முரண் (இறுதி அத்தியாயம்) : 27 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முரண் (இறுதி அத்தியாயம்) : 27

New updates

LATEST

ஜோதி

Administrator
Joined
Oct 16, 2024
Messages
265
Reaction score
300
Points
63
இறுதி அத்தியாயம் : 27

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருக்க, அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது எனும் பயத்தில் வேந்தன் நின்றிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு, சிற்பிகாவின் கழுத்தில் கத்தியைக் கண்ட தாணுமால் அலறினார். கைகளைக் கட்டில் இருந்து அவிழ்க்க முடியாமல் கதறினார். "ஐயனாரப்பா வந்து என் மகள் பூமியை காப்பாற்று!" என்று கத்தினார்.

அவன் அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான். அடுத்த நொடி தூரமாக இருந்து வந்த துப்பாக்கி தோட்டா கத்தியைச் சிதறடித்தது.

அக்க்ஷய் கோபத்துடன் அந்த திசையை நோக்கிப் பார்க்க, வேந்தன் கண்கள் இரண்டிலும் நிரம்பிய சீற்றத்துடன் நின்றிருந்தான்.

ஆவேசமாக உள்ளே வந்தவன் அவனை அடித்து துவைத்து விட்டான். அக்க்ஷைக்கு உயிர் மட்டுமே இருந்தது. உணர்வுகள் மொத்தமாக மரிந்து போய் இருந்தன. வேகமாக உள்ளே வந்து கயிற்றை விடுவித்து "பெரிய ஐயா!" என்று தழுதழுத்தக் குரலில் அழைத்தான்.

அவர் மெல்லமாய் கண்ணைத் திறந்து பார்த்து, "பூமியை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போ. அவளுக்கு ஏதாவது ஆகிடப் போகுது!" என்று அவசரப்படுத்தினார்.

மித்ரா வேகமாக வந்து சிற்பிகாவை கட்டி வைத்த கயிற்றை அவிழ்த்தாள். அவள் வலியிலும் வேதனையிலும் துடித்துக்கொண்டிருக்க, உடனே இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட, எட்டு மாதம் இறுதியாகி விட்டதுடன் அவள் பயங்கரமாக வலியால் துடித்ததால், மருத்துவர் அவளைப் பரிசோதித்துவிட்டு, குழந்தை முழு வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதால், அவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருக்க உடனே அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையைக் காப்பாற்றிவிடுவது நல்லது என்றும் அறிவுரை கூறினார்.

சாதாரணமாக குழந்தை பெற வாய்ப்பு இல்லையா என்று விசாரித்துவிட்டு, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான் வேந்தன்.

ஒரு அறையில் தாணுமாலுக்கு சிகிச்சையும், மற்றொரு அறையில் அவளுக்குப் பிரசவம் பார்ப்பதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் கத்தியை வைக்க சிறிதும் அவகாசம் அளிக்காமல், அதற்கு முன்னதாக வேந்தனின் வாரிசு பூமிக்கு வந்திருந்தது.

ஆண் குழந்தையின் அழுகுரல் அறை முழுவதும் எதிரொலித்தது.

குழந்தை பிறந்ததும் சுத்தம் செய்துவிட்டு வேந்தனிடம் கொண்டு வந்து கொடுத்தார் மருத்துவ செவிலியர். மகனைத் தூக்கி அணைத்து முத்தமிட்டான் வெற்றி வேந்தன்! மனைவியைப் பற்றி விசாரித்தவன் அவள் மயக்கத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு தாணுமாலை காணச் சென்றான்.

தாணுமால் கண்களைத் திறந்ததும் குழந்தையைக் கண்டு பேருவகை அடைந்தார். அவனை அப்படியே தூக்கி கண்ணீர் வடிய மார்போடு அணைத்துக்கொண்டார். வேந்தனைப் பார்த்து முகம் கொள்ளா புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த மனிதனின் அடக்கப்பட்ட உணர்வுகள், வலியைக்கூட கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட விதத்தில், அவரை நினைத்துப் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஆரம்ப நாளில் 'மாமா' என்று அழைத்து அதன் பிறகே, ஊர் போற்றும் உன்னதமான தலைவனை 'பெரிய ஐயா' என்று அழைத்து வந்தான். இப்போது அவரை மற்றவர்களை போல அழைக்காமல் முன்பு போலவே, "மாமா! குட்டிப் பையன் அவங்க தாத்தாவின் சாயலில் இருக்கிறான், இல்லையா?" என்று கேட்டான்.

அவர் புருவம் சுருங்கப் பார்த்ததும், "எங்க மாமா பொய் சொல்ல மாட்டார். அவரோட மகளை எனக்குத் தருவதாகச் சொன்னது போல தந்துட்டார். நானும் சொன்ன வாக்குக்கு கட்டுப்பட்டு அவரது வாரிசைக் கொண்டு வந்து கொடுத்துட்டேன்!" என்றான்.

தாணுமால் சிரிப்புடன் அவனது வலது கையைப் பற்றி தன் மார்பில் வைத்துக்கொண்டார்.

"இனிமேல் முன்புபோல மாமான்னுதான் கூப்பிடப் போறேன். அப்பதானே உறவுமுறை சரியா வரும்!" என்று கண்ணடித்தான்.

அவர் தோளில் அடித்ததும், அவரை அணைத்து காயம்பட்ட இடத்தைப் பார்த்து மனம் வருந்தினான்.

"எனக்கு ஒண்ணுமில்லை. பூமி எப்படி இருக்கா? அவளை நான் பார்க்கணும்!"

அவன் அவரிடம் சற்று நேரம் மெதுவாகப் பேசினான். அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தும் விடாமல் தனது எண்ணத்தை செயல்படுத்துவதிலே இருந்தான். ஆகவே, அவராலும் அவனை எதிர்க்க முடியாமல் வேந்தனின் கூற்றை ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

வேந்தன், மனைவி மயக்கம் தெளிந்திருப்பதை அறிந்ததும் அங்குச் சென்று பார்த்தான்.

அவள் "அப்பாவுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டதும், பதில் சொல்லாமல் கையில் இருந்த காகிதத்தை அவளை நோக்கி நீட்டினான்.

அவள் புரியாமல் பார்த்துக்கொண்டே இருக்க, அவன் அவளது கையில் வலுக்கட்டாயமாக திணித்தான். அவள் நடுங்கும் விரல்களுடன் அதைப் பிரித்து என்னவென்று பார்க்க, அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் உறைந்து போயின.

"நான் அன்னைக்கு சொன்னது போல் உனக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தந்துட்டேன். இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் விருப்பம்போல் சுதந்திரமா இருக்கலாம்!" என்றான்.

அவள் "இல்லை, எனக்கு இது வேண்டாம்!" என்றதும், "பேச்சு மாறி நடப்பது எனக்குப் பிடிக்காது. நீ சொன்னது போல நான் செய்துட்டேன். நீயும் இனிமேல் என் வாழ்க்கையில் தலையிடாமல் இரு" என்றான்.

அப்போது வந்த சமுத்திரக்கனி உள்ளே வந்து மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

"அத்தை, உங்க மகளை நீங்களே அழைச்சிட்டு போகலாம். இல்லை, அவள் விருப்பப்பட்டது மாதிரி வாழ அனுமதிக்கலாம். இனிமேல் என்னாலும், என் குழந்தையாலும் அவளுக்கு எந்தப் பாதிப்பும் வராது!" என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி சென்று விட்டான்.

அவள் தாயைக் கட்டிக்கொண்டு அழுததும், அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தார்.

வேந்தன் தாணுமாலையும், குழந்தையையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். சிற்பிகா கணவன் கூறிய வார்த்தையிலிருந்து இன்னும் கூட மீள முடியாமல் இருந்தாள். அதன் பிறகே குழந்தையின் ஞாபகம் வந்தது. 'என்ன குழந்தை பிறந்திருக்கிறது? இப்போது எங்கு இருக்கிறது?' என்று தாயிடம் அவசரமாக விசாரித்தாள்.

அவர் இல்லை என்பதுபோல் தலையசைத்ததும், குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று பயத்தில் வீறிட்டு அழுதாள்.

சமுத்திரக்கனி மகளை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவளோ தனது குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கத்தினாள். கதறினாள். கண்ணீர் விட்டு அழுதாள்.

"இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். பிறந்ததும் தந்துட்டு விவாகரத்து வாங்கிட்டுப் போயிடுவேன்னு சொன்னியாமே! அதான், அவர் நீ கேட்டதைச் செய்துட்டு அவரோட குழந்தையை எடுத்துட்டுப் போயிட்டார்!"

அவள் கட்டிலில் சரிந்து குமுறி குமுறி அழுதாள்.

"எனக்கு என் குழந்தை வேணும்மா, அவர்கிட்டே சொல்லி எனக்கு வாங்கிக் கொடுங்க!"

"நான் உன்கிட்டே எத்தனையோ முறை திரும்பத் திரும்ப சொல்லியும் கேட்காம, நீதானே பிடிவாதமாய் இருந்து உன் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறே! குழந்தை மட்டும் வேணும், அதைப் பெத்தவர் உனக்கு வேண்டாமா? அவரும் எத்தனை நாள்தான் இப்படி தனியாகவே இருப்பார்? அவருக்கும் ஆசைகள், உணர்ச்சிகள் எதுவும் இருக்காதா? நீ ஆசைப்பட்டதுபோல அவர் விவாகரத்து தந்துட்டு, மித்ராவை கல்யாணம் செய்துக்கப் போறாராம்!" என்று சொன்னதும், அவள் அதிர்ச்சி மாறாமல் பார்த்தாள்.

"எ... என்ன... என்ன சொல்றீங்க? மித்ராவை கல்யாணமா?"

"ஆமாம். மித்ராவையும் மருமகனையும் இணைத்து ஊர் முழுவதும் புரளி பரவி வருவதால், அந்தப் பெண்ணோட எதிர்கால வாழ்க்கை பாதிப்படையக் கூடாதுன்னு நீதான் அவளையே கல்யாணம் பண்ணச் சொன்னியாம். அவருக்கு விவாகரத்து தந்துட்டு எந்தவித தொந்தரவும் தராமல் விலகிப் போவதாக வாக்கு கொடுத்திருக்கிறியாம். நீ சொன்னதைத்தான் அவங்க செய்யப் போறாங்க. இனிமேல் உன் விருப்பம்போல இருக்கலாம்!" என்றார் சமுத்திரக்கனி.

அவள் முகத்தில் அறைந்துகொண்டு ஒப்பாரி வைத்தாள்.

தாணுமாலுக்கு ஏற்கனவே காயம்பட்டிருந்தது, இப்போது குழந்தையையும் காணவில்லை. இருவரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளை இருக்க விடாமல் செய்தது. கணவன் வசிக்கும் வீட்டிற்குச் செல்வதற்காக தாயிடம் கூறினாள். ஆனால் அவரோ இங்கு வேண்டாம் என்று சொல்லி தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினார்.

அவள் வர மறுத்ததும், "அவரோட வாழ்க்கையில் நுழைந்து மறுபடியும் தொந்தரவு பண்ணாதே. அவர் விரும்பிய பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கட்டும்!" என்றார்.

"இல்லை. அவளை அவர் விரும்பல. என்னை விட்டு விலக்கி நிறுத்தவே அப்படி ஒரு பொய் சொன்னேன். எனக்கு என் குழந்தையும் கணவரும் வேண்டும். நம்ம அப்பா செய்த தப்பாலும், மூணு குடும்பம் சீரழிஞ்சு போவதைப் பார்க்க முடியாமலும், என்னால் அவர் வாழ்க்கை அழிய வேண்டாம்னு தான் விவாகரத்து கேட்டேன். அப்புறமா தான் நடந்த விஷயங்கள் முழுவதுமா தெரிய வந்தது.

இப்போ நான் சிற்பிகா இல்லை... தாணுமாலின் மகள் பூமிகா! இத்தனை நாளும் ஒரு சுயநலவாதியின் மகளா இருந்து நடந்த எதுவுமே தெரியாம ஒரு நல்ல குடும்பம் சிதறிப் போக காரணமாகிட்டேன். இனிமேல் பூமிகாவாக மாறி எங்க அப்பா, கணவர், குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு வருவேன். என்னால் அவர்களுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க அம்மா. எனக்கு அப்பாவைப் பார்க்கணும். என் கணவரிடம் மனம் விட்டு மன்னிப்புக் கேட்கணும். என் குழந்தையைக் கையிரண்டில் அள்ளிக் கொஞ்சணும். அவர்கள் இல்லாம என்னால் உயிரோடு இருக்க முடியாது" என்று புலம்பினாள்.

"உன் கிட்டே கொஞ்சம் பேசணும். அதுக்குப் பிறகு நீ என்ன வேணும்னாலும் முடிவெடு. அந்தப் பெரிய மனிதர் தாணுமால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போதான் அவங்க ஊர்ல நடந்த அத்தனை விஷயமும் எனக்குத் தெரிய வந்தது. உங்க அப்பா செய்த பாவமும், அதனால் தண்டிக்கப்பட்ட மக்களையும் பற்றி நினைச்சு ரொம்ப வருத்தமா இருந்தது. அந்த மூணு பேரையும் பழி வாங்கணும்னு அவர் துடிச்சிட்டு இருந்தது, அவர் பேச்சிலேயே எனக்குத் தெரிய வந்தது.

உங்க அப்பா என் கணவர் என்பதால் செய்த தப்பிலிருந்து தப்பியோட நான் நினைக்கல. அதேநேரம் ஒரு பாவமும் செய்யாத மக்களை தண்டிச்ச உங்க அப்பா கண்டிப்பா தப்பி போகக் கூடாதுன்னு மட்டும் என்னால நினைக்க முடிஞ்சது. அதனால்தான் அவர் சொல்வதைக் கேட்பதற்கு முடிவு பண்ணினேன். நீயும் நடந்ததை எல்லாம் மறந்துட்டு அந்தப் பெரியவர் மனம் கோணாமல் நடத்துக்கோ. உன் கணவரைப் போல ஒருவர் கிடைப்பது அரிது. அவரை விட்டு விலகிட கூடாதுன்னு தான் அன்னைக்கும் கடுமையாகப் பேசி, நம்ம வீட்டு சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி உன்னை மட்டுமே பார்க்க முடியாதுன்னு சொன்னேன். உன் மனம் வருந்தும் விதமா பேசியிருந்தால் என்னை மன்னிச்சிடுடா! இனிமேலாவது கவனமா இருந்து உன் வாழ்க்கையைப் பார்த்துக்கோ" என்று அறிவுரை கூறினார்.

அவளும் தனது தவறைப் புரிந்து கொண்டு, அவரது தோளில் சாய்ந்து அழுதாள்.

அவள் தங்கை அனித்ரா வந்து அக்காவிடம் மன்னிப்புக் கேட்டு அவளை அணைத்துக்கொண்டாள். அருணும் கூட நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு மனதார மன்னிப்பு வேண்டினான். தாணுமாலுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் அவரது தம்பியின் குடும்பம் வீட்டிற்கு வந்துவிட்டது. அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததும், தனது தவறுகளைப் புரிந்துகொண்டு இனிமேல் இந்த வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்தார்கள்.

குணசீலி செய்த தவறுக்காக போலீசில் பிடித்து ஒப்படைக்கப்பட்டார்.

மித்ரா அதே வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றிருந்தாள். அந்த வீட்டில் இத்தனை பெரிய மாற்றம் நடந்திருப்பது சிற்பிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏற்கனவே தாணுமால் மீது ஏற்பட்டிருந்த பாசமும், குழந்தை, கணவன் மீது தோன்றிய அன்பும், அவள் மனதைக் கொஞ்சமாக மாற்றி இருந்தது. இப்போது முழுவதுமாக மாறிவிட்டாள் சிற்பிகா!

அவள் தாணுமாலின் இல்லத்திற்கு வந்து சேரும்போது வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பெரிய வீட்டில்தான் அனைவரும் வீற்றிருந்தார்கள். அவள் அங்கு நின்ற யாரையும் திரும்பிக்கூடப் பார்க்காமல், தாணுமாலின் அறையை நோக்கி ஓடினாள். அங்கு அவர் காயத்திற்கு மருந்திடப்பட்டு கட்டிலில் படுத்திருந்தார். 'அப்பா!' என்று கதறிக் கொண்டே காலில் விழுந்தாள். கண்களைத் திறந்து பார்த்தவர், அவளை அப்படி எதிர்பார்க்காமல் திடுக்கிட்டு விழித்தார்.

உடல் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் மெதுவாக எழுந்து அமர்ந்தார். "என்னம்மா, ஏன் இப்படி அழுதுட்டு இருக்கே? உன் உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னார்?" என்று கேட்டவர், அவளது காயம்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்தார்.

தாணுமாலின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் உள்ளுக்குள் சென்று வதைத்தது. அவரது காலை இறுகப்பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

அவர் என்ன ஏதென்று அறியாமல் பதறிப்போய் அவளைத் தூக்கி அமர வைத்தார்.

உரிமையாக அவர் தோளில் சாய்ந்துகொண்டு மௌனமாக கண்ணீர் விட்டாள் சிற்பிகா. அவர் அவளை அணைத்துத் தேற்றியதும், "என்னை மன்னிச்சிடுங்கப்பா! உண்மையைச் சரியாகப் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். இனிமேல் நீங்க சொல்வதுபோல கேட்டு நடப்பேன்" என்றாள்.

