- Joined
- Aug 24, 2025
- Messages
- 767
- Reaction score
- 544
- Points
- 93
- Age
- 44
பந்தயம் 3
"கட்சிக்காரர்களை நாம் எதுக்காக அரசியல்வாதிகள் என்று சொல்கிறோம் பாட்டி?" என்று சதீஷ் கேட்டான்.
"அவங்க எல்லாரும் அரசியல் பண்றாங்க இல்ல, அதுக்காகத்தான் அரசியல்வாதினு சொல்றோம்" என்று லட்சுமி பொதுவாகச் சொன்னது, அந்தப் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு விளங்கவில்லை.
"அரசியல்னா என்ன பாட்டி? எனக்குப் புரியிற மாதிரி சொல்லு."
"அரசு + இயல் = அரசியல். ஒரு அரசனுடைய இயல்புன்னு இதை எடுத்துக்கலாம். ஒவ்வொரு மனுஷனுமே ஒரு அரசியல்வாதிதான். ஒரு அரசனோட இயல்பு என்ன? தான் சொல்றதை மத்தவங்க எல்லாரும் கேட்கணும், தானே எல்லாரையும் அதிகாரம் செய்யணும் அப்படிங்கிற குணம். உதாரணத்துக்கு நம்ம வீட்டையே எடுத்துக்கோ. அப்பாவை எடுத்துக்கிட்டால்.... அப்பா சொல்லைக் கேட்டுத்தான் அந்தப் குடும்பமே நடக்கணும்னு அதிகாரம் செய்வாரு. அதேபோல அம்மாவைக் கேட்டுப் பார்த்தால், அம்மா என்ன சொல்லுவா? 'என்னோட பேச்சைத்தான் என் பிள்ளைகளும், என்னோட வீட்டுக்காரனும் கேட்கணும்'னு சொல்லுவா. உன்னைக் கேட்டால் நீ என்ன சொல்லுவ? 'நானும் எனக்குப் பிடிச்ச மாதிரி நடக்கணும், என்னோட விருப்பத்துக்கு யாரும் மறுப்புச் சொல்லக் கூடாது' அப்படின்னு சொல்லுவ. அதுக்கு யாராவது மறுப்புச் சொன்னா சண்டை போடுவ. இதைத்தான் கொஞ்சம் பெருசா கட்சிக்காரங்க பண்றாங்க.
ஒரு கட்சிக்காரங்க, அவங்களோட ஆட்சி அமையும் போது பழைய அரசாங்கத்தை விடப் புதிய அரசாங்கம் நல்ல அரசாங்கம்னு நிரூபிக்கிறதுக்காகப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவாங்க. அந்தத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் போது, 'இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கம், மீண்டும் மீண்டும் இதையே தேர்ந்தெடுக்கணும்'னு மக்கள் ஆசைப்படுவாங்க. நாமளே இந்த மக்களைக் காலமெல்லாம் ஆட்சி செய்யணும்னு அவங்களும் நினைப்பாங்க. அதற்கான வேலைகளை முழுமூச்சா செய்றதாலதான், அவங்களை அரசியல்வாதினு நம்ம சொல்றோம்."
"ஆட்சியையும், அதிகாரத்தையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அவங்கதான் அரசியல்வாதிகள், கரெக்டா பாட்டி?"
"பரவால்லடா, சட்டுனு புரிஞ்சுகிட்டியே!"
"உன்னை மாதிரி சொன்னா ஈஸியா புரியும் பாட்டி. அம்மாவா இருந்தா கிளாஸ் எடுக்கிறேன்னு டென்ஷன் பண்ணுவா."
"சாப்பிட்டு முடிச்சிட்டா அந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கணும், ரொம்ப நேரம் உட்காரக் கூடாது. போய் டிரஸ் மாத்திட்டு டியூஷனுக்குக் கிளம்பு" என்று லட்சுமி பேரனை அன்போடு டியூஷனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆர். கே. திருமண மண்டபத்தில்…
விழா மேடையில் விழா
ஒருங்கிணைப்பாளர் சபரி வரவேற்புரை ஆற்றினார்.
"அன்பார்ந்த கழகத்தின் கண்மணிகளே! அருமைப் பெரியவர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தச் செயற்குழு கூட்டம் நடப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதைத் தெரிவிக்கும் முன்பு, வந்திருக்கும் பெரியவர்களை வாழ்த்தி வரவேற்கின்றேன். மானூர் தொகுதியில் வெற்றி வேட்பாளராகக் களம் கண்டு வெற்றி பெற்று, அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் மதிப்புற்குரிய சக்திவேல் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்" என்றதும் சக்திவேல் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.
"நமது மயிலூர் தொகுதியில் வெற்றி பெற்ற கமல் அவர்களை வருக! வருக! என வரவேற்கின்றேன்" என்றதும் கமல் எழுந்து வணக்கம் தெரிவித்தான். "நமது நகரச் செயலாளர், நமது மகளிர் அணி செயல்தலைவர் மற்றும் நமது கழக கண்மணிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். அனைவருக்கும் வணக்கம்! இன்று இந்தச் செயற்குழு கூட்டம் நடைபெறும் நோக்கம், நமது கட்சியின் ஆத்ம பலம் அறிந்த பிற கட்சியினர், இந்த ஜோதியில் தங்களையும் ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு நமது கட்சி மதிப்பளித்து, அவர்களையும் நமது கட்சியோடு இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது" என்று சபரி சொல்லும்போது கூட்டத்தில் சில சலசலப்புகளும், சில கைதட்டல்களும் எழுந்தன.
பூமிகா அழைத்துச் சென்ற பத்து பெண்களில் ஒருத்தியான ஜெயாம்மாள், "வேற கட்சிக்காரங்களை இந்தச் கட்சியில சேர்க்கப் போறதா சொல்றாங்க. ஒருவேளை சந்திரன் இந்தக் கட்சியில சேரப் போறானா?" என்று பூமிகாவின் காதில் கிசுகிசுத்தாள்.
பூமிகா, 'அந்தக் கட்சி பெரிய கட்சி.. அங்கிருந்து இந்தக் கட்சிக்கு அவன் வருவதற்கு வாய்ப்பு இல்லை' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்; ஜெயாவிற்குப் பதில் சொல்லவில்லை. சிரித்தபடி மேடையைக் கவனித்தாள்.
சபரி தொடர்ந்து, "நமது புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அடையாள அட்டையை அமைச்சர் சக்திவேல் அவர்கள் தனது பொற்கரங்களால் வழங்குவார்கள்" என்றார்.
அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
"திரு. முகேஷ் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்" என்றதும் முகேஷ் மேடைக்கு வந்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு இறங்கிச் சென்றார். "திரு. ஸ்ரீனிவாசன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்" என்றதும் ஸ்ரீனிவாசன் வந்து தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு இறங்கிச் சென்றார். "திரு. ஜோதி முருகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்" என்றதும் ஜோதி முருகன் மேடைக்கு வந்து தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு இறங்கிச் சென்றார். இறுதியாக, "திரு. சந்திரன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்" என்றதும் சந்திரன் மேடைக்கு வந்து அவருக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு கீழே இறங்கினார்.
பூமிகாவோடு சென்றிருந்த பத்து பெண்களும் வாயடைத்துப் போனார்கள். மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஜெயாம்மா, "பூமி... நான் சொல்லல? இந்த மாதிரி சில்லறை வேலையெல்லாம் பார்த்தாவது அவன் சொத்தைப் பாதுகாப்பானே..."
பூமிகா, "நமக்கு என்னக்கா, விடுங்க" என்றாள்.
சபரி இறுதியாக நன்றியுரை ஆற்றி விழாவை நிறைவு செய்தார்.
மயிலூர் நகரத்தில் இருந்த 45 வார்டு மகளிர் அணி தலைவிகளான 45 பெண்களும் வரிசையாகச் சென்று அமைச்சருக்குக் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு இறங்கினார்கள்.
ராதா, "பூமி.... அமைச்சருக்குக் கை கொடுத்துட்டு வந்ததால, உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போறாங்களாம்."
பூமிகா, "நீங்க வேற ஏன்க்கா..., நூறு ரூபாயை ஒழுங்காக் கொடுக்கிறாங்களான்னு பாருங்க."
ஜெயா, "இப்ப வந்து கட்சியில சேர்ந்தானே சந்திரன், அவன்கிட்ட ஒரு மூட்டை பணத்தை வாங்கி இருக்க மாட்டாங்க? அதுல நூறு ரூபாய் தாளைக் கொடுக்கறதுக்குக் குறைஞ்சு போயிருவாங்களா?"
ராதா, "ஒரு மூட்டை பணம் கொடுத்து இந்தக் கட்சியில சேர என்னக்கா இருக்கு?"
ஜெயா, "இதுவரைக்கும் களவாண்டு சேர்த்த சொத்துக்குப் பாதுகாப்புக்காகவும், இந்தக் கட்சிக்காரங்க யாரும் ஏதாவது கேஸ் போட்டுப் புடுங்கிடக் கூடாதேங்கிறதுக்காகவும், இவங்ககூடக் கூட்டு வச்சிக்கிறதுக்காகவும்தான். மூட்டை பணம் போனாலும் போகுது, ஒரு மாசத்துல சம்பாதிச்சிட மாட்டானா?" என்று கமுக்கமாக முணுமுணுத்தாள்.
பூமிகா, "சந்திரன் அண்ணன் கௌரவமானவங்கன்னு நினைச்சேன். இப்படி இன்னொரு கட்சிக்குத் தாவிட்டாங்களே... இதுக்கப்புறம் யாராவது அவரை மதிப்பாங்களா?"
"அரசியல்வாதிகளுக்கு மரியாதை தேவையில்லை. பணமும் அதிகாரமும் கையை விட்டுப் போய்விடக் கூடாது, அவ்வளவுதான்" என்றார் சக்தி.
இப்படிப் பத்து பெண்களும், பத்து விதமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டே வீட்டுக்கு நடந்து வந்தார்கள்.
பூமிகாவின் வருகைக்காகக் காத்திருந்த சரவணன், "வாங்க கவுன்சிலர் மேடம்! மீட்டிங் நல்லபடியா முடிஞ்சதுல்ல? உங்களுக்கு அவார்ட் கொடுத்துக் கௌரவப்படுத்தி இருப்பாங்களே..." என்றான்.
"அவார்ட் கொடுக்கல, அதிர்ச்சிதான் கொடுத்தாங்க" என்றபடி தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்து ஆங்கரில் மாட்டிவிட்டாள் பூமிகா.
சரவணன் சிரித்துக்கொண்டே, "உன்னைத் பொறுப்பிலிருந்து தூக்கிட்டாங்களா?" என்றான்.
பூமிகா சரவணன் பக்கம் வேகமாகத் திரும்பினாள். மூக்கை விடைத்துக்கொண்டு, "ஊர் உலகமே வெள்ளத்துல அடிச்சிட்டுப் போனாலும், உங்க பொண்டாட்டி உங்க பக்கத்துலயே இருக்கணும்னு கேப்பீங்களே!" என்றாள்.
"தண்ணி அடிச்சிட்டுப் போனாலும், தள்ளிப் போகக் கூடாதுன்னு நினைக்கிறது தப்பாடி?" என்று கிண்டல் தொனியில் கேட்டான் சரவணன்.
"நிஜமான பாசத்தோடு கேட்டிருந்தா நான் தப்பா எடுத்துக்க மாட்டேனே? என்னை உலக நடப்பு தெரிஞ்சுக்காமல் வீட்டுக்குள்ளேயே முடக்கணும் என்பதுதானே உங்களுடைய எண்ணம்?"
"யம்மா யம்மா... போதும்டி! ஒரு மீட்டிங் போயிட்டு வந்ததுமே அரசியல்வாதி கெத்தைக் காட்ட ஆரம்பிச்சுட்டே... பெண் விடுதலை பற்றிப் பேச ஆரம்பிச்சுட்டே..."
அதே நேரத்தில் சங்கரன் சோர்ந்த முகத்தோடு வீட்டுக்குள் வந்தார்.
"என்னப்பா, மருமகள் காட்டின அதே எஃபெக்ட் உங்க முகத்திலேயும் தெரியுது?" என்றவன் பூமிகாவைப் பார்த்து, "ஏன் இந்த மயக்கம்? ஏனடி பூமி..." என்று பாடலாக வினா எழுப்பினான் சரவணன்.
பூமிகா அவன் முகத்தைப் பார்த்து வெடுக்கென்று திருப்பிக் கொண்டவள், "மாமா, காபி ஏதாவது குடிக்கிறீங்களா?" என்று மாமனாரிடம் கேட்டாள்.
"அதெல்லாம் வேண்டாம்மா... குடிக்கத் தண்ணி கொடு" என்று அவர் கேட்கவே, சமையலறைக்குத் தண்ணீர் எடுத்து வரச் சென்றுவிட்டாள் பூமிகா.
"என்னப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்று சரவணன் கேட்க,
"இல்ல சரவணா, உடம்பு நல்லாத்தான் இருக்கு. மனசுதான் கெட்டுப்போச்சு."
"மனசு கெடுற அளவுக்கு என்ன நடந்துச்சு?"
"இன்னைக்கு வேற்றுக்கட்சிக்காரர்கள் எல்லாரும் அமைச்சர் முன்னிலையில நம்ம கட்சியோட இணைஞ்சாங்க. அதுதான் கொஞ்சம் மனசு பாரமா இருக்கு."
"அவங்க சேர்வதற்கும் உங்க மனசு கஷ்டப்படுறதுக்கும் என்னப்பா இருக்கு? அவங்களைப் பார்த்துப் பொறாமைப்படுறீங்களா?"
"எனக்குத் தெரியலப்பா. ஆனா, இது நல்லதுக்கு இல்லைன்னு என் மனசு சொல்லுது."
"எதனாலப்பா?"
"மாற்றுக்கட்சியிலிருந்து நம்ம கட்சிக்குள்ள வர்றவங்களுக்குப் புதிய பொறுப்புகளையும், புதிய பதவிகளையும் கொடுத்துக் கௌரவப்படுத்துறாங்க. அவங்களை வெளியே விடாமல் பாதுகாக்கணும் என்பதற்காக இதைச் செய்றாங்க. ஆனால், கட்சிக்குள்ளேயே காலகாலமாக உழைத்துக் கொண்டிருந்த என்னைப்போல இருக்கிற கடைக்கோடி தொண்டர்களும் தோழர்களும் எந்தவொரு பதவி சுகத்தையும் அனுபவிக்காமலேயே தொண்டர்களாகவே இருக்கிறோம் என்று விரக்தி அடையுறாங்க. 'நம்மளும் இவங்களைப் போல கட்சி தாவலில் ஈடுபட்டால் லாபமா?'ன்னு யோசிக்கிறாங்க."
"உங்களுக்கு வேற கட்சியில சேரணும்னு எண்ணம் தோணுதா அப்பா?"
"இல்ல சரவணா, நான் அப்படிச் சொல்ல வரல. கட்சியின் கொள்கைகளில் ஊறிப்போன எந்தவொரு தொண்டனாலும் தன்னுடைய கட்சியை விட்டு விலகிப் போக முடியாது. அப்படி வைராக்கியம் பாய்ந்த மனசையும் உள்ளே இருக்கிறவங்க நோகடிச்சால்.... பாவம் அவங்க என்ன செய்வாங்க? நல்ல மனுஷங்க விலகிப் போயிடுவாங்க; நயவஞ்சகம் பிடிச்சவங்க கட்சி தாவல் செய்வாங்க. நல்ல தொண்டர்களையும் கெட்டவர்களா மாத்திடுவாங்களோன்னு பயப்படுறேன்."
சென்ற சிறிது நேரத்திலேயே தண்ணீரைக் கொண்டு வந்துவிட்டாள் பூமிகா. மாமனாரின் வேதனை தோய்ந்த பேச்சைக் கேட்டபடி அப்படியே ஸ்தம்பித்து நின்றுபோனாள்.
பூமிகா கையில் வைத்திருந்த சொம்புத் தண்ணீரை வாங்கிக்கொண்ட சரவணன், "இப்படியே வச்சிருந்தேன்னா அடுத்த தண்ணிப் பஞ்சத்துக்கு யூஸ் ஆகும்" என்றான்.
பூமிகா, "நான் மாமாவுக்குக் கொண்டு வந்தேன்" என்றாள்.
சரவணன், "நானும் அவருக்குத்தான் கொடுக்கப் போறேன்" என்றபடி சங்கரனுக்குக் கொடுத்தான்.
சங்கரன் வாங்கிக்குடித்துவிட்டு, "எம்மா பூமி.... நீ வேற யாருகிட்டயும் எதுவும் பேசிக்க வேண்டாம். நம்ம ஏதோ பொறாமைப்படுறோம்னு நினைக்கப் போறாங்க" என்றார்.
"சரி மாமா" என்றாள் பூமி.