சைத்ரா அந்த தொல்லியல் துறை மாணவர்களை தேடிச் செல்லலாம் என நினைத்திருக்க அவர்களே அவளை தேடி வந்திருந்தார்கள். அன்று சைத்ராவுக்கு வகுப்புகள் இருக்க அதை முடித்துவிட்டு கணிதன் சாரிடம் ப்ராஜெக்ட்டை பற்றி பேசிவிட்டு வெளியில் வந்தபோது தான் அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக பியூன் வந்து சொல்லி விட்டுப்போனார். தன் தோழிகளோடு சைத்ரா அவர்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது யாரோ அவர்கள் வயதை ஒத்த மூன்று பேர் அமர்ந்திருக்க யோசனையோடு புருவம் நெறித்தபடி தான் அவர்களை நோக்கிப் போனாள்..
அவள் அருகே வந்ததும் மூன்று பேரும் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து மெதுவாக புன்னகைக்க சரண் அவள் முன்னே கைகளை நீட்டி, "ஹலோ சைத்ரா ஐ அம் சரண்.." என சொல்ல,
நீட்டிய கைகளை பற்றி குலுக்கிய சைத்ரா, "ஹலோ நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?" என கேட்டாள்.
"சொல்லுறோம் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் பிரைவேட்டா கொஞ்சம் தள்ளி போய் பேசலாமா..?" என கேட்க சற்று யோசித்தாலும் அவர்களை அழைத்து கொண்டு யாரும் இல்லாத அந்த மரத்தடிக்கு சென்று அங்கிருந்த கல் பெஞ்சில் எதிரெதிராக அமர்ந்து கொண்டு, "என்ன விஷயம்..?" என கேட்டாள்.
"இவன் ஆரவ், அவ அபி.. நாங்க மூணு பேரும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ஸ்டுடெண்ட்ஸ்" என சொல்லவும் மூன்று பெண்களும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"என்னது நீங்க ஆர்க்கியாலஜி ஸ்டூடண்ட்ஸா அப்படின்னா அந்த சிலைகளை கண்டுபிடிச்சது நீங்க தானா..?" என அனிதா சட்டென்று வாயை விட்டுவிட மற்ற இரு பெண்களும் அவளை முறைத்துப் பார்த்தார்கள்.
இப்போது எதிரில் இருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து, "அப்படின்னா உங்களுக்கு எல்லாம் தெரியுமா..?" என கேட்டார்கள்.
சைத்ரா சற்று உஷாராக, "எல்லாம் தெரியாது அந்த சிலைகளை கண்டுபிடிச்சது நீங்களும் உங்க ப்ரொபஸரும்னு மட்டும் தெரியும்" என சொல்ல.,
"நீங்க ஏன் அந்த சிலைகளை பத்தி தெரிஞ்சுக்க நினைச்சீங்க..?" என சரண் கூர்ப்பார்வையோடு கேட்டான்.
"அது.. அது வந்து.. என் அப்பா அந்த கேஸுல சம்பந்தப்பட்டிருக்கார் எனக்கும் ஏதாவது பிராப்ளம் வரலாம் அதனால தான்.." என தயங்கிக் கொண்டே சொல்ல அதிலிருந்தே அவள் ஏதோ மறைக்கிறாள் என புரியத்தான் செய்தது ஆனாலும் திடீரென்று வந்து நிற்பவர்களிடம் உண்மையை சொல்வாள் என்றும் எதிர்பார்க்க முடியாது தானே அதற்கு முதலில் தாங்கள் அவளுக்கு நம்பிக்கையானவர்களாக தெரிய வேண்டும்.
"மேடம்..! நீங்க ஏதோ மறைக்கிறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது ஆனா நாங்க இங்க வந்தது உங்களுக்கு ஹெல்ப் பண்ணறதுக்காக தான்.. அந்த சிலைகளைப் பத்தி மத்த எல்லாரையும் விட எங்களுக்கு தான் நல்லா தெரியும் அதனால தான் உங்களை தேடி வந்தோம்.. எங்களுக்கு முன்னவே நீங்க எங்களை தேடி இருக்கீங்கன்னா அந்த சிலைகளைப் பத்தி உங்களுக்கும் தெரிய வந்துருக்கணும்.. திடீர்னு வந்து நின்னா எங்க மேல உங்களுக்கு நம்பிக்கை வராது ஆனா நாங்க சில விஷயங்களை சொல்லுறோம். அது உங்களுக்கு நம்பிக்கை தர்ற மாதிரி இருந்தா அதுக்கு பிறகு நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க" என சொல்லி சரண் சிலைகளை கண்டுபிடித்ததில் இருந்து இப்போது அவளை தேடி வந்திருப்பது வரை எல்லாம் சொன்னார்கள்.
அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த விவரமும் தான் அறிந்து கொண்ட விவரமும் ஒன்று என்பதால் சைத்ராவும் தனக்கு அந்த சிலைகளைப் பற்றி தெரிய வந்ததைப் பற்றியும் நாணயத்தைப் பற்றியும் தயக்கத்தோடு என்றாலும் முழுதாக சொன்னாள். இந்த சூழ்நிலையில் சைத்ரா யாரையாவது நம்பியே ஆக வேண்டும் இவர்களைப் பார்த்தால் தவறாகவும் தோன்றவில்லை. அந்த சிலைகளை முதல் பௌர்ணமிக்கு பிரித்து வைத்தால் அடுத்த பௌர்ணமி வருவதற்குள் அதை கோவிலில் சென்று பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதோ இன்னும் இரண்டு நாட்களில் முதல் பௌர்ணமி இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக ஒரே மாதத்தில் அடுத்த பௌர்ணமியும் வருகிறது. அதுவும் இந்த முறை இரண்டாவது பௌர்ணமி ப்ளூ மூன் என அழைக்கப்படும் நிலவும் பூமியும் வெகு அருகில் சந்தித்துக் கொள்ளும் முக்கிய நிகழ்வாக இருப்பதால் அதிக விசேஷத்தை பெற்றிருந்தது. இந்த நேரத்தில் இந்த சிலைகள் பிரிந்து இருப்பது கண்டிப்பாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தான் சரணும் சொன்னான்..
"இங்க பாருங்க சைத்ரா நாங்க இந்த சிலைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுன வரை இதுக்கு விசேஷ சக்திகள் இருக்குறதா தான் எங்களுக்கு தோணுது.. அதை வச்சு பார்க்கும்போது இத்தனை வருஷத்துல கிடைக்காத சிலைகள் இப்போ கிடைச்சிருக்கறதும் அதுவும் கரெக்ட்டா இந்த மாசத்துல ரெண்டு பௌர்ணமி வரும்போது கிடைச்சிருக்குறதும் அதே போல முதல் பௌர்ணமிலயே அது பிரிஞ்சிருக்குறதும் பார்த்தா ஏதோ இந்த நிகழ்வுகள் நடந்தே தீரணும்னு நடந்த மாதிரி தான் இருக்கு அதனால நாம ஜாக்கிரதையா தான் இதை டீல் பண்ணியாகணும்" என சரண் ஒருவித தீவிரத்தோடு சொன்னான்.
"நீங்க சொல்றதை வச்சு பார்க்கும்போது என்னோட டாலர் மூலமா தானே அதை பிரிக்க முடியும்.. அப்போ நான் அந்த சிலைகளை தொட்ட மாதிரி எனக்கு ஞாபகமே இல்லையே சரண் அதுவும் இந்த டாலரை டச் பண்ணா மட்டும் தானே சிலைகள் பிரியும்.. இப்போ அந்த சிலைகளை பிரிச்சு வச்சிருக்காங்கன்னு தானே நீங்க சொல்றீங்க அது எப்படி சாத்தியம்..?" என சைத்ரா யோசனையோடு கேட்டாள்.
"இது நூறு சதவீதம் உறுதியானது தான் சைத்ரா அதனால கண்டிப்பா உங்க கழுத்துல இருக்கற டாலர் அந்த சிலைகளை டச் பண்ணி இருக்கும் உங்களுக்கு எதையாவது ஞாபகப்படுத்த முடியுதான்னு யோசிச்சு பாருங்க.." என சரண் அழுத்தமாக சொல்லிய பிறகு தான் சைத்ராவுக்கு யோசிக்க தோன்றியது.
