புன்னகை : 2 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

புன்னகை : 2

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
அத்தியாயம் 2

இனியாவின் அழைப்பால், பைரவியும் அவள் தோழி மகேஸ்வரியும் அவளை நோக்கிச் சென்றார்கள். இனியா ஏன் தங்களை அழைக்கிறாள் என்று யோசித்தவாறே இருக்க, "ஏய் உங்களைத் தான் கூப்பிடுவது காதில் விழலையா?" என்று குரலை உயர்த்தினாள் அவள்.

உடனே அவர்கள் இருவரும் இனியா மற்றும் அவளது நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு நடக்க, இனியா, "நீங்க ரெண்டு பேரும் யார்? உங்களை இதுவரை பார்த்தது இல்லையே! இப்போதான் இந்தக் காலேஜுக்குப் புதுசா வந்து இருக்கீங்களா?" என்று விசாரித்தாள்.

அவர்கள் கல்லூரிக்கு முதல் வருடம் படிக்க வந்திருப்பதாகச் சொன்னதும், இனியா அவர்களை விட மனமில்லாமல் தன் தோழர்களைக் கண்டு கண் ஜாடையில் ஏதோ சொன்னாள். அவர்களும் புரிந்துகொண்டு தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு இருக்க, ஒருவன் மட்டும் எழுந்து சென்று வந்தான்.

இனியா அவர்கள் இருவரின் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, நண்பன் கொடுத்த ரோஜா மலரை வாங்கி அவர்களுக்குச் சற்று தொலைவில் புற முதுகு காட்டி அமர்ந்திருந்த கல்லூரி டாப் ஒன் மாணவனை நோக்கி கைகாட்டினாள்.

பைரவி அது யார் என்று தெரியாமல் பார்த்திருக்க, இனியா, "அதோ அந்த நீல நிற சட்டை அணிந்திருக்கும் மாணவனிடம் இந்தப் பூவைக் கொடுத்துட்டு, அப்படியே ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு வா. நீ கொடுக்கிற லுக்குல இன்னைக்கு ராத்திரி பூராவும் அவர் உன்னையே நினைச்சுட்டு இருக்கணும்" என்றாள்.

திருதிருவென விழித்துக்கொண்டு அவர்களைப் பார்த்தவாறு நின்றாள் பைரவி. அவளது செவியோரமாகச் சென்று, "இப்ப மட்டும் நீ யாருன்னு சொன்னேன்னு வச்சுக்கோ, இவங்க எல்லாரும் தெறிச்சு ஓடிடுவாங்க" என்றாள் மகேஸ்வரி.

ஏற்கனவே இனியா சொன்ன விஷயத்தில் ஷாக் அடித்தது போலிருந்த பைரவி, தோழி சொன்னதைக் கேட்டு மனதிற்குள் புகைந்தாள்.

"என்னடி, இப்படி வாயை மூடிட்டு இருக்கே! அப்போ அவர்கள் சொன்னதில் உனக்குச் சம்மதம்தானா?"

அவளை விழிகளால் அடக்கிய பைரவி, "நீங்க இப்போ என்ன சொன்னீங்க? ரொமான்டிக் லுக்கா? அப்படின்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே?" என்று ஏதுமறியாத பச்சைப் பிள்ளையைப் போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

"ஆமாம்" என்றாள் இனியா.

பைரவி அதிர்ச்சியுடன் மார்பில் கையை வைத்துக்கொள்ள, "என்னவோ நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லச் சொன்ன மாதிரியில்ல நீ அதிர்ச்சியாகி நிற்கிறே! ஒழுங்கா நான் சொல்வதைக் கேட்டுப் போயி அது போலவே நடந்துக்கல, பிறகு ஐ லவ் யூன்னு சொல்லவும் வச்சுடுவேன்" என்று மிரட்டினாள்.

பைரவி அவசரமாக மறுத்ததும், "அப்படின்னா, அதோ அந்தப் பக்கம் சிடுமூஞ்சியை வச்சுக்கிட்டு ஒருத்தர் இருப்பார். அவரிடம் போயி இந்தப் பூவைக் கொடுத்துட்டு ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு வா" என்றாள் இனியா.

உடனே பைரவி, "அதெல்லாம் தப்பு! நான் மாட்டேன்" என்று பயத்துடன் சொன்னாள்.

"இப்போ போகல அப்புறமா, புதுசா போட்டுட்டு வந்திருக்கும் தாவணியைப் பிடித்து இழுத்து எடுத்துட்டு, அப்படியே காலேஜுக்குப் போன்னு விட்டிடுவேன்" என்று மிரட்டல் விடுத்தாள்.

அவள், "ஆனாலும் நீங்க இப்படி எல்லாம் என்னை மிரட்டப்படாது. நானே ஒரு அப்பாவி! இதுல அந்த யாருன்னு தெரியாத நபரிடம் போயி ரொமான்டிக் லுக் விடச் சொல்றீங்களே..." என்று இதழ்களைப் பிதுக்கினாள்.

"வாவ்! வாட் எ ரோஸ் மேரி" என்றான் அருகில் நின்று அவளையே பார்த்த சங்கரன். அவன் தோளில் ஒரு இடி கொடுத்து, "ம்ம்... நேரமாகுது போ!" என்று அனுப்பி விட்டாள் இனியா.

"ரொமான்டிக் லுக் எனக்கு வராது."

"இதுகூடத் தெரியாம நீ எல்லாம் எப்படி காலேஜுக்குப் படிக்க வந்திருக்கே?"

இனியா சலிப்புடன் கேட்டதும், "அந்த மேட்டுக்குடி படத்துல நம்ம கவுண்டமணி சார் தருவது போலவா?" என்று சந்தேகமாகக் கேட்க, "என் அக்கா மகளே இந்து..." என்று காதில் ஒரு கையை வைத்து ராகமாக இழுத்தான் சங்கரன்.

அதைக் கேட்ட பெண்கள் இருவரும் கொல்லெனச் சிரித்துவிட, "இதுவும் நல்லாதான் இருக்கு. போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்கள்.

பயப்பந்து தொண்டைக்குள் சுழல, மெதுவாகப் பின்னாடி பார்த்துப் பார்த்து சென்று, "எக்ஸ்க்யூஸ் மீ! செத்த நேரம் திரும்புறீங்களா?" என்றாள் பைரவி.

அவன் அசையக்கூட செய்யாமல் அப்படியே இருந்ததும், திரும்பிப் பார்த்துக் கையை அசைத்தாள் பைரவி. அவள் மீண்டும் அழைக்குமாறு சொல்லி ஜாடை காட்டியதும், "ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என்றாள்.

அவன் செவியில் வைத்திருந்த காதொலிக் கருவி (ear phone) வழியாக மெல்லமாய் யாரிடமோ பேசியவாறு இருக்க, இவள் அழைத்தது அவன் செவியை எட்டவில்லை. அவளுக்கு அது தெரியாமல் மீண்டும் மீண்டும் அழைக்க, ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தவன் நெருப்பாக அவளை முறைத்தான்.

அதில் விக்கித்துப் போனாள் பைரவி!

இப்படி ஒரு கடுமையான முகத்தை இத்தனை நாளில் அவள் எங்கேயும் பார்த்ததில்லை. பெண்கள் என்றாலே இப்படித்தான் இருப்பானா? அல்லது திடீரென தொல்லை செய்துவிட்டதால் இவ்வாறு நடந்துகொள்கிறானா? இதற்காகத்தான் அவனுக்குச் சிடுமூஞ்சி என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார்களோ எனப் பலவாறு நினைத்தாள்.

அவனை சும்மாவே பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை. இதில் எங்கிருந்து ரொமான்டிக் லுக் விடுவது?

அவள் கையில் இருந்த ரோஜா வேறு, அவள் மனநிலையைப் போலவே நடுங்கியது.

'பார்வையாடா இது? அக்கினிக் குழம்பை வாரிப் பூசியது போல் இருக்கு. அந்தப் பொண்ணு பேச்சைக் கேட்டுத் தெரியாம வந்துட்டேனே! ஆண்டவா என்னைக் காப்பாத்து!' என்று மனதிற்குள் வேண்டினாள்.

அவன் உதட்டைக்கூட அசைக்காமல் விழி அசைவினாலே என்ன என்று விசாரிக்க, அவள் இல்லை என்றாள். அவனோ, 'பிறகும் ஏன் இங்கேயே நின்று கொண்டு இருக்கிறாய். போ' என்று விழிகளால் மிரட்ட, இதழ்களைக் கடித்துக்கொண்டு பின்புறமாகப் பார்த்தாள் பைரவி.

இனியா மரத்தின் பின்புறமாக மறைந்து நின்று, கையை காட்ட, 'இப்படி ஒரு சிடுமூஞ்சி சிங்காரத்திடம் என்னை மாட்டி விட்டுவிட்டாயே! அவனது முகம் இருக்கும் நிலையில் நான் எப்படி ரொமான்டிக் லுக் விடுவது?' என்று பார்வையால் கேட்டாள்.

அவளோ முறைத்துக்கொண்டு, எதிரில் நின்றவனை நோக்கிக் கண் காட்ட, சீறும் சிறுத்தையின் முன்பும், முறைக்கும் வேங்கையிடமும் மாட்டிக்கொண்டதை போல உணர்ந்தாள் பைரவி.

விஜய ரகுநாதன் அவள் பார்த்த திசையை நோக்கித் தனது கண்களை ஓட விட, இனியாவும் மற்ற தோழர்களும் மரத்திற்கு உள்ளே புகுவது போல மறைந்துகொண்டார்கள். பின்னர் அவள் புறமாகப் பார்வையைத் திருப்பினான்.

அவள் வாய் பேசா மடந்தையைப் போலவே காட்சியளிக்க, அவளது கையில் இருந்த ரோஜா மலரை பிடித்து இழுத்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் அவன். தரையில் விழுந்து கிடந்த பூவைப் பார்த்துக்கொண்டே நின்றாள் பைரவி.

மகேஸ்வரி வந்து அவள் தோளில் கை வைத்ததும், கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் அவளுடன் சேர்ந்து வகுப்பறைக்குச் சென்றாள்.

அவர்களைப் போலவே புதியதாக வந்திருந்த மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் சென்று அமர்ந்தார்கள். எல்லோரும் விதவிதமான ஆடைகளில் வந்திருக்க, இவர்கள் இருவரும் மட்டுமே தாவணியில் சென்றிருந்தார்கள். அது அவர்களை மற்ற பெண்களில் இருந்து மாறுபடுத்திக் காட்டியது.

"சரியான பட்டிக்காடு போலிருக்கு" என்று பெரும் வசதி படைத்தவரின் வாரிசான வினயா சொன்னாள்.

இவர்கள் இருவரும் கேட்டும் கேட்காதது போல தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்கள். சற்று நேரத்தில் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைந்து மாணவ மாணவியர்களிடம் பேசினார். அருகில் இருந்த மாணவிகள் தங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். பைரவியும், அந்தப் பெண்களைப் பார்த்துச் சிநேகமாக முறுவலித்தாள்.

மதிய நேரம் கேண்டீனுக்குச் சென்று அமர்ந்தார்கள். இவர்களைக் கண்டதும் சங்கரன் அங்கு நோக்கி வந்தான். இனியாவும் தனது நட்புகள் புடைசூழ வந்து அமர்ந்தாள்.

"ஆமாம். காலையிலே நாங்க உன்கிட்டே என்ன சொன்னோம்? நீ என்ன செய்து வச்சிருக்கே? உனக்கென்ன அவ்வளவு திமிரா?"

பைரவி மிடறு விழுங்கியவாறு 'இல்லை' என்று தலையாட்டியதும், "நாங்க சொன்னதைக் கேட்கல, இந்தக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாது" என்று எச்சரித்தாள் இனியா.

மகேஸ்வரி, பைரவியின் கையைப் பற்றி அழுத்தியதும், பேசாமல் அமைதியாக இரு என்பது போலக் கண்ணை மூடித் திறந்தாள் பைரவி.

"விடு மச்சி எதுக்கு இப்ப அந்தப் பொண்ணுகிட்டே கலாட்டா பண்ணிட்டு இருக்கே? இன்னும் ஒரு நேரம் அந்த சிடுமூஞ்சியை வச்சுச் செஞ்சிடலாம். இப்போ சாப்பிடுற நேரம் நம்ம எல்லாரும் சாப்பிட்டு மொத்தப் பில்லையும் இவள் தலையில் கட்டிடலாம்" என்றான் சங்கரன்.

அவன் சொன்னது சரியாக இருந்தது. இனியாவுடன் சேர்ந்து இரண்டு மாணவிகள், ஒரு மாணவனுமாக மொத்தம் ஐந்து பேர் அவர்களின் இருக்கையின் அருகில் அமர்ந்து வேண்டியதை வரச் செய்து, உண்டு முடித்து எழுந்து சென்றார்கள்.

இவர்கள் இருவரும் உண்ணாமல் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை கையில் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க, ஐவரும் உண்ட உணவுக்கான தொகை வந்து அவர்கள் முன்பு இருந்தது.

கண்களைத் தட்டிப்பார்த்து, "இதுக சரியான தின்னிப் பண்டாரமா இருக்கு, இப்படியே விட்டு வைக்கக் கூடாது. உங்க அப்பா யாருன்னு தெரிஞ்சா தானாவே அடங்கிடப் போறாங்க. நீ எதுக்குடி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என்னை அடக்கி வைக்கப் பார்க்கிறே?" என்று கோபித்தாள் மகேஸ்வரி.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, "எப்படியும் அவர்கள் ஆப்பு வாங்கத்தான் போறாங்க. அப்படி வாங்கப் போகும் ஆப்பினால் பிற்காலத்தில் எவர் ஒருவருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு இருக்கணும். நீ சாப்பிடு நேரமாகுது" என்று வலியுறுத்தினாள் பைரவி.

இருவரும் உண்டு முடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த பணத்தை செலுத்தி விட்டு, மறுபடியும் வகுப்பு அறைக்குச் சென்று அமர்ந்தார்கள்.

மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக வரும்போது, அதே சிடுமூஞ்சி சிங்காரம் வேகமாக வந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டிருந்தான்.

இந்தப் பக்கமாக இருந்து ஸ்கூட்டியில் வந்த பைரவி, அவன் திடீரென இடை புகுவான் என்று தெரியாமல் ஸ்கூட்டியை நிறுத்தச் செல்ல, அவனது முறைப்பும் வேகமும் ஸ்கூட்டியை கீழே விழ வைத்தது.

பைரவியைப் பார்த்துக் கடுமையாக முறைத்தவன், "ஒழுங்கா ஒரு ஸ்கூட்டி ஓட்டத் தெரியல. உனக்கெல்லாம் லவ் ப்ரோபோஸ் கேட்குதா? மூஞ்சியும் மொகரக்கட்டையும் பாரு" என்று எறிந்து விழுந்தான்.

அவள் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டே இருக்க, "மினுக்கிட்டு வந்து யாராவது வசதியான பையன் கிடைக்க மாட்டானான்னு அலைய வேண்டியது. பிறகு, ரொம்பவும் நல்லவ மாதிரி நடிச்சு ஏமாத்த நினைப்பதே உங்களை மாதிரிப்பட்டவருக்கு வேலையா போச்சு. மறுபடியும் என் கண்ணில் விழுந்தால் நடப்பதே வேறு!" என்று எச்சரித்து அகன்றான்.

அவன் சொன்னதற்கான அர்த்தம் புரியவும் அவள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, அருகில் சங்கரனின் வெடிச் சிரிப்பு கேட்டது.

மகேஸ்வரி பல்லைக்கடித்துக்கொண்டு கோபத்தை அடக்க முயன்றாள். அவனது நண்பர்கள் பட்டாளம் சுற்றி வந்து நின்று அவர்களைக் கேலி செய்தது.

"மச்சி! இனி நீ எதுவும் செய்ய வேண்டாம் அவனே அவங்களைப் பார்த்துப்பான். இப்போ கேண்டினில் போயி சூடா ஒரு கப் காஃபி சாப்பிட்டு வரலாமா?" என்று கேட்டான் சங்கரன்.

இனியாவின் கண்கள் பெண்கள் இருவரையும் வட்டமிட்டன. அவர்கள் இல்லை என்பது போல அவசரமாகத் தலையாட்ட, புரிந்துகொண்டு அவளும் நமட்டுச் சிரிப்புடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

"இதென்னடி காலேஜுக்கு வந்த முதல் நாளே வம்பா போச்சு? நீதான் வாய் திறந்து பேசாம இருந்தால், என்னையும் திறக்க விடாமல் பண்ணிட்டியேடி! மறுபடியும் ஒருமுறை மாட்டட்டும் அவர்களை என்ன செய்யறேன்னு பாத்துக்கோ" என்று அவர்கள் சென்ற திசையை நோக்கிக் கூறினாள்.

"சரி, சரி! வா, காலேஜுக்கு வந்தவுடனே பிரச்சனை வேணாம்னுதான் இவ்வளவு தூரம் அடங்கிப் போனேன். அவர்கள் அதிகமா போற மாதிரி தெரிஞ்சா அப்ப பாத்துக்கலாம்"

மெதுவாகத் தரையில் இருந்து எழுந்து நின்று ஸ்கூட்டியைத் தூக்கி வைத்துப் பின்னர் அதில் ஏறி அமர்ந்து வீட்டிற்குச் சென்றார்கள்.

கீழே விழுந்து அடிபட்டதில் வலது கை முழங்கைப்பகுதியில் உராய்வு ஏற்பட்டிருந்தது. வலியை அடக்கிக்கொண்டு மகேஸ்வரியை அவள் வீட்டிற்கு முன்புறம் இறக்கிவிட்டதும், இதைப்பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்து, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் பைரவி.

யாரும் பார்ப்பதற்கு முன்பாக அவசரமாகத் தனது அறைக்குள் நுழைந்து, தன்னை சுத்தப்படுத்தி விட்டு இரவு ஆடைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் அம்மா வந்து கல்லூரியில் முதல் நாள் எப்படி இருந்தது என்று கேட்டுச் சற்று நேரம் பேசிவிட்டு மகளுக்கு உணவையும் கொடுத்து முடித்த பின்னரே வெளியேறிச் சென்றார்.

அவள் உள்ளம் காலையில் பசுபதியின் வீட்டிற்குச் சென்றதை எண்ணிப் பார்த்தது. அவனது சிரிப்பும், அன்பான பேச்சும், அக்கறையுடன் நடந்துகொண்ட விதமும் விஜயரகுநாதனின் பக்கத்தில்கூட வந்திருக்காது எனலாம்.

காலையில் சென்று அவ்வளவு பேசியும், முறைத்தும், தண்டனை கொடுத்தும் அவன் மறுத்து பேசாமல் இருந்ததிலேயே அவன் மனதில் எந்த இடத்தில் அவள் இருக்கிறாள் என்றும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்போது அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை அவளை உந்தியது. ஆனாலும், அப்பா நீலமேகம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்.

மாலை முடிந்து இருள் பரவ துவங்கியது. அந்த நேரம் அவளது ஜன்னல் கதவு தட்டப்பட்டது.

யாராக இருக்கும் என்று அங்கு நோக்கிப் பார்வையைப் பதித்தாள் பைரவி.

அவளது படுக்கை அறை வீட்டின் பின் பக்கமாக உள்ளது. இத்தனை வருடத்தில் யாரும் வந்து இதுபோல செய்தது இல்லை. ஆகவே, இது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். யாரையும் காணாததும் மறுபடியும் தாழிட்டுவிட்டுத் திரும்பினாள். ஜன்னல் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. சலிப்புடன் படாரெனத் திறந்து பார்த்தவள், யோசனையுடன் வீட்டின் பின்புறம் சென்று நோக்கினாள். அங்கு அவன் நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் விரைந்து சென்று, "என்ன அத்தான் வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டாள் பைரவி.

அவன் புன்னகையுடன் அருகில் வந்து கையில் இருந்ததை அவள் முன்பு காண்பித்தான்.

என்னவாக இருக்கும் என்று தெரியாமல் அதை வாங்கிப் பார்த்து அசந்துதான் போய்விட்டாள் அவன் கொழுந்தியார்.

கண் கலங்கிவிட்டது அவளுக்கு. கல்லூரியில் முறையாக எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் இன்னும் அவன் நினைத்தது போன்று வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பது அவள் அறிந்த விஷயம். அப்படி இருக்கும்போது அவள் ஆசைப்பட்டது போன்ற சாதனத்தை வாங்கி வந்திருந்தால் அவளால் எப்படி பூரிக்காமல் இருக்க முடியும்?

"அத்தான் இது?" வாய் வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற்றத்துடன் இருக்க, "உனக்கு ரொம்பப் பிடிச்ச பிங்க் ஒயிட் நிறத்தில் உள்ள ஜிமிக்கிடா! முன்னாடி உள்ளதை நீ பிக்னிக் போன இடத்தில் தவற விட்டுட்டதா சொல்லி ஒவ்வொரு முறையும் வருத்தப்படும் போதெல்லாம் அதை உங்க அப்பாவும், அண்ணனும் வாங்கித் தந்துடக் கூடாது. என் கையால்தான் வாங்கித் தரணும்னு நினைச்சுக்குவேன். இன்னைக்கு உனக்குப் பிறந்தநாள்னு சொன்னே இல்லையா, இதுக்கு மேலும் தாமதிக்கக் கூடாதுன்னு உடனே வாங்கிட்டு வந்துட்டேன். உனக்குப் புடிச்சிருக்கா கொழுந்தியார்?" என்று கேட்டான்.

அவள் நாசியை உள்ளிழுத்துக் கண்ணீரை அடக்கிக்கொண்டாள்.

"நீ இதைப்போட்டுட்டு வந்து காமிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"

"இப்பவேயா?"

"ஆமாம்"

அவள், அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள். உடனடியாகக் காதில் இருந்த பழைய தோடுகளை நீக்கிவிட்டு அவன் வாங்கித் தந்திருந்ததை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்பு சென்று பார்த்தாள். அவள் அணிந்திருந்த வெண்ணிறத்தில் பிங்க் நிறக் கோடுகள் வரையப்பட்டிருந்த இரவு ஆடைக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. அடுத்த நிமிடமே உடலைத் தழுவிய இரவு ஆடையில் அவளது மேனி நெளிவு வளைவுகள் அப்பட்டமாக தெரிந்ததும், அவன் முன்பு அப்படி செல்லக் கூச்சமாகியது.

அவசரமாக அதை மாற்றிவிட்டுச் சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டாள். வெளியே நின்றவனோ ஏற்கனவே அவள் வந்திருந்த தோற்றத்தைக் கண்டு மயக்கத்தில் இருந்திருந்தான். இப்போது அவள் சுடிதார் அணிந்துகொண்டு அருகில் வந்து நின்று சிரித்ததும், முகம் முழுவதும் பரவிய புன்னகையுடன் அவளது தலையில் முட்டினான்.

வானத்தில் கொஞ்சமாக தோன்றிய பிறை நிலவு தன் இருப்பைக் காட்டி இருக்க, சிறுசிறு நட்சத்திரங்கள் ஆங்காங்கு நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வேடிக்கைப் கொண்டிருந்தது. அவனது பார்வையும், சிரிப்பும் அவளுக்கு விஷயத்தைப் புரிய வைத்தது. சிறு முறைப்புடன் அவனது தோளில் அடித்தாள் பைரவி. அவள் இரு கன்னத்தையும் பற்றி விழிகளை கூர்ந்தவன், "இது உனக்காகவே தயாரிச்சது போல அவ்வளவு அழகா இருக்குடா" என்றான்.

அவள் பதில் சொல்ல நா எழாமல் தலையை மட்டுமே ஆட்டினாள். அடுத்ததாக அவன் "இன்னைக்கு முதல் முதலா காலேஜ் போனியே, அங்கே எப்படி இருந்தது?" என்று விசாரிக்க, அதற்கான அவளது பதில் அவனது இரவு உறக்கத்தையே பறித்துவிட்டது.
 
Last edited:

naganathan

Member
Joined
Nov 1, 2024
Messages
11
Reaction score
8
Points
18
கல்லூரியில் நடக்கும் ராகிங் இயல்பாக கதையாகி உள்ளது

பாவம் அவள் யாரென்று அறியாமல் விளையாடுகிறார்கள்

பின் விளைவுகள் எப்படி இருக்குமோ

பொறுத்திருந்து பார்ப்போம்

இனிய வாழ்த்துக்கள்
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63

அவளது படுக்கை அறை வீட்டின் பின் பக்கமாக உள்ளது. இத்தனை வருடத்தில் யாரும் வந்து இதுபோல செய்தது இல்லை. ஆகவே, இது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். யாரையும் காணாததும் மறுபடியும் தாழிட்டுவிட்டுத் திரும்பினாள். ஜன்னல் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. சலிப்புடன் படாரெனத் திறந்து பார்த்தவள், யோசனையுடன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள். அங்கு அவன் நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் விரைந்து சென்று, "என்ன அத்தான் வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டாள் பைரவி.

அவன் புன்னகையுடன் அருகில் வந்து கையில் இருந்ததை அவள் முன்பு காண்பித்தான்.

என்னவாக இருக்கும் என்று தெரியாமல் அதை வாங்கிப் பார்த்து அசந்துதான் போய்விட்டாள் அவன் கொழுந்தியார்.

கண் கலங்கிவிட்டது அவளுக்கு. கல்லூரியில் முறையாக எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் இன்னும் அவன் நினைத்தது போன்று வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பது அவள் அறிந்த விஷயம். அப்படி இருக்கும்போது அவள் ஆசைப்பட்டது போன்ற சாதனத்தை வாங்கி வந்திருந்தால் அவளால் எப்படி பூரிக்காமல் இருக்க முடியும்?

"அத்தான் இது?" வாய் வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற்றத்துடன் இருக்க, "உனக்கு ரொம்பப் பிடிச்ச பிங்க் ஒயிட் நிறத்தில் உள்ள ஜிமிக்கிடா! முன்னாடி உள்ளதை நீ பிக்னிக் போன இடத்தில் தவற விட்டுட்டதா சொல்லி ஒவ்வொரு முறையும் வருத்தப்படும் போதெல்லாம் அதை உங்க அப்பாவும், அண்ணனும் வாங்கித் தந்துடக் கூடாது. என் கையால்தான் வாங்கித் தரணும்னுதான் நினைச்சுக்குவேன். இன்னைக்கு உனக்குப் பிறந்தநாள்னு சொன்னே இல்லையா, இதுக்கு மேலும் தாமதிக்கக் கூடாதுன்னு உடனே வாங்கிட்டு வந்துட்டேன். உனக்குப் புடிச்சிருக்கா கொழுந்தியார்?" என்று கேட்டான்.

அவள் நாசியை உள்ளிழுத்து கண்ணீரை அடக்கிக்கொண்டாள்.

"நீ இதைப்போட்டுட்டு வந்து காமிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"

"இப்பவேயா?"

"ஆமாம்"

அவள், அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள். உடனடியாகக் காதில் இருந்த பழைய தோடுகளை நீக்கிவிட்டு அவன் வாங்கித் தந்திருந்ததை அணிந்துகொண்டு கண்ணாடியில் சென்று பார்த்தாள். அவள் அணிந்திருந்த வெண்ணிறத்தில் பிங்க் நிறக் கோடுகள் வரையப்பட்டிருந்த இரவு ஆடைக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. அடுத்த நிமிடமே உடலைத் தழுவிய இரவு ஆடையில் அவளது மேனி நெளிவு வளைவுகள் அப்பட்டமாக தெரிந்ததும், அவன் முன்பு அப்படி செல்லக் கூச்சமாகியது.

அவசரமாக அதை மாற்றிவிட்டுச் சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டாள். வெளியே நின்றவனோ ஏற்கனவே அவள் வந்திருந்த தோற்றத்தைக் கண்டு மயக்கத்தில் இருந்திருந்தான். இப்போது அவள் சுடிதார் அணிந்துகொண்டு அருகில் வந்து நின்று சிரித்ததும், முகம் முழுவதும் பரவிய புன்னகையுடன் அவளது தலையில் முட்டினான்.

வானத்தில் கொஞ்சமாக தோன்றிய பிறை நிலவு தன் இருப்பைக் காட்டி இருக்க, சிறுசிறு நட்சத்திரங்கள் ஆங்காங்கு நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்து கொண்டிருந்தது. அவனது பார்வையும், சிரிப்பும் அவளுக்கு விஷயத்தைப் புரிய வைத்தது. சிறு முறைப்புடன் அவனது தோளில் அடித்தாள் பைரவி. அவள் இரு கன்னத்தையும் பற்றி விழிகளை கூர்ந்தவன், "இது உனக்காகவே தயாரிச்சது போல அவ்வளவு அழகா இருக்குடா" என்றான்.

அவள் பதில் சொல்ல நா எழாமல் தலையை மட்டுமே ஆட்டினாள். அடுத்ததாக அவன் "இன்னைக்கு முதல் முதலா காலேஜ் போனியே, அங்கே எப்படி இருந்தது?" என்று விசாரிக்க, அதற்கான அவளது பதில் அவனது இரவு உறக்கத்தையே பறித்துவிட்டது.
😅 செம க்கா காலேஜ் ராகிங் 😅
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
கல்லூரியில் நடக்கும் ராகிங் இயல்பாக கதையாகி உள்ளது

பாவம் அவள் யாரென்று அறியாமல் விளையாடுகிறார்கள்

பின் விளைவுகள் எப்படி இருக்குமோ

பொறுத்திருந்து பார்ப்போம்

இனிய வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நன்றி சகோ

நிஜமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.
 
Sujatha

Member
Joined
Sep 27, 2024
Messages
64
Reaction score
49
Points
18
Super sago
 
ஆஷா சாரா

Active member
Staff member
Joined
Oct 22, 2024
Messages
284
Reaction score
241
Points
43
Supe
அத்தியாயம் 2

இனியாவின் அழைப்பால், பைரவியும் அவள் தோழி மகேஸ்வரியும் அவளை நோக்கிச் சென்றார்கள். இனியா ஏன் தங்களை அழைக்கிறாள் என்று யோசித்தவாறே இருக்க, "ஏய் உங்களைத் தான் கூப்பிடுவது காதில் விழலையா?" என்று குரலை உயர்த்தினாள் அவள்.

உடனே அவர்கள் இருவரும் இனியா மற்றும் அவளது நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு நடக்க, இனியா, "நீங்க ரெண்டு பேரும் யார்? உங்களை இதுவரை பார்த்தது இல்லையே! இப்போதான் இந்தக் காலேஜுக்குப் புதுசா வந்து இருக்கீங்களா?" என்று விசாரித்தாள்.

அவர்கள் கல்லூரிக்கு முதல் வருடம் படிக்க வந்திருப்பதாகச் சொன்னதும், இனியா அவர்களை விட மனமில்லாமல் தன் தோழர்களைக் கண்டு கண் ஜாடையில் ஏதோ சொன்னாள். அவர்களும் புரிந்துகொண்டு தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு இருக்க, ஒருவன் மட்டும் எழுந்து சென்று வந்தான்.

இனியா அவர்கள் இருவரின் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, நண்பன் கொடுத்த ரோஜா மலரை வாங்கி அவர்களுக்குச் சற்று தொலைவில் புற முதுகு காட்டி அமர்ந்திருந்த கல்லூரி டாப் ஒன் மாணவனை நோக்கி கைகாட்டினாள்.

பைரவி அது யார் என்று தெரியாமல் பார்த்திருக்க, இனியா, "அதோ அந்த நீல நிற சட்டை அணிந்திருக்கும் மாணவனிடம் இந்தப் பூவைக் கொடுத்துட்டு, அப்படியே ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு வா. நீ கொடுக்கிற லுக்குல இன்னைக்கு ராத்திரி பூராவும் அவர் உன்னையே நினைச்சுட்டு இருக்கணும்" என்றாள்.

திருதிருவென விழித்துக்கொண்டு அவர்களைப் பார்த்தவாறு நின்றாள் பைரவி. அவளது செவியோரமாகச் சென்று, "இப்ப மட்டும் நீ யாருன்னு சொன்னேன்னு வச்சுக்கோ, இவங்க எல்லாரும் தெறிச்சு ஓடிடுவாங்க" என்றாள் மகேஸ்வரி.

ஏற்கனவே இனியா சொன்ன விஷயத்தில் ஷாக் அடித்தது போலிருந்த பைரவி, தோழி சொன்னதைக் கேட்டு மனதிற்குள் புகைந்தாள்.

"என்னடி, இப்படி வாயை மூடிட்டு இருக்கே! அப்போ அவர்கள் சொன்னதில் உனக்குச் சம்மதம்தானா?"

அவளை விழிகளால் அடக்கிய பைரவி, "நீங்க இப்போ என்ன சொன்னீங்க? ரொமான்டிக் லுக்கா? அப்படின்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே?" என்று ஏதுமறியாத பச்சைப் பிள்ளையைப் போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

"ஆமாம்" என்றாள் இனியா.

பைரவி அதிர்ச்சியுடன் மார்பில் கையை வைத்துக்கொள்ள, "என்னவோ நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லச் சொன்ன மாதிரியில்ல நீ அதிர்ச்சியாகி நிற்கிறே! ஒழுங்கா நான் சொல்வதைக் கேட்டுப் போயி அது போலவே நடந்துக்கல, பிறகு ஐ லவ் யூன்னு சொல்லவும் வச்சுடுவேன்" என்று மிரட்டினாள்.

பைரவி அவசரமாக மறுத்ததும், "அப்படின்னா, அதோ அந்தப் பக்கம் சிடுமூஞ்சியை வச்சுக்கிட்டு ஒருத்தர் இருப்பார். அவரிடம் போயி இந்தப் பூவைக் கொடுத்துட்டு ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு வா" என்றாள் இனியா.

உடனே பைரவி, "அதெல்லாம் தப்பு! நான் மாட்டேன்" என்று பயத்துடன் சொன்னாள்.

"இப்போ போகல அப்புறமா, புதுசா போட்டுட்டு வந்திருக்கும் தாவணியைப் பிடித்து இழுத்து எடுத்துட்டு, அப்படியே காலேஜுக்குப் போன்னு விட்டிடுவேன்" என்று மிரட்டல் விடுத்தாள்.

அவள், "ஆனாலும் நீங்க இப்படி எல்லாம் என்னை மிரட்டப்படாது. நானே ஒரு அப்பாவி! இதுல அந்த யாருன்னு தெரியாத நபரிடம் போயி ரொமான்டிக் லுக் விடச் சொல்றீங்களே..." என்று இதழ்களைப் பிதுக்கினாள்.

"வாவ்! வாட் எ ரோஸ் மேரி" என்றான் அருகில் நின்று அவளையே பார்த்த சங்கரன். அவன் தோளில் ஒரு இடி கொடுத்து, "ம்ம்... நேரமாகுது போ!" என்று அனுப்பி விட்டாள் இனியா.

"ரொமான்டிக் லுக் எனக்கு வராது."

"இதுகூடத் தெரியாம நீ எல்லாம் எப்படி காலேஜுக்குப் படிக்க வந்திருக்கே?"

இனியா சலிப்புடன் கேட்டதும், "அந்த மேட்டுக்குடி படத்துல நம்ம கவுண்டமணி சார் தருவது போலவா?" என்று சந்தேகமாகக் கேட்க, "என் அக்கா மகளே இந்து..." என்று காதில் ஒரு கையை வைத்து ராகமாக இழுத்தான் சங்கரன்.

அதைக் கேட்ட பெண்கள் இருவரும் கொல்லெனச் சிரித்துவிட, "இதுவும் நல்லாதான் இருக்கு. போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்கள்.

பயப்பந்து தொண்டைக்குள் சுழல, மெதுவாகப் பின்னாடி பார்த்துப் பார்த்து சென்று, "எக்ஸ்க்யூஸ் மீ! செத்த நேரம் திரும்புறீங்களா?" என்றாள் பைரவி.

அவன் அசையக்கூட செய்யாமல் அப்படியே இருந்ததும், திரும்பிப் பார்த்துக் கையை அசைத்தாள் பைரவி. அவள் மீண்டும் அழைக்குமாறு சொல்லி ஜாடை காட்டியதும், "ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என்றாள்.

அவன் செவியில் வைத்திருந்த காதொலிக் கருவி (ear phone) வழியாக மெல்லமாய் யாரிடமோ பேசியவாறு இருக்க, இவள் அழைத்தது அவன் செவியை எட்டவில்லை. அவளுக்கு அது தெரியாமல் மீண்டும் மீண்டும் அழைக்க, ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தவன் நெருப்பாக அவளை முறைத்தான்.

அதில் விக்கித்துப் போனாள் பைரவி!

இப்படி ஒரு கடுமையான முகத்தை இத்தனை நாளில் அவள் எங்கேயும் பார்த்ததில்லை. பெண்கள் என்றாலே இப்படித்தான் இருப்பானா? அல்லது திடீரென தொல்லை செய்துவிட்டதால் இவ்வாறு நடந்துகொள்கிறானா? இதற்காகத்தான் அவனுக்குச் சிடுமூஞ்சி என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார்களோ எனப் பலவாறு நினைத்தாள்.

அவனை சும்மாவே பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை. இதில் எங்கிருந்து ரொமான்டிக் லுக் விடுவது?

அவள் கையில் இருந்த ரோஜா வேறு, அவள் மனநிலையைப் போலவே நடுங்கியது.

'பார்வையாடா இது? அக்கினிக் குழம்பை வாரிப் பூசியது போல் இருக்கு. அந்தப் பொண்ணு பேச்சைக் கேட்டுத் தெரியாம வந்துட்டேனே! ஆண்டவா என்னைக் காப்பாத்து!' என்று மனதிற்குள் வேண்டினாள்.

அவன் உதட்டைக்கூட அசைக்காமல் விழி அசைவினாலே என்ன என்று விசாரிக்க, அவள் இல்லை என்றாள். அவனோ, 'பிறகும் ஏன் இங்கேயே நின்று கொண்டு இருக்கிறாய். போ' என்று விழிகளால் மிரட்ட, இதழ்களைக் கடித்துக்கொண்டு பின்புறமாகப் பார்த்தாள் பைரவி.

இனியா மரத்தின் பின்புறமாக மறைந்து நின்று, கையை காட்ட, 'இப்படி ஒரு சிடுமூஞ்சி சிங்காரத்திடம் என்னை மாட்டி விட்டுவிட்டாயே! அவனது முகம் இருக்கும் நிலையில் நான் எப்படி ரொமான்டிக் லுக் விடுவது?' என்று பார்வையால் கேட்டாள்.

அவளோ முறைத்துக்கொண்டு, எதிரில் நின்றவனை நோக்கிக் கண் காட்ட, சீறும் சிறுத்தையின் முன்பும், முறைக்கும் வேங்கையிடமும் மாட்டிக்கொண்டதை போல உணர்ந்தாள் பைரவி.

விஜய ரகுநாதன் அவள் பார்த்த திசையை நோக்கித் தனது கண்களை ஓட விட, இனியாவும் மற்ற தோழர்களும் மரத்திற்கு உள்ளே புகுவது போல மறைந்துகொண்டார்கள். பின்னர் அவள் புறமாகப் பார்வையைத் திருப்பினான்.

அவள் வாய் பேசா மடந்தையைப் போலவே காட்சியளிக்க, அவளது கையில் இருந்த ரோஜா மலரை பிடித்து இழுத்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் அவன். தரையில் விழுந்து கிடந்த பூவைப் பார்த்துக்கொண்டே நின்றாள் பைரவி.

மகேஸ்வரி வந்து அவள் தோளில் கை வைத்ததும், கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் அவளுடன் சேர்ந்து வகுப்பறைக்குச் சென்றாள்.

அவர்களைப் போலவே புதியதாக வந்திருந்த மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் சென்று அமர்ந்தார்கள். எல்லோரும் விதவிதமான ஆடைகளில் வந்திருக்க, இவர்கள் இருவரும் மட்டுமே தாவணியில் சென்றிருந்தார்கள். அது அவர்களை மற்ற பெண்களில் இருந்து மாறுபடுத்திக் காட்டியது.

"சரியான பட்டிக்காடு போலிருக்கு" என்று பெரும் வசதி படைத்தவரின் வாரிசான வினயா சொன்னாள்.

இவர்கள் இருவரும் கேட்டும் கேட்காதது போல தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்கள். சற்று நேரத்தில் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைந்து மாணவ மாணவியர்களிடம் பேசினார். அருகில் இருந்த மாணவிகள் தங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். பைரவியும், அந்தப் பெண்களைப் பார்த்துச் சிநேகமாக முறுவலித்தாள்.

மதிய நேரம் கேண்டீனுக்குச் சென்று அமர்ந்தார்கள். இவர்களைக் கண்டதும் சங்கரன் அங்கு நோக்கி வந்தான். இனியாவும் தனது நட்புகள் புடைசூழ வந்து அமர்ந்தாள்.

"ஆமாம். காலையிலே நாங்க உன்கிட்டே என்ன சொன்னோம்? நீ என்ன செய்து வச்சிருக்கே? உனக்கென்ன அவ்வளவு திமிரா?"

பைரவி மிடறு விழுங்கியவாறு 'இல்லை' என்று தலையாட்டியதும், "நாங்க சொன்னதைக் கேட்கல, இந்தக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாது" என்று எச்சரித்தாள் இனியா.

மகேஸ்வரி, பைரவியின் கையைப் பற்றி அழுத்தியதும், பேசாமல் அமைதியாக இரு என்பது போலக் கண்ணை மூடித் திறந்தாள் பைரவி.

"விடு மச்சி எதுக்கு இப்ப அந்தப் பொண்ணுகிட்டே கலாட்டா பண்ணிட்டு இருக்கே? இன்னும் ஒரு நேரம் அந்த சிடுமூஞ்சியை வச்சுச் செஞ்சிடலாம். இப்போ சாப்பிடுற நேரம் நம்ம எல்லாரும் சாப்பிட்டு மொத்தப் பில்லையும் இவள் தலையில் கட்டிடலாம்" என்றான் சங்கரன்.

அவன் சொன்னது சரியாக இருந்தது. இனியாவுடன் சேர்ந்து இரண்டு மாணவிகள், ஒரு மாணவனுமாக மொத்தம் ஐந்து பேர் அவர்களின் இருக்கையின் அருகில் அமர்ந்து வேண்டியதை வரச் செய்து, உண்டு முடித்து எழுந்து சென்றார்கள்.

இவர்கள் இருவரும் உண்ணாமல் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை கையில் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க, ஐவரும் உண்ட உணவுக்கான தொகை வந்து அவர்கள் முன்பு இருந்தது.

கண்களைத் தட்டிப்பார்த்து, "இதுக சரியான தின்னிப் பண்டாரமா இருக்கு, இப்படியே விட்டு வைக்கக் கூடாது. உங்க அப்பா யாருன்னு தெரிஞ்சா தானாவே அடங்கிடப் போறாங்க. நீ எதுக்குடி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என்னை அடக்கி வைக்கப் பார்க்கிறே?" என்று கோபித்தாள் மகேஸ்வரி.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, "எப்படியும் அவர்கள் ஆப்பு வாங்கத்தான் போறாங்க. அப்படி வாங்கப் போகும் ஆப்பினால் பிற்காலத்தில் எவர் ஒருவருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு இருக்கணும். நீ சாப்பிடு நேரமாகுது" என்று வலியுறுத்தினாள் பைரவி.

இருவரும் உண்டு முடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த பணத்தை செலுத்தி விட்டு, மறுபடியும் வகுப்பு அறைக்குச் சென்று அமர்ந்தார்கள்.

மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக வரும்போது, அதே சிடுமூஞ்சி சிங்காரம் வேகமாக வந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டிருந்தான்.

இந்தப் பக்கமாக இருந்து ஸ்கூட்டியில் வந்த பைரவி, அவன் திடீரென இடை புகுவான் என்று தெரியாமல் ஸ்கூட்டியை நிறுத்தச் செல்ல, அவனது முறைப்பும் வேகமும் ஸ்கூட்டியை கீழே விழ வைத்தது.

பைரவியைப் பார்த்துக் கடுமையாக முறைத்தவன், "ஒழுங்கா ஒரு ஸ்கூட்டி ஓட்டத் தெரியல. உனக்கெல்லாம் லவ் ப்ரோபோஸ் கேட்குதா? மூஞ்சியும் மொகரக்கட்டையும் பாரு" என்று எறிந்து விழுந்தான்.

அவள் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டே இருக்க, "மினுக்கிட்டு வந்து யாராவது வசதியான பையன் கிடைக்க மாட்டானான்னு அலைய வேண்டியது. பிறகு, ரொம்பவும் நல்லவ மாதிரி நடிச்சு ஏமாத்த நினைப்பதே உங்களை மாதிரிப்பட்டவருக்கு வேலையா போச்சு. மறுபடியும் என் கண்ணில் விழுந்தால் நடப்பதே வேறு!" என்று எச்சரித்து அகன்றான்.

அவன் சொன்னதற்கான அர்த்தம் புரியவும் அவள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, அருகில் சங்கரனின் வெடிச் சிரிப்பு கேட்டது.

மகேஸ்வரி பல்லைக்கடித்துக்கொண்டு கோபத்தை அடக்க முயன்றாள். அவனது நண்பர்கள் பட்டாளம் சுற்றி வந்து நின்று அவர்களைக் கேலி செய்தது.

"மச்சி! இனி நீ எதுவும் செய்ய வேண்டாம் அவனே அவங்களைப் பார்த்துப்பான். இப்போ கேண்டினில் போயி சூடா ஒரு கப் காஃபி சாப்பிட்டு வரலாமா?" என்று கேட்டான் சங்கரன்.

இனியாவின் கண்கள் பெண்கள் இருவரையும் வட்டமிட்டன. அவர்கள் இல்லை என்பது போல அவசரமாகத் தலையாட்ட, புரிந்துகொண்டு அவளும் நமட்டுச் சிரிப்புடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

"இதென்னடி காலேஜுக்கு வந்த முதல் நாளே வம்பா போச்சு? நீதான் வாய் திறந்து பேசாம இருந்தால், என்னையும் திறக்க விடாமல் பண்ணிட்டியேடி! மறுபடியும் ஒருமுறை மாட்டட்டும் அவர்களை என்ன செய்யறேன்னு பாத்துக்கோ" என்று அவர்கள் சென்ற திசையை நோக்கிக் கூறினாள்.

"சரி, சரி! வா, காலேஜுக்கு வந்தவுடனே பிரச்சனை வேணாம்னுதான் இவ்வளவு தூரம் அடங்கிப் போனேன். அவர்கள் அதிகமா போற மாதிரி தெரிஞ்சா அப்ப பாத்துக்கலாம்"

மெதுவாகத் தரையில் இருந்து எழுந்து நின்று ஸ்கூட்டியைத் தூக்கி வைத்துப் பின்னர் அதில் ஏறி அமர்ந்து வீட்டிற்குச் சென்றார்கள்.

கீழே விழுந்து அடிபட்டதில் வலது கை முழங்கைப்பகுதியில் உராய்வு ஏற்பட்டிருந்தது. வலியை அடக்கிக்கொண்டு மகேஸ்வரியை அவள் வீட்டிற்கு முன்புறம் இறக்கிவிட்டதும், இதைப்பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்து, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் பைரவி.

யாரும் பார்ப்பதற்கு முன்பாக அவசரமாகத் தனது அறைக்குள் நுழைந்து, தன்னை சுத்தப்படுத்தி விட்டு இரவு ஆடைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் அம்மா வந்து கல்லூரியில் முதல் நாள் எப்படி இருந்தது என்று கேட்டுச் சற்று நேரம் பேசிவிட்டு மகளுக்கு உணவையும் கொடுத்து முடித்த பின்னரே வெளியேறிச் சென்றார்.

அவள் உள்ளம் காலையில் பசுபதியின் வீட்டிற்குச் சென்றதை எண்ணிப் பார்த்தது. அவனது சிரிப்பும், அன்பான பேச்சும், அக்கறையுடன் நடந்துகொண்ட விதமும் விஜயரகுநாதனின் பக்கத்தில்கூட வந்திருக்காது எனலாம்.

காலையில் சென்று அவ்வளவு பேசியும், முறைத்தும், தண்டனை கொடுத்தும் அவன் மறுத்து பேசாமல் இருந்ததிலேயே அவன் மனதில் எந்த இடத்தில் அவள் இருக்கிறாள் என்றும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்போது அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை அவளை உந்தியது. ஆனாலும், அப்பா நீலமேகம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்.

மாலை முடிந்து இருள் பரவ துவங்கியது. அந்த நேரம் அவளது ஜன்னல் கதவு தட்டப்பட்டது.

யாராக இருக்கும் என்று அங்கு நோக்கிப் பார்வையைப் பதித்தாள் பைரவி.

அவளது படுக்கை அறை வீட்டின் பின் பக்கமாக உள்ளது. இத்தனை வருடத்தில் யாரும் வந்து இதுபோல செய்தது இல்லை. ஆகவே, இது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். யாரையும் காணாததும் மறுபடியும் தாழிட்டுவிட்டுத் திரும்பினாள். ஜன்னல் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. சலிப்புடன் படாரெனத் திறந்து பார்த்தவள், யோசனையுடன் வீட்டின் பின்புறம் சென்று நோக்கினாள். அங்கு அவன் நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் விரைந்து சென்று, "என்ன அத்தான் வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டாள் பைரவி.

அவன் புன்னகையுடன் அருகில் வந்து கையில் இருந்ததை அவள் முன்பு காண்பித்தான்.

என்னவாக இருக்கும் என்று தெரியாமல் அதை வாங்கிப் பார்த்து அசந்துதான் போய்விட்டாள் அவன் கொழுந்தியார்.

கண் கலங்கிவிட்டது அவளுக்கு. கல்லூரியில் முறையாக எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் இன்னும் அவன் நினைத்தது போன்று வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பது அவள் அறிந்த விஷயம். அப்படி இருக்கும்போது அவள் ஆசைப்பட்டது போன்ற சாதனத்தை வாங்கி வந்திருந்தால் அவளால் எப்படி பூரிக்காமல் இருக்க முடியும்?

"அத்தான் இது?" வாய் வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற்றத்துடன் இருக்க, "உனக்கு ரொம்பப் பிடிச்ச பிங்க் ஒயிட் நிறத்தில் உள்ள ஜிமிக்கிடா! முன்னாடி உள்ளதை நீ பிக்னிக் போன இடத்தில் தவற விட்டுட்டதா சொல்லி ஒவ்வொரு முறையும் வருத்தப்படும் போதெல்லாம் அதை உங்க அப்பாவும், அண்ணனும் வாங்கித் தந்துடக் கூடாது. என் கையால்தான் வாங்கித் தரணும்னு நினைச்சுக்குவேன். இன்னைக்கு உனக்குப் பிறந்தநாள்னு சொன்னே இல்லையா, இதுக்கு மேலும் தாமதிக்கக் கூடாதுன்னு உடனே வாங்கிட்டு வந்துட்டேன். உனக்குப் புடிச்சிருக்கா கொழுந்தியார்?" என்று கேட்டான்.

அவள் நாசியை உள்ளிழுத்துக் கண்ணீரை அடக்கிக்கொண்டாள்.

"நீ இதைப்போட்டுட்டு வந்து காமிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"

"இப்பவேயா?"

"ஆமாம்"

அவள், அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள். உடனடியாகக் காதில் இருந்த பழைய தோடுகளை நீக்கிவிட்டு அவன் வாங்கித் தந்திருந்ததை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்பு சென்று பார்த்தாள். அவள் அணிந்திருந்த வெண்ணிறத்தில் பிங்க் நிறக் கோடுகள் வரையப்பட்டிருந்த இரவு ஆடைக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. அடுத்த நிமிடமே உடலைத் தழுவிய இரவு ஆடையில் அவளது மேனி நெளிவு வளைவுகள் அப்பட்டமாக தெரிந்ததும், அவன் முன்பு அப்படி செல்லக் கூச்சமாகியது.

அவசரமாக அதை மாற்றிவிட்டுச் சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டாள். வெளியே நின்றவனோ ஏற்கனவே அவள் வந்திருந்த தோற்றத்தைக் கண்டு மயக்கத்தில் இருந்திருந்தான். இப்போது அவள் சுடிதார் அணிந்துகொண்டு அருகில் வந்து நின்று சிரித்ததும், முகம் முழுவதும் பரவிய புன்னகையுடன் அவளது தலையில் முட்டினான்.

வானத்தில் கொஞ்சமாக தோன்றிய பிறை நிலவு தன் இருப்பைக் காட்டி இருக்க, சிறுசிறு நட்சத்திரங்கள் ஆங்காங்கு நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வேடிக்கைப் கொண்டிருந்தது. அவனது பார்வையும், சிரிப்பும் அவளுக்கு விஷயத்தைப் புரிய வைத்தது. சிறு முறைப்புடன் அவனது தோளில் அடித்தாள் பைரவி. அவள் இரு கன்னத்தையும் பற்றி விழிகளை கூர்ந்தவன், "இது உனக்காகவே தயாரிச்சது போல அவ்வளவு அழகா இருக்குடா" என்றான்.

அவள் பதில் சொல்ல நா எழாமல் தலையை மட்டுமே ஆட்டினாள். அடுத்ததாக அவன் "இன்னைக்கு முதல் முதலா காலேஜ் போனியே, அங்கே எப்படி இருந்தது?" என்று விசாரிக்க, அதற்கான அவளது பதில் அவனது இரவு உறக்கத்தையே பறித்துவிட்டது.
Super கா 😍😍😍😍

Adei ரகு பயலே ஸ்கூட்டி ஓட்டுறதுக்கும் propose பண்ணுறதுக்கும் ennadaa சம்மந்தம் 🤣

என் பசு மாம்ஸ் கிட்ட கேட்டு காத்துக்க எப்படி சிரிக்கணும்னு
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
Supe

Super கா 😍😍😍😍

Adei ரகு பயலே ஸ்கூட்டி ஓட்டுறதுக்கும் propose பண்ணுறதுக்கும் ennadaa சம்மந்தம் 🤣

என் பசு மாம்ஸ் கிட்ட கேட்டு காத்துக்க எப்படி சிரிக்கணும்னு
அதே தான்.

இவனுக்கு ஒண்ணுமே தெரியல

மிக்க நன்றி சகோதரி
 
Sivagnanalakshmi

Active member
Joined
Jul 6, 2025
Messages
220
Reaction score
144
Points
43
விஜய் கொஞ்சம் அவசரகுடுக்கை. இனியா டீம் ஓவர். பைரவி பசுபதி விரும்புகிறதை தெரிந்து கொண்டால் போல.
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
விஜய் கொஞ்சம் அவசரகுடுக்கை. இனியா டீம் ஓவர். பைரவி பசுபதி விரும்புகிறதை தெரிந்து கொண்டால் போல.
மிக்க நன்றி சகோதரி
 
Miloni

Active member
Staff member
Joined
May 14, 2024
Messages
342
Reaction score
180

முதல் நாளே இப்படியா பாவம் பைரவி..
 
உமா சரவணன்

Member
Staff member
Joined
Apr 1, 2025
Messages
56
Reaction score
30

பைரவியின் உண்மை முகம் இன்னும் தெரியபடுத்தலையே... யாருக்கும் தெரியாமல் முறைப்பையனை பார்க்ககறாள் ??ஏன் ?? குடும்பப் பிரச்சனையோ ..!சரி படிச்சிட்டு தெரிஞ்சுக்குவோம் .

சங்கரன் இனியா கூட்டணி நடத்துங்க...

ஹீரோயிசத்தை காமிக்கிறாரு ..பொறுத்திருடா கண்ணா...ஏண்டா பேசினோம் என்று தோணிடும்...

அருமை அக்கா 👍 👍... உங்கள் எழுத்து சிறந்தது
 
yazhini

Active member
Joined
May 1, 2025
Messages
241
Reaction score
179

அருமை அக்கா 👌😍
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
கல்லூரி முதல் நாளே
கண்ணீர் காட்டி விட்டது
கனல் பார்வையில் விஜய்
கடித்து பேச
கடந்து போக மனம் சொல்ல
காதுக்கு ஜிமிக்கு உடன்
காண வந்த பசுபதி
கண்ணில் தெரியும் பாசமும்
காரிகை மனதில் ஒப்பீடு செய்ய....
 
Top Bottom