- Joined
- Aug 20, 2024
- Messages
- 71
- Reaction score
- 50
- Points
- 18
அத்தியாயம் 19
“சர்ர்ர்ர்” என்ற சத்தத்தில் உறக்கம் கெட்டு கண் விழித்தான் சர்வேஷ். திரைச்சீலைகள் வழியே வெளிச்சம் ஊடுறுவி விடிந்துவிட்டது என்று அறிவிக்கச் சோம்பல் முறித்தப்படி எழுந்து அமர்ந்தவனுக்கு உடல் லேசாக இருந்தது.
“மார்னிங்”
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் டிரசிங் டேபிளில் முடியை ஹார் ட்ரையரில் காயவைத்தப்படி சிரித்தாள் சீத்தளா தேவி. அவளைப் பார்த்தவுடன் இரவு நடந்தது கண்முன் வர இதழுக்குள் மந்தகாசமாகச் சிரித்தவன்
“அம்மாடி… இன்நேரம் நீ வெட்கபட்டு வேற நாட்டுக்கே ஓடிருப்பேனு நினைச்சேன்” என்க அவனை முறைக்க முயன்று தோற்றவள் வெட்கத்தோடு கண்ணாடியைப் பார்த்துத் திரும்பிக்கொள்ள அவளை ஆராய்ந்தது அவன் பார்வை.
ஆரேன்ஜ் நிறத்தில் பட்டுப் புடவை கட்டியிருந்தால். அவளைப் புடைவையில் பார்த்ததும் ஜீவ்வென்று இருக்க எழுந்த வந்து அவள் பின்னே நின்றவன்
“எவிரித்திங் ஓகே?” எனக் கேட்டப்படி அவள் முகத்தைத் திருப்ப
“ம்ம்” என்று நானத்தோடு தலையாட்டியவள் அமர்ந்தபடியே அவன்மேல் சாய்ந்துக்கொண்டாள்.
அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தவன் “தேக்ங் யூ பேபி“ என்று இறுக்கி அணைத்துவிட்டு குளிக்கச் சென்றான்.
அவன் குளித்துவிட்டு வந்தபொழுது காபியை நீட்டினாள் சீத்தளா. விசில் அடித்தபடி அவளைப் பார்வையிட்டுக் கொண்டே அதனை வாங்கியவன் காபியுடன் சேர்த்து அவளையும் அருந்தினான்.
“எங்கயாச்சும் போறீயா சீத்தளா?“
அவன் காபி கப்பை கிழே வைக்க அவனைத் திரும்பிப் பார்த்தவள்
“ஹ்ம் கோவிலுக்குப் போறேன்டா“ என்றபடி பூவைத் தலையில் சூடிக்கொண்டாள்.
கெண்டை கால்வரை தொங்கிய கூழ்ந்தில் நான்கு முழ பூவை அவள் இரண்டாக மடித்து வைத்திருக்க அதன் வாசனை சர்வேஷை தூண்டில் போட்டு இழுத்தது. அதற்கு மேல் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க அவன் என்ன துறவியா? எழுந்து வந்து பின்னால் இருந்து அணைத்தவன் அவள் தோளில் தாடையை வைத்துக் கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை இரசிக்க அவன் கைகளோ அவள் இடையில் விளையாடிக்கொண்டு இருந்தது
“கிளம்பனும்டா சர்வா தள்ளி நில்லு கோவில் போயிட்டு ஆபிஸ் போனும்” என்று துள்ளினாள் சீத்தளா.
“முதல புருஷனை கவனிடி” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழைப் பதிக்க
“கவனிச்சது எல்லாம் போதுமே” என்றவள் அவனைச் சினுங்கியபடி தள்ளிவிட
“ம்ஹீம் வாய் அதிகமா பேசுறீயே ரொம்ப தப்பு உன் வாய்க்குப் பனிஷ்மென்ட் தரனும்” என அவள் உதட்டை விரலில் பிதுக்கியபடி கிசுகிசுக்க கையை விலக்கி “டைம் ஆகுதுடா” எனக் கொஞ்சினாள் சீத்தளா.
“ஆபிஸ்க்கு லீவ் போட்டுக்கலாம் நீ கிட்ட வாயேன்” என அவன்அவளை இழுக்க
“ம்ஹீம்… நோ“ என்று அவள் அவனை விலகி நடக்க அவன் அவளின் முடியைப் பற்றி இழுக்க அவன் கையில் மாட்டிக்கொண்டு தாலியும் வந்து வெளியில் விழுத்தது.
“கொல்றடி என்னை” என
தன் முன் நின்றிருந்த மனைவியின் அழகில் சொக்கிப் போனான் சர்வேஷ்வரன்.
அவள் சங்குமணி பூங்கழுத்தில் அவனுக்கு உரிமையான தாலி அவளை அவனது உரிமையாக்கிக் அவளது மார்பை தாண்டி வயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க குணிந்து அதில் இதழ் ஒற்றியவன் அதனைக் கையில் எடுக்கத் தானாகவே அவனை அணைத்துக் கொண்டாள் சீத்தளா.
சர்வேஷ்வரனும் அவளைச் சுற்றி கைப்போட்டு தன்னுடன் இறுக்கிகொண்டவன் அவள் இதழில் இதழைப் பதிக்க தொய்ந்து அவன்மேல் சரிந்தாள் அவள். நீண்ட நெடிய அழுத்தமான முத்தம் மூச்சுவிட அவள் தினறியபோது மெல்ல விலகியவன் மீண்டும் அவளை இழுத்துக்கொண்டான்.
அவன் தொட்டதும் கரைந்தவள் தான் மொத்த உலகத்தையும் மறந்து அவன் கைக்குள் அடங்கிவிட்டாள். முத்தத்தில் ஆரம்பித்த விளையாட்டில் மொத்தயையும் பெற்றுவிட்ட பின்னரே அவளை விடுவித்தான் அவன்.
மெத்தை எங்கும் அவள் கூந்தல் விரிந்துகிடக்க மயில் தோகையில் உறங்கும் மாயக் கண்ணனை போல் அதில் படுத்திருந்தான் சீத்தளாவின் மன்னவன். சற்று நேரத்திற்கு முன் அவள் கூந்தலில் குடியிருந்த மல்லிகை உதிர்ந்து சிதறியிருந்தது.
தன் உடலெங்கும் அவன் வாசனை ஒட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்த சீத்தளா அதை அனுபவித்தபடி சர்வேஷின் முகத்தை விரலில் அளந்துக்கொண்டு இருக்க அவளுக்கு வாகாக முகத்தைக் கொடுத்துவிட்டு சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தான் அவன். அவள் விரல்கள் அவன் புருவத்தை வருடி மூக்கை கிள்ளி இதழுக்கு வர அவன் மீசைமூடியை திருகி முறுக்கி விளையாடியவள் அவன் அழுத்தமான உதட்டின் மேல் தன் இதழை மெலிதாக ஒற்றி எடுத்தாள். அதற்கே அவள் முகம் இளஞ்சிவப்பாக மாறிவிட்டது. வெட்கம் கொண்டு அவன் நெஞ்சில் படுத்துத் தன் இதழை அங்கே பதித்துக்கொண்டாள்.
“ஏன் இந்தக் கஞ்சத்தனம் சீத்தளா? இவ்வளவு சின்னதாவா தருவ?“ எனச் சத்தம் கேட்டுச் சீத்தளா நிமிர்ந்து பார்க்கத் தன் இதழை நாவல் வருடியபடி கண்ணடித்தான் சர்வேஷ்.
‘தூங்குவது போல் பாவனையில் நான் செய்வதை ரசித்துக்கொண்டு படுத்திருந்திருக்கின்றான் கள்ளன்’ சினுங்கியது சீத்தளாவின் உள்ளம்
“தூங்கலையா நீ? “
“இவ்வளவு அழகான பொண்டாட்டி பக்கத்தில் வச்சிட்டு தூங்க நான் என்ன சாமியாராடி?”
“நீயா சாமியார்? யாரும் அப்படிச் சொல்லமாட்டாங்க”
“யாரும் சொல்ல வேண்டாம் உனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் பேபி”
“இதெனானா புதுசா பேபி சொல்ற நீ” விரலால் அவன் நெஞ்சிலே கோலமிட்டபடி அவள் கேட்க
“நீயே புதுசா தான்டி தெரியுற பேபி” என்று இழைந்தான் அவன்
“ஓ….” உதட்டைக் குவித்து அவள் சொல்லத் தன் கட்டை விரலால் அதனை வருடியவன்
“உனக்கு என்ன பிடிச்சிருக்கா சீத்தளா?“ எனக் கேட்க அவன் கண்ணை விட்டுப் பார்வையை தழைத்துக்கொண்டவள்
“உனக்குத் தெரியாதா? “ என்று மெல்ல முழங்க
“என்னை ப்ரெண்டா உனக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும் நான் கேட்கிறது இப்போ இப்படி இருக்கோமே” என அணைப்பை இறுக்கி காட்டியவன்
“உன் புருஷனா என்னைப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்க அவன் தோளில் அடித்தவள்
“பிடிக்காம தான் இப்படி இருக்கோமா” என முனுமுனுக்க உரக்க சிரித்தான் அவன்.
“கல்யாணத்தில் என்ன கேட்ட நீ? ‘என்ன அந்த மாதிரி பிடிக்குமா’னு கேட்டதான ஹா ஹா அதுக்கு இப்போ பதில் சொல்லவா?” எனச் சர்வேஷ் வம்புச்செய்ய
“ம்ஹீம்” என அவன் வாயைப் பொத்தியவள் விழியை உருட்டி மிரட்ட அவள் கையில் முத்தமிட்டு அவளைத் தன் முகத்திற்கு நேரே தூக்கி பிடித்தவன்
“உன்ன எனக்கு அந்த மாதிரி கூடப் பிடிச்சிருக்கு டி” என்று இடைவெளியின்றி முகம் முழுவதும் முத்தமிட
“ம்ம்ஹீம்….” என வெட்கத்தோடு அவனிடமிருந்து விலகப் போரடினாள் சீத்தளா.
“அந்த மாதிரினா எந்த மாதிரி தெரியுமா?“ என்று விடாமல் சிரித்தப்படி அவளைச் சீண்ட தன் கையால் அவன் வாயை மீண்டும் அடைத்தவள்
“ம்ஹீம்… நோ” என்க அவள் கையை விளக்கி
“அந்தததத… மாதிரி” என அழுத்திக் கூட்டி விஷமமாகச் சொல்லச் சீத்தளா நறுக்கென்று கிள்ளிவிட்டு அவனைத் தள்ளியவள் அங்கிருந்து ஓடிவிட
“ஆஆ… ராட்சசி” எனக் கத்தியபடி அவன் சிரிக்கும் சத்தம் அவ்வீட்டை நிறைத்தது.
_____________
கோவிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் சுலபமாகச் சாமி தரிசனம் முடித்துவிட்டு தீபாராதனைக்காக இருவரும் காத்திருந்தனர்.
ஐய்யர் தீபாராதனையுடன் தீருநீரையும் குங்குமத்தை கொடுக்க வாங்கிக்கொண்டு வந்து ஒரு ஓரமாக அமர்ந்தாள் சீத்தளா அவள் அருகிலேயே சற்று இடைவெளிவிட்டு சர்வேஷ்வரனும் அமர்ந்தான். அவனுக்குத் தீருநீரை அழகாக வைத்துவிட்டவள் அவன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்துத் தனது உச்சிவகுட்டில் வைத்துக்கொண்டாள். சின்ன செய்கைதான் ஆனால் சர்வேஷ்வரன் மனதில் அது இதத்தை பரப்ப
“உனக்கு இது ரொம்ப அழகா இருக்கு சீத்தளா” என்றவன் பார்வை அவள்மேல் ஆசையாகப் பதிந்தது.
அவள் அணிந்திருந்த மரகத பச்சை நிற பட்டுபுடவை அவளுக்குக் கூடுதலாக அழகு சேர்த்தது.
“அப்போ தினமும் வைச்சிக்கவா?“ என்று ஆர்வமாகக் கேட்டாள் சீத்தளா.
“உனக்குப் பிடிச்சிருந்தா வச்சிக்கோ பட் நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்” எனக் கைநீட்டி அவள் மூக்கில் மீது சிந்தியிருந்த குங்குமத்தை துடைத்துவிட்டான் அவன்.
“ம்ம்” எனத் தலையாட்டியவளை கான மனதில் ஊற்றாக ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
‘எனக்கே எனக்கானவள்’ உவகை கொண்டது அவன் மனம்.
தன் போனை எடுத்தவன் அவளைச் சற்று நெருங்கி அமர்ந்து அவள் இடையை பற்றியபடி செல்பி எடுக்க எதிர்பாராத நேரத்தில் அவன் பக்கத்தில் வந்தது அவள் முகத்தில் செம்மையை கூட்டியது. அதனை அப்படியே படம் பிடித்துக்கொண்டவன்
‘மை பாஸ் மை வெய்ப்’ என்ற கேப்சனுடன் சமூகவலைதளங்களில் இவள் தான் என் மனைவி என்று அறிவித்துவிட்டான். அவ்வளவு தான் அவர்கள் வட்டத்தில் தீயாகப் பரவத்தொடங்கியது சீத்தளா சர்வேஷின் திருமணம்.
கம்பெனி கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து கதவைத் திறந்து அவளுக்குக் கையை நீட்ட அதனைப் பிடித்துக்கொண்டு இறங்கியவள் அவனுடன் கைகோர்த்தப்படி நடந்தாள்.
“நம்ம ஸ்டாப்ஸ் யாருக்கும் நாம மேரிட்னு தெரியாதுல டா”
“ம்ம்… ஆமா”
“நாம பிரண்ட்ஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க”
“சரியாதானே நினைச்சிட்டு இருக்காங்க”
“அப்போ நான் உனக்கு ப்ரெண்ட் மட்டும் தானா” என அவள் கையை உருவிக்கொள்ள
“ப்ச் கையைப் பிடிடி” என அதட்டியவன் வழுகட்டாயமாக அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“எனக்கு ப்ரெண்டு வெய்ப் பிஸ்னஸ் பார்ட்னர் எல்லாம் நீ மட்டும் தானடி? அப்பறம் அவங்க உன்ன ப்ரெண்டு நினைச்சா என்ன தப்பு”
“ஓ… நீ அப்படி சொல்றீயா”
“நம்ம கல்யாணம் ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் சோ யூ ஹாட் டூ பி கேர் புள் நம்மளை ஹார்ட் பண்ண அதைத் தான் கையில எடுக்க நினைப்பாங்க புரியுதா?“
“ஹம்… “
“உங்க அம்மா சென்ன மாதிரி உன்னை யாரும் தப்பா பேசுறதை நான் விரும்பலை சீத்தளா”
“ம்ம்… “
“கல்யாணம் முடிஞ்சும் நான் வெளியே சொல்லாததுக்கு இது தான் ரீசன். நாம நமக்குள்ள ஆடாப்ட் ஆகிக்கனும்னு வெயிட் பண்ணேன் இதுக்கு அப்பறம் அதுக்கு அவசியம் இல்லை அதனால் யாரு என்ன சொன்னாலும் நீ அதை ஹன்டில் பண்ணனும்”
“நீ என் பக்கத்தில் இருக்கும்போது என்னால எதையும் பேஸ் பண்ண முடியும்டா சர்வா”
“நான் இல்லைனாலும் பண்ணனும்” என்க சட்டென்று கண்கள் கலங்கியது அவளுக்கு
“ஏன் இப்படி பேசுற?” என்க அவளைச் சரியாகக் கவனிக்காதவன் அவளை வம்பிழுக்க நினைத்து
“எனக்கு ஏதாச்சும் ஆகிட்டுனா நீ எல்லாத்தையும் தனியா தானே பேஸ் பண்ணனும் அதான் இப்போவே சொல்லிட்டேன்” என்றபடி நடக்க
“நீ இல்லைனா நான் மட்டும் எப்படி இருப்பேன்” என்றதும் அவளைத் திரும்பிப் பார்த்தவன் வீம்புக்கென்ற
“ஏன்? நான் செத்துட்டா நீயும் செத்துடுவியா?” என்று கேட்க
“ஆமா செத்துடுவேன் அடுத்த நொடியே நானும் செத்துடுவேன் நீ இல்லைனா நானும் இருக்கமாட்டேன்“ என்று விசும்பியவள் அப்படியே நின்றுவிட்டாள். அவள் வார்த்தையில் உறைந்துப் போனான் அவன்.
‘என்னை அவ்வளவு பிடிக்குமாடி? நான் இல்லைனா செத்துடுவேனு சொல்ற அளவு பிடிக்குமா’ என ஆனந்த அதிரிச்சியில் நின்றிருந்தவன் அவள் விசும்பல் சத்தத்தில் நினைவுக்கு வந்து அவளிடம் விரைய முகத்தைக் கையில் புதைத்துச் சத்தம் வரும்படி அழ ஆரம்பித்துவிட்டாள் சீத்தளா.
இருவரும் நின்றிருந்த பாத்வேயில் சிலர் அங்காங்கே சென்றுபடி இவர்களைத் திரும்பிப் பார்க்கத் தலையில் அடித்துக்கொண்டான் சர்வேஷ்வரன்.
“அய்யோ அழாதடி சீத்தளா என் பேபில” எனக் கெஞ்சியபடி அவளைத் தள்ளிக்கெண்டு ஓரமாக வந்தவன் “ஹேய் இல்லைமா நான் சும்மா சென்னேன்” என்று சமாதானம் செய்யச் சிவந்த விழியோடு அவனை முறைத்தவள்
“நாம நேத்து தான் வாழ்க்கையே ஆரம்பிச்சோம் இன்னிக்கு இப்படி பேச உனக்கு எப்படி வாய் வந்துச்சு“ என்று கோபம் கொள்ள கண்கள் நிற்காமல் பொழிந்தது.
“தெரியாம சொல்லிட்டேன் ப்ளீஸ் அழாதம்மா“ என அவள் கண்ணைத் துடைத்துவிட அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள்
“நீ இல்லனா நானும் இல்லமால் போயிடுவேன் அதை எப்போதும் மறந்துடாத சர்வா” என்று அவன் நெஞ்சில் சாயந்துக்கொண்டு விசும்பலோடு “என்னை விட்டுப் போகணும்னு நினைக்காத” என்க
“ஓகே தெரியாம செல்லிட்டேன் டி நாம ஆபிஸ் கேம்பஸ்ல இருக்கோம் எல்லாரும் பாக்குறாங்க பாரு சீத்தளா ப்ளீஸ் கண்ட்ரோல் யூர் செல்ப்” அதட்டலோடு அவள் தலையைக் கோதியவனை
“ஐ காண்ட்“ எனப் பாவமாக அவள் பார்க்கக் கண்ணீர் நிற்காமல் வழிந்தது அதனைப் பார்த்தவனுக்கு மனம் உருகிவிட
“இட்ஸ் ஓகே பேபி“ என்று நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் சர்வேஷ்வரன். இனி யார் பார்த்தால் என்ன அவளை அழவைத்து விட்டதற்காகத் தன்னையே திட்டிக்கொண்டவன் அவள் தன் மீது வைத்திருக்கும் அன்பில் நெகிழ்ந்து நின்றிருந்தான்.
அவளைச் சமாதானம் செய்து அழைத்துவர இருவரும் உள்ளே வந்ததும் பட்பட் என்று அவுட் வெடிக்கும் சத்தத்துடன் கலர் காகித பொறிகள் எங்குப் பார்த்தாலும் பறந்தது. அனைவரும் ஒன்றுகூடி அவர்களுக்கு வாழ்த்துச்சொல்ல இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை
“ஹாப்பி மேரிட் லைப்” என்று அனைவரும் சத்தமிட சின்ன சிரிப்போடு அவளைக் கைவளைவில் வைத்தபடி
“தேங்க் யூ காய்ஸ்” என்றவன் முன்னே இதய வடிவ பினாட்டா கேக் வைக்கபட சீத்தளாவுடன் சேர்ந்து அதை உடைத்தான் அவன்.
“சர்வேஷ் உங்க பாஸ்க்கு ஊட்டிவிடுங்க”
“பாஸ் நீங்க எங்க பாஸ்க்கு ஊட்டிவிடுங்க“ என இரு அணியாக மாறி மாறிக் கத்த சிறு கொண்டத்திற்கு பிறகு ஒரு ஒருவராகப் பொக்கே கொடுத்துப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
“யாரு இதெல்லாம் அரேஜ் பண்ணது?“ எனச் சர்வேஷ்வரன் ஆச்சரியமாகக் கேட்க அனைவர் கையும் அவன் கேபின் பக்கம் நீள அங்கே ஆளை மறைக்கும் படியான பெரிய பொக்கேயுடன் நின்றான் ஜீவன்.
“ஹேய் ஜீவன்”
“இரு மச்சான் இதைப் புடி சீத்தளா நீயும் தான் வாங்கிக்கோ“ என்று நீட்டச் சிரிப்புடன் வாங்கிக்கொண்டனர் இருவரும்.
“எப்போடா இந்தியா வந்த?”
“ஏன்டா கேட்க மாட்ட நேத்து நைட்டு வரேனு உனக்குச் சொல்லியிருந்தேன் தானே பிக்கப் பண்ண வரேனு சொல்லிட்டு போனை எடுத்தியா டா நீ” எனப் பல்லைகடிக்க கழுக்கென்று சிரித்தாள் சீத்தளா.
“அது… அது… டா” என இழுத்த சர்வேஷ்வரன் “அதெல்லாம் ஒன்டிகட்ட உனக்குப் புரியாது” என அவனுக்கும் மட்டும் கேட்டும் படி சொல்ல ரத்தகண்ணீர் விட்டான் ஜீவன்.
“அடப்பாவி உன்னால தான்டா என் பாரின் கேர்ள் பெஸ்டி எல்லாரையும் கலட்டிவிட்டேன் என்னப்போய்… அவ்வ்” என வாயில் கைவைக்க
“சரி அதைவிடுடா அதான் வந்துட்டியே அப்பறம் என்ன? “
“ஏன்டா வந்தேனு கோட்கிற மாதிரியே இருக்குடா”
“கேட்டிருப்பேன் ஆனா இப்படி சர்ப்ரைஸ் எல்லாம் பண்ணிருக்கியே அதான் மனசு தடுக்குது”
“அடேங்கப்பா அவ்வளவு நல்ல மனசாடா உனக்கு? “
“ஹா ஹா ஓகே ஓகே எப்படி இதெல்லாம் ஆரோஜ் பண்ணின”
“உன்னோட போஸ்ட் பார்த்தேன் உடனே ஒரு சின்ன ப்ளான் நீ கீழே உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண நேரத்தில் நாங்க இங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டோம்” என்று காலரை தூக்கிவிட ஒற்றை கையினால் முகத்தை மறைத்து அழகாக வெட்கபட்டான் சர்வேஷ்வரன்.

அன்பே ஆடைகொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு
இதழில் இதழால் கடிதம் எழுது ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய் சுகமே
பொதுவாய் ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி