முரடன் 2 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முரடன் 2

New updates

LATEST

சீமா

New member
Staff member
Joined
Jul 17, 2026
Messages
6
Reaction score
2
Points
3
சென்னை

வக்கில் வரதன் வீடு...

தனது அறையில் குறுக்கும் நெருக்கமாக நடந்து கொண்டிருந்தவரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவர் தர்மபத்தினியான விசாலம்.

இனியும் இப்படி அமைதியாக இருந்தால் சரிவராது என்று நினைத்துவிட்டு,எதுக்கு இப்படி காலையிலிருந்து குட்டி போட்ட பூனை போல நடந்துகிட்டு இருக்கீங்க என்னன்னு சொன்னாதானே தெரியும்?.

மனைவியின் குரலை கேட்டவர் என்னத்த சொல்றது என்று சொல்லி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு மனைவியின் முகத்தை பார்த்தார்.

இப்ப வாய திறக்க போறீங்களா இல்லையா என்று சிறிது சத்தமாக விசாலம் கேட்க்க ஷாலினி பற்றி தான்
கவலையா இருக்குமா என்றார்.

என்னங்க ஆச்சு அந்த கொலகாரனை பற்றி எதாவது தெரிஞ்சிதா என்று கேட்க, ஆமா இத்தனை வருஷம் ஆகியும் ஷாலினிய அவங்க தேடிக்கிட்டு தான் இருக்காங்கமா. காலையில் தான் டிடெக்டிவ் ரங்கன் போன்ல சொன்னான் என்றார் மனைவியிடம்.

ஷாலினி உயிருக்கு ஆபத்துங்கிறதால தான் சிவத்தை இங்க வர வச்சிருக்கேன். சொத்து முழுவதும் குழந்தை பேரில் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனை. இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை
ஷாலினியின் தாய் தந்தை இருவரும் இறந்துவிட்டார்களென்று என வரதன் சொன்னார்.

அதைக் கேட்ட விசாலா சிவம் அண்ணா எப்ப வரன்னு சொல்லி இருக்கிறார்கள் என்று கேட்க நான் அவனிடம் நேரிடையாக பேசல தாயம்மாவிடம் தான் பேசினேன் அனேகமாக இன்னைக்கு இரவிற்க்குள்ளே வந்திடுவான்னு நினைக்கிறேன்.
நீ அவனுக்கு மேல இருக்கும் ரூம் தயார் பண்ணி விடு என்று தனது மனைவியிடம் சொல்ல,சரிங்க நான் போய் வேலைக்காரங்களிடம் சொல்லுகிறேன் என்று அங்கிருந்து எழுந்து சென்றார்.

போகும் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு யோசனையாக இருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு நடந்ததெல்லாம் நினைவிற்க்குள் வந்தது.

தலையசைத்து யோசனையை கலைத்தவர் இனி என்ன செய்வதென்று சிந்தித்தார். காரில் நடந்த விபத்தை பற்றி யாருக்கும் இதுவரை தெரியாது. அன்றைக்கு அவ்வழியாக வந்த சிவத்திற்கு மட்டும் தான் தெரியும்.

சிவம் தன் உயிராய் பாதுகாக்கும் மகளுக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தால் என்ன பண்ணுவானோ என்று தெரியவில்லையே என தானாக சுய சிந்தனையில் இருந்தார் வரதன்.

மாலை அந்தி சாயும் நேரத்தில் சிவம் வரதன் வீட்டை வந்து சேர்ந்தார். கார் சத்தம் கேட்டு வரதன் மனைவி விசாலம் வெளியே வந்து பார்க்க அங்கு சிவம் காரில் இருந்து இறங்கிகொண்டிருந்தார்.

அவரைக் கண்டு விசாலம் அண்ணா வாங்க வாங்க என்று மகிழ்ச்சியுடன் வரவேற்க வரேன்மா என்று தன் கூட பிறக்காத தங்கையை பார்த்து சிரித்தார் சிவம்.

ஷாலினி தாயம்மா அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க அண்ணா என்று விசாலம் கேட்க,அனைவரும் நல்லா இருக்காங்கம்மா.

உன் புருஷன் போன் பண்ண உடனே ஒன்னும் புரியல அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் என்று சிவம் சொல்ல,தெரியும் அண்ணா நீங்க இப்படிதான் பதற்றப்படுவீர்கள் என்று.
அந்த மனுஷனுக்கு எங்கெ அதெல்லாம் புரியப்போகிறது வயசானாவே இப்படித்தானே என்று சொல்லி விசாலம்
சிரித்தார்.

ஆமாம்மா எங்கே இருக்கான் என்று தனது நண்பனாகிய வரதனை கேட்க்கும் போதே வந்துட்டேன் டா என்று சொல்லிக்கொண்டே வரதன் வந்தார்.

குன்னூர்...

தந்தையின் அறைக்கு கதவை தட்டி உள்ளே வந்த ஷாலினி என்னப்பா வர சொல்லியிருந்தீங்களஆ?, ஆமாடா வரதன் போன் பண்ணி இருக்கிறான் என்னன்னு தெரியல உடனே வர சொல்லி இருக்கிறான்.நான் இப்ப கிளம்புறேன் நீ பத்திரமா இரு என்று சொல்ல சரிங்கப்பா நீங்க பார்த்து நல்லபடியா போய்ட்டு வாங்க நான் இங்க பாத்துக்குறேன் என்றாள்.

அப்புறம்டா இன்னைக்கு சாயந்தரம் மேனேஜர் எஸ்டேட் கணக்கு எடுத்துகொண்டு வருவார்.அதை கொஞ்சம் சரி பார்த்து கம்ப்யூட்டரில் அப்டேட் பண்ணி விடு என்று மகளிடம் சொன்னார்.

அப்பாஆஆஆ தினமும் இதை நான் தான செய்யுறேன் இன்னைக்கு செய்ய மாட்டேனா என்று கேட்க சும்மா சொன்னேன்மா.வழக்கமா சொல்ற அதே டயலாக் தானே என்று சொல்லி சிவம் சிரித்தார்.

சரிமா நான் கிளம்புறேன் என்று மகளுக்கும் அருகில் இருக்கும் தாயம்மாவிற்க்கும் ஆயிரம் அறிவுரைகள் சொல்லிவிட்டு தனது காரில் ஏறி சென்னையை நோக்கி பயணித்தார் சிவம்.

தந்தை கார் கேட்டை தாண்டி போகும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ஷாலினி. வழக்கம்போல திரும்பி வரும்போது தந்தையின் முகம் வருத்தத்தை சுமந்து வருவது இயல்பு ஆகிவிட்டது.

அப்படி என்ன ரகசியம் அந்த வக்கில் மாமாவிடம் என்று வழக்கமாக சிவம் சென்னை செல்லும் போதெல்லாம் யோசிக்கும் யோசனை அவளுக்குள் வந்து சென்றது.

அவள் தீவிர சிந்தனையைக்கண்ட தாயம்மா மேலும் அவளை சிந்திக்க விடாமால் என்ன கண்ணு அப்பா போயாச்சு இனி தண்ணியில் ஆட்டம் தானா என்று கேட்டு அவள் சிந்தனையை திசை திருப்பினார்.

தாயம்மாவின் பேச்சில் சுய நினைவுக்கு வந்த ஷாலினி அம்மா வழக்கம்போல் அப்பாகிட்ட மாட்டி விடக்கூடாது என்று சொல்ல, அது நீ வரும் நேரத்தை பொறுத்துதான் இருக்குது கண்ணு என்று சொன்னார்.

எப்படி மா சீக்கிரம் வர மனசு வரும் நீங்களே சொல்லுங்க என்று கேட்க, அது இல்லடா இருக்கிற சீதோஷ்ண நிலைக்கு சளி பிடிச்சுக்க கூடாது என்று தான் சொல்கிறேன்.ஆனால் எப்படியோ அப்பா கண்டு பிடிச்சிருவாங்க இதை என்று சொல்லி தாயம்மா சிரித்தார்.

சரி சரி நான் மட்டும் போயிட்டு கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து தங்கள் தோட்டத்திற்க்கு சென்றாள் ஷாலினி.

போகும் அவளையே பார்த்து கொண்டிருந்தார் தாயம்மா. எப்படி வாழ வேண்டிய பொண்ணு இப்படி இங்கே இருக்கிறியே கண்ணு. உண்மை தெரியும் போது உன் மனநிலை என்ன ஆகுமென்று தெரியவில்லையே.

எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய வயது வந்துவிட்டது. ஆனால் உண்மையை உன்னிடம் சொல்ல முடியாத சூழல் இருக்கின்றது. ஈஸ்வரா என் மகளுக்கு எந்த தீங்கும் வராமல் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மானசீகமாக தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டார் தாயம்மா.

தோட்டத்தின் இரும்புக்கதவை திறந்து அந்த ஒற்றையடி பாதையில் இருபுறமும் காய்த்து குலுங்கும் பூக்கள், காய்கறிகளை ரசித்துக்கொண்டே அவர்களுது மோட்டார் அறை இருக்கும் வீட்டிற்கு சென்றாள்

தங்களது தோட்ட வீட்டிற்க்கு வந்த ஷாலினி வீட்டின் கதவைத்திறந்து உள்ளே சென்று, முன் கதவை பூட்டி விட்டு தோட்டத்துக்கதவை திறந்து அங்கு இருக்கும் நீச்சல் குளத்திற்க்கு சென்று ஹோய்ஈஈஈஈஈஈஈஈஈ என்று சொல்லி குதித்தாள்.

ஹப்பாடா வாரத்தில் ஒரு நாள் மட்டுமே உன்னை பார்க்க அப்பா விடுறாங்க என்று தண்ணியை கைகளில் ஏந்தி நீரை முத்தமிட்டு சொன்னாள் ஷாலினி.

பல வருஷமா உன்னை பார்க்கிறேன். இருந்தாலும் எனக்கு நீ புதுசாகத்தான் தெரியிர என்று சொல்லி நீந்தி விளையாடினாள் ஷாலினி.

சிறுவயதிலே தாயம்மா இக்குளத்தில் ஷாலினிக்கு நீச்சல் கற்று கொடுத்துவிட்டார்.வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் சிவம்.

நீச்சல் கற்ற புதிதில் தினமும் இங்கு வந்து கொண்டுதான் இருந்தாள். ஒருமுறை காய்ச்சலாக இருக்கும் போதும் வீட்டில் சிவத்திடம் சொல்லாமல் இங்கே வந்து ஒரு வாரம் பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது ஷாலினிக்கு.

அன்றிலிருந்து வாரத்திற்க்கு ஒருமுறை மட்டுமே நீச்சல் குளத்திற்க்கு வர அனுமதி கொடுத்தார். சிலநேரங்களில் சிவம் வெளி ஊருக்கு செல்லும் போதெல்லாம் தாயம்மாவிடம் கெஞ்சி கொஞ்சி இங்கு வந்துவிடுவாள்.

அப்பொழுது தொடங்கிய பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது. வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தாலும் ஷாலினிக்கு கரைக்கு மேலே வர மனது வரவில்லை.

காலையில் சாப்பிடாமல் வந்தது இப்பொழுது மதிய உணவு நேரம் தாண்டி விட்டதால் பசி வந்துவிட்டது. சரி இன்றைய கோட்டா போதும் நாளைக்கு வரலாம் என்று சொல்லிக்கொண்டே மேலே வந்து உடையில் இருக்கும் நீரை பிழிந்து விட்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள் ஷாலினி.

கனியூத்...

மருமகளை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லுமாறு ரஞ்சிதம் சொல்ல சரிங்கத்தை என்று நிலா சொல்லிவிட்டு பூஜை அறையின் உள்ளே சென்று அங்கிருக்கும் விளக்கில் தீபத்தை ஏற்றி கண்ணை மூடி வழிபட்டால்.

என் மனப் விருப்பம் போல வாழ்க்கையை பல தடைகளுக்கு பிறகு கிடைக்க செய்ததற்க்கு நன்றி என்று தனது இஷ்டதெய்வத்தை மனதார வேண்டி வணங்கிவிட்டு வெளியே வர மணமக்கள் இருவரையும் அங்கிருக்கும் இருக்கையில் அமர வைத்து வழக்கமான சில சம்பிரதாயங்கள் செய்து முடித்தனர்.

மனைவியையே பார்த்துகொண்டிருந்த ரத்தினத்தின் அருகில் வந்த வர்ஷன் அப்பா அப்பா என்று அழைத்தான். சின்ன மகனின் அழைப்பைக் கேட்டு சொல்லுடா நாரதா என்று சொல்லி திரும்ப கமலா நம்பர் வேண்டாமா என்று வர்ஷன் கேட்க
வாயெல்லாம் புன்னகையாக இருக்காப்பா என்று கேட்டார்.

இங்க பாருங்க என்று தனது அலைபேசியில் கமலாம்மா என்று சேமித்த நம்பரை காட்ட ஏன் கண்ணு இதை ஏன் வந்த உடனே சொல்லவில்லை என்று மகனிடம் கேட்க்கும் போது அப்படியா சங்கதி என்று மனைவியின் குரல் கேட்டது.

ரஞ்சிதத்தின் குரலில் அதிர்ந்து திரும்பிய ரத்தினத்தை கண்டு அருகில் இருந்த வர்ஷன் மற்றும் ரஞ்சித் இருவரும் சத்தம் வராமல் வாய் மூடி சிரித்தனர்.
 

சீமா

New member
Staff member
Joined
Jul 17, 2026
Messages
6
Reaction score
2
Points
3
பேரப்புள்ளை எடுத்தாச்சு இன்னும் முன்னால் காதலிய மறக்க முடியலையோ என்று ரஞ்சிதம் கேட்க,ஆமாம் என்று அவசரத்தில் தலையசைத்தார் ரத்தினம்.

அவர் தலையசைத்ததைக்கண்டு அப்படியா சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் ரஞ்சிதம்.இப்ப உனக்கு சந்தோஷமாடா என்று சின்ன மகனை ரத்தினம் கேட்க்க லைட்டா என்று தந்தைக்கு பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவிச்சென்றான் வர்ஷன்.

சரிப்பா சடங்குகள் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது.இனி சம்பிரதாயப்படி பெண் வீட்டிற்க்கு மணமக்கள் சென்று வரனும் என்று குடும்பத்தின் மூத்தவர் ஒருவர் சொன்னார்.

அதற்க்கு நிலா தாத்தா என்னை மன்னிச்சிடுங்க இனி எனக்கு புகுந்தவீடும் பொறந்தவீடும் ஒன்றுதான் என்று சொல்லி கண்ணீர் சிந்தினாள்.

மகளின் வார்த்தையைக்கேட்டு நிலாவின் பெற்றோர்கள் ஒரே நேரத்தில் நிலாம்மா என்க அவர்கள் இருவரையும் நோக்கி கையெடுத்து கும்பிட்டு இன்றோடு உங்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம்
முடிந்துவிட்டது.

இனி என் ஆயுள் இறுதிவரை உங்களை பார்க்க நான் விரும்பவில்லை நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி கையைக்காட்டினாள் நிலா.

மகளின் பேச்சைக்கேட்டு பெற்றோருக்கு சொல்லொண்ணா வேதனைகளே. ஒற்றை மகளின் வேதனைக்கு நாமே காரணம் ஆகிவிட்டோமே என்று நிலாவின் தாய் தந்தை இருவருக்கும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

இதுவரை நிலா பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த ரத்தினம் இனியும் அமைதியாக இருப்பது சரியில்லை என்று உள்ளம் உணர்த்த,
அவளின் பெற்றோர்களை பார்த்து
இரு கைகளையும் வணங்கி தாங்கள் இதுவரை செய்த அனைத்திற்க்கும் நன்றி போய்ட்டுவாங்க காலமே அனைத்திற்க்கும் பதில் என்றார்.

சம்பந்தி அது வந்து என்று நிலாவின் பெற்றோர் சொல்ல,வேண்டாம் இதுவரை நடந்த அத்தனையும் போதும். தற்ப்போது தான் என் மகன் முகத்தில் நான் சிரிப்பையே பார்க்குறேன்.

அது கடைசி வரை நீடித்திருக்க நான் விரும்புகிறேன் நீங்க போயிட்டு வாங்க என்று ரத்தினம் சொல்லி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

இனியும் இங்கு இருந்தால் மரியாதை இருக்காது,நாம் செய்த செயல் அப்படி என்று இருவரும் மனதிற்க்குள் நொந்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள் நிலாவின் பெற்றோர்கள்.

ரஞ்சித் அங்கு வீட்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாயா என்று ரத்தினம் கேட்க, மாமா எல்லாம் தயாராக தான் இருக்கு என்று சொல்ல,சரி உன் பொண்ணையும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு வீட்டுக்கு போ எல்லா சம்பிரதாயமும் என் பசங்களுக்கு குறையில்லாமல் நடக்கனும் என்றார் ரத்தினம்.

அனைவரும் அவரை பார்க்க,மருமகளை பற்றி ஓரளவுக்கு தெரியும் என்ன முடிவு எடுப்பாங்க என்று. அதனால்தான் முன்னேற்ப்பாடாக ரஞ்சித் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்று ரத்தினம் சொல்லி விட்டு தன் வலது புற மீசையை முறுக்கிகொண்டே மனைவியை பார்த்து ஒற்றைக் கண்ணடித்தார்.

கணவனின் செயலில் உள்ளுக்குள் குளிர்ந்தாலும் கமலாவின் பஞ்சாயத்து
இன்னும் முடியாததால் வலது பக்கம் இடது பக்கம் முகத்தை முறுக்கி காட்டி விட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார் ரஞ்சிதம்.

இதுவரை தாய் தந்தை செயல்களைப் பார்த்த வர்ஷன் தந்தையிடம் சென்று,என்ன ஜேகே போட்ட பால் நோ பால் போல என்று சொல்லி சிரித்தான்.

மகனை முறைத்து பார்த்துக் கொண்டே எனக்கும் நேரம் வரும்டா,
அன்றைக்கு பாத்துக்குறேன் உன்னை என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

போகும்போது அவர் முகத்தில் புன்னகை வந்து சென்றது.மனதிற்குள் தன் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டார். என்றும் என் குடும்பம் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று.

மணமக்களை ரஞ்சித் வீட்டிற்க்கு சிலருடன் அனுப்பி வைத்துவிட்டு இருப்பவர்களுக்கு தங்க தேவையான வசதிகள் செய்து கொடுத்து,உணவு அருந்தி முடித்து படுக்க இரவு பதினொன்று ஆனது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு.

தங்கள் வீட்டு பால்க்கனியில் பேசிக்கொண்டிருக்கும் மகனையும் மகளையும் சிறிது தொலைவில் இருந்து பார்த்த ரத்தினம் அவர்களை நோக்கி வந்தார்.

காலடிச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க,நேரம் ஆகுது பேசியது போதும். போய் இப்ப தூங்குங்க இருவரும் என்று தனது பிள்ளைகள் இருவரிடமும் ரத்தினம் சொல்ல, இதோ போறோம்ப்பா என்று சொல்லிவிட்டு தங்கள் அறையை நோக்கி சென்றனர் இருவரும்.

சில அடி தூரம் நடந்து சென்ற வர்ஷன் திரும்பி தந்தையை பார்க்க தந்தையும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

தந்தையின் பார்வையோட அர்த்தம் புரிந்து சிரித்துக் கொண்டே,தனது கட்டை விரல்களை மேலும் மேலும் அசைத்து நையாண்டி காட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

மகனின் செயல்களை கண்டதும் சிரிப்பு வந்தது ரத்தினத்திற்கு.இன்னும் அதே குரும்புகள் சிறுவயது போலவே. ஆள் வளர்ந்து விட்டான் ஆனால் இவனின் செயல்கள் இன்னும் மாறவில்லை என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டே அங்கே இருந்து நகர்ந்து தனது அறைக்கு சென்றார் ரத்தினம்.

தனது அறைக்கு வந்த வர்ஷன் ரெஸ்ட் ரூம் சென்று ப்ரஷ் ஆகிவிட்டு மெத்தையில் படுத்து கண்கள் மூட உறக்கம் தழுவிக்கொண்டது.

நன்கு உறங்கி கொண்டிருந்தவன் ஜில்லு என்று சொல்லிக்கொண்டே அதிர்ந்து கண்விழித்தான். பிறகு படுத்திருந்த வாக்கிலே டேபிள் மேல் இருக்கும் மொபைலை எடுத்து மணியை பார்க்க வழக்கமாக வரும் அதே விழிப்பின் நேரம் நான்கு மணியைக்காட்டியது.

இனி உறங்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தவன் தனது அறையின் உள்ளே இருக்கும் உள்ளரையின் கதவை திறந்து, உள்ளே சென்று மின் விளக்கை உயிர்பிக்க அந்த அறை முழுவதும் இரண்டு விழிகள்,நீண்ட பின்னல் கொண்ட ஜடை,மழை, மழையில் நனைந்த பெண்ணின் பின்புற உருவம் என்று சுவர்கள் முழுவதும் ஓவியங்களாக
வரையப்பட்டு இருந்தது.

பல நாட்க்களாக தன்னை தாக்கும் இருவிழிகளின் பிம்பத்தை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் வர்ஷன்.

நான்கு வருடமாக தன் தூக்கத்தை பறித்த இரு விழிகளை பார்த்து கேள்விக்கணையை தொடர்ந்தான் வழக்கம்போல்.

எங்கடி இருக்க ஜில்லு..... உன்னை தேடி நாலு வருஷமா அலைஞ்சிட்டேன் இதுவரை என் கண்ணுக்கு கிடைக்கல.

அம்புபோல நெஞ்ச குத்தி கிழிக்கிறதுடி இந்த கோலி குண்டு கண்ணு ரெண்டும்.
தினமும் கனவில் வந்து என்னை இம்சிக்கிறியே என்றைக்கு தான் உன் முகத்தை காட்டப்போறடி கண்ணம்மா.

வெளியே சிரித்து ஜாலியா இருக்க போல இருந்தாலும் உள்ளுக்குள் உன்னோட கண்ணு என்னை கொன்று திங்கிறதுடி.

எவளையும் ரசித்து இதுவரை பார்த்ததில்லை. இந்த நாலு வருஷமா உன் கண்ணுக்கு சொந்தமான உருவத்தை தேடி அலையிறேன்டி.

சில நாட்க்களாகவே உன் கண்ணு என்னை ரொம்ப படுத்துறுதுடி. ஒன்னு மட்டும் உள்ளம் உணர்த்திகிட்டே இருக்கு உன்னை விரைவில் சந்திக்கப்போறேனு.

பகலில் சூரியனைப்போலவும்
இரவை ஆளும் நிலவைப்போலவும் உன்னை பற்றிய கனவு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதற்க்கு என்றைக்குதான்டி முடிவு.

எங்கடி இருக்க?

ஒருத்தன் நாலு வருஷமா உனக்காக காத்திட்டு இருக்கானு தெரியுமா ஜில்லு?.

முதல் முதல் கனவில் வந்த போதே என்னை இந்த கண்ணு பித்தாக்கிட்டுடி.
தொடர்ந்து வந்து உள்ளுக்குள் என் ரத்தத்தோட உன் நினைவு கலந்துடுச்சி.

வாழ்க்கையில் ஒரு முறை உன்னை பார்த்துட்டேனா அதுக்கு பிறகு உன்னை எந்த சூழ்நிலையிலும் இழக்க மாட்டேன்டி.

உன்ன பற்றி தெரிஞ்சதையும் என் கனவில் இந்த நான்கு ஆண்டுகளாக வந்ததையும் வைத்து தான் இத்தனை சித்திரம் வரைஞ்சிருக்கேன்.

உன் முகத்தை மட்டும் இதுவரை காட்டலையே ஏன்டி??? மனுஷனை இப்படி அலைய வைக்கதான் என் கனவில் வந்து என்னை படுத்தி வைக்கிறியா சொல்லுடி என்று வழக்கம் போல மான்விழியாளின் கண்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தான் வர்ஷன்.

பின்னர் அங்கிருக்கும் பிளேயரை ஆன் பண்ண அதில் வழக்கமாக அவன் கேட்க்கும் அந்த பாடல் ஒலித்தது....

முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி. ...

பாடலோடு அவனும் சேர்ந்து பாடிக்கொண்டே அங்கு இதுவரை அவன் வரைந்து வைத்த ஓவியங்களை பார்த்துக்கொண்டே இன்று கனவில் கண்ட நிகழ்வை வரைய ஆயத்தமானான்.

ஓவியப்பலகையின் முன்னே சென்று இருவிழிகளை சில நொடிகள் மூடி மனக்கண்ணில் அந்த நிகழ்வை கொண்டுவந்தான் வர்ஷன்.

பிறகு கண்கள் திறந்து கள்ளியின் கண்களையும் சில நிகழ்வுகளையும் வரைய தொடங்கினான்.

சென்னை

ரங்கன் துப்பறிவு அலுவலகம்

சார் எங்க கிட்ட பொறுப்பை நீங்க ஒப்படைச்சிட்டீங்க இல்லை இனி கவலை வேண்டாம். இவர்கள் மூவரையும் விரைவில் கண்டுபிடித்து சொல்கிறேன்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்க வேறு யாரிடமாவது இந்த அசைமெண்டை கொடுத்து கொள்ளுங்கள் என்று சிறிது கராராக சொன்னார் ரங்கன்.

அய்யோ சார் அப்படி ஏதும் இல்லை. இந்த பீல்டில் உங்க நிறுவனம் தான் மிகவும் பிரபலம் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகுதான் தமிழ்நாட்டிற்க்கு வந்தேன்.

இல்லை என்றால் எங்களின் குடும்ப பெயரை பயன்படுத்தி வடநாட்டிலே கண்டுபிடிக்க சொல்லியிருப்பேன்.
இது கொஞ்சம் சீக்ரெட்டான விஷயம் அதனால் தான் உங்களை தேடி வந்திருக்கேன்.

தவறாக நினைக்க வேண்டாம் கடந்த 22 வருடங்களாக எனது பாட்டி தனது மகன் குடும்பத்திற்க்காக காத்திருக்கிறார் என்று சொல்லி முடித்தான் அந்த புதியவன்.

சரி நம்பிக்கையோடு போங்க சார் விரைவில் உங்களுக்கு நல்ல பதிலை சொல்கிறேன் என்று ரங்கன் சொல்ல அதற்கு அந்த புதியவன் நேற்றே உங்களை நேரில் பார்த்து பேசமுடியவில்லை.

உங்கள் அசிஸ்டெண்டிடம் விபரங்களை சொல்லிவிட்டு சென்றேன். அதான் இன்றைக்கு உங்களை நேரில் பார்த்து பேசலாம் என்று வந்தேன் சார் என்று புதியவன் சொல்ல அப்படிங்களா சந்தோஷம் என்று சொல்லி அவனுக்கு விடைகொடுத்தார் ரங்கன்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த புதியவன் தனது காரில் ஏறி அமர அந்த ரோட்டில் சீறி பாய்ந்தது அந்த கார்.

காரின் இருக்கையில் இருந்த புதியவன் தனது கையில் இருக்கும் அலைபேசியின் கேலரியை திறந்து அதில் இருக்கும் புகைபடத்திடம் பேசினான் மனதிற்குள்.

மாமா எங்கே இருக்கீங்க உங்களை தேடத்தொடங்கி ஐந்து ஆண்டுகளை கடந்து விட்டேன் ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

என்றாவது உங்களை நேரில் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் பாட்டிமா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நானும் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
விரைவில் உங்களை கண்டுபிடித்து பாட்டியின் முகத்தில் மலர்ச்சியை வர வைப்பேன் என்று சொல்லிக்கொண்டான்.

சரி வாங்க அந்த புதியவன் யாரென்று பார்க்கலாம்....

வடநாட்டு ஆண்களுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் பெற்றவன்.பெயர் நிகிலேஷ் சந்தர்,வடமாநிலமான அஸாமில் மிகவும் பிரபலமான இதய அறுவைசிகிச்சை மருத்துவன்.

தாய் தந்தை சிறுவயதிலே இறந்துவிட பாட்டியிடமும் தாய்மாமன் அன்பிலும் வளர்ந்தவன்.ஆண்களுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் பெற்ற
ஆணழகன்.

கல்லூரியில் இருந்தே கூடப்படித்த தோழி காதல் என்று சிலவருடங்களாக தொந்தரவு கொடுக்கும் வசீகரன்.பல கோடி சொத்துக்களுக்கு வாரிசானவன்.
ஆனால் எளிமையையே கடைபிடிப்பவன்.

காதல் வெறும் பொழுது போக்கென்ற எண்ணம் ஆழமாய் நெஞ்சில் பதிந்துவிட்ட இறுமாப்பில் திரிபவனை அசைத்து பார்க்கும் ஆயுதமானவளை விரைவில் சந்திக்க போகிறான் என்று தெரியாமல் கட்டுக்கடங்காத காளையாக மருத்துவமும் பாட்டி இரண்டுமே இரண்டு கண்களாக திரிந்து கொண்டிருக்கிறான்.

அஸ்ஸாம் அரண்மனை

நிகி எங்க போயிருக்கானு தெரியுமா தெரியாதா என்று அந்த ஆஜானுபாகுவன உருவம் கத்திக்கொண்டிருந்தது.

மேடம் எங்கள் யாருக்கும் சார் எங்கே போயிருக்கிறார் என்று தெரியவில்லை என்று அதே பதிலை அங்கு இருப்பவர்கள் சொல்ல கண்ணில் கோபக்கணலுடன் அந்த உருவம் திரும்பி பார்த்தது.

சிறிது நிமிடம் யோசித்துவிட்டு சரி சவிய தவிர நீங்க எல்லாரும் போங்க என்று அந்த பெண்மணி சொல்ல அனைவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சவி நீ போய் நான் அத்தைய பார்க்கனும் என்று சொல்லி அனுமதி வேண்டிக்கொண்டு வா என்று சொல்ல அதை கேட்ட அந்த நடுத்தர வயது பெண்மணி அக்கா என்று இழுத்தார்.

என்ன சவி வழக்கம் போல அந்த கிழவி என்னை பார்க்க அனுமதிக்கமாட்டாங்களா என்று கோபக்கணலுடன் சொல்ல ஆமாங்கக்கா என்று சொன்னார் சவி.

என்றைக்கு இருந்தாலும் இந்த அரண்மனைக்கு என் மகள்தான் வாரிசு அதை அந்த கிழவிக்கு முதலில் புரியவைக்கனும் என்று சொல்லும் போது அந்த பெண்மணியின் அலைபேசி அழைத்தது.

யார் என்று பார்த்துவிட்டு புருவத்தை சுருக்கி சில நொடிகளுக்கு பிறகு அழைப்பை ஏற்க்க அங்கு சொல்லபட்ட செய்தியில் இதோ நான் வரேன் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

சவி உடனே நம்ம தோட்ட வீட்டிற்க்கு போகனும் சீக்கிரமா வா என்று சொல்லிவிட்டு வேக எட்டுக்களுடன் அந்த அரண்மனையின் ஹாலில் இருந்து வெளியேற அந்த உருவத்துடனே சவியும் சென்றார்.

அஸ்ஸாம் பண்ணைவீடு...

வேகமாக வரும் காருக்காக காவலாளி அந்த இரும்புக்கேட்டை திறக்க கார் உள்ளே சீறிப்பாய்ந்து சென்று போர்ட்டிக்கோவில் போய் கார் நிற்க்க, கதவை திறந்து அந்த பெண் உருவம் இறங்கி வேகமாக உள்ளே செல்ல அந்த உருவத்தின் பின்னே சவியும் சென்றாள்.

உள்ளே வந்த இருவரும் மேலே செல்லும் படியில் ஏறி மாடியில் இருக்கும் கடைசி அறையின் கதவை நோக்கி செல்ல கதவும் திறந்து கொண்டது.

இருவரும் உள்ளே சென்று அங்கு இருந்த உருவத்தை பார்க்க ஆமாம் என்று தலையசைத்த அவ்வுருவம் அருகில் வந்து அணைத்துக்கொண்டது.

சிறிது நேரம் மௌனமாய் கண்ணீர் வடித்துவிட்டு வசு என்று அழைத்தது அந்த புதிய உருவம். அக்குரலைக்கேட்டு சொல்லுங்க அண்ணி என்றாள் அரண்மனையில் இருந்து வந்த உருவத்தின் சொந்தக்காரியான வசு என்னும் வசுந்தரா.

உன்னோட இத்தனை வருட வேண்டுதல் பலித்துவிட்டது வசு என்றாள் அந்த புதிய உருவத்தின் சொந்தக்காரியான மது.ஆமாம் அண்ணி என்று சொல்லி விட்டு அங்கு படுத்திருக்கும் உருவத்தை நோக்கி சென்றாள் வசுந்தரா.
 

சீமா

New member
Staff member
Joined
Jul 17, 2026
Messages
6
Reaction score
2
Points
3
பெட்டில் அனைத்து மருத்துவ சாதனங்களையும் பொருத்தி உறங்கி கொண்டு இருந்த உருவத்தின் அருகில் சென்று மௌனமாக கண்ணீர் வடித்தாள் வசுந்தரா.

என்னங்க உங்க வசு வந்துருக்கேங்க. எப்போ கண் விழித்து உங்க வாயால தாரா என்று கூப்பிடப்போறீங்க? நம் பொண்ணு வளர்ந்து இன்றைக்கு பெரிய டாக்டரா இருக்காங்க.

இத்தனை வருஷமும் உங்க தங்கச்சி
அவ படிச்ச படிப்பை வைத்து உங்களை காப்பாத்திட்டாங்க. என் ஜீவிய என்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு கண்களை மூடி மௌனமாக கண்ணீர் விட்டாள் வசு.

வசு இத்தனை வருஷம் அழுதது போதும் அதான் உன் ஜீவிய காப்பாத்திட்டேன்ல இன்னும் ஏன்மா அழர என்று மது வசுவிடம் கேட்டாள்.

அண்ணி என்னை பற்றி தெரிஞ்சி நீங்க இப்படி கேட்க்கலாமா?? இத்தனை வருஷம் நான் உசுரோட இருந்ததற்க்கு காரணமே என் ஜீவிக்கு நினைவு வந்து என்னை தாரானு கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் தான்.

நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டீங்களா அண்ணி என்று வசு மதுவிடம் கேட்க்க அதற்க்கு அவள் எப்படி மறக்க முடியும். இன்றைக்கு என் அண்ணன் இந்த நிலமையில் இருக்க காரணமான அந்த குடும்பத்தை மொத்தமா அழிக்காம நான் விடமாட்டேன்.

எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க சாவு என் கையால தான் வசு இதில் எந்த மாற்றமும் இல்லை என்று பழி உணர்ச்சியை முகத்தில் பூசிக்கொண்டு சொன்னாள் மது.

சரி நிகி எங்கே போயிருக்கானு எதாவது தெரிஞ்சிதா இல்லையா மா என்று மது கேட்க்க இல்லைங்கண்ணி. அவன் எங்கே போயிருக்கானு யாருக்கும் தெரியலை.

என்ன வசு சொல்லுற, அவனை தொடர்ந்து கண்கானிக்க உன்கிட்ட சொல்லி இருக்கேன் தானே இப்போ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்.

அவனுக்கு மட்டும் எல்லா உண்மையும் தெரிஞ்சது கொஞ்சம் உன் கனவு கோட்டைய நினைத்து பாரு என்ன ஆகுமென்று என மது வசுவிடம் சொல்ல, அதைக்கேட்ட வசு அண்ணி நீங்களும் தான் உடந்தை அதை மறந்துடாதீங்க என்று மதுவிடம் வசு கேட்க்க சரி சரி விடு நமக்குள்ள ஏன் இந்த கோபம் என்றாள் மது சமாதானமாக.

முரடன் வருவான்…
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
அடேயப்பா எத்தனை குடும்பம்

எத்தனை நபர்கள்

ரைட்டரே ஷாலினி வீடு ஒண்ணு நிகில் ரெண்டு வர்ஷன் மூணா

வர்ஷன் கண்ணில் வருவது தான் ஷாலினியா

நிகில் வீட்டில் சொல்வது அவங்க வீட்டை தானா
 
Top Bottom