- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
9 "கோவலன் கொலையுண்டதும் அதற்காக கண்ணகி மதுரைக்கு எரியூட்டியதும் ஊழ்வினையும் பலன்.
கோவலன் கொலைக்கு தானே காரணம் என்று தன்னைத்தானே அழித்துக் கொண்ட மன்னவனை பாராட்டுவதா அல்லது வருத்தம் கொள்வது என்று விளங்கவில்லை.
கோவலன் கண்ணகியை அடைக்கலப்படுத்தி பாதுகாத்து வைத்திருந்த மாதரி நங்கை, தான் அப்போது இருந்திருந்தால் இத்தனை பெரிய பேராபத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று எண்ணியவள், அப்போது தான் அங்கு இல்லாததே இந்த விபரீதம் நிகழ்வதற்கு காரணமாய் அமைந்தது என்று. தன்னைத் தானே நொந்து கொண்டு. எரியூட்டி அச்சிதையில் புகுந்தாள். இது என்னை மிகவும் வேதனை பட வைத்தது. இது ஒருபுறம் வருத்தம் அளிக்கும் செய்தி என்றால் மற்றொருபுறம் கோவலன் கண்ணகியை அழைத்து வந்த கவுந்தியடிகள் "உடன் வந்த உத்தமர்கள் இருவரின் மறைவுக்கு தானே காரணம் என்றும், தான் உடன் இருந்திருந்தால் நடக்கப் போகும் விபரீதத்தை அறிந்து, அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கலாமே! என்று புளுங்கி உண்ணா நோன்பை ஏற்று உயிரை விட்டுவிட்டார்.
இவர்கள் இருவரது மரணச் செய்தியும், என்னை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது. மேலும் கோவலன், கண்ணகி மறைவு செய்தியை எடுத்துக்கொண்டு. புகார் நகரம் புறப்பட்டு சென்று. உரியவர்களிடம் விபரத்தை தெரிவிக்கப் போய் அது பெரும் விபரிதமாய் முடிந்தது". என்று மாடலவன் சொல்லிக் கொண்டிருக்க.
சேரன், "அங்கு அப்படி என்ன விபரீதம் நேர்ந்தது?" என்று ஆர்வமாய் கேள்வி கேட்டான்.
' கோவலன் இறந்த செய்தியறிந்த அவனது குடும்பத்தார்கள் அனைவரும் மிகுந்த துன்பமுற்று போனார்கள். கோவலனின் தந்தை மாசாத்துவான், தான் சேர்த்த செல்வங்கள் அனைத்தையும் சமண துறவிகள் ஆயிரம் பேருக்கு தானமாக கொடுத்துவிட்டு. தானும் அருக நெறி ஏற்று துறவியாய் அவர்களோடு சென்றுவிட்டார். கோவலனின் தாயார் தன்னால் தனியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து, தற்கொலை செய்து மாண்டு போனார்.
கண்ணகியை பெற்றவள், மகளும் மருமகனும் ஒரே நேரத்தில் உயிரிழந்த துன்பம் தாங்க முடியாத வேதனையால் நெஞ்சு வெடித்து இறந்து போனார். கண்ணகியின் தகப்பனார் மாநாய்கன் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் இல்லாத எளியவர்க்கு தானமாக கொடுத்துவிட்டு புத்த மதத்தை தழுவி துறவு கொண்டார்.
இவர்கள் இப்படி என்றால் கோவலன் மனைவி மாதவி கணவனை இழந்த துக்கம் தாழாமல் தன்னுடைய மங்கள நாணை களைந்து. விதவை கோலம் ஏற்றாள். தன்னுடைய மகள் மணிமேகலையை இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தக் கூடாது அவள் நல்வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து மணிமேகலையை புத்த மத துறவியாக ஆக்கினாள். தன்னுடைய தலைமுடி முழுவதையும் நீங்கி நானும் புத்தமகத்தில் இணைந்து தன்னுடைய கணிகை வாழ்க்கையை துறந்து கொண்டாள்.
இப்படி பாண்டிய நாட்டில் இருந்து கொண்டு வந்த செய்தியை சோழ நாட்டில் தெரிவித்ததால், இரண்டு மரணங்கள் நேர்ந்து விட்டது. அது என்னால் நேர்ந்த பிழை என்று, நான் தற்போது பாவம் போக்குவதற்காக கங்கையில் நீராட வந்திருக்கிறேன்". என்று மடலவன் சொல்லி மன்னனை வணங்கினான்.
"தற்போது பாண்டிய நாட்டின் நிலை என்ன மறையவரே?"
"பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன்னுயிரை தந்து செங்கோலின் பழுதை நீக்கி மாண்டு போன பிறகு, கொற்கையில் ஆட்சி செய்து கொண்டிருந்த நெடுஞ்செழியனின் சகோதரன் வெற்றிவேல் செழியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
பாண்டிய நாட்டையும் அம்மன்னனையும், கண்ணகி சாடிவிட்டு போனதால். பாண்டியநாட்டில் மழை பொய்த்து பஞ்சம் தலை விரித்தாட தொடங்கியது. வருமை வாட்டியது. வெட்பு நோயும் அம்மையும் எஞ்சி இருந்த மக்களை பிடித்துக் கொண்டது. இதற்கெல்லாம் காரணம் கண்ணகி இட்ட சாபமே காரணம் என்று உணர்ந்த வெற்றிவேல்செழியன், கண்ணகியின் கோயில் முன், பொற்கொல்லர் ஆயிரம் பேரை தலை கொய்து பலியிட்டு விழா எடுத்துக் கொண்டாடினார். அதன் பிறகு மதுரை சீர் நிலை பெற்றது". என்று மாடலவன் சொல்ல.
"மறையோரே சோழ நாட்டின் நிலை யாது? என்று சேரன் கேட்க.
"உனது மைத்துனன் கிள்ளிவளவன் ஆளும் சோழ நாட்டிற்கு குறுநில மன்னர்களான ஒன்பதின்மர் பகைமை கொண்டு, சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். நீவிர் உனது படைகளை கொடுத்து உதவி புரிந்து ஆட்சியில் அமர்த்தி வைத்து விட்டு வந்ததால். தற்போது பகைவர் இல்லாமல் நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சோழவள நாடு பல்வேறு சிறப்புகளை உடையது. அதை ஆட்சி செய்தவர்கள் அத்தனை பேரும் சிறப்பு பொருந்தியவர்கள். விண்ணவர்கள் வியக்கும் வகையில் எயில் மூன்றினை அறுத்தான் செம்பியச் சோழன். அப்படிப்பட்ட பலம் பொருந்திய செம்பிய சோழனது ஆற்றல் போற்றுதலுக்குரியது. புறாவின் உயிர் காக்க தனது சதை அறிந்து கொடுத்து காத்த சிபிச் சோழனது அருள் போற்றுதலுக்குரியது. இப்படிப்பட்ட ஆற்றலும் அருளும் ஒருங்கே இணையபெற்ற சோழர்களது பரம்பரையில் வந்த கிள்ளிவளவன் சோழ நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். தாங்கள் அவரைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று சொன்னான்.
"மிக்க மகிழ்ச்சி மறையவரே, உலகில் ஓய்வின்றி ஒவ்வொரு தேசமும் சுற்றி வந்து. அத்தேசத்தின் நிகழ்வுகள் அத்தனையும் தெளிவாக எமக்கு எடுத்துக் கூறிய உமக்கு, எனது நிரைக்கு தகுந்த பொன்னை பரிசாக கொடுக்க விளைகிறேன்." என்ற சேரன் செங்குட்டுவன் துலாபாரம் புகுந்து. தராது எடைக்கு நிகரான பொற்கட்டிகளை மாடல மறையவனுக்கு பரிசாக கொடுத்தான்
மாடலமறையோனும், சேரனும் பேசி முடிக்கும் தருவாயில் இரவின் தொடக்கம் ஆரம்பமானது. சேரன், அங்கே அமைக்கப்பட்டிருந்த பாடி வீட்டில் சற்று நேரம் கண்ணயர்ந்தான்.
அடுத்த நாள் பொழுது அழகாய் புலர்ந்தது.
தனக்கு உதவி புரிந்த ஆரிய வேந்தர்களான கன்னர் நூற்றுவரை அழைத்து, நன்றி தெரிவித்து. அவர்களது தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தான்.
அடிமைகளாய் அழைத்து வந்த ஆரிய வேந்தர்களான கனகணையும் விஜயனையும், ஆயிரம் படை வீரர்களிடம் ஒப்படைத்து.. தமிழரின் வீரத்தை தரம் தாழ்த்தி பேசிய ஆரிய வேந்தர்களை, அடிமைப்படுத்தி அழைத்து வந்திருக்கிறோம் என்று, சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் கொண்டு சென்று காண்பித்து வருமாறு அனுப்பி வைத்தான்.
சேர நாட்டில், அரசி வேண்மாள், சேரன் இல்லாத தனிமை துயரை உற்று. உடல் இளைத்து உருகி கிடந்தார். அரண்மனையில் இருந்த பண் இசைத்து பாடும் இசை பாடகர்கள், வேந்தன் வருவான் வெற்றிச் செய்தியோடு என்று பொருள்படும்படி பாடல் பாடி, அரசியை மகிழ்விக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அரசி வேண்மாள் துயில்கொள்ளும் மஞ்சத்தில், மன்னவனின் முகம் கண்டு அங்கே புதைந்து கிடந்தாள்.
கங்கைக்கரையில் இருந்து சேரன் செங்குட்டுவன், புறப்பட்டு சேர நாடு நோக்கி வந்து கொண்டிருந்தான் வரும் வழியெல்லாம் மன்னனை வரவேற்று, வாழ்த்தி, வணங்கி, திரை செலுத்தி, ஆடல், பாடல் என்று அணி செய்து சிறப்பித்தார்கள். தமிழகத்தில் நுழைந்தபோது மலைவாழும் குறவர்கள், குன்ற குறவஞ்சி படித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
முல்லை நிலத்தவர் பூக்கள் இறைத்து வேந்தனை வாழ்த்தினார்கள்.
மருத நிலத்தில் வாழும் விவசாய பெருமக்கள் மகிழ்வோடு பண் இசைத்து பாடல் பாடி வரவேற்றார்கள்.
நெய்தல் வாழும் மக்கள் வேந்தன் புகழ் விளங்க வெற்றி பண்பாடி வரவேற்றார்கள். மழை பொய்த்த மருத நிலம், பாலை எனப்படும். செங்குட்டுவன் ஆட்சியில் பாலை என்ற ஐந்தாம் திணை இல்லாததால், வெற்றியோடு வேந்தன் வரும் வேளையில் பெரும் பண் இசைத்து பாடி மகிழ்ந்தார்கள் .
மக்கள் பாடி மகிழும் பாடல், அரண்மனையில் இருக்கும் வேண்மாளின் காதுகளையும் எட்டியது. மன்னவன் வரும் செய்தியறிந்த வஞ்சி மாநகரம், விழாக்கோலம் கொண்டது.
வாயிலுக்கு வந்த அரசனை வரவேற்ற, வேண்மாள் வெற்றித்திலகம் இட்டு வரவேற்றாள்.
சேரன், சேரனின் தேவியோடு, அரியாசனம் அமர்ந்திருக்க. சாக்கையன் என்னும் கூத்தன் உமையன்னை பரமனோடு ஆடிய களி நடனம் ஆடி காண்பித்து மகிழ்வித்தான். அதன்பின் அரசன் அத்தாணி மண்டபம் சென்று அமைதி காண சென்றான்.
சேர தேசத்து மகளிர் எல்லாம் தமது வீடுகளில் விளக்கேற்றி வீதியெல்லாம் விளக்கொளி நிரம்பச் செய்தார்கள். வீடுகளில் மலர்கள் குவித்து மங்கலம் சேர்ப்பித்தார்கள். களம் கண்டு வரும் கணவன்மார்களை எதிர் நோக்கி அழைக்க இன்முகத்தோடு தங்களை அலங்கரித்துக் காத்திருந்தார்கள்.
களம் கண்டு திரும்பி வீரர்கள் எல்லாம் தம் காதலியோடு கூடி களித்து இன்புற்றார்கள். கொற்ற வேந்தனும் தன் காதலியோடு மகிழ்ந்திருந்தான். வீரர்கள் கொண்ட காயங்களுக்கெல்லாம் அவர்தம் மனைவிமார்கள், ஆறுதல் கொண்ட அணைப்பால் அகம் குளிரும் மருந்தாக்கி ஆற்றுப்படுத்தினார்கள். வஞ்சி மாநகரம், அன்று முழுவதும் மகிழ்வோடு மயங்கி கிடந்தது.
மறுநாள் வழக்கம் போல வஞ்சி மாநகரத்து அரசவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
சோழ, பாண்டிய மன்னர்களை கண்டு. தமிழகத்து அடிமைகளான கனக விஜயனை காண்பித்துவரச் சொல்லி நியமிக்கப்பட்டிருந்த, நீலன் என்பவன் மாடல மறையவனோடு அரசவை கூட்டத்திற்கு வந்து காத்திருந்தான்.
சேரனின் வருகைக்காக அவையோர் அனைவரும் அமைதி காத்து அமர்ந்திருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் வந்து தனது அரிகாசனத்தில் அமர,
அவையில் உள்ள மந்திரிகளும் மற்றைய பிரதிநிதிகளும் "ராஜாதி ராஜனுக்கு வணக்கங்கள்! பார் புகழும் சேரனுக்கு வந்தனங்கள்!" என்று தங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
சேரன் அனைவரும் முன்பும் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் எல்லாரும் அமருங்கள் என்று சொல்லிவிட்டு நகுலனை பார்த்து "பாண்டியனும் சோழனும் பகைவர்களை பார்த்து கோபம் கொண்டார்களா? கொதித்து எழுந்தார்களா? இது தண்டனை என்று எடுத்து இயம்பினார்களா?"
நீலன் மௌனமாய் தலை குனிந்தான்.
சேரன், "இதற்கு என்ன அர்த்தம் என்று நீயே எடுத்துச் சொல்."
நீலன், "மன்னர் மன்னனுக்கு வணக்கம். தாங்கள் எதிர்பார்த்தது போல் பாண்டியனும் சோழனும் நடந்து கொள்ளவில்லை. மாறாக..." என்று முற்றுப்பெறாமல் நிறுத்தினார்
சேரன் நீலனின் முகத்தை அனல் பறக்கும் விழிகளால் அகன்று ஆழ்ந்து பார்த்தான். அவையோர் அனைவரும் மிரண்டு விழித்தார்கள்.
சேரன் "மாறாக என்ன சொன்னார்கள்? அவர்கள் சொன்னதை தயங்காமல் செல்லும். தமிழருக்கே உண்டான தனித் திமிரில் என்ன சொன்னார்கள்? இருக்கும் அனைவரும் முன்னிலையில் ஏன் இந்த தயக்கம்?"