மின்னல் 26 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மின்னல் 26

New updates

LATEST
Joined
Aug 29, 2025
Messages
398
Reaction score
398
Points
63
1000135154.jpg

அனைவரும் உணர்ச்சிகரமாக நின்றிருக்க, பாரி மென்மையாக, "முகை..." என்று மனைவியை அழைத்தான். அவன் அழைத்த குரலில் இருந்த பாசமும் உரிமையும் அவளை அவனை நோக்கி இழுக்கவும் நறுமுகை தயக்கமின்றி கணவனின் அருகில் வந்து நின்றாள்.

பாரி தன் கைகளை அவளது கைகளோடு கோர்த்துக்கொண்டு, சந்திரன் மற்றும் தாரணியின் அருகே அழைத்துச் சென்று, இருவருமே ஒரே நேரத்தில் குனிந்து சந்திரன் மற்றும் தாரணியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.

அவர்களின் இந்தச் செயலையும், அந்தத் தம்பதியின் இணக்கமான தோற்றத்தையும் கண்ட சந்திரன் மற்றும் தாரணிக்கு கண்கள் பனித்தன. அவர்கள் இருவரின் தலைகளையும் பாசத்துடன் வருடி, "நல்லா இருங்கப்பா... நீங்க எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்," என்று நெகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தனர்.

இத்தனை வருட ஊடலும், பிரிவும் கரைந்து, அந்தப் பெரியவர்களின் ஆசியுடன் அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் கண்கலங்கினர்.

ஒரு பக்கம் விருந்து தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரின் மனமும் மகிழ்ச்சியில் இருந்தாலும், மகள் சந்திரிகா மட்டும் எங்கே இருக்கிறாள் என்று தெரியாத தவிப்பு ஒருபுறம் வேலன் குடும்பத்தினரை வாட்டியது.

இந்தச் சூழலில், வசீகரன் குடும்பத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பாரி, தற்செயலாகப் பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான். அந்த அறையின் அமைதி அவனுக்கு ஏதோ ஒரு உணர்வைத் தந்தது. சுவரில் வரிசையாக இருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், சட்டென்று ஒரு புகைப்படத்தின் முன் அப்படியே நின்றான். அதில் இருந்த உருவம் அச்சு அசல் அவனைப் போலவே இருந்தது.

"இது... இது நான் இல்லையா?" என்று அவன் வியப்புடன் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனுக்குப் பின்னால் வந்த சந்திரன் அங்கிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த அடுத்த நொடி, சந்திரனின் முகம் வெளிறிப் போனது. அந்தப் புகைப்படத்திற்கு அருகில் சென்று சுட்டிக்காட்டிய சந்திரன், "இது... இது சந்திரிகா!" என்று அதிர்ச்சியுடன் சொன்னார்.

"உனக்கு என் தங்கச்சியைத் தெரியுமா டா சந்து?" என வளவனும் அதிர்ச்சியோடு கேட்க, அங்கு ஒரு கணம் நிசப்தம் நிலவியது.

“வேகமாக திரும்பிய சந்திரன் தன் நண்பனைப் பார்த்தவர் நறுமுகையோட அம்மாவே அவதான் டா!" என்னும் குண்டை தூக்கிப் போட, அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் நிலைகுலைந்து போயினர்.

"என்னது... நறுமுகையோட அம்மாவா?" என வளவன் வீட்டினர் அதிர்ச்சியில் கத்தினார்.வசந்திற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இத்தனை வருடங்களாகத் தாங்கள் தேடிக்கொண்டிருந்த சந்திரிகா, நறுமுகையின் தாயா? அப்படியானால், நறுமுகை தங்களுக்குத் தெரியாமலேயே இவ்வளவு நாட்களாக தன் ரத்தபந்தத்துடன் தான் இந்த வீட்டில் இருந்தாளா?

வேலன் அதிர்ச்சியில் உறைந்து போய், தழுதழுக்கும் குரலில், "தம்பி... அப்போ, நறுமுகை என் பேத்தின்னு சொல்றீங்க?" அப்படிதானேனு கேட்டார்.

சந்திரன் பெருமூச்சுடன் அந்தப் பழைய சோகக் கதையை விவரிக்கத் தொடங்கினான். "மாமா, கார்கில் போர்ல இந்திரன் வீரமரணம் அடைஞ்சிட்டான் அந்தச் செய்தி வந்த அதே நேரத்துலதான் சந்திரிகாவுக்குப் பிரசவ வலி வந்திருந்தது. என் வீட்டுக்கு வந்த அந்தத் தந்தி மூலமாதான் இந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, சந்திரிகா அவனுக்கு மனைவிங்கிற விஷயமே எனக்குத் தெரியும்.

நான் பிசினஸ் விஷயமாக இலங்கையில் இருந்ததால் இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய் விட்டது.ஆனா, எங்க அப்பா இந்தத் திருமணத்தை ஏத்துக்கல. அவர் கடும் எதிர்ப்பு தெரிவிச்சதால, எங்க அம்மா சந்திரிகாவையும் குழந்தையையும் காப்பாத்தணும்னு அவங்களை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்துட்டாங்க. டெலிவரி ஆன சிறிது நேரத்துலயே சந்திரிகா இறந்துட்டான்னு மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். இதை மட்டும் எங்க அம்மா எங்களுக்கு தகவல் அனுப்பியிருந்தார். அந்தப் பச்சிளம் குழந்தையை எங்க அம்மா எடுத்து வளர்த்து ஆளாக்கியிருக்காங்க. அதுதான் நறுமுகை!" என்றார்.

அந்த அறையே மௌனத்தில் ஆழ்ந்தது. நறுமுகையின் பிறப்புக்கும், சந்திரிகாவின் இறப்புக்கும் பின்னால் வலி இப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.

அதைக் கேட்ட வேலன், பானு என்றவாறு ஹாலுக்கு தள்ளாடியபடி வந்து நின்றார். அவர் கண்கள் சிவந்து, முகம் வெளிறிப் போய் இருந்தது. சமையலறையில் மருமகளோடு பேசிக்கொண்டிருந்த பானுமதி, வேலனின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.

"என்னங்க ஆச்சு? ஏன் இப்படி அலறீங்க? என்னாச்சு?" என்று பதற்றத்துடன் கேட்டாள் பானுமதி.

வேலனுக்கு வார்த்தைகள் வராமல் தொண்டையை அடைக்க, சுவரைப் பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட திராணியற்றவராக, "பானு... பொன்னி... நம்ம பொன்னி உயிரோடு இல்லை பானு!" என்று கதறினார்.

அறையே ஒரு கணம் உறைந்து போனது. சமையலறையில் இருந்து வந்தவர்களும் இதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றனர். பானுமதிக்கு உலகம் சுழல்வது போல இருந்தது.

"என்ன சொல்றீங்க? பொன்னி உயிரோட இல்லைன்னா... என்னங்க சொல்றீங்க? நீங்க சொல்றது நம்ப முடியலையே!" என்று பானுமதி தன் கண்ணீரைத் துடைத்தபடி, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

வேலன் விம்மி அழுது கொண்டே, "ஆமாம்மா... உண்மைதான். நம்ம பொண்ணு செத்துப் போயிட்டா... ஆனா, அவளோட குழந்தை... நம்ம பேத்தி உயிரோட இருக்கா," என்றார்.

"அய்யோ கடவுளே என்னங்க சொல்றீங்க? குழந்தை உயிரோட இருக்கா? பொன்னிக்கு என்ன ஆச்சு? யாரு சொன்னா?" சொல்லுங்கனு பானுமதி விம்மிக்கொண்டே கேட்டாள்.

