முரண்பாடாத கவிதைகள் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முரண்பாடாத கவிதைகள்

New updates

LATEST

santhi nagaraj

Active member
Joined
Jun 17, 2024
Messages
287
Reaction score
201
Points
43
#JN 2

#ஜோதிதமிழ்நாவல்ஸ்நாவல்போட்டி

#முரண்படாத_கவிதைகள்

#விமர்சனம்

குடும்ப உறவுகளுக்கிடையே நிகழும் உணர்வு போராட்டங்களும் படிவறியும் நிறைந்த கதை.

சிற்பிகா கதையோட நாயகி அவளோட திருமணத்தின்போது அதிரடியாக உள்ளே நுழைந்து அவரது திருமணத்தை நிறுத்தி கல்யாணம் செய்து கொள்கிறான் வெற்றி வேந்தன்.

சிற்பிகாவோட தந்தையை பழிவாங்குவதற்காக வெற்றி வேந்தன் அவ்வாறு அதிரடியாக சித்திகாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து உன் அப்பாவை உன்னை வைத்து தான் பழிவாங்க போகிறேன் என்று அவளிடம் சொல்ல சிற்பிக்கா தந்தை மீது இருக்கும் பாசத்தில் அவன் சொல்வதை நம்ப மறுத்து தந்தைக்காக அமைதியாக அவனிடம் மன்றாட.

மனைவியின் மன்றாடலுக்கு எல்லாம் மனமிரங்காத வெற்றி வேந்தன் அவளோட தந்தை காசிநாதன் இறப்பிற்கு காரணமாகிறான் இதனால் அவனின் மீது ஒரு வெறுப்போடு இருந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்புடன் நடந்து குடும்பத்தில் இருப்பவர்களை சண்டை மூட்டி பிடித்து விடுகிறாள்

வெற்றி ஏன் காசிநாதனை பழிவாங்க சிற்பியை மணக்கிறான்?அப்படி என்ன பழிவெறி காசிநாதன் மீது? காசிநாதன் அப்படி என்ன தப்பு பண்ணாரு என்று கதை நகர்கிறது.

வெற்றிப் பக்கம் நியாயமே இருந்தாலும் அவன் சிற்பியிடம் ஆரம்பத்தில் நடந்து கொண்ட முறை பிடிக்கவில்லை.

தானுமால் அவருடைய பொறுமையும் பாசமும் ரொம்ப நல்லா இருந்தது.

சிற்பி என்னதான் கோவமா நடந்துக்கிட்டாலும் அவள் மீது கோபம் வரல அவளோட சூழ்நிலையில் அவளோட உணர்வும் ரொம்ப சரியானது என்று தான் எனக்கு தோணுது.
உண்மை என்னென்று முழுசாக தெரியாத பட்சத்தில் தன் தந்தையை கொன்றவர்கள் மீது கோபம் வராமல் வேறு என்ன வரச் செய்யும்.

கதையோட நகர்வும் கதை மாந்தர்களின் கதாபாத்திரங்களும் ரொம்ப அருமையா தெளிவா இருந்தது சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:

ஜோதி

Administrator
Joined
Oct 16, 2024
Messages
265
Reaction score
300
Points
63
உங்கள் விமர்சனம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி

தாணுமால் அவளை எதற்காக தன் மகளாக நினைத்தார் என்பதற்கான பதிலை பல இடத்தில் கதை ஓட்டத்திற்கு ஏற்ப தந்து இருப்பேன்.

அவர் எதிரியின் மகளாக முதலில் நினைத்துப் பேசினாலும், பிறகு அவள் அப்பாவிற்காக அவரை எதிர்க்கும் இடத்தில் தன் மகள் இருந்தால் இப்படி தானே தன்னிடமும் பாசமாக இருப்பாள் என்று எண்ண வைக்கும்.

அவர் வீட்டில் உள்ள நபர்கள் கூட அவரை விட்டு விலகிச் செல்லவும், பேச்சைக் கேட்காமல் இருக்கும் போது இவள் அமைதியாக இருப்பது அவரது பிடித்தத்தின் அளவை அதிகரித்து மகளாக எண்ண செய்யும்.

அவரது மகள் பிறந்த அதே நாளில் இவளும் பிறந்து இருப்பது, அவளது பேச்சு, நடைமுறைகள், இறந்து போன மகள் மறுபடியும் வர மாட்டாள் என்பதால் அவளையே தன் மகளாக நினைத்துப் பேசினார்.

இதை நான் பல இடங்களில் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.
 
Top Bottom