"என் பூமியைப் பற்றி எனக்குத் தெரியும். என் மகள் நிச்சயமா ஒரு நாள் எல்லாத்தையும் புரிஞ்சுக்குவான்னு நம்பிக்கையோடு இருந்தது வீண் போகல!" என்றார்.

"உண்மை தான்பா. அந்தப் பாவிகளால் உங்க வாழ்க்கையை இழந்து இத்தனை நாளும் தனியாகவே இருந்துட்டீங்க. இனிமேல் நான் உங்க மகள் பூமிகாவா இருந்து உங்களையும், நம்ம குடும்பத்தையும் நல்ல முறையில் வழி நடத்துவேன். நான் செய்த தப்பை மறந்து என்னை மன்னிச்சிடுங்க அப்பா!" என்று கேவினாள்.

அவர் மனம் நிம்மதியாக உணர்ந்தது. அன்று தனது குடும்பத்தை இழக்க நேர்ந்ததால், வேறு யாருக்கும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து நடந்து கொண்டார் தாணுமால். இப்போது, அவர் இழந்து விட்டதாக நினைத்த மகள் சிற்பிகாவின் வடிவில் வந்து நிற்கிறாள். இதை விட அவருக்கு வேறு என்ன வேண்டுமாம்?

"நீ என் உசுருடா. எதுக்காக இப்படி மன்னிப்புக் கேட்டுட்டு இருக்கே? இந்த வீடு உன்னோட வீடு; இங்கு இருக்கும் எல்லோரும் உன்னோட உறவினர்கள். நீ எதைப் பத்தியும் கவலைப்படாம எல்லாரோடும் பேசி, பழகி சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும். நம்ம வீட்டில் இருப்பவர்களை நாமதானே பார்த்துக்கணும்!"

இப்படித்தான் அன்றும் கூடக் கூறினார். திருமணமாகி வந்த புதிதில் இறுக்கமாக நடந்துகொண்டவர், சில நாளில் மனமிளகி அவளிடம் பேசிப் பழகினார். அவளுக்கு ஏதாவது ஆனால் துடித்துப் போனார். அவளைத் தனது சொந்த மகளாக நினைத்து ஒவ்வொன்றையும் செய்து தந்தார். அவளுக்காக அவரது லட்சியத்தைக் கூட விட்டுக் கொடுத்தார். அப்படி இருந்தும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று கலங்கினாள் முழுவதுமாக பூமிகாவாக மாறிப் போன சிற்பிகா!

இத்தனை நாட்களும் காசிநாதனின் மகள் சிற்பிகாவாக இருந்து தப்பு செய்தது போதும். இனிமேல் பூமிகாவாக மாறி புதிய வாழ்க்கையை ஏற்று அனுபவிப்போம் என்று திடமாக எண்ணிக்கொண்டு அப்பாவின் தோளில் சாய்ந்தாள்.

அப்போது, குழந்தையின் அழுகுரல் மாடியில் இருந்து கேட்டது.

கைவிரல்கள் நடுங்க அப்பாவின் தோளைப் பற்றி அழுத்தினாள்.

"என்னம்மா?" என்று அவர் பாசத்துடன் கேட்க, "என் குழந்தை எனக்கு வேணும்பா. ப்ளீஸ்பா... அவர் கிட்டே சொல்லி அதை எனக்கு தரச் சொல்லுங்க!"

அவள் இத்துடன் பூரணமாக சரியாகிவிட வேண்டும் என்று நினைத்து அவர், "வேந்தன் ரொம்பவும் நல்லவன்! நீயே போயி உன் கணவனிடம் பேசி குழந்தையைப் பார். இந்த விஷயத்தில் உங்களுக்கு இடையில் நான் தலையிட முடியாது இல்லையாம்மா!" என்றார்.

அவளும் புரிந்துகொண்டு மாடியறையை நோக்கி தயக்கமாக நடந்து வந்தாள்.

வயிறு பசியால் வேந்தனின் வாரிசு விடாமல் அழுதுகொண்டிருந்தது. அவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தாள். மித்ரா குழந்தையைக் கையில் வைத்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். வேந்தன் குழந்தைக்குத் தேவையானதை கொண்டு வந்து கொடுத்து, மகனை அழாதே என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் தனது அறையில் கண்டதும் அவளுக்கு உயிரே போனது போல் இருந்தது. இதில், எப்படி அவளுக்கு விட்டுக் கொடுத்து விலகிப் போவாளாம்? நடுக்கத்துடன் அருகில் சென்று கணவனின் காலைப் பற்றிக்கொண்டாள் சிற்பிகா. அவன், அவளைக் கண்டும் காணாததுபோல இருக்க, அவன் கால்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கண்ணீரை உகுத்தாள்.

மித்ரா அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுவிட, அவன் அசையாமல் அப்படியே நின்று இருந்தான்.

"என்னை மன்னிச்சிடுங்க! உண்மையான நிலவரம் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன். எனக்கு விவாகரத்து வேண்டாம்; நீங்களும் குழந்தையும் தான் வேணும்!" என்று விம்மினாள்.

அவனோ, "அன்னைக்கு நான் கேட்டதை நீ எனக்கு தந்துட்டே! நீ கேட்டதை நானும் உனக்குத் தந்துட்டேன். இனிமேல் நமக்கு இடையில் எதுவும் இல்லை. நீ யாரோ நான் யாரோ! என் குழந்தையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீ இங்கிருந்து வெளியே போகலாம்!" என்றான்.

அவள் "முடியாது. நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று அழுததும், "எத்தனையோ விதமா உன்கிட்டே நான் தாழ்ந்து வந்தும், நீ கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம திமிராவே நடந்துக்கிட்டே! என் குழந்தை வயிற்றில் இருக்குறப்போ அழிச்சிடுவதா சொல்லிக் கஷ்டப்படுத்தினே! விவாகரத்து பண்ணிட்டு என்னை விட்டுப் போயி சந்தோஷமா இருக்கப் போறதா சொன்னே! ஒரு கணவனா என்மீது கொஞ்சம் கூடப் பாசமோ, இரக்கமோ இல்லாம நடந்துக்கிட்டே! இப்போ வந்து யாரோ ஏதோ சொன்னாங்கன்னு மன்னிப்புக் கேட்டா, அதை நம்பி உன்னை ஏத்துக்க முட்டாள் இல்லை. என் மனைவியாக இருந்தா, நான் அவள் மீது காட்டிய பாசத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கணும்!" என்றான்.

அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைக்க, "ஒவ்வொரு முறையும் நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கும்போதெல்லாம் மித்ராவோடு என்னை இணைச்சுப் பேசுனியே, அவளும் ஒரு வயசுப் பெண், இன்னொரு வீட்டுக்கு வாழப் போகிறவள். இதையெல்லாம் அறிஞ்சா அவள் மனம் எந்த அளவுக்கு வேதனைப்படும்னு ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்து இருக்கியா? வாயில எது வந்தாலும் பேசிடணுமா? நான் சொன்ன எதையாவது இதுவரைக்கும் கேட்டு இருக்கியா? எனக்கு என் குழந்தை மட்டும் போதும்! அவனோடு ஆயுசு வரைக்கும் இருந்துட்டுப் போறேன். நீ கேட்ட விவாகரத்தை தந்துட்டேன். இங்கிருந்து எங்களைத் தொந்தரவு பண்ணாம போயிடு!" என்றான்.

இதற்கு மேலும் கணவனிடம் எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் திணறியவள், அழுதுகொண்டே கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் அருகில் சென்று காலைத் தொட்டாள். அது அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தவாறு இருக்க, குழந்தையின் காலில் முகத்தைப் புதைத்து கண்ணீரால் மன்னிப்பை யாசித்தாள்.

அவனைக் கையிரண்டில் அள்ளி முகமெல்லாம் முத்தமிட்டாள். உடனே அவன் பசியறிந்து பாலூட்டச் சென்றாள். அனைத்தையும் பார்த்தும் அசையாமல் நின்ற வேந்தன், அவள் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டு இருப்பதைக் கண்டதும், கண்களை அங்கிருந்து அகற்றாமல் இருந்தான்.

குழந்தை பசியாறியதும் அப்படியே உறங்கிவிட, அவளும் உடல் சோர்வால் அவன் அருகில் படுத்து உறங்கிவிட்டாள்.

மறுபடியும் குழந்தையின் அழுகையில் எழுந்தவள், அவனைப் பார்ப்பது, ரசிப்பது என்று இருந்தாள். வேந்தன் மனைவியிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

நடந்த விஷயங்கள் யாவும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வந்ததும் முன்புபோல பேசி உறவாடினார்கள். குணசீலியின் உண்மையான முகம் தெரியாமல் சிற்பிகாவை அவமதித்தது குறித்து, மாடிக்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டார் பல்லவி.

