
முரட்டு நாயகன் ; கோபக்கார நாயகி
நாயகன் : வெற்றி வேந்தன்
நாயகி : சிற்பிகா
இன்றைய தினம் சிற்பிகா மற்றும் வேந்தனின் முதல் இரவு. வேந்தன் அறைக்குள் நுழைந்ததிலிருந்து சிற்பிகாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். ஆனால், அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் நின்றாள்.
வெளியே தெரிந்த பிறை நிலவு, இப்போது முழு நிலவாகக் காட்சியளித்தது. ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் சிற்பிகா இல்லை.
வேந்தன் தனக்கு ஏதேனும் செய்துவிடுவானோ என்ற பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. இது அவளது அப்பா பார்த்து வைத்த திருமணமாக இருந்திருந்தால், அவள் இப்படி இருந்திருக்க மாட்டாள். ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பது இல்லையே!
திருமண நேரத்தில் வேந்தன் வந்து செய்த அதிரடி மாற்றத்தால், முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை மாறிப் போயிருந்தார்.
அவளது அப்பா காசிநாதன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, மகளைப் பார்த்த பார்வையில் ஏக்கம் தெரிந்தது. ஊர்மக்கள், உறவினர்கள் முன்னிலையில் தந்தையை அவமதிக்க மனமில்லாமல், குனிந்த தலை நிமிராமல் நின்றாள் சிற்பிகா. இப்போதும் அவள் அப்படியேதான் இருக்கிறாள்!
பகலை அமைதியாகக் கடந்த அவளால், இரவை அவன் அறையில் கடத்த முடியுமா என்று தோன்றவில்லை.
வேந்தனின் பார்வையும், நடையும், எதையோ சாதித்துவிட்டதாகத் தோன்றிய தெனாவட்டும், மனைவி என்ற பதவியில் இருக்கும் சிற்பிகா மீது வந்த அடுத்த கட்ட ஆசையும், நேசமும் அவனை அவளருகில் செல்லத் தூண்டியது! அல்லது அவள் குனிந்து நிற்பதால் அருகில் செல்லத் தோன்றுகிறது போலும். அவன் சென்றான்... செல்கிறான்... சென்று கொண்டே இருக்கிறான்.
அத்தனை அருகில் சென்றும் சிலை போல் இருந்த சிற்பிகாவுக்கு உயிர் திரும்பவில்லை. அவளது தோளில் கை வைத்த அடுத்த நொடி, அத்தனை நேரமும் சூரியனைக் காணாமல் கூம்பிய செந்தாமரை போல் இருந்த அவளது முகத்தில் பலவிதமான உணர்வுகள் வந்து போயின. அவனது கை விரல்கள் அந்தரத்தில் நின்றன.
ஏன் வேந்தன் அவளது விருப்பத்தை மீறியும் அவளைத் திருமணம் செய்தான்? இருவருக்கும் இடையில் நடக்கப் போவது என்ன? முரடனிடம் சிக்கிய சிற்பிகாவின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள, தொடர்கதையின் அத்தியாயங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்.
Last edited by a moderator: