- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
பந்தயம் 11
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அதேபோல, அரசு தேர்வு இல்லாத பள்ளி மாணவர்கள் மதியம் பள்ளிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தப் பரபரப்பான சூழலில், நிர்மல் தன்னுடைய மனைவி சுகந்தியை அழைத்துக் கொண்டு ராயல் என்ஃபீல்டு பைக்கில் வந்து, தெருவின் பிரதான வாயிலில் இறங்கினான்.
தெருவில் இருந்த மாணவர்களில் ஓரிருவரிடம், "உங்க அம்மா, அப்பா வீட்ல இருந்தாங்கன்னா நம்ம வேப்பமரத்து கிரவுண்டுக்கு வரச் சொல்லுங்க. முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்," என்று கூறினான். அப்படியே பக்கத்து வீட்டினருக்கும் தகவலைச் சொல்லி அனைவரையும் அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டான்.
மீண்டும் சுகந்தியை வண்டியில் ஏற்றிக்கொண்டு வேப்பமரம் இருக்கும் விளையாட்டுத் திடலுக்குச் சென்றான்.
நிர்மலும் சுகந்தியும் வேப்பமரத்தின் அடியில் வண்டியை நிறுத்திவிட்டு, சற்று நேரம் நிழலில் இளைப்பாறினார்கள்.
நிர்மல் சொல்லிவிட்டுச் சென்ற தகவல் மிக வேகமாகப் பரவியது. ஓரிருவராக விளையாட்டுத் திடலை நோக்கி வந்தார்கள். அங்கிருந்த பெண்களில் சிலர், சுகந்தியின் மேடேறிய வயிற்றைப் பார்த்து, "எத்தனை மாதம்?" என்று விசாரித்துக்கொண்டே அவள் அருகில் வந்து, "என்ன தகவல்?" என்று கேட்டார்கள்.
அதுவே நல்ல வாய்ப்பு என்று கருதிய சுகந்தி, தன்னுடைய மொபைல் போனில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்களாகவே அதைக் கேட்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
தெருவில் வசிக்கும் அத்தனை குடும்பத்து உறுப்பினர்களும் திடலுக்கு வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரம் பிடித்தது.
நிர்மல், "எல்லாரும் வந்துட்டீங்களா?" என்று சத்தமாகக் கேட்டான்.
"வந்துட்டோம்ப்பா... என்ன விஷயம்னு சொல்லு? நீங்க காட்டின வாய்ஸ் ரெக்கார்ட் யார் அனுப்பினது? எப்படி உங்களுக்குக் கிடைத்தது?" என்று கூடியிருந்த மக்கள் கேட்டார்கள்.
"அது வாய்ஸ் ரெக்கார்ட் இல்ல, என்னோட மனைவிக்கு வந்த போன் கால். நான் பக்கத்துல இருந்ததால அதை ரெக்கார்ட் செய்யச் சொன்னேன். அப்படிப் பதிவு செஞ்ச ஆடியோ தான் அது. என்ன சொன்னாங்கன்னு எல்லாரும் கேட்டீங்க இல்ல?" என்று நிர்மல் கேட்டான்.
அப்போதுதான் வந்த ஒரு சிலருக்கு விவரம் புரியவில்லை. சிலர் கையில் வாங்கி, காதில் வைத்துக் கேட்டும் அவர்களுக்கு விளங்கவில்லை.
அப்படிப்பட்டவர்கள், "அது என்ன சமாச்சாரம்னு விளக்கமா சொல்லுப்பா!" என்றார்கள்.
"அதை உங்ககிட்ட சொல்லணும்னுதான் இப்படி அவசர அவசரமா ஓடி வந்திருக்கிறேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த போன் அழைப்பு வந்தது. நம்ம தெரு பழைய கவுன்சிலர் சந்திரன் யாரையோ ஏவி விட்டு, என் மனைவியோட போன் நம்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்காங்க. அவரை எதிர்த்து நான் தேர்தல்ல போட்டியிடக் கூடாதாம்; உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமாம்! அப்படிச் செய்யாமல் போனால், எங்களைக் குடும்பத்தோடு கைலாசத்துக்கு அனுப்பி விடுவார்களாம்! இன்னும் பிறக்காத குழந்தை இனி எப்போதும் பிறக்காதாம்! அவர் ஆளுங்கட்சியின் பலத்தில் இருக்கும் ஆணவத்தில், எப்படி எங்களைப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் செய்துகொண்டிருக்கிறார் பாருங்கள்! என்னைக் காப்பாற்றும் அன்பு கரங்கள் நீங்கள்தான். அதனால்தான் உங்களை நாடி இங்கே வந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றுவீர்களா இல்லை கைவிட்டு விடுவீர்களா?" என்று கண்ணீர் மல்கக் கைகூப்பி அந்த மக்களிடம் கேட்டான் நிர்மல்.
அங்கிருந்த படித்த பெண்கள் சிலர், "என்னப்பா இப்படி ஒரு போன் வந்திருக்கு! உடனடியாகப் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாம இங்க வந்து நின்னு பேசிட்டு இருக்கீங்க?" என்று ஆதங்கப்பட்டார்கள்.
சுகந்தி, "நானும் அதைத்தான் சொன்னேன். ஆனால், 'நம்ம தெரு மக்கள் நம்மள நிச்சயம் காப்பாற்றுவாங்க, முதல்ல அவங்ககிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் போவோம்' என்று என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டாரு" என்றாள்.
இன்னும் ஒரு சிலர், "சந்திரன் செய்யறது சின்ன வேலையா இருந்தாலும், வெளியில நல்லவர் மாதிரி காட்டிக்கணும்ங்குறதுக்காக எல்லாருகிட்டயும் அன்பா பேசுவாரு, பண்பா பழகுவாரு. இந்த மாதிரி போன் மிரட்டல் விடுற அளவுக்கு யோசிக்க மாட்டார். உன்னை நிஜமாகவே தொல்லையா நினைச்சா துடைச்சு எறிஞ்சுட்டுப் போவாரே தவிர, போனில் மிரட்டுற அளவுக்கு சீப்பான ஆள் இல்லை" என்றார்கள்.
"நான் கையில ஆதாரத்தோட வந்திருந்தும் என்னை நீங்க நம்ப மறுக்கிறீங்க... அப்படித்தானே?" என்றான் நிர்மல்.
"அப்படியெல்லாம் இல்லை தம்பி, நாங்க எல்லாரும் உன்னை நம்புறோம். அவங்க என்ன நினைக்கிறாங்கன்னா, 'அவர் பப்ளிக்கா மிரட்டல் விடமாட்டாரே' அப்படின்னு அவங்களுக்குத் தோணினதைச் சொல்றாங்க," என்று பெரியவர் ஒருவர் சமாதானம் செய்தார்.
உடனே சுகந்தி, "அவர் பப்ளிக்கா மிரட்டல் விடலையே... என்னோட போனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். நாங்க இப்போ அதை பப்ளிசிட்டி பண்ணிட்டோம். இதனால இன்னும் என்ன பிரச்சனை எங்களுக்கு வரப்போகுதுன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு," என்றாள்.
சில வயதான பெண்மணிகள், "வயித்துப் புள்ளைக்காரி என்று ஈவு இரக்கம் இல்லாமல் அவளை ஆள் வச்சு மிரட்டியிருக்கிறானே பாவிப் பயல்! அவனையெல்லாம் சும்மா விடலாமா? இப்பவே நாலு பேரு சேர்ந்து போய், வீடு புகுந்து அவனை அடிச்சுப் போடனும்!" என்று வீறுகொண்டெழுந்து பேசினார்கள்.
நிர்மல், "பாட்டி... பாட்டி... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நம்ம சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்," என்றான்.
"சட்டம் என் பொண்டாட்டி செய்ற சக்கரை பொங்கல்னு சொல்லுவான் அந்தப் பையன்! ஆளும் கட்சிக்குள்ள போய் சேர்ந்து ஒளிந்து இருக்கிறான். போலீஸ்காரங்க கிட்ட போய் சொன்னாலும் எடுபடாது. அந்த தைரியத்துலதான் அவன் இப்படி எல்லாம் செய்கிறான்," என்றார் ஒரு பெரியவர்.
"அதே அதிகாரத்தோட நம்மளும் அவனை எதிர்கொள்ளணும் தாத்தா. அதுக்கு நீங்க எனக்கு ஆதரவு கொடுக்கணும். உங்களோட ஆதரவால நான் அவனை ஜெயிச்சுட்டா போதும், அதுவே அவனுக்கு பெரிய அவமானம். எங்களுக்கு அந்த ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கன்னு உங்ககிட்ட நான் கையெடுத்து கும்பிடுகிறேன்," என்று நிர்மல் மருகியபடி பேசிக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த அனைவருக்கும் மனது கனமாகத் தோன்றிட, நிர்மலைத் தேற்றும் விதமாக, "நாங்க எப்போதும் உனக்கு ஆதரவு கொடுப்போம்," என்று வாய் மொழிந்தார்கள்.
சுகந்தியும் நிர்மலும் அங்கிருந்த மக்களை இருகரம் கூப்பி வணங்கினார்கள்.
சந்திரன் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சாந்தி என்ற பெண்மணி, மாலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு, மதியம் சாப்பாடு சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருந்தாள். அவளது அருகில் சென்ற வசந்தி, "ஏன் சாந்தி, மத்தியானம் தெரு மொத்தமும் வேப்பமர கிரவுண்டுக்கு போனீங்களே, என்னவாம்?" என்று கேட்டாள்.
சாந்தி வசந்தியிடம் சொல்வதற்குச் சங்கடப்பட்டுக் கொண்டு, "அது வந்து... நம்ம தெருவுக்குப் புதுசா ரோடு போட்டுத் தருவதையும், தண்ணிக் குழாய் இரண்டு இடத்துல போட்டுத் தாரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்," என்று மழுப்பலாகப் பதில் சொன்னாள்.
வசந்தி, "நீ பேசறது உண்மை மாதிரி தெரியலையே! ஏதோ பசப்பு பேச்சு பேசுற மாதிரி தெரியுது. நான் என்ன அவன்கிட்ட போயா கேட்கப் போறேன்? என்கிட்ட சொல்றதுக்கு எதுக்கு எம்புட்டு தயங்குற?" என்றாள்.
சாந்தி, "இல்லம்மா... உங்ககிட்ட சொன்னா, அதனால எதுவும் பெரிய பிரச்சனை வந்துருமோன்னு பயமா இருக்கு," என்றாள்.
"அப்போ அவன் எங்களை ஏதோ குறை சொல்லியிருக்கான், அதனாலதானே நீ பிரச்சனை வரும்னு பயப்படுற? இவ்வளவு தூரம் சொல்லிட்ட, அந்தப் பேச்சு என்னன்னு சொல்லிட்டா என்னவாம்? நீ சொல்லாம போனாலும் வேற எந்த வழியாவது எனக்கு என்ன விஷயம்னு தெரியாமலா போகும்? அப்படித் தெரிவதற்கு முன்னாடி நீயே சொல்லிருவேன்னு பார்த்தேன். சரி, உனக்கு விருப்பமில்லைன்னா விட்டுடு. நீ என் வீட்ல வேலை பார்த்துகிட்டு அவனுக்கு விசுவாசத்தைக் காட்டிட்டுப் போ," என்றாள் வசந்தி.
உடனே சாந்தி, "இல்லம்மா, நீங்க பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க. நான் அந்த விஷயத்தைச் சொன்னா உங்க மனசு சங்கடப்படும். அதில் எந்த அளவுக்கு உண்மை, எந்த அளவுக்குப் பொய்ன்னு எங்களாலேயே யோசிக்க முடியல. அதனாலதான் நான் கொஞ்சம் தயங்கினேன். இப்ப என்ன, அவன் என்ன சொன்னான்னு உங்களுக்குத் தெரியணும்... அவ்வளவுதானே? நானே சொல்றேன். நம்ம சந்திரன் அய்யா யாரோ ஆள் மூலமா நிர்மல் பொண்டாட்டிக்கு போன் பண்ணி, எலெக்ஷன்ல நிக்கக்கூடாது, வாபஸ் வாங்கச் சொல்லுன்னு மிரட்டினாராம். வாபஸ் வாங்க மறுத்தால் குடும்பத்தோட கொலை பண்ணிடுவேன்னு சொன்னாராம். அந்த ஆள் பேசினதை அந்தப் பிள்ளை பதிவு பண்ணி வச்சிருக்கு. அதை எல்லாருக்கும் போட்டுக் காட்டினான்," என்றாள்.
வசந்தியின் முகம் கருத்துப் போனது.
"என் புருஷனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். கோபம் வந்தால் முகத்துக்கு நேராவே பேசிடுவாரு. இப்படி ஆள் வச்சு மிரட்டுற அளவுக்கு அவர் ஒண்ணும் கேவலமான ஆள் கிடையாது. இவன் நேத்து முளைச்ச காளான், இவனைப் பார்த்து அவர் எதுக்காக பயப்படப் போறாரு? பிராக்டிகலா யோசிச்சுப் பாரு, இவனை நாங்க கொலை செய்வோமா? இவன் வீட்ல ஏதோ ஒரு வகையில இழவு விழுந்தாலும் அந்தப் பழி எங்க மேலதானே விழும்? இந்த நேரத்துல நாங்க அப்படி யோசிப்போமா? இது ஒரு பேச்சுன்னு பேசுவதற்கு ஊரைக் திரட்டுனானாக்கும்!" என்று சொல்லிவிட்டு, சாந்தி கழுவி வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தாள் வசந்தி.
மதியம் உறங்கி விழித்த சந்திரன், அவரது அறையை விட்டு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தார். "வசந்திமா, ஒரு காபி கொடுங்க," என்று மனைவியிடம் கேட்டார்.
வசந்தி காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து சந்திரன் கையில் கொடுத்தாள். சாந்தி அங்கே அதற்கு மேல் நின்றால் ஏதாவது பேசி வாயை கிளறுவார்கள் என்று பயந்து, "நான் வீட்டுக்குக் கிளம்பறேன்," என்று வசந்தியிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.
சந்திரன் சிரித்துக்கொண்டே, "எதுக்கு சாந்தி அம்மா இந்த ஓட்டம் ஓடுறாங்க?" என்று வசந்தியிடம் கேட்க, வசந்தி பேசத் தொடங்கினாள்:
"மதியானம் இந்தத் தெருவைக் கூட்டி மாநாடு நடத்தினானே அந்த மெழுகுவர்த்தி சின்னத்துல நிக்கிற பையன், அவன் பொண்டாட்டிய நீங்க ஆள் வச்சு மிரட்டுனீங்களாம். அந்தப் பேச்சை அவ ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காளாம். அதை இவங்களுக்கு எல்லாம் போட்டுக் காட்டி அழுது ஒப்பாரி வைத்திருக்கிறான். அதை இப்போ என்கிட்ட சாந்தி சொன்னாள். அதை உங்ககிட்ட நான் சொல்லி, அவகிட்ட மேலும் மேலும் ஏதாவது தகவல் கேட்பேனோன்னு பயந்து ஓடுறாள்."
சந்திரன் அந்த வீடே அதிரும்படி சத்தமாகச் சிரித்தார். "அந்தப் பையனோட பொண்டாட்டிய நான் ஆள் வச்சு மிரட்டுனேனா? எனக்கே தெரியலையே! என் சார்பா இந்த வேலையெல்லாம் யார் பார்த்திருப்பா? அப்போ இந்த எலெக்ஷன்ல அவன் தோற்றுவிடுவோம் என்று பயந்து போய், இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லக் கிளம்பிட்டான் போல இருக்கே!" என்றார்.
"இது கட்டுக் கதையாய் இருந்தாலும், இதனால் அவன் மக்கள் கிட்ட அனுதாபத்தைச் சம்பாதிச்சு வச்சுக்கிறான். அந்த அனுதாபத்தை ஓட்டா மாற்ற முயற்சி பண்றான். அது உங்களுக்குப் புரியலையா?" என்று சந்திரன் மண்டையில் உறைக்கும்படி சொன்னாள் வசந்தி.