குழந்தை பிறந்திருப்பதால் அவளது அறையிலேயே முழுநேரமும் ஓய்வெடுத்து வந்தாள் சிற்பிகா. அவளுக்கு வேண்டிய அனைத்தையும் சரளாவும், அனித்ராவும் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்தார்கள். மகளையும் பேரனையும் பார்ப்பதற்காக தாணுமால் பாதி நேரமும் இங்கேயே இருந்தார்.

பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது. வீட்டில் சகஜ நிலை உருவாகியது. அவர்களைப் பற்றி அவதூறாக பேசிய பங்காளி குடும்பத்தை மீத நபர்கள் புறக்கணிக்க தொடங்கினர்.

நாட்களும் அதன் போக்கில் பயணித்துச் சென்றது. குழந்தை பிறந்து நாற்பத்தி ஒன்றாவது நாள் ஆனதும், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா ஆரம்பம் ஆகியது. 'தாணுமால்' என்ற பெயரை மகனுக்குச் சூட்டினான் வேந்தன். தன் மீதான அவனது பாசத்தில் மனமகிழ்ந்து போனார் தாணுமாலயன்!

வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையையும், சிற்பிகாவையும் வாழ்த்தினார்கள்.

மகள் குழந்தையுடன் கணவன் அருகில் நிற்பதைப் பார்த்து தாணுமாலின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இப்போதெல்லாம் அவர் வெளிவேலையில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. மகள், பேரக்குழந்தையுடன் முழு நேரமும் செலவிட்டார். வேந்தன் அவருடைய நிலபுலன்கள், காய்கறி சந்தைகள், மூன்று மாடியில் உள்ள பெரிய கடைகள், ஊர் மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் திறம்பட செய்து வந்தான்.

மனைவியிடம் காணப்பட்ட மாற்றமும், வலிய வலிய வந்து பேசிய விதமும், அவன் அமைதியாக இருந்தாலும் அருகில் சென்று அணைத்துக்கொண்டு படுப்பதும், அவன் திட்டினாலும், முறைத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு இருப்பதும், 'நீ எப்படி வேண்டுமானாலும் இரு, நான் இப்படித்தான்' என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

குழந்தை பிறந்த ஐம்பதாவது நாள் அத்தனை நாளும் பொறுமையுடன் இருந்தவன், "ரொம்பத் தாண்டி பண்றே. இதுக்கு மேலும் என்னால் பொறுத்துப் போக முடியாது!" என்று சொல்லி அவன் விருப்பம்போல நடந்து கொள்ள ஆரம்பித்தான். அவள் மறுப்பு எதுவும் கூறாமல் இசைந்து கொடுத்ததும், அதற்குப் பிறகான நாட்கள் கணவன் மனைவியின் வாழ்க்கையில் இதுவரையில் காணாத சுகங்களை வாரி வழங்கியது.

தாணுமால் அந்த வீடு, வீட்டடியை மகள் மற்றும் அவள் கணவனின் பெயரில் எழுதிக் கொடுத்தார். தன்னுடைய சொத்துக்களை நேர் பாதியாகப் பங்கு வைத்து மகள் பெயரிலும் தம்பியின் பெயரிலும் மாற்றிக்கொடுத்தார்.

அகிலன் இங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்தாலும், மித்ராவின் வாழ்க்கை அழிந்து போகக்கூடாது என்ற காரணத்தினால் அவளைத்தானே திருமணம் செய்து கொள்வதாக வேந்தனிடம் தெரிவித்தான்.

சிற்பிகாவிடம் கல்வி கற்று வந்த மாணவியர்கள் சிலர் அவ்வப்போது வந்து சென்றனர்.

கணவனின் கைகளில் திருமணத்தின் போது காசிநாதன் தந்திருந்த அனைத்தையும் கொடுத்து விட்டு, "எனக்கு இந்தப் பாவப்பட்ட பணத்தில் செய்த எதுவுமே வேணாம். இதெல்லாம் என்ன செய்யணுமோ நீங்களே செய்துடுங்க. எனக்குத் தேவையானதை வாங்கி தர எங்க அப்பாவும், என் கணவரும் இருக்காங்க. அதுபோல அந்தத் திமிர் பிடிச்ச சிற்பிகா செத்துப் போயிட்டா. இனிமேல், என்னைப் பூமிகான்னு மட்டும் தான் கூப்பிடணும்" என்று அன்பாகக் கோரிக்கை விடுத்தாள்.

அவன் மனைவியை அணைத்து உச்சியில் முத்தமிட்டான். 'பூமி, பூமி!' என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சினான். வீட்டில் உள்ளவர்களும் அவளது ஆசைப்படியே 'பூமிகா' என அழைத்தார்கள். அவள் யார் கேட்டாலும் 'பூமிகா' என்று மட்டுமே சொல்லி வாழ்ந்து வந்தாள்.

அத்தனை நாட்களாக எதிரும் புதிருமாக வாழ்ந்து வந்த வேந்தனும், பூமிகாவும் அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, முரண்படாத வகையில் கவிதைகளைப் போல ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

தவறு செய்த அனைவருக்கும் தண்டனையைக் கொடுத்து விட்டு எப்போதும் போல தனது கம்பீரம் குறையாமல் இருந்த ஐயனார், தாணுமாலையன் குடும்பத்தையும், அந்த ஊர் மக்களையும் சீரும் சிறப்புடன் வாழ அருள் புரிவாராக!


***சுபம்***
 
Last edited by a moderator:

ஜோதி

Administrator
Joined
Oct 16, 2024
Messages
265
Reaction score
300
Points
63
தொடர்கதையின் அத்தியாயங்களை இதுவரை வாசித்து ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் JTN - 2 இந்தப் போட்டியில் கெஸ்ட் ரைட்டராக பங்கு பெற்றுள்ளேன். எனது எழுத்து நடை, கதையோட்டத்தை வைத்து என்னை யாரென கண்டுபிடித்தால், தயங்காமல் சொல்லலாம்.

இப்போட்டிக்கதையை வாசித்து கருத்துப் பதிவிட்ட @ramya ammu crazy kirukkal @MRS BEENA LOGANATHAN , @பராசக்தி, @kumarsaranya, பரிமளா முத்துவேல், வசந்தி கணேசன், உஷாராணி, நளினா ஜானகிராமன் சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகள்.


"முரண்படாத கவிதைகள் " கொஞ்சம் மாறுபட்ட அதிரடியான களம். போட்டிக் கதையை வாசிப்பவர்கள் எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள்.
 
Last edited by a moderator:

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
அருமையான கதை சிஸ் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்
 
Joined
Jun 8, 2024
Messages
253
Reaction score
123
Points
43
தொடர்கதையின் அத்தியாயங்களை இதுவரை வாசித்து ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் JTN - 2 இந்தப் போட்டியில் கெஸ்ட் ரைட்டராக பங்கு பெற்றுள்ளேன். எனது எழுத்து நடை, கதையோட்டத்தை வைத்து என்னை யாரென கண்டுபிடித்தால், தயங்காமல் சொல்லலாம்.

இப்போட்டிக்கதையை வாசித்து கருத்துப் பதிவிட்ட @ramya ammu crazy kirukkal @MRS BEENA LOGANATHAN , @பராசக்தி, @kumarsaranya, பரிமளா முத்துவேல், வசந்தி கணேசன், உஷாராணி, நளினா ஜானகிராமன் சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகள்.


"முரண்படாத கவிதைகள் " கொஞ்சம் மாறுபட்ட அதிரடியான களம். போட்டிக் கதையை வாசிப்பவர்கள் எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள்.
அருமையான முடிவு சிஸ் நீங்கள் யார் என்று நான் கண்டுபிடித்து விட்டேன்😁 போட்டி முடிவுகள் வந்தபின் உறுதி செய்து கொள்கிறேன்🫰♥️♥️♥️
 

yazhini

Active member
Joined
May 1, 2025
Messages
241
Reaction score
179
Points
43
தொடர்கதையின் அத்தியாயங்களை இதுவரை வாசித்து ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் JTN - 2 இந்தப் போட்டியில் கெஸ்ட் ரைட்டராக பங்கு பெற்றுள்ளேன். எனது எழுத்து நடை, கதையோட்டத்தை வைத்து என்னை யாரென கண்டுபிடித்தால், தயங்காமல் சொல்லலாம்.

இப்போட்டிக்கதையை வாசித்து கருத்துப் பதிவிட்ட @ramya ammu crazy kirukkal @MRS BEENA LOGANATHAN , @பராசக்தி, @kumarsaranya, பரிமளா முத்துவேல், வசந்தி கணேசன், உஷாராணி, நளினா ஜானகிராமன் சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகள்.


"முரண்படாத கவிதைகள் " கொஞ்சம் மாறுபட்ட அதிரடியான களம். போட்டிக் கதையை வாசிப்பவர்கள் எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள்.

