப் போடுவதில் உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே!"
அவன் மனதிற்குள் ஏற்பட்ட வலியுடன் ஒத்துக் கொள்ள மறுக்க, "இன்னும் என்ன வேணும்? ஒருவேளை வெளியே போன பிறகு என்னால் ஒரு கஷ்டம் உங்க வாழ்க்கையில் வரக் கூடுமோ, ஜீவனாம்சமா எதையாவது கேட்டுடுவேனோன்னு பயமா இருக்கா? கவலைப்படாதீங்க! உங்க கண்ணுல கூட நான் விழமாட்டேன். எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கலாம்," என்றாள்.
அப்படியும் அசையாமல் இருந்ததும், அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அதில் இருந்த அமைதியும், சாந்தமும் விஷயத்தைப் புரிய வைத்தது. அவள் வேறு விதமாகச் சென்று அவனைத் தாக்கினாள்.
"அன்னைக்கே ஒரு நாள் சொல்லிட்டேன். உங்களை எனக்குப் பிடிக்கல. இந்தக் குழந்தையை எனக்குப் பிடிக்கல. அதைச் சுமக்க நான் பிரியப்படல. உங்களுக்கு நான் தர மாட்டேன்னு... பிறகும், எதுக்காக என்னை இங்கிருந்து விட மறுக்கிறீங்க? காசிநாதனும், கலியுக வரதனையும் மேலே அனுப்பி வச்ச மாதிரி கந்தசாமியையும் அனுப்பி வைக்கும் வரை நான் இங்கு தான் இருக்கணுமோ?" என்று எதுவுமே தெரியாதவள் போல கேட்டாள்.
அவன் திகைப்புடன் பார்த்ததும், "அதெப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒருத்தரைக் கொன்னு மகன் மீதும் பழி வரும் விதமா நடந்து, அவங்க குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிட்டு, எதுவுமே தெரியாதது போல இருக்க முடியுது? உங்களுக்கு நடிகர் திலகம் பட்டமே தரலாம்," என்று வியந்தாள்.
அவன், "சிற்பிகா நான் சொல்வதைக் கேள். நீ நினைப்பது போல இங்கு எதுவும் நடக்கல," என்றதும், "அன்னைக்கு அகிலனின் குடும்பம் வராம என் தங்கை அனித்ரா கல்யாணம் நின்னு போச்சு. அவள் அத்தனை பேருக்கும் முன்னே என்னைத் தலை நிமிர முடியாத அளவுக்குப் பேசிட்டா. அம்மா, நான் எதுக்காக அப்படி செய்தேன்னு தெரியாம என்னைத் தூக்கிப் போட்டுட்டாங்க...
கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் என்னைப் பார்த்த பார்வையில், அப்பவே நான் செத்துப் போயிட்டேன். வெறும் பிணம் மட்டும்தான் இப்போ நடமாடிட்டு இருக்கு. எங்க அப்பா உயிருடன் இருக்கும் வரை என்மேல உண்மையான பாசத்தைக் கொட்டினார். அவர் போனதில் இருந்து எல்லாமே போயிடுச்சு... இனி போக என்கிட்டே எதுவுமே இல்லை. இந்த உலகில் எனக்கு யாருமில்லை. நான் ஒரு பாவி; சண்டாளி! எதுக்குமே கொடுத்து வைக்காதவள்," என்று குமுறினாள்.
அவன் மனைவியின் தோளில் கை வைத்து, "சிற்பி! உணர்ச்சிவசப்படாதே. எல்லாம் சரியாகப் போகும்," என்றான்.
அவள் கையைத் தட்டி விட்டு, "உண்மையிலே சரியாகணும்னு நினைச்சா இதுல ஒரு கையெழுத்துப் போட்டுத் தாங்க. நான் அடுத்த நிமிஷமே இந்த வீட்டை விட்டுப் போயிடுறேன்," என்றாள்.
அவன், "முடியாது," என்று அப்போதும் சொன்னதும், "அதுதான் உங்களுக்கு மித்ரா இருக்காளே, அவள் போதாதா? எத்தனைப் பேர் வேணும்?" என்று சீறினாள்.
"என் குடும்பத்தை கதற விட்டது போல உங்க குடும்பத்தையும் இல்லாமல் ஆக்கணும்னு திட்டம் போட்டு தான், என் தங்கையிடம் உங்க எல்லாரையும் பற்றி தப்பு தப்பா சொன்னேன். அருண் மீது வீண் பழியைச் சுமத்தி வீட்டை விட்டு வெளியேற்றினேன். மித்ரா மேல உள்ள கோவத்தில் அவள் மீது கெட்டப் பெயரை ஏற்படுத்தினேன். பல்லவியிடம் எதிர்த்துப் பேசி சண்டையிட்டு துரத்தினேன். நான் நினைச்சது போல எல்லாரையும் துரத்தி இந்த வீட்டை விட்டுப் போக வச்சிட்டேன்.
எப்படி என் குடும்பம் வீடு வாசலை இழந்து அனாதையாகத் தெருவில் நிற்குதோ, அது மாதிரி என்னை விருப்பம் இல்லாமல் கட்டி வரச் சொன்ன மிஸ்டர். தாணுமால் குடும்பமும் ஆகணும். அவர் சொல்வதை வேதவாக்காகக் கருதி உயிருக்கு உயிராக விரும்பியவளைத் தூக்கிப் போட்டுட்டு என்னை வந்து கட்டாயக் கல்யாணம் செய்து கொடுமைப்படுத்திய உங்களையும் சும்மா விடக் கூடாதுன்னு திட்டம் போட்டு அத்தனையும் செய்தேன். இப்ப நான் செத்தா கூட நிம்மதியா கண்ணை மூடுவேன்," என்று சொல்லி சத்தமாகச் சிரித்தாள்.
வேந்தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
"மிஸ்டர். வெற்றி வேந்தன்! ஒரு ஆணால் மட்டுமில்ல பெண்ணாலும் கூட நினைப்பதை சாதிக்க முடியும். உங்க பெரிய ஐயா என் வாழ்க்கையை அழிச்சார். நான் அவரோட குடும்பத்தைச் சிதறடிச்சிட்டேன்,"
அவள் நினைத்ததை சாதித்து விட்டதாக வெற்றி முழக்கமிட்டாள். அவன் பார்வை அவளை விட்டு இம்மியளவும் விலகாமல் இருந்தது.
"இப்போதாவது விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தர முடியுமா? இல்லை, காசிநாதனையும் கலியுக வரதனையும் கொன்னது நீங்க ரெண்டு பேரும் தான்னு நான் போலீஸில் சொல்லி எப்படி எங்க குடும்பத்தைத் தரைமட்டம் ஆக்கினீர்களோ, அதுபோல உங்களையும் ஆக்கணுமா?" என்று கடைசியாக மிரட்டலில் இறங்கினாள்.
அவன் தொண்டையில் அடைத்து இருந்ததை விழுங்கிக் கொண்டு, "சிற்பி! நீ தப்பா புரிஞ்சு வச்சிருக்கே! எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. நான் உன்கூட தானேடா இருந்தேன். அது இயற்கையா நடந்தது தான் எங்களை நம்பு!" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
"அப்படி போலீசை நம்ப வைக்கலாம். என்னையும் ஏமாற்ற முடியாது."
"சொன்னால் புரிஞ்சுக்கோ. பெரிய ஐயா சொன்னாங்க. 'சிற்பிகா என்கிட்டே வாக்கு கேட்டிருக்கா. நீ இதைச் செய்துதான் ஆகணும்'னு சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார். நானும் எதுவுமே செய்யலடா" என்றான்.
"உங்க பெரிய ஐயா மிஸ்டர். தாணுமால்தான் அதுக்குக் காரணம்னு எனக்குத் தெரியும். அவரைப் போலீஸில் பிடிச்சுக் கொடுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?" என்று கேட்க, அவன் விதிர்விதிர்த்துப் போனான்.
"ஏற்கனவே பட்டது போதும்னு நினைச்சா அந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுங்க. இல்லை, கடைசியாக இந்த வீட்டில் இருக்கக்கூடியவரையும் போக வைக்கணும்னு ஆசைப்பட்டால் வேண்டாம்," என்று அழுத்தமாகச் சொன்னாள் சிற்பிகா.
கையெழுத்துப் போட்டு விட்டால் அதன் பிறகு அவன் தலையெழுத்து மாறி விடும். அதைப் போடாவிட்டால் அவனை இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கியவர் இல்லாமல் போய்விடுவார். என்ன செய்வது என்று தெரியாமல், அவன் உள்ளம் வேதனை தாளாமல் துடித்தது.
"இந்தக் காகிதத்தில் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும், உங்களைப் பிடித்த தொல்லை இத்தோடு தீர்ந்து போகும். உங்க குடும்பத்தோடு சேர்ந்து நிம்மதியாக இருக்கலாம். உங்க மனசுக்குப் பிடிச்சவளை கட்டிக்கிட்டு நல்லா இருக்கலாம். பிறகும் ஏன் இந்த ராசி கெட்டவளை, பாசம்னா என்னன்னு தெரியாத திமிர் பிடிச்சவளை, யாருக்கும் அடங்காத பிடாரியை கூடவே வச்சிருக்க பார்க்குறீங்க? 'காலுக்கு உதவாத செருப்பை கழற்றி எறி'னு பெரியவங்க சொல்வாங்க. நல்ல வாழ்க்கை உங்க கண் முன் இருக்க, ஏன் இந்தப் பாவியோடு சேர்ந்து நரக வாழ்க்கை வாழ ஆசைப்படுறீங்க?" என்று கடுமையாகக் கேட்டாள்.
அவள் தன்னைத்தானே வதைத்துக் கொள்வது பிடிக்காமல், "இந்த வீட்டில் உன்னால் இருக்க முடியல அப்படித்தானே!" என்றான்.
அவள், கணவனை ஆழமாகப் பார்த்து விட்டு, "இல்லை எனக்கு உங்க கிட்டே இருந்து விவாகரத்து மட்டும்தான் வேணும்," என்றாள்.
அவன், "நாளைக்கு உனக்கு நான் பதில் தரேன்," என்றான். அப்படியே, அதற்கு மேலும் பேச்சை வளர்க்கப் பிடிக்காமல் கீழே இறங்கி சென்று விட்டான்.
தாணுமால் வெளியே சென்றிருந்ததால் இங்கு நடந்த எதுவும் அவர் அறிந்திருக்கவில்லை. அவன் அவரைக் காண இரவு வரை காத்திருந்தான். வந்ததும் அவரது அறைக்குள் நுழைந்து அமைதியாக நின்றான்.
அவர் காரணம் அறியாமல் பார்த்ததும், "என்னை மன்னிச்சிடுங்க பெரிய ஐயா!" என்று சொல்லிக் காலைப் பற்றினான்.
அவரோ, "என்னப்பா, என்ன நடந்தது? ஏன் இப்படிப் பேசுறே?" என்று பதறிப் போய் கேட்டார்.
"சிற்பிகாவுக்கு இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கலையாம். நான் அவளைக் கூப்பிட்டு கொஞ்ச நாள் நம்ம வீட்டில் இருக்கலாம்னு நினைக்கிறேன். அந்த வீட்டுச் சாவியைத் தர முடியுமா?" என்று வினவினான்.
அவர் நம்ப முடியாமல் இருக்கையில் இருந்து எழுந்து விட்டார்.
"அவள்... அவள் ரொம்பவும் மனமுடைந்து போயிருக்கா. இப்படியே விட்டால் என் குழந்தைக்கும், அவளுக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு. அவங்க இல்லாமல் நான்... எப்படி?" என்று பேச்சு வராமல் தடுமாறினான்.
ஏதோ பிரச்சனை நடந்திருப்பது தெரிந்தது. என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அவன் தோளில் கை வைத்து அழுத்தி அமைதியாக்கினார்.
அவன் மன வருத்தத்துடன் நடந்ததைச் சொல்ல, அவர் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.
"நான் வேணா சிற்பிகாவிடம் பேசட்டுமா?"
"வேண்டாம் பெரிய ஐயா! அவள் உங்க மேல கோவத்துல இருக்கா. நாம அன்னைக்கு ரூமில் பேசிய விஷயம் அவளுக்குத் தெரிய வந்துடுச்சு. எவ்வளவு சொல்லியும் கேட்க மறுக்கிறா..." என்று விசனப்பட்டான்.
"வேந்தா! உன்னைப் பிரிஞ்சு நான் மட்டும் எப்படிடா?" என்றவர், "அவளுக்கு வளைகாப்பு நடத்தி அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம். கொஞ்ச நாளைக்கு அவள் அங்கே இருந்துட்டு வரட்டும். அதுக்குள்ள எல்லாம் சரியாகிடும்," என்று சொன்னார்.
"என் கூடவே இருந்தால், அவள் முகத்தையாவது பார்த்துட்டு இருப்பேன். அவளை விட்டுட்டா எப்படி பெரிய ஐயா!" என்று கலங்கினான் வேந்தன்.
மனைவியின் மீதான அவனது பாசம் அவருக்குப் புரிந்தது. அவளுக்கும் அதுபோல வரும் வரை இருவரும் ஒன்று சேர்வது கடினம். ஏற்கனவே கொஞ்சம் கோபக்காரியாக இருந்தாள். நடந்த சம்பவங்கள் அவளை ஒரேடியாக கடினமுற செய்து விட்டன. அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா? 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பது போல எப்படியாவது அவள் மனதை மாற்றி, வேந்தனுடன் சேர்ந்து வாழுமாறு செய்து விட வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர், அவளுக்கு கிடைக்க விடாமல் செய்த பாசத்தைக் கொடுத்து, மறுபடியும் அவளை மீட்டெடுக்க முடிவெடுத்தார்.
"நான் என் மகளிடம் பேசி அவளைச் சரி செய்றேன். நீ கவலைப்படாதே!"
அவன் எப்படியாவது அவள் மனம் மாறினால் போதும் என்று நினைத்து தலையசைக்க, அன்றே சிற்பிகாவைக் காண வந்தார் தாணுமால்.
கிட்டத்தட்ட பதினைந்து நாளில் அவளது உடல் பாதியாக மெலிந்திருந்தது. வயிற்றில் குழந்தை இருக்கும் பகுதி மட்டும் தனியாகக் காட்சியளித்தது. கண்களில் ஜீவன் இழந்து அதன் கீழ்ப் பகுதியில் கருப்பு நிறம் படர்ந்திருந்தது.
"சிற்பிகா!"
என்றைக்கும் தாணுமாலின் குரலைக் கேட்டதும் எழுந்து உடனே பவ்வியமாக நிற்பவள், இன்று திமிராக அமர்ந்திருந்தாள்.
அவர், அவள் அருகில் சென்று சோஃபாவில் சற்று இடம் விட்டு அமர்ந்தார்.
"என்னம்மா, ஏன் கூப்பிட்டும் பதில் தராம இருக்கே? உடம்புக்கு என்ன செய்யுது? ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கே?" என்று கேட்டார்.
அவள் பேசாமல் எழுந்து சென்று ஜன்னலின் அருகில் நின்றாள்.
"சிற்பிகா!"
அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கல்லை விடவும் கடினம் இருந்தது.
"இன்னைக்கு என்ன சொல்லி ஏமாத்தலாம்னு வந்திருக்கீங்க? அப்படியே நீங்க சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைக்க வேண்டாம்!" என்று உறுதியாகச் சொன்னாள்.
"நான் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயமா பேச வந்திருக்கேன். அது வந்து... உனக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா? ஒன்பதாவது மாதத்தில் செய்யலாமா? இன்னைக்கு வெளியே போயி ஜோதிடரிடம் ஒரு நல்ல நாள் குறித்துத் தரச் சொல்லி இருந்தேன். இப்ப உன்கிட்டேயே கேட்கிறேன், நீயே சொல்லேன்!"
அவள் இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்து குரூரமாகப் பார்த்தாள்.
"ஊரே தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையா இருக்கு," என்றவள், "எதுக்கு அங்கே அனுப்பி விடணும்? நான் இந்த வீட்டில் இல்லாத நேரத்துல அடுத்த குடும்பத்தை அழிக்கவா? உங்களை என் அப்பாவா நினைச்சுக் காலில் விழுந்து கேட்டும், இப்படி இல்லாமல் ஆக்கிட்டு வந்து எதுவுமே நடக்காத மாதிரி உங்களால் இருக்க எப்படி முடிஞ்சது?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
அவர் சிரித்துக் கொண்டே, "நீ என்கிட்டே என்ன கேட்டே? நான் உனக்கு என்ன வாக்கு தந்தேன்? நான் சரியாகத்தானே நடந்திருக்கேன்?" என்று கேட்க, அவள் வெறித்துக் கொண்டு, "என்ன செய்தீர்கள்? என் தங்கையின் கல்யாணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்றேனா, நீங்க என்ன செய்து வச்சிருக்கீங்க? 'பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்பது இதைத்தானோ!" என்றாள்.
அவர் புன்னகையுடன் எழுந்து வந்து, "நீ கேட்டாய் உன் கணவனால் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது. மீறியும் வந்தால் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு... நீ சொன்னதை நான் தான் நிறைவேத்தி தந்துட்டனே!" என்றார்.
அவள், "ச்சீ... நீங்களும் ஒரு மனுஷனா? மூணு பேர் செய்த தப்புக்கு இன்னைக்கு பத்துக்கும் மேற்பட்ட நபரைத் தண்டித்து விட்டீர்களே! இதுதான் உங்க நியாய தர்மமா? எப்படி உங்களால் மனசாட்சி இல்லாம இப்படி எல்லாம் பேச முடியுது? வெறும் பத்து லட்சம் கூட லஞ்சமா வாங்கி இருக்க மாட்டார்கள். ஆனால், நீங்க மூணு குடும்பத்தையும் சுருட்டி வாங்கியது கோடிக்கணக்கில் இருக்கு," என்று சீறினாள் சிற்பிகா.
"அதே அந்த மூணு பேரால் இறந்ததும், இழந்ததும் எண்ணிலடங்காதது. வெறும் பத்து லட்சம் என்கிறாயே, அவர்கள் பத்து தான் வாங்கி இருப்பார்கள்னு எப்படி நினைக்கிறே? அப்படியே வச்சிக்கிட்டாலும் இப்போ அந்த பத்து லட்சம் என்பது பல கோடி பெறுமானது. இந்த உயிரை இதுவரை ஆண்டவன் எடுக்காமல் இருக்கக் காரணம், அவர்களைப் பழிவாங்கத்தான். அவர்களைப் பழி எடுக்காவிட்டால், நான் செத்தால்கூட என் ஆத்மா சாந்தி அடையாது," என்றார் தாணுமால்.
"நான் உங்களைப் பற்றி போலீஸில் புகார் அளித்தால், ஆயுசுக்கும் வெளியே வர முடியாமலேயே போயிடும். ஜாக்கிரதை!" என்று எச்சரித்தாள் சிற்பிகா.
"தாராளமாகச் செய்யேன்! அப்போதும் உங்க குடும்ப மானம்தான் தமிழ்நாடு முழுவதும் சந்தி சிரிக்குமே தவிர, என்னை யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை."
அவரது தெனாவட்டான பதிலில், "உங்க குடும்பமே உங்களை விட்டுப் போயும் திமிர் அடங்கலையா? நீங்க செய்த தப்புக்கான பலனைத்தான் இப்போ அனுபவிக்கிறீங்க," என வெடுக்கென்று சொன்னாள்.
அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதைக் கண்டு எரிச்சலுடன் நின்றாள் சிற்பிகா.
"நீ என் மகள். என் கூடத்தானே இருக்கே! என் பேரக் குழந்தை; என் உயிருக்கும் மேலான வாரிசு வேந்தன் இருக்க, நான் எப்படி தனியாக இருப்பதா நினைக்க முடியும் சிற்பிகா? உன்னால் கோவப்பட மட்டும்தான் முடியுமே தவிர, என்னை வெறுத்து ஒதுக்க முடியாது. அவர்கள் அடுத்தவர்கள், அப்படித்தான் இருப்பார்கள்."
"நான் ஒண்ணும் உங்க மகள் இல்லை. நான் காசிநாதனின் மகள்! எங்க அப்பாவைக் கொன்ற கொலைகாரன் நீங்க!" என்று சீற்றத்துடன் சொன்னாள் சிற்பிகா.
அவரது இதயம் ஒரு நிமிடம் தனது துடிப்பை நிறுத்தியது.

Last edited by a moderator: