- Joined
- Oct 22, 2024
- Messages
- 369
- Reaction score
- 293
- Points
- 63
மாறனவனின் கணை 25(இறுதி அத்தியாயம்)
சேதுராமன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருக்க, தேவ் அவரையே வெறித்தப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் உண்மையென இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருந்தவை அவனைப் பார்த்து சிரிப்பது போல் தோன்ற, என்ன பேசுவான்???
ஒருத்தன் ஒரு விடயம் உண்மையென நம்பி அதனைக் கொண்டு அவன் வாழ்க்கையை கடத்தி இருந்தால், இதோ அவை யாரும் வெறும் மாயை என்றால், அவன் நிலை????
அங்கிருந்த யாராலும் இதற்கு என்ன தான் சொல்லிவிட முடியும்...
தன் அத்தை சொன்னவற்றை நம்பிய அவன் தவறா??? இல்லை இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாமல் சுப்பு மீது தவறை சித்தரித்த பூங்கொடியின் தவறா???
ஒரு பதினாறு வயது சிறுவனில் தொடங்கி இன்றுவரை அவன் அனுபவித்து கொண்டிருப்பதும், இதோ அவன் நிகழ்த்திய நிகழ்வுகளும் அவன் அனுபவித்த ரணத்தின் மிச்சமல்லவா?
மாறன் எதுவோ பேச வர,
வந்தனா தேவ் அருகே சென்றவள், அவனைப் பார்த்தபடியே மாறனிடம் "மிஸ்டர் மாறன், போகலாம். சிலருக்கு மனிதாபிமானம்னா என்னன்னு கூட தெரியல, அவங்க அவங்க சுயநலம் தான் இங்க பெரிசா முக்கியமா படுது, நாங்க மனிசன்னு சொல்லிக்கிற அளவுக்கு கூட இவங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை..." என்றவள் அதன்பின் அங்கே நிற்கவில்லை... சென்று விட்டாள்.
சேதுராமன் அவள் கரத்தை பற்றிய நொடி, "யாரோ ஒரு அனாதை பொண்ணு, யாரு கேப்பாங்கிற தைரியம் தான இப்படிலாம் பண்ண வெச்சிச்சு. பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்க வந்து சேருமாம். என் வாழ்க்கை அதுக்கு ஒரு உதாரணம். ஆனா பாருங்க கடவுள் அவங்க மூலமா என்ன வளர்க்க வெச்சு உங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கார்" என்றிருந்தாள்...
________________
அனைத்தும் நடந்து முடிந்து இதோ ஒரு வாரம் கடந்திருந்தது...
அந்த வீட்டில் அத்தனை அமைதி, வந்தனா யாரிடமும் இப்போதெல்லாம் பேசுவதில்லை...
தேவ் கிருஷ்ணன் அவனது பிழையை மொத்தமாய் தெரிந்து கொண்டதில் தன்னையே வெறுத்தான்.
அவன் செய்த குற்றம் அத்தனையையும் ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்ல அவன் தயாராக, மாறன் அதற்கு சம்மதிக்கவே இல்லை...
இதில் பெரிதாய் பாதிக்கப்பட்டவன் அவனும் தானே!
பலரின் பிழை அதில் இருக்க, அவன் மட்டும் தண்டனை அனுபவிப்பதில் மாறனுக்கு உடன்பாடு இல்லை...
ஆனால் தேவ் மனது அவனையே மன்னிக்க தயாராய் இல்லையே...
அவன் நிகழ்த்த நினைத்தவை அப்படியே நடக்கிவில்லை என்றாலும் செய்தவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன?
இத்தனை நாளாய் தான் செய்த தவறைக் கூட, வலி என்ற ஒன்றை கொண்டு நியாயப்படுத்தி செயற்படுத்த அவன் எண்ணி இருக்க, இங்கே மொத்த வலியும் பொய்த்து போன உணர்வு...