வெகுநேரம் யோசித்த பிறகு அன்று அப்பாவை பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கெஸ்ட்ஹவுஸ் சென்ற விபரம் ஞாபகம் வந்தது. அன்று சைத்ரா அங்கே போனபோது அப்பாவிடம் அவள் எந்த தகவலும் சொல்லிவிட்டு செல்லவில்லை அவளுக்கு உடனே அவரிடம் ஒரு செக்கில் கையெழுத்து வாங்க வேண்டி இருந்தது. அது அவர்கள் உதவி செய்யும் அனாதை ஆசிரமத்திற்கு மாத மாதம் செல்ல வேண்டிய பணம் என்பதால் எப்போதுமே அதில் சைத்ரா அலட்சியமாக இருக்க மாட்டாள். அம்மா காலத்திலிருந்து செய்யும் உதவி தான் சைத்ராவும் அதைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தாள். அனாதை ஆசிரமத்தில் இருந்து பணம் இன்னும் வரவில்லை பிள்ளைகளுக்கு உணவு பொருட்கள் வாங்க வேண்டும் என சொல்ல உடனே அப்பாவின் பிஏ மூர்த்திக்கு போன் செய்து அப்பா எங்கிருக்கிறார் என கேட்டுக்கொண்டு வேறு எதுவும் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டாள். தான் அப்பாவை பார்க்க வருவதாக சொன்னால் பி ஏ மறுத்து ஏதாவது சொல்வார் அதற்காகத்தான் சொல்லாமல் கிளம்பினாள்..
கெஸ்ட் ஹவுஸ் சென்றபோது அங்கே தந்தை இல்லை அவர் கிளம்பி விட்டிருந்தார். இவள் இப்படி திடீரென கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் அங்கிருந்து அடியாட்கள் எல்லாம் அவளை மிரண்டு பார்த்தார்கள் அவளுக்குமே அவர்களைப் பார்த்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. கெஸ்ட் ஹவுஸுக்கு அவ்வளவு சீக்கிரம் யாரும் வரமாட்டார்கள் ஆனால் சில இல்லீகள் வேலைகளை அப்பா அங்கே தான் பார்ப்பார் என்பது ஓரளவுக்கு அவளுக்குமே தெரியும். இப்போது என்ன செய்வதற்காக எல்லாரும் ஒன்று கூடி இருக்கிறார்கள் என தெரியவில்லையே.. உள்ளே சென்று கொஞ்ச நேரம் அப்பா வருவாரா என சோபாவில் அமர்ந்து காத்திருந்தபோது அவளையே அறியாமல் கீழே இருந்த அந்த ரூமுக்கு போக சொல்லி ஏதோ ஒரு சக்தி உந்தி தள்ளியது..
அந்த நேரம் அப்பாவின் அடியாட்களில் ரொம்பவும் நம்பிக்கையானவரான குரு என்பவர் வந்து அவளிடம் என்னவென்று விசாரிக்க அவள் தயக்கத்தோடு அப்பாவை பார்க்க வந்திருப்பதாக விஷயத்தை சொன்னாள்..
"என்னம்மா நீங்க அப்பாகிட்ட விசாரிச்சிட்டு வந்துருக்கலாம்ல.. ஐயா இப்பதான் முக்கியமான மீட்டிங்ன்னு கட்சி ஆபீஸ் போனாரு.. அங்க போனா அவர் எப்ப வருவாருன்னு நேரம் காலம் சொல்ல முடியாது அதனால நீங்க வீட்டுக்கு கிளம்பி போங்க.. நானே ஐயா வந்ததும் விஷயத்தை சொல்லி வைக்கிறேன்.. ஐயா வந்ததும் என்ன வேணுமோ வீட்ல வந்து செஞ்சு தருவார்" என அங்கிருந்து அவளை விரட்டாத குறையாக சொல்லிக் கொண்டிருக்க அவளும், "சரி கொஞ்சம் தண்ணி தாங்க குரு அண்ணா.." என சொல்ல, "அதுக்கு என்னம்மா காபி போட்டே கொண்டு வர்றேன்" என அவர் சமையலறைக்கு செல்ல அந்த நேரம் அந்த ரூமில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.
முதலில் போகலாமா என யோசித்த சைத்ரா பிறகு தைரியத்தை வர வைத்துக் கொண்டு அங்கே சென்று லைட்டை போட அந்த ரூமில் பெரிதாக வெளிச்சம் இல்லை அதனால் கண்ணுக்கு மங்கலாகவே அங்கிருந்த பொருட்கள் எல்லாம் தெரிய அது ஏதோ ஸ்டோர் ரூம் போல இருந்தது. அப்பா முதலில் இதை ஆபிஸ் அறையாக தானே உபயோகித்தார் எப்போது ஸ்டோரூமாக மாற்றினார் என யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்தவள் கண்களுக்கு அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் வித்தியாசமாக தெரிய, பார்க்க அது ஏதோ சிலை போல தான் இருந்தது. குனிந்து அதை பார்க்க முயற்சித்த போது அதிலிருந்து வந்து வெளிச்சம் அவள் கண்களை கூச செய்ய அவளால் அதை சரியாக பார்க்க முடியவில்லை அத்தனை பிரகாசம். இது என்ன இந்த அறையே இருட்டாகி இருக்கிறது ஆனால் இந்த சிலை மட்டும் கண்களை கூச செய்கிறது. அவள் கண்களைத் தவிர அறையை அந்த வெளிச்சம் நிறைத்தது மாதிரியும் தெரியவில்லை என அவள் குனிந்து பார்த்தபோதுதான் அந்த டாலர் அந்த சிலையில் பட்டிருக்க வேண்டும். அப்போது குரு அவளை அழைத்துக் கொண்டிருந்ததால் பதற்றத்தில் உடனே அந்த அறையில் இருந்து வெளியே வந்து விட்டாள் அதனால் சிலையையோ அது பிரிந்ததையோ அவளால் பார்க்க முடியவில்லை..
தனக்குத் தோன்றிய சந்தேகத்தை அவர்களிடம் சொல்ல அவர்களும் அந்த சமயமாக தான் இருக்க வேண்டும் என உறுதி செய்தார்கள் ஏனெனில் அதன் பிறகு தான் பௌர்ணமி வந்திருக்கிறது..
"சரி இப்ப நாம என்ன பண்ணலாம் நேரா அந்த கெஸ்ட் ஹவுஸுக்கே போய் அந்த சிலைகள் இருக்கான்னு பார்க்கலாமா..?" என சைத்ரா கேட்க சரண் யோசனையோடு, "இப்போ போனா நமக்கு ஏதாவது ஆபத்து வரலாம் மேடம் அதனால இரவு நேரத்துல போறதுதான் நமக்கு சேஃப்" என சொல்ல ராதிகா இதை ஆட்சேபித்தாள்.
"இது என்ன நீங்க பாட்டுக்கு அவளை தனியா நைட்டு வர சொன்னா நாங்க எப்படி அனுப்ப முடியும்..?"
"சரி என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க" என ஆரவ் அவளையே எரிச்சலோடு பார்த்து கேட்க.,
"அவளை தனியா அனுப்ப முடியாது அதனால நாங்க ரெண்டு பேரும் அவ கூட வருவோம்" என ராதிகா சொன்னதை வேறு வழியில்லாமல் அவர்கள் ஒத்துக் கொள்ள தான் வேண்டி இருந்தது.
"சரி இன்னைக்கு நைட் நீங்கல்லாம் நான் சொன்ன இடத்துக்கு வந்துருங்க" என சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பி சென்றார்கள்..
*******
பாக்யராஜ் ஆரவ்வுக்கு போன் செய்ய அவன் யோசனையுடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தான். எப்போதும் சரணுக்கு மட்டும் தான் அவர் அழைப்பார் இந்த முறை தனக்கு அழைக்கவும், "ஹலோ சார் நான் ஆரவ் பேசுறேன்" என சொல்ல.,
"என்னப்பா என் போனை அட்டென்ட் செய்யவே மாட்டேங்கறீங்க சரணுக்கு போன் செஞ்சேன் அவன் எடுக்கவே இல்ல அதனால தான் உனக்கு கூப்பிட்டேன்.."
"சாரி சார் போன் என் கையில தான் இருந்துச்சு சைலன்ட்ல போட்டுட்டு அவன் கோயிலுக்குள்ள போயிருந்தான் அதனால தான் பார்க்கல போல.. நான் அவன் வந்ததும் உங்களுக்கு கூப்பிடச் சொல்லவா..?"
"இல்லப்பா முக்கியமா எதுவும் இல்ல அந்த சிபிஐ ஆபீசர்ஸை போய் பார்த்தீங்களே என்ன ஆச்சுன்னு கேட்கலாம்னு தான் போன் பண்ணுனேன்.."
"அது ஒன்னும் முக்கியமா எதுவும் பேசல சார் அப்படி ஏதாவதுன்னா உங்களுக்கு தானே முதல்ல கூப்பிட்டுருப்போம்.. அவங்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா எங்களை கூப்பிடறோம்னு சொன்னாங்க அவ்வளவுதான்.. இது வரையிலும் அவங்க எதுவும் போன் பண்ணல.."
"ஓகேப்பா அவங்க கூப்பிட்டா என்ன சொல்றாங்கன்னு என்கிட்ட சொல்லுங்க.."
"சரிங்க சார் சரண் வந்ததும் உங்களுக்கு கூப்பிட சொல்றேன்" என சொல்லி விட்டு ஆரவ் போனை வைக்க பாக்யராஜ் அதை பற்றி யோசித்தபடியே யாருக்கோ போனில் அழைத்து விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தார்..