மனதை வருடும் பூங்காற்றே 16 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனதை வருடும் பூங்காற்றே 16

New updates

LATEST
Joined
Jun 7, 2024
Messages
92
Reaction score
59
Points
18
16

எப்படி மூன்று நாட்கள் நகர்ந்தது என்று ரமாவிற்கு இன்றும் புரியவில்லை அப்படி ஒரு ஆனந்தம் வாழ்வில் மீண்டும் அவளுக்கு கிடைக்காத புது அனுபவம்.

தங்கையுடன் கிட்டத்தட்ட மொத்த சென்னையும் சுற்றி வந்து விட்டாள்..மெட்ரோ,பஸ்,ஆட்டோ,
கால்டாக்ஸி என எதையும் விட்டு வைக்கவில்லை..சில நேரங்களில் ரோட்டோர கடைகளை வேடிக்கை பார்த்தபடி கூட பொருட்கள் வாங்கியிருக்கிறது.

சென்னை இவ்வளவு பெரிய ஊரா என திகைப்பாக இருந்தது.

என்ன தான் இல்லை இந்த ஊரில் அனைத்தும் கிடைக்கிறதே..?

சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் கூட ரமாவிற்கு அவளது அப்பார்ட்மெண்ட் தாண்டி வெளியே செல்ல தெரியாது ஆனால் அவளது தங்கோ மொத்த சென்னையும் மூன்று நாட்களில் சுற்றி காண்பித்திருக்கிறாள்.

எப்படித்தான் அவளுக்கு இதெல்லாம் தெரிந்ததோ தெரியவில்லை கையில் மொபைல் ஃபோனை மட்டும் வைத்துக் கொண்டு என்னென்ன வாங்க வேண்டுமோ அனைத்தையும் நொடியில் திட்டமிட்டு வாங்கி குவித்திருந்தாள்.

ஒரு பொருள் எடுக்க தங்கை தான் எவ்வளவு மெனக்கெடுகிறான்.. இதெல்லாம் ரமாவிற்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராது.

அதனால் தான் கணவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று முதல் முறையாக சுயபரிசோதனை கூட செய்தாள்.

ஆதி முதல் நாள் மட்டும் அரை நாள் போல அவளது தந்தையுடன் நேரத்தை செலவிட்டு விட்டு அவனுடைய அலுவலகப் பணியை காணச் சென்று விட்டான்.

அதன்பிறகு இவர்கள் எங்கு போகிறார்கள் என்று எதையுமே கேட்டுக்கொள்ளவில்லை .

ரமாவின் தந்தையோ முதல் நாள் மட்டும் மகள்களோடு சேர்ந்து சுத்தினார் இரண்டாம் நாள் முதலே தன்னால் முடியாது என வீட்டிலேயே தங்கி கொண்டார் .

இப்பொழுது வாங்கிய பொருட்கள் அனைத்தையும் பெட்டியில் அடுக்கிக் கொண்டு மதுரையும் கிளம்பியாயிற்று.

இனி ஆதியின் தாய் தந்தைக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு மீண்டும் முறையாக வந்து ராமாவை அழைக்க வேண்டும் அதன் பிறகு மீதமான சொந்த பந்தங்கள் அனைவருக்கும் பத்திரிக்கை வைப்பது மட்டும் தான் பாக்கி.

கல்யாண வேலையை அதை எடுத்து நடத்தும் பிரபல நிறுவனத்திடம் ஆதி ஒப்படைக்க சொல்லியிருந்ததால் மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொண்டார்.

ஏனெனில் அவருக்கும் இழுத்துப் போட்டு வேலை பார்க்கும் அளவிற்கு உடலளவில் தெம்பு இல்லை.

அது மட்டும் இன்றி ஆதியும் அவனது அலுவலக வேலையில் கவனம் செலுத்துவதால் எல்லாவற்றிற்கும் அவனை தொல்லை செய்ய முடியாது. அதனால் மூத்த மருமகனின் பேச்சை தட்டாமல் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பிடிவாதமாக ஒற்றை ரூபாய்க் கூட ஆதியிடம் இருந்து வாங்கிக் கொள்ளவில்லை.

மாலதியின் மாமியார் தான் குலதெய்வ கோயிலுக்கு சென்று வர வேண்டும் என ஒரு சில சம்பிரதாயங்களை கூறியிருக்கிறார் அதில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லாத ரமாவின் தந்தை உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்க என அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்ததால் அவர்களுக்குமே மாலதியின் தந்தையை மிகவும் பிடித்தது அதனால் அவரை முடிந்த அளவிற்கு தொல்லை செய்யாமல் சில வேலைகளை அவர்களும் இழுத்துப் போட்டுக் கொண்டனர்.

திருமண நாளும் நெருங்க ஆரம்பித்தது ரமாவின் தந்தை ஆதியின் தாய் தந்தைக்கு முறையாக பத்திரிக்கை வைத்துவிட்டு அவர்கள் மகளான ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக விலாசத்தை கேட்கும் பொழுது தர மறுத்து விட்டார்.

என் மகள் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா என கேட்டு விட்டார்.

இது ரமாவின் தந்தையை மிகவும் காயப்படுத்தியது.
உடனே மூத்த மகளை அழைத்து புலம்பி தள்ளி விட்டார்.

என்னம்மா இது உன் வழியில் மாமியாரும் நாத்தனாரும் தான் சொந்தம்னு பக்கத்தில் இருக்காங்க.

ஆனால் உன் மாமியார் நாத்தனாருக்கு பத்திரிக்கை கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களே..! குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் அதுல நம்ம மாலதி கல்யாணத்தை கொண்டு வர்றது இல்லையா.

நாளைக்கு உங்களுக்குள் எல்லாம் சரியாகும் பொழுது மாலதியோட திருமணத்திற்கு அழைக்கவில்லை என்கிற வருத்தம் உன் நாத்தனார் குடும்பத்துக்கு இருக்கும் இல்லையா என மிகவும் குறைபட்டார்.


ராமாவிற்கு தந்தையின் வருத்தம் புரிந்தாலும் மாமியாரின் பேச்சை மீறி பத்திரிக்கை வையுங்கள் என்று கூற முடியாது அல்லவா அதனால் அப்பா விட்ருங்கப்பா..அத்தையே வேணாம்னு சொல்லும் போது நாம எப்படி மீற முடியும்.

எல்லாம் சரியாகும் போது கேட்டா அப்போ சொல்லிக்கலாம்..அண்ணி புரிஞ்சிப்பாங்க.

இல்லம்மா நாத்தனார் உறவு என்பது வெட்டி விடற உறவு கிடையாது.. அவங்க பேசுறாங்களோ இல்லையோ நாளைக்கு தாய்மாமன் என்ற முறையில் உன் கணவர் தானே எல்லாமே முன்ன நிக்கணும் அப்போ நீயும் அவர் பக்கத்தில் இருக்கும் போது இன்னைக்கு செய்ற இந்த சின்ன விஷயம் நாளைக்கு பூதாகரமா தெரியும்.

அது மட்டும் இல்லாம நாளைக்கு உனக்கு சீமந்தம்னு வரும் போது முதலில் உன் நாத்தனார் தானே வந்து முதல் வளையல் போடணும்.
இப்பவே இப்படி ஒதுங்கிட்டா எப்படி..?

உனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் எதுவுமே இல்லாம போயிடுமே அதை நினைச்சு தான் எனக்கு கவலையா இருக்குமா என அவரது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.பிறகு எது வேணாலும் எப்படி வேணாலும் இருந்துட்டு போட்டும்மா ஆனா நாளைக்கு உனக்கு ஒரு விசேஷம்னு வரும் பொழுது கண்டிப்பா உன் நாத்தனார் உனக்கு துணையாக இருக்கணும் இது அப்பாவோட ஆசை என ஒரு கோரிக்கையும் வைத்தார்

சரிப்பா அதை அந்த சமயத்துல பாத்துக்கலாம் என தந்தையை சமாதானப்படுத்தினாள்.

அன்றைய இரவு கணவனிடம் தயங்கியபடியே ராஜி அண்ணிக்கு பத்திரிக்கை வைக்க வேணான்னு அத்தை சொன்னாங்களாம் அப்பா ரொம்ப வருத்தப்படுறாங்க நீங்க அத்தைகிட்ட கொஞ்சம் பேசலாம்ல்ல.

யாரு நானா..?எனக்கேள்வி எழுப்பியவன் நக்கலாக புன்னகைத்தபடி என் மாமனாருக்கே ண்ணோ சொன்னவங்க நான் பேசினா மட்டும் ஓகே சொல்லிடுவாங்களா என பதில் கேள்வி கேட்டான்.
அவளின் முகம் வாடவும் சற்று தன்மையாக அம்மா சொன்னா அது சரியா தான் இருக்கும் ரமா உன் அப்பாகிட்ட சொல்லிடு.

இல்லங்க நான் உங்ககிட்ட பேசிட்டு சொல்லறேன்னு சொல்லிருக்கேன் எனக்காக ஒரு தடவை அத்தை கிட்ட என கெஞ்சுவது போல பேசிக்கொண்டிருந்தவளை

ஏய் ஒருதரம் சொன்னா உனக்கு புரியாது என அதட்டினான்.

பிறகு அதே கோபத்தோடு அக்கா வீட்டைப் பொருத்தும் வரைக்கும் யாராவது பேசறது தெரிஞ்சாலே அவளை படுத்தி எடுப்பாங்க இப்போ அவ மாசமா வேற இருக்கா இந்த சமயத்துல அங்க போய் உன் அப்பா பத்திரிகை கொடுத்தா வேற வினையே வேணாம்.
அப்புறம் என் அக்காவால அவ மாமியார் கோபத்தை சமாளிக்க முடியாது.

இதெல்லாம் உனக்கு தெரியும் தானே.
கொடைக்கானல்ல நானும் அம்மாவும் பேசினதை நீ முழுசா கேட்டது எனக்கு தெரியும் ரமா..எதையும் மறைக்க கூடாதுன்னு தான் நீ வந்தது தெரிந்தும் கூட நான் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன்.
இப்போ
ஒன்னும் தெரியாத மாதிரி என் முன்னாடி வந்து பேசிட்டு இருக்க..உன் அப்பாவுக்கு தான் ஒன்னும் தெரியாது..அதனால உன்கிட்ட சிபாரிசுக்கு வந்தாரு..உனக்கு எல்லாம் தெரியும் தானே நீயே ஏதாவது சொல்லி சமாளிக்கறதை விட்டுட்டு என் கிட்ட வர்ற.
அவ்ளோ கொழும்பு இல்லையா என மிரட்டும் தோணியில் கூறியவன் வாய்க்குள்ளாகவே
இவ தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணறதுக்குள்ள என் அக்காவை வாழ வெட்டியா ஆக்கிடுவா போல என்று கூறவும் அப்படியே வாயடைத்து நின்று விட்டாள் ரமா.

அவனது சகோதரி வீட்டின் பிரச்சனைக்கு மூல காரணமே இவன் தான் என்னமோ ரமா வந்து தான் குடும்பத்தையே பிரித்து விட்டது போல் அவன் சித்தரிப்பதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருமண சமயத்தில் இவனை பகைத்துக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்தாள்.

அவனது கேள்விக்கும் கோபத்திற்கும் இவளிடம் சரியான பதில் இருக்கிறது.. இவள் வாய்துடுக்காக ஏதாவது கேட்டு வைக்க..

அதை ஆதி மனதில் வைத்துகொண்டு திருமணத்திற்கு வர மாட்டேன் என கூறிவிட்டால் அதுவேற தேவையில்லாத சங்கடம் ஆகிவிடும் அதனால் மௌனமாக இக்கணத்தை கடந்து செல்லலாம் என அமைதியாகவே இருந்து விட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்தபடி திருமண நாளும் வந்தது.

மாப்பிள்ளை அரவிந்த் மூன்று மாத விடுப்பில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து விட்டான் திருமணம் முடிந்த மூன்று மாதங்கள் இங்கு தான் இருக்கப் போகிறான்.

அந்த இடைப்பட்ட நாளில் தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டிய அனைத்து சட்டபூர்வ வேலைகளையும் செய்தாக வேண்டும் கூடவே மனைவியோடு இந்தி
யாவிலேயே தேனிலவையும் முடித்துவிட வேண்டும் என முடிவோடு வந்திருக்கிறான்.
 
Top Bottom