பாதை மாறிய பனிமலரே (Jayavenitha Review) | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பாதை மாறிய பனிமலரே (Jayavenitha Review)

New updates

LATEST

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
விதி ஒருபக்கம் பிரித்வியின் பார்வையைப் பறிக்க, இன்னொரு பக்கம் அவனுடைய வாழ்க்கையில் இருந்த உறவுகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுக்கிறது. இத்தனை இழப்புகளுக்கு நடுவிலும் தன்னுடைய மகள் ஹர்ஷாவை அன்போடு பார்த்துக்கொள்ளும் அவனுடைய மனசு ரொம்பவே நெகிழ வைக்குது. 🥹 பார்வை இல்லாத நிலையிலும் மகளுக்கு அவனே உலகமா இருப்பது அழகான விஷயம். ❤️
மனைவி பிரிந்து போனதற்கான காரணம் என்ன, அவள் மீண்டும் வந்தபிறகு பிரித்வியின் வாழ்க்கை எந்தப் பக்கம் திரும்பியது, அவனுடைய மகளுக்குத் தாயாக வந்த மிருதிக்கா அவனுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தாள் என்கிற ஆர்வத்தோடு கதையைத் தொடர்ந்து படிக்க வைக்குறாங்க.

என்னதான் மனசுக்குப் பிடிக்காத திருமணமா இருந்தாலும், பெற்ற குழந்தையை விட்டுட்டுப் போற அளவுக்கு என்ன வலி இருந்திருக்க முடியும்? 😒 அந்தத் திருமணத்துக்கு விருப்பமில்லையென்றால், ஆரம்பத்திலேயே தன்னுடைய முடிவை உறுதியா எடுத்திருக்கலாமே! ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு, அதுவும் தன்னைச் சார்ந்திருக்கிற அந்தச் சின்ன உயிரைத் தனியா விட்டுட்டுப் போறதை என்னால சுத்தமா புரிஞ்சுக்க முடியல.

அதே நேரம், அவள் செய்த தவறுகளை உணர்ந்து திரும்பி வந்திருக்கிறாள் என்பதையும் மறுக்க முடியாது. மனிதர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து மாறுவதற்கு வாய்ப்பு கிடைக்கணும். ஆனால் மாறிட்டாங்க என்பதற்காக, அவங்க ஏற்படுத்தின காயங்கள் எல்லாமே உடனே ஆறிடுமா என்ன?

பிரித்வி அவளை மீண்டும் ஏற்றுக்கொண்டாலும், என் மனசுக்குள்ள அவள் மேல ஒரு சின்ன அதிருப்தி இருந்துகிட்டேதான் இருக்கும். ஒரு மனைவியா அவள் எடுத்த முடிவுகளைவிட, ஒரு தாயா தன்னுடைய குழந்தையை விட்டுச் சென்ற முடிவுதான் என்னை அதிகமா பாதிக்குது. இருந்தாலும், அவள் உண்மையிலேயே தன் தவறை உணர்ந்து இனி குழந்தைக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ நினைத்தால், அந்த மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். ❤️

ராதிகாவின் தாய்ப்பாசம், ஆதவனின் கதாபாத்திரம், கேசவன் பிரித்விக்குக் கொடுக்கும் துணை, ஹர்ஷா குட்டியின் மழலை உலகம் என ஒவ்வொருவரும் கதைக்குத் தங்களால் முடிந்த அழகைச் சேர்க்கிறாங்க. 🥰

ஆனா கயல்விழியைப் பார்த்தால், சிலருடைய மனசுக்குள்ள இவ்வளவு வன்மம் எப்படி உருவாகுதுன்னு ஆச்சரியமா இருக்கு! 😒 இந்திரஜித்தின் நட்பும் அவன் எடுக்கும் முடிவுகளும் தவறான வழிகாட்டுதல் ஒருவருடைய வாழ்க்கையை எப்படித் திசைமாற்றும் என்பதை உணர்த்துது.

எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! @ஆனந்த ஜோதி 💐 கதையின் முடிவு எப்படியிருந்தாலும், பிரித்வி மாதிரி ஒரு தந்தையின் அன்பையும், ஹர்ஷா மாதிரி ஒரு குழந்தையின் உணர்வுகளையும் நினைக்கும்போது மனசு கனக்கத்தான் செய்கிறது. ❤️✨
 
Top Bottom