- Joined
- Oct 22, 2024
- Messages
- 284
- Reaction score
- 241
- Points
- 43
மாறனவனின் கணை -09
கோபமாய் அறையினுள்ளே வந்த ஸ்ரீநிதி, அங்கே அமர்ந்திருந்த வந்தனாவின் முன்னே வந்து நிற்க, நிமிர்ந்து பார்த்தவளோ "என்ன ஸ்ரீ சண்டைக்கு வர்ற போல வந்திருக்க" என்று புன்னகையுடன் கேட்டிருந்தாள்.
அருகில் தயாராக இருக்கும் பெட்டியை ஒரு பார்வை பார்த்த ஸ்ரீ "சண்டையா? உன்னக் கொலையே பண்ணாலும் தப்பில்லை" என்க,
"சில்வண்டு சிக்கும் உன்னோட வண்டு சிக்காது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஸ்ரீக்குட்டி" என்ற வந்தனா தன் சோகத்தைச் சிரிப்பினுள் மறைக்க முயன்றாள் போலும், ஆனால் எதிரில் இருப்பவளிடம் அவளது அக உணர்வுகளை மறைக்க முடியுமா என்ன?
"உங்களுக்குப் பெரிய தியாகச் செம்மல்னு நினைப்போ? இங்க இருந்து போறேன்னு சொன்னீங்களாம்? என்கிட்டக் கூடச் சொல்லாம கிளம்பத் தயாரா இருக்கீங்க. அவ்வளவு பெரிய ஆளாகிடீங்க அப்படித்தான?" என்றதும் தோழியின் கோபத்தில் இன்னும் புன்னகை வந்தனாவின் இதழ்களில்...
இது யாரின் வேலை என்பது அவள் அறியாததா?
'வீட்டை விட்டுச் செல்கிறேன்' என்று சொன்ன இந்த நான்கு நாட்களாய், தன்னிடம் பேசாமல் மௌன விரதத்தில் இருக்கும் தாயிடம் இதனை நிச்சயம் எதிர் பார்த்தாள் தான்.
அதுவும் அவளது சுப்பு காலையிலிருந்து குட்டி போட்ட பூனைபோல அவள் அறைப் பக்கமே சுழன்று கொண்டிருந்ததில் கிளம்பும் நேரம் இப்படி ஏதும் நடக்கும் என ஏற்கனவே தெரியுமே!
"என்னடி சிரிப்பு, இங்க நான் என்ன ஜோக்கா காட்டுறேன்" என்று ஸ்ரீ அதற்கும் வெடிக்க,
"லைட்டா அப்படித்தான் பங்கு தெரியுது" என்று வந்தனா சிரித்துவிட, ஸ்ரீக்கும் புன்னகை தொற்றிக் கொண்டது.
தோழியின் அருகில் அமர்ந்தவள், அவள் கரத்தை எடுத்துத் தன் கரத்துக்குள் வைத்துக்கொண்டு "ஏன் வண்டு இப்படிலாம் லூசுத்தனமா முடிவு பண்ணுற? அத்தை எவ்வளவு ஃபீல் பண்ணாங்க தெரியுமா?" என்று கேட்க,
பெருமூச்சு ஒன்றை விட்ட வந்தனாவோ "அவங்க எப்பவும் அவங்க பையனுக்காக ஃபீல் பண்ணிட்டு தானே இருகாங்க ஸ்ரீ. எனக்காகனு இன்னும் எத்தனை பார்க்கணும் அவங்க. நான் இல்லனா நிச்சயம் அவங்க பையன் கூட இருப்பாங்க தானே" என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து,
மீண்டும் "அன்னைக்கு சுப்புவ அவங்க பையன் கூப்பிட்டாங்களே ஸ்ரீ! ஒரு கைல என்னையும் இன்னொரு கைல மகனையும் பிடிச்சிருந்த சுப்பு, யார விடன்னு அந்த நிமிஷம் எப்படி தவிச்சாங்க தெரியுமா? ஆனா அப்பவும் எனக்காக அவங்க மகன் கையத் தானே விட்டாங்க. அப்போ அந்தப் பையன் பார்த்த பார்வையும் பேசின பேச்சும் இன்னும் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு, இப்போ இது என்னோட டர்ன். என் கைய நான் எடுத்துக்கிட்டா தான் சுப்புவுக்கு அவங்க பையன என்னால திருப்பிக் கொடுக்க முடியும்" என்றவளின் குரலில் ஒரு உடைவு...
"லூசாடி நீ? அதுக்குன்னு நீ இங்க இருந்து போய்ட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? பையனப் பிரிஞ்சி இவ்வளவு நாளா கஷ்டப்பட்டாங்க, இப்போ நீ போறேன்னு சொல்லி அவங்கள வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட வைக்கப்போற அதான உன் ஆசை" என, தோழிக்கு வலிக்கும் என்று தெரிந்தே பேசினாள்.
"ஸ்ரீ நீயாச்சும் என்னைப் புரிஞ்சிக்கோயேன்" என்க,
"நான் என்ன புரிஞ்சிக்கணும்? முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கோ வண்டு, நீ இல்லனாலும் உன் அப்பா அம்மா சந்தோசமா இருக்கப் போறதில்ல. இவ்வளவு நாளா நீ அவங்க பொண்ணு இல்லைங்கிறது எங்கயாச்சும் அவங்க பேச்சுலையோ செயல்லயோ தெரிஞ்சி இருக்குமா சொல்லு?" என்று கேட்டவள்,
மீண்டும் "இப்போ நீயே நீங்க என்னைப் பெத்தவங்க இல்லைங்கிற எண்ணத்தை அவங்களுக்குக் கொடுக்குறியா? அவ்வளவு சுயநலமா உனக்கு? இப்போ என்ன 'அதான் நாம வளர்த்துட்டோமே இனிமேல் இவங்க தயவு நமக்கு எதுக்குன்னு', இத சாக்கா வச்சி அவங்கள தூக்கி போட நினைக்கிற அதான" என்றதும் வந்தனா பேசுவதற்கு முன்,
"ஸ்ரீ என்னடா பேசுற, அப்பு அப்படி நினைக்கிற ஆளா?" என்று உள்ளே வந்திருந்தார் சுப்புலட்சுமி...
தாயின் குரலில் மீண்டும் உடைந்தாள் வந்தனா...
அவர் பேசாமல் இருக்க அவளும் பேசவில்லை, பேசினால் எங்கே எடுத்த முடிவிலிருந்து மாறி விடுவோமோ என்ற பயம் அவளுக்கு...
இதோ இப்போதும் தனக்காய் பேசும் தாயை என்ன சொல்வது?
கண்களை இறுக மூடிப் பழைய நினைவுகளை விரட்டியவள், அதற்கு மேலும் இருந்தால் நிச்சயம் எதிரில் இருக்கும் இருவரும் தன் முடிவை மாற்றி விடுவர் என்று புரிய, பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
"நான் இவ்வளவு சொல்லுறேன் இப்போவும் உனக்கு உன் முடிவு தான் பெருசா தெரியுதுல" என்று அவளை நெருங்கப் போன ஸ்ரீநிதியைத் தடுத்து புவியரசன் உள்ளே வந்திருந்தார்.
"ஸ்ரீ, அந்தப் பெரிய மனிசி போகட்டும் விடுடா, என் பொண்டாட்டியக் கஷ்டப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இங்க இருந்து போறேன்னு சொல்லுறவங்களுக்கு நாங்க யாரோன்னு இருக்கும்போது, எங்களுக்கும் அவங்க யாரோ தானே! இது அவங்க வீடு அவங்களே இருக்கட்டும் நானும் என் பொண்டாட்டியும் இங்க இருந்து போயிடுறோம்" என்க,
வந்தனாவின் கைகளிலிருந்து பெட்டி அப்படியே கீழே விழ, கண்களிலிருந்து கண்ணீர் அதன் பாட்டுக்கு உருண்டு ஓடியது.
"ப்ப்பாஆ" என்ற கேவலுடன் அவரை அணைத்திருந்தாள் மகள்.
அவரோ அவளைத் தழுவவில்லை, அவள் அணைப்பில் நின்றார் அவ்வளவே!
சொல்ல முடியாத கோபம் அவருக்கு, அவளை அவர் உயிராய் நினைத்திருக்க, அவளோ விட்டுச் செல்கிறேன் என்றால் விடுவாரா?
"ப்ப்பா ப்ளீஸ்ப்பா" என்றவள் அவரது கரத்தை எடுத்துத் தன்னை அணைக்கச் செய்ய, அவருக்கோ உள்ளே உருகி விட்டது.
அவரும் அணைத்துக்கொள்ள, "சாரிப்ப்பா" என்றாள் மகள்.
அவளது பத்து வயதில் புவியரசன் கையில் கிடைத்தவள் அவள், அதுவும் நடைபாதையில் இருக்கும் கழிவறை ஒன்றிலிருந்து...
அந்த நாளை அவளால் மறக்க முடியுமா என்ன?
அன்று தன்னைக் காத்தது போல் இன்று வரை அவளைப் பாசமாய் பார்த்துக் கொள்பவர்களுக்கு என்ன செய்திட முடியும்?
அவளுக்கு மட்டும் ஆசையா என்ன? ஆனால் குற்றவுணர்ச்சி என்று ஒன்று அவளைப் பாடாய்ப் படுத்துகிறதே!
தான் இல்லை என்றால் சுப்பு மகனுடன் இருப்பாரே என்ற எண்ணம் அவளுள் ஊடுருவி இருந்தது. அதுவும் அவன் ஒருவனால்...
அன்று மாறன் பேசிய வார்த்தைகள் அத்தனையும், சிறு வயது குழந்தையவள் மனதில் ஆழமாய் பதிந்து போய் இருந்தது.
'என் லட்டுவ என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல, இதே போல உன்னையும் அவங்க கிட்ட இருந்து பிரிப்பேன்' என்று அவன் அன்று பேசிய கோபக்குரல் இன்றும் அவள் காதுகளில்...
அது மட்டுமா பின்னொரு நாளில் கல்லூரி படிக்கும் மாணவியாய் வளர்ந்து நின்றவள் அவனிடம் பேசியபோது,
'நீ என் லட்டுவ விட்டுப் போ அப்பறம் யோசிக்கிறேன்' என்ற அவனது நக்கல் குரல்...
இது அனைத்தும் தான் அவளை இப்படி யோசிக்க வைத்திருந்தது.
ஆனால் இன்று தந்தை தன்னை வேண்டாம் என்று பேசிய நொடி அவர்கள் இல்லாமல் தான் இல்லை என்ற எண்ணம் வருப்பெற,
"மிஸ்டர் எர்த் கிங் நான் வேணாமா உங்களுக்கு, உங்க பொண்டாட்டிகாக என்னை டீல்ல விட்டுடீங்க பார்த்தீங்களா?" என்று பழைய வந்தனா மீண்டிருக்க, புவியரசன் புன்னகையுடன் மகளின் தலை கோதினார்.
சுப்பு லட்சுமியோ கண்களைத் துடைத்துக் கொண்டவர் அவர்களையே புன்னகையுடன் பார்த்திருக்க, ஸ்ரீநிதி அவரைத் தோளோடு அணைத்தபடி,
"பார்த்தீங்களாத்தை, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டு நம்ம ரெண்டு பேரையும் டீல்ல விட்டுட்டாங்க. இவ்வளவு நேரமா நான் தம் கட்டி பேசும்போது கம்முனு இருந்துட்டு, அவ அப்பா போன்னு சொன்னதும் போய் ஒட்டிக்கிட்டா" என்று தோழியை வம்பிழுக்க,
சுப்புவும் புன்னகையுடன் "அதான் பாரேன், நானும் நாலு நாளா பேசல அப்பவும் விரைப்பா தானே சுத்துனா, ஒருவேளை நாமளும் போடின்னு இருந்திருக்கணுமோ?" என்க புவியரசன் சத்தமாய் சிரித்துவிட்டார்.
"போதும் போதும் சிரிச்சது. போய்க் கறி எடுத்துட்டு வாங்க, நாலு நாளா பட்டினி கிடந்து வயிறு கதறுது" என்று கணவரிடம் ஆரம்பித்தவர்,
ஓரக்கண்ணால் மகளைப் பார்த்தபடி "இன்னைக்கு மட்டன் பிரியாணி பண்ணுறோம், நாம மட்டும் சாப்பிடுறோம் சரிதான ஸ்ரீ?" என்று ஸ்ரீநிதியிடம் முடித்திருந்தார்.
வந்தனா "அப்பா" என்று சிணுங்க...
அவரோ "எனக்கு பிரியாணி வேணுப்பா, நான் என் பொண்டாட்டி பக்கம் தான்" என்று மனைவி அருகே போய் நின்று கொள்ள, வந்தனா தாயைப் பாவமாய் பார்த்தபடி நின்றாள்.
"நான் மூனு பேருக்கு பிரியாணி பண்ணப்போறேன்ப்ப்பா, வேற யாருக்காச்சும் வேணுமா என்ன?" என்று மகளைப் பார்க்காதது போல் கேட்க,
"எனக்கும் சுப்பு" என்றவள் உடனே ஆஜராகி இருந்தாள்.
"அட வெக்கம் கெட்டவங்களா, இதுக்கு ஏதுக்குடா வெள்ளையும் சொல்லயுமா திரியணும்?" என்று ஸ்ரீ அவளை வாரி இருக்க, அடுத்து அங்கே குட்டிக் கலவரம் ஆரம்பமாகி இருந்தது.
உருண்டு பிரண்டு சண்டை போடுபவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே, "அப்போ நான் கறி எடுத்துட்டு வரேன்" என்று கிளம்பப் போக,
"என்னங்க, வரும்போது கறி கடை அண்ணாகிட்ட நாளைக்கு நல்லி எலும்பு ஒரு கிலோ கொடுத்து விடச் சொல்லிட்டு வரீங்களா? மாறனுக்கு நல்லினா ரொம்ப பிடிக்கும்" என்று சொல்ல,
வந்தனா சண்டையை நிறுத்தி இவரைப் பார்க்க, 'அவரசப்பட்டு விட்டோமோ? மகள் என்ன சொல்லப்போகிறாளோ?' என்று அவளையே பார்க்க,
"என்ன சுப்பு என்னப் பாருக்குற, அதான் உன் அருமை புத்திரனுக்கு கறி எடுக்கச் சொல்லியாச்சுல, அப்படியே எனக்குப் பிடிச்ச போட்டியும் சொல்லிடு" என்றவள் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க, அப்போது தான் பெற்வர்களுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
புவியரசனோ "கறி எடுத்துட்டு வர்ற வரை தான் உங்களுக்கு டைம், அதுக்குள்ள சண்டைய முடிச்சிட்டு நிலாக்கு ஹெல்ப் பண்ணனும். அப்ப தான் பிரியாணி கிடைக்கும் இல்லனா உப்மா தான்" என்று அங்கிருந்து கிளம்ப,
உப்மா என்றதும் அவர்கள் கரம் தன்னால் சண்டையை நிறுத்தி இருந்தது.
அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுத்த வந்தனாவோ "என்னையே அப்பா அம்மாவை விட்டுப் போகணும்னு நினைக்க வெச்சவன ஏதாச்சும் பண்ணணுமே!" என்று வில்லத்தனமாய் நம்பியார் போலக் கையை அசைக்க,
ஸ்ரீயோ "பண்ணிட்டா போச்சு, எனக்கும் சில கழிக்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கு" என்றதும் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, இருவர் முகத்திலும் வில்லத்தனமான சிரிப்பு...
மாறன் அவன் வாழ்வில் எத்தனையோ வில்லன்களைக் கடந்திருப்பான், இனியும் கடக்கக்கூடும். ஆனால் இந்த இரண்டு வில்லிகளிடமிருந்து தப்புவானா என்பது கடவுளுக்கே வெளிச்சம்...
அவன் விதி அவன் மாட்டிக்கொண்டால் கூடப் பரவாயில்லை, ஆனால் எதுவுமே செய்யாமல் ஒரு ஆடு தலையைக் கொடுக்க அடம்பிடித்துக் கூடவே வருகிறதே!
வில்லிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும், மாறனின் கவசகுண்டலமான நிரஞ்சனின் நிலை????
_____________
வயிறு முட்ட மட்டன் பிரியாணியை வெட்டிய ஸ்ரீயோ நடக்க முடியாமல் நடந்து ஏப்பம் விட்டபடி வீட்டுக்குள் நுழைய, அங்கே மாதவனோ மதுவந்தியை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
"என்ன இங்க ஒரே லவ்ஸ்ஸா இருக்கு சரி இல்லையே" என்று மெல்லிய குரலில் தானக்குத் தானே சொல்லிக் கொண்டவளோ மாதவனின் அருகில் அமர்ந்து "என்னடா மாமா, எந்தப் பொண்ணுக்கு இன்ஸ்டால லைக் போட்ட?" என்று கேட்க, அவனோ முறைத்தான்.
"ஓகே, சொல்லலனா விடு. நான் சொன்னா என் பாசமலர் கேட்குமே! உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். நல்லதுக்கே காலம் இல்ல போல" என்று எழப் போக,
"ஐயோ தெய்வமே ஹெல்ப் மீ. உன்னால ஆரம்பிச்ச பிரச்சனைக்கு நீதான் முடிவு சொல்லணும் எஜமானே!" என்றிருந்தான் அவன்.
"படுத்தே விட்டானைய்யா, இந்தச் சீனுக்கு என் பங்கு இல்லாம போய்ட்டாளே" என்று சங்கடப்பட,
"இதோ வந்துட்டேன் கோபால்... உன் ஆசையில் மண்ணைப் போட, ச்சீ... பூவைப் போட ஓடோடி வந்துவிட்டேன் கோபால்..." என்று கையில் ஒரு கிண்ணத்துடன் அவர்கள் அருகில் வந்திருந்தாள் வந்தனா.
"அட அட கேசரி வாசம் மூக்குக்கே மோட்சம் தருதே! நான் கூட இவன் கதை சொல்லும்போது பாப்கார்ன் இல்லையேன்னு கவலைப்பட்டேன். பரவாயில்லை என் கவலையே தீர்த்துட்ட" என்றவர் கேசரியை வாயில் சிறிது போட்டுகொண்டு,
"நீ சொல்லு மாமா" என்றாள் கதை கேட்கும் ஆர்வத்துடன்...
அவனோ 'இவள் தனக்கு உதவுவாளா?' என்று சந்தேகத்துக்கே சென்று விட்டான்.
ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே!
"இது பாரு ஸ்ரீ, என் கம்பெனில எனக்குப் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு..." என்று ஆரம்பிக்க,
"இது நல்ல விஷயம் தானேண்ணா" என்று வந்தனா இடையிட, ஸ்ரீ அதுக்கு "டெபனட்லி பங்கு" என்றிருந்தாள்.
"கொஞ்சம் சொல்லுறத முழுசா கேளுங்க தாய்க்குழங்களா" என்று கையெடுத்துக் கும்பிட்டவன் "ப்ரோமோஷன் வித் ட்ரான்ஃபர். அதுவும் யூஎஸ்க்கு" என்று முடித்து முகத்தைச் சோகமாய் வைத்துக்கொள்ள,
"அட்ராசக்கை, அப்போ இன்னைக்கு ஒரு புடி, ட்ரீட் இருக்குல்ல" என்று வந்தனா குதிக்க,
ஸ்ரீயோ சந்தேகமாக "எந்தங்கச்சி ஒன்னும் இதுக்கெல்லாம் கோபப்படுற ஆள் இல்லையே!" என்றாள் தங்கையை நன்கு தெரிந்தவளாய்...
"ம்ம்ம் அது உண்மை தான். அங்க நான் மட்டும் போகல, ஸ்வேதாவும் எங்கூட வர்றா" என்க,
"ஓகே இருக்கட்டும் மேட்டருக்கு வா மாமா" என்று ஸ்ரீ கடுப்பாக, அங்கே கொண்டு வந்த கேசரி சிறிது சிறிதாய் வந்தானாவின் வயிற்றுக்குள் சென்று கொண்டிருந்தது.
அவளைப் பார்த்துத் தலையில் தட்டியவனோ "கேசரி எங்கேயேயும் ஓடிப் போகாது வண்டு, எனக்காகக் கொஞ்சமாச்சும் ப்ரே பண்ணி தொலையலாம்ல" என்க,
"செம இன்டரெஸ்ட்டிங்கா இருக்குண்ணா யூ கன்டினியூ" என்றாள் கண்சிமிட்டி...
"சும்மாவே அந்த ஸ்வேதா என்னை எப்போ சுவாஹா பண்ணலாம்னு காத்திருக்கா என் கற்புக்கு உத்தரவாதம் வேணும்ல, அதான் என் ப்ராஜெக்ட் பைவ் இயர்ஸ் அக்ரீமெண்ட். சோ என் பொண்டாட்டிய அங்க கூட்டிட்டு போக எனக்கு ஆஃபர் இருக்கு கல்யாணம் பண்ணிட்டு என்கூடயே வந்து என் கற்ப்ப காப்பாத்துமானு கேட்டா குதிக்கிறா" என்று மொத்தமாய் விஷயத்தைப் போட்டு உடைக்க, ஸ்ரீயோ விழுந்து விழுந்து சிரித்தாள்.
"அட அப்போ என் வாக்கு பழிக்கப் போகுதா என்ன? அப்போ உனக்குததான் மது முதல்ல கல்யாணம்" என்று தங்கையை உசுப்பேற்ற,
"பார்த்தீங்களா, இது எனக்குத் தேவையா? நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்" என்று மாதவனின் தலையில் கொட்டியவள் உள்ளே சென்றுவிட்டாள்.
ஸ்ரீ போகும் தங்கையையே பார்த்தவள் விளையாட்டைக் கை விட்டு "உனக்கு அவளைக் கட்டிக் கூடவே கூட்டிட்டுப் போகணும்னு ஆசை இருந்தா, முதல்ல எங்கிட்ட தானே பேசி இருக்கணும். உன்ன யாரு முந்திரிக்கொட்ட மாதிரி முன்னாடி போய் பேசச் சொன்னா?" என்க, அவன் சோகமாகி விட்டான்.
அவளுக்கும் அவன் முகம் கவலையைத் தர "விடு விடு மாமா இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா? அவளைச் சமாதானப்படுத்தி உன் மனைவியா உன் கூடவே அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு. இது என் பங்கு வண்டு மேல சத்தியம்" என்று அருகில் அமர்ந்திருந்த வந்தனாவின் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய, அவளோ கேசரியுடன் வாயைப் பிளந்திருந்தாள்.
"வண்டு உன் வாய்க்குள்ள இருக்க கேசரிய ஈ தூக்கிட்டு போகுது முழிச்சிக்கோ" என்று உளுக்க, "என்னது ஈயா?" என்று விழித்துக்கொண்டாவளைப் பார்த்து எதிரில் இருந்த இருவரும் சிரித்தே விட்டனர்.
"நீ நம்பிக்கையோட போ மாமா அடுத்த முகூர்த்தத்துல உங்க கல்யாணத்தைப் பண்ணி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு" என்றாள் நம்பிக்கையுடன்...
அவளுக்காகவென இத்தனை நாள் அவர்கள் காதலை அடுத்த நிலைக்குச் கொண்டு செல்லாமல் காத்திருந்தவன் அவன். இன்று அவனுக்குத் தேவை என்று ஒன்று இருக்கையில் அவளால் முடிந்ததை செய்ய வேண்டியது அவளது கடமை...
அவனும் "அவள ஃபோர்ஸ் பண்ணாத ஸ்ரீ, பார்த்துக்கலாம் விடு. என்ன இருந்தாலும் அவ என் பொண்டாட்டி தானே! பேசிப்பாரு என்ன நடந்தாலும் அவ முழு சம்மதம் இதுல ரொம்ப முக்கியம். அவ வேணான்னு சொல்லுற ரீசன் நியாயமானது தானே! எங்களுக்கு நீ முக்கியம். அங்க போனா அஞ்சு வருஷம் வர முடியாது அதனால தான் அவளையும் என்கூட கூட்டிட்டு போக ஆசப்பட்டேன். பார்த்துக்கோ ஸ்ரீ" என்றவன் கிளம்பி இருந்தான்.
போகும் அவனையே பார்த்தவள் 'நிச்சயம் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும்' என்று உறுதியாய் எண்ணிக் கொண்டாள்.
________________
அன்று இரவு பதினொரு மணி இருக்கும், வீட்டில் தான் அமர்ந்திருந்தான் ஹிருத்திக் ராஜ்.
அவனது புது மனைவி கமலி இப்போதுவரை வீட்டுக்கு வந்திருக்கவில்லை...
எங்கு சென்றிருப்பாள் என்பது அவன் அறிந்ததே! இதையெல்லாம் தெரிந்து தானே திருமணம் செய்திருந்தான்.
மாற்றி விட முடியும் என்று புரட்சி செய்ய வந்த கணவனா அவன்? அவளிடம் கொட்டிக்கிடக்கும் பணத்துக்காகவும், அவள் தந்தை தனக்கெனச் செய்வதாகச் சொன்ன விடயத்துக்காகவும் மட்டுமே இந்தத் திருமணம் செய்து கொண்டவன் அவன். இதில் வீட்டோட மாப்பிளை வேறு...
முதலில் பணம் பெரிதாகத் தெரிந்தது, ஆனால் திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் தினம் அரைகுறை ஆடையுடன் பப்பில் இருந்து நள்ளிரவில் வீடு வரும் மனைவியைக் காணவே காட்டுக்கடங்காத கோபம் அவனிடம்...
வாழ்க்கையை எந்த நிலையையும் அனுபவித்து வாழ ஆசை கொண்டவன் அவன். அதற்கு அவனுக்குத் தேவை பணம் அது இன்று அவனிடம் அதிகமே! மற்றொன்று அதிகாரம், அதுவும் விரைவில் அவனிடம் வர இருக்கிறது.
ஆம் எல்லாம் அந்த வி.எம் ஹாஸ்பிடலுக்காகவே அவன் போடும் திட்டங்கள் தான்.
அதனாலேயே அந்த விகே பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனது இலக்கு மாறன், இவனது இலக்கு மாறனின் மருத்துவமனை. ஒன்றில் ஒன்று பொருந்தியதில், இவன் அவனோடு தன்னைப் பொருந்திக் கொண்டான்.
விகே இவன் விருப்பதுக்குத் தலை அசைத்திருக்க, இதோ இந்தத் திருமணமும் அதில் ஒரு அங்கம் தான்.
கமலியின் தந்தை பெரிய அரசியல்வாதி, தாயில்லா பெண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்துத் தோற்ற சராசரி தந்தை. அவர் இயலாமையை இவன் தனக்கெனப் பயன்படுத்திக் கொண்டான்.
புதிதாய் மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்று சொன்னவரிடம் வேண்டாம் என்று மறுத்தவன் தன் விருப்பத்தைச் சொல்லி இருந்தான்.
அவனுக்கு முதலிலிருந்து ஆரம்பிக்க விருப்பமும் இல்லை பொறுமையும் இல்லை. இன்னும் வேறு மருத்துவமனையை வாங்கி விஎம் ஹாஸ்பிடலுக்கு கீழ் இயங்கவும் எண்ணமில்லை...
அதனால் அவர்கள் திட்டம் என அனைத்தையும் சொல்லி, அவரது அரசியல் செல்வாக்கின் மூலம் தன்னைக் காத்துக் கொள்ள திட்டம் தீட்டி இருந்தான்.
மகளுக்காக எதையும் செய்பவர் மகளின் தாலிக்கு உரியவனான தன்னைக் காக்க எந்த எல்லைக்கும் போவார் என்பது தெரிந்தே துணிந்து திருமணம் செய்திருந்தான்.
அதுவரை அவன் திட்டப்படி அனைத்தும் சரியாய் காய் நகர்த்தப்பட்டிருக்க, இதோ மனைவியின் செயலைச் சகிக்க முடியாமல் கோபத்தில் சுழன்று கொண்டிருக்கிறான்.
இன்று இதைப் பேசியே ஆக வேண்டும் என அவளிடம் 'நேரத்துக்கே வா' என்று சொல்லியே வெளியே சென்றிருந்தான்.
அவன் வந்து இதோ இரண்டு மணி நேரம் கடந்திருக்கும், ஆனால் அவன் மனைவி எப்போதும் போல் அங்கே இல்லை.
மேலும் அரைமணி நேரம் கடந்திருக்கும், தள்ளாடிபடியே மனைவி உள்ளே நுழைய, அவளைக் கைத்தாங்களாகப் பிடித்தவண்ணம் ஆண் ஒருவனும் உள்ளே நுழைந்தான்.
அவனும் குடித்திருக்கிறான் தான். ஆனால் அவனுக்கு இருக்கும் நிதானம் கூட மனைவியிடம் இல்லை, அவன் கரங்கள் மனைவியின் மேனியில் தழுவி இருந்த விதம் இந்தத் திருமணம் பிடிக்காத கணவனான அவனையே அருவருக்க செய்திருந்தது.
அப்படியே அவளைச் சோபாவில் போட்டவன், "பாய் கமி பேபி... பாய் பாஸ்..." என்று இவனிடமும் விடைபெற்றவன் கிளம்பி இருக்க, ஹிருத்திக்கோ சுயநினைவே இல்லாமல் விழுந்து கிடைக்கும் அவனது இந்நாள் மனைவியை வெறித்தான்.
கூடவே 'ரித்து' என்ற அழைப்புடன் தான் நேசித்த பெண் கண் முன்னே தோன்ற, "ஆஆஆ..." என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தினான்.
அதில் கமலி தட்டு தடுமாறி எழுந்து நின்று "என்னாச்சு பேபி, நான் வேணுமா? எடுத்துக்கிறியா?" என்ற கேள்வியுடன் சட்டையில் கை வைக்கப் போக, வந்த கோபத்தில் அவளை அறைந்தே விட்டான்.
அதில் தடுமாறி மீண்டும் அவள் சோபாவில் விழ, சரியாகக் கமலியின் தந்தை மூர்த்தி அங்கே வந்தவர் இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, "சுமதி" என்று குரல் கொடுக்க, எப்போதும் அவளைப் பராமரிக்கவென அங்கே வேலையில் இருக்கும் பெண் ஓடி வந்தாள்.
"சின்னம்மாவ உள்ள அழைச்சிட்டுப்போ" என்றவர் அவள் மகளை அழைத்துச் சென்றதும், "உள்ள வாங்க மாப்பிள்ளை பேசணும்" என்றவர் அலுவலக அறைக்குள் நுழைந்தார்.
இவனும் தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைய, அங்கே அவன் முன்னே பெட்டி நிறைய பணம் அவனை வரவேற்றது.
அவன் அதையே வெறித்தபடி இருக்க, "எடுத்துக்கோங்க மாப்பிள்ளை, உங்களுக்குத் தான்" என்றார்.
அவன் அப்போதும் அப்படியே நிற்க, "இதோ பாருங்கள் மாப்பிள, உங்கள ஏமாத்தி ஒன்னும் என் பொண்ண உங்களுக்குக் கட்டி கொடுக்கல, உங்க சம்மதத்தோட தான் எல்லாம் நடந்திச்சு. அவ தாயில்லாத பொண்ணு, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிட்டா. அவளச் சந்தோசமா வெச்சிக்கத் தான் உங்களுக்கு இவ்வளவும் பண்ணுறேன்" என்று அந்தப் பெட்டியை அவனை நோக்கி நகர்த்தியவர்,
"இதுக்கு மேலேயும் என்ன கேக்குறீங்களோ பண்ணத் தயாராத் தான் இருக்கேன். இப்போ வேணும்னாலும் அந்த ஹாஸ்பிடல்ல உங்களுக்குக்காக என்னால வாங்கித் தர முடியும். அந்த அளவுக்குப் பணம் என்கிட்ட இருக்கு, ஆனா அவங்க எனக்கு மேலே எத்தனையோ மடக்கு வசதி படைச்சவங்க, அதுவும் பரம்பரை பரம்பரையா, அதுனால தான் அதை அவங்க கிட்ட இருந்து வாங்க முடியல. நீங்க அத இல்லீகளா வாங்கிக்கிட்டா அதுல என்ன பிரச்சனை வந்தாலும் உங்களக் காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. உங்களுக்கு நான் தந்த வாக்கக் காப்பாத்த நான் ரெடி, நீங்க எனக்குத் தந்த வாக்குப்படி என் பொண்ணு எப்படி இருந்தாலும் அவளை நல்லா பார்த்துக்கணும். புரியும்னு நினைக்கிறேன்" என்றவர் அங்கிருந்து வெறியேறி விட,
கண்களை மூடித்திறந்தவன், அடுத்த சில நிமிடங்களில் வெளியேறி இருந்தான். கூடவே அவன் கரங்களில் அந்தப் பெட்டி...
மாறன் வருவான்...
ஆஷா சாரா...

Last edited: