- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
14 கயவாகு தேவன்
செங்குட்டுவ மன்னனை போல, கண்ணகியின் வழிபாட்டை இலங்கையில் நிறுவிய, கயவாகு தேவனை பற்றிய செவி வழி செய்தி.
இலங்கை வேந்தன் கயவாகு மன்னன் கண்ணகி கோட்டத்தில் வழிபாட்டை முடித்த பிறகு மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது செங்குட்டுவ மன்னன், சந்தனக்கட்டையில் செய்யப்பட்ட கண்ணகியின் சிற்பம் ஒன்றை கயவாகுவுக்கு பரிசாக கொடுத்து வழி அனுப்பி வைத்ததார்.
இலங்கைக்கு சென்ற பிறகு, அந்த கண்ணகி அம்மனின் சிலையை, யானையின் மீது ஏற்றிக்கொண்டு. ஊர் முழுவதும் ஊர்வலமாக சுற்றி வந்தார். யானை நடக்க முடியாமல் களைத்து எங்கெல்லாம் அமர்கிறதோ... அந்தந்த இடங்களில் கண்ணகிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய, வழிவகை செய்தார். அப்படி யானை பத்து இடங்களில் அமர்ந்து. கோவில் எழுப்ப உத்தரவிட்டது. அதில் ஒன்று தற்போது உள்ள வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோவில். பத்தாம் பாளையம் என்பது மறுவி வற்றாப்பாளை என்றானது.
கயவாகு மன்னன் அமைத்த கோவில் காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு.சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது. வயதான பெண்மணி ஒருவர், தனக்கு தலையில் பேன் தொல்லை அதிகமாக இருப்பதாக சொல்லி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைகளை பேன் பார்க்கச் சொல்லி இருக்கிறார். அவர்களும், பாட்டியின் தலையில் பேன் எடுக்க ஆர்வமாக தலையில் முடி இழைகளை விலக்கிப் பார்த்தால், தலையெல்லாம் கண்களாக தெரிந்திருக்கிறது. பாட்டியை அருகில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு. ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வர புறப்பட்டார்கள். திரும்பி வந்து பார்க்கும் போது பாட்டி அவ்விடத்தில் இல்லை. பெரியவர்கள் எல்லாம் அருகில் எங்கேனும் சென்று இருக்கிறார்களா என்று தேடிய போது. அசரீரியாக தான் குழந்தைகளோடு விளையாட வந்ததாக குரல் கேட்டிருக்கிறது. அதனை அடுத்து அங்கே கண்ணகி அம்மன் கோவில் எழுப்பப்பட்டு இருக்கிறது.
கருப்பசாமி.
சேரன் செங்குட்டுவன் பிறந்த இடம் கரூர். சேரர்களின் தலைநகரமும் அந்த கருவூர் நகரம் தான். கரூரை சூழ்ந்து வஞ்சி மரங்கள் நிறைந்து வளர்ந்து இருந்ததால் சேர தேசத்தின் தலைநகரான கருவூருக்கு வஞ்சி நகர் என்று பெயரிட்டு. பிற்கால சேரர்கள் தங்களது தலைநகரை வஞ்சி நகர் என்று அழைத்தார்கள்.
கருவூரில் பிறந்த சேரனை, கருவூரின் தலைமகன். கருவூர் அப்பன். கருவூர் சுவாமி. கருவூர் தகப்பன் சுவாமி. என்று அழைத்த காலம் போய் கருப்புசாமி என்று அழைக்க தொடங்கிவிட்டோம்.
தற்போதைய கேரள தேசம், சேர நாடு. அங்கே இருக்கும் கேரள நம்பூதிரிகள். தலையில் இடப்புறம் கொண்டையிட்டு இருப்பதை பார்த்திருக்கிறோம் அல்லவா? அது போல சேர தேசத்தை சேர்ந்த கருப்பசாமியும் இடப்புறம் கொண்டை இட்டு இருப்பார். வாள் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் கருப்பசாமியின் சிலை அமைக்கப்பட்டிருக்கும். நமது கோவில்களில் கருப்பசாமி பாரிவேட்டை நிகழ்ச்சி நடப்பது. சேரன் செங்குட்டுவன் கனக விஜயர்களோடு போருக்கு புறப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக நடத்தப்படுகிறது.
நமது ஊர் கோவில்களில் கருப்பசாமி வரலாற்றை, வில்லுப்பாட்டில் படிப்பவர்கள். ராமரின் இரட்டை குழந்தைகள் லவ,குசாவை கருப்பசாமியும், சின்ன கருப்பசாமி என்று சொல்வதுண்டு. ஆனால் ராமரின் குழந்தைகளுக்கு வடநாட்டில் ஒரு கோவில் கூட இல்லை. என்றால் கருப்பசாமி எவ்வாறு வட நாட்டைச் சேர்ந்தவராக இருக்க முடியும்?.
கருப்பசாமி, பத்தினி கண்ணகியின் மகன் என்பதை, நமது மக்கள் மாற்றி பத்தினி சீதையின் மகன் என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கருப்பசாமி கருவூர் தலைவன், நமது மானம் காத்த சேரன் செங்குட்டுவன்.
சின்ன கருப்பசாமி.
சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள், சின்ன கருப்புசாமி என்று அழைக்கப்படுகிறார். அவர் துறவு ஏற்று, ஒண்டிக்கட்டையாக வாழ்ந்ததால் ஒண்டி கருப்பசாமி என்றும் சில கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. ஒண்டி என்ற வார்த்தை நொண்டி என்று மருவி, சில கோவில்களில் நொண்டி கருப்பசாமி என்றும் வழிபாடு செய்வதுண்டு.
நான் இந்த கதைகளை பெரிதாக விவரித்து எழுத எண்ணி, தோற்றுப் போனேன்! வணக்கம்!