சூப்பர் அழகான நிறைவு வாழ்த்துக்கள் 💐👏💐
 

santhi nagaraj

Active member
Joined
Jun 17, 2024
Messages
287
Reaction score
201
Points
43
கதை ரொம்ப நல்லா இருந்தது
வாழ்த்துக்கள் 💐
 

eswari

Active member
Joined
Oct 24, 2024
Messages
235
Reaction score
136
Points
43
Arumaiyana kathai 🥰 🥰 🥰 vazhthukkal 🥰 🥳 🥳
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
தொடர்கதையின் அத்தியாயங்களை இதுவரை வாசித்து ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் JTN - 2 இந்தப் போட்டியில் கெஸ்ட் ரைட்டராக பங்கு பெற்றுள்ளேன். எனது எழுத்து நடை, கதையோட்டத்தை வைத்து என்னை யாரென கண்டுபிடித்தால், தயங்காமல் சொல்லலாம்.

இப்போட்டிக்கதையை வாசித்து கருத்துப் பதிவிட்ட @ramya ammu crazy kirukkal @MRS BEENA LOGANATHAN , @பராசக்தி, @kumarsaranya, பரிமளா முத்துவேல், வசந்தி கணேசன், உஷாராணி, நளினா ஜானகிராமன் சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகள்.


"முரண்படாத கவிதைகள் " கொஞ்சம் மாறுபட்ட அதிரடியான களம். போட்டிக் கதையை வாசிப்பவர்கள் எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள்.
அருமையான கதை முன் செய்யின் பின் விளையும் பயிரானாலும் பழியானாலும் துரோகம் பழி என்று கதைக்களம் அருமை அக்கா 💐💕👏
 

Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
367
Points
63
இறுதி அத்தியாயம் : 27

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருக்க, அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது எனும் பயத்தில் வேந்தன் நின்றிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு, சிற்பிகாவின் கழுத்தில் கத்தியைக் கண்ட தாணுமால் அலறினார். கைகளைக் கட்டில் இருந்து அவிழ்க்க முடியாமல் கதறினார். "ஐயனாரப்பா வந்து என் மகள் பூமியை காப்பாற்று!" என்று கத்தினார்.

அவன் அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான். அடுத்த நொடி தூரமாக இருந்து வந்த துப்பாக்கி தோட்டா கத்தியைச் சிதறடித்தது.

அக்க்ஷய் கோபத்துடன் அந்த திசையை நோக்கிப் பார்க்க, வேந்தன் கண்கள் இரண்டிலும் நிரம்பிய சீற்றத்துடன் நின்றிருந்தான்.

ஆவேசமாக உள்ளே வந்தவன் அவனை அடித்து துவைத்து விட்டான். அக்க்ஷைக்கு உயிர் மட்டுமே இருந்தது. உணர்வுகள் மொத்தமாக மரிந்து போய் இருந்தன. வேகமாக உள்ளே வந்து கயிற்றை விடுவித்து "பெரிய ஐயா!" என்று தழுதழுத்தக் குரலில் அழைத்தான்.

அவர் மெல்லமாய் கண்ணைத் திறந்து பார்த்து, "பூமியை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போ. அவளுக்கு ஏதாவது ஆகிடப் போகுது!" என்று அவசரப்படுத்தினார்.

மித்ரா வேகமாக வந்து சிற்பிகாவை கட்டி வைத்த கயிற்றை அவிழ்த்தாள். அவள் வலியிலும் வேதனையிலும் துடித்துக்கொண்டிருக்க, உடனே இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட, எட்டு மாதம் இறுதியாகி விட்டதுடன் அவள் பயங்கரமாக வலியால் துடித்ததால், மருத்துவர் அவளைப் பரிசோதித்துவிட்டு, குழந்தை முழு வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதால், அவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருக்க உடனே அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையைக் காப்பாற்றிவிடுவது நல்லது என்றும் அறிவுரை கூறினார்.

சாதாரணமாக குழந்தை பெற வாய்ப்பு இல்லையா என்று விசாரித்துவிட்டு, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான் வேந்தன்.

ஒரு அறையில் தாணுமாலுக்கு சிகிச்சையும், மற்றொரு அறையில் அவளுக்குப் பிரசவம் பார்ப்பதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் கத்தியை வைக்க சிறிதும் அவகாசம் அளிக்காமல், அதற்கு முன்னதாக வேந்தனின் வாரிசு பூமிக்கு வந்திருந்தது.

ஆண் குழந்தையின் அழுகுரல் அறை முழுவதும் எதிரொலித்தது.

குழந்தை பிறந்ததும் சுத்தம் செய்துவிட்டு வேந்தனிடம் கொண்டு வந்து கொடுத்தார் மருத்துவ செவிலியர். மகனைத் தூக்கி அணைத்து முத்தமிட்டான் வெற்றி வேந்தன்! மனைவியைப் பற்றி விசாரித்தவன் அவள் மயக்கத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு தாணுமாலை காணச் சென்றான்.

தாணுமால் கண்களைத் திறந்ததும் குழந்தையைக் கண்டு பேருவகை அடைந்தார். அவனை அப்படியே தூக்கி கண்ணீர் வடிய மார்போடு அணைத்துக்கொண்டார். வேந்தனைப் பார்த்து முகம் கொள்ளா புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த மனிதனின் அடக்கப்பட்ட உணர்வுகள், வலியைக்கூட கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட விதத்தில், அவரை நினைத்துப் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஆரம்ப நாளில் 'மாமா' என்று அழைத்து அதன் பிறகே, ஊர் போற்றும் உன்னதமான தலைவனை 'பெரிய ஐயா' என்று அழைத்து வந்தான். இப்போது அவரை மற்றவர்களை போல அழைக்காமல் முன்பு போலவே, "மாமா! குட்டிப் பையன் அவங்க தாத்தாவின் சாயலில் இருக்கிறான், இல்லையா?" என்று கேட்டான்.

அவர் புருவம் சுருங்கப் பார்த்ததும், "எங்க மாமா பொய் சொல்ல மாட்டார். அவரோட மகளை எனக்குத் தருவதாகச் சொன்னது போல தந்துட்டார். நானும் சொன்ன வாக்குக்கு கட்டுப்பட்டு அவரது வாரிசைக் கொண்டு வந்து கொடுத்துட்டேன்!" என்றான்.

தாணுமால் சிரிப்புடன் அவனது வலது கையைப் பற்றி தன் மார்பில் வைத்துக்கொண்டார்.

"இனிமேல் முன்புபோல மாமான்னுதான் கூப்பிடப் போறேன். அப்பதானே உறவுமுறை சரியா வரும்!" என்று கண்ணடித்தான்.

அவர் தோளில் அடித்ததும், அவரை அணைத்து காயம்பட்ட இடத்தைப் பார்த்து மனம் வருந்தினான்.

"எனக்கு ஒண்ணுமில்லை. பூமி எப்படி இருக்கா? அவளை நான் பார்க்கணும்!"

அவன் அவரிடம் சற்று நேரம் மெதுவாகப் பேசினான். அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தும் விடாமல் தனது எண்ணத்தை செயல்படுத்துவதிலே இருந்தான். ஆகவே, அவராலும் அவனை எதிர்க்க முடியாமல் வேந்தனின் கூற்றை ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

வேந்தன், மனைவி மயக்கம் தெளிந்திருப்பதை அறிந்ததும் அங்குச் சென்று பார்த்தான்.

அவள் "அப்பாவுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டதும், பதில் சொல்லாமல் கையில் இருந்த காகிதத்தை அவளை நோக்கி நீட்டினான்.

அவள் புரியாமல் பார்த்துக்கொண்டே இருக்க, அவன் அவளது கையில் வலுக்கட்டாயமாக திணித்தான். அவள் நடுங்கும் விரல்களுடன் அதைப் பிரித்து என்னவென்று பார்க்க, அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் உறைந்து போயின.

"நான் அன்னைக்கு சொன்னது போல் உனக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தந்துட்டேன். இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் விருப்பம்போல் சுதந்திரமா இருக்கலாம்!" என்றான்.

அவள் "இல்லை, எனக்கு இது வேண்டாம்!" என்றதும், "பேச்சு மாறி நடப்பது எனக்குப் பிடிக்காது. நீ சொன்னது போல நான் செய்துட்டேன். நீயும் இனிமேல் என் வாழ்க்கையில் தலையிடாமல் இரு" என்றான்.

அப்போது வந்த சமுத்திரக்கனி உள்ளே வந்து மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

"அத்தை, உங்க மகளை நீங்களே அழைச்சிட்டு போகலாம். இல்லை, அவள் விருப்பப்பட்டது மாதிரி வாழ அனுமதிக்கலாம். இனிமேல் என்னாலும், என் குழந்தையாலும் அவளுக்கு எந்தப் பாதிப்பும் வராது!" என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி சென்று விட்டான்.

அவள் தாயைக் கட்டிக்கொண்டு அழுததும், அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தார்.

வேந்தன் தாணுமாலையும், குழந்தையையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். சிற்பிகா கணவன் கூறிய வார்த்தையிலிருந்து இன்னும் கூட மீள முடியாமல் இருந்தாள். அதன் பிறகே குழந்தையின் ஞாபகம் வந்தது. 'என்ன குழந்தை பிறந்திருக்கிறது? இப்போது எங்கு இருக்கிறது?' என்று தாயிடம் அவசரமாக விசாரித்தாள்.

அவர் இல்லை என்பதுபோல் தலையசைத்ததும், குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று பயத்தில் வீறிட்டு அழுதாள்.

சமுத்திரக்கனி மகளை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவளோ தனது குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கத்தினாள். கதறினாள். கண்ணீர் விட்டு அழுதாள்.

"இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். பிறந்ததும் தந்துட்டு விவாகரத்து வாங்கிட்டுப் போயிடுவேன்னு சொன்னியாமே! அதான், அவர் நீ கேட்டதைச் செய்துட்டு அவரோட குழந்தையை எடுத்துட்டுப் போயிட்டார்!"

அவள் கட்டிலில் சரிந்து குமுறி குமுறி அழுதாள்.

"எனக்கு என் குழந்தை வேணும்மா, அவர்கிட்டே சொல்லி எனக்கு வாங்கிக் கொடுங்க!"

"நான் உன்கிட்டே எத்தனையோ முறை திரும்பத் திரும்ப சொல்லியும் கேட்காம, நீதானே பிடிவாதமாய் இருந்து உன் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறே! குழந்தை மட்டும் வேணும், அதைப் பெத்தவர் உனக்கு வேண்டாமா? அவரும் எத்தனை நாள்தான் இப்படி தனியாகவே இருப்பார்? அவருக்கும் ஆசைகள், உணர்ச்சிகள் எதுவும் இருக்காதா? நீ ஆசைப்பட்டதுபோல அவர் விவாகரத்து தந்துட்டு, மித்ராவை கல்யாணம் செய்துக்கப் போறாராம்!" என்று சொன்னதும், அவள் அதிர்ச்சி மாறாமல் பார்த்தாள்.

"எ... என்ன... என்ன சொல்றீங்க? மித்ராவை கல்யாணமா?"

"ஆமாம். மித்ராவையும் மருமகனையும் இணைத்து ஊர் முழுவதும் புரளி பரவி வருவதால், அந்தப் பெண்ணோட எதிர்கால வாழ்க்கை பாதிப்படையக் கூடாதுன்னு நீதான் அவளையே கல்யாணம் பண்ணச் சொன்னியாம். அவருக்கு விவாகரத்து தந்துட்டு எந்தவித தொந்தரவும் தராமல் விலகிப் போவதாக வாக்கு கொடுத்திருக்கிறியாம். நீ சொன்னதைத்தான் அவங்க செய்யப் போறாங்க. இனிமேல் உன் விருப்பம்போல இருக்கலாம்!" என்றார் சமுத்திரக்கனி.

அவள் முகத்தில் அறைந்துகொண்டு ஒப்பாரி வைத்தாள்.

தாணுமாலுக்கு ஏற்கனவே காயம்பட்டிருந்தது, இப்போது குழந்தையையும் காணவில்லை. இருவரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளை இருக்க விடாமல் செய்தது. கணவன் வசிக்கும் வீட்டிற்குச் செல்வதற்காக தாயிடம் கூறினாள். ஆனால் அவரோ இங்கு வேண்டாம் என்று சொல்லி தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினார்.

அவள் வர மறுத்ததும், "அவரோட வாழ்க்கையில் நுழைந்து மறுபடியும் தொந்தரவு பண்ணாதே. அவர் விரும்பிய பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கட்டும்!" என்றார்.

"இல்லை. அவளை அவர் விரும்பல. என்னை விட்டு விலக்கி நிறுத்தவே அப்படி ஒரு பொய் சொன்னேன். எனக்கு என் குழந்தையும் கணவரும் வேண்டும். நம்ம அப்பா செய்த தப்பாலும், மூணு குடும்பம் சீரழிஞ்சு போவதைப் பார்க்க முடியாமலும், என்னால் அவர் வாழ்க்கை அழிய வேண்டாம்னு தான் விவாகரத்து கேட்டேன். அப்புறமா தான் நடந்த விஷயங்கள் முழுவதுமா தெரிய வந்தது.

இப்போ நான் சிற்பிகா இல்லை... தாணுமாலின் மகள் பூமிகா! இத்தனை நாளும் ஒரு சுயநலவாதியின் மகளா இருந்து நடந்த எதுவுமே தெரியாம ஒரு நல்ல குடும்பம் சிதறிப் போக காரணமாகிட்டேன். இனிமேல் பூமிகாவாக மாறி எங்க அப்பா, கணவர், குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு வருவேன். என்னால் அவர்களுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க அம்மா. எனக்கு அப்பாவைப் பார்க்கணும். என் கணவரிடம் மனம் விட்டு மன்னிப்புக் கேட்கணும். என் குழந்தையைக் கையிரண்டில் அள்ளிக் கொஞ்சணும். அவர்கள் இல்லாம என்னால் உயிரோடு இருக்க முடியாது" என்று புலம்பினாள்.

"உன் கிட்டே கொஞ்சம் பேசணும். அதுக்குப் பிறகு நீ என்ன வேணும்னாலும் முடிவெடு. அந்தப் பெரிய மனிதர் தாணுமால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போதான் அவங்க ஊர்ல நடந்த அத்தனை விஷயமும் எனக்குத் தெரிய வந்தது. உங்க அப்பா செய்த பாவமும், அதனால் தண்டிக்கப்பட்ட மக்களையும் பற்றி நினைச்சு ரொம்ப வருத்தமா இருந்தது. அந்த மூணு பேரையும் பழி வாங்கணும்னு அவர் துடிச்சிட்டு இருந்தது, அவர் பேச்சிலேயே எனக்குத் தெரிய வந்தது.

உங்க அப்பா என் கணவர் என்பதால் செய்த தப்பிலிருந்து தப்பியோட நான் நினைக்கல. அதேநேரம் ஒரு பாவமும் செய்யாத மக்களை தண்டிச்ச உங்க அப்பா கண்டிப்பா தப்பி போகக் கூடாதுன்னு மட்டும் என்னால நினைக்க முடிஞ்சது. அதனால்தான் அவர் சொல்வதைக் கேட்பதற்கு முடிவு பண்ணினேன். நீயும் நடந்ததை எல்லாம் மறந்துட்டு அந்தப் பெரியவர் மனம் கோணாமல் நடத்துக்கோ. உன் கணவரைப் போல ஒருவர் கிடைப்பது அரிது. அவரை விட்டு விலகிட கூடாதுன்னு தான் அன்னைக்கும் கடுமையாகப் பேசி, நம்ம வீட்டு சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி உன்னை மட்டுமே பார்க்க முடியாதுன்னு சொன்னேன். உன் மனம் வருந்தும் விதமா பேசியிருந்தால் என்னை மன்னிச்சிடுடா! இனிமேலாவது கவனமா இருந்து உன் வாழ்க்கையைப் பார்த்துக்கோ" என்று அறிவுரை கூறினார்.

அவளும் தனது தவறைப் புரிந்து கொண்டு, அவரது தோளில் சாய்ந்து அழுதாள்.

அவள் தங்கை அனித்ரா வந்து அக்காவிடம் மன்னிப்புக் கேட்டு அவளை அணைத்துக்கொண்டாள். அருணும் கூட நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு மனதார மன்னிப்பு வேண்டினான். தாணுமாலுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் அவரது தம்பியின் குடும்பம் வீட்டிற்கு வந்துவிட்டது. அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததும், தனது தவறுகளைப் புரிந்துகொண்டு இனிமேல் இந்த வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்தார்கள்.

குணசீலி செய்த தவறுக்காக போலீசில் பிடித்து ஒப்படைக்கப்பட்டார்.

மித்ரா அதே வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றிருந்தாள். அந்த வீட்டில் இத்தனை பெரிய மாற்றம் நடந்திருப்பது சிற்பிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏற்கனவே தாணுமால் மீது ஏற்பட்டிருந்த பாசமும், குழந்தை, கணவன் மீது தோன்றிய அன்பும், அவள் மனதைக் கொஞ்சமாக மாற்றி இருந்தது. இப்போது முழுவதுமாக மாறிவிட்டாள் சிற்பிகா!

அவள் தாணுமாலின் இல்லத்திற்கு வந்து சேரும்போது வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பெரிய வீட்டில்தான் அனைவரும் வீற்றிருந்தார்கள். அவள் அங்கு நின்ற யாரையும் திரும்பிக்கூடப் பார்க்காமல், தாணுமாலின் அறையை நோக்கி ஓடினாள். அங்கு அவர் காயத்திற்கு மருந்திடப்பட்டு கட்டிலில் படுத்திருந்தார். 'அப்பா!' என்று கதறிக் கொண்டே காலில் விழுந்தாள். கண்களைத் திறந்து பார்த்தவர், அவளை அப்படி எதிர்பார்க்காமல் திடுக்கிட்டு விழித்தார்.

உடல் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் மெதுவாக எழுந்து அமர்ந்தார். "என்னம்மா, ஏன் இப்படி அழுதுட்டு இருக்கே? உன் உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னார்?" என்று கேட்டவர், அவளது காயம்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்தார்.

தாணுமாலின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் உள்ளுக்குள் சென்று வதைத்தது. அவரது காலை இறுகப்பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

அவர் என்ன ஏதென்று அறியாமல் பதறிப்போய் அவளைத் தூக்கி அமர வைத்தார்.

உரிமையாக அவர் தோளில் சாய்ந்துகொண்டு மௌனமாக கண்ணீர் விட்டாள் சிற்பிகா. அவர் அவளை அணைத்துத் தேற்றியதும், "என்னை மன்னிச்சிடுங்கப்பா! உண்மையைச் சரியாகப் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். இனிமேல் நீங்க சொல்வதுபோல கேட்டு நடப்பேன்" என்றாள்.

"என் பூமியைப் பற்றி எனக்குத் தெரியும். என் மகள் நிச்சயமா ஒரு நாள் எல்லாத்தையும் புரிஞ்சுக்குவான்னு நம்பிக்கையோடு இருந்தது வீண் போகல!" என்றார்.

"உண்மை தான்பா. அந்தப் பாவிகளால் உங்க வாழ்க்கையை இழந்து இத்தனை நாளும் தனியாகவே இருந்துட்டீங்க. இனிமேல் நான் உங்க மகள் பூமிகாவா இருந்து உங்களையும், நம்ம குடும்பத்தையும் நல்ல முறையில் வழி நடத்துவேன். நான் செய்த தப்பை மறந்து என்னை மன்னிச்சிடுங்க அப்பா!" என்று கேவினாள்.

அவர் மனம் நிம்மதியாக உணர்ந்தது. அன்று தனது குடும்பத்தை இழக்க நேர்ந்ததால், வேறு யாருக்கும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து நடந்து கொண்டார் தாணுமால். இப்போது, அவர் இழந்து விட்டதாக நினைத்த மகள் சிற்பிகாவின் வடிவில் வந்து நிற்கிறாள். இதை விட அவருக்கு வேறு என்ன வேண்டுமாம்?

"நீ என் உசுருடா. எதுக்காக இப்படி மன்னிப்புக் கேட்டுட்டு இருக்கே? இந்த வீடு உன்னோட வீடு; இங்கு இருக்கும் எல்லோரும் உன்னோட உறவினர்கள். நீ எதைப் பத்தியும் கவலைப்படாம எல்லாரோடும் பேசி, பழகி சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும். நம்ம வீட்டில் இருப்பவர்களை நாமதானே பார்த்துக்கணும்!"

இப்படித்தான் அன்றும் கூடக் கூறினார். திருமணமாகி வந்த புதிதில் இறுக்கமாக நடந்துகொண்டவர், சில நாளில் மனமிளகி அவளிடம் பேசிப் பழகினார். அவளுக்கு ஏதாவது ஆனால் துடித்துப் போனார். அவளைத் தனது சொந்த மகளாக நினைத்து ஒவ்வொன்றையும் செய்து தந்தார். அவளுக்காக அவரது லட்சியத்தைக் கூட விட்டுக் கொடுத்தார். அப்படி இருந்தும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று கலங்கினாள் முழுவதுமாக பூமிகாவாக மாறிப் போன சிற்பிகா!

இத்தனை நாட்களும் காசிநாதனின் மகள் சிற்பிகாவாக இருந்து தப்பு செய்தது போதும். இனிமேல் பூமிகாவாக மாறி புதிய வாழ்க்கையை ஏற்று அனுபவிப்போம் என்று திடமாக எண்ணிக்கொண்டு அப்பாவின் தோளில் சாய்ந்தாள்.

அப்போது, குழந்தையின் அழுகுரல் மாடியில் இருந்து கேட்டது.

கைவிரல்கள் நடுங்க அப்பாவின் தோளைப் பற்றி அழுத்தினாள்.

"என்னம்மா?" என்று அவர் பாசத்துடன் கேட்க, "என் குழந்தை எனக்கு வேணும்பா. ப்ளீஸ்பா... அவர் கிட்டே சொல்லி அதை எனக்கு தரச் சொல்லுங்க!"

அவள் இத்துடன் பூரணமாக சரியாகிவிட வேண்டும் என்று நினைத்து அவர், "வேந்தன் ரொம்பவும் நல்லவன்! நீயே போயி உன் கணவனிடம் பேசி குழந்தையைப் பார். இந்த விஷயத்தில் உங்களுக்கு இடையில் நான் தலையிட முடியாது இல்லையாம்மா!" என்றார்.

அவளும் புரிந்துகொண்டு மாடியறையை நோக்கி தயக்கமாக நடந்து வந்தாள்.

வயிறு பசியால் வேந்தனின் வாரிசு விடாமல் அழுதுகொண்டிருந்தது. அவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தாள். மித்ரா குழந்தையைக் கையில் வைத்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். வேந்தன் குழந்தைக்குத் தேவையானதை கொண்டு வந்து கொடுத்து, மகனை அழாதே என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் தனது அறையில் கண்டதும் அவளுக்கு உயிரே போனது போல் இருந்தது. இதில், எப்படி அவளுக்கு விட்டுக் கொடுத்து விலகிப் போவாளாம்? நடுக்கத்துடன் அருகில் சென்று கணவனின் காலைப் பற்றிக்கொண்டாள் சிற்பிகா. அவன், அவளைக் கண்டும் காணாததுபோல இருக்க, அவன் கால்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கண்ணீரை உகுத்தாள்.

மித்ரா அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுவிட, அவன் அசையாமல் அப்படியே நின்று இருந்தான்.

"என்னை மன்னிச்சிடுங்க! உண்மையான நிலவரம் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன். எனக்கு விவாகரத்து வேண்டாம்; நீங்களும் குழந்தையும் தான் வேணும்!" என்று விம்மினாள்.

அவனோ, "அன்னைக்கு நான் கேட்டதை நீ எனக்கு தந்துட்டே! நீ கேட்டதை நானும் உனக்குத் தந்துட்டேன். இனிமேல் நமக்கு இடையில் எதுவும் இல்லை. நீ யாரோ நான் யாரோ! என் குழந்தையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீ இங்கிருந்து வெளியே போகலாம்!" என்றான்.

அவள் "முடியாது. நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று அழுததும், "எத்தனையோ விதமா உன்கிட்டே நான் தாழ்ந்து வந்தும், நீ கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம திமிராவே நடந்துக்கிட்டே! என் குழந்தை வயிற்றில் இருக்குறப்போ அழிச்சிடுவதா சொல்லிக் கஷ்டப்படுத்தினே! விவாகரத்து பண்ணிட்டு என்னை விட்டுப் போயி சந்தோஷமா இருக்கப் போறதா சொன்னே! ஒரு கணவனா என்மீது கொஞ்சம் கூடப் பாசமோ, இரக்கமோ இல்லாம நடந்துக்கிட்டே! இப்போ வந்து யாரோ ஏதோ சொன்னாங்கன்னு மன்னிப்புக் கேட்டா, அதை நம்பி உன்னை ஏத்துக்க முட்டாள் இல்லை. என் மனைவியாக இருந்தா, நான் அவள் மீது காட்டிய பாசத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கணும்!" என்றான்.

அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைக்க, "ஒவ்வொரு முறையும் நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கும்போதெல்லாம் மித்ராவோடு என்னை இணைச்சுப் பேசுனியே, அவளும் ஒரு வயசுப் பெண், இன்னொரு வீட்டுக்கு வாழப் போகிறவள். இதையெல்லாம் அறிஞ்சா அவள் மனம் எந்த அளவுக்கு வேதனைப்படும்னு ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்து இருக்கியா? வாயில எது வந்தாலும் பேசிடணுமா? நான் சொன்ன எதையாவது இதுவரைக்கும் கேட்டு இருக்கியா? எனக்கு என் குழந்தை மட்டும் போதும்! அவனோடு ஆயுசு வரைக்கும் இருந்துட்டுப் போறேன். நீ கேட்ட விவாகரத்தை தந்துட்டேன். இங்கிருந்து எங்களைத் தொந்தரவு பண்ணாம போயிடு!" என்றான்.

இதற்கு மேலும் கணவனிடம் எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் திணறியவள், அழுதுகொண்டே கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் அருகில் சென்று காலைத் தொட்டாள். அது அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தவாறு இருக்க, குழந்தையின் காலில் முகத்தைப் புதைத்து கண்ணீரால் மன்னிப்பை யாசித்தாள்.

அவனைக் கையிரண்டில் அள்ளி முகமெல்லாம் முத்தமிட்டாள். உடனே அவன் பசியறிந்து பாலூட்டச் சென்றாள். அனைத்தையும் பார்த்தும் அசையாமல் நின்ற வேந்தன், அவள் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டு இருப்பதைக் கண்டதும், கண்களை அங்கிருந்து அகற்றாமல் இருந்தான்.

குழந்தை பசியாறியதும் அப்படியே உறங்கிவிட, அவளும் உடல் சோர்வால் அவன் அருகில் படுத்து உறங்கிவிட்டாள்.

மறுபடியும் குழந்தையின் அழுகையில் எழுந்தவள், அவனைப் பார்ப்பது, ரசிப்பது என்று இருந்தாள். வேந்தன் மனைவியிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

நடந்த விஷயங்கள் யாவும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வந்ததும் முன்புபோல பேசி உறவாடினார்கள். குணசீலியின் உண்மையான முகம் தெரியாமல் சிற்பிகாவை அவமதித்தது குறித்து, மாடிக்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டார் பல்லவி.

குழந்தை பிறந்திருப்பதால் அவளது அறையிலேயே முழுநேரமும் ஓய்வெடுத்து வந்தாள் சிற்பிகா. அவளுக்கு வேண்டிய அனைத்தையும் சரளாவும், அனித்ராவும் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்தார்கள். மகளையும் பேரனையும் பார்ப்பதற்காக தாணுமால் பாதி நேரமும் இங்கேயே இருந்தார்.

பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது. வீட்டில் சகஜ நிலை உருவாகியது. அவர்களைப் பற்றி அவதூறாக பேசிய பங்காளி குடும்பத்தை மீத நபர்கள் புறக்கணிக்க தொடங்கினர்.

நாட்களும் அதன் போக்கில் பயணித்துச் சென்றது. குழந்தை பிறந்து நாற்பத்தி ஒன்றாவது நாள் ஆனதும், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா ஆரம்பம் ஆகியது. 'தாணுமால்' என்ற பெயரை மகனுக்குச் சூட்டினான் வேந்தன். தன் மீதான அவனது பாசத்தில் மனமகிழ்ந்து போனார் தாணுமாலயன்!

வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையையும், சிற்பிகாவையும் வாழ்த்தினார்கள்.

மகள் குழந்தையுடன் கணவன் அருகில் நிற்பதைப் பார்த்து தாணுமாலின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இப்போதெல்லாம் அவர் வெளிவேலையில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. மகள், பேரக்குழந்தையுடன் முழு நேரமும் செலவிட்டார். வேந்தன் அவருடைய நிலபுலன்கள், காய்கறி சந்தைகள், மூன்று மாடியில் உள்ள பெரிய கடைகள், ஊர் மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் திறம்பட செய்து வந்தான்.

மனைவியிடம் காணப்பட்ட மாற்றமும், வலிய வலிய வந்து பேசிய விதமும், அவன் அமைதியாக இருந்தாலும் அருகில் சென்று அணைத்துக்கொண்டு படுப்பதும், அவன் திட்டினாலும், முறைத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு இருப்பதும், 'நீ எப்படி வேண்டுமானாலும் இரு, நான் இப்படித்தான்' என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

குழந்தை பிறந்த ஐம்பதாவது நாள் அத்தனை நாளும் பொறுமையுடன் இருந்தவன், "ரொம்பத் தாண்டி பண்றே. இதுக்கு மேலும் என்னால் பொறுத்துப் போக முடியாது!" என்று சொல்லி அவன் விருப்பம்போல நடந்து கொள்ள ஆரம்பித்தான். அவள் மறுப்பு எதுவும் கூறாமல் இசைந்து கொடுத்ததும், அதற்குப் பிறகான நாட்கள் கணவன் மனைவியின் வாழ்க்கையில் இதுவரையில் காணாத சுகங்களை வாரி வழங்கியது.

தாணுமால் அந்த வீடு, வீட்டடியை மகள் மற்றும் அவள் கணவனின் பெயரில் எழுதிக் கொடுத்தார். தன்னுடைய சொத்துக்களை நேர் பாதியாகப் பங்கு வைத்து மகள் பெயரிலும் தம்பியின் பெயரிலும் மாற்றிக்கொடுத்தார்.

அகிலன் இங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்தாலும், மித்ராவின் வாழ்க்கை அழிந்து போகக்கூடாது என்ற காரணத்தினால் அவளைத்தானே திருமணம் செய்து கொள்வதாக வேந்தனிடம் தெரிவித்தான்.

சிற்பிகாவிடம் கல்வி கற்று வந்த மாணவியர்கள் சிலர் அவ்வப்போது வந்து சென்றனர்.

கணவனின் கைகளில் திருமணத்தின் போது காசிநாதன் தந்திருந்த அனைத்தையும் கொடுத்து விட்டு, "எனக்கு இந்தப் பாவப்பட்ட பணத்தில் செய்த எதுவுமே வேணாம். இதெல்லாம் என்ன செய்யணுமோ நீங்களே செய்துடுங்க. எனக்குத் தேவையானதை வாங்கி தர எங்க அப்பாவும், என் கணவரும் இருக்காங்க. அதுபோல அந்தத் திமிர் பிடிச்ச சிற்பிகா செத்துப் போயிட்டா. இனிமேல், என்னைப் பூமிகான்னு மட்டும் தான் கூப்பிடணும்" என்று அன்பாகக் கோரிக்கை விடுத்தாள்.

அவன் மனைவியை அணைத்து உச்சியில் முத்தமிட்டான். 'பூமி, பூமி!' என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சினான். வீட்டில் உள்ளவர்களும் அவளது ஆசைப்படியே 'பூமிகா' என அழைத்தார்கள். அவள் யார் கேட்டாலும் 'பூமிகா' என்று மட்டுமே சொல்லி வாழ்ந்து வந்தாள்.

அத்தனை நாட்களாக எதிரும் புதிருமாக வாழ்ந்து வந்த வேந்தனும், பூமிகாவும் அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, முரண்படாத வகையில் கவிதைகளைப் போல ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

தவறு செய்த அனைவருக்கும் தண்டனையைக் கொடுத்து விட்டு எப்போதும் போல தனது கம்பீரம் குறையாமல் இருந்த ஐயனார், தாணுமாலையன் குடும்பத்தையும், அந்த ஊர் மக்களையும் சீரும் சிறப்புடன் வாழ அருள் புரிவாராக!


***சுபம்***
வெற்றி வேந்தன் 🥰 சிற்பிகா
தாணுமால்😍 தாத்தா❤ அவரோட பூமிகா...


கலவரத்துல , கட்டாயத்துல நடக்க இருந்த திருமணத்த நிறுத்தி நடக்குர திருமணம் .. அதுகான காரணம் பலிவாங்கும் படலம்.. பாதி தெரிஞ்சும் தெரியாம தவிக்கிற சிற்பிகா..

குணசீலி மாதிரி ஆளுங்கனால குடும்பத்துல என்ன நடந்தாலும் பழி சிற்பி மேல😒😒😒..

கதை ல ஒரு பிலாஷ்பேக் .. அத வச்சு தான் ஃபுல் கதையும் போகுது ...
😂 பட் அது என்னு சொல்லாமையே லாஸ்ட் வர ஓட்டிட்டாங்க😂😂 16 epi ல ஒரு ஹின்ட் குடுதாங்க.. லாஸ்ட் ல தா அது என்ன னு தெரியும்🥰...
ஊரையே அடிச்சு உளையில போட்டது னு சொல்லுவாங்கள்ள.. அது தா 😣..


பல்லவி , குணசீலி மாதிரி வில்லீஸ் லா இன்னமும் எல்லா குடும்பத்துலையும் இருக்காங்க யா😂😂..அவ்வ்வ்..

சிற்பி க்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே பொருமை தேவை😂😂..
வேந்தன் அ ரொம்ப காயபடுத்திட்டா 😒 பாவம்..
அன்னைக்கி சரளா மட்டும் இல்லனா 😱 வேந்தன் ஓட குழந்தை🙁🙁
அழகான வேந்தன் ஓட லவ் ❤ நைஸ் ஸ்டோரி..
 
Last edited by a moderator:

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
தெய்வம் நின்று கொல்லும்...
தப்பு செய்த அனைவருக்கும்
தண்டனை கிடைக்க
தவறை உணர்ந்து
திருத்திக் கொண்ட சிற்பிகா
தண்டனையில் இருந்து விடுதலை....
தவிர்த்து கொஞ்சம்
தவிக்க விட்டு
தன்னோடு இணைத்து கொண்டான்....
தாத்தா பேரு பேரனுக்கு
தாணுமால்கள் அருமை....
வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 💐 🤩
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
Karan Saran :

Super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️
Vendam and sirpika super
Thanumalyan name is different
But super story
All the best writer ji
 
Top Bottom