வேலன் தன் தலையைப் பிடித்துக்கொண்டு, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சந்திரன் சொன்னான்.நம்ப பொண்ணு... இப்போ இல்லை..." என்று சொல்லித் தரையில் அமர்ந்து தேம்பினார்.

பானுமதிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒரு நிமிடம் முன்புவரை சமையலறையில் மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தவள், இப்போது தன் மகளைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள்.

"கண்ணீர் வடிய நின்றவள்…குழந்தை… என்னங்க அப்போ நம்ப பேத்தி எங்க இருக்கா?" என பானுமதி கண்ணீருடன் கேட்க, இப்பொழுது அந்த வீட்டின் சூழலே தற்போது துக்கத்தால் கனத்துப் போனது.

சொல்லுங்கள் நம்ப பேத்தி? என்று அழ, வேலனின் கைகள் அங்கிருந்த நறுமுகையை சுட்டிக் காட்டியது.

பானுமதி அதிர்ச்சியில் உறைந்து போனாள். "என்னங்க சொல்றீங்க? நம்ம நறுமுகையா பொன்னியோட மகள்?" என்று சொல்லி, விழி பிதுங்கி நின்ற நறுமுகையை ஒரு நிமிடம் பார்த்தாள்.

நறுமுகைக்குத் தலை சுற்றியது.கடந்த மூன்று வருடங்களாக தான் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா வேலனும், பாட்டி பானுமதியும் இன்றுவரை தன்னை ஒரு பேத்தியாகத்தான் நடத்தினார்கள். ஆனால் இன்று திடீரென, "நீ என் மகளின் மகள்" என்று சொல்வது அவளுக்கு எதையோ உணர்த்தியது. அவளோ அதிர்ச்சியோடு தன் அண்ணன் வசீகரனையும், பெரியப்பா சந்திரனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

சந்திரன் கண்கள் சிவக்க, நறுமுகையின் அருகில் சென்றவர் தம்பி மகளை மென்மையாகத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவரது கண்ணீர் நறுமுகையின் தோளில் விழுந்து நனைத்தது.

"இத்தனை வருஷமா நீயும் எங்க அம்மாவும் எங்க இருக்கீங்கனு தெரியாம, எவ்வளவு தவிச்சிருப்பேன்னு உனக்குத் தெரியாது கண்ணு," நானும் பல இடங்கள்ல தேடினேன். ஏழு வருஷத்துக்கு முன்னாடி பெங்களூர்ல ஒரு காலேஜ்ல அம்மாவைப் போலவே ஒருத்தவங்களைப் பார்த்தேன். அவங்கள் பின்னாடியே போகும் போது அந்த கூட்டத்தில் மறைஞ்சிட்டாங்க. எங்கள் அம்மா போட்டோவைக் காட்டி நான் போய் விசாரிக்கும்போது அந்த ஏரியாவில் இருந்தவர்கள் இவங்களை நாங்க பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டாங்க."

சந்திரன் சொல்லச் சொல்ல, நறுமுகையின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. பெங்களூர் கல்லூரியில் படிக்கும்போது முதலாம் ஆண்டு கடைசி நாளில், பாட்டி ஏன் அவ்வளவு அவசர அவசரமாக வீட்டை காலி செய்துவிட்டு ஊரை விட்டு கிளம்ப வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது.

அன்று பாட்டி அவசரமாகப் புறப்பட்டதற்கு இதுதான் காரணமா?.

நறுமுகையின் கண்கள் கலங்கின. "அப்போ, என் அப்பா அம்மாவோட மரணத்துக்குப் பின்னாடி என்ன இருக்கு? ஏன் என்னை இவ்வளவு காலமா ஒளிச்சு வச்சாங்க?" பெரியப்பாயென்று தழுதழுக்கும் குரலில் கேட்டாள்.

அப்போது தூக்கக் கலக்கத்தில் ஓடி வந்த சிறுவன் முகிலன், நறுமுகையின் கால்களைக் கட்டிக்கொண்டு “அம்மா என்னை விட்டு எங்கே போனமா?” என்று நின்றான். அவனது பிஞ்சு முகத்தில் பயமும் குழப்பமும் கலந்திருந்தது.சுற்றி நடப்பவை ஒன்றும் புரியவில்லை.

சந்திரன் மெல்லக் குனிந்து, பேரனை தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவனது பிஞ்சு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவரின் கண்கள் மீண்டும் நனைந்தன. ‘என் தம்பி வம்சம் அழியலைனு மனதிற்குள் நினைத்துக் கொண்டார்’.ஆனால் சந்திரன் யார் என்பது தெரியாமல், அவரைப் பார்த்துக் குழம்பிப் போய் முகிலன் அழத் தொடங்கினான்.

நறுமுகை தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "முகி ... இவங்கதான் உன்னோட தாத்தா," என்றாள்.

சிறுவன் பயந்துபோய் நறுமுகையைப் பார்க்க, அவள் சற்றே விலகி,"இவங்க உன் அம்மாவோட பெரியப்பாவும், பெரியம்மாவும்," உன் தாத்தா பாட்டி செல்லமென சந்திரன்-தாரணியை அறிமுகம் செய்தாள்.

சந்திரன் தன் மகன் வசீகரனை அருகே அழைத்து, "அய்யா, இவன்தான் உன்னோட தாய் மாமன் வசீகரன்," என்றார். வசீகரன் தனது தங்கையின் மகனை தந்தை சந்திரனின் கைகளிலிருந்து வாங்கியவன், தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவனது கண்கள் அந்தச் சிறுவனிடம் தன் தங்கையின் சாயலைத் தேடின. ஆனால் அங்கு தெரிந்தது அவனது நண்பன் பாரியின் சாயல்…

"தங்கத்தோட பேர் என்ன?" சொல்லுங்களென வசீகரன் பாசத்துடன் கேட்க, சின்னவனோ பெருமையோடும் அதே சமயம் கொஞ்சம் கூச்சத்தோடும், "முகில் வேந்தன்," என்றான்.

முகில் வேந்தன், இப்போது தன் தாத்தா, பாட்டி மற்றும் மாமாக்களின் பாதுகாப்பான கைகளுக்குள் இருந்தான்.

ஆனால், நறுமுகையின் மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. 'என் அம்மா பெயர் சந்திரிகா ஆனால் இவங்க பொன்னி என்று சொல்லுறாங்கள்.ஏன் இத்தனை காலம் எங்களை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்? அப்பா அம்மா மரணத்தின் பின்னால் உள்ள மர்மம் என்ன?'

‘இது முதலில் எனக்கு தெரிந்தே ஆகணுமென்று நினைத்தவள்’ சந்திரனைப் பார்த்து, “பெரியப்பா, இத்தனை வருஷமாக ஏன் பாட்டி இப்படி தனியா இருந்தாங்க?,நம் குடும்பத்தை பற்றி ஏன் எனக்கு சொல்லவில்லை?” என்றாள்

மின்னும்…
 
senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
112
Reaction score
141
Points
43
தாயே எந்த ஃப்ளாஷ் பேக்கா இருந்தாலும் கேட்டுட்டு பொறுமையாக பொறுமை காக்கவும்
 
Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
ப்ளாஷ்பேக் கேட்டு மறுபடியும் ஊரை விட்டு போயிராதே முகை 😒
இனி போகவிடாம பாரி கயிற கட்டி பிடிச்சு இழுப்பான்
 
Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
இது என்னடா பிளாஷ்பேக்ல நறுமுகை பாரியின் மகள் என்று வருது

எல்லாம் ஒரே குடும்பம் சிதறி ஆங்காங்கு இவ்வளவு நாள் கிடந்து இருக்குதா
 
Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
159
Points
63
😂
View attachment 797

😂😂😂
 
Top Bottom