யாருக்காய் அவன் பழிதீர்க்க எண்ணினானோ இன்று அவரே குற்றவாளி கூட்டில் நிற்கின்றார்...
இதில் அவன் யாரை நோவது?
மாறன் மீது அவன் உருவாக்கிய அனைத்தும் போலி ஆதாரங்கள் தான். அவனிடம் பணத்துக்கென வாடகை தாயாய் இருக்க சம்மதம் சொல்லி வந்த பெண்கள், அவர்களை கொண்டே அவன் அந்த ஆதாரங்களை மாறனுக்கு எதிராய் திரட்டி இருந்தான்.
எது எப்படியாக இருந்தாலும், அவனது நோக்கம் அங்கே தவறு தானே!
அதனால் மாறன் என்ன சொல்லியும் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை...
தண்டனை அனுபவித்தே தீருவேன் என்றவனை சுப்புலட்சுமியும் புவியரசனும் தான் மாற்றி இருந்தார்.
அதன் பின்னும் அவர்கள் சொல்லுக்கு மறுத்துப் பேச அவனால் முடிந்திடுமா என்ன??
அவர்களுக்கு அவன் மேல் கோபம் எல்லாம் வரவில்லை... மாறாக அந்த நேரத்தில் அவன் வயதுக்கு என்னவெல்லாம் அனுபவித்துவிட்டான் என்ற கரிசனமே!
மாறன் தான் தாயிடம் சொல்லி அவனிடம் பேச வைத்திருந்தான்.
அவன் வந்தனாவின் காதலுக்குச் சொந்தக்காரன்.
அதனாலேயே மாறன் நடந்த அத்தனை வியடத்தையும் குடும்பத்துக்கு தெரியப்படுத்த எண்ணினான்.
இதன் பிறகும் தவறான புரிதலுக்கு அங்கே இடம் இருக்க வேண்டாம் என்பது அவனது எண்ணம்...
ஹிருத்திக்கின் விடயத்தில் கூட அவன் செய்த தவறுக்கான தண்டனை மட்டுமே கிடைக்கும்படி பேசி இருக்க, மாறனின் தலையீட்டில் சிறிது அவனது தண்டனை குறைந்திருந்தது.
எல்லாம் மறுபடியும் பழைய நிலைக்கு மாற இன்னும் காலம் எடுக்கும் என்று அவனுக்கு தெரியும்...
அதிலும் அவன் தந்தை யாரென்ற உண்மையுமல்லாவா அங்கே தெரிய வந்திருந்தது...
அவர்களது வாழ்க்கையின் ரணம் மொத்தமாய் தெரிய முதல், இது தெரிய வந்திருந்தால் நிச்சயம் அவனால் அவர்களை மன்னித்திருக்கவும் முடியாது ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது.
ஆனால் இப்போது 'தானும் தன் பங்குக்கு அவர்களுக்கு வலியை கொடுப்பதா?' என்ற பக்குவம் அவனிடம் இருந்தது.
இதோ இப்போது உடனடியாக எல்லாம் தந்தை என்று அவனால் அவரை நெருங்க முடியவில்லை...
அன்று அவன் அதிர்ச்சியாய் புவியரசனைப் பார்த்தபோது,
அவரோ 'நீ இதெல்லாம் நினைச்சு குழப்பிக்காத மாறா, உனக்கா எப்ப அப்பான்னு கூப்பிட தோணுதோ அப்ப அப்பாவா ஏத்துக்க' என்றிருந்தார்.
புவியிரசனுக்கும், அவரது எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்...
அவன் அவரது குழந்தை என்று அவன் பிறந்த அன்றே தெரிந்து கொண்டிருந்தவர், இத்தனை வருடமாய் படும் கஷ்டம் என்ன கொஞ்சமா???
இருந்தும் அவன் மனநிலையைப் பற்றி அந்த நேரத்திலும் அவர் நினைப்பது என்பது ஒரு தந்தையாய் அவரை அவனிடத்தில் உயர்த்தி இருந்தது...
மனதில் அனைத்தையும் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணியவனுக்கு, காலம் அதற்கான விடையை விரைவில் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
அன்று ஒரு வாரம் கழித்து வந்தனா அவளது மௌனத்தை உடைத்திருந்தாள்.
"மிஸ்டர் மாறன், என்னால இங்க இருக்க முடியல பைத்தியமே பிடிக்கப் போற மாதிரி இருக்கு, எனக்கு இங்க இருந்து தூரமா போகணும். வெளிநாட்டுல வேலை வாங்கி கொடுங்க" என்று வந்து நின்றாள்.
நடந்தவற்றை உள்வாங்கிக் கொள்ளவே அவளால் முடியவில்லை..
அவர்கள் மீது அவள் கொண்டிருந்த பாசமும் மரியாதையும் ஒரு மகளாய் ஒரு பெண்ணாய் அவளை மிகவும் வதைத்திருந்தது.
யாரிடமும் சென்று பேசவே கூச்சப்பட்டு போனாள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது என்ற எண்ணம் அவளிடம்...
இதோ அவளது வாழ்வில் கடந்தகால மிச்சமாய் இருந்தவை தானே இங்கே அத்தனை விளைவுக்கும் காரணம்...
ஒரு தந்தையாய் அவரை எத்தனை நேசித்து இருப்பாள். தன்னை அத்தனை பாசமாய் பார்த்துக்கொண்ட தந்தையா இப்படி என்று அவளால் ஜீரணிக்க முடியாது போனது.
அந்த அளவுக்கு சம்பவங்கள் அவள் மனதை ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தது
அவர்கள் முன்னே அவளால் நிச்சயமாக நடமாட முடியாது என்ற எண்ணமே அவளை அவர்களை விட்டுப் பிரிக்க காரணமாய் இருந்தது.
தன்னை காணும் போதெல்லாம் பட்ட வலி கண் முன் வந்து போகுமே! அது அவர்களை விட அவளைத் தானே அதிகமாய் வதைக்கும்...
இந்த பிரிவு கூட அனைவருக்கும் வலி தான். ஆனால் ஒரு இடைவேளை தேவைப்பட்டது. நடந்ததை மறக்கும் அளவுக்கு ஒரு இடைவெளி...
அது முடியுமா என்பது கேள்விக்குறி தான்...
ஸ்ரீநிதி பேசியும் எதுவும் அவளிடம் மாறவில்லை...
அதன்பின் சில வாரங்களிலேயே அவளது பிடிவாதத்தின் பெயரில் மாறன், மதுவந்தி இருக்கும் இடத்துக்கு அவளை அனுப்பி வைத்தான்.
அவள் சென்ற பிறகு மிகவும் உடைந்து போன தேவ் அவனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, அங்கிருந்து சொல்லாமலேயே கிளம்பி விட்டான்.
சேதுராமன், இப்போது நாதன் அறக்கட்டளையில் வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே நாட்களையும் கடத்திக் கொண்டிருக்கிறார்.
பூபதி மொத்தமாய் உடைந்து போயிருந்தார்.
அவரது மொத்த உலகுக்கும் வாரிசாய் ஒருத்தி வளர்ந்து நிற்கின்றாள்.
மாறன் அவரது பேரன் இல்லை என்று தெரிந்தும் ஏற்றுக்கொள்ள முடிந்த அவரது வரட்டு கௌரவத்தால் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
அது அவரைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கட்டும். ஆனால் அதற்காக ஒரு குடும்பத்தை அழிக்கும் அனுமதியாய் யார் கொடுத்தார்???
பிரிக்க வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது என்றாலும், அந்த எண்ணம் தானே இத்தனைக்கும் காரணம்...
நடந்த எதையும் மாற்ற முடியாது ஆனால் இனிமேல் நடக்கவிருக்கிறதை மாற்ற முடியுமே!
அதற்காக மாறனை சுப்புவிடம் மீண்டும் கொடுத்த போது, அவர் மறுக்கவே செய்தார்.
யாசகம் என்ற ஒற்றை வார்த்தையை கொண்டு, மகனை தன்னிடமிருந்து பிரித்து வைத்த அவரை, காலம் கடந்து தண்டிப்பதில் என்ன மாறிவிடப் போகிறது எனது சுப்புவின் எண்ணம்...
ஆனால் பூபதியோ 'என்னோட தப்புல ஒரு குடும்பமே அழிஞ்சிருக்கம்மா, அத என்னால மாத்த முடியாது, ஆனா இந்த தப்பையாவது திருத்த ஒரு வாய்ப்பு கொடு' என்று அவரிடம் அழுது கேட்டிருந்தார்.
அப்போதும் சுப்புவும் புவியும் அதில் மாறனின் முடிவு தான் என்று விட்டனர்.
இரு வாரம் என்று கெடு கொடுத்து அவனை தாயிடம் அனுப்பி வைத்த காலம், இனிமேல் உன் இஷ்டம் என்ற சாவியை அவனிடமே கொடுத்திருந்தது..
_____________________
நான்கு வருடங்களின் பின்...
"டேய் ஆர்யா, இங்க வா... உன்ன பிடிச்சேன் செத்தடா நீ" என்று கத்தியபடி வந்தனா வாண்டு ஒன்றை துரத்த, அவனோ அவளுக்கே போக்குக் காட்டி ஓடிக் கொண்டிருந்தான்.
"வந்தனாக்கா போதும், நீங்க வாங்க, கொஞ்சநேரம் விளையாட்டு அவனே வந்துடுவான்" என்ற மதுவந்தி, ஓடிக் களைத்து வந்தவளுக்கு குடிக்க பழக் கலவையை கொடுத்தவள், அவள் குடிக்கும் வேகத்தைப் பார்த்து,
"இது தேவையா? உங்கள கண்டா தான் அவன் மின்னல் வேகத்துல ஓடுவான்னு உங்களுக்கு தெரியாதா? வயசான காலத்துல இதெல்லாம் தேவையா கோபால்?" என்று கேட்க,
வந்தனா நெற்றிக்கண் திறந்து விட்டாள்.
"ஹெலோ மேடம் யாருக்கு வயசாச்சு ஐ அம் ஜஸ்ட் தேர்ட்டி" என்க, அங்கே ஓடி வந்த ஆர்யாவோ
"இதையே தான் த்தூ இயர்ஸ்ஸா சொல்லுறீங்க" என்று சொல்லிவிட்டு ஓட,
"இவனை..." என்று அவளை எழபோக, மதுவந்தியின் தொலைபேசி அடித்த சத்தத்தில் அது யார் என்பது புரிய, மௌனமாய் அங்கிருந்து எழுந்து வீட்டினுள் சென்று விட்டாள்.
அதில் பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றவளோ "சொல்லு ஸ்ரீகுட்டி, இல்லை உள்ள போய்ட்டாங்க..."
"-------------------"
"எப்போவும் போலத்தான் நோ ரெஸ்பான்ஸ்"
"-------------------"
"பேசிப்பார்க்குறேன் வாய்ப்பு கம்மினு தான் தோணுது"
"--------------------"
"சரி ஓகே பாய்"
_______________________
இங்கே அழைப்பை துண்டித்த ஸ்ரீ, "என்ன மாறுனாலும் இந்த பிடிவாதக்காரி மாற மாட்டா" என்று புலம்ப,
"என்ன மேடம் ஒரே புலம்பல்ஸ்ஸா இருக்கு, நைட் மாமா உன்ன சரியா கவனிக்கலயா??" என்க,
"என்னை கடுப்பேத்தாம போய்டுங்க... நாலு வருஷமா ஒருத்திய இங்க வரவழைக்க முடியல, இதுல மாறன்னு பெருமை வேற" என்று திட்டி விட்டு செல்ல,
புவியரசன் முன்னறையில் இருந்து "என்ன பண்றது பூரணி குட்டி உன் அப்பா திட்டு வாங்குறது என்ன அதிசயமா? ஊருக்கே பருப்பா இருந்தாலும் வீட்டுக்கு தொடப்பகட்ட தானே" என்று பேத்திக்கு உணவு ஊட்டிய படியே மகனை வார,
"ஹெலோ மிஸ்டர் எர்த் கிங், சாப்பாடு உட்டுற வேலை மட்டும் தான் பார்க்கணும். சும்மா என் விஷயத்துல குறுக்க வரக்கூடாது" என்றான்.
அவர்களுக்கு வந்தனாவின் இழப்பை பெரிதும் சரி செய்வது இவனது அண்மை தான்.
அதில் சுப்புலட்சுமி "இப்போ அங்க வந்தேன். ரெண்டு பேருக்கும் இருக்கு, நிம்மதியா ஒரு சாமி கும்பிட முடியுதா?" என்று குரல் கொடுக்க,
"ஓகே லட்டு", "ஓகே நிலா" "ஓகே பாட்டி" என்று மூன்று குரல்கள் சேர்ந்தே ஒலித்தது...
"நீயுமாடா பட்டு" என்று வெளியே வந்த சுப்பு பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டு நெற்றியில் திருநீறு பூசி விட,
அப்பாவும் மகனும் அவர்களது கன்னத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் சரியாய் வீட்டின் மணி அடிக்க,
'இதோ வந்துட்டான் வில்லன்' என்று தந்தையும் மகனும் நினைத்து முடிக்கவில்லை...
கதவை திறந்து கொண்டு தேவ் கிருஷ்ணன் தான் உள்ளே வந்திருந்தான்.
பூரணி அவனைக் கண்டதும், புவியரசன் நீட்டிய கவலத்தைக் கூட வாங்காமல் "மாமா..." என அவனிடம் தாவி இருந்தாள்.
ஒவ்வொரு வார இறுதி நாளும் தேவ் இங்கே தான்...
அன்றைய நாள் மொத்தமும் இந்த வீடு அவனை அதற்குள் சுருக்கிக் கொள்ளும்...
நான்கு வருடங்கள் கடந்து விட்டது இன்று வரை அவன் அவளைப் பற்றி கேட்டது கூட இல்லை...
இருவரும் என்ன ரகம் என்று யாருக்கும் புரியவில்லை...
வந்தனாவின் இத்தகைய கோபத்துக்கு காரணம் என்ன?
இவன் அமைதியின் பதில் என்ன??
இப்படி இவர்களைப் பார்த்துக் குடும்பம் தான் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டி இருந்தது.
தேவ் வந்த சத்ததுக்கு சிவராமனின் வீட்டில் இருந்தும் அங்கே வந்துவிட்டனர்.
அதில் நிரஞ்சனும் அவள் மனைவியும் அடக்கம், அவன்தான் மாறனை பிரிய மாட்டானே! அதான் கூடவே இங்கேயே வந்துவிட்டான்.
மாலதியும் சிவராமனும் தனியே என்பதால் அவர்களுடன் தான் அவன் வாசம்...
___________________
இரவு அறைக்குள் வந்த புவியரசன் சுப்புவின் காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.
"போதும்ங்க" என்றவர் கணவரின் கரத்தைப் பற்றி,
"நமக்கு எப்போவுமே ஒரு புள்ள தான் ராசி போல" என்று விரக்தியாய் சிரித்தார்.
இருவரும் அவர்கள் கவலையை வெளியே காட்டிக் கொண்டது கிடையாது...
"அப்புவால நம்மல பிரிஞ்சி இருக்க முடியுதுனா. நம்மலால கூட அப்படி இருக்கலாம் தானே" என்றார் புவியரசன் கோபமாய்...
மகள் விட்டு சென்ற கோபம் இன்னும் அவரிடம் இருக்கிறது தானே!
"அடுத்த மாசம் மது ஊருக்கு வர்றாலாம். அவ வருவாளாங்க?" என்று கேட்ட மனைவியை தோளோடு சாய்த்துக் கொண்டுவர்.
"பூபதி ஐயாவோட இறப்புக்கும் வரல, சேதுவோட இறப்புக்கும் வரல. இனிமேலும் எதிர் பார்த்து ஏமாறாத நிலா" என்றவர் கண் மூடிக்கொள்ள, அவரது நிலாவும் தூக்கத்துக்கு சென்றிருந்தார்.
பூபதியும் அவரது இறுதி தருவாயில் அனைவரிடமும் மன்னிப்பை யாசித்தவர் அவளிடமும் கேட்க நினைக்க அந்த சந்தர்ப்பதை அவளுக்கு கொடுக்கவே இல்லை அவள்...
அவரது மொத்த சொத்தில் பாதியை அவள் பெயரில் எழுதி இருந்தார் அவர்...
செய்த தவறுக்கு பரிகாரமாம்?? யாருக்கு வேண்டும் இது??
மது சொன்னபோது அவள் மனதில் தோன்றியது அது தான்...
அடுத்து சில நாட்களில் சேதுராமன் நோய்வாய் பட்டிப்பதாக செய்தி அவளிடம் வந்த போதும் எந்த உணர்வையும் காட்டவில்லை...
இந்த நான்கு வருடத்தில் குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு மகிழ்ச்சி தருணங்கள் எல்லாம் அவள் அழைபேசிக்கு குறுந்தகவலாகவும் புகைப்படங்களாகவும், ஸ்ரீ மூலம் வந்து சேரும்.
அதனை பார்ப்பாள் அவ்வளவே!
எதிர்வினை இல்லை என்று தெரிந்தாலும் ஸ்ரீ விடுவதில்லை... மகளை மூலம் குரல் வழி குருஞ்செய்தியும் அனுப்புவாள்.
அதனை ஆசையாய் கேட்பதாய் மது மூலம் தெரிந்து கொண்டவளுக்கு அதன்பின் வேறென்ன வேலை...
பூரணி தான் தாய் அழைபேசியுடன் வந்தால் தெரித்து ஓடிவிடுவாள்.
அந்த அழகில் இருக்கும் ஸ்ரீயின் அட்டகாசம்.
____________________
அறைக்குள் வந்த மனைவியை மாறன் புன்னகையுடன் பார்த்திருக்க,
"கிட்ட வந்தீங்க இன்னைக்கு அடி தான் சொல்லிட்டேன்" என்க,
"என்ன நீ, இன்னைக்கு தான் பூரிக்குட்டி அவ மாமா கூட போய்ட்டால்ல அப்பறம் என்னடி" என்றான் சிணுங்களுடன்...
"அவளுக்கு பூரணின்னு பேர் வெச்சிட்டு பூரின்னு கூப்பிடுத்தீங்கன்னு எத்தனை தடவை சொல்லுறது" என்றவள் தலையணையை எடுத்து அவனுக்கு மொத்த,
அத்தனை அடிக்களையும் வாங்கிக் கொண்டு மெத்தையில் சுகமாய் படுத்திருக்கும் கணவனைப் பார்த்து முறைத்தவள் அவன் மீதே விழுந்தாள்...
அதற்காகவே காத்திருந்தவன் போல அவளைத் தாங்கிக் கொண்டவன், முத்தங்களால் மோட்சம் அடைய வைத்திருந்தான்...
அவளில் அவன் ருசிக்கும் காதலும் அவனின் அவள் ரசிக்கும் காதலும் என்றைக்கும் குறைய போவது இல்லையே!!
வாழ்க்கை இத்தனை முள் பாதைகள் தராமல் சாதாரணமாய் ஒரு வாழ்க்கையை தந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் உதிக்காமல் இல்லை, ஆனால் நடந்துவிட்ட கசப்பை மீறி அவர்களுக்கான வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக் கொள்ளவும் தவரவில்லை...
காலம் எத்தனையும் மற்றும் மருந்தல்லவா??
"ஏங்க வண்டு இங்க வர நீங்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்குறீங்க?" என்று கேட்க,
"அவங்க ஒன்னும் குழந்தைங்க இல்லையே நிதி, அவங்களா புரிஞ்சிகிட்டு சேர்ந்தா தான் அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும். ரெண்டு பேரையும் பார்க்கும் போது எனக்கும் வருத்தமா தான் இருக்கு. பார்ப்போம் காலம் என்ன பதில் அவங்களுக்கு வெச்சிருக்குன்னு... ஒரு மூனு மாசம் டைம் கொடுப்போம் நிதி, அப்பறம் ஏதாச்சும் முடிவுக்கு வருவோம்" என்றவன், வந்தனாவிடம் பேச முயற்சி செய்யாமல் இல்லை...
அதற்கு அவள் இடம் கொடுத்தால் தானே!!!
தேவிடம் பேசினால் அவனோ அசைவேனா என்றிருக்கிறான்.
இதோ அந்த வீடே உறங்கி இருந்தால், அங்கே உறங்காமல் தவிக்கும் ஒரே உயிர் அவனுடையது தானே!
அவளறையில் அவள் வாசத்தில் தூங்கவே ஒவ்வொரு ஞாயிறும் இங்கே ஓடி வருகிறான்.
ஆனால் நடப்பது என்னவோ அவளுடன் அவள் நறுமணத்தில் விழித்துருப்பது தான்...
குழந்தை பூரணியின் தலையைக் கோதியபடி அவன் உள்ளம் அவளுக்காய் துடித்துக் கொண்டிருந்தது...
வாரந்தோறும் வரும் அவன், வாயால் வார்த்தைகளை பரிமாற முடியாவிட்டாலும் மௌனமாக அவளது அறையில் தான் செய்து தவறை நினைத்து மன்னிப்பை யாசிக்கிறான்
அவள் என்று வருகிறாளோ அன்றே அவனது வாழ்க்கையில் வசந்த நாள்
நிச்சயமாக என்றேனும் ஒரு நாள் 'அவள் மனம் மாறும் தன்னை மன்னிப்பாள்' என்ற நம்பிக்கை அவனுக்கும் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் இருந்தது.
நாமும் அதை நம்பிக்கையுடன் விடை பெறுவோம்...
சில முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் நிதர்சனம் அதுவாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கை என்னும் நதியோட்டம் நிற்கமல் ஓடிக்கொண்டே இருக்கும்...
...முற்றும்....
மாறன்(கியூபிட்) எறிந்த அம்பு இங்கே பல காதல் ஜோடிகளின் வாழக்கையில் வெவ்வேறான உணர்வுகளையும் உறவுகளையும் கொடுத்து சென்று விட்டது...
கணை(அம்பு) பிழையானால் அதனை சரியாக்க நிச்சயம் நமக்கான இன்னொரு வாய்ப்பும் இன்னொரு கணையாய் நம்பிக்கையும் நம்முடன் தொடரும்...
பிழையை திருத்தி எழுத நினைக்காத வரை பிழை பிழைக்கான பதிலை கொடுத்துக் கொண்டே இருக்கும்....
மாறன்(கியூபிட்) அவனின் கணை(அம்பு) பிழைக்கலாம், ஆனால் நிச்சயம் பிழைக்கான திருத்தமும் நிகழும்...

Last edited: