புரிதலே சிறப்பு. | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

புரிதலே சிறப்பு.

New updates

LATEST
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221
Points
43
மனைவி - எப்ப வருவீங்க வீட்டுக்கு?

கணவன் - வேலை அப்போதே
முடிந்து விட்டது.
பஸ் தான் வரவில்லை.

மனைவி - தினமும் இதேதான்
சொல்றீங்க, கடைசியில்
வீட்டுக்கு வர பத்து மணி ஆகிவிடுகிறது என்று சலித்து
கொண்டாள்.

கணவன் - உன் கவலை புரிகிறது.
ஆனால் நேரத்துக்கு பஸ் வரமாட்டேங்குது என்றார்.


நாளை எனக்கு விடுமுறை தான்
வீட்டில் இருப்பேன் என்றார்.

மறுநாள் விடுமுறை வீட்டில் இருக்கலாம், எங்காவது வெளில
போகலாம் என்று நினைக்கும் போது

பக்கத்து வீட்டில் உள்ளவர் வந்து
மனைவியை, போன மாதம்
வளைகாப்பு போட்டு போன
விஜயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது பார்க்க போகிறோம்
வருகிறாயா என்றனர்.

மனைவி - வருகிறேன் என்றாள்.
கணவரிடம், நான் போய்ட்டு
சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று
சொல்லி, குழந்தையை பார்க்க
கிளம்பி போனாள்.

வீட்டில் இருந்த கணவனுக்கு
போரடிக்க ஆரம்பித்து விட்டது.

ஒருநாளைக்கே போரடிக்குதே,
தினமும் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று மனைவியை
நினைத்து வருத்தப் பட்டார்.

குழந்தையைப் பார்த்து விட்டு
திரும்ப ஊருக்கு வர
பஸ்ஸுக்கு காத்திருந்து
காத்திருந்து டென்சனாகி,
ஒருநாளைக்கே நம்மால்
பஸ்ஸுக்கு காத்திருப்பது
கோபம் வருகிறதே
நமது கணவர் தினமும்
பஸ்ஸுக்கு காத்திருப்பது
கஷ்டம் தான் என்று நினைத்து கொண்டாள்.

வீட்டுக்கு வந்த பிறகு இரு
வரும்
தங்களின் புரிதலை சொல்லி
மகிழ்ச்சி அடைந்தனர்.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
அருமை, அருமை

அழகான சிறுகதை

புரிதல் இல்லாத வாழ்க்கை சிறக்காது. விட்டுக் கொடுப்பும், அனுசரணையும் எதையும் நம்மை விட்டுப் போகவும் விடாது.
 
Top Bottom